Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 10

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 10

பாகம் 10

படம் பார்க்க கிஷோரும் தேனுவும் சென்றனர் …..படத்தில் இடையிடையே அவனும் அவளும் இருவரையும் பார்க்கா வண்ணம்பார்த்துக்கொண்டிருந்தனர்(ஹீரோயின் அவங்க ஹீரோவ ரசிச்சாங்க அவர் பார்காதப்ப…  ஹீரோஅவங்க ஹீரோயினை ரசிச்சாங்க அவள் பார்க்காதப்ப)….வர்றப்ப சரியான மழை பிடிச்சிக்குச்சு இரண்டு பேரும் நல்லா நனைஞ்சுடுறாங்க…அழகான இரவு ஆசை பொண்டாட்டி சோனு மழை யாருதான் ரசிக்கமாட்டாங்க கிஷோரும் ரசிச்சான்…….பக்கத்துல தார்ப்பாய் போட்ட டீக்கடை இருந்தது அங்க போய் மழைக்கு சூடா ஒருகப் டீ சாப்பிட்டுட்டே அவன் அவளை பார்க்குறான் மழைல நனைஞ்ச அவளோட முடி ,காதுல போட்டிருந்த அவளோட ஜிமிக்கில சொட்டாய் தண்ணீர் வடிஞ்சது,அவள் சாரிலாம் நனைஞ்சு உடம்போட ஒட்டி இருந்தது …இப்படியே ரசித்திருந்தவனுக்கு திடீர்னு இப்படி மழைல  நனைச்சிருக்காளே ஜுரம் வந்துடுமேனு தோன்ற ஆரம்பித்தது அவளை கூட்டிட்டு மழை நின்றவுடனே வீட்டிற்கு கிளம்பினான்.

வீடு வந்நதும் உடை மாற்றி இருவரும் இரவு உணவை முடித்து படுக்கையறைக்கு சென்றனர்…அவள் அசதியில் தூங்கிவிட கண் இமைக்காமல் அவளையே பார்த்தான்.

“சின்ன சின்ன கண் அசைவில்

உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

லாலி… லாலி… நான் உன் தூழி… தூழி…

மெல்ல மெல்ல என்னுயிரில்

உன்னுயிரும் அசையுதே

துள்ள துள்ள என் இதயம்நம்முயிரில் நிறையுதே

லாலி… லாலி… நீ என் தூழி… தூழி…”

குழந்தை போன்ற சிரிப்பும்  மனதை கொள்ளையடிக்கும் கண்களுக்கும் சொந்தக்காரி இவ்ளோ அழகா தூங்குறாளே….என்னமோ என்னைய பண்றா போடி..என முனுமுனுத்தபடி உறங்கிப்போனான்.பத்து நாளில் ஹனிமூன் சிம்லா சென்றனர் அவளை அசற வைக்க வேண்டும் என கேன்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்தான்…அவள் கண்களை ரிப்பனால் கட்டி ரூமுக்கு அழைத்துச்சென்றான்…கட்டவிழ்த்து பார்த்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பு ரூமை சுற்றி சின்ன சின்ன கேன்டில் வைத்து இருந்தான் கட்டில் நடுவில் சிறிய கேக்கிலே லவ் யூ ஹனி என எழுதியிருந்தது …கட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நடுவில் “யூ ஆர் மை எவரித்திங்க்” என்ற வாசகம் இருந்தது…இவள் கண்களில் இரண்டு சொட்டு நீர் வந்தது கிஷோரைக்கட்டிக்கொண்டாள்” ஏன் மாமு எனக்காக இவ்ளோ செய்யுற என்னைய உனக்கு அவ்ளோ பிடிக்குமா…நீ கிடைக்க நான் ரொம்ப லக்கி” என சொல்ல…கிஷோர் அவள் காதில் இந்த ஹக்குக்காக எது வேணும்னாலும் செய்யலாம் என சொல்ல…சீ மோசம்டா நீ என செல்லமாய் அவனை தள்ளிவிட்டாள்….இவன் ஒரு பேக்கோடு வந்தான் இது எல்லாம் உனக்கான ஹனிமூன் ட்ரெஸ் இது எல்லாத்தையும் நீ எனக்கு போட்டு காட்டுவியாம் மாமா பாப்பேனாம் என சொல்ல பார்சலை திறந்தவளுக்கு வெட்கம் தாளவில்லை அதில் இருந்தது இரண்டு குட்டி பிராக் மற்றும் 3 ஜுனும் 3 டாப்சும்…இதுபோங லாங் ஸ்கர்ட் அதற்கேற்ற சட்டை …இந்த குட்டி பாப்பா டிரஸ் நம்ம குழந்தௌக்கா என கேட்க கிஷோர் எழுந்து வந்து இதான் உனக்கு இனி நைட் டிரஸ் நீ அழகா போட்டுக்குவியாம் நான் பார்பேனாம் என சொல்ல போடா பொருக்கிபயலே என அடிவெளுத்துவிட்டாள் கிஷோரை ….அடியே விடுடி தெரியாம கேட்டுட்டேன் உனக்கு வேணாம்னா விடு வேற யார்கிட்டயாவது சொல்லி போட சொல்லி பார்த்துக்குறேன் என்றான் ….என்னைய விட்டுட்டு எவகிட்டயாவது போவியா கொண்ணுடுவேன் என இவள் கிஷோரை மிரட்ட ஊடலோடு அழகிய கூடலும் ஆரம்பமானது.ஹனிமூன் முடிந்து விருந்து என வரிசையாக நாட்கள் தினமும் ஓடிக்கிட்டே தான் இருந்துச்சு அவள் மேல கிஷோர் வச்சிருந்த அன்பு பல மடங்கா பெருக ஆரம்பிச்சது.

ஆறுமாச இடைவேளைக்கு அப்புறமா ஊர் பக்கம் போறா ஆமா நம்ம ராசாத்திக்கும் சிவமூர்த்திக்கும் கல்யாணம் ஊரே கூடி ராசாத்தியை ஓட்டித்தள்ள ஆபத்பாந்தவனாய் வந்திறங்கினாள்.ராமனுக்கு கால் செய்து அப்பா நான் ராசாத்திகூட இருக்குறேன் நாளைக்கு மறுநாள் கல்யாணம் முடிஞ்சதும் வர்றேன்பா என்றாள் …இவரும் சரிமா என சொல்ல சீதா போனை வாங்கி என்னடி வந்ததும் ஓடிட்டியா என்றாள்….ஹா ஹா அம்மா நான் அவளோட இருக்கணும்னு தான்மா உன் மருமகனையே கலட்டி விட்டுட்டு வந்தேன் என சொல்ல ..என்னமோ பண்ணுடி கல்யாணம் முடிஞ்சதும் நானே உன்னை இங்க கூட்டிட்டு வர்றேன் என சீதா கூற சரிம்மா நான் அப்பறம் பேசறேன் என லயனை துண்டித்தாள் தேனு .

ராசாத்தி என தேனு அழைக்க ஓடி வந்து கட்டிக்கொண்டாள் …என்னடி எப்படியிருக்க அண்ணா நல்லாருக்காரா என நலம் விசாரிக்க எல்லாம் நல்லா இருக்கேன்டி நீ எப்படி இருக்க மூர்த்தி எப்ப டி வரான் எனக்கேட்டாள்…மூர்த்தி மாமா நைட்டு வந்துடும்டி என ராசாத்தி சொல்ல….கல்யாணத்துக்குகூட துரை முதல்நாள் நைட்டு தான் வருவாராக்கும் அப்ப நாளைக்கு மறுநாள் நைட்டு உன்னைய நாங்க கடத்திடுறோம் அவன் என்ன பண்றானு பார்க்கலாம்  என சிரித்துக்கொண்டே கண்ணடிக்க பேச்சியும் சேர்ந்து ம்ம்ம் நல்லா கேளுடி என சேர்ந்துகொண்டாள்…மூவரும் சேர்ந்து ஆறுமாத கதையையும் பேசிக்கொண்டே ராசாத்தியின் அம்மா கொடுத்த ஆப்பத்தை மூக்குபிடிக்க உண்டு முடித்தனர்….இதுவே ராசாத்தியின் மகிழ்ச்சியான இரவு என்பதை அறியாமல் அவளுக்கு மருதாணி இட்டு கொண்டிருந்தார்கள் தேனுவும்,பேச்சியும்…காலை ஐந்தரை மணிக்கு அழுகையும் தவிப்புமாய் மூர்த்தி வீட்டில் சத்தம் கேட்க உறவினர்கள் கூடி நின்றனர்…ராசாத்திக்கும் செய்தி சொல்லப்பட்டது…தேனுவும் பேச்சியும் கண்ணில் அருவி பெருக்கெடுக்க அழுதனர்….ஆம் அங்கு வந்தது சிவமூர்த்திதான் மூச்சற்று கிடந்தான்….கையில் வைத்திருந்தமருதாணி கூட நிறம் மாறல மாமா ஏன் மாமா என்னைய விட்டுட்டு போன உனக்காக தான் ஆசையா காத்திருந்தேன் என கத்து கத்து என்று கத்தி அழுதாள் …நீ இல்லாம எப்படி நான் உசுரோட இருப்பேன் என அவள் அழுக அவளைத்தேற்ற இயலாமல் தேனுவும் பேச்சி அழுது தீர்த்தனர் அவர்களுக்கும் அவன் உயிர் நண்பனே….சிவமூர்த்தி போரில் வீரமரணம் அடைந்தான் ராணுவ மரியாதையோடு சடலம் கொண்டுவரப்பட்டது…… கல்யாண வீடு இழவு வீடா மாறிடுச்சே நல்லவேளை ராசாத்தி கழுத்துல தாலி ஏறியிருந்தா இந்நேரம் விதவையா ஆயிருப்பா கடவுள்தான் வழிவிட்டாரு என ஏதோ ஒரு கிழம் சொல்ல ……உள்ளே சென்று கதவையடைத்தாள் …ராசாத்தி, பேச்சி கதவைதட்டி வாடி ராசாத்தி என கத்திடழ சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவளை பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி அவள் கைகளில் வளையல் இல்லை ,கூந்தலில் மலர் இல்லை,நெற்றியில் பொட்டில்லை…ஏற்கனவே தன் மகள் வாழ்க்கை இப்படி ஆனதை எண்ணி உயிர்போக துடித்த அவள் தாய் அலங்கோலமாய் நின்றவளை

கண்டு ஓவென கத்தி புழுவாய் துடித்தாள்…அவளை கண்ட தோழிகள் இருவரும் தேம்பி தேம்பி.. அழுதனர்…..ஓரமாய் நிலைகுழைந்து அமர்ந்த ராசாத்தி தொம்மென விழுந்தாள்…அங்கிருந்த மருத்துவச்சி அவள் நாடி பிடித்து நாடிபார்த்து சிறிது… குழம்பி போனாள் ராசாத்தி அம்மாவிடம்  காதில் எதையோ கூற .. ராசாத்தி அம்மா ஓடிவந்து பண்ணகூடாத அசிங்கத்தை பண்ணிட்டியேடி என அவள் அருகில் சென்று அழுக….ஆமாம்மா நான் மூர்த்தி மாமா வாரிச வயித்துல சுமக்குறேன் என சொல்ல…..தன் மகன் மறுபிறவி எடுத்ததைபோல் சிவமூர்த்தியின்அம்மா என் மகன் எங்கேயும் போகலை இங்கதான் இருக்கான். என் மருமகளை நான் பார்த்துக்குரேன் …..இனி ராசாத்தி என் மருமக இல்லை என் மகள்….எனக்கு அவள் மேல நம்பிக்கை இருக்கு மூர்த்தி மேலயும் நம்பிக்கை இருக்கு என தொண்டையடைக்க துக்கத்தோடு ஆறுதல் சொல்ல முடியாமல் ராசாத்தியை கட்டிக்கொண்டாள்…ராசாத்தி தேம்பியவாறு என்னை மன்னிச்சுடுங்க அத்தை என அழுதாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 15ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 15

15 – மனதை மாற்றிவிட்டாய் இரவு தூங்க செல்ல ஆதியின் அறைக்கு வந்த சந்திரா “ராஜா, தூங்கப்போறியா?” என வினவியபடி வந்தார். ஆதி “வாங்க மா, இல்லமா சும்மா பால்கனில நடந்திட்டு வந்தேன். ஏனோ தூக்கமே வரலை.”: “ஆமாமா, தூக்கம் இப்போதைக்கு

நிலவு ஒரு பெண்ணாகி – 28நிலவு ஒரு பெண்ணாகி – 28

ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி – 28 அத்யாயம் உங்கள் பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 28 அன்புடன், தமிழ் மதுரா. Download Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadPremium WordPress Themes DownloadDownload

சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்சிவகாமியின் சபதம் – மூன்றாம் பாகம்

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் மூன்றாவது பாகம் உங்களுக்காக. [scribd id=380394301 key=key-gNBDdK7XkHCuVeJp9JgI mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா Download Premium WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeDownload Best WordPress