Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55

55- மனதை மாற்றிவிட்டாய்

ஈஸ்வரியும் சோபியும் வீட்டிற்கு வர அமைதியாக அவர்களுடன் அமர்ந்து பேச யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டுஇருந்தனர்.

பாட்டியும் அபியை அழைத்து உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு இரு நாட்களின் திவிபுராணம் பாடிக்கொண்டே இருக்க பொறுமை இழந்த அபியை கவனித்த சோபிநந்துவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்க.. இப்போ எப்படி அண்ணி இருக்கு பரவாயில்லையா எங்க அவனை காணோம்…” என கேட்க இன்னும்இவன் என்ன பண்ரான்என அபி வினவ

அதற்கும் பாட்டிதிவிகூட பேசிட்டு விளையாடிட்டு இருப்பான். நந்துக்குன்னு பார்த்து பார்த்து இனிப்பு எல்லாம் செஞ்சிருக்கா. கூட்டிட்டு வந்திடுவாஎன மீண்டும் பேச

சோபிஎப்போபாரு புள்ளைய தனியா கூட்டிட்டு போயி இவ மட்டும் அப்படி என்னதான் பேசுவாளோ நம்ம எல்லாரையும் விட அவகூடவே சுத்தறான்குழந்தைங்க சைகாலஜி கூட தெரிஞ்சிருக்கு. ” என ஆச்சரியமாக கேட்க

ஈஸ்வரிஅட என்ன சோபி நீதிவி கூட இருந்தா நந்து அவங்க அம்மாவையே மறந்தட்றான். இதுல எங்க மத்தவங்ககிட்ட போறதுஎன்று அபி காதுபட பேச அந்த நேரம் பார்த்து திவி நந்துவை தூக்கி கொண்டு வர அவளின் காதில் இவன் ஏதோ ரகசியம் சொல்ல இவளும் சிரித்து விட்டு அவனிடம்ஸ்ஸ்யாருகிட்டேயும் சொல்லாத…” என கூறிக்கொண்டே அவர்களிடம் வந்தனர்.

திவிநந்து உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கே….”

என்னது சர்ப்பிரைஸா? எனக்கு இப்போவே சொல்லு இப்போவே சொல்லு. ..” என குதிக்க

அவள் சிரித்துக்கொண்டேஉனக்காக இன்னைக்கு பால்கொழுக்கட்டை ரெடியா இருக்கு.”

….ஜாலி…. தாங்க்யு திவிஎன தாவிச்சென்று கட்டிக்கொள்ள

சரி, இரு நான் எடுத்துட்டு வரேன். நீ சமத்தா இங்கேயே உக்காரு.”

ஓகே…” என சோபாவில் ஏறி அமர்ந்துகொண்டுசீக்கிரம் கொண்டு வா திவி…” என கத்த அனைவரும் இதை கண்டு சிரித்துக்கொண்டே

அவ்ளோ அவசரமா நந்து குட்டிக்குஇனிப்பு ரொம்ப பிடிக்குமா?” என தாத்தா வினவ

ம்ம்…. திவி மாதிரியே எனக்கு ரொம்ப பிடிக்கும் தாத்தாகாய்ச்சல் இருமல் வந்ததால யாரும் தரமாட்டேனு சொல்லிட்டாங்க. நான் போன வாரம் எல்லாம் சாப்பிடவே இல்லை தெரியுமா உங்களுக்கு?” என அவன் கேட்க சிரித்துவிட்டுஅம்மாடி திவி சீக்கிரம் கொண்டுவா. பாரு எவ்ளோ பாவமா பாக்குறான். ” என கூற

சோபிஏன் நந்து உனக்கு யாரெல்லாம் ரொம்ப பிடிக்கும்?”

நந்துவும்அம்மா அப்பா என மொத்த குடும்பமும், நண்பர்கள் பட்டாளம் என கூறி முடிக்க…”

அப்போ உனக்கு திவிய பிடிக்காதா? “

ச்சா. ..ச்சா. ..எனக்கு திவி தான் பஸ்ட். திவி பேமிலி மெம்பெரா, இல்ல பிரண்டான்னு டவுட் அதான் சொல்லல…. ” என அவ சிரிக்க

சோபி. ..அப்டின்னா திவி 2 லிஸ்டலியும் இருக்காளா? “

அவனும்ஆமா, எனக்கு திவி அவ்வ்வ்ளோ பிடிக்கும். ” என கைவிரித்து காட்ட

ஈஸ்வரிஅம்மாவை விட பிடிக்குமா? “

நந்துஎல்லாரையும் விட பிடிக்குமே….” என

அபி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.. இதை கண்ட அனைவரும் இவங்க இரண்டுபேரும் ஏன் இப்போ இந்த கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க என புரியாமல் யோசிக்க திவி கிண்ணத்துடன் நந்துவிடம் வர அதை காட்ட மேலே முந்திரிப்பருப்பு எல்லாம் மிதக்க அதை விழியகல பார்த்தவன்சோ ஸ்வீட் திவிலவ் யூ சோ மச்.” என அதை வாங்க அபி அதை தட்டிவிட்டாள்.

அனைவரும் திகைக்க திவிஅண்ணி என்னாச்சு? ஏன் இப்டி பண்றீங்க? “

நீ என் பையனுக்கு எதுவும் செய்யவேண்டாம். அவனை நாங்க பத்துக்கறோம்நீ உன் வேலைய பாரு.”

நந்துஏன் மா, இப்படி பண்ணீங்க. நீங்க தான் செஞ்சு தரல. ஏன் அதையும் தட்டிவிட்டீங்க என கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ஹேட் யு மாஎன கூற அவனை அபி அடிக்க திவியும் மற்றவர்களும்அண்ணி, அவனை விடுங்க.” “குழந்தையை அடிக்காத மா, விடு…” என தடுக்க திவியின் பின் வந்து நந்து ஒளிந்து கொள்ள

அபிஉனக்கு உடம்பு சரிலேன்னு சொன்னா நாங்க எதுவும் செஞ்சு தரத்திலேனு சொல்றியா? வாய் ஜாஸ்தியாயிடிச்சு. என்கிட்டேயே ஹேட் யு சொல்றியா? ” என மீண்டும் அடிக்க போக தாத்தா அவரை தடுத்துஅனு, குழந்தை அழறான் பாரு. வெளில கொஞ்சம் கூட்டிட்டு போ.” என அவர்கள் சென்றபின்

என்ன மா இது அவன் சின்ன குழந்தை அவன் சொன்னதுக்கு போயி. .தப்புனாலும் எடுத்து சொன்னா அவன் புரிஞ்சுக்கப்போறான்…. அடிக்காத மா இனி..” என தாத்தா கூற

திவிஎன்ன அண்ணி நீங்க அவன் ஆசையா சாப்பிடவந்தான். அத தூக்கிஎறிஞ்சுட்டீங்கனு கோபத்துல அப்டி சொல்லிட்டான்இதுக்கு போயி நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகலாமா. உங்க உடம்புக்கும் அது நல்லதில்லை.”

மதிஅபி, நீ குழந்தைகிட்ட இவளோ கடுமையா நடந்துப்பேனு நான் கொஞ்சம் கூட நினைக்கல. இப்பிடியா குழந்தையை வளப்ப?” என பையனை சாப்பிடவும் விடாமல் அடித்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் கேட்க

அபிபோதும் மா. நீ தான் உன் பையன இவகிட்ட இழந்துட்டநானும் என் பையன இழக்கவிரும்பல. என் பையன எப்படி வளக்கணும்னு எனக்கு தெரியும். நீ தலையிடாத. ” என அனைவர்க்கும் அதிர்ச்சி..அம்மு கூடஅக்கா என்ன பேசுற. ஏன் இப்டி.?”

அவளை தடுத்த அபிஅங்க சொன்னதேதான் எல்லாருக்கும். சொத்துக்காக இந்த குடும்பத்தோட பழகுனவன்னு தெரிஞ்சும் ஆதி அவளை நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு வருவான். நீங்க எல்லாரும் ஒரே நாள்ல அத மறந்துட்டு அவகூட கொஞ்சி கொலாவிக்குவீங்கஇதை நான் வேடிக்கை பாக்கணுமா? ஏன் திவி அதான் ஆதியை மாத்தி எங்க எல்லாரையும் மறக்க வெச்சு கல்யாணம் பண்ணிட்ட. ஒருவேளை முழுச்சொத்தும் கிடைக்கலேனாலும் கோர்ட்க்கு போனா எப்படியும் உனக்கு லைப் ஓட்றதுக்கு பிரச்சனை வராது. ஆனா நீ எப்படியும் நடிச்சு மறுபடியும் எல்லாரையும் உன் வழிக்கு கொண்டு வந்து சொத்தையும் வாங்கிடுவ.. அப்புறமும் ஏன் என் பையன ஒன்னும் தெரியாத குழந்தை மனசுல இப்டி நஞ்ச வளக்கற? தப்பா சொல்லி எங்க எல்லாரையும் விட அம்மா அப்பாவை விட நீதான் முக்கியம்னு சொல்ற அளவுக்கு மாதிவெச்சுருக்க? “

திவிஅண்ணி ஏன் இந்தமாதிரி எல்லாம் பேசுறீங்க. கோபத்துல நீங்க எல்லாத்தையுமே மறந்துட்டீங்க. நான் இப்போ ஒன்னும் புதுசா நந்துகூட பலகல. அவனை குழந்தையா என் கைல வாங்குனதுல இருந்து அவனை என் பையன தான் நான் நினைக்கறேன்னு உங்களுக்கு தெரியாதா? அவன் மேல எவ்வளோ பாசம் வெச்சுஇருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல? “

அதேதான் நானும் கேக்கறேன். உன்ன பத்தி உண்மை தெரியாத வரைக்கும் குடும்பத்துல எல்லார்கூடவும் நடிச்ச சரி. இப்போவும் ஏன் பாசமா இருக்கறமாதிரி நடிக்கற? ஒருவேளை என் பையன பாசத்தை காட்டி என்கிட்ட இருந்து பிரிச்சு அவனுக்கு வரவேண்டிய சொத்தையும் அடையணும்னு நினைக்கிறியா?”

அண்ணி எப்போ குழந்தையோட சுயநலமே இல்லாத அந்த அன்பைக்கூட நான் மிஸ்யூஸ் பண்ணுவேன்னு நீங்க நினைச்சீங்களோ உங்ககிட்ட சொல்லி புரியவைக்க எதுவுமே இல்ல. ஆனா ஒன்னு இதுக்கு நீங்க என்ன வீட்டை விட்டு வெளில போக சொல்லிருந்தா ஏன் மூஞ்சிலேயே முழிக்காத. ..செத்துப்போன்னு சொல்லிருந்தா கூட இவ்ளோ வருத்தப்பட்ருப்பேனான்னு தெரில. என்றவள் இப்போ உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. பையன இனிமேல் அடிக்காதிங்க.”

அபிநீ இனிமேல் அவன்கூட பேசவே கூடாது. அவனை நான் எப்டியோ சமாளிச்சுக்கறேன். நீ குறுக்க வராத…”

திவிதேவையில்லஅவனை எப்டியோ சமாளிக்கணும்னு அவசியமில்லை. நானே அவன்கிட்ட பேசிக்கறேன். இதுக்கு மேல பேசமாட்டேன்.” என்று அனுவை அழைக்க குழந்தையுடன் உள்ளே வந்த அனுவிடம் இருந்து திவி அவனை வாங்கிக்கொண்டு சோபாவில் அமர்ந்து அவனது கண்ணீரை துடைத்துவிடநந்து கண்ணா ஏன் அழுகுறீங்க? நந்து ரொம்ப போல்ட் தானே. அழமாட்டன்ல?”

நந்துஅம்மா அடிச்சபோது நீ இருந்தெல்ல திவிநான் எந்த தப்பும் பண்ணல. அடம்பிடிக்காம சேட்டை பண்ணாம தானே இருந்தேன். ஏன் அடிச்சாங்க…”

அது, நீங்க அம்மாவை ஹேட் யூ சொன்னதால அம்மா எமோஷன் ஆயிட்டாங்க. அம்மா அப்பா எல்லாரும் உனக்காக தானே எல்லாமே செய்றாங்க. அப்போ நீ இப்டி சொன்னா அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல. அதான் கொஞ்சம் கோபப்பட்டாங்க. நீ வெளில போனதும் அவங்களும் அழுதாங்க தெரியுமா? இனிமேல் அப்டி சொல்லக்கூடாது. ஓகேவா? ” என

நந்துஅம்மாவும் அழுதாங்களா? என்றவன் அவனது தாயிடம் சாரி மா நீங்க தட்டிவிட்டுட்டீங்கனு கோபமா அப்டி சொல்லிட்டேன். இனிமேல் ஹேட் யூ சொல்லமாட்டேன். நீங்க பீல் பண்ணாதீங்க. லவ் யூ மா…” என கட்டிக்கொள்ள அவளும் அணைத்துக்கொள்ள பின் விட்டவுடன் திவியிடம் வந்தவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டுநந்து திவி உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்.”

என்ன திவி

நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதனால தான் வீட்ல எல்லாரும் என் மேல கோபமா இருக்காங்க. நீ தப்பு பண்ணா என்ன பண்ணுவாங்க? “

நந்துதிட்டுவாங்க, அடிப்பாங்கஅப்போவும் பணிஸ் பண்ணுவாங்க.”

திவிஅதேமாதிரி தான் நானும் இப்போ பனிஷ்மென்ட்ல இருக்கேன். நான் யாருகிட்டேயும் பேசக்கூடாது. கொஞ்ச நாள். இதுதான் பனிஷ்மென்ட். சோ நீயும் இனிமேல் என்கிட்ட பேசாத…” என

நந்துஅவங்க தானே கோவிச்சுக்கிட்டாங்க. …எனக்கு தான் உன்மேல கோபமே இல்லையே. ..நீ என்கிட்டேயும் கண்டிப்பா பேசக்கூடாதா? ” என புரியாமல் வினவ

இவளுக்கு அழுகையே வந்துவிடும் போல இருக்கம்ம்அதுவும் தான் பனிஸ்மென்ட். .அதேமாதிரி நீ என்னை பாக்கணும், போன்ல பேசணும்னு எல்லாம் கேட்டு டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. ..என்னை பத்தி யாருகிட்டேயும் நீ கேட்கக்கூடாது. அடம்பிடிக்காம சமத்தா அம்மா அப்பா சொல்றத கேக்கணும் செய்வியா ப்ரோமிஸ்? “

அவன் அவளை பார்த்துக்கொண்டேஅப்டின்னா சீக்கிரம் பனிஷ்மென்ட் முடிஞ்சிட்டு வந்து என்கிட்ட பேசுவேன்னு நீயும் ப்ரோமிஸ் பண்ணு. அப்டினாதான் நானும் பண்ணுவேன்.” என கை நீட்ட

ப்ரோமிஸ்…. உனக்காகவே சீக்கிரம் எல்லாமே முடிச்சிட்டு கண்டிப்பா பேசுவேன். ” என அவனும்அப்போ சரி நானும் அதிகம் சேட்டை பண்ணமாட்டேன். உன்கிட்ட பேசணும், பாக்கணும்னு யாருகிட்டேயும் தொல்லைபண்ணமாட்டேன். சமத்தா எல்லாரும் சொல்றத கேட்பேன். ப்ரோமிஸ்.” என்றதும் திவிக்கு அழுகை வந்துவிட அவளை கட்டிக்கொண்டுமிஸ் யூ திவி .. நீ சீக்கிரம் வந்திடு.” என கூறிவிட்டு நந்து அறைக்கு சென்றுவிட்டான்.

அங்கே இருந்த அனைவர்க்கும் இதை கண்டு கண்ணீர் வர திவி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பிஇனிமேல் உங்க பையன் என்கிட்ட பேசமாட்டான் அண்ணி. நானும் நீங்களா சொல்லாம அவன்கிட்ட பேசமாட்டேன். ஆனா என் மேல இருக்கற கோபத்துல குழந்தையை அடிக்கற அளவுக்கு ருடா மாறுவீங்கன்னு நான் எதிர்பாக்கல. அடுத்தவங்க பேச்ச கேட்டு உங்களோட குணத்துக்கு ஒத்துவராத ஒன்ன செயிரிங்க. குழந்தையை அடக்கி இந்த விஷயமா அவனை திட்டவோ அடிக்கவோ கூடாது. அப்டி ஏதாவது நடந்தது நான் மனுசியாவே இருக்கமாட்டேன்.” என கூறிவிட்டு அவளும் அறைக்கு சென்றுவிட்டாள்.

பாட்டி, தாத்தா இருவருக்கும் மிகுந்த கவலை. இப்போதான் ஏதோ சரியான மாதிரி இருந்தது. அதுக்குள்ள இப்டியா என இருந்தது.

மதி தனது மகள் தன்னிடம் கூறியதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

அனு, அம்மு இருவருக்கும் நடந்த நிகழ்வில் கவலை, ஈஸ்வரி, சோபி ஏத்திவிட்டு தான் இப்டி என கோபம் முக்கியமாக திவி மீதுஅவ மட்டும் நல்லவளா இருந்திருந்தா இந்நேரம் எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03

3 – மனதை மாற்றிவிட்டாய் இங்கே ஆதியின் வீட்டிலோ இரவு உணவிற்கு அனைவரும் அமர ராஜலிங்கம், ” ஆமா எங்க திவிய இன்னைக்கு காலைல இருந்து காணோம்,நீங்க 2 பேரும் ஒரு நாள் முழுக்க பாக்காம இருந்தா உலகம் என்னாகுறது? ”

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19

19 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மறுநாள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க அக்சரா எப்போவும் போல காபியுடன் வந்தாள். அவள் முகத்தில் தெரிந்த தெளிவு மகிழ்ச்சி கண்டு ரஞ்சித், ஆதவ் இருவரும் தங்களுக்குள் நிம்மதியடைந்தனர். அக்சரா பொதுவாக பேச வம்பிழுக்க என

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

உனக்கென நான் 62 “நீ யாருடா முதல்ல அத சொல்லு” என்றான் சந்துரு. “இந்த பூபதிய மறந்துட்டியாடா? சரி உன்னதான் நான் மறக்கமுடியாது ஆனா நீ என்ன மறக்குறதுல தப்பு இல்லடா” என்று திமிராக பேச “யேய் பூபதி இப்ப உனக்கு