Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56

56- மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டுஅக்கா வந்திருக்காங்களா?” என மகிழ்ச்சியுடன் வர

ஈஸ்வரிஎன்ன வந்து என்ன பிரயோஜனம்.. அதான் வாயு வயிறுமா வந்த புள்ளைய அழ வெச்சிட்டாளே உன் பொண்டாட்டிபோ உன் அக்கா அவளபத்தி சொல்லுவா“.

அவன் ஏளனமாக சிரித்து விட்டுதிவியும் அக்காவும் எவ்வளவு குளோஸ்னு எனக்கு தெரியும். ஏதோ கொஞ்சம் பிரச்சினைனால கோபமா இருக்காங்க. மத்தபடி அக்காவும் அப்படியில்ல. முக்கியமா என் திவி அக்காவை அதுவும் இந்த மாதிரி நேரத்தில அழ வெக்கமாட்டா. சோ நீங்க சொல்றத அப்படியே கேட்க வேற ஆள பாருங்க. அண்ட் தேவையில்லாம எங்க குடும்ப விஷயத்தில தலையிடாம இருக்கறது உங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். ” என கூறிவிட்டு சென்றுவிடடான்.

ஈஸ்வரிபாத்தியாடி இவன் இன்னும் எவ்வளவு திமிரா பேசிட்டு போறான் அவனை சும்மா விடகூடாது சோபி. “

விடு மா நீ சொல்லாட்டியும் இப்போ அபி அவன்கிட்ட சொல்லிடுவா. நீயேன் அவசரபடற. அதனால கண்டிப்பா பிரச்சினை வரும்.”

இல்லடி அபி எல்லத்தையும் சொன்னா அவ பையன அடிச்சதால தான் கோபம்னு திவி சொல்லிட்டா அப்புறம் ஆதி எதுவுமில்லைன்னு விட்டுட்டா என்ன பண்றது. …”

அட போம்மா அபி திவி மேல செம கடுப்புல இருக்கா. மொத நாள் ஒரு டவுட்ல தான் அபிக்கு கால் பண்ணி பேசுனேன். அவ கோபம் புரிஞ்சதும் லைட்டா இங்க நடக்கறது ஆதி சாப்பிடாம போனது அத்தை பீல் பண்றதுன்னு அவகிட்ட அப்போ அப்போ சொல்லி உன் பையனையும் அதே மாதிரி உன்கிட்ட இருந்து பிரிச்சுடுவான்னு பயமுறுத்தி இன்னைக்கு இவ்ளோ கத்தற அளவுக்கு கொண்டு வந்திருக்கேன். அதனால மேடம் முழுசா குழப்பத்துலையும், பயத்துலையும் இருக்காங்க. கண்டிப்பா தப்பா சொல்றாளோ இல்லையோ கண்டிப்பா நல்லவிதமா சொல்லமாட்டா. அது போதும். மீதியை நான் பாத்துக்குவேன்.”

சோபி என்கூடவே தானே இருந்தநான் கூட என்ன இவ பொறுப்பில்லாம போன் பேசிட்டே இருக்கானு நினச்சேன். என் பொண்ணுன்னு நிரூபிச்சுட்டே டி. “

அவளும் சிரித்துவிட்டுஆனாலும் இன்னும் அந்த ஆதிக்கு திவிக்கும் திமிரு கொஞ்சம் கூட குறையல மா. அவளும் இன்னும் அசராம தான் இருக்கா. இவனும் என் திவி அப்டி பண்ணமாட்டான்னு ரொம்ப நம்பிக்கையா சொல்றான்ல. அந்த நம்பிக்கைய உடைக்கணும் என பொருமிக்கொண்டு இருந்தாள்.

அக்காவிடம் வந்த ஆதிஅக்கா என்ன பண்ற, உடம்பு எப்படி இருக்கு. என ஆரம்பித்தவன் அவளது முகம் கண்டு என்னாச்சுக்கா? ” என்றான்.

நான் ரூடா இருக்கேனா ஆதி, என் குழந்தையை அடக்குறேனா? பாசமா இருக்கமாட்டேனா ஆதிஎன கேட்க

ஏன் கா இப்டி எல்லாம் பேசுற? நீ அந்த மாதிரி எல்லாம் இல்ல. எல்லார்கிட்டயும் பாசமா தான் இருக்க. எப்போவும் இருப்ப. மத்தவங்களையே கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறவ. கண்டிப்பா உன் குழந்தையை நல்லா பாத்துப்ப கா. நீ கோபப்படறேன்னா கண்டிப்பா அதுல உன்ன கோபப்படுத்தனவங்க தான் ரொம்ப மோசம் கா

ஆனா நானே இன்னைக்கு நந்துவை அடிச்சுட்டேன்.”

என்ன கா சொல்ற. ஏன் அவனை அடிச்ச. அவன் என்ன பண்ணான். குழந்தைகா அவன். அதுவுமில்லாம நீ அவனை அடிக்கற அளவுக்கு என்ன தப்பு பண்ணான்? அப்படி என்ன கோபம் அவன் மேல

அவன் எந்த தப்பும் பண்ணலஎனக்கு கோபம் திவி மேல தான். .. அவதான் என் பையன என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறா..”

அதிர்ச்சியான ஆதிஎன்னாச்சு காஅவளை நீ குறை சொல்றியா?”

எது நான் குறை சொல்றனா? அப்போ அவ அந்தமாதிரி எதுவும் பண்ணாம நானா அவ மேல பழிபோட்றேன்க்ரியா? “

ச்ச. ..ச்சா. .அப்படியில்ல கா.”

அவ வந்ததும் நந்துவ தனியா டிரஸ் மாத்தேன்னு கூட்டிட்டு போயி 10 நிமிஷம் என்ன பேசுன்னானு தெரில. வெளில வந்தப்புறம் அவனுக்கு ஸ்வீட் செஞ்சாளாம். அவனுக்கு இருமல்னு தானே தராம இருக்கோம். என்னமோ இவளுக்கு தான் குழந்தை மேல அக்கறை இருக்கறமாதிரி வேணும்னே அவனுக்கு ஸ்வீட் தரா. குழந்தையும் நீ தான் ரொம்ப ஸ்பெஷல் திவி, லவ் யூ சோ மச் னு சொல்றான். நான் அந்த சுவீட்டை சாப்பிடவிடலேன்னு என்கிட்ட கத்திட்டு ஹேட் யூ னு சொல்றான். என் பையன் என்னை வெறுக்கற அளவுக்கு அவ பேசி மாத்திருக்கா. கோபத்துல எங்க என் பையன் என்னை வெறுத்துடுவானோனு பயந்து நான் அவனை அடிச்சிட்டேன்…” என அவள் அழ

ஆனா அவளும் குழந்தை விசயத்துல அப்டி பண்ணமாட்டா கா. அவளுக்கு நந்துன்னா ரொம்ப இஷ்டம் கா. அதான்.. ஏதோ தப்பு நடந்திருக்கு. நான் அவகிட்ட பேசுறேன்நீ கவலைப்படாத.” என

அபி ஏளனமாக சிரித்துவிட்டுமத்தவங்கள தான் அவ மாத்திட்டானு நினச்சேன்உன்னையும் அவ மாத்திட்டாள்ல? அது சரி அந்த மாதிரி ஆல்ரெடி மாத்துனதனால தானே எங்க யாருக்கும் ஏன் அம்மாவுக்கே தெரியாம கூட அவளை கல்யாணம் பன்னிட்டு வந்திருக்க. அப்போவே உன்னை புரிஞ்சிருந்துக்கணும். உன்னை விட நான் ரொம்ப அவளை நம்புனேன் டா. அம்மு, அனு விட அவமேல பாசமா இருந்தேன். உனக்கு தெரியாது டா. அவளுக்கு பணம் சொத்து தான் வேணும்னாலும் போகுது எல்லாத்தியும் தந்திடலாம். அவ மத்த குணம், உங்க இரண்டுபேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிக்கும். அதனால நீயும் அவளும் சந்தோசமா இருந்தா போதும்னு நினச்சு அவளுக்காக பேசுனேன் டா. ஆனா அவ என்ன நினைச்சிட்டு இருக்கா தெரியுமா? (திவி மனதில் வேறு ஒருவனை நினைத்துக்கொண்டு இருப்பதை வைத்துக்கொண்டு கூறினாள். ஆனால் அதை தம்பியிடம் கூறும் மனதைரியம் அவளுக்கு இல்லை. அவனது காதல் அபிக்கு புரிந்ததால் ஏதோ ஒரு நம்பிக்கை அப்டியே வாழ்ந்து விடுவார்கள் என்று. ஆனால் திவியின் செயல்கள் எதுவும் மாறாமல் அவ சாதாரணமாக இருக்க ஒருவேளை இவ வேற பிளான் போற்றாலோ? வீட்டை விட்டு போய்ட்டா ஆதிக்கு அம்மா அப்பாக்கு எல்லாருக்கும் எவ்ளோ பெரிய அவமானம் என எண்ணி அந்த வார்த்தை கூறினாள்) இப்போவரைக்கும் அந்த சொத்துக்காக தான் அவ இந்த குடும்பத்தோட பழகுனான்னு அவ வாயால சொன்னதுக்கே சரியான விளக்கம் குடுத்தாளா? அத இல்லேனு ப்ரூப் பன்னாலா? “

இல்லை என்பது போல தலையசைக்க

பின்ன எந்த நம்பிக்கைல அவளை நம்பச்சொல்ற? இங்க மத்தவங்க எல்லாருமே நிச்சயம் நடந்தபோது நடந்த இன்சிடென்ட் பத்தி நினச்சு பீல் பண்றோம். அவ அடுத்து எல்லாரையும் கரெக்ட் பண்ண போய்ட்டா. அவமேல தான் தப்புங்கிறத அவ மறந்துட்டாளா? இல்ல மறச்சு மறந்துட்டா பிரச்சனை சால்வ் ஆகும்னு முடிவு பண்ணிட்டாளா? ஆனாலும் உன் பொண்டாட்டிய குறை சொல்லவேமுடியாது. அடுத்து அடுத்து யார் யாரை எப்படி சமாளிக்கணும்னு இவளை நம்பறதுக்கு என்ன என்ன பண்ணனும்னு ஐடியா பண்ணி தாத்தா பாட்டியை கரெக்ட் பண்ணிட்டா.. பாட்டிக்கு ஒரே திவி பாட்டு தான். அதெப்படி தப்புன்னு தெரிஞ்சவிஷயத்தை கண்டுக்காம நம்பிக்கை இல்லமா ஒருத்தர உங்களால முழுசா ஏத்துக்கமுடியுது?

உனக்கு உன் வைப் தான் முக்கியம்னா நான் எதுவும் சொல்லல. .நான் ஊருக்கு போய்டுறேன்இங்க இருந்து எப்போ என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிப்பாளோன்னு என்னால யோசிச்சிட்டே இருக்கமுடியாது.”

அக்கா ஜஸ்ட் ரிலாக்ஸ். இப்போ என்ன உனக்கு. நந்துகிட்ட அவ பேசக்கூடாது அவ்ளோதான். பேசமாட்டேன்னு தானே அவளே சொல்லிருக்கா. விடுநீயும் இனிமேல் குழந்தைய தேவையில்லாம அடிக்காத.,.. அவனுக்கு என்ன தெரியும். எப்போவும் போல அவகூடவே சுத்திருப்பான். சொல்லி புரியவைக்கா. நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என கூறிவிட்டு வெளியே சென்றான்.

அம்மு,அனு இருவரிடமும் செல்ல அவர்களும் திவியை பற்றி புலம்ப இவனுக்கும் சங்கடமாக இருந்தது. “அண்ணா இன்னைக்கு அக்கா ரொம்ப எமோஷன் ஆயிட்டா. அம்மாவையே எதித்து அதுவும் திட்டுன மாதிரி பேசிட்டா. திவி மட்டும் நல்லவளா இருந்திருந்தா எவ்வளோ நல்லா இருந்திருக்கும் அண்ணா.? ஏன் அண்ணா திவி அப்படி பண்ணா? அந்த மாதிரி அன்னைக்கு திவி பேசுன வீடியோ பாத்தப்புறம் இவளோ நாள் அவ பண்ண விஷயத்தை அவ பன்னாகூட இப்போ எல்லாம் தப்பா தான் தோணுது. ஏன் இப்டி ஆச்சு அண்ணாஎன கேட்க அவனுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. அவர்களையும் சமாதான படுத்திவிட்டு

அம்மாவிடம் செல்ல அவரோ அழுதுகொண்டே இருக்க இவன் வருவதை பார்த்தவுடன் கண்களை துடைத்துக்கொண்டு சன்னலின் வழியே வெறிக்க இவனும் மதியின் முன் மண்டியிட்டுஅம்மா, ஏன் மா இப்டி இருக்கீங்க…. ப்ளீஸ் எல்லாம் சரி ஆய்டும்மா.”

வேற எப்படி இருக்க சொல்ற ஆதி, என் புள்ளைங்க குடும்பம் தான் உலகம் னு நினச்சேன். நீ எனக்கு தெரியாம சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வர. உன் அக்கா என்கிட்டேயே கேக்குறா? உன் பையனையே உன்னால உன்ன மதிக்கறமாதிரி வளத்தை முடில. நீ எங்க என் பையன என்கிட்ட இருந்து பிரியமா பாதுக்குவ…. அதனால நீ தலையிடாதுன்னு சொல்றா…. என்னை என்ன பதில் சொல்ல சொல்ற. உங்க எல்லாருக்கும் மேல ஒருத்தியா கூடவே வெச்சு வளத்துனேன். அவ உன்ன விட எனக்கு சொத்து தான் முக்கியம்னு என் மூஞ்சில கரிய பூசிட்டு போய்ட்டா. அதுக்கப்புறமும் கூட அவகிட்ட கேட்டேன் ஏன் டி அப்டி சொன்னேன்னு. அதுக்கும் மூஞ்சில அடிச்ச மாதிரி உங்ககிட்ட சொல்லமுடியாதுனு சொல்றா. இன்னும் நான் முட்டாளா அவளை மன்னிச்சுடுவோமான்னு கூட காலைல நினச்சேன். ஆனா எனக்கு உரைக்க மாட்டேங்கிது பாரேன். இது இதோட முடியரவிசயம் இல்ல. இனி என்ன பண்ணாலும் அவளுக்கு இந்த மாதிரி கேள்வி வரும் அவ என்ன இருந்தாலும் இப்போ உன் மனைவி அப்போ உன்னையும் அது பாதிக்கும் நாம யாருக்கும் பதில் சொல்லாம தலைகுனிஞ்சு நிக்கணும். மத்தவங்கள விடு நம்ம மனசுக்காகவாது ஏதும் உறுத்தல் இல்லாம குடும்பம் ஓடணும்ல. அவ எது பண்ணாலும் இப்போ எல்லாருமே தப்பா தான் பாக்ராங்க. எனக்கே அப்டி தோணுது. இத்தனை பேர் அவளை ஒத்துக்கறோம்னாலும் அவ அத கண்டுக்காம மூடி மறச்சு எல்லாரையும் எப்படியாவது பேசவெக்கணும்னு தான் பாக்றாலே தவிர அதுக்கு ஒரு முடிவு சொல்லமாட்டேங்கிறா. இன்னும் என்ன என்ன பாக்க போறேன்னு தெரில. இதுல நான் எப்படி இருந்தா என்னவிடு ஆதி. என்ன கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டு நீ போஎன அவரின் வேதனை உணர்த்ததாலோ என்னவோ அவனும் உடனே வெளியேறிவிட்டான்.

வெளியே வந்த ஆதியிடம் சோபியும், ஈஸ்வரியும் வந்து அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் குத்தலாக பேச அவன் பேசும் மனநிலையில் இல்லாததால் அமைதியாக வெளிறேயினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 22உள்ளம் குழையுதடி கிளியே – 22

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்

உனக்கென நான் சுபம்….. “ஏய் ஜெனி கதை ஏதோ ஒகேதான் ஆனா யாருடி ஹீரோ ஹீரோயின்” அப்படின்னு நித்தியா வந்து நின்னா. அட நித்தியா கூட படிக்குற பிரண்டுங்க அவகேட்டதும் எனக்கும் ஒரு குழப்பம் ஆமா யாரு கதாயாகன் அப்புறம் கதநாயகி.

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’

வம்சியின் முகம் மிக அருகில் அவளை நெருங்கியது கண்டு சுதாரித்தாள் காதம்பரி. “விளையாட்டு போதும் வம்சி. இந்த கேமை இத்தோட நிறுத்திக்குவோம். இந்த அமரை சகிக்கவே முடியல. இதில் அவன் வீட்டுக்கு வேற வரணுமாம். நீங்க ஆரம்பிச்ச கேம் விபரீதத்தில் கொண்டு