Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 51

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 51

51- மனதை மாற்றிவிட்டாய்

ஆபீஸ் சென்ற பின் ரிசெப்ஷனிஸ்ட் மீண்டும்சார், உங்க வைப் மறுபடியும் கூப்பிட்டாங்க.”

மறுபடியுமா?” என விசாரிக்க

ஐயோ நல்லாத்தான் பேசுனாங்க…. சும்மா விளையாட்டுக்கு அப்படி சொல்லிட்டேங்கவேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி சொன்னாங்க. கொஞ்சம் கூட ஈகோ பாக்கலநமக்கு கீழ வேலை செய்றவங்கனு ட்ரீட் பண்ணல சார். அந்த விசயத்துல அப்டியே உங்கள மாதிரி. ..அண்ட் அவங்களுக்காக போன் பேசுங்கன்னு சப்போர்ட் பண்ணதுக்கு தேங்க்ஸ் சொன்னாங்க. நேம் சொல்லியே கூப்பிட சொன்னாங்கஅவங்க ரொம்ப ஸ்வீட் சார்யூ டூ சோ லக்கி சார். ” என கூற அவனும் ஆமோதித்து மகிழ்வுடன் சென்று இருக்கையில் அமர்ந்தான்.

அவன் மனதிற்குள்இது எல்லாத்துலயும் கரெக்டா தானே டி இருக்க, எப்படியும் எல்லாரோடையும் சீக்கிரம் பிரண்ட் ஆயிடுற. உனக்கு எல்லாரும் சப்போர்ட் வேற…. அப்புறம் ஏன் டி அன்னைக்கு அப்படி பேசுன? இப்போ கேட்டு என்ன பிரயோஜனம். அப்போவே அவ சொல்றேன்னாள்ல? இல்ல அதுக்கு விளையாட்டுக்கு சும்மா சொன்னேன்னு என்ன விளக்கம் குடுத்தாலும் அது பொய்னு தானே எல்லாரும் சொல்லுவாங்க…. அவளை பத்தி எல்லாரும் தப்பா நினைக்கிற அளவுக்கு ஏன் பண்ணா?” என யோசித்து பதில் கிடைக்காமல் வேலையில் மூழ்கினான்.

இரவு வீடு திரும்பிய ஆதி, திவி தாத்தா பாட்டி அம்மா அப்பா என அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, இவனை கண்ட திவி முதலில் சிரித்தவள் பின்பு ஏதோ தோன்ற முகம் சுருக்கி பார்த்துவிட்டு எழுந்து சென்றாள்.

இவளின் செயலில் புன்னகத்த ஆதி மேடம் இன்னும் காலைல சொன்னத மறக்கலையா என நினைத்து மீண்டும் அதே சீண்டலை தொடர எண்ணிணான்.

அவன் சென்று ரெப்ரஸ் ஆகி வந்தவன் தாத்தா பாட்டி அருகில் அமர்ந்தான். திவி டிபன் எடுத்துவைத்துக்கொண்டு இருந்தாள்.

இவனோ பாக்கிறேன் டி நீ எப்படி சாப்பிட கூப்பட்றேன்னுஅப்போ பேசி தானே ஆகணும் என நினைத்த்துக்கொண்டு திரும்பி இவர்களுடன் பேச அவளும் உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டு, கூப்பிடாம வரமாட்டானா என யோசிக்க அவனுக்கும் கால் வர அவன் நகர்ந்து கதவருகில் நின்று பேசிக்கொண்டிருக்க திவி நேராக பாட்டியிடம் வந்தவள்பாட்டி சாப்பிட சூடா எடுத்து வெச்சிட்டு அவரை கூப்பிடலாம்னு பாத்தா போன் பேச போய்ட்டாரு. அவரு வந்ததும் சாப்பிட வரசொல்றிங்களா ஆறிடபோகுதுஉள்ள அடுப்பில பால் இருக்கு அத ஆப் பண்ணிட்டு வந்தட்றேன். ப்ளீஸ்என

அவரும்அட இதுக்கு எதுக்கு மாநான் அவன்ட சொல்றேன். நீ போயி அடுப்ப பாருஎன்றார்.

ஆதி வந்ததும்ராஜா அவ அடுப்பில வேலையா இருக்கா எல்லா எடுத்து வெச்சிருக்கா சூடா இருக்கும்போதே சாப்பிடுய்யா. போ பசியோட இருப்ப…” எனவும் வேறு வழியின்றி அவளை திட்டிக்கொண்டே சென்று அமர்ந்தான்.

அவன் உட்கார்ந்த அடுத்த நிமிடம் அவள் ஓடி வந்து எடுத்து வைக்க அவனும் சாப்பிட்டு கொண்டேஏன் மேடம் வாய தொறந்து கூப்பிடமாட்டீங்களோ? “

ஏன் சார் கூப்பிடாம வந்து சாப்பிட மாட்டிங்களோ? உங்களுக்கே தெரியுதில்ல நான் உங்களுக்காக தான் சாப்பிட எடுத்துவெக்கறேன்னு அப்புறம் என்ன வராம? அதுவுமில்லாம எனக்கு எதுக்கு ஊர் வம்பு. நான் பேசி நீங்க டிஸ்டர்பன்ஸ்ன்னு சொல்லுவீங்க. நான் கொஞ்சம் தான் மன்னிச்சு விடுவேன். அப்புறம் டென்ஷன் ஆகிட்டா தாங்கமாட்டீங்க? எதுக்கு இவ்ளோ பிரச்சனை அதான் முன்னாடியே அமைதியா இருந்துக்கலாமேன்னு இருந்துட்டேன்.” என அவள் கூறிய விதத்தில் இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

நீ டென்ஷன் வேற ஆவியா? அத அவாய்ட் பண்ண அமைதியா இருக்க? ” என அவன் சிரித்துக்கொண்டே ஒரு மாதிரி கேட்க இவளும்ஆமாஎன்று கெத்தாக சொல்லிவிட்டு இன்னொரு தட்டை எடுத்துக்கொண்டு உணவை எடுத்துவைத்தாள்.

ஆதிசரி, நம்புறேன். அதுக்காக கோபத்துல எத்தனை தடவ சாப்பிடுவ? ஆல்ரெடி பூசணிக்கா மாதிரி இருக்க டி. இன்னுமா சாப்பிட போற புல்டவுஸர் மாதிரி ஆயிடாத….? “

இவள் முறைத்துக்கொண்டேஹலோ போதும், இந்த பூசணிக்காவ கல்யாணம் பண்ண சொல்லி நானா கேட்டேன். ஒன்னும் தின்னே உங்க சொத்தை அழுச்சிடமாட்டேன். காலைலையும் நீங்க பண்ண கலவரத்துல செஞ்சத சாப்பிடாம, இப்பவும் நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்ததுக்கு இது தேவைதான்.” என குறைபட

ஆதிஎன்ன இன்னும் நீ சாப்படலையா? என்ன நினைச்சுட்டு இருக்க நீ? ஏன் நான் வந்தா எனக்கு சாப்பிட தெரியாதா? காலைல நீ ஏன் சாப்பிடாம இருந்த? கொஞ்சம் கூட அறிவே இல்ல. எல்லாரும் உன்ன தாங்கணும்னு நினைக்கறது? செல்லம் குடுத்த அவங்க எல்லாரையும் சொல்லணும்எப்போப்பாரு உன்ன கவனிக்கறதே தான் எல்லாருக்கும் வேலையா?? ” என அவன் பொரிய

ஸ்ஸ். …. எதுக்கு இப்போ கத்துறீங்க. எல்லாரும் நம்மள பாத்துட்டு இருகாங்க….”

கண்டிப்பா அவங்களுக்கு நாம பேசறது கேக்காதுனு உனக்கே தெரியும். அவங்க ஜஸ்ட் பாக்க தான் முடியும். பேச்ச மாத்தாம பதில் சொல்லு.

கரெக்ட். ஆனா பேசுறது கேட்காட்டினாலும் உங்க முகமே காட்டிக்கொடுக்கும். எதுக்கு மூஞ்ச உர்ர்ன்னு வெச்சு இருக்கீங்க? உங்களுக்காக தான் எல்லாமே பிடிச்சதா சமைச்சா சார் கெளம்பி போயாச்சு. எனக்கு சாப்பிடவே பிடிக்கல. பசிக்கவும் இல்ல. கூப்பிட்டாலும் வரமுடியாதுனு சொல்லிட்டீங்க. அதனால கெளம்பி போய்ட்டேன். நான் காலைல சாப்பிடாம போனதுக்கு சார் கத்துரிங்கள்ள? வெச்ச ஸ்வீட் எல்லாத்தையும் காலைல ஒரே ஆளா காலி பண்ணும்போது அது தோணலையா? உங்களுக்கு பிடிச்சதே பால்கோவா மட்டும். அதுவும் கொஞ்சம் தான் சாப்பிடுவீங்கன்னு நம்பி மீதி வந்து நாம சாப்டுக்கலாம்னு பௌல் புல்லா வெச்சுட்டு போனா எல்லாத்தையும் சார் தீத்து வெச்சுஇருக்கீங்க….

உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன். இப்போவும் கூடவே நிக்கறேன். ஐட்டம்ஸ் என்ன இருக்கு. அளவ பாத்தாவது தோணவேணாம். இன்னொரு ஆள் சாப்பிடற அளவுக்கு இருக்கேனு. சரி ஒரு பேச்சுக்குக்கூட சாப்ட்டியான்னு கேக்கலை. இதுல அடுத்த ரவுண்டு சாப்பிட்டு புல்டவுஸர் ஆகுறோம்னு கமெண்ட் வேற. உண்மையை சொல்லுங்க என்னை எப்போடா குறை சொல்லி கடுப்பேத்தலாம்னு பாத்திட்டு தானே இப்போ கத்துறிங்க? மத்தபடி நான் சாப்பிடாதத பத்தி நீங்க கவலைப்படறீங்க? ” என சொல்ல அவனுக்கு தான் சங்கடமாக போய்விட்டது. “ச்ச.. எனக்காக பாத்து பாத்து செஞ்சும் அவளை ஒரு வார்த்தை சாப்பிட்டேயானு கேக்கலை. சாப்பிடுன்னும் சொல்லல. இருந்தாலும் இப்போதும் அவள் வெயிட் பண்ணிருக்கா. அதையும் கிண்டல் பண்றியே ஆதி என் தியா செல்லம் பாவம். ” என அவன் உண்மையாக வருத்தம் கொள்ளஐயோ பட்டினியா வேற காலைல இருந்திருக்கா என் செல்லம் இனிமேல் இப்படி எல்லாம் பண்ணகூடாதுனு சொல்லணும்பாசம்னாலும் இந்த அளவுக்கு எல்லாம் இருந்து உடம்ப கெடுத்துக்க கூடாது.” என எண்ணியவன் அதை அவளிடம் மிரட்டுவதை போல கூற

திவிஎன்னது பட்டினியா? . ..உங்களுக்கு அந்த ஆச இருக்கா?அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் பசிதாங்க மாட்டேன். காலைல இருந்து உங்களுக்காக செஞ்சது நீங்களே சாப்பிடாம சாப்பிட மனசு வரல. அதனால அத மட்டும் சாப்பிடாம மீதி கொஞ்சமா 2 காபி, 1 ஆப்பிள் ஜூஸ் பெரிய டம்ளர்ல, கொஞ்சம் லட்டூஸ், தென் சாக்லேட் பெரிய பார், அப்புறம் வேலை செய்ய செய்ய கொஞ்சம் ஸ்னாக்ஸ் இதெல்லாம் சாப்பிட்டேன். அதனால பசிக்கல. இப்போவும் அத்தை மாமா எல்லாம் வருத்தப்படுவாங்கனு தான் சாப்பாடு எடுத்துவெக்க அங்க இருந்தேன். தனியா சாப்பிட போர் அடிக்கும்னு தான் நீங்க வரட்டும்னு வெயிட் பண்ணேன். ” என கூற

ஆதிக்கு இவளை என்ன பண்ணலாம். நீ காலைல டிபன் சாப்பிட்டிருந்தாகூட இவளோ ஐட்டம்ஸ் வந்திருக்குமான்னு தெரில டி. இதுல ஏதோ 10 நாள் சாப்பிடாம வாடுனா மாதிரி பில்டப்பு வேற. உண்மைய சொல்லு மொததடவ சமைக்கறதால என்னை வெச்சு டெஸ்ட் பண்ணாம உனக்கு சாப்டமனசு வரலையா? ” என கேட்க

அவள் முகம் பாவமாக வைத்துக்கொண்டுஎன்ன ஆதி நீங்க, இப்டி உடனே நீங்க உண்மைய கண்டுபுடிப்பிங்கனு நினைக்கவே இல்ல.” என வருத்தத்துடன் தட்டுகளை எடுத்துக்கொண்டு எழுந்து செல்ல,

இவனுக்கு அவளின் முகபாவனை மட்டுமே முதலில் மனதில் பதிய அவளை செல்வதை பார்த்துக்கொண்டே இருக்க பிறகு தான் அவள் கூறியதின் பொருள் உணர அடிப்பாவி எவ்ளோ சீரியஸ சொல்லிட்டு போறா. நீ ரூம்க்கு வா டி உனக்கு இருக்கு என்று கை கழுவிவிட்டு அறைக்கு சென்றான்.

அறைக்கு அவள் வந்ததும்உணக்கு கொழுப்பு ஜாஸ்திடி. என காதை பிடிக்க, அப்போ அவங்களுக்காக தான் நீ வெயிட் பண்ண? உனக்கா தோணல? ” என கேட்க

அவளும் கண்சிமிட்டி அவன் கையில் இருந்து விடுபட்டுநோ ஆதி, உங்களுக்காக தான் வெயிட் பண்ணேன். ஏனோ எல்லாரும் இருந்தாலும் எனக்கு உங்ககூட சாப்பிடணும்னு தான் தோணுது.” என சீரியஸக சொல்ல இவன் சீண்ட வேணுமெனஉண்மையாவா? இல்ல சண்டை போடாம அமைதியா சாப்பிட்டா கம்மியா சாப்ட்ருவேன்னு வெயிட் பண்ணியா? ” என்றதும் அவள் முகத்தை திருப்பிக்கொண்டு நிற்க இவனுக்கு சிரிப்பு வரசரி, சாய்ங்காலம் கால் பண்ணேன். ஏன் டி எடுக்கல.”

அப்படியா? நான் வெளில போயிடு வந்தேன். மொபைலை பாக்கல. எதுக்கு கூப்பிட்டீங்க. என் ஞாபகம் வந்ததா? பேசணும்னு தோணுச்சா?” என ஆர்வமாக கேட்க அவள் கண்ணில் அது தெரிய,

வேண்டுமென்றேஅதெல்லாம் ஒண்ணுமில்ல, நானும் அம்மா அப்பக்காக தான் சும்மா கூப்பிட்டேன். கண்டுக்கவே இல்லனு நினைச்சிடக்கூடத்தில.”

அவள் முகம் சுருங்கஉண்மையாவா? வேற எதுவும் ரீசன் இல்லையா? “

ம்ம்ம். ..இருக்கு. ..வீட்ல தான் இருக்கியா இல்ல எங்கேயாவது ஓடிபோய்ட்டியானு தெரிஞ்சுக்க தான் கூப்பிட்டேன். பாத்தா மேடம் உண்மையாவே இங்க இல்ல? ” என அவன் ஒரு மாதிரியாக கேட்க

அவள் சிரித்து விட்டுபஸ்ட் சொன்னதை கூட நம்பிருப்பேன் ஆதி. ஆனா இரண்டாவது சொன்னதுல தெரிஞ்சிடிச்சு நீங்க என்னை வெறுப்பேத்த பாக்கறீங்க. அண்ட் பொய் சொல்றிங்கன்னுஉங்களுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்குனு தெரிஞ்சிடிச்சு…” என கண்ணடிக்க

அவன் ஆச்சரியமாக பார்த்துவிட்டு இருந்தும் விடாமல்எனக்கு வேற வேலை இல்ல பாரு. உங்கிட்ட எப்போ பொய் சொன்னேன்? எதுக்கு சொல்லணும் ?”

எனக்கு தெரியும். காலைல வேலை இல்லேனு சொல்லிட்டு அப்புறம் வீட்டுக்கு கூப்பிட்டதும் வேலை இருக்குனு சொன்னிங்க. ஈவினிங் என்கிட்ட பேசணும்னு கூப்பிட்டு சும்மா மத்தவங்களுக்காகன்னு சொல்றிங்க. இதெல்லாமே பொய் தான்

அண்ட் எதுக்கு பொய் சொல்லணும்னு கேட்டீங்கல்ல. ஒன்னு பிடிக்காதவங்கள அவாய்ட் பண்ண பொய் சொல்லுவாங்க, இரண்டாவது பிடிச்சவங்கள கஷ்டப்படுத்த கூடாதுன்னு பொய் சொல்லுவாங்க. மூணாவது ரொம்ப பிடிச்சவங்கள இம்ச பண்ண வம்பிழுத்து விளையாட பொய் சொல்லுவாங்க என்னை மாதிரி ….

கண்டிப்பா மொத ரீசன் இருக்காதுன்னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும். அப்போ செகண்ட் அண்ட் தேர்ட் தானே. அதுல எந்த ரீசன் சூஸ் பண்ணாலும் எனக்கு ஓகே பா. ஆனா ஆதி குட் பாய் ஆச்சே இப்போ எல்லாம் ஏன் இப்டி பொய் சொல்றாரு.? ” என சிரிப்புடன் கேட்க

அவள் கூறியதில் இருந்த உண்மையை ஒப்புக்கொண்ட ஆதி அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டுஇதுல எல்லாம் தெளிவா இரு. ஆனாலும் பெரியவங்களுக்காக தான் கூப்பிட்டேன்.” என கண்ணடிக்க இவளும் முகத்தை திரும்பி கொள்ள இவனும் அதை ரசித்துவிட்டு அவளை கை வளைவில் கொண்டு வந்துசொல்லுங்க மேடம் எங்க போனீங்க?” என சிரித்துக்கொண்டே கேட்க

இவளும் சிரித்துக்கொண்டேஎன் லவர பஸ்ட் டைம் மீட் பண்ண கோவிலுக்குஎன்றதும் அவன் கடுப்பாகினான்.

நல்ல மூட கெடுக்கவே இப்டி பேசுவியா? இப்டி வெறுப்பேத்ததா. …” என அவளும் சிரித்துவிட்டுஅப்டியெல்லாம் இல்லையே…. நீங்களும் தான் சொன்னிங்க. பெரியவங்களுக்காக தான் போன் பண்ணேன். உனக்காக எல்லாம் இல்லேனு. நான் பீல் பன்றேனா என்ன? “

அவன் அவளை விடுத்து இழுத்து மூச்சை விட்டுவிட்டுசரி, நான் உண்மைய சொல்றேன். உங்கிட்ட பேசுறதுதான் கூப்பிட்டேன். உன் ஞாபகம் வந்தது. பாக்கணும்னு தோணுச்சு. பட் வேலை உடனே கிளம்பமுடில. அதான் பேசலாம்னு கூப்பிட்டேன்.. இப்போ சொல்லு..”

அவள் மெலிதாக புன்னகைத்துக்கொண்டுநான் இப்போவும் உண்மைய தான் சொல்றேன். உங்ககிட்ட பொய் சொல்லமாட்டேன். நான் அம்மன் கோவிலுக்கு போனேன். அங்க தான் அவரை மொத தடவையா பாத்தேன். திரும்ப அவரோட அங்க சேந்து போகணும்னு ஆசையா இருக்கு…”

போதும் நிறுத்து பேசாம போ

அவரு யாருன்னு உங்ககிட்ட சொல்றேன்

தேவையில்ல…”

அவரு நீங்…”

இங்க பாரு, என்ன டென்ஷன் பண்ணாத….போய்டுனு சொல்றேன். அடிச்சுற போறேன். …”

இவளுக்கு கோபம் வரஎதுக்கு தேவையில்லாம அடிப்பீங்கநான் தப்பு பண்ணா எனக்கு வர தண்டனையை நான் ஏத்துக்கறேன். செய்யாத தப்புக்கு என்னால தண்டனை வாங்கிக்க முடியாது. சொல்ல வரத கேக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி முடிவு பண்றது நீங்க.. கொஞ்சம் கூட பொறுமையே இல்ல. இதுல இவருக்கு மட்டும் தான் டென்ஷன் வருமாம்….ஏன் எங்களுக்கு வராதா?” என்றவள் கண்களை இறுக மூடி திறந்து நான் போய் தூங்கறேன்.” என்று அவள் மெத்தைக்கு வர

இவ பேசி வெறுப்பேத்தறதும் பத்தாம என்னை வேற திட்டிருக்கா. ..என்னை டென்ஷன் பண்ணிட்டு இதுல படுக்க வேற போறாளாம்? என நினைத்தவன்ஏய், உனக்கு ஒரு ஒரு நாளும் சொல்லனுமா? இது என் பெட் படுக்காதபோயி சோபால….” என்றவன் அப்போது தான் கவனித்தான். சோபா அங்கே இல்லை. அவளை கேள்வியாய் பார்க்க

திவியும் சரிக்கு சரியாய்சோபா இழுத்து வெளில போட்டுட்டேன். அதென்ன பழக்கம் கோபம் வந்தா என் பெட் என் வீடு, இங்க வராத, தொடாத, வெளில போன்னு…. எந்த விசயத்துல கோபமோ நேரா அத கேளுங்க. அதுல அவங்களை புரியவெய்ங்க. சும்மா ஒரு பிரச்சனைய நினைச்சுட்டு எல்லாத்தையும் அதுல போட்டு கன்பியூஸ் பண்ண எனக்கு கோவம் வரும். ரூம்ல இருக்கறது 2 பேரு. அதுக்கு 1 பெட், 1 சோபா, 2 சேர்அது இருக்கறதால தானே கோவம் வந்தா போக சொல்றிங்க. எனக்கு அது பிடிக்கல. ‘இப்போதைக்கு வெளில தான் வெச்சு இருக்கேன்.. திரும்ப அது உள்ள வந்தது எல்லாத்தையும் கிழிச்சு டேமேஜ் பண்ணி வெச்சுடுவேன். நான் இங்க தான் படுப்பேன்.”

அவள் திமிராக பேச இவனும் ஏளனமாகஏன் காலைல நீ தானே சொன்ன கொஞ்ச நாள் வீட்டு வேலைக்காரியா நினைச்சுக்கோங்கன்னு….. வேலைக்காரிக்கு பெட்லையா இடம் குடுப்பாங்க..?”

இவளுக்கு கோபம் வரஅப்போ சரி, நானும் வேலைக்காரி இருந்தா எங்க படுப்பாளோ அங்க போறேன். கிட்சேனுக்கோ, இல்ல ஹால்ல ஒரு மூலைல படுத்துகிறேன். ஆனா யாராவது பாத்து கேட்ட இதே பதிலே நான் சொல்றேன். தென் அத்தை சங்கடப்படுவாங்க உங்கள தான் கேப்பாங்க.” என்று கூறிவிட்டு திரும்பியவள் மீண்டும் அவனிடம்இன்னொரு விஷயம் நைட் தூங்கும்போது சும்மா டிஸ்டர்ப் பன்னாதிங்க. எல்லா நாளும் தூக்கலக்கத்துல பேசாம சொல்றத செய்யமாட்டேன். திடிர்னு காண்டாகி கத்தினாலும் கத்திடுவேன். அப்புறம் எல்லாரும் முழுச்சு வந்து என்னனு கேப்பாங்க. நான் தூக்கலக்காதுல இருக்கும் போது என் மைண்ட்ல என்ன ஒடுதோ, மனசுல என்ன இருக்கோ அப்டியே உளறிடுவேன். நீங்க தான் என்னை அங்க போயி படுக்க சொல்றிங்கனும் சொல்லிடுவேன். தென் எல்லார்கிட்டயும் நீங்க தான் பதில் சொல்லணும். பாத்துக்கோங்கஎன அவனை முறைத்துவிட்டு வந்து மெத்தையில் தான் படுத்தாள்.

இவனும் அப்போ நேத்து நான் சொன்னதுக்காக போகலையா இவ? தூக்கக்கலக்கத்துல சண்டை போட சங்கடப்பட்டு அமைதியா போயிருக்கா…. இது தெரியாம ரொம்ப நேரம் இவளுக்காக பீல் பண்ணனே. என நினைத்தவனுக்கு இறுதியில் அவள் செய்கையில் சிரிப்பு வரபிராடுநினைச்சதை நடத்திறா…” என்றான். இருந்தும்இங்க பாரு ஓரமாவே தான் படுக்கணும்சென்டெர்க்கு வந்த தள்ளிவிட்ருவேன்….”

இங்க பாருங்க. நான் ஓரமா படுத்தா கீழ விழுந்துடுவேன். எப்போவுமே தலைகாணி சைடுல வெச்சுட்டு தான் படுப்பேன். இங்க 2 தலைகாணி தான் இருக்கு. பட் பரவால்ல நான் இன்னைக்கு விழுந்தா கூட பரவால்ல. உங்க பக்கத்துல வரமாட்டேன். என்னை மதிக்காதவங்ககிட்ட பிடிக்கலேன்னு சொல்றவங்ககிட்ட நான் போகமாட்டேன். ” என அவளும் திரும்பி படுத்துகொண்டாள்.

இருவரும் நன்றாக பேச ஆரம்பித்து எப்போதும் போல சண்டையில் முடிய ஒருவர் மற்றவரை திட்டிக்கொண்டே உறங்க சிறிது நேரத்தில் முழித்த ஆதி, அவள் ஓரத்தில் இருப்பதை கண்டவன், லைட்டா திரும்புனாலே விழுந்திடுவா போலவே…. இவளை என திட்டிக்கொண்டே அவளை நகர்த்தி நடு மெத்தையில் படுக்க வைத்துவிட்டு அவளை தன் கைகளில் படுக்கவைத்துக்கொண்டு மறுகையால் அவளது கையை பிடித்துக்கொண்டே உறங்க…. நள்ளிரவை தாண்டி முழித்த திவி தூக்கக்கலகத்தில் நெளிய இவனும் உறக்கம் களையம்ச்ச். ..ஏய் தியா என்னாச்சு டி. ஏன் நெளிஞ்சுட்டே இருக்க? “

ரொம்ப நேரம் இப்டியே படுத்திருக்கேனே. உங்களுக்கு கை வலிக்கும்ல. … நான் திரும்பி படுத்துகிறேன்நீங்க பிரியா தூங்குங்க…”

வேண்டா குட்டி. நீ ஓரத்துல படுத்தா விழுந்துடுவ. அப்புறம் தூக்கம் கலைஞ்சிடும்

எது விழுகிறதா…. அயோ வேண்டாம் நான் இங்கேயே இருக்கேன் என அவனை இன்னும் நெருங்கி கொள்ள அவனும் இவளை அனைத்துக்கொண்டே உறங்கினர்.

பக்கத்துல வந்தா தள்ளிவிட்ருவேன் என்றவன் அவளை அணைத்துக்கொண்டு கை வளைவிலும் மார்பிலும் படுக்க வைத்தும், கீழ விழுந்தாலும் பரவால்ல உங்ககிட்ட வரமாட்டேன் என கூறியவள் அவனுள் ஒன்றியும் படுத்திருக்க, இருவரும் ஏன் எதற்கு என கேள்விகளும் எழுப்பவில்லை. தன் செயலுக்கான விளக்கமும் தரவில்லை..

ஆனால் இருவரும் அறிந்தும் எதற்கும் விளக்கமின்றி, தடுக்கவுமின்றி ஒருவர் மற்றொருவரின் அருகாமையில் நிம்மதியாக உறங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 28ராணி மங்கம்மாள் – 28

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது.

கடவுள் அமைத்த மேடை (Final Update)கடவுள் அமைத்த மேடை (Final Update)

ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு ஏறக்குறைய எல்லாருமே வரவேற்பளித்திருந்திங்க நன்றி நன்றி நன்றி. ‘பானுப்ரியா கணவனின் துரோகத்தை தாங்கிக் கொண்டு அவனுடன் வாழ்வதாக முடித்திருந்தீர்களே. ஷாலி என் இப்படி’ என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். பானுப்ரியா 🙂