Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19

றுநாள் காலையில் சீக்கிரம் எழுந்த நகுலன் விரைவாக கிளம்பி கீழே வந்தான்.அங்கு அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த சுந்தரி மகனை பார்த்ததும் திட்ட ஆரம்பித்தார்.                                “அம்மா பிளீஸ் ஆரம்பிக்காதீங்க.எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்டிங்கனா சாப்பிட்டு போவேன் இல்லை இப்படியே கிளம்பறேன்.எனக்கு நேரமாச்சு” என்று வீம்பு பிடிக்கும் மகனை என்ன செய்வது என்று புரியாமல் சென்று இட்லியை பறிமாறினார்.                                                “அம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு அடுத்த வாரம் டெல்லி போக வேண்டும் ஒரு வாரம் மீட்டிங்.அதற்கான எல்லா வேலையும் பார்க்க வேண்டும் இரவு நான் வர நேரம் ஆகும் அதனால் எப்போதும் போல் நான் வந்துவிடுவேன் போன் பண்ணி எங்கிருக்கிறேன் என்று கேட்டு கொண்டே இருக்காதீர்கள்.ஓகே பாய் மா” .   நகுல்.

“என்ன பையன் இவன்.மற்றவர் பேச இடம் தராமல் இப்படி படபடவென பேசுகிறான்.அடுத்த வாரம் கீதா அமெரிக்கா போக வேண்டும் இவன் வழி அனுப்ப வர மாட்டான் போல இருக்கே. என்ன புள்ளைங்களோ.இவன் வேலை வேலைனு அழையறான் அவளும் என்னோட ஆசை என்னோட கனவுனு சொல்றா.அதுக்கா இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணுனாங்க.ஆளுக்கு ஒரு இடத்தில் இருக்க எதுக்கு கல்யாணம்” என்று ஆற்றாமையை புலம்பி கொண்டு இருந்தார்.                       அங்கு வந்த அர்ஜூன் “என்னமா தனியா பேச ஆரம்பிச்சுட்டீங்க.போற போக்க பாத்தா இன்னோரு அம்மாவ கொண்டு வந்தாதான் சரியா இருக்கும் போல,எனக்கு ஓகே மதி நீ என்ன நினைக்கற?.”

 

“எனக்கும் டபுள் ஓகேணா.எவ்வளவு நாள்தான் ஒரே அம்மா முகத்தையே பாக்கறது” என்று தன் பங்குக்கு அன்னையை வாரினாள்.முகம் முழுவதும் சிரிப்புடனும் கண்ணில் குறும்புடனும் பழைய அஜூவாக மாறி அம்மாவை கிண்டல் பண்ணிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தார் சுந்தரி.

“என்னடா என் மனைவியை அழ வைக்கறீங்க” என்று கேட்டு கொண்டே வரத ராஜ் அங்கு வர. “ஒண்ணும் இல்லப்பா மதிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டுமாம்.அவள் பிராக்டிஸ் போற ஹாஸ்பிட்டலில் இவளுக்கு மட்டும்தான் மேரேஜ் ஆகவில்லையாம் அதான் சொல்லி கொண்டு இருந்தாள்”.

 

“மதி பெரிய பொண்ணு ஆகிட்டானு அம்மா அழறாங்க” என்று அர்ஜூன் மாற்றி சொல்ல.          “அஜூ அண்ணா இப்படி கவுத்திட்டிங்களே உங்களுக்கே நல்லா இருக்கா.உங்களை” என்று அவனை துறத்தி கொண்டு ஓட அவன் அம்மாவின் பின்னும் அப்பாவின் ஒலிந்து அவளுக்கு ஆட்டம் காட்டி கொண்டு இருந்தான்.அங்கு மகனை தூக்கி வந்த சுவாதியை பிடித்து கொண்டவன் “வதுமா இங்க பாரு உன் உரிமையை மதி பறிக்கிறாள் என்னவென்று கேளு என்றான்”.

 

“என்ன உரிமை” என்று புரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் சுதி.

“இங்க பாருங்க அண்ணி காலைல இருந்து இந்த அண்ணா என்ன வம்பிழுத்து கொண்டே இருக்கிறார்.முதலில் அம்மாவிடம் பிறகு அப்பாவிடம் இப்போது உங்களிடம்” என்று சிணுங்கி கொண்டே சொன்ன நாத்தனாரை பார்த்த சுவாதிக்கு சிரிப்பு தான் வந்தது.அவர்களின் விளையாட்டை பார்த்து அபி கைதட்டி சிரிக்க.சுவாதி இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைத்து “உங்க ரெண்டு பேரையும் பார்த்தா டாக்டர் மாறியா இருக்கு சின்ன பிள்ளைங்க மாதிரி அடிச்சுக்கிட்டு போங்க போய் சாப்பிடுங்க” என்று குரலை உயர்த்த இருவரும் அமைதியாக சாப்பிட சென்றனர்.

சுந்தரியும் வரதராஜீம் கண்ணில் நீருடன் இருப்பதை பார்த்த சுவாதி “என்னாச்சு அத்தை” என்று கேட்க “இந்த வீட்டில் இது போல் சிரிப்பும் கும்மாலமுமாக இருந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது”.

“அஜூவின் முகத்தில் இப்படி சிரிப்பை இனி பார்க்கவே முடியாதோ என்று நாங்கள் பயந்து போய்விட்டோம்.நீ வந்த நேரம் எல்லாம் சரியாகிவிட்டது” என்றார் முந்தானையில் கண்ணீரை துடைத்து கொண்டே.

“என்ன அத்தை நீங்க இதுக்கு போய் கண் கலங்கி கொண்டு வாங்க போய் சாப்பிடலாம்.அபி குட்டி நீ போய் கீதுமாவ சாப்பிட கூட்டி வாடா”.

“ஓகே மா”….   அபி.

 

கீதாவும் கீழே சாப்பிட வர அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“நகுலன் எங்க கீதா?சாப்பிட வரலயா?”       சுதி.

“இல்லடி அவர் மேல இல்ல”.    சுந்தரி.

 

“அவன் எங்க இங்க இருக்கிறான் என்றவர் காலையில் நகுலனுக்கும் தனக்கும் நடந்த உரையாடலை கூறி எல்லாம் இப்பதான் சரியாகிவிட்டது என்று நினைத்தேன்.இவன் என்ன வென்றால் இப்படி முறுக்கி கொள்கிறான்”.            சுந்தரி.

சுந்தரியின் புலம்பலை கேட்ட கீதாவிற்கு “என்னை வழி அனுப்ப கூட வர முடியாதா.அது சரி நான் யார் அவருக்கு” என்று தனக்குள் பேசி கொண்டு முகம் சிறுத்துவிட அமைதியாக சாப்பிட்டதாக பேர் பண்ணி கொண்டு இருந்தாள்.அஜூவும், சுவாதியும் அர்த்த பார்வை பார்த்து கொண்டனர்.                                                                                                                                                                                                நாட்கள் அதன் போக்கில் போக நகுலன் டெல்லி கிளம்பிவிட்டான்.இதோ கீதாவும் அமெரிக்கா செல்வதற்காக ஏர்போர்ட் வந்தாகிவிட்டது.ஒரு போன் பண்ணியாவது பேசுவான் என்று எதிர்பார்த்த கீதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.எவ்வளவு முயன்றும் முடியாமல் அவனை ஒருமுறை கூட பார்க்காமல் செல்கிறோமே இனி எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் கண்ணீரை வர வழைத்தது.                                                                                                                                                                             வள்ளியும் ராகவும் அழுகையுடனும்,சுந்தரியும்,வரதராஜீம் சின்ன சிரிப்புடனும்,சுவாதியும்,அர்ஜூனும் ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்து கொண்டு அவளின் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள சொல்லி அட்வைஸீடனும்,அபியின் “கீதாமா நானு” என்ற அழுகையுடனும் பிளைட் ஏறியவள் குமுறி அழ ஆரம்பித்தாள்.                                                            “ஏன் நளா?இப்புடி பண்ணுணீங்க.அட்லீஸ்ட் ஏர்போர்ட்டுக்காவது வந்திருக்கலாம் இல்ல கடைசி வரை பிரண்ட் பிரண்ட்னு நான் மட்டும்தான் சொல்லிகிட்டு இருந்திருக்கேன். உங்கள் மனதில் எனக்கென்று எந்த இடமும் இல்லையா?”என்று தனக்குள் பேசி கொண்டவள் பிளைட்டில் அனைவரும் தன்னையே கவனிப்பதை உணர்ந்து தன்னை கட்டுபடுத்தி கொண்டாள்.

ஏர்போர்ட்டில் இன்னோரு ஜீவன் கண்ணில் வலியுடன் “என்னைவிட்டு போகிறாயா?”என்ற பார்வையுடன் அவளையே பார்த்து கொண்டு இருந்ததை அறியாமலே அமெரிக்கா வந்திறங்கினாள்.

அங்கு தன்னுடைய பெயரை தாங்கிய நேம் போர்டை வைத்து கொண்டிருந்தவரிடம் சென்றவள் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள்.அவரும் தன்னை லாரா என்று அறிமுகபடுத்தி கொண்டு ஆபிஸில் அவளுக்கு அளித்திருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

 

கீதாவை அந்த வீட்டில் இறக்கிவிட்ட லாரா “தன்னுடைய வீடு இரண்டு வீடு தள்ளி இருப்பதாகவும் எதுவும் தேவை என்றால் அழைக்குமாறு தன்னுடைய அழைபேசி எண்ணை கொடுத்தவள் தன்னுடைய மகன் பிளே ஸ்கூல் முடிந்து வரும் நேரம் நான் செல்ல வேண்டும்.இரண்டு நாள் கழித்து வந்து ஜாயிண்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள் அதனால் இப்போது ரெஸ்ட் எடுங்கள்.நாளை காலை இருவரும் சென்று வீட்டிற்கு தேவையானதை வாங்கி வருவோம்”  என்று சொல்லி சென்றுவிட்டாள்.

ஆபிஸில் அவளுக்கு என்று ஒதுக்கி இருந்த வீடு சின்னதாகவும் அழகாகவும் இருந்தது.ஒரு ஹால்,கிச்சன்,ஒரு பெட்ரூம் அதனுடன் அட்டாச்டு பாத்ரூம் வெளியே அளவான அழகான தோட்டம் என்று ஒரு அளவான குடும்பம் தங்குவது போல் அழகாக இருந்தது. வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தாள்.ஜெட்லாக் நீங்க படுத்தவள் அப்படியே தூங்கி போனாள்.

 

லாரா தன் மகனுடன் மறுநாள் காலை வந்து எழுப்பும் போதுதான் எழுந்தாள்.லேட்டானதற்கு அவளிடம் மன்னிப்பு கோரி.வேகமாக ஒரு ஜீன்ஸீம்,டி-சர்ட்டும் எடுத்து மாட்டி கொண்டு கிளம்பிவிட்டாள்.

லாரா பழகுவதற்கு நல்ல பெண்ணாக இருந்ததாள். இருவரும் அந்த ஷாப்பிங் முடிவதற்குள் நல்ல தோழிகள் ஆனார்கள்.

லாரா தன்னைபற்றியும் இந்திய கலாச்சாரத்தைபற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைபற்றியும் வியந்து கூறினாள்.

தன்னுடைய முன்னோர்கள் இந்தியர்கள் என்றும் வேலைகாக வந்தவர்கள் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள் அது மட்டும் இல்லாமல் தன்னை இந்திய கலாச்சாரபடி கண்டிப்புடன் வளர்த்தது. வேலைக்கு வந்த இடத்தில் ஒரு இந்தியனான ஆதித்யனை காதலித்து மணந்தது.அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு ஒத்து கொள்ளாமல் தனித்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் ஆதி இறந்தது.இப்போது தனித்து வாழ்வது என்று அனைத்தையும் சொன்னவள்.

“கீது உனக்கு தெரியுமா?ஆதி தமிழ் படம் பார்க்கும் போது நானும் பார்ப்பேன் அதில் அனைத்து சொந்தங்களும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்வதை பார்க்கும் போது நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றும்.ஆனால் அவர்கள் வீட்டில் கடைசி வரை எங்களை ஏற்று கொள்ளவே இல்லை இருந்தாலும் அதை இப்போது என் மகனிடம் சொல்லி வளர்க்கிறேன்.இந்தியாவின் கலாச்சாரத்தை இவனும் பின்பற்ற வேண்டும்” என்று கூறி லேசாக சிரித்தாள் லாரா.

லாராவின் கதையை கேட்டு கீதா மிகவும் வருந்தியவள். “நீங்க கவலைபடாதீங்க எங்க குடும்பம் பெரிய குடும்பம் நீங்கள் நினைத்தது போல் இனி எங்களுடன் சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு யாரும் இல்லை என்று கவலை படாதீர்கள்” என்று கூறி நட்பு கரம் நீட்டினாள்.இதுதான் கீதா யாருடனும் விரைவில் பழகிவிடுவாள்.

லாராவின் மகன் மித்ரனை பார்க்கும் போது அபியின் நினைவில் கண் கலங்கியது கீதாவிற்கு.அன்று முழுவதும் வீட்டிற்கு தேவையானதை வாங்கிவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் தான் வந்ததை இந்தியாவில் இருப்பவர்களிடம் சொல்லவில்லை என்பது நினைவு வர போன் செய்தாள்.

ஒரே ரிங்கில் போனை எடுத்த சுவாதி “கீது” என்று அழைக்க.

 

“ஆமாம்.தி கிரேட் கீதுதான் பேசறேன் மேடம் எப்புடி இருக்கீங்க?”

“நான் இல்லாம ஜாலியா இருக்கறதா எனக்கு தகவல் வந்தது” என்று வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பித்தவள் லாராவைபற்றியும் மித்ரனைபற்றியும் தான் தங்கியிருக்கும் அட்ரஸ் அனைத்தையும் சொன்னவள்.மற்றவர்களை பற்றி விசாரித்துவிட்டு வைத்துவிட்டாள்.அவளுக்கு நகுலன் தன்னை வழி அனுப்ப வரவில்லை என்ற கோபம் அதனால் அவனைபற்றி எதுவும் கேட்காமல் வைத்தாள்.

இங்கு இந்தியாவில் கீதாவிடம் பேசிய சுதி சிரித்து கொண்டே தனது அறைக்கு சென்றாள்.சிரிப்புடன் வரும் மனைவியை பார்த்த அஜூ “என்ன மேடம் இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்க போல இருக்கு” என்று இடையில் கையை போட்டான்.கணவனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்தவள்.

“என்ன அஜீ இது எப்ப பாரு இதே நியாபகம்தானா?”                                                                                   “ஹேய்…என்னடி இந்த வயசுல இந்த நியாபகம் இல்லனாதான் ஏதாவது ஹார்மோன் பிராப்ளம்னு சொல்லுவோம்.நான் நார்மலா இருக்கேன் அதனால இந்த நியாபகம் வருது”.     அஜூ.                                                                                                                                                                                             “உங்ககிட்ட போய் பேசுறேன் பாருங்க என்ன சொல்லனும் எதுக்கெடுத்தாலும் ரெடியா ஒரு பதில் வச்சிருக்கீங்க.நான் சொல்வதை பொறுமையாக கேட்டால் மற்றதுக்கு அனுமதி உண்டு. இல்லையென்றால் நான் தூங்கிவிடுவேன்”.            சுதி.                                                                                                  “அம்மா வன தேவதை நீ என்ன சொன்னாளும் கேட்கறேன் சொல்லுமா”.     அஜூ.                “அப்படி வாங்க வழிக்கு.உங்க தம்பி டெல்லில இருந்து எப்ப வர்ரேனு சொன்னாரு”.      சுதி.            “நாளைக்கு நைட் ஏன் என்னாச்சு”.   அஜூ.                                                                                                                                  “அது பொய்.உங்க தம்பிய காலைல ஏர்போர்ட்ல நான் பார்த்தேன்.கீதாவையேதான் பார்த்துகிட்டு இருந்தாரு”.

“அட பாவி இன்னைக்கே வந்துட்டானா?நீ பாத்தியா?ஏன் என்கிட்ட சொல்லல”.

“உங்க தம்பியே தான் வந்தது தெரிய கூடாதுனுதா ஒழிஞ்சு ஒழிஞ்சு கீதுவ பாத்துக்கிட்டு இருந்தாரு.அவள்தான் காதலை முதலில் சொல்ல வேண்டும் என்று அவர் பிடிவாதமா இருக்காரு இதுக்கு நாமதான் ஏதாவது பண்ணணும்”.

“நானும் இத தான் முதல்ல சொன்னேன் நீதான் அவங்களாதான் சேரணும்னு சொன்ன”.

“இது மட்டும் நியாபகம் இருக்கும்.அவங்களுக்கு தேவையான தனிமைய தரணும்னு சொன்னேன்ல அது நியாபகம் இருக்காதே”.

“அவன்தான் டெல்லி போறேன்,மீட்டிங் போறேனு நடு இராத்திரி வர்ரான்.இதுல ரெண்டு பேரும் ஒரே ரூம்லதானே இருக்காங்க என்ன தனிமைய நாம உருவாக்குறது”.

“நீங்க சொல்றதும் சரிதான்.ஆனா அப்ப அவருக்கு இல்லாத ஒரு உணர்வ நாம இப்ப வர வைக்க போறோம்”.

“என்னடி சொல்ற.எனக்கு ஒண்ணும் புரியல”.

 

“ம்..பொறாமை”.    சுதி.

 

“பொறாமையா?யாருக்கு?யாரு மேல?”

 

“உங்க தம்பிக்கு வர வைக்க வேண்டிய உணர்வு.நம்மோடது எங்கயும் போகாதுனுதான் கேர்லஸா இருக்காரு.இன்னோரு ஆளு போட்டிக்கு வந்தா,அப்ப என்ன பண்ணுவாரு.தன்னால போய் பேசுவாறுல”.

“செல்ல குட்டி செம்ம அறிவுடி உனக்கு.அவன பொறாம பட வைக்கறது இருக்கட்டும்.முதல்ல நம்ம திட்டத்துக்கு கீதா ஒத்துக்கனுமே”.

“அவ எதுக்கு ஒத்துக்கணும்”.

“அவ சொன்னாதானே அவன் நம்புவான்”.

“நாம சொன்னாக்கூட நம்புவாரு”.

 

“ஐயோ…..எனக்கு மண்டைய பிச்சுக்கணும் போல இருக்கு தயவு செஞ்சு புரியர மாதிரி சொல்றீயா?”

 

“இதுக்குதான் அவசரபட கூடாது.நான் சொல்றதுக்குள்ள என்ன அவசரம்.கீதுகிட்ட பேசிட்டுதான் இப்ப வர்றேன்.அங்கு என்று ஆரம்பித்தவள் கீதா சொன்ன அனைத்தையும் சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாம நமக்கு உதவ போறதே இந்த மித்ரன்தான்”.

 

“மூன்று வயசு பையன் நமக்கு என்ன உதவி செய்ய போறான்”.

“மித்ரன் மூன்று வயசு பையன்னு நமக்கு மட்டும்தானே தெரியும்.உங்க தம்பிக்கு தெரியாதே”.        “சூப்பர்டி பட்டு குட்டி அப்புறம்”.

“ரொம்ப நாள் ஆக்ககூடாது அஜூ.உடனே ஆரம்பிக்கனும் அனேகமா ஒரு வாரம்தான் உங்க தம்பிக்கு நான் வச்சிருக்கற கெடு.அதுக்குள்ள ஈகோவ விட்டு அவரு பொண்டாட்டிய தேடி போறாறானு பாக்கலாம்”.

“ஒரு வாரமே அவனுக்கு அதிகம்னுதான் நான் நெனைக்கறேன்.அவன் அவனோட பொண்டாட்டிய தேடி போறது இருக்கட்டும் நான் இப்ப என்னோட பொண்டாட்டிகிட்ட வரலாமா?”         “சாரி அஜூ.இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தது எனக்கு டையர்டா இருக்கு.தூக்கம் வேறு வருகிறது என்று ஒரு கொட்டாவியை விட்டாள்”.

“வதுமா.நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சும் இந்த கேள்வி கேட்டேன்ல என்னை சொல்லனும் நான் உன்னிடம் பர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் இல்ல மேடம்.எனக்கு லைசன்ஸ் இருக்கு” என்று அவளது முந்தானையை விலக்கி தாலி கொடியை அவள்முன் ஆட்டி காட்டியவன் கணவனாக தன்னுடைய வேலையை ஆரம்பித்தான்.

 

“மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு நகுலன் வரவிற்கு காத்திருந்தாள்.சுதியை அன்று முழுதும் காக்க வைத்தவன் இரவுதான் வந்தான்”.

இரவு உணவு அனைவருடனும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.நகுலும்,அஜூவும் நியூஸ் பார்த்து கொண்டு இருந்ததை கவனித்த சுதி இதுதான் சமயம் என்று உணர்ந்து தன் கணவனிடம் சொல்வது போல் நகுலனை ஓரகண்ணால் பார்த்து கொண்டே பேசலானாள்.

 

“இந்த கீது பாருங்க போன உடனே பிரண்டு புடிச்சுட்டா”.

“கீதாவ ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு போன லாராவால இண்டிரிடியூஸ் ஆனவராம்.ரொம்ப நல்லா பழகராராம். அவருக்கூட பேசுனா டைம் போறதே தெரியலனு சொல்றாங்க. அப்புறம் மேடம் நேத்து புல்லா அவருக்கூடதா ஷாப்பிங் போனாளாம்”.

 

“ஒரு நாள் புல்லா போனதே தெரியலனு சொல்றா. பரவால்ல நம்ம எல்லாம் விட்டுட்டு எப்புடி இருப்பாளோனு கவலைல இருந்தேன் இனி அந்த கவலை தேவையில்லனு நெனைக்க…… தம்பி எங்க போறீங்க உங்க வைப்ப பத்திதான் பேசிகிட்டு இருக்கேன்”.

“இல்ல அண்ணி நான் அவக்கூட பேசிட்டேன்” என்றவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.

 

“என்ன வதுமா இப்புடி வெறுப்பேத்திட்ட பாவம் அவன் முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு”.

“ரொம்பதான்.அவ்ளோ அக்கரை இருக்கறவரு போய் வைப்கிட்ட பேசறது”.

 

“நிச்சயமா இப்ப கீதுக்குதான் கால் டிரை பண்ணுவான்னு நெனைக்கறேன்.வா போய் பார்க்கலாம்”.  அஜூ.

 

“அப்புடிங்கறீங்க.எனக்கு என்னமோ நம்பிக்க இல்ல”.   சுதி.

“வா.போய் பார்ப்போம்”.     அஜூ.

சுதி சொன்னதை கேட்ட நகுலனுக்கு கோபம்தான் வந்தது. “இங்க ஒருத்தன விட்டுட்டு போனமே என்ன ஆனான்னு ஏதாவது கவலை இருக்கா?அங்க போன உடனே பிரண்டு புடிச்சுட்டளாம்.இவ பேசற பேச்சுக்கு இன்னும் பிரண்டு புடிக்கலனாதான் ஆச்சரியம்.இவள என்னதான் பண்றதோ?இப்புடி என்ன தனியா பொலம்ப விட்டுட்டாலே சரி போன் பண்ணி பாப்போம்” என்று போன் பண்ண ஆரம்பித்தான்.

மனைவியை பார்த்த அஜூ. “சொன்னன்ல கண்டிப்பா போன் பண்ணுவான்னு பாத்தியா.எனக்கு தெரியாதா என்னோட உடன் பிறப்பபத்தி”.

 

“ரொம்பதான்.சரி வாங்க போலாம்.அவங்க பேச ஆரம்பிச்சுறுவாங்க”.   சுதி.

“இருடி நம்ம போட்ட நாடகம் ஒர்க் அவுட் ஆயிருக்கா இல்லையானு பாக்கலாம்”.    அஜூ.

“என்னங்க நீங்க.அதுக்காக ஹஸ்பண்டும்,வைப்பும் பேசறத கேட்கறதா” என்று சங்கடமாக அஜூவை பார்த்து சுதி கேட்க.

“இவ ஒருத்தி தேவை இல்லாம லாஜிக் பாத்துக்கிட்டு. அவங்க கொஞ்சறத ஒண்ணும் நம்ப ஒட்டு கேட்கல.சண்டை போடறத தான் கேட்க போறோம்”.

“அப்ப உங்க தம்பி நம்ம சொன்னதுனால பேசலையா.சண்ட போடதான் பேசறாரா”.

“ஸ்ஸ்ஸ்…..பேச ஆரம்பிச்சுட்டான் கவனி”.

நகுலனிடம் இருந்து கால் வரவும் மித்ரனுடன் விளையாண்டு கொண்டு இருந்த கீதா சந்தோஷமடைந்தாள். உற்சாகமாக பேச ஆரம்பித்தாள்.

“ஹாய் நகுலன் வாட் எ ஸர்ப்ரைஸ்.இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்.மித்ரனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பேசலாம்” என்று அவனிடம் காத்திருக்க சொன்னாள்.ஆனால் தன்னைவிட இன்னோருவன் முக்கியமாக போய்விட்டான் என்ற பொறாமை உணர்வு அவனுள் இருக்கும் கோபத்தை இன்னும் அத்கமாக்கியது.இதில் அவனுடன் இவள் கொஞ்சி பேசி கொண்டு இருப்பதை கேட்டவன்.போனை வைத்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

லாரா ஆபிஸ் பைல்களை பார்த்து கொண்டு இருபதால்தான் கீதாவுடன் விளையாடலாம் என்று இங்கு வந்தான்.இங்கு போன் வரவும் கோபமான மித்ரன்.

“நோநோ..என்று சிணுங்க.கீதாவோ என்பட்டுல,சமத்துல நாளைக்கு நீ சொன்ன மாதிரி ஐஸ் கிரீம் சாப்பிட போகலாம்” என்று சமாளித்து அனுப்பிவிட்டு வந்தவள்

 

நகுலனுடன்பேச ஆரம்பித்தாள்.

“எப்புடி இருக்கீங்க?டெல்லில இருந்து எப்ப வந்தீங்க? சாப்டீங்களா?”என்று அவள் பேசி கொண்டே இருந்தாள்.அவளின் எந்த கேள்விக்கும் பதில் வராமல் இருக்கவும், “ஹலோ நகுலன் இருக்கீங்களா?”என்று எங்கு கட் ஆகிவிட்டதோ என்று கவலையுடன் கேட்க.

அவனோ அமைதியாக “இருக்கேன்.அங்க போன உடனே புது பிரண்டு புடிச்சுட்டீங்க போல இருக்கு மேடம்.புது பிரண்டு கிடைச்சதும் பழைய பிரண்ட மறந்துட்டீங்க இவ்ளோ நேரமாகி நான் போன் பண்றேன் என்கிட்டகூட பேசாம வெயிட் பண்ண சொல்லிட்டு அங்க பேசுறீங்க” என்று காக்க வைத்ததை குத்தலாக சொன்னான்.

“நான் ஒண்ணும் மறக்கவில்லை.நீங்கள்தான் மறந்துவிட்டீர்கள்.என்னை உண்மையாகவே பிரண்டாக நினைத்திருந்தாள் நான் அமெரிக்கா கிளம்பும் போது வழி அனுப்ப வந்திருப்பீர்கள்.நான் உங்களுக்கு முக்கியமாக தோன்றவில்லை”.

“மித்ரன் வந்த இரண்டு நாளில் என்னையே சுற்றி சுற்றி வருகிறான்.நான் எங்கு போனாலும் கூடவே வருகிறான் தெரியுமா.இப்போது கூட போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை உங்களுடன் பேச வேண்டும் என்றுதான் அனுப்பினேன்.இல்லையென்றால் இன்று என்னுடன் தங்குவதாக சொன்னான்” என்று சொல்லி அவள் வாய் மூடும் முன்பு அந்த பக்கம் போன் வைக்கப்பட்டது.

“நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்போது இவ்வளவு கோபமாக போனை வைத்தார்.போன் பண்ணியவர் பேசவே இல்லை.நான் கேட்டதுக்கும் பதில் சொல்லவில்லை.ச்ச…. எவ்வளவு ஆசையாக போனிலாவது அவன் குரல் கேட்கலாம் என்று நினைத்தேன்” என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

சென்னையில் நகுலனோ “அடியேய்.புருஷன்னு ஒருத்தன விட்டுட்டு போனமே எப்புடி இருக்கான் என்னனு என்கிட்ட பேசாம அங்க அவன்கிட்ட கொஞ்சுகிட்டு இருக்கியா.உன்ன பிரியா விட்டாதானே அவன் கூட நாளைக்கு ஐஸ் கிரீம் சாப்பிட போவாய்?நீ எப்படி போகிறாய் என்று நான் பார்க்கறேன்” என்று எண்ணியவன் “நாளை வீடியோ கால் எப்போது வேண்டுமானாலும் பண்ணுவேன் தயாராக இரு” என்று  ஒரு மெயிலை அனுப்பிவிட்டு படுத்தான்.                                                இவன் செய்வதை பார்த்து கொண்டு இருந்த இருவரில் சுதிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

“என்னங்க உங்க தம்பி இப்படி பட்டுனு போன வச்சிட்டாரு”.

 

“சும்மா வச்சிருக்கமாட்டான் உன்னோட பிரண்டு ஏதாவது சொல்லி இருப்பா.ஏற்கனவே நாம ஏத்திவிட்டதுல காண்டாகிதான் போன்பண்ணுனான்.அநேகமா கீதாவும் அந்த மித்ரனபத்தி பேசி இருப்பானு நெனைக்கறேன் இல்லனா பையன் இவ்ளோ காண்டாகமாட்டானே.நீ எதுக்கும் நாளைக்கு உன் பிரண்டுகிட்ட லேசா போட்டு வாங்கு.இப்ப நாம போகலாம் போயி உடனே அமெரிக்கா செல்வதற்கு டிக்கெட் புக்பண்ணுவோம்” என்று இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்.

“எதுக்குங்க இப்ப அமெரிக்காவுக்கு டிக்கெட்”.    சுதி.

“என் உடன் பிறப்பு எப்ப வேண்டும் என்றாலும் அமெரிக்கா கிளம்பலாம்.அப்போது டிக்கெட் கிடைக்காமல் அவஸ்தைபட கூடாது இல்லையா?அதற்குதான்”.     அஜூ.

“உங்க தம்பி அதுக்குள்ள கிளம்புவாருனு நினைக்கிறீங்க?”

 

“அவன் அன்று புலம்பியதை கேட்டதில் நாளையே கிளம்பினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.ஏனென்றால் அவன் கீதுவ அவ்ளோ லவ்பண்றான்”.

“எப்படியோ இருவரும் சேர்ந்தால் சந்தோஷம்தான் என்று தங்கள் அறைக்கு வந்தவுடன் அஜூ முதல் வேலையாக வேறு ஒருவர் பேரில் டிராவல்ஸ் ஏஜெண்டிடம் சொல்லி டிக்கெட் புக் செய்துவிட்டுதான் நிம்மதியாகினர் இருவரும்”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20

அமெரிக்காவில் நகுலனின் மெயிலை பார்த்த கீதாவிற்கு முதலில் போனை கட்பண்ணியதற்கு கோபம் இருந்தாலும் நாளை வீடியோ கால் வருவதாக சொல்லவும் காதல் கொண்ட நெஞ்சம் மகிழ்ந்துதான் போனது.அந்த மகிழ்ச்சியுடனே அவளும் படுத்து கொண்டாள்.            அடுத்த நாள் ஆபிஸ்க்கு சென்ற கீதா வேலையில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5

மருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள்.மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதாள். “என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி