Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52

52- மனதை மாற்றிவிட்டாய்

திவிஆதி எந்திரிங்க“….

ம்ம்ம்….தியா இன்னைக்கு சன்டே தானே டி தூங்க விடு போ…” என இவளும் விடாமல்

நோ…. ஆதி எந்திரிங்கஒரு முக்கியமான விஷயம் பேசணும்என அவனை உலுக்கி கையை பிடித்து இழுத்து அவன் மீண்டும் சாய போக அதற்குள் தலையணை மீது இவள் ஏறி அமர்ந்து கொள்ள அவன் சிரித்துவிட்டுஇப்ப உன் மடில படுத்து தூங்க எனக்கு இன்டரஸ்ட் இல்ல. நகுரு..”

உங்களை…” என அவன் கையில் கிள்ளி வைக்க

ஆஆஆஏய் ஏன்டி இம்ச பண்றதூங்கவிடு … “

முழிச்சு தெளிவா நான் சொல்றத கேளுங்க. ரொம்ப இம்பார்டெண்ட்….”

அப்புறமா கேட்கிறேன். இப்பவே ஏன் எழுப்பற…”

அத்தைகிட்ட பேசணுமா வேண்டாமா?”

அவன் உடனேஅம்மாகிட்டேயா கண்டிப்பா பேசணும் டிவா உடனே போயி பேசலாம்..” என எழ

இவள் இழுத்து அமர வைத்து தலையில் கொட்டினாள்.

. ..ஏய் ஏன் கொட்டுற?… நீதானே அம்மாகிட்ட பேசலாம்னு சொன்ன?”

அதுக்குன்னு இப்படியா? மொதல்ல பிளானை முழுசா கேளுங்க…”

பிளானா?”

ஆமா, அவங்க இப்போ கொஞ்சி குலாவி பேசுற மாறியா இருக்காங்க? “

அவன் முகம் வாடஇல்ல, இரண்டு நாளா ஒரு வார்த்தை கூட பேசல. நேத்து நைட் கூட நான் வந்து உக்காந்ததும் எழுந்து உள்ள போய்ட்டாங்க. ரொம்ப கஷ்டப்படாம இருக்கு.” என

கஷ்டமா இருக்குனு இப்டியே இருந்தா சரி ஆய்டுமா? நாம பண்ண தப்பு தானேநமக்கு தானே அவங்களோட பேசணும். அவங்க கோபம் உடனே குறையாது. பட் கொஞ்சம் கொஞ்சமா கரைக்கலாம். சோ இப்போ சொல்ற மாதிரி பண்ணுங்கஎன பிளான் சொல்ல அவனும் கேட்டுக்கொண்டுசரியா வருங்கிற? “

உடனே பழைய மாதிரி உங்ககிட்டேயே பேசிட்டு இருப்பாங்கன்னு சொல்லமுடியாது…. இது சின்னது தானே. அதனால முதல நீங்க பேசுனா பதில் சொல்ற அளவுக்கு வரட்டும். அப்புறம் டெய்லியும் இதே மாதிரி எதாவது பண்ணி பேசவெப்போம்.எல்லாம் ஓகே தானே. எதுவும் சொதப்ப மாட்டீங்கல்ல? “

ரொம்ப பண்ணாத டி. பாத்துக்கறேன். நீ போஎன்றுவிட்டு இவனும் பின்னாடியே வர

உங்கள நான் என்ன சொன்ன? எங்க கூடவே வரீங்க? “

அட்ச்சோ, ஒரு ஆர்வத்துல வந்துட்டேன்.” என

சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோங்க. நான் போனதும் ஒரு 5 10 நிமிஷம் கழிச்சு வாங்க. பிரெஷ் ஆயிட்டு வாங்க. உடனே வராதீங்க…” என மிரட்டி விட்டு சென்றாள்.

அவள் கீழே சென்று சிறிது நேரத்தில் ஆதி வர பாட்டி தாத்தா அப்பாவுடன் இவனும் அமர அவர்கள் காபி குடித்துக்கொண்டிருக்க தாத்தா கேட்டார். “என்ன ஆதி, இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல? “

ஆமா தாத்தாதூக்கம் வரலதலைவலி வேற. ..அதான் எழுந்து வந்துட்டேன்என்றவன்தியா காபி எடுத்திட்டு வாயேன்.” என அழைக்க

கிட்சனில் இருந்து எட்டி பார்த்த அவள்பூரிக்கு மாவு பிசஞ்சிட்டு இருக்கேங்ககொஞ்சம் வெயிட் பண்ணுங்க…”

ஏய் ரொம்ப சீன் போடாத, அம்மாதான் எல்லாம் செய்வாங்க நீ கூட வெட்டியாத்தானே தானே நிக்க போற? அதான் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம உன்ன கேட்டேன். தலைவலி வேற…” என

திவி கையில் மாவுடன் வெளியே வந்துநான் வெட்டியா இருக்கேனா? நீங்க பாத்தீங்க? இதுக்காகவே இன்னும் 1 ஆர்க்கு உங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஒரு நாள் எழுந்து சீக்கிரம் வந்திட்டு உங்க அலப்பறை இருக்கேஅதுவும் தலைவலின்னு சொல்லிட்டு என்னை கிண்டல் பண்ண மட்டும் நல்லா வருமே? .” என

ஆதிநீ ஒன்னும் தர வேண்டாம். . ரொம்ப சீன் போடாதஎன் அம்மா எனக்காக செய்வாங்கஅம்மா நீங்களே உங்க கையாள காபி போட்டு தாங்க மா.”

அத்தை வேண்டாம்ஏன் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணமாட்டாராமா?”

ஏய் நீ போடி. என் அம்மா எனக்கு செய்றாங்க..உனக்கு என்ன? “

இவர்களின் பேச்சை கேட்டு தாத்தா பாட்டி சேகர் சிரித்துக்கொள்ள, மதியும் கூட முறுவலித்து விட்டு உள்ளே சென்றாள். யாரும் காணா வண்ணம் ஆதியும் திவியும் தம்ஸப் காட்டிக்கொண்டு மீண்டும் அவள் மாவை பிசைந்து கொண்டே உள்ளே செல்ல, அங்கே வந்த ஈஸ்வரி மதி காபியுடன் வருவதை கண்டபின்இது என்ன கொடுமையா இருக்கு? புருஷன் கேட்காததுக்கு முன்னாடியே குடுக்கணும். அவன் கேட்டும் இந்த புள்ள இப்டி மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிட்டு போறா? ம்ம்ம். ..எல்லாம் என்ன சொல்றது முறையா கல்யாணம் பண்ணி வந்திருந்தா அவங்க வீட்லையும் சொல்லி குடுத்திருப்பாங்க. இங்க தான் அந்த கொடுப்பினை இல்லையே.. சந்திராவுக்கே பாவம் மனசு கஷ்டம். பெத்த பிள்ளை தன்னை மீறி எதுவும் செய்யமாட்டானு நினச்சவன் இப்டி பண்ணிட்டானேன்னு தான் எதுவுமே பேசாம இருக்கா. இதுல இந்த திவியும் இப்டி பண்ராளே? உன் பையன் வாழ்க்கை இப்டி ஆயிடிச்சேஎன மீண்டும் ஞாபகப்படுத்தி குத்திக்காமிக்க

ஆதிஅவ வேலையா இருக்கறதால தான் கேட்டதை செய்யல. மத்தபடி நேத்தும் அவதானே எல்லாமே பண்ணா. நானும் சும்மா வம்பிழுக்க தான் அப்டி பேசுனேன்என பேச

பாத்தியா சந்திரா, நீ சங்கடப்படக்கூடாதேன்னு தான் ஆதி அவங்களுக்குள்ள எதுவும் பிரச்சனை இல்லாத மாதிரி காட்டிக்கிது. ஆனாலும் ஆதி உன் கோபம் எங்க எல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணுதானே. அவளை நீ உன்னை ஏமாத்திட்டான்னு தானே தண்டனைக்கு இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த. அதெல்லாம் நாங்க யாரும் மறக்கல. அதனால நீ அம்மா அப்பா மனசு சங்கடப்படுதேன்னு நடிக்கவெல்லாம் வேண்டாம்.”

நான் நடிக்கறேன்னு உங்களுக்கு யாரு சொன்னது? “

என்ன ஆதி இப்டி சொல்லிட்டே, அவளை பிடிச்சு கல்யாணம் பண்ணிருந்தா கல்யாணம் ஆன அடுத்த நாளே பொண்டாட்டிய விட்டுட்டு ஆபீஸ் போவார்களா? இல்ல இரண்டாவது நாளே தலைவலின்னு வந்து நிப்பாங்களா? இதுல இருந்தே உங்க அம்மா அப்பாவுக்கு தெரியவேண்டாம், நீ இந்த வாழ்க்கையை பிடிக்காம வாழறேன்னு. கடைமைக்காக ஏத்துக்கிட்டேன்னு.”

சரி அது கிடக்கிது. நீ அவ பிடிக்காட்டி எதுவும் கேட்டு செய்யலேன்னா உங்க அம்மாவை தொந்தரவு பண்ணாத ஆதி, சந்திராவுக்கே நெறையா சங்கடம். அவளை தனியா விட்டுட்டு பாவம். உனக்கு என்ன வேணுமோ சொல்லு சோபி செய்வா.” என பேச மதியின் முகம் மீண்டும் சுருங்கி விட, ஒருவேளை அப்படி இருக்குமோ என்ற குழப்பத்துடன் டேபிளில் வைக்க மன வருத்தத்துடன் நகர, சேகரும் அங்கிருந்து எழுந்து செல்ல ஆதிக்கு அத்தையின் மீது கோபமும் வர

ஆதிஎனக்கு எதுவும் வேண்டாம். காபியும் வேண்டாம். ச்ச….” என்றவன் கோபமாக அறைக்கு செல்ல

தாத்தா பாட்டிக்கு தான் மிகுந்த கவலை. “ஏன் ஈஸ்வரி, அந்த புள்ளை வேலை இருக்கு ஒரு பத்து நிமிசத்துல தரேன்னு தான் சொன்னா. அதுவும் அவன் எழும்புற நேரத்தை விட இன்னைக்கு வெள்ளனே எந்திரிச்சதால. அதுக்கு இத்தனை குறை சொல்ற. இத்தனை நாளா இல்லைல்ல இத்தனை வருசமா நீ என் பையனுக்கு ஒரு நாளாவது சீக்கிரம் எழுந்து டீ போட்டு குடுத்திருப்பியா? ” என பாட்டி கடிந்துகொள்ள ஈஸ்வரியும் கண்டுகொள்ளாதது போல நகர்நது அறைக்கு செல்ல

ச்சாசொரணை கெட்ட ஜென்மம். ” என திட்ட

தாத்தாசரி விடு மா, அப்டித்தான்னு தெரிஞ்சதுதானே.”

பாட்டிஅதுகிலேங்க, ஏற்கனவே சந்திராவும் மாப்பிள்ளையும் புள்ளைங்க மேல கோபமா இருக்காங்க. இதுல இந்த ஈஸ்வரி வேற கலங்குண குட்டையை கொழப்பிவிட்டு போயிருக்காபுள்ளைங்களும் அவங்ககிட்ட பேச, பேசவைக்க எதனை செய்யுதுங்க. ஆனா எனக்கு வாட்ச மருமக இருக்காளே. திவியை அசிங்கப்படுத்தி, சந்திராவையும், மாப்பிள்ளையையும் சங்கடப்படுத்தி, ஆதியை கோபப்படுத்தி அனுப்பிச்சிருக்கா. ” என குறை போட்டுக்கொள்ள திவியோ ச்சஇந்த சொறி ஆண்ட்டி பிளானை இப்டி கெடுத்துவிட்டுட்டு போய்ட்டாங்களே. ஆதி வேற கோபமா போனாரே. சரி போயி பேசுவோம். ” என காபியுடன் மேலே அறைக்கு சென்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37

37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி  எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு

காதல் வரம் யாசித்தேன் – 4காதல் வரம் யாசித்தேன் – 4

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் அளித்த  தோழிகள் ஆர்த்தி, சிந்து, ஷாந்தி, சிவா, செல்வா, சுபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களது கமெண்ட்ஸ் எனக்கு பதிவைத் தொடர்ந்து  தர உற்சாகம் தந்திருக்கிறது. இனி காதல் வரம் யாசித்தேன் –

Chitrangatha – EpilogueChitrangatha – Epilogue

அன்புள்ள பங்காரம்ஸ், உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக்.  உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம். Chitrangatha – Epilogue சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா. எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே