Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54

54- மனதை மாற்றிவிட்டாய்

அறைக்கு வந்த ஆதி எப்படியும் திவி வருவாள் என நடந்துகொண்டே இருக்க மனமோ அவளை கூப்டீயா? அவளும் இன்னும் சாப்பிடவே இல்ல. அதுவுமில்லாம இப்போ எதுக்கு வரப்போறா? என கேட்க

இவனோ நீ சும்மா இரு. எனக்கு அவகிட்ட பேசணும் போல இருக்கு. நான் கூப்பிடாட்டியும் அவளுக்கு புரியும்.

என்ன டெலிபதியா?

பதியோ? விதியோ? அதைப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு தோணுது அவ வருவா.

அவனது நம்பிக்கையை பொய்யாக்காமல் அவளும் வர இவனுக்கு ஏனோ மகிழ்ச்சி தாளவில்லை..

அவளும் வேகமாக வர இவனும் சென்று கட்டிக்கொள்ளசூப்பர் ஆதி மாமா உங்ககிட்ட பழையமாதிரி பேசிட்டாங்க

அம்மா பேசிட்டாங்க டிஎன இருவரும் ஒரு சேர கத்த இருவரும் சிரித்துகொண்டனர்.

எப்படி அம்மா பேசுனாங்க. காலைல கூட எதுவும் கண்டுக்கவே இல்லையே. அப்பா பேசுனதும் அம்மாவும் பேசிட்டாங்களா? நான் எதிர்பாக்கவேயில்ல. ..ரொம்ப ஹாப்பி தியா என மீண்டும் கட்டிக்கொண்டு சுத்த

இவளும்உங்க அம்மா உங்ககிட்ட பேசிட்டாங்க…. ஹாப்பி தானே. இதுல என்ன ஆராய்ச்சி?”

இல்ல நீ சொல்லு. நீ ஏதாவது பண்ணிருப்ப..” என அவன் உறுதியாய் கூற

இவளுக்கு சிரிப்பு வரஅதென்ன அப்டி ஒரு நம்பிக்கை?”

அது அப்படிதான். உன்ன எனக்கு தெரியும். சொல்லு என்ன பண்ண? “

அத்தைகிட்ட பேசுனேன். நீங்க பேசாம அவரு ரொம்ப பீல் பன்றாரு. பாக்க கஷ்டமாயிருக்குசரியா தூங்காம அதனால தான் தலைவலி வந்ததுன்னு எல்லாம் சொன்னேன். இதுக்கு மேல அத்தை உங்கள கஷ்டப்படுத்துவங்களா? பையனுக்காக பேசிட்டாங்க.” என கூற

ஆதிநீ சொல்லி என்கிட்ட பேசிட்டாங்க. அப்புறம் ஏன் உன்கிட்ட முகம் குடுத்து பேசாம போறாங்க? “

திவிஅய்யயஎன்ன ஆதி நீங்க, இவ்ளோ கேள்வி கேக்கறீங்க. இது எனக்கும் அத்தைக்கும் நடக்குற சின்ன செல்ல சண்டை மாதிரி தான். சீக்கிரம் சரி ஆய்டும். அதுவுமில்லாம நம்ம கல்யாண விசயத்துல அவங்க எவ்ளோ கோவப்பட்டாங்க. இந்த அளவுக்கு இப்போதைக்கு பேசிருக்காங்கன்னு சந்தோசப்படுவீங்களா? விசாரிச்சிட்டு இருக்காரு. ..” என அவள் கூற

அது என்னவோ உண்மைதான். ஆனா ஏன் அப்பாகிட்ட பேச சொன்ன, சாரி சொல்ல சொன்ன, நான் என்ன நினச்சேன், ஏன் அவளோ அவசரப்பட்டேன், இந்த மாதிரி எல்லாமே சொல்ல சொன்ன, ஆனா அம்மாகிட்ட இது எதுமே சொல்லாம ஏன் சின்னப்புள்ள தனமா இந்த சேட்டை விளையாட்டு பொய் எல்லாம். ? அம்மாகிட்டேயும் இதெல்லாம் சொல்லிருந்தாலே போதுமே. ..”

திவிஆதி, மாமா வெளி உலகத்தை பாக்றவங்க. ஒரு லெவெலுக்கு மேல நடக்கற விஷயம் வெச்சு ப்ராக்டிகலா திங்க் பண்ணுவாங்க. அவங்களுக்கு பையன் நம்மள மதிக்கல. அவன் இஷ்டப்படி இருக்கான். நாம அவனுக்கு தேவையில்லன்னு நினைக்கத்தோணும். .. உங்க சைடு என்ன என்ன நினைச்சீங்கன்னு பேச சொன்னேன். அவரு புரிஞ்சுகிட்டா கண்டிப்பா நியாயமா முடிவு பண்ணுவாருனு நம்பிக்கை.

ஆனா அத்தைக்கு அவங்க குடும்பம், முக்கியமா நீங்க தான் எல்லாமே. உங்க சந்தோசம் தான் அவங்க வாழ்க்கை. எமோஷனலா தான் எல்லாமே யோசிப்பாங்க. ..அவங்களுக்கு நீங்க சொல்லாமலே உங்க பீலிங் புரியும். உங்க எண்ணம், ஏக்கம் ஆசை எல்லாமே தெரியும். இருந்தும் அவங்க கோபம் உங்க கல்யாணத்த பாக்கமுடிலேன்னு தான். ஏதோ உறுத்தலோட இருக்கும் போது கல்யாணமும் நடந்திடிச்சு. அதோட இன்னும் சுத்தி இருக்கறவங்க எல்லாம் உன் பையனுக்கு நீ முக்கியமில்லைஇவ்ளோ வருஷம் அவனை தனியா விட்டு நீங்க குடும்பத்தோட இருந்திங்க. இப்போ அவன் உங்கள விட்டுட்டு அவனே கல்யாணம் பன்னிட்டு அவன் வாழ்க்கையை பாத்துக்கிட்டான்னு பேசுறத கேட்டு எங்க நாம பையனுக்கு குறை வெச்சுட்டோமோன்னு கவலை. அதோட முக்கியமா உங்களுக்கு உங்க அம்மா அவ்ளோ முக்கியமில்லையான்னு தோணிடிச்சு. அதனால தான். அத்தைக்கு உங்க மன்னிப்பு விளக்கம் எல்லாம் தேவையில்ல. அவங்க உங்களுக்கு எவ்வளோ இம்போர்ட்டண்ட்ன்னு காட்டுனா போதும். அண்ட் நான் பொய் சொல்லலையேநீங்க அத்தைக்காக பீல் பண்ணது நிஜம். காலைல அது விஷயமா தான் உங்களுக்கு தலைவலி வந்தது. சோ நான் பொய் எல்லாம் சொல்லல. லைட்டா அங்க அங்க கட் பண்ணி தான் சொன்னேன்.” என அவள் கண்ணடிக்க

ஆதிஎப்படி உனக்கு இந்த அளவுக்கு எல்லாரோட கேரக்டர் பத்தி தெரிஞ்சது. ?”

எத்தனை வருஷம் அத்தை மாமா நம்ம இரண்டு குடும்பத்தோடையும் இருந்திருப்பேன். எவ்வளோ ரீசெர்ச்….இந்த அளவுக்கு கூட அவங்கள புரிஞ்சுக்காட்டி எப்படி?”

அவனும் சிரித்துவிட்டுசரி சொல்லு அடுத்து என்ன? “

அடுத்து என்னனா? என்ன? “

ம்ம்ம். .. இங்கேயே இப்டி பிளான் போட்டுட்டஉன்கிட்ட எல்லாரும் பேச எப்படி கரெக்ட் பண்ணப்போற அண்ட் உங்க வீட்லயும்? பிளான் சொல்லு…” என அவன் ஆர்வமாக கேட்க

அவள் மெலிதாக புன்னகைத்து விட்டுஅது இப்போதைக்கு நடக்காது ஆதி. கொஞ்ச நாள் போகட்டும். என் மேல அவங்களுக்கு இருக்கற கோபம் குறையாது. நான் ஏன் அப்டி நடந்துக்கிட்டேன்னு காரணம் தெரியாம அவங்களால என்னை எதுக்கமுடியாது. அவங்க வளர்ப்பு தப்பில்லை பொய்யிலேனு காட்டணும் அப்போதான் என் மேல இருக்கற கோபம் போகும். ஆனா என்னால உங்களைத்தவிர அவங்ககிட்ட அதுக்கான காரணத்தை சொல்லமுடியாதே…. “

அவனும்என்ன சொல்ல போற. ..விளையாட்டுக்கு பேசுனேன். வம்பிழுக்க பேசுனேனு சொல்லப்போற. .சொன்ன எனக்கு கெட்ட கோபம் வரும். அதனால இப்போ எவ்ளோ ப்ரோப்லேம் பாரு. உன்ன உயிரா நினச்சா எல்லாருமே உன்ன தூக்கி எரியற அளவுக்கு ப்ரோப்லேம் பண்ணிவெச்சுருக்க. ..இதுல சத்யம் வேற…. ” என அவனும் சற்று காட்டமாகவே கூறினான்.

திவிஇல்ல ஆதி, நான் அப்டி எல்லாம் சொல்லல. .நான் தெளிவா சுயநினைவோட தான் அப்டி பேசுனேன். அத நான் இலேன்னு மறுக்கல. அப்போ சூழ்நிலை அந்தமாதிரி…. நான் பேசுனது நிஜம் தான்பிளான் பண்ணி தான் அப்படி பேசுனேன். ..” என நிறுத்தி ஆதியை பார்க்க அவன் இவளை முறைத்துக்கொண்டு ஆனால் பேசுவதை தடுக்காமல் நிற்க இவளும் தொடர்ந்துஆனா சத்தியம் பண்ணது எதிர்பாக்காம நடந்திடிச்சு….உண்மையா சொத்துக்காக ஆசைப்பட்டது …”

ஆதிக்கு மொபைலில் கால் வர அவளும் பேசுவதை நிறுத்த இவன் காலை அட்டென்ட் செய்து பேசிக்கொண்டே வெளியே செல்ல, அவன் பேசியதில் இருந்து சைட்டில் ஏதோ பிரச்சனை என தெரிய இவளும் அவனை தடுக்காமல் பேச்சை அதோடு விட்டுவிட்டாள்.

அனைவரும் மதிய உணவுக்கு பின் இளைப்பாற திவி மட்டும் உருட்டிக்கொண்டே இருந்தாள்.

பாட்டி அழைத்து விசாரிக்கஇன்னைக்கு அனு அம்மு அண்ணி எல்லாரும் வராங்கள்ல.?”

சரி அதுக்கு என்ன பண்ற?”

கூட என் ஆளு நந்துவும் வரானே. சோ அவனுக்கு பிடிச்ச பால்கொழுக்கட்டை பண்றேன். பாவம் குழந்தை உடம்பு சரியில்லாம ஸ்வீட் சாப்பிடாம ஏங்கிபோயிருப்பான். இருமல் வரும்னு பாவம் யாரும் குடுத்திருக்கமாட்டாங்க.. எப்படியும் சரியானதால தான் இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லிருப்பாங்க.

அதான் அவனுக்காக செய்றேன்.”

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் வர நந்து வேகமாக திவியிடம் ஓடி வர அவளும் அவனை தூக்கிக்கொண்டுநந்து கண்ணா எப்படி இருக்க…?”

நான் 4 days ஸ்கூல் லீவு தெரியுமாசூப்பரா இருக்கேன் திவி.. “என

அவன் சொன்ன வரிசையை நினைத்து சிரித்துடேய் உண்மைய சொல்லு ஸ்கூல்க்கு லீவு போட தானே காய்ச்சல் வந்தது ப்ரே பண்ணியா?” என அவள் கேட்க

இல்ல திவி பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ளவே காய்ச்சல் வந்திடுச்சு நான் எதுவுமே பண்ணல நம்பு திவிஎன அவன் உதட்டை கடித்து, பின் நாக்கை வெளியே விட்டு சொன்ன அழகிலும் குறும்பிலும் அனைவரும் மயங்கி சிரித்தனர்.

அபிக்கு எரிச்சலாக இருந்தது..ஏனோ அவன் திவியுடன் பேசுவதை அவள் விரும்பவில்லை

அபிசரி நந்து போய் முதல டிரஸ் சேஞ்ச் பண்ணு.”

ஓகே மாஎன்றவன்திவி நீயும் என்கூட வாஎன அழைக்க

அபிம்ச்ச்டிரஸ் சேஞ்ச் பண்ண அவ எதுக்கு.. நீயா பண்ணமாட்டியா.”

அதுநான் பண்ணிப்பேன் மம்மி ஆனா பேக்ல இருந்து எடுக்கும்போது கலச்சிடுவேன்ல.. அதான்.. உங்கள டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு டாடி பாட்டி தாத்தா எல்லாரும் சொல்லி இருக்காங்க.

சோ திவிய கூட்டிட்டு போறேன்மாஎன்றவன் தாமதிக்காமல் திவியை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.

மற்றவர்களும் இவர்களுடன் பேச வேறு வழியின்றி அபியும் அங்கேயே இருந்து கொண்டாள்.

பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திவியும் நந்துவும் வராமல் இருக்க அபி அறையை பார்த்து கொண்டே இருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 1கபாடபுரம் – 1

கதை முகம்   இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ – என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து

சாவியின் ‘ஊரார்’ – ENDசாவியின் ‘ஊரார்’ – END

9 காலையில் இருட்டு அழியுமுன் அவுட் போஸ்ட் பழனி வந்தான். பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்கப் போனான். “வேப்பஞ் செடியை ஒடிக்காதே. இப்பத்தான் தலை தூக்குது” என்று கூறிப் பல்பொடி எடுத்துக் கொடுத்தார் சாமியார். “கன்னங்கரேல்னு இருக்குதே!” என்றான் பழனி. “இதிலே