Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 6

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 6

பாகம் 6

தேனு வீடே விழாக்கோலம் பூண்டது…

கிஷோர்,தேனு இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் அவள் கண்ஜாடையால் அவனிடம் கேட்டாள் தன் “எல்லாம் ஓகேவா என்பதுபோல கன்னங்கள் தடவியவாறு,கிஷோர் புன்முறுவலுடன் தன் மீசையை தேய்த்தபடி கண்ணடித்து யாரும் அறியா வண்ணம் அவன் விரல் மீசைக்கு அருகில் தடவியவாறு அவளை கண்ஜாடையால் பார்த்தபடி அவன் விரலிலே முத்தமிட்டான்.

தேனு வெட்கத்தில் முகம் கவிழ்ந்தாள்.

 

“சத்தியமா உன் நினைப்பில்மூச்சு முட்டி திக்குறேண்டி

கோவம் ஏத்தி கொள்ளாதடி

கொத்தி கொத்தி தின்னாதடி

 

ஒரசாத  உசுரத்தான்உருக்காத மனசத்தான்அலசாத……”

 

அவன் வாய் அந்த பாடலை முணுமுணுத்தது

டேய் மச்சி …என்றவாறு கிஷோர் காலேஜ் நண்பர்கள் வந்தார்கள்…..இவன் ராஜேஷ்,ப்ரியா,கனிகா,திலீப்,சதீஷ் எல்லாரும் எப்படி இருக்கீங்க என கலகலப்போடு விசாரித்தான்…..

கனிகா இவன் அருகில் அமர்ந்தவாறு என்ன டாலி என்ன விட்டுட்டு கிராமத்து கண்ணம்மா ஒருத்திய கட்டிக்க போற என அவன் தோளில் சாய்ந்தாள்…..தேனு அவளையும் கிஷோரையும் பார்த்து ஒரு முறை முறைத்தாள்….

அடியே தள்ளி நில்லுடி அவள் கிராமத்து கண்ணம்மா இல்லைடி கிராமத்து காளியாத்தா…..இது தெரியாம இவள் என்மேல சாயுறாளே என மனதில் நினைத்தான்…

தேனு முகம் கோபம்,வாட்டத்தோடு கலையிழந்திருந்தது…

ஹே சும்மா ஓட்றாடி என சைகை காட்டினான்…இவள் போயிடு உன் கனிகா கூடவே திரி என மெஸேஜ் அனுப்பினாள் அவன் மொபைலுக்கு.

ஹே கனிகா என் பிரண்ட் டி ….ஜஸ்ட் உன்னை உசுப்பேத்ததான் அப்படி பண்றா என பதில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

இவளுக்கு மனம் ஆறுதலானது இருந்தாலும் சிறு தயக்கம்…

தேனுவிற்கு கிஷோர் அந்த ஸ்பெஷல் மோதிரத்தை அணிவித்தான் இவளுக்கு நாணம் கலந்த களிப்பு ..அவள் குழி விழ சிரித்ததில் சொக்கிப்போனான் கிஷோர்.

ஐயர் ….கிருஷ்ணன்_சுமதி தம்பதியின் மகன் கிஷோரை ,ராமன்_சீதா தம்பதி தேன்மொழியை பெரியோர்கள் விருப்பப்படி திருமண நிச்சயம் செய்து கொள்கிறோம் என இருவரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்…

அவன் தன் நண்பர்களை அறிமுகப்படுத்தினான் ஹனி….

 

ராஜேஷ் ….”என்னாது ஹனியா பாருடி கனி….நம்ம லவ் பண்றப்ப என்னலாம் சொல்லுவான்….இதுலாம் ஒரு பொழப்பா…அப்படி இப்படினு பினாத்துவான் …இப்ப ஹனியாமா “என ஆரம்பிக்க….”ஓஹோ ” என அனைவரும் கோரஸாய் கத்தினர்.

அச்சோ இவள் பண்ணதை பார்த்துட்டு கிஷோரை கோவிச்சுட்டேனே…ராஜேஷ் கனிகா லவ்வர்ஸா…அப்ப நம்ம ஆளு ராமன் தான் என்பது போல் நகைத்தாள்.

சாரி மா இவன் தங்கம் அவனை சும்மாதான் அப்படி பண்ணேன்…மன்னிச்சுக்கோ தேனு என்றாள் கனிகாஐயோ ஒன்னும் ப்ராப்ளம் இல்லை கனி என்றாள் சிரிப்போடு

அடுத்து சிவமூர்த்தி ,ராசாத்தி,பேச்சி ஆகிம பள்ளித்தோழர்களும். …தீபா,யாசிகா,

கண்ணா ,யாஸின்,பிரபு ஆகிய கல்லூரியில் நெருங்கிய தோழர் கூட்டமும் வரிசையாக தேனுவால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

 

பின் இருவரையும் ஆல்பத்திற்கு போட்டோ எடுக்க போஸ் கொடுக்க சொன்னார் கேமராமேன்.

 

ஒட்டியானத்திற்கு இடையில் மெலிதாய் தெரிந்த அவள் இடுப்பு இவன் இளமை துடிப்பை கூட்டியது….மேலே கைப்போட்டு போஸ் கொடுக்கும்போதே கீழே கையை வைத்து யாரும் அறியாவண்ணம் இடுப்பில் கிள்ளிவிட்டான்….இவள்”ஆஆஆஆஆ”என கூச்சத்தில்  அலறிவிட்டாள்.

 

என்னாச்சுமா என சுமதி ,சீதா ஓடிவந்தார்கள்…

 

கிஷோர் முகம் படபடபடப்பில் வியர்த்துகொட்டியது

 

இவளிடம் என்னாச்சுமா என கேட்க காலில் ஏதோ கடிச்சுடுச்சு நறுக்குன என பிதற்றினாள்….இவனுக்கு மெல்ல சிரிப்பு வேறு வந்தது அடக்கிக்கொண்டான்”என் பொண்டாட்டி நல்லா மழுப்புறா என சிரித்தவாறு….

 

மவனே மாட்டிவிட்ருக்கனும் என்பதுபோல் அவள் ஜாடை காட்டினாள்….

 

ஏதாவது எறும்பாயிருக்கும் அதுக்கு இப்படியா கத்துவ  ஒருநிமிஷம் என்றாள்

சீதா

ஆமாம்மா பெரிய எறும்புதான் தனியா கிடைக்கட்டும் நசுக்கிடறேன் என்றாள் அவனை பார்த்த வண்ணம்..

அவன் மெல்லிய நகை நகைத்தான்.

 

இப்படியே சிரிப்பும் கலகலப்புமாய் நிச்சயம் நடந்தேறியது….

 

மறுமாதமே திருமண தேதியும் குறிக்கப்பட்டது

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 50Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ், எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது. உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா

ஒகே என் கள்வனின் மடியில் – 17ஒகே என் கள்வனின் மடியில் – 17

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி. விபிஆர்  எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க  எனது கதைகள்