Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64

64 – மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் ஹாஸ்பிடல் கொண்டு செல்ல திவியை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டர் அகிலா அவர்களிடம் வர ஆதி “ஆண்ட்டி அவளுக்கு என்னாச்சு? எதுவும் இல்லையே?” என பதற அவர் சிரித்துவிட்டு “ஆதி, ஜஸ்ட் ரிலாக்ஸ். அவளுக்கு ஒன்னுமில்ல. ரொம்ப வீக்கா இருக்கா. இப்போ ட்ரிப்ஸ் போட்டு இருக்கு. கொஞ்ச நேரம் இரு அவ மயக்கமா தான் இருக்கா கண்ணு முழிக்கட்டும்.” என சமாதானபடுத்த அவனும் அமைதியானான்.

சிறிது நேரத்தில் திவி விழிக்க அவளது கண்கள் ஆதியை தேடி அவனை கண்டுகொண்டதும் அமைதியானது. இதை கவனித்துக்கொண்டே அவளிடம் வந்த அகிலா “என்ன திவி மேடம் எப்படி இருக்கீங்க.. ?”

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி” என மெலிதாக புன்னகைக்க

“அப்படியா அதனால தான் இவ்வளவு வீக்கா இருக்கியா? சரி காலைல என்ன சாப்பிட்ட?”

“எதுவும் சாப்பிடல ..”

“ம்ம் நேத்து நைட்?”

திவி இல்லை என்பது போல தலையசைக்க

அகிலா முகம் சுருக்கி “கடைசியா எப்போதான் சாப்பிட்ட ?” என சற்று காட்டமாகவே கேட்க

அவள் சற்று தலைகுனிந்து விட்டு “உண்மையாகவே நியாபகம் இல்லை ஆன்ட்டி” எனவும் அவளின் நிலை கண்டு ஆதிக்கு மனம் கனக்க அந்த இடத்தை விட்டு வெளியேறினான். அவன் செல்வதை வலியுடன் பார்த்தவளின் கண்கள் கலங்க குடும்பத்தில் மற்ற அனைவரும் மன்னிப்பு கேட்க அவளுக்கு இதை கண்டு திணற மீண்டும் கைகள் நடுங்க உணர்ச்சிவசப்பட மூச்சு வாங்கி மயங்கினாள்.

மதியின் தோழியாகவும் சரி, குடும்ப மருத்துவர் என்ற ரீதியிலும் சரி மேலும் ஆதி திவியின் நிச்சயத்தின் போதும் இருந்ததால் அகிலாவிற்கு திவி மேல் தவறில்லை என இன்று உறுதியானது என்பதை தவிர அவர்கள் குடும்ப விபரம் ஓரளவிற்கு நன்றாகவே தெரியும். இப்போது நடந்த நிகழ்வுகளையும் அவர்களே கூறினர். அனைத்தையும் கேட்டு முடித்தவர் சரி அவ கொஞ்ச நேரம் தூங்கட்டும் என நர்சிடம் ஏதோ கூறிவிட்டு அவரை மட்டும் இருக்க வைத்துவிட்டு பிறரை வெளியில் அழைத்துவந்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அவள் விழிக்க கொஞ்ச நேரம் எதையோ வெறித்து நோக்கினாள். பொதுப்படையாக சில விஷயம் நர்ஸ் பேச அவளும் பதில் கூறினாள். மற்றவர்களை அழைக்க அவளும் நார்மலாக இருந்தவள் இவர்களும் முதலில் நார்மலாக பேசியவர்கள் தாய்மார்கள் மீண்டும் எமோஷன் ஆகி எங்களை மன்னிச்சிரு மா. நாங்க உன்னை புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டோம் என கத்தி புலம்ப அவள் மீண்டும் மூர்ச்சையடைய அகிலா வேகமாக உள்ளே வந்து அவளை சோதித்து விட்டு அவளுக்கு டோஸ் கொஞ்சம் அதிகமா குடுங்க என கூறிவிட்டு அனைவருடனும் வெளியே வந்தவர் அவரிடம் அனைவரு விசாரிக்க அகிலாவோ “எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போ கொஞ்சம் கொஞ்சம் கன்பார்ம் ஆயிடிச்சு. அவ மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்ருக்கா. இவ்ளோ நேரம் ஆதி உன்கிட்ட நான் விசாரிச்சி திவி பீஹவியர்ஸ் பாத்தா அப்டி தான் இருக்கு. அவ கோபப்பட்டு கத்தல. அழுகல… ஆனா அவ மனசுக்குள்ள நெறையா வெச்சு இருக்கா. ஏதோ ஒரு பயம் எல்லாரும் சாதாரணமா பேசுனா பேசுறா. ஆனா அந்த பிரச்சனைய பத்தி பேசுனா, எல்லாரும் மன்னிப்பு கேக்கறது பீல் பண்றத பாத்தா என்னவோ ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்றா. அதனால தான் இந்த நடுக்கம், பதட்டம், ஸ்ட்ரெஸ் கூட இருக்கலாம். ரொம்ப அழுத்தி அழுத்தி இப்போ அவளுக்கு வெளிகாட்ட தெரில. சோ அவகிட்ட யாரும் இனிமேல் அதைப்பத்தி பேசாதீங்க… மன்னிப்ப இருந்தாலும் கூட வேண்டாம். என்றவர் ஆதியிடம் மொதல்ல அவ என்ன நினைக்கிறா? இந்த பிரச்சனைய அவ எந்த மாதிரி பாத்தானு தெரிஞ்சுக்கணும். அப்போதான் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கமுடியும்.

ஆதி “என் தியாவ நான் சரியா பாத்துக்கமா விட்டுட்டேன்ல.?”

டாக்டர் “பாரு ஆதி இந்த மாதிரி நீங்க பீல் பண்ணாதீங்கன்னு தான் சொல்றேன். முக்கியமா இது உனக்கு தான். அவ மயக்கத்துல இருக்கும் போதே கூட சாரி ஆதி சாரி ஆதின்னு தான் புலம்பிட்டு இருக்காளாம். நர்ஸ் அதுதான் சொன்னாங்க. சோ உன் ரியாக்ஷன்ல நீ ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும். அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரியரவரைக்கும் நாம ரிஸ்க் எடுக்க முடியாது. அவ கொஞ்சம் கூட கான்ஷியஸ் இல்லாம மொத்தமா பீல் பண்ணி எக்ஸ்டீரிம்ல இருந்தான்னா ஏதாவது அதிர்ச்சி குடுத்து அவ பீலிங்ஸ வெளிய கொண்டு வர பாக்கலாம். ஆனா திவி விஷயம் அப்படியும் தோணல. நார்மலா இருக்கா..கேட்டா பதில் சொல்றா. பட் பிரச்சினை பத்தி பேசுனா தான் அவ கன்ட்ரோல இழந்தட்றா. உனக்கு நான் சொல்றது புரியும்னு நினக்கிறேன். ”

“புரியுது ஆன்ட்டி.”

நர்ஸ் வெளியே வந்து “டாக்டர் அவங்க ஷஸ்பண்ட்கிட்ட பேசணுமாம்.”

ஆதி உள்ளே சென்று “தியா சொல்லு டா.”

“நாம வீட்டுக்கு எப்போ போறோம்? போலாமா? ”

“இல்லடா ட்ரிப்ஸ் போட்டிருக்கில்ல?”

“நான் நர்ஸ்கிட்ட கேட்டேன் இதோட போதும்னு சொல்லிட்டாங்க… இது கொஞ்ச நேரம் தான் இருக்கும். நாம அப்புறம் போலாம்ல? அண்ட் நைட் இங்க ஒருத்தர் தான் இருக்கணுமாம். முடிஞ்சளவுக்கு லேடீஸ் தான்னு சொல்ராங்க. அதெல்லம் வேண்டாம். எனக்கு ஒன்னுமில்ல..நாம வீட்டுக்கு போலாம்..”

அவனுக்கு புரிந்தது தான் உடன் இருக்கமுடியாது என யோசிக்கிறாள். “டாக்டர்கிட்ட கேட்டுபாக்றேன்”

அவள் தலையை தொங்க போட்டுகொண்டு “ஆதி, நான் அமைதியா சாப்பிட்டு தூங்கிடறேன். திரும்ப மயக்கம் போட்டு எல்லாரையும் டென்ஷன் பண்ணமாட்டேன். ப்ளீஸ் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்களேன். யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நம்ம ரூம்ல பேசாம போயி தூங்கிடறேன். ” என அவள் கேட்ட விதத்தில் இவனுக்கு கண்களே கலங்கிவிட்டது.. அவளை அணைத்துக்கொண்டு தலையை வருடிவிட்டான். டிஸ்டர்ப் பண்ணாதேனு சும்மா சொன்னதெல்லாம் கூட அவ மனசுல எந்த அளவுக்கு பாதிச்சிருக்கு என எண்ணியவன் அவளை விலக்கி விட்டு “நீ டிஸ்டர்ப்ன்னு யாரு சொன்னது. அதெல்லாம் எதுவுமில்லை. உன் ஹெல்த்துக்காக தான் பாத்தேன். விடு… இப்போ உனக்கு வீட்டுக்கு போகணும். அவ்ளோதானே… டாக்டர்கிட்ட டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டு வரேன்.”

பின் வேகமாக அனைத்தும் பேசிவிட்டு டாக்டரும் “நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். முடிஞ்சளவுக்கு அவ நல்லா தூங்கட்டும். யாரும் இது விஷயமா பேசாதீங்க. அவளை கவனிச்சுட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க” என அவளை வீட்டுக்கு அழைத்துவந்தனர். அவளும் யாருடனும் பேசவில்லை. மற்றவர்களுக்கும் ஏதாவது பேசினால் அவளுக்கு மீண்டும் பாதிப்பு வருமோ என அமைதியாக வந்தனர். வீட்டில் ஏற்கனவே அபிக்கும் போனில் விஷயத்தை கூறிவிட்டதால் அவர்களும் எதுவும் பேசவில்லை. நேராக வந்தவளை ரூமிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வந்த ஆதி அவளுக்கு உணவு எடுத்து சென்று கொடுத்துவிட்டு மீண்டும் சிறிது நேரத்தில் செல்வதற்குள் அவள் உறங்கிவிட இவன் அறையில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான்.

மதி வந்து அவனை சாப்பிட அழைக்க அவனும் வெளியே வர “அவ தூங்கிட்டு இருக்கா. நீ என்ன ஆதி அங்க உருட்டிக்கிட்டு இருக்க. முழுச்சுக்க போறா?”

“இல்லமா, தூக்க மாத்திரை குடுத்திட்டேன். எந்திரிக்க மாட்டா. டாக்டர்கிட்ட பேசிட்டேன். அவ முடிஞ்சளவுக்கு நல்லா தூங்க வைங்கன்னு சொல்லிருக்காங்க… அவ முழுச்சிட்டே ஏதாவது நினைச்சிட்டே இருப்பா. அதனால தான்.” கீழே வந்து அனைவரும் சாப்பிட ஆதி வீட்டார், திவி வீட்டார் எல்லாருமே திவியை பற்றியே பேசி கொண்டிருந்தனர். அவளை கஷ்டப்படுத்திட்டோம், புரிஞ்சுக்கல. இந்த மாதிரின்னு நினைக்கலன்னு எல்லாம். தாய்மார்கள் அழுதுகொண்டே இருக்க ஆதி அமைதியாக இருந்தான். அர்ஜுன், அரவிந்த் “என்ன பண்றதுன்னே புரியல… அவகிட்டேயும் கேக்கக்கூடாதுனு டாக்டர் சொல்ராங்க. பிரச்சனை தெரியாம அவளுக்கு டிரீட்மென்ட் குடுக்கக்கூடாதுன்னும் சொல்ராங்க. அவ யார்கிட்டேயுமே எதையும் சொன்னதில்லை. என்ன நினைக்கிறா? எப்போ இருந்து அவளுக்கு ப்ரோப்லேம்ன்னு கூட தெரில. கல்யாணம் பண்ணதுக்கப்புறம், சண்டை திட்டுனு இருந்தாலும் கொஞ்ச நாள் வரைக்கும் கூட அவ நல்லாத்தானே பேசிட்டு இருந்தா….ஆனாலும் நடுவுல அவ எதனால அம்மு கல்யாணம் அப்போ வராம போனா? அனு விஷயமா பேசுனது? அபி அந்த மாதிரி ஒரு நிலமைல இருக்கும் போது வராதேன்னு சொல்லிட்டா எப்படி திவி அப்படி நடந்துப்பா? இதெல்லாம் கூட நம்ம திவி இல்லையே. அப்போவே அவளுக்கு மனசுல ஏதாவது ப்ரோப்லேம் இருந்திருக்குமா? என

அம்மு கூறினாள் “அவ நான் கேட்டதுக்காக தான் கல்யாணத்துல கடைசில வராம போனா என தங்களுக்குள் நடந்த உரையாடல் அனைத்தும் கூறிவிட்டு ஆனா அவ அத பெருசா எடுத்துக்கமாட்டான்னு தான் நினச்சேன். வராம போவான்னு நினைக்கல ” என கூறினாள்.

அபி “எனக்கு தண்ணி எடுத்து தரேன்னு அவ சொன்னா தான். நான் தான் பிடிவாதமா வேண்டாம்னு போயி தடுக்கி விழுந்து அப்பவும் ஹெல்ப் பண்ண வந்தவகிட்ட நீ வந்தா ஹாஸ்பிடல் போகமாட்டேன்.” என அடம்பண்ணி அவளை தடுத்தது பேசியது எல்லாமே கூறினாள் மன்னிச்சுரு ஆதி உன்ன அவ லவ் பண்ணல… உன்கிட்டேயும் சொல்லாம வேற யாரோ நினைச்சிட்டு உங்க லைப்ப வீணாக்குறளேனு கோபத்துல அவகிட்ட அப்டி எல்லாம் நடந்துக்கிட்டேன்.” என அழுதுகொண்டே இருந்தாள்.

அப்போ அனு விஷயம்?

பாட்டி நடந்தவற்றை கூறினார். அது செய்தது சோபி என.

அர்ஜுனுக்கும் அரவிந்திற்கும் கோபம் தலைக்கேற எல்லாரையும் வறுத்தெடுத்தனர். “உங்க எல்லாருக்கும் ஒன்னு பிடிக்கலேன்னா எப்படி வேணாலும் மோசமா நடத்துவீங்களா? உங்க இஷ்டத்துக்கு அவளை பேசியிருக்கீங்க? இத்தனை வருசமா இப்படித்தான் பழகினீங்களா? அது சரி, பெத்தவங்களுக்கு வளத்தவங்களுக்குமே புரியல அதுவும் வயசுல பெரியவங்க பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணுவாங்கன்னா அதே இங்க நடக்கல. அப்புறம் மத்தவங்களையும் சின்னவங்களையும் சொல்லி என்ன பண்றது?” என ஆளாளுக்கு அழுவதை கண்டு சலித்துக்கொள்ள

அரவிந்த் “சரி என்ன பண்றது இப்போ? வேற எது அவளை பாதிச்சிருக்கும்? உண்மையை சொன்னா இங்க யாருமே அவளை புரிஞ்சுக்கல. அப்டி இருந்தா ஒன்னு அவளுக்கு எது ப்ரோப்லேம், எதனால அவ வெக்ஸ் ஆயிருப்பான்னு தெரிஞ்சுக்கும், இல்லை இது இது ஆப்ஷன்ஸ் இருக்கு இதெல்லாம் அவளை கஷ்டப்படித்திருக்கும்னு கூட சொல்ல முடில ஆனா அவளை நாங்க எப்படி வளத்துனோம் அவ உண்மையா இல்லேன்னு புலம்பல் வேற. கொஞ்சம் பொறுமையாவது இருங்க வார்த்தையை விடாதீங்கன்னு எத்தனை தடவ சொல்லிருப்போம். உங்களுக்காக பாத்து பாத்து பண்ண புள்ளைய இப்டி பாதி பைத்தியமாக்கிட்டீங்களே? இனி அவளா அவளை பத்தி சொன்னா மட்டும் தான் ” என கோபத்தில் கத்திக்கொண்டிருக்க

ஆதிக்கு ஏதோ தோன்ற வேகமாக அந்த இடத்தை விட்டு அறையை நோக்கி ஓடினான். பீரோவில் இருந்து ஒரு இதய வடிவ வெல்வெட் மற்றும் சில பல ‘வேலைப்பாடுகள் செய்த பில்லோ இருந்தது. பார்த்தால் அது ஒன்றும் தெரியாது. அதை சுத்தி திருப்பி பார்த்துவிட்டு ஒரு இடத்தில் ஜிப்பை கண்டதும் அதை திறந்தான். உள்ளே இருந்து அவனது தேடலுக்கான விடை கிடைத்தது. ஆதியின் பிரேம் செய்யப்பட்ட ஒரு போட்டோ ஒரு டைரி. திவியை பார்த்து பெருமூச்சு விட்டவன் வெளியே வந்தான். அவனிடம் அனைவரும் விசாரிக்க “இது அவ எனக்காக எழுதின டைரி.” முதல் பக்கம் மட்டும் திறக்க “Dedicated to my Sweetheart DHAYA” என இவனது முழு உருவ படம் ஒட்டப்பட்டு கீழே எழுதப்பட்டிருந்தது.

“இது எப்படி டா எடுத்த? உனக்கு எப்படி தெரிஞ்சது? ” என அர்ஜுன் வினவ

“அவ அப்போ அப்போ எழுதிட்டே இருப்பா. கேட்டா என் தயாக்கு நான் லவ் லெட்டர் எழுதறேன், என் தயாகிட்ட கம்பளைண்ட் பண்றேன், அவருக்கு ஹிண்ட் குடுக்கிறேன்னு சொல்லுவா. நான் சில சமயம் சிரிச்சிட்டு போய்டுவேன், சில சமயம் நான் தான் உன் ஹஸ்பண்ட் எனக்கு தான் தெரியணும் உன்னை பத்தின்னு அத குடுன்னு சொல்லுவேன், என்ன பண்ணாலும் அவ அத என்கிட்ட தரமாட்டா. என் தயாகிட்ட என் லவ் சொன்னதுக்கப்புறம் தான் இது அவர்கிட்ட போயி சேரும்னு சொல்லுவா. ஆனா நான் அப்போ அப்போ தேடி பாத்திருக்கேன். அப்போ எல்லாம் அது எனக்கு கிடைக்கல. ஆனா இத இப்டி ஒரு இடத்துல வெச்சிருப்பான்னு நான் எதிர்பார்கல..” என்றவன் இத படிச்சதுக்கப்புறம் எனக்கு நிறையா விஷயம் புரியலாம்ன்னு நினைக்கறேன். தனியே அதை எடுத்துக்கொண்டு மேலே சென்று படிக்க துவங்கினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 30கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்   பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 2

பேருந்தின் சக்கரங்கள் முன்னேற கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. “ஏய் எங்க வீட்ல யாரும் இல்லடி எனக்கு ரொம்ப போர் அடிக்குது நீ வர்றியா இல்லையா” என ஃபோனில் தன் தோழியிடம் பேசிகொண்டிருந்தாள் கவிதா. “ஏன்டி நான் எப்புடி இந்தநேரம் அங்க