Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38

38 – மனதை மாற்றிவிட்டாய்

திவியும், அர்ஜுனும் அறியாத விஷயம் இவர்களின் உரையாடலை மேலும் இருவர் கேட்டதுதான். ஒன்று சுந்தர், மற்றொருவர் ஆதி.

புது ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆயிடிச்சு. அதுக்கு நேர்ல ஒன்ஸ் பாத்து பேசிட்டா நெக்ஸ்ட் கிளைண்ட் கிட்ட டெமோ காட்டிட்டு ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம். என அவனை சந்திக்க கேட்டனர். அதனால் அவன் அன்றே பெங்களுர் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. முந்தைய நாளில் இருந்தே இதை எதிர்பார்த்தது தான். அதைப்பற்றி தான் திவியிடம் கூற எண்ணினான். பேசமுடியாமல் தடை படசரி, கிளம்பறதுக்கு முன்னாடி அவகிட்ட சொல்லலாம்னு பாத்தா எங்க போனா இவஎன மதியிடம் கேட்க அவளை அர்ஜூனுடன் நகையை வைக்க வீட்டிற்கு அனுப்பியதாக கூற

கால் பண்ணா எடுக்கமாட்டேங்கிறாங்கஎன வினவ

அண்ணா, திவி போன் இங்க வெச்சுட்டு போய்ட்டா. அவரோட போன் சார்ஜ் இல்லேன்னு சொல்லிட்டு இருந்தாருஎன கூற

இவனும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தனக்கு அவசரம் கிளம்பவேண்டுமென கூறிவிட்டு முடிந்தால் அவர்களிடம் சென்று கூறிவிட்டு செல்கிறேன் என கிளம்பினான். விரைந்து வீட்டிற்கு வந்தவன் அவளை ஒரு ஒரு அறையிலும் தேட இறுதியில் மாடிக்கு செல்லும் போதே யாரோ பேச்சு குரல் பக்கத்து அறையில் கேட்க அருகே செல்ல

இன்னொன்னு என்ன சொன்ன? ஆதியை லவ் பன்ரேன்னா? அவரு பன்றாரு. நான் வாய திறந்து இதுவரைக்கும் அவர்கிட்ட லவ் பன்றேன்னு எப்போவாது சொல்லிருக்கேனா? வீட்ல மேரேஜ் பண்ணறதும் அவங்களோட இஷ்டம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இவரு லவ்வே பண்ணாடியும் இந்த மேரேஜ் டிஸ்கேசன் நடந்திருக்கும். ஆதி ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. அதனால அவரை கன்ப்யூஸ் பண்றதுக்கு தான் இத்தனையும். அவரு என்கிட்ட அவரோட பீலிங்ஸ காட்டுனாலும் நான் அத முழுசா தடுக்கவுமில்லை, ஏத்துக்கவுமில்லை. ஒருவேளை பின்னாடி ஏதாவது ப்ரோப்ளேம்னாலும் ஆதிகிட்ட சொல்லிடுவேன். நான் லவ் பன்றேன்னு சொன்னேனா. பாமிலில தானே டிசைடு பண்ணாங்கன்னு. அவரும் எதுவும் சொல்லமுடியாம போய்டுவாரு.”

என கேட்ட வார்த்தைகள் கண்டிப்பாக தன் திவியினுடையதுதான். அதே நேரம் இவனுக்கு கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு ட்ராவெலஸ் புக் பண்ணிய மெசேஜ் வர, அவனுக்கு உடனே கிளம்பினால் தான் அடுத்து வண்டியை பிடிக்க சரியாக இருக்கும் என உடனே கிளம்பியும்விட்டான்.

இருந்தும் அவனது மூளைக்குள் திவியின் பேச்சு ஓடிக்கொண்டே இருந்தது.

அவ என்ன வெறுப்பேத்த விளையாடிருப்பாளோ?

இல்லையே நான் வரதே அவளுக்கு தெரியாதே.

வேற யார்கிட்ட பேசிருப்பா. அதெல்லாம் விட என்ன லவ் பண்ணலேன்னு எதுக்கு சொல்றா? விளையாடறாளா? இருக்காதே. அவகிட்ட நான் பாத்த காதல் உண்மை. அப்புறம் எப்படி. ஒருவேளை வேற யாராவது அவ வாய்ஸ்ல பேசிருப்பாங்களோ? கண்டிப்பா அப்டித்தான் இருக்கனும்.

ஆனா அப்டியென்னாலும் யாரு பண்ணிருப்பாஇதுனால அவங்களுக்கு என்ன யூஸ். ஏதோ ஒண்ண திவி மறைக்கிறாளோ. கடவுளே அவளை நான் மனசளவுல ரொம்ப நெருங்கும் போது ஏன் எப்போவுமே இப்படி ஏதாவது நடக்கிதோ. எதுனாலும் சரி இந்த தடவ அவகிட்ட எல்லாத்தியும் பேசிடனும். சரி என்ன பிரச்சனைன்னு அவளா சொல்றாளான்னு பாப்போம். அவளே சொல்லுவா. இல்லேன்னா ஊருக்கு போயிட்டு வந்து பேசுவோம். அடலீஸ்ட் அவ லவ்வாது சொல்லிடுவா. என் மிஸ் பண்ணுவா. கண்டிப்பா கூப்டுவா. அதுவரைக்கும் பொறுமையா இருப்போம்என முடிவுடன் பயணத்தை தொடர்ந்தான்.

கோவிலுக்கு வந்த திவியும் ஆதி கிளம்பிய செய்தி கேட்டதும் முகம் வாட தனியே சென்றுவிட்டாள். ஏனோ அவளுக்கு ஆதியை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. முடிந்தால் அவனிடம் இன்றே அனைத்தையும் கொட்டிவிட எண்ணினாள். எதை கூறுகிறாளோ இல்லையோ தனது நேசத்தை உடனே கூறவேண்டுமென எண்ணியே வந்தாள். ஆனால் அவன் இல்லை என்றதும் ஏனோ மனது பாரமாக இருந்தது.

உடனே கூப்பிட்டு சொல்லுவோமா? என எண்ணியவள் தன் காதலை கூறும் போது அவனது மகிழ்ச்சியை கண்கூடாக காணவேண்டுமென தோன்ற இன்னும் 3 நாள் தானே நேரலையே சொல்லுவோம். வெயிட் பண்ணலாம். பொறுமையா இருப்போம்என அவளும் இருந்துவிட்டாள்.

[இதுவரை எந்த விஷயத்திலும் பொறுமையை கையாளாத இருவரும் இந்த காதலை வெளிப்படுத்துவதில் பொறுமையுடன் காத்திருக்க நினைத்தது அவர்களது கெட்ட நேரமே.]

அவளது வாடிய முகம் கண்டவர்கள் அவளை அழைத்து பேச, அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் எனஇருப்பதை கண்டதும் மதி அவளிடம் வந்துஅவன் சொல்லாம போயிட்டானேன்னு கோபமா?”

கோபம் இல்ல, வருத்தம் தான்.. ஏனோ பாக்கணும் போல இருக்குஎன வாய்விட்டே கூறிவிட்டாள்.

முகம் மலரராஜா சொன்ன மாதிரி சீக்கிரம் உங்க 2 பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம். . ஊருக்கு போனதும் உங்க வீட்லையும் பேசி சிம்பிள சீக்கிரம் நிச்சயம் வெச்சுக்கலாம். சரியா?” என வினவ

தான் கூறியதை உணர்ந்தவள் இன்னும் ஆதியிடம் தங்களது காதலை பகிரவில்லையே என நினைக்க அவள் சுற்றி அனைவரையும் பார்த்து திரு திருவென முழிக்க அவர்கள்எங்க எல்லாருக்கும் சம்மதம் தான். நாங்களே எப்போன்னு தான் காத்துகிட்டு இருக்கோம்.” என இவள் பெற்றோர் சம்மதத்திற்கு தயங்குகிறாள் என எண்ணி பதில் அளித்தனர். பின் அவளும் எப்பிடியும் ஆதிகூட தானே லைப். இரண்டுபேரும் லவ் பண்றோம். வேற என்ன. அவரு வந்ததும் சொல்லிடலாம். என நினைத்து அவளும் தலையசைத்தாள்.

பிறகு அனைவரும் மகிழ்வுடன் அடுத்த நாள் கிளம்ப உடன் தாத்தாவும் பாட்டியும் இவர்களுடன் சேர்ந்தே வந்தனர். வந்ததும் திவியின் குடும்பத்தார்களிடம் பேசி ஞாயிறு அன்று நிச்சயம் வைத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

ஆதியும் அதற்குள் வந்துவிடுவான். அவனிடம் நேரில் சொல்லி இன்ப அதிர்ச்சி குடுக்கலாம் என யாரும் அவனிடம் சொல்லவும் இல்லை. அதற்கும் அர்ஜுனும், அரவிந்தும் அவன்கிட்ட இப்போவே சொன்னா இன்னும் 4 நாள் நடுவுல இருக்கேன்னு கேட்டு உங்களுக்கு அதிர்ச்சி குடுப்பான் அதனால நேர்ல வந்த அப்புறம் அவனே தெரிஞ்சுக்கிட்டும்

எப்படித்தான் எங்க தங்கச்சி அவனை சமாளிக்க போறாளோ என அனைவரும் கிண்டலும் கேலியுமாக கூற திவி அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் திவி பிறரோடு பேசினால் என்றாலும் முன்பு போல இல்லை. ஏனோ அவள் மனம் முழுக்க ஆதியே நிறைந்திருக்க அவனோ தான் வர இன்னும் 2 நாள் ஆகும் என இவளது பிபியை எகிற செய்துகொண்டு இருந்தான். அவன் கூறிய கணக்கு இவர்கள் குறித்த நிச்சய தேதி அன்றே அவனும் தன்னால் வரமுடியும், வேலை இழுத்துவிட்டது என கூறினான். அதிகமாக அவனிடம் யாருமே பேசவில்லை. அவனுக்கும் வேலை, இங்கே அனைவரும் நிச்சயம் வேலை என பிஸியாக இருக்க, திவிக்கு கொஞ்சம் அவன் மேல் கோபம், கொஞ்சம் கூச்சம், அவனை நேரில் தான் பார்த்து பேசவேண்டும் என்ற ஆவல், அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென ஒரு எண்ணம், இல்லையெனில் அவன் அழைத்தால் பேசலாம் என கலவையான உணர்வில் திளைத்தாள்.

வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாக சென்னை செல்ல வேண்டுமென ஆதி கூறினான். அவனிடம் முடியாது என கூறினால் ஏன் அங்க என்ன வேலை என்று தோண்டி துருவுவான். போனா 2 நாள் ஆகும். ஆனா அந்த கிளைன்ட் லண்டன் போறாரு. அதுக்குள்ள டீடைல்ஸ் காட்டணும். என்ன பண்றது என யோசிக்க

திவிதான்அண்ணா, பரவால்ல அவரு போயிட்டு வரட்டும். இது உங்க இரண்டுபேரோட உழைப்புக்கு கிடைச்ச பரிசு. எவ்வளோ நாள் வெயிட் பண்ணதா நீங்களே சொல்லறீங்க..அப்புறம் எப்படி அத வேண்டாம்னு சொல்றது. நிச்சயம் இப்போ நடக்காட்டி என்ன அவரு வந்ததும் இன்னொருநாள் வெச்சுக்க வேண்டியதுதான். இந்த பீல்ட்ல உங்கஇரண்டு பேருக்கும் கிடைக்கற ஒரு ஒரு வெற்றியும், அவரோட கனவு.

அத அழியக்கூடாது அண்ணா. நிச்சயத்தை நிறுத்திடலாம். என அவள் கூற திவியின் அண்ணன் சிவாவாய மூடு திவி..”

அரவிந்த்என்ன பேச்சுமா இது.”

அர்ஜுன்அப்படியெல்லாம் பேசாத திவிஎன ஒரே நேரத்தில் உடன் பிறவா 3 சகோதரர்களும் அதட்ட

திவி தலை குனிந்து நிற்க அவளது மன வேதனை உணர்ந்தவன் போல அர்ஜுன் அவள் அருகில் வந்துநான் போய்ட்டுவரேன். அவனை இங்க வர சொல்லிடலாம். உங்களுக்கு நிச்சயம் நல்லபடியா நடக்கட்டும். நான் உன் கல்யாணத்தை நேர்ல பாத்துக்கறேன். இந்த பிளான்ல நிச்சயமும் நடக்கும். வேலையும் கெடாது. உன் புருசனோட கனவும் அழியாது. சரியா? இனிமேல் இப்டி எல்லாம் உளறாம போயி சமத்தா கனவு காணு போ.” என அவளும் மெலிதாக சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். அதனால அர்ஜுனும் கிளம்பிவிட ஈஸ்வரி, அவர்கள் குடும்பத்தாரும் முந்தைய நாள் வந்து சேர்ந்தனர் சுந்தரின் நண்பனுக்கு அடிபட்டது என அவன் சென்றுவிட்டான். அவனால் வரமுடியவில்லை. பரமேஸ்வரனும் ஊரில் வேலை அதிகம் என்பதால் வரமுடியவில்லை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38

உனக்கென நான் 38 சந்துருவுக்கு அந்த பெண்கூறிய ‘சுவேதாவை பார்சல் பன்னிடலாம்’ என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. கூடவே எழிலரசி இறந்த காட்சியும் மாறி மாறி வந்து சென்றது. கூடவே அவள் கூறிய பெயர்களையும் நினைத்து பார்த்தான். எழில், சுவேதா, பார்வதி,