Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20

மெரிக்காவில் நகுலனின் மெயிலை பார்த்த கீதாவிற்கு முதலில் போனை கட்பண்ணியதற்கு கோபம் இருந்தாலும் நாளை வீடியோ கால் வருவதாக சொல்லவும் காதல் கொண்ட நெஞ்சம் மகிழ்ந்துதான் போனது.அந்த மகிழ்ச்சியுடனே அவளும் படுத்து கொண்டாள்.            அடுத்த நாள் ஆபிஸ்க்கு சென்ற கீதா வேலையில் மூழ்கி போனாள்.மாலை மித்ரனின் நினைவும் நளனின் நினைவும் வரவே வீட்டிற்கு லாராவுடன் கிளம்பும் போது ஐஸ் கீரீம் வாங்கி லாராவிடம் கொடுத்தனுப்பினாள். “தனக்கு இன்று முக்கியமான வேலை இருப்பதால் மித்ரனிடம் மறக்காமல் கொடுக்க சொன்னாள்”.அவளும் சிரிப்பினுடே வாங்கி கொண்டாள்.

வேக வேகமாக வீட்டிற்கு வந்த கீதா முதலில் எதுவும் கால் வந்திருக்கிறதா என்று தன் லேப்டாப்பை செக் செய்துவிட்டுதான் முகம் கழுவி வேறு ஆடைக்கு மாறினாள்.தனக்காக காபி செய்து குடித்து கொண்டே எப்போது போன்பண்ணுவான் என்று காத்து கொண்டு இருந்தாள்.        அதிகநேரம் அவளை காக்க வைக்காமல் வீடியோ காலில் வந்தான் நகுலன்.அவனுடன் பேசி கொண்டு இருந்தவள் ஆபிஸிலும் உட்கார்ந்து கொண்டே இருந்தது முதுகு வலியை ஏற்படுத்த பெட்டில் வைத்துவிட்டு படுத்து கொண்டு பேசினாள்.அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டு இருந்தவன் பேச்சை நிறுத்தவும் “என்னாச்சு நகுலன் என்று கேட்க கண்ணை இருக மூடி திறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசு” என்றான்.

“முடியாது எனக்கு முதுகு வலிக்கிது.ஏன் துறையிடம் மரியாதையாக உட்கார்ந்துதான் பேசனுமோ?”

“சொன்னா எதுவுமே கேட்கமாட்டியாடி?எழுந்து உட்காருடி” என்றான் கோபமாக.

இவன் எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு கோபப்படறான் என்று வீடியோவில் தான் இருந்த இடத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்.லோ நெக் டீ சர்ட் போட்டு கொண்டு இப்படி படுத்து கொண்டு இவனுடன் வம்பலந்து கொண்டு இருந்திருக்கிறோமே என்று முகம் சிவந்தவள் அதற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் வெட்கம் தடை போட “மித்ரன் வெயிட்பண்ணுவான் பாய். நாளை பேசுகிறேன்” என்று நகுலன் பேச இடம் தராமல் லேப்டாப்பை வேகமாக மூடியவள்.தன்னையே தலையில் அடித்து கொண்டாள்.

“லூசு,லூசு என்னபண்ணி வச்சிருக்க அவன் உன்னபத்தி என்ன நினைப்பான்.ச்ச..இந்த டி சர்ட்ட போட்டிருக்கவே கூடாது இனி எப்படி அவன் முகத்தை பார்ப்பது” என்று புலம்பி கொண்டு இருந்த அதே நேரம் இங்கு நகுலன் கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தான்.                              “மித்ரன் காத்திருப்பானாம் அதனால மேடம் அப்பறம் பேசறாங்களாம்.இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன் என்னைவிட நேத்து பழகுன அவன்தான் முக்கியமா போய்ட்டானா.இத இப்படியே விட முடியாது ஏதாவது பண்ணனும்” என்று தனக்குள் பேசி கொண்டு கூண்டு புலியாக அறையை அளந்து கொண்டு இருந்தான்.

அன்று இரவே சுதி கீதாவிற்கு போன் செய்து பேசியதில் அவளும் மித்ரனைபற்றி பேசியதில்தான் நகுலன் கடுப்பானான் என்பதை கண்டு கொண்டவள்.அவனுக்கு ஷாக் டிரீட்மண்ட் கொடுக்க நினைத்தாள்.அதன்படி அஜூவிடம் நான் நகுலனிடம் பேசி முடித்தவுடன் அமெரிக்க டிக்கெட்டை கேன்சல்பண்ண வேண்டும் என்று தயார்படுத்திவிட்டு நகுலன் வந்ததும் அஜூவுக்கு கண் ஜாடை காட்டிவிட்டு பேச ஆரம்பித்தாள்.

“இந்த கீதாவிற்கு எவ்வளவு தைரியம் பாருங்க அஜூ. மித்ரன் கூட வெளிய எங்கயோ வர்ரேனு சொல்லியிருக்கா.பாவம் அவளால போகமுடியல போல அதுக்கு இந்த மித்ரன் நாளைக்கு உன் வீட்லதான் தங்க போறேன் என்கூட வராததுக்கு அதுதான் உனக்கு பனிஷ்மண்ட்டுனு சொல்லிட்டானாம் இவளும் ஓ.கே சொல்லிட்டாளாம்.எனக்கு என்னமோ சரியாவே படல.இவ ஈசியா எல்லாரையும் நம்பிடுவா.அதுதான் எனக்கு கவலையா இருக்கு” என்று போலியாக பெரு மூச்சு விட்டாள்.ஓரகண்ணால் நகுலனை பார்த்து கொண்டே.

சுதியின் பேச்சை கேட்ட நகுலன் வேகமாக தன் அறைக்கு வந்தவன்.அப்போதே “அமெரிக்காவிற்கு பிளைட் டிக்கெட் இருக்கிறதா என்று டிராவல் ஏஜென்ஸிக்கு போன் செய்து கேட்டான்”.

அவனது நல்ல நேரமாக அஜூ அப்போதுதான் டிக்கெட்டை கேன்சல் செய்ததால்.அந்த ஏஜெண்ட் “ஒரு டிக்கெட் இருக்கிறது சார் கடைசி நேரத்தில் கேன்சல் செய்துவிட்டார்கள்.ஆனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் பிளைட் சீக்கிரம் வந்துவிடுங்கள்.எங்கள் ஏஜெண்ட் ஆட்கள் டிக்கெட்டுடன் ஏர்போர்ட்டில் உங்களுக்காக காத்திருப்பார்கள்” என்று கூறி இணைப்பை  துண்டித்தனர்.

வேக வேகமாக உடைகளை அள்ளி தன்னுடைய டிராவல் பேக்கினுள் திணித்தவன்.ஏர்போர்ட் நோக்கி வேகமாக சென்றான்.

“அடிப்பாவி ஏன்டி இப்புடி என் தம்பிய இரவோடு இரவாக நாடு கடத்துற?எவ்ளோ ஈகோ பாக்கறவன் இன்னைக்கு தலை தெறிக்க ஓடறான்”.            அஜூ.

உதட்டில் ஒரு மந்தகாச சிரிப்புடன். “காதல்னா சும்மா இல்ல பாஸ்.ஈசியா கெடச்சுட்டா அதோட மதிப்பு தெரியாது.அவங்க ரெண்டு பேருக்கும் எல்லாமே ஈசியா கெடச்சதாலதான் இப்புடி ஈகோ பாத்துக்கிட்டு யார் பர்ஸ்டு சொல்றதுனு இருக்காங்க”.

“நம்ம காதல் கையவிட்டு போயிடுமோங்கற பயம் வரும் போது தானா மனம்விட்டு பேசுவாங்க.இவர கெளப்பியாச்சு அடுத்து அந்த கீது எருமைய பயமுறத்துவோம் அப்பதான் அளுக்கும் காதல்னா அவ்ளோ ஈசி இல்லனு புரியும்” என்றாள்.

“இப்பதான் அவன் தெறிச்சு ஓடறான் அடுத்து உன்னோட பிரண்டா,நடத்து,நடத்து”.

“சும்மா என்னோட மூஞ்சியவே பாக்காமா போய் அந்த போன எடுத்துட்டு வாங்க”.

“நேரம் டி எல்லாம்.ஒரு பேமசான ஹார்ட் சர்ஜன ரூம் பாய் மாதிரி வேலை வாங்கற.இதுக்கு எல்லாம் வட்டியும் முதலுமா வசூலிப்பேன் பாத்துக்க” என்று புலம்பினாலும் போனை எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்தான்.

“கணவனின் பேச்சில் முகம் சிவந்தாலும் பேச்சை மாற்றும் விதமாக ஸ்ஸ்ஸ்….பேசாம இருங்க         போன் ரிங்காகுது”.

அந்த பக்கம் கீது எடுத்ததும் சுதி பதட்டமாக பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ கீது நான் பேசறது கேட்குதா?”

“ஹேய் சுதி கேட்குது சொல்லுடி. ஏன்டி பதட்டமா இருக்க அம்மா அப்பா எல்லாரும் நல்லாதானே இருக்காங்க”.

“ம்ப்ச்…..அவங்க நல்லா இருக்காங்க இந்த நகுலன்தான் எங்க இருக்காருனே தெரியல.திடீர்னு கோபமா வண்டிய எடுத்துகிட்டு வேகமா போனாரு எங்க போறாரு என்னனு ஒண்ணும் சொல்லல. அவருக்கு போன் போட்டாலும் சுவிட்ச் ஆப்னு வருது.உன்கிட்ட பேசுனாறா.ஏதாவது சொன்னாரானு கேட்கதான் போன் பண்ணேன்”.

“ஹலோ…ஹலோ……கீது இருக்கியா என்ற சுதியின் குரல் கீதாவின் காதில் விழவே இல்லை”.சுதியே கீதாவின் நிலையை உணர்ந்து கட்டாகிடுச்சு போல என்று கீதாவின் காதுபட சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

சுதி பேசி முடிக்கும் வரை ஆ….வென்று அவளையே பார்த்து கொண்டிருந்த கணவனை பார்த்த சுதி என்ன என்று கேட்க.

“அஜூவோ கையை தலைக்கு மேல் தூக்கி அம்மா தாயே நான் ஏதாவது தப்பு பண்ணுனா நேரா என்கிட்டவே சொல்லிடு ஷாக் டிரீட்மண்ட்னு எனக்கும் இப்படி ஹார்ட் அட்டாக் வர வச்சிராத.எனக்கு இருக்கறதே சின்ன ஹார்ட் அதுல என் பையனும் மனைவியும் பத்திரமா வச்சிருக்கேன்.நீ கண்டதையும் சொல்லி அங்கு ஏதாவது பிரச்சன வர வச்சிராத.என்ன நடிப்புடா சாமி இந்நேரம் கீதுவுக்கு என்ன ஆச்சோ தெரியல”..

“அது எல்லாம் ஒண்ணும் ஆகாது அவளபத்தி எனக்கு நல்ல தெரியும் இப்ப அவ நகுலன நெனச்சு அழுதுகிட்டு இருப்பா. அவருக்கு போனுக்கு ட்ரை பண்ணுவா”.

“நகுலனுக்கு கீதா போன் பண்ணுனா தெரிஞ்சுருமே”….அஜூ.

“ஹய்யோ அஜூ ஏன் நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க. பிளைட் ஒன் ஹவர்லனு நாம புக் பண்ணி வச்சிருந்து கரெக்டா கடைசி டைம்ல கேன்சல் பண்ணுனோம்ல அந்த டிக்கெட்லதான் இப்ப உங்க தம்பி அமெரிக்கா போறாரு சோ இந்நேரம் பிளைட்ல உங்க தம்பி செல்ல சுவிட்ச் ஆப் பண்ணி இருப்பாரு”.

“ஆமால பதட்டத்துல மறந்துட்டேன்” என்று வழிந்தான்.

“சரி சரி வாங்க நாம போகலாம் அபி எழுந்துக்குவான்.இனிமே அவங்களாவே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்” என்று எழுந்து கொண்டவள் தங்கள் அறை நோக்கி மகிழ்ச்சியாக நடந்தாள். பின்னே தோழியின் வாழ்விற்காக தன் வாழ்வையே கேள்வி குறி ஆக்கி கொண்டவளின் வாழ்வை சரி செய்துவிட்டாளே அந்த சந்தோஷம் அவள் முகத்துக்கு தன் அழகை கொடுத்தது.

அமெரிக்காவில் சுதி பேசியதில் இருந்து உலகம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியது போல் போனையே வெறித்து கொண்டு கண்ணில் வடிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் அருகில் இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள் எவ்வளவு நேரம் அப்படி இருந்தாலோ.காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் மீண்டவள் போனை அதன் இடத்தில் வைத்துவிட்டு அழுது கொண்டே கதவை திறந்தவள் முதலில் அதிர்ந்து பெரிய கேவலுடன் “நளா”….. என்று அவன் மார்பில் சாய்ந்து அழ துவங்கினாள்.

சுதியின் பேச்சை கேட்டு கோபமாக வந்தவன் கீதா தன் மீதே சாய்ந்து அழவும் என்ன வென்று விசாரிக்க, அவனுக்கு பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.அப்போது வீட்டின் உள் இருந்து போன் அடித்தது.

“லட்டு என்ன ஆச்சு?எதுக்கு இப்படி அழற?சரி வா உள்ள போலாம்.போன் அடிக்கிது.யாருனு பாக்கலாம் வா”.என்று உள்ளே அழைத்து சென்றவன் கீதா போன் பேசும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தவன் தானே போனை எடுத்தான்.

போன் செய்தது மித்ரன்தான். “ஹலோ டார்லிங் வேர் ஆர் யூ?என்ற மழலை குரலை கேட்டு அதிர்ந்தான் நகுல் “.என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் நின்ற சில நிமிடங்களில் “ஹலோ ஹலோ” என்று பலமுறை கத்தியவன் பதில் இல்லை என்னவும் தன் தாயை அழைத்து கொண்டு கீதா வீட்டிற்கு வந்துவிட்டான்.

கீதா இன்னும் நிலைமை உணர்ந்து கொள்ள முடியாமல் அழுது கொண்டே இருக்க. “மித்ரன் மித்ரன்னு வெறுப்பேத்துனாங்க வாய்ஸ் கேட்டா குழந்தை மாதிரி இருக்கே” என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே வந்துவிட்டான் மித்ரன்.

“ஹேய் யார் மேன் நீ?எப்படி நீ உள்ளே வந்தாய்?கீது டார்லிங் ஏன் அழுகிறாய்” என்ற மித்ரனின் கேள்வியில் தன்னிலை உணர்ந்தவள் அங்கு மித்ரனையும் லாராவையும் பார்த்து ஆச்சரியமாகி “நீங்கள் எப்போது வந்தீர்கள்” என்று கேட்க.

லாரா நகுலனையே ஆராய்ச்சியாக பார்ப்பதை உணர்ந்து இருவருக்கும் அறிமுகபடுத்தினாள்.

“நகுலன் இது லாரா என்னோட கொலிக் அண்ட் பெஸ்ட் பிரண்ட்.இது அவங்க பையன் மித்ரன் நான் போன்ல சொன்னன்ல அந்த வாலு”.

லாராவிடம் திரும்பியவள் லாரா இது என்று ஒரு நிமிடம் தடுமாறி “எனது நண்பர் நகுல்” என்று சொன்னவளை பார்வையால் எரித்தான் நகுல்.

லாரா நட்பாக கை கொடுக்க இவனும் “ஹாய்” என்று கை கொடுத்தவன். “நான் இவளின் பிரண்டு மட்டும் இல்லை கணவனும்கூட” என்று அழுத்தமாக கீதாவை பார்த்து கொண்டே சொன்னான்.

நகுல் சொல்வதை கேட்ட லாரா.

“வாவ் நண்பனே கணவனாக கிடைத்தாள் லக்கிதான்.ஓகே நீங்க பேசி கொண்டு இருங்கள் நாங்கள் பிறகு வருகிறோம்.மித்து போன் பண்ணிய போது நீ பேசவே இல்லை.ஆபிஸ்க்கும் வரவில்லை ஒரு தகவலும் ஆபிஸ்கும் அனுப்பவில்லை அதுதான்  என்னவாயிற்று என்று பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்” என்று என்னை இழுத்து வந்துவிட்டான்.

“ஓகே சார் டேக் ரெஸ்ட்” என்று வெளியே செல்ல திரும்பினாள்.மித்ரன் மட்டும் வராமல் கீதாவையே பார்த்து கொண்டு இருந்தான்.

“மித்து வா போகலாம்”.   லாரா.

“ஒன் மினிட் மாம்”. “கீத்துதுதுதுது….டார்லிங் ஆர் யூ ஆல் ரைட்?”

“டேய் பொடியா உனக்கே இது ஓவரா தெரில.என்னோட பொண்டாட்டிய நானே இத்தன டைம் டார்லிங்னு சொல்லி இருக்க மாட்டேன்.நீ இத்தன தடவ சொல்றதோட இல்லாம என்னமோ வில்லன்கிட்ட இவள விட்டுட்டு போற மாதிரி என்னமா சீன் போடுற போடா” என்று நகுல் தனக்குள் பேசி கொண்டு வெளியே அவனை முறைத்து கொண்டு இருந்தான்.

மித்துவின் குரலில் இருந்த கவலையை உணர்ந்து கொண்டவள் போல். “நோ மித்து ஆம் ஆல் ரைட் நீ போய் தூங்கு காலைல மீட் பண்ணலாம்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவள் வீட்டுக்குள் வரும் போது வாய்ஸ் மெசேஜ் வந்திருப்பதாக தொலை பேசி அழைக்க பிறகு பாத்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

வீட்டின் உள்ளே வந்து கதவை சாத்தியவள் “என்ன நகுலன் திடீர்னு வந்துருக்கீங்க” என்று ஒன்றும் அறியாதவள் போல் கேட்டாள்.

அவள் அழுத பொழுது அவன் லட்டு என்று அழைத்ததை கவனிக்காததாலும்,இன்னும் லட்டு யார் என்று தெரியாததாலும் தான் லாராவிடம் என்ன வென்று அறிமுக படுத்துவது என்று தடுமாறினாள் பின் ஒரு வழியாக சமாளித்து நண்பன் என்றால் அவன் கணவன் என்கிறான்.இப்போது எதற்கு இங்கு வந்தான்.ஏன் லாராவிடம் அப்படி சொன்னான் என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்தவன்.

“என்ன பலமான யோசனை?”                     நகுல்.

“நேற்றுதான் பேசினோம்.அப்போது கூட நீங்கள் வருவதாக சொல்லவில்லை.திடிரென்று சுதி போன் பண்ணி என்னை பய முறுத்திவிட்டாள்.பிறகு பார்த்தாள் நீங்கள் இங்கு வந்து நிற்கிறீர்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.சரி அதை விடுங்கள் உங்கள் லட்டு எப்படி இருக்கிறாள்”.

“அண்ணி பய முறுத்தினார்களா?என்ன சொன்னார்கள்”.

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் சுதி சொன்னதை சொன்னவள்.அதனால் அவள் தன்னையும் மறந்து ஒரு நாள் முழுவதும் இங்கயே அமர்ந்திருந்திருக்கிறேன் என்று ஆச்சரியமாக நகுலனிடம் சொல்லி கொண்டு இருந்தாள்.

“கீதாவின் முகத்தை ஊன்றி பார்த்து சற்று நேரம் யோசித்தவனுக்கு எல்லாம் புரிந்தது.தங்களை இணைத்து வைக்கதான் அண்ணனும் அண்ணியும் இப்படி ஒரு நாடகம் நடத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்”.

“ஹோ அதனால்தான் நான் வந்தவுடன் என்னை பார்த்து அப்படி அழுதாயா.நான் கூட ஏன் டா இங்கயும் தொல்லை செய்ய வந்துவிட்டாயா என்று அழுகிறாய்னு நினைத்தேன்”.

நகுல் சொல்வதை கேட்டு அவனை முறைத்தவள்.

“நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?உங்கள் போனுக்கு முயற்சி செய்தாலும் போன் சுவிட் ஆப் நான் என்ன வென்று நினைப்பது.நீங்கள் பிளைட் ஏறிய பிறகுதான் சுதி போன் பண்ணியிருப்பாள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் இப்படி ஒரு நாள் முழுவதும் போனது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன். என்னை எப்படி பயமுறுத்திவிட்டாள் அவளை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று போனிடம் சென்றவளை தடுத்து தன் முன் நிறுத்தியவன்.

“ஹேய் லட்டு அவங்க ஏன் அப்படி பண்ணுனாங்கனு உனக்கு இன்னும் புரியலயா?”                “நகுல் நீங்க என்ன……லட்டு”   என்று வார்த்தைகளை விட்டு விட்டு சொன்னவளை பார்த்தவன்.    “லட்டுதான் என்னோட லட்டு நீதான்.ஆனால் நகுல் இல்லை உன்னுடைய நளன்” என்று கூறி கண் சிமிட்டினான்.

கீதா ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டு இருப்பதை பார்த்தவன். “ஹய்யோ தத்தி இன்னும் இவளுக்கு என்னவெல்லாம் சொல்லி தரனுமோ பேபினு சொன்னா மட்டும் கோபம் வரும்” என்று வாய்விட்டு புலம்பினான்.

அவனின் புலம்பலை கேட்டவள் அவன் கைகளை தட்டிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தவள் “என்ன நடந்ததுனு முதல்ல சொல்லுங்க ஒண்ணுமே சொல்லாம எனக்கு புரியலனு சொன்னா என்ன அர்த்தம்”.

“நீ ஒரு லூசுனு அர்த்தம் என்று வாய்க்குள் முனங்கியவன். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை உட்கார்ந்து இருக்கர போஸ் பாரு” என்று தனக்குள் பேசி கொண்டவன் அப்போதுதான் போனை கவனித்தான். வாய்ஸ் மெஸேஜ் அனேகமாக அண்ணியாகதான் இருக்கும் என்று நினைத்து அதை ஆன் செய்தான்.                                                                                                                                               “ஹாய் கீது செல்லம் என்ன பயந்துட்டியா?நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேசனும்னுதான் நான் இப்படி செஞ்சேன்.என் வாழ்வை சரி செய்ய நீ உன் வாழ்வை பணயம் வைப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.லூசு மாதிரி கண்டதையும் நினைக்காமல் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க காதல்ல ஈகோ இருக்கவே கூடாது.தம்பி இது உங்களுக்கும்தான் ஓகே இது போதும்னு நெனைக்கறேன் இதுக்கு மேல நீங்க பேசுங்க” என்று முடிந்திருந்தது.

3 thoughts on “சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.               அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து “என்னப்பா அப்படி

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் “உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம்