Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

62 – மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன். உன்னால எவ்வளோ பெரிய பிரச்சனை தெரியுமா? சொத்து வேணும்னு நீ பண்ணத சரின்னும் சொல்லல. உன்னை முழுசா அவ அப்படி பண்ணலேன்னு நம்பலை. ஆனா நான் திட்டவும் இல்ல.. முழுசா உன்கிட்ட பழையமாதிரி இல்லாம ஒதுங்கி தானே போறேன்… அப்புறமும் ஏன் இப்டி பண்ண? ” என கத்த

திவியும் “அனு, கொஞ்சம் பொறுமையா என்ன நடந்ததுன்னு சொல்லு. நான் என்ன பண்ணேன். உன்னை எனக்கு புரியும் அனு. அதனால தான் நானும் உன்னை தொந்தரவு பண்ணாம இருக்கேன். ஆனா இப்போ என்ன?” என வினவ அனைவரும் வந்து அவளிடம் விசாரிக்க

அனு ” நேத்து அஸ்வின் வந்தது பார்த்தது என அனைத்தையும் கூறிவிட்டு அஸ்வின் வீட்டுக்கு போயி அவங்க அப்பாகிட்ட பையன ஒழுங்கா வளக்க தெரியாதா? எங்க வீட்டு பொண்ணோட சுத்திட்டு இருக்கான். அடக்கி வைக்க மாட்டிங்களா?ன்னு அது இது அசிங்கமா பேசியிருக்க தப்பா சொல்லிருக்க. அவரு கோபப்பட்டு அஸ்வின் ஆஹ் அடிச்சு ஸ்கூல் ஆஹ் விட்டே நிறுத்தி வேற ஊருக்கு ஹாஸ்டல சேக்கறேன்னு சொல்லறாரு. இப்போ அஸ்வின் என்கிட்ட டியூஷன்ல பாத்து சொல்லிட்டு கிட்டத்தட்ட உன்ன பிரண்ட நினச்சு ஹெல்ப் பண்ணதுக்கு இது தான் நிலமைங்கிறமாரி சொல்லிட்டு போய்ட்டான். இத ஸ்கூல் ஆஹ் தெரிஞ்சிச்சிடிச்சுனா என்ன ஏதுன்னு கேட்டு இன்னுமே எங்களை தப்பா பேசமாட்டாங்களா? உனக்கு என்கூட பிரச்னைன்னா என்கிட்ட சொல்லிருக்கலாம். கேட்ருக்கலாம்ல. ஏன் திவி இப்டி பண்ண? ” என அழுகையோட சொல்லி முடிக்க

திவி “இல்ல அனு, நான் அவங்ககிட்ட பேசல. நீ ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்க. நீ இந்த வீட்டு பொண்ணு. எப்படி தப்பு பன்னிருப்பேனு நான் நினைப்பேன் சொல்லு. அதுவுமில்லாம நான் ஏன் இப்டி பண்ணப்போறேன்?”

பிறரும் புரியாமல் விழிக்க கோபமான அனு “திரும்ப திரும்ப பொய் சொல்லி நடிக்காத திவி. அவன் கிட்ட நான் கேட்டுட்டு தான் வரேன்.. உன் அண்ணி தான் வந்து இப்டி என் சொல்லிட்டு போய்ட்டாங்கனு சொல்லிட்டான். அன்னைக்கு உன்ன இன்ட்ரோ குடுத்து மதிச்சு சொல்லல. உன்ன விட்டு விலகித்தான் இருந்தேன். எனக்கு உன்மேல கொஞ்சம் கோபம் இருந்தது. அதுதான் உன்ன கண்டுக்காம மதிக்காம அப்டியெல்லாம் நடந்துக்கிட்டேன். ..ஆனா நீ என்ன பழிவாங்கிட்டேல்ல.” என அவள் கேட்க

“கிடையாது அனு. நான் அப்டி. ..”

சோபி “அனு, கொஞ்சம் பொறுமையா விசாரிக்கலாம். நீ அழாத… ஆனா திவி நீ அந்த பையன்கிட்ட எதுக்கு வீட்டு அட்ரஸ் கேட்ட? ” என

திவி “அது அப்போ அவன் இவளை கொண்டு வந்து விடும்போதே கொஞ்சம் டைம் ஆய்டுச்சு. பாவம் அதுக்கு மேல அவன் போகணும்னா ரொம்ப தூரமா பக்கமா என்னங்கிறதுக்காக தான் கேட்டேன். வேற எந்த காரணமும் இல்ல. ”

அனு “அங்க நீ மட்டும் தானே இருந்த? வேற யாருமே வரல. யாருக்கு அவன் வீட்டு அட்ரஸ் டீடைல்ஸ் எல்லாம் தெரியும் சொல்லு. உன் மேல இருந்த மொத்த நம்பிக்கையும் போச்சு திவி..ச்ச. ..” என அனு அழுதுகொண்டே இருக்க

“அனு இல்ல, நான் என்னனு பாக்கறேன். அவங்ககிட்ட பேசுறேன். நீ அழாம. ..”

“வேண்டாம். …இனிமேல் நீ என் விசயத்துல தலையிடாத..நீ உன் வேலைய மட்டும் பாரு..” என சென்றுவிட்டாள்.

அனைவரும் எதுவும் கூற வழியின்றி அமைதியாக திவி “அப்படி இல்ல அனு. ..உன் நல்லதுல…”

அபிக்கும் கோபம் இன்னும் ஏறியது.. “எங்க வீட்டு பொண்ண பத்தி எங்களுக்கு தெரியும். .அவ நல்லத நாங்க பத்துக்கறோம். …”

திவி செய்வதறியாது நிற்க அனைவரும் நகர்ந்து சென்றனர். மாலை ஆதி வந்ததும் எப்போவும் போல விஷயம் மற்றவர்கள் மூலமாக வந்தது. திவி குறையும் கூறவில்லை. தனது வருத்தத்தை பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

மறுநாள் விழாவில் அனைவரும் தத்தமது வேலைகளை செய்ய யாரும் திவியை கண்டுகொள்ளவே இல்லை. அவளுக்கும் தன்னிடமே பதில் இல்லாத ஒன்றிற்கு என்னவென்று பிறரிடம் பதில் கூறுவாள். ஒரு முடிவுடன் மாலை கிளம்பி அஸ்வின் வீட்டிற்கு சென்று அவனது பெற்றோர்களை சந்திக்க அனுவின் அண்ணி என்றதும் அஸ்வினின் அம்மாவிற்கு கோபம். அவசரப்பட்டு தன் மகனை பற்றி கணவரிடம் தவறாக பேசி இந்த நிலைமைக்கு காரணமானவள் என அவளுடன் சண்டையிட அவரது கணவரோ உங்க பொண்ணையும் நீங்க ஒழுங்கா வளத்திருக்கணும். சும்மா சும்மா ஒரு ஒரு நாளா ஒருஒருத்தரா வந்து கத்தவேண்டிய அவசியமில்லை. எங்க பையன பத்தி குறைசொல்லவேண்டாம். அவனை ஸ்கூல் மாத்த போறோம். என்றதும் திவி “எதுக்கு சார் மாத்துறீங்க. அஸ்வின் அந்த மாதிரி தப்பு பண்ணுவான்னு நீங்க நினைக்கிறிங்களா? நம்ம பசங்கள நாம தானே சார் முதல நம்பணும். யாரோ வந்து சொன்னாங்கனு இப்டி ஸ்கூல் விட்டு கூட்டிட்டு போனா அப்போதானே இன்னும் தப்பா பேசுவாங்க. அதுவும் இப்போ அவங்க 12 த்ல இருகாங்க. அடுத்து அவங்களோட கரீர் சூஸ் பண்ணனும். இந்த மாதிரி சமயத்துல இப்டி பண்ணா அவங்க மைண்ட் டிஸ்டர்ப் ஆகாதா? இதோட பாமிலியே நம்பலையேன்னு நினைச்சா மனசு வருத்தப்படமாட்டாங்களா?” என அவள் பேச

அவரும் “புரியிது மா. ஆனா எங்களுக்கு இருக்கறது ஒரே பையன். இப்டி யார் யாரோ வந்து குறைசொல்லி திட்ற அளவுக்கு அவனை நாங்க எப்படி விட்டுகுடுக்கறது. அதான் கோபத்துல நேத்து அடிச்சுட்டேன். ஸ்கூல்ல எட்ச் ம் என்னவெல்லாம் கேள்வி கேக்கறாங்க. அந்த பொண்ணு வீட்ல இருந்து கம்பளைண்ட்னு. அவன் கண்டிப்பா அப்டி எல்லாம் நடந்துக்கற பையன் இல்லமா.” என அவரது மனைவியும் கண் கலங்க திவி “உங்கள நான் தப்பு சொல்லல. ஆனா அதுக்காக அவசரமா முடிவு பண்ணாதீங்க சார். ஸ்கூல்ல அனு வீட்ல இருந்து நான் பேசுறேன். எங்க பொண்ணும் அப்படி எல்லாம் நடந்துக்கமாட்டா. நீங்க ப்ளீஸ் ஸ்கூல் எல்லாம் மாத்தவேண்டாம். அண்ட் உங்க பையன்கிட்டேயும் கூப்பிட்டு உங்க நிலைமை என்ன ஏன் அடிச்சீங்க எல்லாம் சொல்லி புரியவெய்ங்க. பாவம் அவனும் யாரும் நம்பலேனு ஒடைஞ்சுபோயிருப்பான். ” என தைரியம் குடுக்க அவர்களும் தெளிவாக ஒப்புக்கொண்டனர்.

சம்பிரதாயமாக பேசிவிட்டு கிளம்பும்போது “அனுவுக்கு எத்தனை அண்ணா? ” என கேட்டனர்.

“ஒருத்தர் தான். ஆதி. அவரோட மனைவி தான் நான்..” என அவர்களும் விழித்துவிட்டு

“அப்போ அன்னைக்கு அண்ணினு இன்னொரு பொண்ணு வந்து பேசிட்டு போனாங்களே. உங்க குடும்ப விபரம் எல்லாம் நீங்க சொன்னதுதான். ஆனா அவங்க வேற.” என இழுக்க

திவி யோசித்துவிட்டு தனது மொபைலில் இருந்து ஊரில் எடுத்த புகைப்படங்களில் இருந்து சோபியின் படத்தை காட்டி இவங்களா? ” என வினவ அவர்களும் ஆமாம் என்றனர்.

திவிக்கு மிகுந்த கோபம். அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள் சோபியிடம் சென்று “சோபி நீ பண்றது கொஞ்சம்கூட சரி இல்ல. பிரச்சனை உனக்கும் என்னக்கும்னா அதோட விட்றணும். எதுக்கு தேவையில்லாம அனுவோட லைப்ல விளையாட்ற?இன்னொரு தடவ இப்டி ஆச்சு. …”

சோபி “என்ன பண்ணுவ திவி… உன்னால ஒன்னும் பண்ணமுடியாது. நீ இப்போ போயி சொன்னாலும் நம்பமாட்டாங்க. அன்னைக்கு என்ன சொன்ன. மொத்த குடும்பமும் உன்ன நம்பும்னா. ..இப்போ ஒருத்தர்கூட உன்ன நம்பமாட்டாங்க. என்ன பண்றது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.” என ஏளனமாக சிரித்துவிட்டு செல்ல அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த பாட்டி திவியிடம் விசாரிக்க அவளும் அனு விஷயமாக சோபி செய்ததை கூற அவருக்கும் கோபம். அவளை திட்டிக்கொண்டே பாட்டி இதை சும்மா விடக்கூடாது. வயசுப்புள்ள வாழ்க்கையை கெடுக்க பாத்திருக்கா. என கத்த.

திவி “ஆமா பாட்டி நீங்க ஒரு உதவி பண்றிங்களா? சோபியும், ஈஸ்வரி ஆண்ட்டியும் ஊருக்கு அனுப்பனும். இங்க இருக்கற பிரச்சனையா முதல முடிக்கலாம்.”

பாட்டிக்கும் சரிதான் இந்த விஷயம் மட்டும் உங்க மாமனார் தாத்தா காதுக்கு போச்சு வீடே இரண்டாய்டும். அதனால நீ சொல்றமாறியே பண்ணலாம். என பரமேஸ்வர்க்கு அழைத்து உன் பொண்டாட்டி புள்ளை பண்ண லட்சணத்தை பாரு என நடந்ததை கூறி அவங்கள ஊருக்கு கூப்பிடு. இங்கேயே இருந்து பிரச்சனை ஆச்சுன்னா அப்புறம் யாருமே பொறுப்பாகமுடியாது உன் அப்பா கோபம் உனக்கு தெரியும்ல மன்னிக்கவே மாட்டாரு. என திட்ட அவரும் ஒப்புக்கொண்டு

ஈஸ்வரிக்கு அழைத்து சோபிக்கு வரன் வந்திருக்கு..நல்ல சொத்து சுகம் எல்லாம் இருக்கு…அவங்க சோபிய பாக்கணும்னு சொல்ராங்க… சுந்தருக்கு அடிபற்றிச்சு. அவனை பாத்துக்கவும் ஆள் வேணும் நீங்க அங்க இருந்து என்ன பண்ண போறீங்க. கிளம்பி வாங்க என அழுத்தமாக கூற ஈஸ்வரிக்கு ஏதோ வித்யாசமாக உணர்ந்தாலும் மகளுக்கு பெரிய இடத்து சம்பந்தம் எனவும் மாற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சோபியையும் நச்சரித்து கிளம்பிவிட்டாள்.

இருவரும் ஊருக்கு சென்ற பின் அந்த பையனின் வீட்டார் இரு நாட்களில் வருவதாக கூறினர். அடுத்து அவர்களுக்கு ஏதோ அவசர வேலை..பையன் வெளிநாடு சென்றுவிட்டான். இரு வாரம் ஆகும் என அவர்களை மீண்டும் ஆதி வீட்டிற்கு அனுப்பாமலே பார்த்துக்கொண்டனர்.

ஆதியின் வீட்டிலோ யாரும் திவியிடம் பேசாமல் ஒதுங்கியே இருக்க பாட்டி குடும்பத்துக்குள் குழப்பம் வேண்டாம். உறவு முறிந்துவிடும் என பயந்து அனு விஷயமாக சோபி செய்ததை மட்டும் விட்டுவிட்டு திவி தான் அந்த பையன் வீட்டுக்கு போயி பேசிருக்கா. இப்போ பிரச்சனையில்லை. என அவளுக்கு பரிந்து பேச அதற்கும் இவ பண்ண தப்பு வெளில தெரிஞ்சிடிச்சு. அதனால அத இவளே போயி சமாளிச்சிட்டு வந்திருக்கா. ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க… என்ன ஏதுன்னு தெரியமா அவசரத்துல இவ பிள்ளைங்கள தப்பா நினைச்சதுக்கு அவங்க வாழ்க்கையே போயிருக்கும். அத யோசிச்சு பாத்திங்களா என அபி கத்த என்ன பதில் கூறுவது என தெரியாமல் அமைதிகாத்தனர்.

அனைவரும் திவியை ஒதுக்க ஆதி மட்டும் திவியாக பேசினால் பதில் கூறுவான். ஆனால் அவள் மேல் கோபத்தை காட்டவுமில்லை. காதலை பொழியவுமில்லை. திவி தனிமையில் உலவ மாதம் கடக்க திடீரென ராஜேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டார் என ஊரில் இருந்து தகவல் வர நெருங்கிய உறவு என்பதால் அனைவரும் பரபரப்பாக செல்ல முடிவெடுக்க, திவியின் அம்மா வீட்டிலும் என்ன இருந்தாலும் இப்போ சம்பந்தி வீட்டு உறவு, நல்ல பழக்கமும் கூட என அவர்களும் செல்ல தீர்மானிக்க அபியை இந்த நிலையில் அழைத்துச்செல்ல முடியாது. அனுவிற்கும் பரிச்சை இருக்கு அவள் காலை பள்ளி சென்றிருக்க திவி “நான் இங்க இருந்து அபி அண்ணியையும், அனு வந்தா அவளையும் பாத்துக்கறேன். நீங்க எல்லாரும் போய்ட்டுவாங்க என ஆதியிடம் கூற அவனும் சரி என” அனைவரிடமும் பேசினான். திவி பாத்துகிட்டு. நாம எல்லாம் போலாம். என பிறர் கொஞ்சம் தயங்க ஆதியோ கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான். “இதெல்லாம் ரொம்ப அநியாயம். அவளும் இங்க இருந்து வளந்தவ தானே. ஏதோ தப்பு இருக்கு. அதுக்காக இந்த அளவுக்கு ஒதுக்கிவெச்சு நடத்துரிங்க. சரி அது உங்க விருப்பம். ஆனா இப்டி ஒரு எமெர்ஜெண்சில கூட அவளை நம்பமாட்டேன்னா என்ன பண்றது. அவளும் இப்போ எல்லாம் யார்கிட்டேயும் எதுவுமே பிரச்சனை பண்ணறது பேசுறது எல்லாமே குறைச்சிட்டா. நிறுத்திட்டா. இப்போ போய்ட்டு நைட் இல்ல நாளைக்கு வரப்போறோம். அதுக்கு கூட அவளை நம்பமாட்டீங்களா?” என கோபம் ஆதங்கமாக ஆரம்பித்து கேள்வியில் முடித்தான்.

இதற்கு மேல் அவனை டென்ஷன் பண்ண வேண்டாமென எண்ணி அனைவரும் திவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். அபி மாத்திரை போட்டுகொண்டு படுத்ததால் இவை எதுவும் தெரியாமல் உறங்கிவிட வெகுநேரம் கழித்து எழுந்தவளிடம் சென்று திவி நடந்ததை கூற அவளும் கேட்டுக்கொண்டு ஆனா நீ எனக்கு எதுவும் செய்யாத. என அவளே தட்டு தடுமாறி அறையை விட்டு வெளியே வந்தாள். கிட்டத்தட்ட தள்ளாடினாள். திவி “அண்ணி என்ன வேணும்..தண்ணியா? நீங்க உக்காருங்க. நான் எடுத்துட்டு வரேன். பாப்பா உள்ள இருக்கு. ப்ளீஸ் ஸ்ட்ரைன் பண்ணாதீங்க. ” என

அவள் மீண்டும் தேவையில்லை. நீ என்ன தொந்தரவு பண்ணாத..என அவளே சென்று தண்ணீர் குடுத்துவிட்டு திரும்பிவர மயங்கி சரிய அருகில் இருந்த சோபாவின் முனையில் வயிறு இடித்துவிட அவள் துடிக்க ஆரம்பித்தாள்.

திவி பதறி போயி வர அவளை தடுக்க அவளோ ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிட்டு அவளை உக்கார வைக்க நினைக்க அபியோ ஒத்துழைக்காமல் நீ வராத. உன்னால தான் பிரச்சனை. என் தம்பி வாழ்க்கை போச்சு. என் தங்கச்சிங்க வாழ்க்கையிலையும் பிரச்சனை பண்ண பாத்தே. என் பையன பிரிக்க பாத்த.. இப்போ என் இன்னொரு குழந்தையும் ஏதாவது பன்னிடுவ..என்கிட்ட இருந்து பிரிச்சிடுவ..நீ என்கிட்ட வந்த நான் ஹாஸ்பிடல் கூட போகமாட்டேன். நீ இருக்கும் போது என் குழந்தை நல்ல படியா வராது. என வலியோட இதையும் சொல்லி கத்த திவிக்கு என்ன செய்வது என புரியாமல் ஆம்புலன்ஸ் வரவும் அவங்க நான் பக்கத்துல வந்தாலே இப்டி கத்தி எமோஷன் ஆகுறாங்களே. இப்போ அவங்க நல்லதுதான் முக்கியம்…..என ஆம்புலன்சில அவளை ஏற்ற சொல்லிவிட்டு பேமிலி டாக்டர் என்பதால் கால் செய்து யாரும் உடன் வரமுடியாது அண்ணியை மட்டும் கூப்பிட்டு போங்க என பேசி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வண்டி ஒன்றை புக் செய்ய அனு அந்த சமயம் பார்த்து வர அவளிடம் விஷயத்தை கூற அவளும் பதறிக்கொண்டே “என் அக்காவை நீ தானே கோபத்துல ஏதோ பண்ணிட்ட..நீ வராத போ. ஹெல்ப்க்கு போகணும்னா அப்போவே நீ கூட ஏன் போகல. நான் போயி பாத்துக்கறேன் தயவுசெஞ்சு நீ அங்க வராத…. அண்ணிக்கோ, குழந்தைக்கோ ஏதாவது ப்ரோப்லேம்ன்னா உன்னால தான் வரும்…என அவளும் அவள் பங்கிற்கு திட்டிவிட்டு சென்றுவிட அனைவர்க்கும் அனு கால் பண்ணி சொல்ல அனைவரும் பதறிக்கொண்டு அங்கிருந்து நேராக ஹாஸ்பிடல் சென்று பார்க்க அங்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது என கூற அவர்களுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. திவி எங்கே என அனுவிடம் விசாரிக்க அவள் ஆம்புலன்ஸில் அக்காவை அனுப்பிவைத்துவிட்டு வீட்டில் இருந்தாள். என அவள் நடந்ததை கூற அனைவரும் ஆதியிடம் திரும்பி “இப்போ தெரியுதா இதுக்கு தான் அவ்வளோ யோசிச்சோம். உன் பொண்டாட்டிய பத்தி குறை சொல்றோம், நம்பலேனு மட்டும் சொல்றியே எந்த மாதிரி நேரத்துல என் பொண்ண தனியா அனுப்பிச்சிருக்கா. இதுக்கு எதுக்கு அவ கூட இருந்தா.” என அம்மாவும் திட்ட ஆதிக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. அனைவருக்கும் திவியின் இந்த செயல் கோபத்தை வரவழைத்தது. இன்று நாளை மட்டும் ஹாஸ்பிடலில் இருக்கட்டும். என உடன் அரவிந்த் நானே என் பொண்டாட்டிய பாத்துக்கறேன் என அவனும் பிடிவாதமாக இருக்க மற்ற அனைவரும் வீட்டிற்கு சென்றனர். திவியிடம் அனைவரும் கேட்க அவள் “அண்ணி வேண்டாம்னாங்க அதான் போகல” என அமைதியாக கூற இந்த பதிலில் அனைவரும் “அவ எதோ கோபத்துல ஒரு வார்த்தை சொன்னா இப்டி தான் தனியா விட்ருவியா? உன்ன நம்பி விட்டுட்டு போனோமே எங்களை சொல்லணும் என திட்ட துவங்க, திவி கேட்டுக்கொண்டே இருந்து விட்டு அறைக்கு சென்று படுத்துகொண்டாள்.

வெகு நேரம் கழித்து அறைக்கு வந்த ஆதி தள்ளாட அவனை கண்ட திவி “ஆதி, என்னாச்சு. ..குடிச்சிருக்கீங்களா? இது என்ன பழக்கம். அத்தைக்கு தெரிஞ்சா? ”

ஆதி “யாருக்கு தெரிஞ்சா எனக்கென்ன. … யாரும் புரிஞ்சுக்கல… முக்கியமா நீ என்னை சுத்தமா புரிஞ்சுக்கல. …. திவி எனக்கு சொல்லு உன்ன நான் லவ் பண்ணேன். ரொம்ப லவ் பண்ணேன். உன்ன ரொம்ப சந்தோசமா வெச்சுக்கணும்னு நினச்சேன். இத தவிர வேற என்ன தப்பு பண்ணேன்? ஆரம்பத்துல உன் மேல தப்பான அபிப்ராயம் தான் வந்தது. அத முழுசா எனக்கு கிளீயர் பண்ணாமலே உன் மேல எனக்கு லவ் வந்திடுச்சு. அதுவும் இரண்டு பேரும் நேர் எதிர்துருவங்கள். நீ குடும்பத்து மேல வெச்சிருந்த அன்பு பாசம் உன் குறும்புத்தனம் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அது உனக்கே தெரியும். ஆனா இப்போ உனக்கு அந்த அன்பு பாசம் எல்லாம் எங்க போச்சு.. அதுல எது உண்மை எது பொய்?

இன்னிக்கு எல்லாரும் சொல்ராங்க உன்ன நம்பாதேன்னு . உனக்காக நான் சப்போர்ட் பண்ணி அவ்ளோ பேசுனேன். ஆனா அவங்க எதிர்பார்ப்பை பொய்யாக்காம இங்க பிரச்சனை நடந்திடிச்சு. என் நம்பிக்கை நீ கொஞ்சம் கொஞ்சமா உடைச்சு மொத்தமா போயிடிச்சு.

நம்ம நிச்சயதார்த்தம் அன்னைக்கு அந்த வீடீயோ பார்த்தும் நானா ஆதிய லவ் பண்றேன்னு சொன்னேன். வீட்ல தானே முடிவு பண்ணாங்கன்னு நீ சொல்லியும் நான் நம்பல. உன்னை தப்பா நினைக்கல. எனக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடியே நீ அப்படி பேசுனது தெரியும் என அன்று ஆதி அங்கு வந்தது கேட்டது அதை நம்பாவிடினும் திவி காதலை சொல்லுவாள் என எதிர்பார்த்தது அனைத்தும் கூற திவி திகைக்க அதனால தான் உன்கிட்ட கேட்டேன் நீதான் பேசுனியான்னு .. அன்னைக்கு நீ ஆமான்னு உண்மைய சொல்லிட்ட. எனக்காக நான் கேட்டதுக்காக உண்மைய சொல்றேன்னு சந்தோக்ஷபடறதா இல்லை அப்படி சொல்லி உன்ன தப்பா காட்டிகிட்டேயேனு நினச்சு வருத்தப்படறதா? அந்த வீடியோ பொய் ஃபேக்ன்னாவது நீ சொல்லிருக்கலாமன்னு எத்தனை தடவ நினைச்சிருக்கேன் தெரியுமா. அப்படி இல்லாம இருந்திருந்தா நீயும் நானும் சந்தோசமா இருந்திருக்கலாம்.

அந்த வீடியோ பாத்துட்டு உன்கிட்ட இப்டி நீ பேசுனியான்னு கேட்ட போது இல்லேன்னு பொய்யாவது சொல்லிருக்கலாம்ல திவி. ஏன் டி இப்டி பண்ண? போன்னு சொன்னதும் போன. ஆனா உன்ன தேடி நான் அன்னைக்கே வந்தேன். அடுத்து வந்த நாள்ல சரி கொஞ்ச நாள் எல்லாருக்கும் கோபம் குறையட்டும் பேசி உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு தான் பாத்தேன். உனக்கு குடும்பம் தான் முக்கியம். அப்படிப்பட்ட குடும்பத்துல ஒருத்தர் கூட உன்ன நம்பாம வீட்டை விட்டு போகச்சொன்னதால நீ ரொம்ப பீல் பனிருப்பே. அந்த நேரத்துல உனக்கு நான் கண்டிப்பா தேவைப்படுவேன். என்னை நீ மிஸ் பண்ணுவ. எதிர்பார்ப்பேன்னு நினச்சேன். அடலீஸ்ட் ஒரு கால். ஆனா என் நேரம் அதெல்லாம் எதுவும் நடக்கல. அப்போதான் நீ தயா பத்தி பேசினது அத அபி அக்கா, மாமா, அம்மு எல்லாரும் கேட்டது அவர்கள் தவறாக நினைத்தது எங்கே இதை வீட்டில் சொல்லி பிரச்னை பெரிதாகி திவி கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவன் உடனே கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியது என அனைத்தும் கூறினான். உன்ன நான் நம்பாம இல்லை. நீ என்கூட இருந்துட்டா கண்டிப்பா எதுனாலும் சமாளிச்சிடலாம்ன்னு தான் அண்ட் நீயும் எங்க இருப்ப, எப்படி இருப்பேன்னு என்னால பதறிக்கிட்டே இருக்கமுடியாது. என் கண்ணு முன்னாடி நீ நல்ல இருப்ப. வேற எதுனாலும் நான் உன்ன பத்துக்குவேன்னு தான் அவ்ளோ அவசரப்படுத்துனேன்.

இங்க அக்கா அம்மு, தர்ஷின்னு மத்தவங்க முன்னாடி நீ தயா பத்தி பேசும்போது எனக்கு கோவம் வந்ததுக்கு காரணம் எல்லாரும் நான் புரிஞ்சுகிட்டு மாதிரி உன்ன புரிஞ்சுக்கல. ஏற்கனவே இருந்த பிரச்னையோடே இதுவும் அவங்களுக்கு கோபம் கொண்டுவந்திடிச்சு. அதோட உன்ன நீயே தப்பா காட்டிகிட்டேயேன்னு தான். நந்து, சூரியனை எப்படி வர்ணிச்ச. உன் ஆளுன்னு சொன்ன. அந்த மாதிரி தான் தயா பேருலையும் விளையாடறேன்னு நினச்சேன். மத்தபடி உன் மேல எனக்கு சந்தேகமே இல்ல.

வீட்ல நந்து விஷயமா அக்காகூட நடந்த பிரச்சனை அன்னைக்கு எல்லாரும் வெக்ஸ் ஆகி பீல் பண்ணது இவன் வந்திட்டு ஆபீஸ் போனது அர்ஜூனுடன் நடந்த சண்டை மீண்டும் வந்து அப்போதும் பிரச்சனையை நீ என்கிட்ட ஷேர் பண்ணுவேன்னு நினச்சேன். ஆனா நீ கண்டுக்காம சண்டைபோட்டுட்டு போயி பேசாம படுத்திட்டே. நான் உனக்கு தேவையில்லையான்னுகிற மாதிரி எண்ணமே எனக்கு வந்திடுச்சு. என்கிட்ட நீ உன் பிரச்னைக்கு தீர்வை சொல்லுங்கன்னு கேட்கவேண்டாம் . ஆனா என்ன நடந்தது. உனக்கு அதுல கஷ்டமா இருந்ததா? இல்லையானு கொஞ்சம் ஷேர் பன்னிருக்கலாம்ல. உனக்கு நான் எப்போதுமே தேவையில்லையா திவி? என்னை பத்தி நீ யோசிக்கவேயில்லையா திவி?”

அம்மு கல்யாணத்தப்போ எல்லாரும் என்னன்னவோ கேள்வி கேட்டாங்க. கேப்பாங்கன்னு நான் எதிர்பார்த்தேன். அதனால தான் ராஜேஸ்வரி அத்தைகிட்ட முன்னாடியே நடந்ததை கொஞ்சம் மாத்தி நாங்க லவ் பண்ணோம் எனக்கு உனக்கும் எமெர்ஜென்சில கல்யாணம் நடந்திடிச்சு.. இப்போ விசேஷத்துக்கு வரவங்க எல்லாரும் ஒன்னு ஒன்னு கேப்பாங்க. அதனால நீங்க கொஞ்சம் சப்போர்டிவ் ஆஹ் இருந்தா யாரும் அவளை எதுவும் சொல்லமாட்டாங்கனு கேட்டு அவங்கள மாமாவை விட்டு வரவெச்சு உன்னை ஒருத்தரும் குறைசொல்லாம பாத்துக்கிட்டேன். ஆனா நீ என்ன பண்ண கடைசி நேரத்துல முகூர்த்த நேரத்துல கோவிலுக்கு போறேன்னு லேட்டாகி பிரச்சனை பண்ணிட்ட… கண்டிப்பா உனக்கு தெரியும் நீ அங்க வேணும்னு, நீ யோசிக்காம போகமாட்ட..அதையும் தாண்டி போயிருக்கேன்னா ஏதோ காரணம் இருக்கும்னு. ..ஆனா லாஸ்ட் மின்ட் வரைக்கும் நீ கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு நினைக்கல. வீட்ல எல்லார்கிட்டயும் அண்ட் நம்ம வீட்லையே எல்லாரும் என்னவெல்லாம் பேசுனாங்க தெரியுமா? அதை கேட்டு அம்மா, அக்கா எல்லாரும் எவ்வளோ கோபப்பட்டாங்க வருத்தப்பட்டாங்க தெரியுமா?

அதுவரைக்கும் நடந்த பிரச்னையும் சரி, அம்மு விஷயமா நடந்த பிரச்சனை, இப்போ அபி அக்கா பிரச்சனை எல்லாத்துலயும் நானும் ரொம்ப எதிர்பார்த்தேன், நீயா என்கிட்ட வந்து உன் பிரச்சனைய சொல்லுவா. ஷேர் பண்ணுவேன்னு. ஆனா அதுமட்டும் இப்போவரைக்கு நடக்கல. உனக்கு நான் தேவையில்லாமப்போயிட்டேன் திவி.

நான் நீயே பிரச்னையை சரி பண்ணுனு சொன்னதுக்கு காரணம் நீ அப்போவது கோபப்பட்டு அவங்ககிட்டேயே சொல்லிடமாடியானு தான் மத்தபடி உன்னை கண்டுக்காம கஷ்டப்படுத்த இல்லன்னு உனக்கு ஏன் புரியல.

என் பிரண்ட் டிடெக்ட்டிவ்ல இருக்கான்.நீ சொன்னதை வெச்ச அவன்கிட்ட சொல்லி என்னை கொலைபண்ண முயற்சி பண்ணத பத்தி விசாரிக்க சொன்னேன். அவன் அந்த மாதிரி எனக்கு எதிரிங்க யாருமே இல்லனு அவன் அடிச்சுசொல்றான். அப்போ நீ சொன்னது பொய்யா? அப்டி இருந்தாலும் பொய் சொல்ல உனக்கு என்ன தேவை. நீ நேரடியாவே என்கிட்ட லவ் சொல்லிருக்கலாம். அதைத்தாண்டி பொய் தான்னு சொன்னாலும் ஸ்கிரிப்ட் எழுதறது பேசுறது நடிக்கறதுல நீ ஓகே. ஆனா அந்த கண்ணுல காதல், எனக்கு ஒண்ணுனதும் வந்த உன்னோட பதட்டம் அது எப்படி பொய்யாகும். அதுலயும் நீ எதுக்காக அப்டி சொன்ன? எந்த அளவுக்கு உண்மைன்னு கூட புரியல. இருந்தாலும் உன்கிட்ட அதையும் நான் கேட்டு சங்கடப்படுத்த விரும்பல. நான் அன்னைக்கு அத சீரியஸ் ஆஹ் எடுத்துக்களெனதுமே உன்ன நம்பலையானு கேட்ட. இப்போ இதெல்லாம் சொன்ன எங்க உன்ன சந்தகப்படறேனோன்னு நீ பீல் பனிடுவியோன்னு நினைச்சே எல்லாமே விட்டுட்டேன்.

நீ என்னதான் லவ் பண்ற. உனக்கு என்னைத்தான் ரொம்ப புடிக்கும். என்னை நீ மிஸ் பண்ணுவ.. பீல் பண்ணுவ. என்கிட்ட உன்ன பாதிக்கற நிகழ்வு சங்கடமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி எந்த விஷயம்ன்னாலும் சொல்லுவ. உனக்கு கஷ்டத்துல நான் வேணும். ஆறுதலுக்கு நான் இருக்கனும். இப்டி நினைச்சுதான் உனக்கு அழுகவரலையா? என்கிட்ட ‘ஷேர் பண்ணிக்க சொல்ல மாட்டியான்னு என கேட்டேன். ஆனா என்னை நீ சாடிஸ்ட்னு சொல்லிட. உனக்கு நான் தான் ரொம்ப ஸ்பெஷல் நினச்சேன். அது இப்போவும் புரியுது, நான் தான் அப்டி நினைச்சிருக்கேன். நீ என்னை அப்டி ஒரு நிமிஷம் கூட நினைக்கலையா திவி? என அவள் வெறித்து பார்த்துக்கொண்டிருக்க

நீ சொன்னது ரொம்ப கரெக்ட். நீ இல்லாம என்னால நிம்மதியா இருக்கமுடியாதுனு காட்டிட்ட. ஒரு பக்கம் நான் உன்ன முழுசா புரிஞ்சுக்காம ஆனா எனக்குள்ள ரொம்ப முழுசா இருக்கற உன் மேல வெச்ச நம்பிக்கை , காதல் ‘எல்லாமே. அதே நேரம் இன்னொரு பக்கம் என் நம்பிக்கை எதிர்பார்ப்பு காதல் எல்லாமே எதுவுமே இல்லன்னு காட்ட வர நீ.. உன்மேல நான் வெச்சுஇருக்கற கண்மூடித்தனமான காதலை, மனசு சொல்றத நம்புறதா? இல்ல என் கண் முன்னாடி அதுக்கு எதிரா மொத ஆளா நிக்கிற உன்னை நம்பறதா?

இவ்வளவு நாள் எல்லாரோட கவலை அழுகை குழப்பம் வருத்தம் எல்லாம் பார்த்திட்டு இதுக்கு மேல நீ உண்மைய சொன்னாகூட பிரயோஜனம் இல்லேன்னு தோணுது. இப்பவும் என்னால உன்னை திட்டி என் வாழ்க்கைய விட்டு வெளிய போன்னு சொல்ல முடியல. இந்த பிரச்சினை குழப்பம்னு எந்த உறுத்தலும் இல்லாம உன்னை ஏத்துக்கவும் முடியல. உன் மொத்த காதலையும் எடுத்துகிட்டு அதோட மட்டுமே வாழனும்னு ஆசையா இருக்கு. ஆனால் எதுவுமே நடக்காதில்ல. என் தியா நான் நினச்ச மாதிரி இல்லையா ?

என புலம்பிக்கொண்டே படுக்கையில் சாய்ந்துவிட்டான்.

ஆதியின் பேச்சை கேட்டவள் அவனின் இந்த நிலையை கண்டவள் விக்கித்து நின்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மன்னிப்பு – 1மன்னிப்பு – 1

மன்னிப்பு, எனக்குப் பிடிக்காத வார்த்தை 1 நோ இது நடக்கக் கூடாது. நான் எந்திரிக்கணும். செய்தாக வேண்டுமே! என்ன செய்யலாம் சீக்கிரம் சீக்கிரம் க்விக் வசு…  நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் தன்னால் மூடியது. “வசுமதி, வசுமதி, வசுமதி” என்று யாரோ

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17

17 – மனதை மாற்றிவிட்டாய் மாலையில் ஆதியும் அர்ஜுனும் வந்துவிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதிக்கு திவி வந்துவிட்டாளா இல்லையா என எண்ணிக்கொண்டிருக்க சுந்தர் “அத்தை திவி எப்போ வருவா?” என கேட்க “ஆமா அத்தை, திவி இருந்தா இன்னும்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04

4 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   “ஆதர்ஷ், இந்தா கார் சாவி, இப்போ இருந்து நீயே யூஸ் பண்ணிக்கோ.” அவன் மறுக்க இவரோ “நீயே யோசி, நீதான் எல்லாமே மேனேஜ் பண்ணபோற, எப்படியும் வெளில போக வர வேலை இருக்கும்.