70 – மனதை மாற்றிவிட்டாய்
“கண்டிப்பா பழைய மாதிரி இல்லை ஆதி.”
“அப்போ இன்னும் கோபம் போகலையா? நீயும் அவங்கள வெறுக்கிறியா? ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. மத்தபடி உன் மேல அவங்களுக்கு இருக்கற பாசம் உனக்கே தெரியும்ல? ”
மெலிதாக புன்னகைத்து விட்டு “ஆதி, நடந்த பிரச்சனைல அவங்க மட்டும் தான் தப்பு பண்ணாங்க, சோபியும், ஆண்ட்டியும் மட்டும் தான் தப்பு பண்ணாங்க. இல்லை நான் மட்டும் தான் தப்பு பண்ணேன்னு இல்லை. எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பங்கு இருக்கு. நினைச்சிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனையா போயிருக்காது.
யோசிச்சு பாருங்க நம்ம குடும்பத்துல இருக்கற ஒருஒருத்தருக்கும் நல்லாவே தெரியும், நான் பொய் சொல்லுவேன். அங்க பிரச்னை வருதுன்னா ஏதாவது பண்ணி அந்த ப்ரோப்லேம் இல்லாம மாத்தணுமே தவிர உண்மையா தான் போவே, பேசுவேன்னு எல்லாம் நான் இருக்கமாட்டேன்னு அப்டி இருக்கும் போது அவங்க எல்லாரும் ஏன் அந்த அளவுக்கு என்னை நம்பாம அப்டி நடந்துக்கிட்டாங்க.
நான் அப்டி பொய் சொல்லியோ, எதித்து பேசுறதோ, கோபப்படறதோ, அவங்கவங்களுக்கு தகுந்தமாதிரி பேசியோ ஒரு விஷயம் சாதிக்கறேன் அத தப்புன்னா அவங்க என்கிட்ட அந்த பழக்கத்தை பாக்கும் போதே தப்புன்னு சொல்லிருக்கணும். அப்போ எல்லாம் சரி அந்த விஷயம் முடியும் போது அதுல பயன் தான் இருக்குன்னு என்னை அடக்காம அப்டியே வளத்திட்டாங்க.
அது அவங்க பண்ண தப்பு.
மொத்த பாசமும் காட்டியும் வளத்தீட்டாங்க. அந்த பாசத்தை வெச்சு அவங்க எல்லார்க்கும் என்னை ரொம்ப பிடிக்கும், முழுசா நம்புவாங்க, என்னை பத்தி சொல்லாமலே புரிஞ்சுப்பாங்கன்னு ரொம்ப நம்பிட்டேன். அதுதான் நான் பண்ண தப்பு. பாசம் வேற நம்பிக்கை வேறெங்கிறது ரொம்ப நல்லாவே அப்போதா புரிஞ்சது. இருந்தும் நான் என்கிட்ட கொஞ்சம் கோபமா இருக்காங்க. நான் அவங்ககிட்ட என்னோட பாசத்தை காட்டுனா சரி ஆய்டும்னு நினச்சேன். அவங்களால என்னை வெறுக்கமுடியாதுனு நானே நம்பிட்டேன். ஆனா அது இல்லேனு ஆகும்போது எவ்வளோ கஷ்டமா இருந்தது.
சரி அந்த வீடியோல நீதானே பேசுன அதனால நம்பிருப்பாங்கன்னு சொல்லலாம்.
ஆனா அதுக்கப்புறமும் நான் தானே பேசுனேன் நேராவே சொல்றேன்ல, ஆதிகிட்ட இத நான் சொல்றேன்னு, பிரச்சனை பெருசுனு தெரிஞ்ச எல்லாருமே அவங்ககிட்ட நான் சொல்லேல்லேனு கோபப்பட்டு அவங்க உரிமையா தான் தக்கவெச்சுக்க பாத்திருக்காங்களே தவிர உண்மையா ப்ரோப்லேம்க்கு ஒரு தீர்வை கொண்டுவரணும்னு யாருமே யோசிக்கலெல்லா. அப்டி யோசிச்சிருந்தா ஒரு நேரம் திட்டுனாலும் அப்புறம் வந்தாவது ஆதிகிட்டாவது நடந்தத சொன்னியா? பேசுனியா? னு கேட்டுஇருப்பாங்க, இல்லை உங்ககிட்ட சொல்லி கேக்கசொல்லிருப்பாங்க. இந்த ப்ரோப்லம் முடிஞ்சபிறகும் கூட அவங்க ஏன் டி எங்ககிட்ட சொல்லமாட்டியா?னு திட்டி சண்டை போட்டுஇருக்கலாம். உங்ககிட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு நான் சத்தியம் பண்ணதுக்கு 2 காரணம், ஒன்னு உங்ககிட்ட எனக்கு மறைக்க இஷ்டமில்லை. இன்னொன்னு அவங்கள்ள சிலர் கோபமா ரியாக்ட் பண்ணுவாங்க, சிலர் எமோஷனல ரியாக்ட் பண்ணுவாங்க. அப்போ பிரச்னை தான் அதிகமாகும் அதனால தான் அவங்ககிட்ட சொல்லி குழப்பவேண்டாம்னு நினச்சேன். வேற எந்த காரணமும் இல்லை.
சோபி பேசுனது ஆரம்பமா அந்த பிரச்னைக்கு ஒரு காரணமா இருக்கலாமே தவிர அது மட்டுமேன்னு இல்லை. அப்டி இருந்திருந்தா இவங்க எல்லாரும் அந்த வீடியோ பாத்த அடுத்த நிமிஷமே என்னை வீட்டை விட்டு வெளில தொரத்திருப்பாங்க. அத யாரும் செய்யல. அதே சமயம் யாரும் ஒழுங்கா முழுசா புரிஞ்சுக்கவுமில்லை, நம்பிக்கையும் வெக்கல. பாதிப்பு எல்லாருக்குமே தானே.
திரும்ப பழைய திவியா அவங்ககிட்ட எல்லாமே எதிர்பார்க்கறது செய்றது என்னால முடியாது. இன்னொரு ஏமாற்றத்தை என்னால தாங்க முடியாது. அதே சமயம் முழுசா அவங்க மோசமானவங்க, இனிமேல் முகத்துலையே முழிக்க மாட்டேன்னு சொல்லி விட்டுட்டு போகவும் எனக்கு மனசுவரல. அவங்க பாசம் உண்மைன்னு இன்னும் எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு தப்புக்கு வெளிப்படையா மன்னிப்பு கேட்டுட்டாலோ, சண்டைபோட்டுட்டாலோ அதோட பீலிங் குறைஞ்சிடும், அதுவுமில்லாம எல்லாரும் குற்றஉணர்ச்சியோட பாக்கிறது பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க சொன்னமாதிரி உங்க மேல இருந்த லவ், நீங்க என்கிட்ட காட்டுன லவ் நம்பிக்கை தான் என்னை இந்தளவுக்காவது ஸ்ட்ரோங்கா வெச்சுஇருக்கு. நான் இப்போ இருக்கற மாதிரியே அளவா அவங்ககிட்ட பேசிட்டு இருந்திட்டு போறேன். அவங்கள நான் ஏத்துக்கறேன் பட் மன்னிக்கமுடில.”
“அது உனக்கு கஷ்டமா இருக்காதா? இத்தனை வருஷம் நீ ரொம்ப பாசமா இருந்தவங்ககூடவே ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கறது? ”
“என்ன பண்றது. நான் அவங்கள நம்புனதுக்கும், அவங்க என்னை நம்பாததுக்கும் இது இரண்டு பக்கத்துக்கும் தேவையான தண்டனை தான். பரவால்ல. இப்போவும் என்னை கெட்டுப்போச்சு ஆதி. நீங்க அவங்க எல்லாரையும் பாத்துக்கோங்க. நான் உங்கள பாத்துக்கறேன். என் கண்ணு முன்னாடி தான் எல்லாரும் இருக்கப்போறாங்க. அவங்க சந்தோசத்தை நானும் தான் பாக்க போறேன். பிரச்னை ஏதாவதுனா பாத்துக்கலாம். அவங்க கூட தான் நாம வாழ போறோம். நாம ஹாப்பியா இருந்தாலே அவங்களும் சந்தோசமா இருப்பாங்க. என்ன பழைய மாதிரி அவங்ககிட்ட என்னால இருக்கமுடியாது. அதுவும் காலப்போக்குல பழகிடும்” என
பெருமூச்சுடன் ஆதி கேட்டான் “சரி, நான் போயி அவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டா? திவிக்கு இப்போ சரி ஆயிடிச்சு. ஆனாலும் அவ உங்கமேல கொஞ்சம் வருத்தத்துல இருக்கா அதனால தான் பழைய மாதிரி இல்லேனு? ”
அவனை தலை சாய்த்து பார்த்தவள் சிரித்துவிட்டு “அத நீங்க கண்டிப்பா பண்ணமாடீங்க. இந்த பிரச்னைல எனக்காக என்னை விட அதிகம் வருத்தப்பட்டது நீங்க தான். இன்னைக்கு நான் உங்ககிட்ட கேட்ட பல கேள்விகள் நீங்க ஆல்ரெடி உங்ககிட்ட கேட்டு இருப்பீங்க. அதனால என்னை அப்டி ஒரு இக்கட்டுல நீங்க நிக்கவெக்கமாடீங்க. அதுவுமில்லாம இத அப்டியே நீங்க போயி சொன்னாலும் எப்போவது அவ பழையமாதிரி நம்மகிட்ட பேசுவானு நம்பிக்கையோட இருக்கற அவங்க எல்லாரும் ரொம்ப வருத்தப்பட்டு இனிமேல் இதுதான்னு நினச்சு நினச்சு தண்டனை அனுபவிப்பாங்க. ரொம்பவே அவங்கள வறுதிப்பாங்க. அத நீங்க யோசிக்காம இருக்கமாடீங்க. அதே மாதிரி பரவால்ல போயி எனக்காக பேசுன்னு கேட்டு என்னை சங்கடப்படுத்தவும் மாட்டிங்க. ” என அவள் அவ்வளோ அழுத்தமாக கூற
இவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். “பிராடு டி நீ, நல்லா இதெலாம் தெரிஞ்சுவெச்சுஇருக்கே… சரி வீட்ல இருந்தவங்ககிட்ட எப்படின்னு சொல்லிட்ட.. சுந்தர், சோபி, ஈஸ்வரி அத்தை எல்லாருக்கும்? அவங்களையும் மன்னிச்சிட்டேயா?”
“ம்ம். ….சுந்தர் பண்ணது தப்புதான். ஆனா ஒருவேகத்துல உணர்ச்சிவசப்பட்டு பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் அதனால பிரச்னைனு தெரிஞ்சதும் உடனே அது சரி பண்ணமுடியுமான்னு பாத்து பண்ணாரே. இன்னும் சொல்ல போனா அன்னைக்கு சுந்தர் வந்து விஷயத்தை சொல்லாட்டி நான் எப்போவுமே நடந்த உண்மைய சொல்லிருக்கமாட்டேன். இந்நேரம் இப்டி பேசிருப்போமான்னு கூட சொல்ல தெரில. சோ அதனால அந்த கிரெடிட் சுந்தருக்கு தானே. அதுவுமில்லாம அவருக்கான தண்டனை வேற வழில ஆல்ரெடி கிடைச்சிருச்சு..அப்புறம் ஏன் மன்னிக்கக்கூடாதுனு தோணுச்சு… அதான் விட்டுட்டேன். ”
“ம்ம்.. அதுவும் கரெக்ட் தான். சொன்ன எல்லாரும் அவனை எந்த அளவுக்கு நடத்துவாங்கனு தெரிஞ்சும் வந்து உண்மைய சொல்லிட்டான். சரி, சோபி?”
“நீங்க என்னை நினைக்கிறீங்க? அவளை மன்னிப்பேனா?”
“முழுசா இந்த அளவுக்கு மன்னிப்பேன்னு தோணல. ஏதாவது பண்ணி அவ தப்ப புரியவெக்கற மாதிரி செய்யலாம். ஆனா அவளுக்கு தான் ஆல்ரெடி ஒரு பெரிய பிரச்னை வந்திருக்கே. அவளே தேடி ஏத்துக்கிட்டது. அவ தலையெழுத்தை அவளே தப்பாக்கிக்கிட்டா. யாரு என்ன பண்ணமுடியும். என்ன இருந்தாலும் இந்த குடும்பத்து பொண்ணுனு ஒரு பாசம் எல்லாருக்கும் இருக்கும் தானே. தாத்தா, பாட்டி, அம்மா, மாமா மத்வங்களுக்கும் கொஞ்சமாவது கவலை இருந்திருக்கும். என்ன குறை வெச்சோம் இவளுக்கு. ஏன் இப்டி பண்ணா? ஆனா அதுக்காக அவ வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு, ஜெயில்ல தான் இனிமேல்னு இருக்க யாரை குறைசொல்றது?”
“சரி, சரி ரொம்ப பீல் பண்ணாதீங்க. அவ ஜெயிலுக்கு எல்லாம் போகமாட்டா.” என சிரிக்க
அவன் அவளை ஆச்சரியமாக பார்த்து “ஹே பிராடு இது உன் வேலையா? அப்போ பொய்யா? அப்டியே இருந்தாலும் நீ காட்டுன வீடியோ, போட்டோஸ்.. அதுவுமில்லாம சோபனாவும் ஒத்துக்கிட்டாலே. அது எப்படி ?” என ஆர்வமாக கேட்டான்.