Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி

சுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள்.

சுதி பேசுவதை கேட்டு கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான்.

“நம்ம விஷயம் சுதிக்கு தெரியுமா?”

“தெரியும்னுதான் நானும் நினைக்கிறேன் இல்லை என்றால் என்னை இப்படி துரத்தி இருக்க மாட்டார்கள்”.

“துரத்தினார்களா?! புரியவில்லை”.

“இப்போதே சொல்ல வேண்டுமா?எனக்கு ரொம்ப பசிக்கிது லட்டு”.

பசி என்றவுடன் எழுந்தவள் “நீங்கள் குளித்து ரிப்ரெஸ் ஆகி வாருங்கள் நான் ஏதாவது செய்து வைக்கிறேன்” என்று கிட்ச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

சப்பாத்தியும் குருமாவும் அவன் வருவதற்குள் செய்தவள் சமைத்ததால் கசகசவென்று இருக்கவே குளிக்கலாம் என்று நினைத்தாள்.நகுல் வெளியில் வந்தால்தான் அந்த அறைக்குள் செல்ல முடியும் என்று காத்திருந்தாள்.நகுலன் வந்ததும் அவனை சாப்பிட சொன்னவள் தான் குளித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றாள்.

அவள் குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தவன் அவள் வந்தவுடன் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். “முதலிலேயே பசிக்கிறது என்றீர்களே சாப்பிட்டு இருக்கலாமே என்றவளை ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்.

நகுல் பிபிசி சேனல் பார்த்து கொண்டிருக்க கீதா சமையலறையை ஒதுங்க வைக்கும் வேலையை கவனித்தாள்.எல்லா வேலையும் முடித்துவிட்டு வந்தவளை நிமிர்ந்து பார்த்த நகுலன் வேலை முடிந்ததா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டினாள்.

தனக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்டி உட்கார சொன்னான்.அவள் அமர்ந்ததும் “எதுக்கு இப்படி அவசரமாக வந்தாய்” என்றான் அவளை பார்த்து கொண்டே.

“இந்த கேள்விக்கான பதிலைதான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே”.   கீது.

“என்ன பதில் சொன்னாய்” என்று பொறுமையை இழுத்து பிடித்த குரலில் கேட்டான் நகுல்.

“வந்த வேலை முடிந்துவிட்டது” என்று…. அவள் இழுத்தாள்.

“ஏன் லட்டு என்னை புரிந்து கொள்ளவேமாட்டாயா?என் காதல் உனக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல் நடிக்கிறாயா” என்று தன் காதலை அவள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆற்றாமை இருந்தது அவனது குரலில்.

“என்ன நீங்க என்னை லவ் பண்ணுணீங்களா?”ஆனா..

“ஆனா…என்ன ஆனா சொல்லு என்னென்னவோ பேசி என்னை காயபடுத்திவிட்டாய் இன்னும் என்ன சொல்லு.உன்னிடம் நான் நடந்து கொண்டதை வைத்துகூட உன்னால் என் காதலை உணர முடியவில்லையா?இல்லை எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ளும் பொறுக்கி என்று என்னை நினைத்தாயா?”என்று விரக்தியில் ஆரம்பித்து கோபத்தில் முறைத்தான்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன் அவளின் தோளை பிடித்து எழுந்து நிற்க வைத்தவன் “சொல்லுடி சொல்லு  பொறுக்கி என்று நினைத்தாயா?ஒவ்வொரு முறையும் உன் விருப்பத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நான் நடந்து கொண்டது அனைத்தும் உனக்கு ஒரு தோழன் செய்வது போலவா இருந்தது.எத்தனை தோழன் முன்பு இதுவரை நீ உன் உடையை மாற்றி இருக்கிறாய்” அவன் சொல்லி வாய் மூடும்முன் அவனை அடிக்க கை ஓங்கி இருந்தாள் கீதா.

அவளின் கையை பிடித்து தடுத்தவன். “நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன் இப்போது என்னை அடிக்க கை ஓங்குகிறாய்.சொல்வதை கேட்பதற்கே கையை ஓங்குகிறாய் என் முன்னால் மட்டும் எந்த நம்பிக்கையில் உடை மாற்றினாய். அன்றே உன்னை ஏதாவது செஞ்சிருக்கனும் உன் விருப்பத்திற்க்கு மதிப்பு அளித்து அமைதியாக இருந்ததுக்கு நல்ல பரிசு உன் பிரிவு”.

“எத்தனை நண்பர்களுடன் பழகுகிறாய் என்னுடன் பேசுவதில் கை கொடுப்பதில் உனக்கு ஏன் தயக்கம் இதற்கு பெயர் என்ன என்று யோசிக்கவே இல்லையா நீ?”என்று அவளை பிடித்து உலுக்கினான்.அவன் உளுக்கலில் தோள்பட்டை வலி எடுக்க அவனது கைகளை தட்டிவிட்டவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

“என்னை நிம்மதியாக இருக்கவிடாமல் அழ வைத்துவிட்டு நீ ஏன் இப்போது அழுகிறாய்” என்று கோபமாக கேட்டான்.

“எனக்கு தெரியும் நளன் எனக்கு தெரியும் ஆனால் இது என்னுடைய காதல் மனது தனக்கு சாதகமாக யோசிக்கிறதோ என்று பயந்தேன் நளா.உனக்கு தெரியுமா அன்று என் ஆபிஸ் பொண்ணோட திருமணத்திற்கு சென்றோமே அப்போதே நான் உங்கள் மீதான காதலை உணர்ந்து விட்டேன்.அந்த சந்தோஷத்தில் வரும் போதுதான் நீங்கள் உங்களுடைய விருப்பம்தான் உங்கள் லட்டுவோட விருப்பம் அப்படி இப்படினு சொல்லி என்னை மூட் அவுட் ஆக்குனீங்க.இதுல என்னை இறக்கிவிட்டுட்டு லட்ட பாத்துட்டு வர்றேனு போய்ட்டீங்க எனக்கு எப்படி இருக்கும் அதான் சரி நீங்களாவது உங்க காதலுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இங்கு வந்தேன்” என்று அழுகையினூடே சொல்லி முடித்தாள்.

அவள் சொல்வதை கேட்டவன் “உனக்கு பொறாமை வந்து நீயே வந்து உனக்கு வேறு காதலன் இல்லை நீதான் என் காதலன் கணவன் என்று சொல்வாய் என்று வெறுப்பேத்ததான் அப்படி செய்தேன் அதுவே எனக்கு வினையாக முடிந்துவிட்டதா?”என்று சோகமாக கேட்டான்.

 

“என்ன?என்று புரியாமல் கேட்டவளை பார்த்தவன்.அன்று அவள் முணகியது காதில் விழுந்ததையும் அவளுக்கு பனிஷ்மண்ட் கொடுக்கவே இப்படி செய்தது.அமெரிக்கா செல்ல அனைவரிடமும் பர்மிசன் கேட்ட அன்று அண்ணனிடம் புலம்பி அழுதது.அவளை பிரிய வேண்டுமே என்ற கவலையில் இரவு லேட்டாக வந்தது,ஏர்போர்ட் வந்து யாரும் அறியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தது கடைசியாக அண்ணன் அண்ணியின் செயலால் அடித்து பிடித்து பிளைட்டை பிடித்து வந்தது என்று அனைத்தையும் சொன்னவன்”.

 

“ஐ லவ் யூ லட்டு.ஐ லவ் யூ சோ மச்.நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை.உன்னை எப்போது பார்க்கில் பார்த்தேனோ அப்போது இருந்து உன்னை காதலிக்கிறேன் பிளிஸ் லட்டு நான் செய்த எல்லா தப்புக்கும் சாரி.நான் செய்தது உன்னை ஹர்ட்பண்ணி இருந்தாள் மன்னித்துவிடு.நீ எனக்கு வேணும் லட்டு”.

நகுலன் பேசுவதை ஆச்சரியமாக கேட்டு கொண்டு இருந்தவள். “அடபாவி இப்பகூட என் மேல இருக்க காதல்ல வரல உன்னோட பொண்டாட்டிய அந்த மித்ரன் தூக்கிட்டு போயிட போறான்னுதான் வந்திருக்க” என்று கோபம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்.                    அவளை நெருங்கி இடையில் கை கொடுத்து இருக்கியவன் “அதுவும் ஒரு காரணம்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“ஒரு காரணம் என்றால் அப்ப இன்னோரு காரணம்”. என்றவளை  அப்படியே தூக்கியவன் “நேற்று வீடியோ காலில் ஒரு சீன் பார்த்தேன்.அது நைட் என்னை தூங்கவிடலை அதான் நேர்ல ஒரு டைம் பாக்கலாம்னு” என்று சொல்லி கொண்டே பெட்ரூமிற்கு அவளை தூக்கி வந்திருந்தான்.            அவன் எதை சொல்கிறான் என்று நொடியில் புரிந்து கொண்ட கீது “ச்சீ….என்ன நளா இப்படி பண்ற”.

“ஹேய் நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடி. கல்யாணம் ஆகி இவ்வளவு நாளும் பார்த்து கொண்டு மட்டும்தான் இருக்கிறேன்” என்றவன் அவளை மேலிருந்து கீழாக கூர்மையாக பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் தட்டுதடுமாறி பேச ஆரம்பித்தாள்.          “நளா பிளீஸ்……. இப்படி பாக்காத என்று திரும்பி கொண்டவள் நி…நிஜமாலும் மேரேஜ் அன்னைக்கு நா டிரஸ் மாத்தும் போது பாத்துட்டியா.ஆ..ஆனா நீ திரும்பவே இல்லையே” என்று முக சிவப்புடன் தடுமாறி பேசினாள்.

கீதாவின் முக சிவப்பை ரசித்தபடி அருகில் வந்தவன் அவள் காதில் மென்மையாக “நான் திரும்பவில்லை லட்டு ஆனா”……

“ஆனா” என்று கீது படபடப்புடன் கேட்க.

 

“எனக்கு முன்னால் கண்ணாடி இருந்தது” என்றான் ரசனையாக அவளை பார்த்து கொண்டே.          ஸ்ஸ்……. என்று தலையை தட்டி கொண்டவள்.அசடு வழிய நின்றாள்.

“நானே உன்னை அப்படி பாத்துட்டு வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தா, மேடம் வந்து கூலா.ஏசி அதிகமா வைக்கவானு கேட்கற” என்றவன் அன்றைய அவனின் அவஸ்தையை அவளுக்கு உணர்த்தும் விதமாக அவள் இதழை சிறை செய்தான் முரட்டுதனமாக அவளும் விருப்பப்பட்டே அவனிடம் சரணடைந்தாள்.சிறிது நேரம் கழித்து மூச்சு காற்றுக்கு தவித்தவளை விட்டவன் அவள் இதழ் வீங்கி இருப்பதை பார்த்து சிரித்து கொண்டான்.

 

“கீது இனிமே நோ பேச்சு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணுனது எல்லாம் போதும்” என்றவன் கட்டிலில் அவளை கிடத்தி அவளின் மேல் படர்ந்தான்.

“ஹேய் லட்டு அன்னைக்கு போட்டிருந்தியே ஒரு டிரெஸ் அத போட்டு இருக்கலாம்ல அதுல செம்மயா இருந்தடி.நான் ரொம்ப கண்ரோலா இருக்கனும்னுதான் நெனச்சேன் பட் முடியல” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

திடீரென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் “உன்கிட்ட கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பிளவுஸ் கரெக்ட்டா இருக்குனா சந்தோஷபடாம அண்ணி ஏன் கிண்டல் பண்ணுனாங்க”.

“டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?என்கிட்ட முதல்லையே நீதான் டிரஸ் வாங்குனதுனு சொல்லியிருந்திருக்கலாம்ல”.

“ஏன்டி அண்ணிதான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாங்க.நான் கேட்டதுக்கு மொதல்ல பதில சொல்லு”.

“அது வந்து என்று அவள் தடுமாறி எப்பவும் எனக்கு பிளவுஸ் எடுத்தா மட்டும் சரியாவே செட்டாகாது அப்பல்லாம் சுதிய திட்டுவேன்.இதுக்குதான் நான் சேரியே கட்டல இப்ப பாரு பிளவுஸ் எவ்ளோ லூசா இருக்கு,டைட்டா இருக்குனு திட்டுவேன் திட்டிட்டு இதுதான் சாக்குனு சேரியே கட்ட மாட்டேன்.அதுக்கு அவ இப்படியே குறை சொல்லிகிட்டு இருந்தா உன்னோட ஆத்துகாரரு மட்டும்தான் கரெக்ட்டா எடுப்பாருனு கிண்டல் பண்ணுவா.நீ கரெக்ட்டா எப்படி எடுத்துட்டு வந்த”.            “அதான் நான் செக் பண்ணுணன்ல என்று கண்ணடித்து விஷமமாக சிரித்தான்”.

 

இருவரின் தேடலும் காலை வரை தொடர்ந்தது.அதன் பிறகுதான் தூங்கினார்கள்.காலையில் மித்ரன் வந்து காலிங் பெல்லை அடிக்க கீது அவசரஅவசரமாக தன் உடைகளை தேடி போட்டு கொண்டவள் யார் என்று பார்க்க மித்து நின்று கொண்டு இருந்தான்.

கீது கதவை திறந்ததும் ஹாய் டார்லிங் வேர் இஸ் ஹி?என்று கேட்டான்.

அவன் யாரை கேட்கிறான் என்று புரியாமல் கீதா முழிக்க. யுவர் ஹஸ்பண்ட் என்றான்.இந்த சின்ன வயதில் எப்படி பேசுகிறான் என்று கீதா ஆச்சரியமாக பார்க்க மித்ரன் பேசி கொண்டே இருந்தான்.

“அவரை எனக்கு பிடிக்கவே இல்லை.நீ அவருடன் சென்று விடுவாயா?நேற்று வந்தவுடன் உங்களை அழவைத்தார் போல இருக்கே” என்று மேலும் தன் விசாரணையை துவக்க.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மித்து.அவர் ரொம்ப நல்லவர்.என்னை பார்க்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார். நானும் அவரை ரொம்ப மிஸ் செய்தேன் அதான் அவரை பார்த்தவுடன் அழுதுவிட்டேன்” என்று பொறுமையாக எடுத்து சொன்னாள்.

“ஓகே என் டார்லிங்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் அம்மா இன்னைக்கு உங்களுக்கு லீவ் சொல்றதா சொல்லிட்டு வர சொன்னாங்க.நைட் டின்னர் அங்க வர சொன்னாங்க பாய் டார்லிங் நான் ஈவினிங் வர்றேன்” என்று படபடவென்று பேசிவிட்டு சென்று விட்டான்.

“அப்பா.இந்த சின்ன வயசுல என்னமா நோட் பண்றான்” என்று யோசித்து கொண்டு வந்தவள் நகுல் கதவிற்கு அருகில் நின்று கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் வெட்கத்தில் முகம் சிவக்க என்னவென்று கேட்டாள்.

அவளின் வெட்கத்தை ரசித்தாலும் அவளை வம்பிழுக்க எண்ணி ஏன்டி எல்லாரையும் இப்படி மயக்கி வச்சர்ரியே என்ன பொடி அது எங்க எனக்கு கொஞ்சம் காட்டு நானும் பாக்கறேன். என்ன பொடி நளா… ஒன்றும் புரியாமல் கேட்டவளை நெருங்கியவன் ம்ம்…சொக்கு பொடி.வந்து ஒரு வாரத்தில் இவன் என்ன உனக்கு பாடி கார்டா மாறிட்டான்.நேத்து நைட் கூட ஏதோ வில்லனிடம் ஹீரோயினை விட்டுட்டு போறமாதிரி எப்படி என்னை முறைத்தான் தெரியுமா? எப்படிதான் உனக்குனு இப்படி பிரண்டு வந்து மாட்றாங்களோ தெரியல என்று சலித்து கொண்டான்.

போங்க நளா.அவன் நல்ல பையன் இந்த ஒரு வாரமும் உங்களை எல்லாம் பிரிந்த கவலை தெரியாமல் என்னுடனே இருந்து என் பொழுதை சந்தோஷமாக மாற்றினான்.இவனை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அபி நியாபகம்தான் வரும் என்று நெகிழந்து போய் கூறியவளை பார்த்தவன்.அச்சசோ என்று வேண்டுமென்றே கத்தினான்.

என்ன நளா?என்ன ஆச்சு?என்று பதறி அருகில் வந்தவளை கைகளில் தூக்கியவன்.நீ அபினு சொன்ன பிறகுதான் எனக்கு நியாபகம் வந்தது என் அண்ணன் சொன்ன அட்வைஸ் என்று விஷம்மாக கூறினான்.

என்ன அட்வைஸ் நளா.         கீதா.

 

அன்னைக்கு வள்ளி அத்தை வீட்டுக்கு நீங்க எல்லாரும் போன அன்று நம் அறையில் உன்னை காணவில்லை என்று அபியுடன் இருக்கிறாயா என்று பார்க்க வந்தேன் அப்போது என்னை பார்த்த அண்ணா நீங்களும் சீக்கிரம் குழந்தை பெற்று கொள்ளுங்கள் அபி மீது இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறினார் என்றவன்.கணவனாக இரவு அவன் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.அவளும் சிணுங்கி கொண்டே அவனுக்கு வளைந்து கொடுத்தாள்.

மாலை இருவரும் மித்து வீட்டிற்கு செல்ல லாரா அவர்களை வரவேற்று டின்னர் ரெடி செய்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.நகுல் வந்து இரண்டு வாரம் ஆன நிலையில் சென்னையில் இருக்கும் கம்பெனியில் பிரச்சனை என்றும் அவன் வந்தால்தான் சரி செய்ய முடியும் என்ற நிலையில் மனமே இல்லாமல் இந்தியா கிளம்பினான் நகுலன். இப்போதுதான் வந்ததால் உடனே இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கீதா ஆபிஸில் சொல்லவும்,அவளது விருப்பத்திற்காகவும் டைம் கிடைக்கும் போது இங்கு வருவதாக சொல்லி சென்றான் நகுலன்.

இப்படியே நாட்கள் மாதங்களாக கீதா கருவுற்றாள்.ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள முடியாதபடி அமெரிக்காவில் இருப்பதால் ஆளாளுக்கு மாற்றி மாற்றி வந்து அவளை பார்த்து கொண்டனர்.பத்தாவது மாதம் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் கீதா.      வீட்டின் முதல் பெண் குழந்தை என்று அனைவரும் மகிழ்ந்தனர்.இதற்கிடையே கீதாவின் குடும்பத்துடன் நன்கு பழகிவிட்ட மித்ரன் கீதாவின் மகளை ஏஞ்சல் என்று அழைத்து பேசுவான்.        கீதாவின் மகள் பெயர் வைக்கும் விழாவிற்கு அவர்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.அந்த விழாவிற்கு வந்த மித்ரனுக்கு அனைத்தும் புதிதாக இருந்தது.

 

கீதாவை நெருங்கி ஆச்சரியமாக இதை கேட்டவன் திடிரென்று “கீது டார்லிங் இந்த குட்டி ஏஞ்சல நான் மேரேஜ் பண்ணிகிட்டனா எங்க வீட்லயும் இதே மாதிரி நிறைய பேர் வருவாங்களா” என்று கேட்க அவனின் பேச்சை கேட்டு அங்கிருந்த அனைவரும் வெளிநாட்டில் இருந்தாலும் சொந்தத்திற்காக பாசத்திற்காகவும் ஏங்கும் மித்ரனை பார்த்து ஆச்சரியமாகவும் அவனது பேச்சில் அதிர்ச்சியாகவும் பார்த்தனர் இந்த வயதில் எப்படி யோசிக்கிறான் என்று.அங்கிருந்த அனைவருக்கும் மித்ரனை பிடித்து போனது.

“கீது வேலைக்குனு வந்துட்டு ஒண்ணோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்ட போல” என்று கிண்டல் செய்தால் சுதி. ஆறு மாத கருவுடன் சற்றே மேடிட்ட வயிற்றுடன் சந்தோஷமாக தன்னை பார்த்து சிரிக்கும் தன் தோழியை பார்த்த கீதாவிற்கு நிறைவாக இருந்தது.அங்கு எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது.அவர்களின் சிரிப்பை புரியாமல் பார்த்த மித்து.

“என்ன டார்லிங் நீங்க ஒண்ணுமே சொல்லல” என்று சோகமாக கேட்டான்.

நகுலையும்,மித்ரனையும் சேர்த்து வைக்க இதுதான் சமயம் என்று உணர்ந்த கீதா.

“எனக்கு ஓகே நீ போய் உன்னோட ஏஞ்சலோட அப்பாகிட்ட கேளு”.

“வ்வாட்……அவர்கிட்டயா”….

 

நகுலுக்கும் மித்ரனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தமாகதான் இன்னும் சென்று கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் முகத்தை திருப்பி கொள்வர்.அதனால்தான் கீதா இப்படி ஒரு ஐடியா செய்து இருவரையும் சேர்த்து வைக்க நினைத்தாள்.

 

தயங்கி தயங்கி கீதாவை பார்த்து கொண்டே சென்ற மித்ரன் நகுலிடம் வந்து நின்றான்.பேசு என்று கீதா சைகை செய்ய மித்து நகுலை பார்த்து “ஹல்லோ நளா அங்கிள் எனக்கு இந்த குட்டி ஏஞ்சலை மேரேஜ்பண்ணி தர்றீங்களா” என்று கேட்டான்.அவன் என்ன பேச போகிறான் என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த நகுலனுக்கும் அங்கு அனைவருக்கும் கூல் டிரிங்ஸ் கொடுத்து கொண்டு இருந்த லாராவுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

 

லாரா மகனை கண்டிக்க எண்ணி கோபமாக “மித்து” என்று அழைக்க.நகுலன் சிரித்து கொண்டே “என்ன லாரா மேடம் எதுக்கு மித்துவ மிரட்டுறீங்க ஏன் எங்க குட்டி ஏஞ்சல் உங்க வீட்டுக்கு வர்ரது உங்களுக்கு விருப்பம் இல்லையா” என்று கேட்டு அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தான்.

 

மித்துவை பார்த்து முறைத்த நகுலன் “உனக்கு எங்க ஏஞ்சல மேரேஜ் பண்ணுக்கனுமா?ஏன்?”           கீதாவிடம் சொன்னதை நகுலிடம் மித்து திரும்ப சொல்ல. இந்தியாவின் மீதும் அவர்களின் பாச பிணைப்பைபற்றியும் சொல்லி வளர்த்திருந்த லாரா மீது அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல மதிப்பு தோன்றியது.

“உனக்கு இந்த குட்டி பொண்ணு வேணும்னா நா சொல்றத நீ செய்யணும்”.    நகுல்.

“வாட்? ஐ கேன் டூ எனிதிங்”.      மித்ரன்.

“இனிமே நீ கீதுவ டார்லிங்னு கூப்பிட கூடாது.ஓகேவா”…  நகுல்.

“நோ.”.என்று சொன்னவன் நகுல் அவனகு குழந்தையை கை காட்டி சுட்டி காட்டியதும் முகம் சின்னதாக “ஓகே” என்றான்.

“இரண்டாவது நீ படித்து பெரிய டாக்டராக ஆக வேண்டும் என் அண்ணன் போல்.அப்பதான் நாங்க எங்க குட்டி ஏஞ்சல உனக்கு மேரேஜ் பண்ணி குடுப்போம்” என்று கூறி அவனது எதிர் கால லட்ச்சியத்தை நகுலன் தீர்மானித்து கொடுத்தான்.

“ஓ.கே. டன்.கண்டிப்பா நான் அஜூ அங்கிளவிட பெரிய டாக்டர் ஆவேன்” என்று சொல்லி கீதாவிடம் சென்றவன்.

டா…..டார்லிங் என்று சொல்ல வந்தவன் “கிது நான் பெரிசாகி அஜூ அங்கிள விட பெரிய டாக்டர் ஆவேன்.அப்போதுதான் இந்த ஏஞ்சலை நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமாம்.சோ ஐ ஆம் பிகம் குட் டாக்டர்” என்று சொல்லி சிரித்தான்.

சுதி,கீதா இருவரும் தங்கள் கணவர்களை ஆச்சரியமாக பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் சட்டையின் காலரை தூக்கிவிட்டு குறும்பாக கண்ணடித்தனர்.பல சோதனைகளை கடந்து ஒன்றிணைந்த இந்த இரு ஜோடிகளும் தங்கள் காதலை உணர்ந்து மகிழ்ச்சியில் முகம் விகசிக்க சிரித்து கொண்டனர்.இவர்களின் குடும்பம் இணைந்து தன் குடும்பத்திற்கு புதிதாக வந்த குட்டி தேவதைக்கு “அரிஷ்மா” என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

 

இன்று போல் என்றும் இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்று வாழ்த்தி நாம் விடை பெறுவோம்.

 

 

 

முற்றும்

4 thoughts on “சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி”

  1. அக்கா மித்ரன் நல்ல கேரக்டர் அவனை மிஸ் பண்ணுவேன் அடுத்த கதையா மித்ரன் அரிஷ்மா வச்சு இந்த கதையோட தொடர்ச்சியா எழுதுங்க அக்கா ப்ளீஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 16சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 16

“என்ன காரியம் பண்ணிட்டடா.வெண்ணெய் திறண்டு வரும் போது தாழி உடைந்த கதையாய்.இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தாள் அவளே மாறி இருப்பாள்.இப்போதே அவளிடம் மாற்றம் வந்து கொண்டுதானே இருந்தது”. “புடவையே கட்ட தெரியாது என்றவள் நான் சொன்னதற்காக வாரம் இரண்டு நாட்கள் அவளாகவே

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15

சோர்ந்த நடையில் உள்ளே வந்த தோழியை பார்த்த சுவாதி “என்னடி என்னாச்சு?ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா?”என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க. தோழி தன்னை எளிதாக கண்டு கொள்வாள் இவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவுதான் என்று நினைத்து