Tamil Madhura தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59

59 – மனதை மாற்றிவிட்டாய்

அர்ஜுனுக்கு தப்பு செஞ்சவங்களை நம்புறாங்க. வீட்டில அவங்க பேசறத சொல்றத கேட்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் திவினால இவங்க யாருக்கும் பிரச்சினை வரலன்னு தெரிஞ்சும் அவள நம்பாம சொல்லவரதகூட கேட்காம இப்படி நடந்துக்கிறாங்களே. எல்லாருக்கும் அதிகபட்ச கோபமே கல்யாணம் பண்ணதுல தான். இந்த ஆதிய என்ன பண்றது. எல்லாத்துலையும் அவசரம்அவனுக்கு… இப்போ குடும்பத்தை பிரிக்கறதுக்காக தான் திவி இப்படி பண்ணாங்கறமாதிரி பில்டடப் பண்றாங்க. என யோசிக்க யோசிக்க அவனுக்கு கோபம் தான் வந்தது.. அதே கோபத்தோடு சென்று ஆதியிடம் ‘பொறுமையின்றி ஆதங்கத்தோடு பேச இருவரும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆதியும் அர்ஜுனை கண்டதும் அவனிடம் சொல்லி ஆலோசனை கேட்க வேண்டும் எனவே இருந்தான். ஆனால் அர்ஜுன் பொறுமையாக வந்ததும் விஷயத்தை கூறியிருந்தால் ஆதி நிச்சயம் செவிமடுத்திருப்பானோ என்னவோ. என்றும் பொறுமையை கடைபிடிக்காத ஆதி முதலில் அமைதியாக பேசியும், அர்ஜுனின் பொறுமையற்ற பேச்சு, கோபம், அனைத்திற்கும் ஆதியே காரணம் என்பது போல குற்றச்சாட்டு இவனும் புரிந்துகொள்ளவில்லையா என்ற நிலையில் ஆதி அப்டி ஒரு வார்த்தையை கூறிவிட்டான்.

ஆதியும் மனவருத்தத்துடனே வீட்டுக்கு சென்றான். தன் அறைக்கு வந்தவன் அங்கே திவி ஏதோ எழுதிக்கொண்டிருக்க இவன் வந்ததும் எடுத்துவைத்துவிட்டு வந்து ஆதி எதுவும் சைட் ல ப்ரோப்லேம் இல்லையே? காலைல ஏதோ அவசரமா போனீங்க. ஓகே தானே? என கேட்டதும் எதுவுமில்லை என்பது போல தலையாட்ட “சரி, லேட்டாயிடிச்சே. சாப்பிட்டாச்சா?”

“இல்ல மதியம் வெளில சாப்பிட்டேன். ஏனோ அலைச்சல் ஒரு மாறி டையர்ட இருக்கு. அதனால எதுவும் வேண்டாம். ”

“அப்போ பால் மட்டும் குடிக்கிறீங்களா? வெறும் வயித்தோட படுக்கக்கூடாதுனு அத்தை சொல்லுவாங்கல்ல? ”

“ம்ம்ம். ..சரி” என அவள் சென்றுவிட இவனுக்கு அவளை செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவ்ளோ பிரச்சனை நடந்தும் நான் வந்ததும் என்னை பத்தி தானே கேக்கற நீ. ஒருத்தர பத்தியும் நீ குறை சொல்லல. என்மேல இந்த குடும்பத்து மேல இவ்ளோ பாசம் இருக்கில்ல டி. நீ ஏன் தியா அவங்ககிட்ட உண்மைய சொல்லமாட்டேனு சொல்ற.. நீ பண்றத சரின்னு ஏத்துக்கறதா? தப்புனு சொல்றதா? ஒன்னுமே புரிலடி. என தனக்குள் எண்ணிக்கொண்டு பெருமூச்சுடன் ரெப்பிரேஷ் ஆகிவிட்ட வர அவள் பால்கொழுக்கட்டையை நீட்டினாள்.

அவன் பார்க்க “நந்து வந்தான்ல அதான். பாவம் உடம்பு சரி இல்லேனு ஸ்வீட்டே சாப்பிடாம ஏங்கி போயிருப்பான்னு செஞ்சேன்.” என்றாள்.

அவனும் எதுவும் கூறாமல் அமைதியாக வாங்கி உண்ண அவன் “நீ சாப்பிட்டியா? ”

இல்லை என்பது போல தலையசைக்க “ஏன்?”

“நந்துக்காக பண்ணது அவனே சாப்பிடல. அதுனால சாப்பிட தோணல.” என கூற

அவன் அவளையே பார்க்க இவளும் ஏதோ சொல்ல வர அவளுக்கு அர்ஜுனிடமிருந்து கால் வந்தது. அதை எடுத்துக்கொண்டு பால்கனியில் நின்று பேச இவனுக்கு “அன்னைக்கு என்கிட்டேயும் உங்களுக்காக செஞ்சது. நீங்க சாப்பிடலேன்னு நானும் சாப்பிடல னு சொன்னா. இப்போ நந்துவுக்கும் அதே பதில் சொல்றா. அப்போ இவளுக்கு புடிச்சவங்க யாரு இப்டின்னாலும் அவங்ககிட்ட அவ அப்டித்தான் இருக்காளா? நான் என் தியாவுக்கு ஸ்பெஷல் இல்லையா? என நினைக்க அவனுக்கு சற்று மனம் வற்றியது போல இருக்க வேகமாக உள்ளே வந்தவள் “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ஆதி நீங்க? அண்ணாவை எப்படி நீங்க அந்தமாதிரி திட்டலாம்? ”

இவனுக்கும் ‘ஆமா மத்தவங்கள பத்தி நல்லா யோசிப்பா என்ன மட்டும் விட்ருவா இவளை சாயந்தரம் அவ்ளோ பிரச்சனை பண்ணி திட்டிருக்காங்க. அத பத்தி ஒன்னும் சொல்லல. அத சரி பண்ண வழியக்காணோம். வந்துட்டா அண்ணாவை திட்டுனத பத்தி கேட்க,வேண்டாம் ஆதி நீ கோவப்பட்டா தேவையில்லாம பேசிடுவ அப்புறம் சங்கடம் 2 பேருக்கும் தான் ஏற்கனவே அவளுக்கு நீ ஸ்பெஷல் இலேன்னு கொஞ்சம் கடுப்புல இருக்க இப்டியே போயிடு’ என நினைத்தவன் தன்னை அடக்கிக்கொண்டு எதுவும் கூறாமலே நகர இவளோ “நான் கேட்டுட்டு இருக்கேன் ஆதி? பேசறதுக்கு முன்னாடி யோசிக்கறதே இல்லையா? கத்தி எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டியது.” என

பொறுமை இழந்தவன் “எல்லாரையும் கஷ்டப்படுத்தறத பத்தி நீ பேசாத. நான் கத்தி கஷ்டப்படுத்தறேன். நானாவது இப்பிடித்தான் எல்லாருக்கும் புரியுது. ஒரு நேரம் இல்லாட்டியும் இன்னொரு நேரம் அவன் இப்ப்டித்தான்னு விடறாங்க. ஆனா மேடம்க்கு எப்படினு மறந்திடுச்சா? நீ பேசுறதுல, திட்றதுல, உன் அக்கறைல, அன்புலன்னு எதையுமே முழுசா ஏத்துக்கவும் முடியாம விட்டு விலகவும் தெரியாம மொத்த குடும்பமும் கஷ்டப்படுது அது உனக்கு பெருசா தெரியலையா?”

“பேச்ச மாத்தாதீங்க. அண்ணாகிட்ட எப்படி நீங்க பிரச்சனைல தலையிடாதேன்னு சொல்லலாம்?”

“அதானே நீ புடிச்சதே பிடிவாதம்னு நின்னு. அவன் என் பிரண்ட். நாங்க பத்துக்கறோம். நீ உன் வேலைய பாரு. இதுல நீ இன்வோல்வ் ஆகாத.” என

திவி “ஓ. … இப்டி சொன்னா பேசாம கேட்காம போய்டுவேன்னு எதிர்பாத்திங்களா? பாருங்க அர்ஜுன் என் அண்ணா எனக்காக பேசவந்தாரு. எனக்காக சப்போர்ட் பண்றவங்கள நான் எப்போவும் விட்டுகுடுக்க மாட்டேன். அதுக்காக கேட்பேன். இல்லாட்டி என் விஷயமா பேசி தானே பிரண்ட்ஸ் நீங்க இரண்டுபேரும் இப்டி இருக்கீங்க. அதனால உங்க பிரச்சனைல நான் இன்வோல்வ் ஆகாம வேற யாரு வருவா. முக்கியமா எல்லாத்துக்கும் மேல நான் உங்க வைப் எனக்கு இல்லாத ரைட்ஸ் வேற யாருக்கு இருக்கு. என் உரிமையை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். சோ இந்த மாதிரி ஸ்மால் பிளாக்மைல்ஸ் எல்லாம் மத்தவங்ககிட்ட வெச்சுக்கோங்க. ”

ஏளனமாக சிரித்துவிட்டு “உண்மைதான் நீ மத்தவங்க மாதிரி இல்லை. எதுலையுமே..இவ்வளோ பிரச்சனை பெத்தவங்க வளத்தவங்கனு யாருமே நம்பாம இருக்கறதுக்கு இந்நேரம் மத்தவங்கன்னா கொஞ்சமாவது பீல் பன்னிருப்பாங்க. அழுதிருப்பாங்க. நீ அடுத்து அடுத்துனு பாத்திட்டு போற. என்ன தைரியம்?… சூப்பர்… அண்ட் எல்லா பொண்ணுங்களுக்கும் தான் ஹஸ்பண்ட் ரொம்ப ஸ்பெஷல்ன்பாங்க. எதுனாலும் அவங்ககிட்ட சொல்லணும்னு தோணுமாம். ஆனா மேடம்கு அப்படி இல்லையே. இன்னைக்கு ஈவ்னிங் நடந்த பிரச்சனையை பத்தி இப்போவரைக்கும் ஒருவார்த்தை சொல்லல. செம கூல் நீ… கண்டிப்பா நீ யாரையும் குறையும் சொல்லல.அந்த விசயத்துல நான் தப்புன்னே சொல்லமாட்டேன். ஆனா என்ன உனக்கு எப்போவுமே என் தேவை அவசியமேயில்லை. எல்லாமே நீயே பாதுக்குவ. இல்லாட்டி அவங்க பேசுனது நான் பெருசா எடுத்துக்கலைன்னு தூக்கிவீசிட்டு போய்டுவ. அப்புறம் ஏன் நீ கேள்வி கேக்கிற? ” என சற்று கோபம் கலந்த வருத்தத்தோடு சொன்னான்.

“என்ன ஆதி சொல்லறீங்க நீங்க. அப்போ அழுதாதான் அவங்க உண்மையாவே பிரச்சனைல இருக்காங்கனு அர்த்தமா? அப்டினா அழுகாம பிரச்சனைய பாக்றவங்களுக்கு பீலிங்ஸே இல்ல அவங்க வெறும் ஜடம்னு சொல்லுவீங்களா? எப்போ இருந்து இப்டி நீங்க சாடிஸ்ட் ஆனீங்க.”

அவளது கையை பற்றி சுவரோடு தள்ளியவன் “யாரடி சாடிஸ்ட்ன்னு சொல்ற? என்னை பாத்தா உனக்கு அப்டி தெரியுதா? ”

“பின்ன நான் அழுகலைன்னு நீங்க தானே கேட்டீங்க. அடுத்தவங்க அழுகறத பாக்க நினைக்கறவங்கள சாடிஸ்ட் சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க.?” என அவளும் கோபத்தில் கேட்க

“அப்போ மத்தவங்க கஷ்டப்பட்டாலும் பரவால்லன்னு மொத்த குடும்பத்தையும் உன் பேச்சு, செயலால அழ வெச்சுட்டு நடந்த பிரச்சனைய பத்தி அவங்ககிட்ட பேசாம அவங்கள சமாதானப்படுத்தாம இப்போவும் அவங்க பீல் பண்றத பாத்துட்டே இருக்கற உன்ன என்னனு டி சொல்லுவாங்க. நானாவது உன் ஒருத்திகிட்ட தான் அதுவும் இப்போவும் இப்டி இருக்கியேன்னு தான் கேட்டேன். ஆனா நீ அத்தனை பேரும் பீல் பண்ணியும் உனக்கு பத்தலேல்ல. இப்போ சொல்லு யாரு சாடிஸ்ட்னு..”

“அப்போ ஒரு பிரச்சனை வந்துட்டா வாழ்க்கைல எல்லாமே முடிஞ்சமாதிரி எப்போவுமே சோக கீதம் பாடிட்டு எல்லார் கால்லையும் போயி விழுந்துகிடக்கணும்னு சொல்றிங்களா? அந்த அளவுக்கு நான் தப்பு பண்ணல. ”

“பைத்தியமாதிரி உளறாத. நீ கால்ல விழுகணும்னு சொல்லல. ஆனா காரணத்தை சொல்லாமேன்னு தான் சொல்றேன். ஆனா நீ இப்போவும் இப்டியே திமிரா பேசு. ”

“அப்போ காரணத்தை நீங்க கேக்கமாட்டீங்கல்ல. மத்தவங்ககிட்ட தான் நான் சொல்லனுமா? சரி நானே பாத்துக்கறேன். விடுங்க நீங்க கேட்கவேண்டாம்.” என அவளும் கோபத்தில் கத்த

“இது தான் டி இந்த திமிரு தான். நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்லிட்டு அத புரிஞ்சுக்கற. உன்ன முழுசா நான் தப்பா எடுத்திருந்தா கல்யாணமே பன்னிருக்கமாட்டேன். என் முடிவே வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா பிரச்சனை அது இல்ல. மத்தவங்க எல்லாரும் உன்ன ரொம்ப தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க. இப்போ நீ என்கிட்ட சொல்லி நானே அவங்கள கண்விஸ் பண்ணாலும் அவங்களுக்கு ஒரு உறுத்தல் இருக்கும். அதனால தான் உன்ன அவங்ககிட்ட சொல்லச்சொல்றேன்.” என அவனும் பொறுமையாக சொல்ல

இவளோ “இப்போ முடிவா என்ன சொல்லறீங்க. நீங்க நான் சொல்றத கேக்கமாட்டீங்க அதானே. சரி நானே பாத்துக்கறேன். விடுங்கன்னு சொல்லிட்டேன்ல … ” என அவள் அதுலையே நிற்க

இவனும் கோபத்தில் “நான் இவ்ளோ சொல்லியும் நீ புரிஞ்சுக்கலேல்ல. சரி, அப்டியே வெச்சுக்கோ. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ அவங்க உன் மேல வெச்ச நம்பிக்கையை கெடுத்தது நீ. இப்போ அதே நம்பிக்கையை நீயே திருப்ப கொண்டுவா. அதுல நீ என்னை எதிர்பாக்காத.”

ஏளனமாக சிரித்துவிட்டு “இத்தனை வருஷம் பழகுன பிரென்ட இனிமேல் என் விசயத்துல தலையிடாத..உனக்கு உரிமையிலேன்னு சொன்னவரு. உங்கள உயிரா வளத்துன குடும்பம் வருத்தப்படும்னு தெரிஞ்சும் அவங்களுக்கு தெரியமா கல்யாணம் பண்ணவரு உங்ககிட்ட நான் எப்படி ஹெல்ப் எதிர்பார்ப்பேன். எப்போ என்னை கஷ்டப்படுத்துவீங்கன்னு வேணா எதிர்பாக்கலாம். அதுக்கு வேணும்னா நான் என்னை தயார்பண்ணிக்கனும்.” என கூறியவள் “குட் நைட்.” என அவனை விலக்கிவிட்டு சென்று படுத்துகொண்டாள்.

அவனுக்கும் கோபம் வர இருந்தால் அடித்துவிடுவோமோ என எண்ணியவன் வேகமாக அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே வந்தவன் அவள் முகத்தை சுளித்துக்கொண்டே தூங்கியதை கண்டவனுக்கு சிரிப்பு வர கதவை அடைத்துவிட்டு வந்தவன் அவருகில் வந்து அவள் நெற்றியை நீவிவிட்டு

‘எப்படி தூங்குறா பாரு. இன்னுமும் உம்முனு வெச்சுக்கிட்டே..பைத்தியம் டி நீ. என்றவன் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து தலையை வருடிவிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தான்.. ஏன் டி செல்லம் நான் சொல்றத புரிஞ்சுக்கமாட்டேன்கிற. அவங்க எல்லாரும் நான் சொல்லி உன்ன ஏத்துக்கிட்டாலும் உன்னை உனக்காக ஏத்துக்கமாட்டாங்க. அம்மா அக்கா உங்க வீட்ல எல்லாருக்கும் நீ அவங்ககிட்ட சொல்லமாட்டேன்கிற அதோட நம்ம கல்யாணம் பண்ண கோபமும். நான் சொல்லி எனக்காக ஏத்துக்கிட்டு என்னைக்காவது உன்னை ஏதாவது தப்பா சொல்லிட்டாலும் நீ தாங்கமாட்ட டி இவ்ளோ நாள் இதை மனசுல வெச்சுக்கிட்டா இருந்தாங்கனு தோணும். …நீ நினைக்கற மாதிரி இல்லை தியா. நீ இத்தனை வருஷம் அவங்ககிட்ட காட்டுன பாசத்துல அவங்க உன்கிட்ட ரொம்ப நம்பிக்கை அன்பை எதிர்பார்க்கிறாங்கனு புரிஞ்சுக்கமாட்டேங்கிறேயே. அத உன் மூலமா தான் சரி பண்ணனும். நாளுக்கு நாள் அவங்க கோபம் அதிகமாகுது. அது ஏன் உனக்கு புரியல. நீ அத முழுசா உணராம தான் இன்னுமும் கொஞ்சம் விளையாட்டுத்தனமா அவங்கள மாத்தப்பாக்குற. அவங்க உன்னை வெறுத்துடுவாங்களோன்னு பயமா இருக்கு டி.. அதை நீ உணர்ந்தா தங்கமாட்டியே குட்டிமா நீ எப்படி சமாளிக்கப்போற…நான் நீயே பிரச்னையை சரி பண்ணுனு சொன்னதுக்கு காரணம் நீ அப்போவது கோபப்பட்டு அவங்ககிட்டேயே சொல்லிடமாடியானு தான் மத்தபடி உன்னை கண்டுக்காம கஷ்டப்படுத்த இல்ல டி உன்னை பிரச்சனைல விட்டுட்டு போறதுக்கு இல்ல. எல்லாத்தையும் நீயே பாத்துக்கறேன் சொல்ற. நான் உனக்கு அப்போ வேண்டாமா? என்றவன் அவளது முகத்தை பார்க்க அவள் அசைந்து இவனது டீ ஷிர்ட்டை இறுக பற்றிக்கொண்டு புன்னகையுடனே உறக்கத்தில் இருக்க இவனுக்கு அந்த செயல் எனக்கு நீ வேண்டும் என சொல்வது போல இருந்தது. இவனுக்கு மனம் லேசானது. புன்னகையுடனே அவளை இறுக அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டவன் அவள் சிணுங்கவும் மீண்டும் தன் மேல் படுக்கவைத்துக்கொண்டு தலையை தடவிக்கொடுத்தான்.

“ஆனாலும் என்னமா சண்டை போட்ற டி. நீ தலையிடாதான்னு சொல்லியும் அதை கண்டுக்காம எவ்ளோ ரீசன்ஸ் சொல்ற.. கடைசியா என்ன சொன்ன. .உங்க வைப்னா. மேடம்க்கு என் பொண்டாட்டின்னு நினைப்பு எல்லாம் இருக்கு போலவே. ஹப்பா கல்யாணம் ஆகி இரண்டு நாள் தான் ஆயிருக்கா. ஏதோ பலவருசம் ஆனமாதிரி இருக்கு..எவ்ளோ சண்டை பிரச்சனை, கோபம், அப்போப்போ உன்னோட இந்த நெருக்கம், இப்போவும் உன்னோட சேட்டை எல்லாமே. சீக்கிரம் எல்லாமே சால்வ் பண்ணிட்டு உன்னை கொஞ்சநாள் எங்கேயாவது கடத்திட்டு போய்டணும் டி.வாயாடி..

உண்மைதான் தியா நீ மத்தவங்க மாதிரி இல்ல. பிரச்சனை வந்த சோந்து போறதில்ல அடுத்து அடுத்துனு பாக்குற, முடிலேன்னு தோணுச்சுனாலும் அழுகறதில்லை. ஒரு பிரச்னையை அடுத்த பிரச்சனைல விசயத்தல நுழைக்கறதில்லை. என்ன பிரச்சனை பண்ணாலும் தூங்கும் போது என்கிட்ட வந்துடற. நானே உன்னை என் கைக்குள்ள கொண்டுவந்தட்றேன்னு உனக்கு தெரிஞ்சாலும் என்னை விட்டு விலகிபோகமாட்ட….தெரியாத மாதிரி என்கிட்ட சண்டையும் போடறதில..என் மேல இருக்கற பாசம், அக்கறை, கோபம் இந்த மாதிரி உணர்ச்சிகள் எதையுமே மறைக்கறதில்லை… மத்தவங்ககிட்ட அந்த அளவுக்கு உணர்ச்சிகளை அதிகம் காட்டறதில்லை. எப்போவும் திவ்வினா ஜாலிங்கிற மாதிரி காட்டிட்டு போய்டுறது. அதுதான் ஒருவேளை உன்னை பத்தி எல்லாரும் இப்படி எல்லாம் பேசுற அளவுக்குஇருக்கோ?” என கொஞ்சலில் ஆரம்பித்து குழப்பத்தில் பெருமூச்சுடன் முடிக்க “என்னவானாலும் சரி, நான் உன்கூட இருக்கேன். எப்போவுமே… லவ் யூ சோ மச் தியா.” என்று அவளை அணைத்தபடியே தூங்கினான்.

 

 

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31

31 – மனதை மாற்றிவிட்டாய் “அறிவில்ல உனக்கு, எங்க எல்லாம் உன்ன தேடுறது? இப்டியே பண்ணிட்டு இரு. கொல்லப்போறேன் உன்ன. இடியட். எதாவது பேசு டி ” என்று அவன் கத்திகொண்டே இருக்க அவள் இவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்