50- மனதை மாற்றிவிட்டாய்
அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” அவள் வாய்ஸ் சீரியசாக இருக்க இவனும் “சொல்லு என்ன ?”
“இல்லை நீங்க பிஸினா அப்புறம் சொல்றேன். காலைல சாப்பிடாமலே அவசரமா போயிட்டீங்க சோ மீட்டிங் இருக்குமேன்னு தான்” என அவள் இழுக்க
“ஆமா வந்ததுல இருந்து மீட்டிங்…. எல்லாம் இப்போதான் ஓவர்…இனி ஈவினிங் வரைக்கும் பிரீ தான்…நீ ஏன் இப்டி பேசுற? ஏதாவது ப்ரோப்லேம் ஆஹ் அங்க? “
“ஆமா நீங்க ஏன் சாப்பிடாம போனீங்க, வளராத ஜந்து எல்லாம் என்ன வந்து கலாய்ச்சிட்டு போகுதுங்க. வந்து சாப்பிட்டு போங்க. .அத்தை சங்கடப்படுவாங்க.” என அவள் நார்மலாக இல்ல அவ பார்மில் பேச இவனுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றதும் “இதுக்கு தான் கால் பண்ணியா?”
என கூறிவிட்டு கட் செய்து விட்டான். மீண்டும் மீண்டும் இதே நடக்க அவன் கொஞ்ச நேரம் சுவிட்ச் ஆப் செய்ய அவள் ஆபீஸ் நம்பர்க்கு கால் செய்ய அடுத்து ஐந்தாவது நிமிடம் ரிசெப்ஷனிஸ்ட் இவனது அறைக்கு வர இந்த பொண்ணு அனாவசியமா வராதே. என நினைத்த ஆதி “சொல்லுங்க மிஸ். ஆனந்தி என்ன விஷயம்.” அவள் “சார் ஒரு கால் வந்தது” தயங்க
“இம்போர்ட்டண்ட் கால்ன்னா கனெக்ட் பன்னிருக்கலாம். இல்ல பிஸின்னு சொல்லி வெச்சுட வேண்டியதுதானே. இங்க வந்து சொல்ற அளவுக்கான சம்திங் ப்ரோப்லேம்?”
“ஆமா எனக்கில்லை உங்களுக்கு….”
“வாட்? “
“சார் உங்க வைப்ன்னு ஒரு பொண்ணு கால் பண்ணி பேசணும்னு சொன்னாங்க உங்களுக்கு கால் பண்ணா கான்டக்ட் பண்ண முடியலையாம்.. நேம் திவ்யஸ்ரீன்னு சொன்னாங்க. ..நான் எங்க சார்க்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு சொன்னேன். அதுக்கு அவங்க ஓ அப்டினு உங்களுக்கு தெரியுமா? உங்ககிட்ட மட்டும் சொல்றேன். யார்கிட்டேயும் சொல்லாதிங்க. அவருக்கு என்னை பாத்ததும் பிடிச்சிருச்சாம். அவரு என்னை யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டாரு. அவ்ளோ லவ்…என் மேல மட்டும்….இப்போ அவர்கிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். கால் கனெக்ட் பண்ணுங்களேன் ப்ளீஸ் ன்னு சொன்னாங்க.
நான் “இங்க பாருங்க சும்மா இப்டி எங்க சார் பத்தி தப்பா ரூமெர்ஸ் கெளப்பாதிங்க. சார்க்கு தெரிஞ்சா அவ்ளோதான்.”
“சரி, அப்போ மொதல எங்க இரண்டு பேரோட போட்டோஷ நான் வெளில எடுத்திட வேண்டியதுதான். என்ன எல்லாரும் பாத்தா தி யங் பிசினஸ் மேன் mr. ஆதியோட பேமிலி லைப் பத்தி நெறைய கேள்வி வரும். ஆளாளுக்கு பேசுவாங்க. அவரு கோபப்படுவாரு. அப்புறம் ஏன் முன்னாடியே இப்டி ஒரு கால் வந்ததுன்னு எனக்கு இன்போர்ம் பண்ணாலேனு உங்கள திட்டுவரு. வேலைய விட்டு தூக்குவாரு. இல்லாட்டி அவரு நேம் வெளில இந்த மாதிரி ஸ்பிரேட் ஆச்சுன்னா அவரு லைப் காரியர்ல ஒரு பிளாக் மார்க் தான். உங்க முதலாளியோட நன்மை உங்களுக்கு முக்கியமில்லையா? இதுக்கு மேல சொல்றதும் சொல்லாததும் உங்க இஷ்டம் பா” என போனை வைத்துவிட்டாள்.
“இப்போ சார்கிட்ட சொல்லணுமா சொல்லக்கூடாதா?” ன்னு எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது சார். ஆனா என்ன பண்றதுன்னு தெரில. அதான் வந்து சொல்லிட்டேன் சார். உங்க நேம் கெட்டிட வேண்டாம்னு தான் சொல்றேன் சார். அவங்க யாரு என்னனு நீங்களே விசாரிங்க சார். என பதட்டத்துடன் அந்த பெண் நிற்பதை பார்க்க ஆதிக்கு திவியை நினைத்து சிரிப்பே வந்துவிட்டது. இந்த பொண்ணு இவ்ளோ பதறவெச்சுட்டாளே என நினைத்தவன் “சரி நான் பாத்து அவகிட்ட பேசிக்கறேன். நீங்க போங்க.”
“சார் அவங்க நம்பர் இந்தாங்க.”
“இல்ல, வேண்டாம். அவ சொன்னது உண்மைதான்,. திவ்யஸ்ரீ இஸ் மை வைப்.” என இப்போது விழிப்பது இவளது முறையாயிற்று.
“சார், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க திடீர்னு போட்டோ இதெல்லாம் வெளில விட்டுட்டா உங்க வீட்டுக்கு தெரிஞ்சுட்டா ப்ரோப்லேம் ஆய்டும்ல். அதுக்குள்ள நீங்களே அனௌன்ஸ் பண்ணிடுங்க சார். சாரி தோணுச்சு சொன்னேன்.” என தயங்க
ஆதி “ச்ச ச்ச….அதெல்லாம் இல்லை, அவ அந்தமாதிரி என் பேர் கெடுக்கற எந்த விஷயமும் பண்ணமாட்டா. ரொம்ப காரிங்..ரொம்ப ஜாலியா பேசுவா. இனபாக்ட் வீட்ல தான் இருக்கா. எல்லாருக்கும் எங்க மேரேஜ் பத்தி தெரியும். சீக்கிரம் எல்லாருக்கும் சொல்றேன். உங்ககிட்ட சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பா.. ” என அவன் கூற
அவன் இந்த மாதிரி சாதாரணமாக கூட விஷயங்களை எடுத்துக்கொண்டு சிரிப்பானா என இருந்தது. “சார், அவங்க சொன்னது உண்மைதான். அவங்க மேல உங்களுக்கு பயங்கர லவ்..அவங்கள பத்தி பேசுனாலே உங்க முகம் பிரைட்டாகுது. ஷி ஸ் சோ லக்கி. நீங்க அவங்கள லவ் பண்றீங்க. அவங்கள மட்டும்ன்னு சொல்லும் போது குரல்ல அப்படி ஒரு பெருமை, சந்தோசம். காங்கிராட்ஸ் சார். அவங்களுக்கும் சொல்லிடுங்க. மறக்காம கால் பண்ணி பேசிடுங்க சார் ” என கூறிவிட்டு செல்ல இவனுக்கு இப்போது அவளை நினைத்து சிரிப்பு மகிழ்ச்சியுமாக அவளுக்கு கால் செய்தான்.
அவளும் எடுத்ததும் “நினச்சேன் வரும்னு“
இவனும் விட்டுகுடுக்காமல் கோபமாக காட்டிக்கொள்ள “நீ பண்ற வேலைக்கு… ஏன் இப்டி எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற? அந்த பொண்ணு பயந்துட்டா… நீ அடங்கவே மாட்டியா. “
“ஓ. ..கரெக்ட் அது தப்பில்ல. சரி சாரி சொல்லிடறேன்.”
“இப்போ நீங்க சொல்லுங்க. ஏன் சாப்பிடாம போனீங்க?”
“ஏய் நானும் வேலையா தான் இருக்கேன்.”
“சும்மா, விடாதீங்க ஆதி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க தா சொன்னிங்க வேலை நோர்மல் தான்னு. அப்போவே அதனால தான் தெளிவா கேட்டுட்டு பேச ஆரம்பிச்சேன். “
அவனுக்கு “பிராடு இதெல்லாம் கரெக்டா பனிடுவா என நினைத்துக்கொண்டு “சரி இப்போ அதுக்கு என்ன? “
“வேலைக்காரி செஞ்சு வெச்சா கூட எல்லாரும் மதிக்கிறாங்க. ஆனா நீங்க உங்களுக்காக பாத்து பாத்து செஞ்சா சாப்பிடாம சொல்லாம கொள்ளாம கிளம்பிபோய்ட்டீங்க. அத்தை பாட்டி தாத்தா எல்லாரும் சங்கடப்படறாங்க. சோ வந்து சாப்பிட்டு போங்க. “
அவள் வேலைக்காரி என்று கூறியதும் காலையில் நடந்தது ஞாபகம் வர, இப்போவும் இவ மத்தவங்க வருத்தப்படுவாங்கனு தான் என்ன கூப்பிட்றா. இவளுக்கா தோணலேல்ல என நினைக்க இவனுக்கு கோபம் தலைதூக்க “எனக்கு வேண்டாம். நீ கூப்பிட்டதும் வரதுதான் என் வேலையா? யாருக்காகவும் நான் என்னை மாத்திக்க முடியாது. என்னை பத்தி நீ கவலையும் படத்தேவையில்ல. நீ உன் வேலைய மட்டும் பாரு.”
“ஓஹோ…. தென் ஓகே. உங்களுக்கே யாரை பத்தியும் கவலைப்படத்தேவைல்லேனா எனக்கு என்ன அவசியம் வந்தது. எப்படியும் உன்னால தான் எங்க புள்ள சாப்பிடாம போய்ட்டான்னு இருக்கற பிரச்னையோடே இதையும் சொல்லி என்னை திட்டத்தான் போறாங்க எல்லாரும். நான் சமைச்சும் வெச்சு கூப்பிட்டும் பாத்தாச்சு. உங்களுக்கு இன்டெரெஸ்ட் இல்ல நான் என்ன பண்ணமுடியும். என்னால அனாவசியமா திட்டு எல்லாம் வாங்க முடியாது. சோ நானும் இங்கிருந்து கிளம்புறேன். டேக் கேர்.. நீங்க ஆபீஸ் வேலைய பாருங்க பை.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள்.
ஆதிக்கு என்ன கிளம்புறாளா? மீண்டும் அழைக்க அவளது மொபைல் கட் செய்யப்பட்டது. மறுபடியும் அழைக்க சுவிட்ச் ஆப். ஐயோ பழிவாங்குறாளே… என திட்டிக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல தியா என்னை விட்டுட்டு போய்டுவாளா? என மனதுக்குள் ஒரு கவலை இருக்க பின்ன அவளும் தானே பொறுமையா சொன்னா, எல்லாரும் கவலைப்படுவாங்க வாங்கனு நீ கேட்டியா. அவளுக்கு அக்கறை இல்லாமலா காலைல இருந்து சமைச்சு வெச்சு வெயிட் பண்ணுவா. நீயும் தான் கோபத்துல என்னென்னமோ வார்த்தை சொல்ற..அப்புறம் யோசிச்சா உனக்கே தெரியும். …. அதேமாதிரி அவளும் சுயமரியாதை பாத்து சும்மா நான் இங்க சாப்பிடமாட்டேனு சொல்லிருக்கலாம்…. உனக்கும் அவளுக்கும் இன்னும் முழுசா எதுவும் சரி ஆகலனு மறந்துட்டு இப்டி ரொம்ப எதிர்பார்த்தா இப்டி தான் இருக்கறதுக்கு போய்டும் என அவன் மனம் அவனை திட்ட இவன் என்ன செய்வது என புரியாமல் வீட்டிற்கு விரைந்தான்.
வீட்டிற்குள் வேகமாக நுழைய ஹாலில் இருந்த தாத்தா பாட்டியிடம் “தியா எங்க பாட்டி.?” என விசாரிக்க அவர்கள் இவனின் பதட்டத்தை பார்த்து “என்னாச்சு பா“
“அவ வீட்ல தானே இருக்கா? எங்க போனா? “
தாத்தா “ஆபீஸ்க்கு போய் வேலைய விட்றதுக்கு சில போர்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்துட்றேன்னு கிளம்பி போயிருக்கா. ஏன் ஆதி என்னாச்சு…”
இவனுக்கு குழம்பமாக இருக்க இப்போது திவிக்கு கால் செய்ய அவளும் எடுத்தாள்.
“வீட்ல இல்லாம எங்க போன?”
“ஓ. ..வீட்டுக்கு வந்திருக்கிங்களா?”
“ஆமா நீ ஆபீஸ் போறியா? “
“ம்ம். ..போர்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வரேன் ஆதி. ..எப்படியும் லஞ்ச் டைம் ஆகும் நான் ரீச் ஆக.”
“அப்புறம் ஏன் டி என்னால அனாவிசயமா திட்டு வாங்க முடியாது கிளம்புறேன்னு சொன்ன? நீ கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு போறேன்னு சொல்றதா நினச்சு நான் வந்தா நீ விளையாடறியா? “
“ஹெலோ ஹல்லோ நான் எப்போ அப்டி சொன்னேன். ..நான் கிளம்பறேன்னு மட்டும் தான் சொன்னேன். வீட்டை விட்டு போறேன்னு எப்போ சொன்னேன்? ஆபீஸ்க்கு கிளம்பரத பத்தி தான் நான் சொன்னேன்..நேத்து கல்யாணம் இன்னைக்கு வீட்டை விட்டு போகணுமா…. ஆசைதான். அதெல்லாம் திவிகிட்ட நடக்காது.” என அவள் கூற இவனுக்குமே ஒரு நிமிடம் ரெவெய்ன்ட் செய்து பார்த்து நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோமா? இல்ல இவ நம்மள வரவைக்க இப்டி குழப்புறமாறி பேசுனாளா? ” என யோசிக்க
“ஓகே ஆதி, நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்கள்ள? அப்டியே ப்ளீஸ்சாப்பிட்டு போய்டுங்களேன்.” என அவள் அடுத்து கூறியதும் இவனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது இது இந்த வானரத்தின் வேல தான் என்று. நம்மள கேள்வியும் கேக்கவிடாம பதிலும் சொல்லாம அவ நினைச்சதை பண்ணிட்டாளே. இந்த மந்திய என்ன பண்றது. கொஞ்ச நேரத்துல டென்ஷன் ஆகிட்டா. என அதை சொல்லியும் விட்டு “உன்ன எல்லாம். … உனக்கு அந்த ஆபீஸ் பொண்ணு வேற ரெகமெண்டஷன்.மறக்காம கால் பண்ணி பேசிடுங்க சார்னு. …நீ பண்ற இம்ச இருக்கே. ….என அவள் சிரித்துக்கொண்டே போனை வைக்க இவனிடம் பாட்டி வந்து விசாரித்துடிபன் எடுத்துவைக்க இவனும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டான்.
“வீட்ல யாரும் இல்லையா பாட்டி?”
“இல்லப்பா, சந்திரா கோவிலுக்கு போயிருக்கா. ஈஸ்வரியும், சோபியும் எங்கேயோ வெளில ஷாப்பிங்ன்னு போனாங்க.”
தாத்தாவும் அருகில் உட்கார்ந்து 8 மணிக்கே இன்னைக்கு போயிட்டு 10 மணிக்கு வந்து சாப்பிட்றதுக்கு அப்போவே சாப்பிட்டு போயிருக்கலாம்ல என வினவ இவனும் இப்டி நடக்கும்னு நான் என்ன தாத்தா நினச்சேன் என்றான்.
அவனை பார்த்து சிரிக்க பாட்டி “என்ன பேசிக்கிறிங்க இரண்டுபேரும்? “
உன் பேரன் சாப்பிடாம போனதுக்கு அவன் பொண்டாட்டிகிட்ட ஏதோ வசமா மாட்டிகிட்டான்/ அவன் மூஞ்ச பாரு அதுவும் அவன் வந்த்ததும் அவளை பத்தி கேக்கும்போதே நினச்சேன் இந்த மாதிரி தான் ஏதாவது இருக்கும்னு. என அவர் சிரிக்க அவனும் உடன் சிரித்துவிட்டு “நடந்தவற்றை கூற அவர்களும் சிரித்தனர். “
பாட்டி “நீ சாப்பிடாம போனா சங்கடமா இருக்காதா ராஜா…இவ்வளவு நாள் எத்தனை வேலை இருந்தாலும் காலைல சாப்பிட்டு தான் போவ… இன்னைக்கு இல்லேன்னதும் அதுவும் சொல்லாம கிளம்புனதும் சங்கடமா போச்சு… உங்க அம்மாக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாள்ல. எந்த பிரச்சினை இருந்தாலும் நீங்க வெளில விட்டுகுடுக்காம மனசு ஒத்துப்போய் வாழ்றத தான் எங்களுக்கு நிம்மதி…. நீ என்ன நினச்சு கல்யாணம் பண்ணேன்னு தெரில…ஆனா எதுன்னாலும் திவிகிட்ட நேரா கேளு…. நீங்ககூட சண்டை போட்டு சமாதானம் ஆகுங்க.. மத்தவங்க உங்க பிரச்சினைய கிண்டல் பண்ணி பேசுற அளவுக்கு இருக்ககூடாது ராஜா.. “
“ம்ம்… புரியுது பாட்டி. இனிமேல் நானும் பாத்து இருந்துக்குறேன்… இப்படி நடக்காம பாத்துக்கிறேன்…. காலைல அவ பேசுனத கேட்டு கோபத்துல தான் அவளை திட்டிடுவேனோன்னு சொல்லாம போயிட்டேன்…அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா … ஏதாவது சொன்னாஙகளா.. ரொம்ப வருத்தப்பட்டாங்களா…?”
“ம்ம்..என் மருமகளும் அவ பொண்ணும் தான் இருக்காங்களே.. சந்திரா முன்னாடி இதபத்தி பேசி நீயேதோ கட்டாயத்துக்கு கல்யாணம் பண்ணி பிடிக்காம திவிகூட வாழ்ற மாதிரி சொல்லி உன் அம்மாவ குழப்ப ஆரம்பிச்சிட்டாங்க…ஆனா திவி மாத்தி பேசி அப்படியெல்லாம் இல்லேஙகிறமாதிரி சொன்னதும் தான் சந்திரா நிம்மதியா போனா..” என நடந்ததை கூற
“ஓ…. இனி பாத்துக்கறேன் பாட்டி… இருந்தாலும் அவ எல்லாரையும் நல்ல சமாளிக்கறா பாட்டி…” என சிரித்துக்கொண்டே கிண்டலாக சொல்ல
தாத்தா “டேய் அப்படியும் இல்லாட்டி உங்கள எல்லாம் அசைக்கமுடியாதே…. உன்னவே பதறி வரவெச்சுட்டல்ல எங்க பேத்தி.. நீயும் அவளை கொஞ்சம் பாசமா பாத்துக்கோ டா. திட்டிகிட்டே இருக்காத. …” என பேத்தியின் பெருமையுடன் அறிவுரையும் வழங்க
அவனும் உடன் சிரித்துவிட்டு “ரொம்ப பெருமைப்படாதிங்க தாத்தா, கொஞ்சம் அவளுக்கு இடம் குடுத்து பாசமா பாத்துக்கிட்டோம் ஜாலியா இருக்குனு ரொம்ப சேட்டை பண்ணுவா. முக்கியமா என்னை அவ டென்ஷன் பண்றதுக்குனே புக் போட்ருப்பா போல. அவ டார்ச்சர்ல அவ மட்டும் என் கைல கெடச்சா சரியான பாசமான ராட்சசி, இம்சராணி ….” என அவன் கூற
தாத்தா சிரித்திக்கொண்டே “உன் முகத்துல தான் கோபம் தெரியுது. அதுவும் நீ உணர்ச்சி வேகத்துல யோசிக்கிறதால ஆனா உன் வார்த்தைல ரொம்ப செல்லமா கொஞ்சுற மாதிரி தெரியுது… என்னடா பேராண்டி இப்டி குழம்பி போயிருக்க.?” என அவரும் கிண்டல் செய்ய ஆதி தன் செயலின் அர்த்தம் புரிந்து சிரித்துவிட்டான்.
இவனும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட காரில் செல்லு போதே அவனுக்கு திவியிடம் இருந்து கால் வர இவன் புன்னகையுடனே எடுத்து “சொல்லு தியா.”
“சாப்பிட்டு கிளம்பிட்டீங்களா? இப்போதான் போறீங்க. மதியம் வரமாட்டீங்கள்ல? உங்களுக்கு பிடிச்சது தான் லஞ்ச்க்கும் சமைச்சுட்டேன். பரவால்ல. சும்மா அலைய வேண்டாம். லஞ்ச்க்கு அங்க வாங்கிக்கிறிங்களா?” என அவள் கேட்க
இவனும் சிரித்துக்கொண்டே வம்பிழுக்க எண்ணி “நல்லவேளை மதியமாவது நல்லா சாபிட்றேன். பிடிச்சதுனு சொல்லி நீ பண்ணி எதுவுமே பிடிக்காம போய்டும் போல. …கூப்பிட்டு அப்போவும் தொந்தரவு பண்ணாத. ..” என
திவியும் “சும்மா டிஸ்டர்ப் பண்ணேன்னு சொல்லாதீங்க. அப்படி எல்லாம் நான் வேலை இருக்குன்னா நான் தொல்லை பண்ணமாட்டேன். முன்னாடியே அதுனால தான் பிரீயானு கேட்டுட்டு தான் பேசுனேன். அதுவும் பிடிச்சதை சமைச்சிருக்குனு தான் கூப்பிட்டேன். இப்போவும் சும்மா சும்மா அலையவிட வேண்டாம்னு தான் சொன்னேன். எப்போ பாரு என்னை குறையா சொல்லாதீங்க. பை” என அவள் சிலிப்பிக்கொண்டு போனை வைக்க
இங்கே ஆதியும் சிரித்துக்கொண்டே “என்னை டென்ஷன் பண்ணேல்ல, உனக்கு தேவைதான் இது… நல்லா காண்டாகு டி ஈவினிங் வந்து பாத்துக்கறேன்…ஸ்வீட் ராட்சசி.” என தனக்குள் கூறிக்கொண்டான்.