Tamil Madhura கதை மதுரம் 2019,சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 4

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 4

பாகம் – 4

“சில்லென்று வீசும் தென்றெல்லாம்
உன்வாசத்தை சுமந்து வருவதால் – தான்
காற்றெல்லாம் உன் வாசமாய் இருப்பதால் – தான்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!”

லட்சுமி சமையலறையில் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்,
“அம்மா” ஸ்ருதி பின்னால் இருந்து லட்சுமியை கட்டிக்கொண்டாள்.

“எழுந்துவிட்டாயா? காலேஜிற்கு நேரமாகிவிட்டதே.. இன்னும் எழுந்து
கொள்ளவில்லையே என்று யோசித்து கொண்டிருந்தேன்”

“ம்… அது தான் எழுந்துவிட்டேனே.. சூடா ஒரு காபிம்மா…”

“உனக்கு தான் போட்டுகொண்டிந்தேன். இந்தா”

“தேங்க் யூ”

“ஆமாம், நம்ம மோகனா எங்க”

லட்சுமி அவளை திரும்பி முறைத்தார்.

“என்னம்மா மோகனா எங்கே என்று தானே கேட்டேனே” ஸ்ருதி அப்பாவியா
விழிகளை வைத்துக் கொண்டு கேட்டாள்

“அடி வாங்கப் போகிறாய் ஸ்ருதி”

“வேண்டுமென்றால் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் மோகனா எங்கே என்று
மட்டும் சொல்லுங்கள்”

“உலகத்திலேயே சொந்த அப்பாவை இப்படி பெண்கள் பெயரில் அழைப்பவள்
நீயாகத் தான் இருக்க முடியும்”

“உன் மாமியார் எதற்கு அவர் பிள்ளைக்கு மோகன சுந்தரம் என்று பெயர்
வைத்தார்களாம். அப்படி பெயர் வைத்தால் நான் அப்படி தான் கூப்பிடுவேன்”

“என் மாமியாருக்கு பிள்ளை என்றால் உனக்கு யாராம்… ஏன் இப்படி
மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறாய்”

“அப்படி தான் கூப்பிடுவேன்” என்றாள் ஸ்ருதி ஆத்திரத்துடன்

“அப்படி உன் வீட்டுக்காரரிடம் என்ன கேட்டுவிட்டேன். ஆப்ட்ரால் ஒரு
டூவீலர். அதை வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று என்னென்ன சீன்
விடுகிறார்”

“நீயாச்சு.. உன் அப்பாவாயிற்று என்னமோ செய்.. எனக்கு வேலை
இருக்கிறது.”

ஸ்ருதி எரிச்சலுடன் சென்று முன்னால் இருந்த சோபாவில் அமரும் போது
மோகனசுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

“ஹாய் ஸ்ருதி”

‘உர்’ என்று அவரை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஸ்ருதி.
“ஸ்ருதி மேடத்திற்கு பயங்கர கோபம் போல…” வேண்டுமென்றே அவள்
வாயை கிண்டினார் சுந்தரம்

“ஆமாம் கோபம் தான்..”

“என்ன கோபம்” சுந்தரம் புன்னகையுடன் கேட்டார்

“நான் என்ன படிக்கிறேன்”

“இது கூட தெரியாமலா படிக்கப் போகிறாய்”

“நான் என்ன படிக்கிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு
தெரியுமா என்று தெரியவில்லை. அதனால் தான் கேட்கிறேன். சொல்லுங்கள்”

“எம் ஏ ஜெர்னலிசம் படிக்கிறாய்.. அப்படியே தினச்சுடரில் பார்ட் டைமிலும்
வேலை பார்க்கிறாய்”

“உங்களுக்கே தெரிகிறது இல்லையா? என்னுடைய படிப்பிற்கும் வேலைக்கும்
டூவீலர் எவ்வளவு முக்கியம். எப்பொழுதும் ஸ்வேதா டூவிலரிதான் சுற்றி
கொண்டிருக்கிறேன்.

பார்த்துக் கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள்.. இவ்வளவு நாள் நான்,
உங்கள் மகளுக்கு டிரைவர் வேலை பார்த்திருக்கிறேன். அதற்கு ஒரு நான்கு
லட்சம் பணம் கொடுங்கள் என்று கேட்க போகிறாள்”

“ஏது நீயே சொல்லிக் கொடுப்பாய் போல இருக்கிறதே”

“வேறு வழி.. அதை வைத்தாவது நான் டூவிலர் வாங்கிக் கொள்வேன்
அல்லவா?”

“…………”

“அப்பா?”

“ம்”

“பீலீஸ் பா”

“எதற்கு?”

“ஒரு டூவிலர் பா…”

“நீ டென்த் படிக்கும் போது சைக்கிளில் இருந்து கீழே காலை உடைத்துக்
கொண்டு மூன்று மாதம் படுக்கையில் கிடந்தாயே…. நானும் உன் அம்மாவும்
எவ்வளவு தவித்து போனோம் தெரியுமா…”

“………….”

“வேண்டாம் டா தங்கம்”

“அப்பா பீளீஸ். இதையே சொல்லி, சொல்லி என்னை எத்தனை நாள் டார்ச்சர்
பண்ணுவீர்கள். அன்றைக்கு நடந்த விபத்திற்கு நான் பொறுப்பல்ல. தவறாக
வந்த கார்காரன் தவறு. உங்களுக்கே தெரியும்”

“அதே தான் டா தங்கம் நானும் சொல்கிறேன். நீ சரியாக ஓட்டினாலும்,
ரோட்டில் செல்கிற எல்லாரும் சரியாகத் தான் ஓட்ட வேண்டும் என்று
இல்லையே… ஒரு வேளை தவறாக ஓட்டிவிட்டால்….”

“ஒரு வேளை.. ஒரு வேளை ..

இந்த ஒரு வேளை எல்லார் வாழ்விலும் வரத்தான் செய்யும். எல்லாரும்
நிலையாக இருக்க முடியாது” ஸ்ருதி எரிச்சலுடன் சண்டையிட்டாள்.

“நீ எங்களுக்கு ஒரே பெண் ம்மா”

“ஒவர் பாசம் உங்களிடம் பெரிய பிரச்சனை. உங்கள் பாசமே எனக்கு பெரிய
தொல்லையாக போய் கொண்டிருக்கிறது. உங்களுக்கு அது எப்பொழுது புரிய
போகிறதோ தெரியவில்லை” ஸ்ருதி எரிச்சலுடன் திட்டிவிட்டு உள்ளே
சென்றாள்.

“அவள் கேட்பதை தான் வாங்கிக் கொடுத்துவிடுங்களேன்” லட்சுமி அவளிடம்
மெதுவாக கூறினார்

“ அவள் குழந்தை டீ”

“அவளுக்கு கல்யாண வயதாகிவிட்டது” லட்சுமி புன்னகையுடன் கூறினார்

“அதற்காக அவள் என் குழந்தை இல்லையென்று ஆகிவிடுமா?” சுந்தரம்
வரிந்து கட்டினார்

“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. எனக்கு வேலை இருக்கிறது”
லட்சுமி எரிச்சலுடன் உள்ளே திரும்பினார்

“முதலில் அதை செய்” சுந்தரம் பேப்பரில் முகத்தை புதைத்தார்
சிறிது நேரத்தில் வாசலில் டூவிலருடன் வந்து ஸ்வேதா ஆரன் அடிக்க…
ஸ்ருதி அவரமாக கிளம்பிச் வெளியே வந்து ஸ்வேதாவுடன் கல்லூரிக்கு
விரைந்தாள்.

டூவிலரில் ‘உர்’ என்று வந்தவளிடம் ஸ்வேதா பேச்சுக் கொடுத்தாள்.

“ஏன் முகம் இப்படி இஞ்சி தின்றார் போல் இருக்கிறது”

“என்னை குரங்கு என்கிறாயா?” ஸ்ருதி, ஸ்வேதாவிடம் பாய்ந்தாள்.

“அப்படி நேரடியாக நான் எதுவும் சொல்லவில்லையே?

உம் என்று வருகிறாயே என்று சமாதனாபடுத்தினால், பெரிதாக அலட்டிக்
கொள்கிறாய்”

“போடி நீ வேறு கடுப்பேற்றாதே!”

“என்ன பிரச்சனை என்று சொல்?”

“எல்லாம் பழைய பிரச்சனை தான்!”

“ஓ! டூவீலர் பிரச்சனை யா?
என்ன சகஸல் ஆச்சா?”

ஸ்ருதி உதட்டை பிதுக்கினாள். “எங்கே மோகனா வளையவே இல்லையே!”

“பாவம் டீ உன் அப்பா. தினமும் நீ பண்ணுகிற அலப்பரையை தாங்கிக்
கொண்டு, உனக்கு டூவிலர் வாங்கிக் கொடுக்காமல் சமாளிக்கிறாரே. சகஜால
கில்லாடி டீ உன் அப்பா!”

“ஆமாம் எந்த பால் போட்டாலும், சென்டிமென்டை வைத்தே சிக்ஸர்
அடிக்கிறார். தாங்க முடியவில்லை!”

“அது தான் நான் தினமும் உன்னை அழைத்து போகிறேனே. அப்பாவுக்கு
தெரியாமலும் என் வண்டியை எடுத்து செல்கிறாய். பிறகு என்ன பிரச்சனை?”

“எத்தனை நாள் டீ இப்படி ஓட்ட முடியும். என் படிப்பிற்கும் வேலைக்கும்
வண்டியில்லாமல் சமாளிக்க முடியாது டீ. புரிந்து கொள்ளவே மாட்டேன்
என்கிறார்!” ஸ்ருதி கடுப்படித்தாள்.

“சரி டீ விடு. அதற்காக தினமும் சண்டை கட்ட வேண்டுமா. எப்படியும் உன்
அம்மாவை சமாதானப் படுத்தி இந்த ஆண்டு வண்டி வாங்கிவிடலாம்!”

“ம்…”

உன் வாசமாவாள்!!!!!!!!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04   வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20

கனவு – 20   நேரம் இரவு பதினொரு மணி. கைத்தொலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்கவும் யாரென்று பார்த்தான் சஞ்சயன். காலையிலிருந்து அன்ன ஆகாரமின்றி வைஷாலியின் டயரிகளிலேயே மூழ்கிப் போயிருந்தான். இந்த சாம நேரத்தில் யார் அழைப்பது என்று சிந்தித்தவாறே தொலைபேசியைக்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19   அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.   “10.04.2015