Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53

53 – மனதை மாற்றிவிட்டாய்

திவி அறையினுள் நுழைய ஆதி பால்கனிக்கு செல்லும் கதவருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கதவை இறுக பிடித்திருந்ததிலிருந்தே தெரிந்தது அவனது கோபம்.

ஆதிஎன அவள் மெதுவாக அழைக்கஅமைதியா போ திவிசெம கடுப்புல இருக்கேன்.”

சரி அத விடுங்க ஆதி. நாம வேற பிளான்..”

ஏய் நான் உன்ன அடிக்கறதுக்குள்ள இங்க இருந்து ஓடிடு

இப்போவே இருக்கறதையும் கெடுத்திட்டமோன்னு தோணுது. இன்னும் இதுல நீ பிளான் பண்றியா. அவங்களுக்கா கோபம் குறஞ்சு பேசட்டும்னு பேசாம நான் இருந்தேன். தூங்கறவனை எழுப்பி பேசுவாங்கன்னு ஆசகாட்டி இல்லேன்னு இப்ப காட்டியாச்சு. இதுல அத்தை வேற சொல்றத கேட்காம என்னை டென்ஷன் பண்ணி அம்மா அப்பாவ குழப்பிவிட்டு சங்கடபடுத்தி இதெல்லாம்..”

கரெக்ட் ஆதி. அவங்கள சும்மா விடமாட்டேன். எப்போபாரு எல்லாம் தெரிஞ்ச மாதிரி உள்ள வந்திடவேண்டியது. ஏன் தான் இப்படி இருக்காங்களோ. அத்தை பாட்டிக்காக தான் இவ்வளவு நாள் சும்மா விட்டேன். ஆனா எப்போ உங்களையே கோபபடுத்துனாங்களோ இனி சும்மா இருக்க மாட்டேன். தேவையில்லாம பேசுற அவங்க வாய்க்கு இன்னைக்கே மைதாமாவுல அல்வா செஞ்சு அந்த வாய அடைக்கணும். அந்த சோடா புட்டி கண்ணாடிய ஒளிச்சு வெச்சு ஒரு நாள் முழுக்க அலையவிடணும். எப்போ யாரு எங்க இருக்காங்க என்ன பண்றாங்கன்னு நோட்டம் விட்டுட்டே இருக்கறது. அப்புறம் யாரு பேசுனாலும் காதை கலட்டி அங்க வெச்சுட்டு வந்திடவேண்டியது. எல்லாத்தையும் கேட்டிட்டு ஒளறவேண்டியது. அவங்க நீட்டி இழுத்து பேசுறத ரெக்கார்ட் பண்ணி அவங்கள கட்டி வெச்சு கேப்பே விடாம போட்டுகாட்டி அந்த காதை கேட்காம பண்ணணும்.”

என அவள் இவனுக்கு மேல் கோபமாக கத்த ஆதி அமைதியாகி முதலில் திருதிருவென விழித்து

ஹே சரி சரி ரிலாக்ஸ்…”

இல்ல ஆதி அதென்ன எப்போ பாரு..தான் பிடிச்சதே பிடிவாதம்னு நிக்கிறது. ரொம்ப ஓவர்அடுத்தவங்க பேசறத கேட்கறதேயில்லநமக்கு மட்டும் தான் கோபம் வரும். நாம பண்றது தான் சரின்னு நினைச்சா எப்படி.

ஏன் மத்தவங்களுக்கு கோபம் வராதா. இவங்கள எல்லாம்…”

ஏய் கடைசியா இப்போ நீ சொல்றத அவங்களுக்கு சொல்றியா? இல்ல எனக்கு சொல்றியா ?”

கண்டுபுடிச்சிட்டானே. ..”என மனதிற்குள் நினைத்தவள்விடுங்க ஆதி.. யாருக்கெல்லாம் பொருந்துமோ எல்லாரும் எடுத்துக்க வேண்டியதுதான்என அவள் கூற இவனோஉன்ன…. சேட்டை டி..”.என அவளும் வேகமாக மேலும் கீழும் தலையாட்டிவிட்டுஓகே ஆதி, இப்போ அவ்ளோவா கோபம் இலேல்லஇப்போ சொல்றத கேளுங்களேன் மாமாகிட்ட பேசலாம். இந்த பிளான் சொதப்பாது…” என அவள் விடாப்பிடியாய் நிற்க இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஏன் தான் நீ இப்டி இருக்கியோமொத பிளான் பிளாப் ஆகி கொஞ்ச நேரம் கூட ஆகல.. புள் எனெர்ஜியோட அடுத்த பிளானை கொண்டுவர.”

பின்ன அதைப்பத்தியே நினைச்சிட்டு இருக்கசொல்றிங்களா? அடுத்து அடுத்து பாத்துட்டு போயிட்டே இருக்கனும். ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு… ” என அவள் பிளானை பற்றி சொல்ல

இவனுக்கு மனதில் அம்மாவின் வருந்திய முகமே கண்முன் தோன்றஎன்னால அந்தமாதிரி அம்மாவ நினைக்கமுடில தியா. எல்லாரும் பேசுனாலும் அம்மா மட்டும் என்னை ஒதுக்குனாலும் என்னோட சந்தோஷம் முழுமையா இருக்காது. என வருந்த

திவி அவனது முகத்தை கையில் ஏந்திகண்டிப்பா அத்தை பேசுவாங்க ஆதி. நீங்க எப்போவும் நம்பிக்கையை இழக்காதிங்க. அத்தை மட்டுமில்ல. மொத்த குடும்பமும் உங்ககிட்ட சந்தோசமா இருப்பாங்க. நீங்க தான் எப்போவுமே அவங்களுக்கு கிங் ஓகே வா?”

அவனும் சிரித்து விட்டு சரி சொல்லு அடுத்து என்ன?

மாமா இன்னைக்கு வாக்கிங் போகும்போது நீங்களும் கூட போங்க. அவர்கிட்ட பேசுங்க. “

என்ன பேசுறது? அதையும் நீயே சொல்லு…”

இல்ல ஆதி, மாமாகிட்ட நீங்களா பேசுங்க. உங்க மனசுல என்ன இருக்கு. அவரு கோபம் என்ன? நீங்க அதுல என்ன நினைச்சிங்க என்ன எதிர்பாக்கிறீங்க..இந்த மாதிரி எல்லாமே டீடைலா பேசி ஒரு முடிவுக்கு வாங்கஅவங்க ரெஸ்பான்ஸ் பண்ணல சோ விட்டுட்டு வந்துட்டேனு எல்லாம் சொல்லக்கூடாது. என்ன நடந்தாலும் அவரை பொறுமையாவோ, இம்ச பண்ணியோ உங்க மனசுல இருக்கறத பேசிடுங்க. உங்கள புரியவெய்ங்க. அண்ட் மாமாகிட்ட மன்னிப்பு கேளுங்க. “

மத்ததெல்லாம் சரி. ஆனா எதுக்கு மன்னிப்பு. உன்ன கல்யாணம் பண்ணதுக்கா? எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஆல்ரெடி சொல்லிருக்கேனேஅவங்களும் சரி னு தானே சொன்னாங்க.நான் எதுவும் தப்பு பண்ணல. பண்ணாத தப்புக்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். “

தப்பு பண்ணலேனு யாரு சொன்னது?”

அவன் கண்களை சுருக்கிஎன்ன சொல்ற? நான் என்ன தப்பு பண்ணேன்?”

அவங்க நம்பிக்கையை பொய்யாக்கிறீங்க ஆதி. என்னதான் நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னாலும் அவங்க இல்லாம பண்ணுவேன்னு நீங்க சொல்லல. வெளில ஹாஸ்டல் தங்கி இருக்கும்போதும் சரி பாரின் போயி படிக்கும்போதும் சரி உங்க இஷ்டப்படி தான் உங்க கல்யாணம் நடக்கும்னு நீங்க யாருக்கும் சொல்லல. குடும்பத்துல எல்லார்கிட்டயும் அவங்க விருப்பப்படி தான் கல்யாணம் நடக்கும்னு தான் நம்பிக்கை குடுத்துட்டு போயிருக்கிங்க. அண்ட் இங்க வந்தும் நீங்க நம்ம மேரேஜ் பத்தி சொன்னதுக்கப்புறமும் எல்லாரும் ஒரு எதிர்பார்ப்போட தான் இருந்தாங்களே தவிர விட்டுட்டு போயி இஷ்டப்படி கல்யாணம் பண்ணுவோம்னு நினைச்சிருக்கமாட்டாங்க. ஆனா அந்தமாதிரி வந்த அப்புறம் எவ்வளோ அதிர்ச்சி அவங்களுக்கு. இதுக்கு நடுவுல இன்னமும் ஈஸ்வரி ஆண்ட்டி மாதிரி ஆளுங்க எல்லாம் என்னவெல்லாம் பேசுறாங்க. அவங்க பேசுறத கேட்டா நீங்க உங்க அம்மா அப்பாவை ஒரு பொருட்டாவே மதிக்கவேயிலைனு சொல்ற அளவுக்கு இருக்கும்.. அதெல்லாம் கேட்டும் உங்கனால தாண்டா எங்களுக்கு இந்த அவமானம்னு சொல்லாம அமைதியா அவங்களே வருத்தப்பட்டுகிறாங்க.”

இருந்தாலும்…”

ஆதி, காலைல அத்தைகிட்ட இன்னைக்கு பேசலாம்னு கூட்டிட்டு போயி இல்லேனு ஆனதுமே நீங்க எவ்ளோ கத்துறீங்க. எனக்கு ஹோப் குடுத்து ஏமாத்திட்டேன்னு கோபம் வருதே. இத்தனை வருஷ அவங்களோட எதிர்பார்ப்பு சந்தோசம் எல்லாத்தையும் இல்லேனு ஆக்கிருக்கும்போது மன்னிப்பு கேக்கறது தப்புங்கிறீங்களா ஆதி? “

அவனும் யோசித்து விட்டுசரி நான் அப்பாவோட போயி பேசுறேன்.” என நகர்ந்தான்.

கீழே வந்தவன் வெளியில் செல்ல தயாராக இருந்த சேகரிடம்அப்பா நானும் உங்க கூட வாக்கிங் வரேன்.”

அவர் எதுவும் சொல்லாமல் முன்னே நடக்க இவனும் அதை கண்டுகொள்ளாமல் உடன் நடந்தான்.

இதை கவனித்தாலும் யாரும் கவனிக்காதது போல இருந்தனர்.

திவி வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.

ஒன்றரை மணி நேரம் கழித்து வீட்டினுள் முகத்தில் புன்முறுவலுடன் நுழைந்த தந்தை மகனை கண்ட தாத்தா, பாட்டி, மதி, திவி அனைவர்க்கும் மனம் நிறைந்தது. தாத்தா பாட்டி அதை வெளிப்படையாக சொல்லி பகிர்ந்துகொண்டனர். மதி புன்னகைத்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஆனால் சேகர் திவியிடம் மட்டும் இன்னமும் பாராமுகமாய் இருக்க அவளுக்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது. இதை கவனித்த பிறரும் சரி கொஞ்சம் கொஞ்சமா சரியாகும்னு விட்டுட்டாங்க.

பாட்டிசரி இரண்டுபேரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்.”

அவர்களும் நகர ஆதி திவியிடம்சக்ஸஸ்..இவ்வளோ சீக்கிரம் அப்பா பேசிடுவாருன்னு நினைக்கலஇப்போ லைட்டா தான் பேசிருக்காங்க. இனி போக போக நார்மலா பழைய மாதிரி பேசிடுவாங்கனு நம்பிக்கை வந்திடுச்சு.. தியா அம்மாவும் அப்டியே பேசிட்டா நல்லா இருக்கும்ல டி. இதே மாதிரியே அம்மாகிட்டேயும் தனியா பேசிடவா? ” என அவன் ஆர்வமாக கேட்கஒன்னும் வேண்டாம். சீக்கிரம் அத்தை பேசுறதும் நடக்கும் இப்போ போயி குளிங்க.” என அவள் விரட்ட

இவனும் வேறு வழியின்றி அமைதியாக சென்றான்.

அனைவரும் உண்ண அமர திவி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க மதியே அனைவர்க்கும் பரிமாறினாள். திவி மருமகளாக வந்ததில் இருந்து மதி இதை செய்வதில்லை. யாருக்கும் எதுவும் செய்யப்போவதில்லை என அத்தனை கோபம். அதனால் திவி தான் செய்தாள். ஆனால் இன்று மதியாக வந்து பரிமாறவும் அனைவர்க்கும் ஆச்சரியம்.

அதிலும்ஆதி உனக்கு பிடிச்சது தான் செஞ்சிருக்கு. இந்தா இத சாப்பிடு. அத சாப்பிடுனுசொல்லவும் ஆதிக்கு நம்பவே முடியவில்லை. திவி உள்ளே இருந்து வந்தாள் மதி அமைதியாகி விடுவாள். இதே போல் நடக்க திவி கிட்சனுள் இருந்தே இதை வேடிக்கை பார்த்தாள்.

மதிஏங்க, பையன கூப்பிட்டு வெளில போனவரு இவ்ளோ நேரமா? சாப்பிடணும்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? “

சேகர்நான் என்ன பண்ணட்டும் எல்லாம் அவனை கேளு. என்ன பிடிச்சு இழுத்துட்டு போனது அவன் தான். என்னை பட்டினி போட பாத்துட்டு இப்போ அம்மாவும் புள்ளையும் என்னை குறை சொல்றிங்களா?”

ஆதியும் சிரித்துவிட்டுஇல்லமா, நான் தான் அப்பாகிட்ட பேசணும்னு கூட்டிட்டு போனேன். இப்போவும் அப்பா டைம் ஆயிடிச்சுனு சொன்னதால தான் கிளம்புனோம். நான் கவனிக்கவே இல்ல. “

சேகர்அத சொல்லு மொதல்ல, ஏதோ வயசானவன்னு பாவம் பாத்து ஒரு காபி வாங்கிக்குடுத்தான். இல்லாட்டி என் நிலைமை?” என அவர் சோகமா கூற

ஆதிஅப்பா உங்களுக்கு என்னப்பா அப்டி வயசாயிடிச்சு. ஸ்டில் ஸ்வீட் சிக்ஸ்ட்டின் பா..இப்போவும் நீங்க டீஷர்ட் போட்டு பைக் ஓட்டுனா அப்டி ஒரு ஹண்ட்ஸோம். … காலேஜ் பொண்ணுங்களே உங்கள வரவேற்பாங்க பா. ” எனஹா ஹா ஹா. ..சூப்பர்என்ன மதி ஆதி சொல்றது கரெக்டதானேவாயேன் அப்டியே ஒரு ரவுண்ட்ஸ் போலாம் ஆதியோட பைக்ல. ..” கண்ணடிக்க

உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை. என தலையில் அடித்துக்கொண்டு அப்பாவுக்கும் புள்ளைக்கும் என்ன வம்பிழுக்கறதே வேலையா போச்சு.” என அவரும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

சிரிப்பு சத்தம் அதிகமாக இருக்கே என வெளியே வந்து பார்த்த ஈஸ்வரிக்கும் சோபனாவுக்கும் இது பார்க்க அவ்வளவு ஆத்திரம். இருந்தும் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பவேண்டி இருந்ததால் வந்து பார்த்துக்கொள்ளலாம் என சென்றுவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13

 கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

  41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க? அமைதியா போய்ட்டானா?” அக்சரா ” ஒரு மணி  பக்கம் இருக்கும்… அமைதியாவா? நேத்து நீங்க வந்து

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி  எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு