Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய்

அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே ஆதி, அவ எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டா ன்னு நினச்சு பீல் பண்ணி அவளே தண்டனை குடுத்துகிறா. முக்கியமா அவளுக்கு உன் மேல இப்டி ஒரு ஆழமான அசைக்கமுடியாத அன்புல? அவன் புன்னகைக்க இவரும் சிரித்துவிட்டு சரி எல்லாரும் இனிமேல் அவகிட்ட புலம்பறது மன்னிப்பு கேக்கறது அவ முன்னாடி அந்த விஷயம் பத்தியே பேசாதீங்க. அது அவளை ரொம்பவே பாதிக்கும். ஆரம்பத்துல இருந்து நீங்க எல்லாரும் அவ மேல ரொம்ப பாசம் காட்டிட்டீங்க. ஆனா அவளை புரிஞ்சுக்கல. அவ என்னை புரிஞ்சுக்கிட்டதால தானே எல்லாம் பாசமா இருக்காங்கனு அவளும் நினைச்சுட்டா. உங்களோட எதிர்ப்பை அப்போ அப்போ அவ சின்னதா தப்பு பண்ணும்போதே காட்டி வளத்திருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது. அவ தப்பு பண்ணாலும் ஒரு நல்லது நடக்கிதுன்னு அத பெருசா எடுத்துக்காம நம்புறோம்னு பேர்ல நீங்க விட்டுட்டீங்க. அவ அதுவே புடிச்சுகிட்டு என்னை என் குடும்பம் நம்பும்னு நினச்சு எல்லாமே பண்ணிட்டா. அது இல்லன்னு ஆகும்போது முக்கியமா மொத்தமா எல்லாரு மொத தடவையா இந்த அளவுக்கு அவளை ஒதுக்கினதும் அவ எல்லா தப்பும் அவ மேலன்னு போட்டு பயந்துட்டா. எல்லாரோட விலகலும் அவளால முழுசா ஏதுக்கமுடியாம திணறிட்டா. எல்லாரும் வருந்தி இப்போ என்ன பண்றது?

அவகிட்ட நீங்க எடுத்த எல்லாத்தையும் அவளுக்கே தெரியாம திருப்பிகொடுங்க. உனக்காக இடம் இன்னும் அப்டியே தான் இருக்குதுனு காட்டுங்க. பழைய திவி இந்த வீட்ல எப்படி இருந்தாலோ அதே மாதிரி அவளை இருக்க விடுங்க. ஆனா அவ இருக்கற மனநிலைக்கு அந்த கூண்டுக்குள்ள இருந்து வெளில வரமாட்டா. ஆனா நீங்க தான் திரும்ப அவளோட இடத்தை காட்டணும். எல்லாருமே அத கரெக்ட்டா இருங்க. அதுக்காக மன்னிப்பு கேட்டு பீல் பண்ணி நீ பழைய மாதிரி இருன்னு கேட்டா அவளுக்கே அவ செஞ்ச விஷயத்தை ஞாபகப்படுத்தி கஷ்டப்படுத்திருங்கனு அர்த்தம். இதுக்கு மேலையும் பாசம்க்கிற பேர்ல அவளை கஷ்டப்படுத்தாதீங்க.

மகா, மதி, ராஜீ அபி அனைவரும் அழுதுகொண்டே அவளை விலக்கிவெச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம் அவகிட்ட ஒருவார்த்தை மன்னிப்பு கூட கேட்கமுடியதா?

டாக்டர் சிரித்துக்கொண்டே “நாம வளத்துன புள்ளை. சொன்னதெலாம் கேட்கும். அதுக்காக எப்படி வேணாலும் பந்தாடலாம்னு நினச்சுட்டீங்கல்ல? அவளும் மனுசி தான், காது குடுத்து கேப்போம் பொறுமையா இருப்போம். அவகூட இத்தனை வருஷம் பழகுனத வெச்சு யோசிப்போம்னு தோணவேயில்ல. ஆனா அவ உங்களுக்கு உண்மையாவே பழையாமாதிரி வேணும்னு தோணுச்சுனா அவ முன்னாடி நீங்க சாதாரணமா சிரிச்சிட்டே தான் எல்லாமே பண்ணனும். உங்களோட உணர்ச்சியை காட்டி அவளை இன்னும் பீல் பண்ண வெச்சு மோசமான நிலைக்கு கொண்டுபோகாதிங்க. என்னைப்பொறுத்தவரைக்கும் இதுதான் உண்மையாவே அவ உங்களுக்கு குடுக்கற தண்டனை. அத பத்தி அவகிட்ட பேசவும் முடியாம உங்களுக்குள்ளயே பண்ண தப்ப நினைச்சு பீல் பண்ணுங்க. நம்பிக்கையோட இருங்க.” என்றவர்

ஆதியிடம் “எல்லாரையும் விட இப்போவும் நீதான் அவளுக்கு. கடைசிவரைக்கும் நம்புனது, அவளுக்காகன்னு யோசிச்சது எல்லாமே..அதனால நீ பாத்துக்கோ. உனக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனா உன் கண்ட்ரோல் மீறி அவகிட்ட இனி அத பத்தி பேசிடாத. அவ கொஞ்சம் பழைய மாதிரி ஆகட்டும். நேரத்துக்கு சாப்பிடவை. நல்லா தூங்கட்டும். எதுக்கும் பீல் பண்ணாத. அவ உன் தியாவ உன்கிட்ட வந்திடுவா. அது ஆனா உன் கைல தான் இருக்கு.” அவனும் சிரித்துக்கொண்டு புரியுது ஆண்ட்டி. பாத்துக்கறேன் என்றவன் அடுத்து அனைவரிடமும் பேசிவிட்டு மேலே செல்ல அனைவரும் தங்களது வேலையை பார்க்க சென்றனர்.

அறைக்கு செல்ல திவி அருகில் அமர அவளும் கண்விழிக்க இவன் சிரித்துக்கொண்டே “குட் மோர்னிங் என்ன மேடம் நல்ல தூக்கமா? சாப்பிட்டு திரும்ப தூங்கப்போறியா? ” என கிண்டலாக கேட்க அவளும் சிரித்துக்கொண்டே “குட் மோர்னிங். அதெல்லாம் பண்ணமாட்டேன். நல்ல பொண்ணா குளிச்சிட்டு ரெடியாகி வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ஆபீஸ் போகணும்ல?”

“ம்ம். ..சரி போ”

அவளும் ரெடியாகி வர கீழே அனைவரும் இருக்க சிரிப்புடன் இருந்தவள் முகம் அப்படியே வாடி விட்டது. ஆனால் அவள் தயங்கி வர மதி “திவி வந்திட்டியா, காபி குடிச்சுட்டு எல்லாருக்கும் குடுத்திட்டு வரியா டிபன் ரெடி பண்ணிடலாம்?”

ம்ம்..

அவள் எடுத்து ஊற்றி அனைவர்க்கும் குடுக்க சேகர் “திவி மா, பேப்பர் எடு டா. இன்னைக்கு வந்த நியூஸ் பத்தி நல்லா டிஸ்கஸ் பண்ணுவோம்.”

திவி “மாமா, கொஞ்சம் வேலை இருக்கு அத்தை கூப்பிட்டாங்க. ”

அவரோ “அட அதுதான் அங்க எல்லாரும் இருக்காங்களே? இது மத்தவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணா குழப்பிவிடுவாங்க. அண்ட் கழண்டுக்குவாங்க. நீ ஸ்டார்ங்கா சொல்லிட்டு கூட சப்போர்ட் பண்ணுவ வா. அப்படியே காபி குடிக்கற நேரம் தான் வா வா ” என அழைத்து பத்து நிமிடம் உக்கார வைத்து சேகர், அரவிந்த், அர்ஜுன், தாத்தா, பாட்டி, ஆதி அனைவரும் பேசிக்கொண்டிருக்க அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள். அடுத்து அவளும் வேலை பார்க்க செல்ல அங்கே அம்முவும், மதியும் கூட இவளுடன் பேசிக்கொண்டே கேட்டுக்கொண்டே இருக்க இறுதியாக அபி அவளிடம் சுடு தண்ணீர் குழந்தைக்கு என கொண்டு வர சொல்லி கேட்க முதலில் தயங்கிவள் பின் மெதுவாக சென்று அறையினுள் குடுத்து விட்டு உடனே திரும்பிவிட்டாள். அபியும் அடுத்து கேள்விகேட்க பேச தூரமாக நின்றே பதில் மட்டும் கூறினாலே தவிர இவளாக எதுவும் அதிகம் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஆதியை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் இதனை கவனித்தாலும் கவனிக்காதது போல நாளிதழை வைத்துக்கொண்டிருந்தான். அவளுக்கு ஏதோ பதட்டமாக பாட்டியிடம் நான் கொஞ்சம் ரூம்க்கு போயிட்டு வரேன் என செல்ல அவள் பின்னோடு சென்ற ஆதி அறையினுள் நுழைந்தவுடன் திவி கண்ணாடியின் முன் கைகள் உடல் நடுங்க நிற்க அவளை யோசிக்கவேவிடாமல் பின்னோடு இருந்து அணைத்து முதலில் தடுமாறியவள் பின் ஆசுவாசமாக மூச்சுவிட அவள் இவனது கைகைளை பற்றிக்கொள்ள அவனும் அதில் அழுத்தம் குடுக்க அவள் தோளில் முகம் வைத்து பேச்சை மாற்றும் விதமாக “நான் ஆபீஸ் போகாம இருந்திடுவா?” என மெதுவாக கேட்க அவள் சிரித்துக்கொண்டே “எதுக்காம்?”

“இல்லடா, நீ பாரு இன்னும், டையர்டா இருக்க. நான் கூட இருந்த உனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, தூங்கவெச்சு கூடவே இருந்து பாத்துக்குவன்ல.”

“ம்மகூம். ..ஆமா இப்போ பொறந்த குழந்தை பாரு, ஏன் அப்டியே தூக்கிட்டே சுத்துங்களேன் இன்னும் நல்லா இருக்கும். ”

அவனும் வேகமாக நல்லா இருக்குமே எனக்கு ஓகே. தூக்கவா என தூக்க போக

“ஓய் அதெல்லாம் எதுவும் வேண்டாம். போங்க பேசாம போயி ஆபீஸ் கிளம்புங்க. எனக்கு எதுவுமில்லை. நான் என்னை பாத்துக்கறேன். இப்போ நான் கீழ போயி வேலை பாக்குறேன். ” என அவளும் நார்மலாகி செல்ல இவனும் விடுவித்தான்.

அடுத்து வந்த நாட்களில் இப்டியே அனைவரும் சாதாரணமாக பேச இவள் கேட்ட கேள்விக்கு பதில் தர வேலைகள் செய்ய ஓய்வெடுக்க நடு நடுவே ஆதியின் சீண்டல்கள், விளையாட்டு இருந்தாலும் அவனிடமும் ஒரு ஒதுக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஏதோ ஒரு பனித்திரை இடையே இருப்பதை இருவரும் உணர்ந்தனர். ஆதியிடம் பேசுவாள். கேள்வி கேட்டால் பதில் வரும். சிரிப்பாள், வாய் பேச்சிலே வம்பிழுப்பாள். அதுவும் அவனாக ஆரம்பித்தால் மட்டுமே ஆனால் இவளாக அழைத்து பேசுவது, வம்பிழுப்பது எதுவும் வரவில்லை. அவள் எதிர்பார்த்தாலும் பார்த்துக்கொண்டே அமைதியாக தவிப்பாளே தவிர அழைக்கமாட்டாள். இதை முதலில் அழைக்கட்டும் என்று விட்டவன் அவள் தவிப்பை கண்டு பொறுக்கமுடியாமல் இவனாக சென்று பேச ஆரம்பிக்க அவளும் பிடித்துக்கொண்டு பேசுவாள். பிறரிடம் கேட்ட கேள்விக்கு பதில், சின்ன சிரிப்பு, அனைவருடனும் இருந்தாலும் இவ்வளவே. அபியிடமும், திவியின் தாய் மகாவிடமும் பார்த்தாலே விலகி சென்றுவிடுவாள். அந்த இடத்திலே நிற்க மாட்டாள். முகத்தை திருப்பிக்கொண்டு போகாவிடினும் முகம் கொடுத்து பேச இடமளிக்காமல் அவள் அந்த நேரம் அத்தனை வேலைகளையும் செய்ய கிளம்பிவிடுவாள். அவர்ளுக்கு மனவருத்தம் அதிகம் இருக்க வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டனர்.

நந்துவை அழைத்து வர அபியே அவனை திவியிடம் அழைத்து சென்று “திவி இவனை நீயே பாத்துக்கோ. என்னால முடியாது பா…” என்று விட்டுவிட்டு வர சிறிது நேரத்தில் திவியும், நந்துவும் பழைய படி உரையாட அனைவர்க்கும் மனது லேசானது. ஆனால் குட்டி பாப்பாவை அவள் தூக்கவேயில்லை. யாருமில்லா நேரத்தில் பார்த்துக்கொண்டே செல்வாள். குழந்தையை பற்றி எதுவும் பேசும் முன், குழந்தைக்கு என ஏதேனும் வேலை செய்யும் முன் அனைத்தும் செய்வாள். ஆனால் குழந்தையை விட்டு விலகியே இருந்தாள். இதை கவனித்தும் யாரும் எதுவும் செய்யமுடியாமல் இருந்தனர்.

இதுவே அனைவர்க்கும் பழகிவிட பரமேஸ்வரன், சுந்தர் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இவர்களை கண்ட தாத்தா “உங்களா யாரு இங்க வரசொன்னாங்க…அதான் அன்னைக்கே திட்டி அனுப்பிச்சிட்டேன்ல. இதுக்கு மேல அப்பா பையன், அண்ணன்னு உறவு சொல்லி இங்க வரக்கூடாதுன்னு சொல்லியும் எதுக்கு வந்தீங்க என கத்த சத்தம் கேட்டு அனைவரும் வர திவியும் வெளியே வர அவரை கண்டவர்கள் கோபத்தை குறைத்துக்கொண்டு “மாப்பிளை அவங்கள போக சொல்லிடுங்க. அவங்க நமக்கு வேண்டாம்” என சேகரும் அதே அளவு கோபத்தில் இருக்க அவர்கள் “சொல்றதை ஒரே ஒரு தடவ கேளுங்க பா. சுபிக்கு வரன் அமைஞ்சிருக்கு. நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். ”

தாத்தாவோ “உன் பொண்ணு நீ பண்ற பா. நாங்க எதுக்கு? நீ தாராளமா பண்ணு. நாங்க யாரும் வர மாதிரி இல்லை. ”

“என்ன தாத்தா அவ நீங்க வளத்துன பொண்ணு, அவ கல்யாணத்துல நீங்க இருக்கணும்னு ஆசைப்படுவாள்ல. உங்க ஆசிர்வாதம் வேணுன்ல.. நீங்க யாரும் இல்லாம அவ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு நிக்கிறா தாத்தா. ..ப்ளீஸ் நாங்க பண்ண தப்பை மன்னிச்சுடுங்க… எல்லாரும் வாங்களேன் ”

“அதானே பாத்தேன். திடிர்னு வந்திருக்கிங்களேன்னு..அவ என் பேத்தி அவளுக்கு என் ஆசீர்வாதம் எப்போவும் இருக்கும். உங்கள மன்னிக்கறதா?. உன் அம்மாவும், சோபனாவும் பண்ண வேலை தப்புன்னாலும் அவங்க அப்டித்தான்னு தெரிஞ்சது. ஆனா உங்க இரண்டு பேரை என்ன டா சொல்றது. ஒருத்தன் குடுமபத்துக்காக சத்தியம் வாங்குனானாம். இன்னொருத்தன் காதலுக்காக மத்த வேலைய பண்ணானாம். அதனால இங்க எத்தனை பிரச்சனை. எவ்ளோ கஷ்டம். அப்போவே சொல்லிட்டேன் இனிமேல் இங்க வரக்கூடாது. உனக்கான சொத்து வந்து சேந்திடும். ஆனா இனிமேல் விசேஷத்துக்கு அதுக்கு இதுக்கு வந்து நின்றாதிங்க.”

“அப்பா சொத்தா முக்கியம், நம்ம குடும்பம் மனுசங்க அவங்க சந்தோசம் தானே முக்கியம்?”

“அது உனக்கு இப்பதான் தெரியுதா? பிரச்சனை பண்ணும் போது, அமைதியா இருந்த போது தப்பு பண்ணாம அந்த பொண்ணு தலைகுனிஞ்சு நினைச்சது எல்லாம் உனக்கு தெரில. இது குடும்பம், மனுஷங்களும், அவங்க சந்தோஷமும் முக்கியம் பெரிசுன்னு தெரில இல்லையா? அவர்களும் தலை குனிந்து நிற்க பாட்டி எல்லாம் யாரும் அறியாமல் கண் கலங்க அதை கண்ட திவி ஆதியை பார்க்க அவனோ இதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி கேஸுலாக இருக்க இவளே “தாத்தா நான் ஒண்ணு சொல்லட்டுமா?”

“சொல்லுடா”

“நீங்க சொல்றது எல்லாமே முடிஞ்சது தானே தாத்தா. தப்பு பண்ணது இவங்க நாலு பேருன்னாலும் இப்போ கூப்பிடறது சுபிக்காக தானே. அவ என்ன தப்பு பண்ணா நாம ஏன் அவளுக்கு தண்டனை குடுக்கணும். நாம இருந்தாதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிருக்கா. நீங்க பாசமா வளத்துன பொண்ணு அதே மாதிரி தானே அவளை நீங்க சந்தோசமா கல்யாணம் பண்ணி அனுப்பிச்சு வெக்கணும். அவ உங்ககிட்ட எதிர்பார்க்காம யாருகிட்ட பார்ப்பா. நாளைக்கு உங்ககிட்டேயே வந்து அவங்க தானே தப்பு பண்ணாங்க. ஆனா என்னை எல்லாரும் ஏன் விலக்கி வெச்சீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லமுடியும் சொல்லுங்க. மறுபடியும் ஒரு தப்பான அவசரமான முடிவு வேண்டாம்னு தோணுது தாத்தா. எல்லாத்துக்கும் மேல நான் கஷ்டப்பட்டு தலைகுனிஞ்சு நின்னேன் வருத்தப்பட்டேனு சொல்றிங்க. உங்க எல்லாருக்கும் அது புரியும் போது அத்தனையும் நான் எதுக்காக பண்ணேன்/ அந்த பிரச்னையோட ஆரம்பமே குடும்பம் பிரியக்கூடாது. யாரும் ஒதுக்கிவெக்க வேண்டாம். ஒண்ணா இருக்கணும்னு தான் அதுக்கு நான் பண்ண சத்தியம் தான். ஆனா இன்னைக்கு அதுவும் வேஸ்ட்னு ஆகும் போது இத்தனை நாள் பட்ட கஷ்டம் வலி எல்லாமே வீண் தானே தாத்தா. இதுக்கு நான் அன்னைக்கு சும்மா இவங்கனால தான் பிரச்சனைன்னு சொல்லிருந்தா அப்போவே இதுத்தானே நடந்திருக்கும். இதுக்காகவா இவ்வளோ கஷ்டம்?…ப்ளீஸ் தாத்தா…நாம போலாமா? ” என அனைவரும் யோசித்து பேசி ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். திவியிடம் “அதுவும் உனக்காக தான் டா ஒத்துக்கறோம். எப்போ கிளம்பலாம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி சொல்லுங்க.” என அவர் எழுந்து செல்ல

சுந்தர் “தேங்க்ஸ் திவி”

அவளும் மெலிதாக புன்னகைத்து விட்டு அடுத்து அனைவரும் ஊருக்கு மறுநாள் கிளம்ப தயாராகினர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை 10கடவுள் அமைத்த மேடை 10

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த வைஷாலியின் ப்ளாஷ்பேக் இன்றைய பகுதியிலிருந்து ஆரம்பம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை 10 அன்புடன் தமிழ் மதுரா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46

46 – மனதை மாற்றிவிட்டாய் யாரிடமும் எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக அறைக்கு வந்து அமர்ந்தாள். ஆதியும் அவளை தொந்தரவு செய்யவில்லை. மதிய வேளை தாண்டியும் அவள் அதே இடத்தில இருக்க ஆதி அவளிடம் வந்து சாப்பிட சொல்லி தட்டை நீட்டினான்.