Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

37 – மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்முநகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமாஎன்று புலம்ப

மதிபோட்டுகோடா. இன்னைக்குத்தான் நிச்சயம் ஆயிருக்கு. ஒன்னும் இல்லாம இருந்தா நல்லா இருக்காது. எல்லாரும் வீட்டுக்கு போறதுக்கு பொழுதாயிடும். எங்க வைக்கமுடியும் சொல்லுஎன அம்மு முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள

மல்லிகாஎன்னாச்சு என் மருமகளை என்ன சொன்னிங்க? “

மதிஉங்க மருமகளை ஒன்னும் சொல்லல. நகை இத்தனையும் போட்டுக்கிட்டு இருக்கமுடிலேன்னு சொல்றா.” என கூற மல்லிகாபாவம், அவளுக்கும் கச கசன்னு இருக்கும் தானே. பேருக்கு 2 செயின் போட்டுக்கிட்டும். மீதியை வேணும்னா கழட்டிடு மா. “

ஆனா எங்க வைக்க முடியும். இவளை அனுப்பமுடியாது. அபியும் கொஞ்சம் டயர்ட்டா இருக்குனு மாப்பிளையோட அங்க உக்காந்துஇருக்கா. நாம எல்லாம் இங்க பொங்கல் வெக்கிறதால போகமுடியாது. சுபி, அனு எல்லாரும் சின்ன புள்ளைங்க. அவ்ளோ நகையை கொடுத்தும் அனுப்ப முடியாது. ஆதியும் ஏதோ வேலை விஷயமா பிஸியா போன் பேசிட்டு இருக்கான்.”

சரி, திவிய போயி வீட்ல வெச்சுட்டு வர சொல்லிடலாம்.” என அவளை அழைத்து கூறினர். மதி வீட்டு பீரோ சாவியை குடுத்து வைத்துவிட்டு வர சொன்னார்கள்.

மல்லிகா அவளை தடுத்துஇரு மா, நகையெடுத்திட்டு வயசு பொண்ணு நீ மட்டும் நடந்து போகவேண்டாம். அர்ஜுன கூட்டிட்டு போ. ” என அவனையும் திவியையும் வீட்டிற்கு அனுப்பினர்.

அண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்று பீரோவில் வைக்க பார்க்க பீரோவை திறக்க முடியவில்லை. அர்ஜுனும் முயன்று பார்த்து முடியவில்லை என விட்டுவிட்டான்.

இறுதியில் திவிஅண்ணா, இது வேலைக்காகாது. இவளோ நகையை சும்மா வெளியையும் வெக்க முடியாது. மாடில என்னோட சூட்கேஸ்ல வெச்சு பூட்டிரலாம். ஏன்னா அதோட கீ தான் என்கிட்ட இருக்கு. மதி அத்தைகிட்ட சொல்லி நைட் வந்து எடுத்துகுடுத்திடலாம்.” அவனும் சரி என உடன் சென்றான். இவர்கள் நகையை பத்திரப்படுத்திவிட்டு அங்கிருந்து பால்கனியில் ஏதோ சத்தம் வருவது போல இருக்க இருவரும் சென்று பார்க்க ஒரு குருவி அங்கே வைத்திருந்து கொடியின் கிளையில் சிக்கிக்கொண்டு தவிக்க அதை அர்ஜுனிடம் காட்டி எடுத்துவிட சொன்னாள். அவனும் எடுத்து பறக்கவிட அருகி இருந்த அறையில் பேச்சு குரல் கேட்டு இருவரும் அங்கேயே நின்றனர்.

ஈஸ்வரியும், சோபனாவும்தான் பேசிக்கொண்டிருந்தனர்.

ஈஸ்வரிச்ச, இப்படி ஆயிடிச்சே. பிளான் பண்ணமாதிரி எண்ணைல வலிக்கி அபி விழுந்திருந்தா ஒரே நேரத்துல அபி, அம்மு இரண்டுபேரையும் பழிவாங்கிருக்கலாம்.”

சோபனாஆமா மா, இன்னைக்கு நடந்தது எல்லாமே சரியாதான் போச்சு. அந்த திவி இல்லாம இருந்திருந்தா பாதி வேலை இன்னைக்கே முடிஞ்சிருக்கும்.”

என்னடி, பண்றது எல்லாம் அந்த கடன்காரியல வந்தது. நமக்கு எப்போவும் அவளால தான் பிரச்சனை.”

விடுமா, எடுத்ததும் பிளான் பண்ணமாதிரி நடந்திட்டா போர் அடிச்சிடும். எப்படியும் ஆதியை எனக்கு கல்யாணம் பண்ண விடமாட்டாங்க. சோ அவங்கள பழிவாங்குறதுதான் முழு வேலை. அதனால நெறைய டைம் இருக்கு. “

நேத்து எல்லாருக்கும் ஒரு ஒரு பிளான் வெச்சுயிருக்கன்னு சொன்ன சரிஆனா யாரும் இத கண்டுபுடிக்க மாட்டாங்களா? “

அம்மா, இந்த குடும்பத்துல இருக்கற கெட்ட பழக்கம் என்ன தெரியுமா? எல்லாருக்கும் நல்லவங்களாவே இருக்கனும், மத்தவங்க சந்தோசம் முக்கியம்னு நினைக்கிறது. அதுக்காக விட்டுகுடுக்கணும்னு நினைக்கிறதுதான். அடுத்தவனுக்காக எமோஷனலா யோசிச்சு முடிவெடுக்கறவங்களுக்கு இந்த மாதிரி கிரிமினல யோசனை எல்லாம் வராது. முக்கியமா குடும்பத்துல இருங்கறவங்க இப்டி பண்ராங்கனு சொன்ன நம்பமாட்டாங்க. ஒருவேளை எப்படியாவது தெரிஞ்சு நாமதான் இதெலாம் பண்ணோம்னு நம்பினாலும் அழுது, புலம்பி தெரியாம, கோபத்துல ஏதோ பண்ணிட்டேன்னு அத்தைகிட்ட சொன்னா, அதையும் நம்பி திருந்த சான்ஸ் குடுக்கறேன்னு திரும்ப என் வலைல விழுவாங்க. சந்திரா அத்தைய வழிக்கு கொண்டுவந்திடா போதும் மீதி இருக்கறவங்க எல்லாம் சாதாரணம். ரொம்ப பிரச்னை வந்த அப்பறம், இல்ல உண்மை தெரிஞ்ச அப்புறம் உக்காந்து அழுகைதான் அவங்களுக்கு தெரியும். நான் என்ன பண்ணுவேன்னு அவங்க யோசிக்கிறதுக்குள்ள நான் அடுத்த பிரச்சனைய குடுத்திடுவேன். அதனால யாரும் எதுவும் பண்ணமுடியாது. எனக்கு அவங்ககிட்ட நல்லபேரு எடுக்கறது முக்கியமில்லை. என்ன வேண்டாம்னு சொன்னதுக்கு, எனக்கு கிடைக்காத சொத்து பணம் சரி அந்த ஆதியும் சரி எதையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன். மத்தவங்கள அனுபவிக்கவும் விடமாட்டேன். இந்த திவியும் எல்லா நேரத்துலையும் என் லைன்ல கிராஸ் பண்ணா அவளுக்கும் பிரச்சனை தான். அவளை அந்த குடும்பத்துல இருந்து கொஞ்சம் விலக்குனா போதும். அவளுக்கும் அந்த பாமிலில எல்லாரும் சந்தோசமா இருக்கனும் தானேயாரை எதுசொன்னாலும் இப்படி வரிஞ்சுக்கட்டிக்கு வரா. சோ அவளையும் அத வெச்சேபிளாக் மெயில் பண்ணுவோம். “

அர்ஜுனை அங்கேயே மறைந்துநிற்க சொல்லிவிட்டு திவி மட்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். “செம்ம பிளான். அழகா எல்லாரையும் புரிஞ்சு வெச்சுயிருக்க சோபிஎன்றதும் இருவரும் முதலில் திகைத்தனர்.

முதலில் சுதாரித்த சோபிஎன்ன பிளானியும் கேட்டியா? போயி எல்லார்கிட்டயும் சொல்லபோறியா? உடனே போயி சொல்லு போ.” என ஏளனமாக கூற

திவி சிரித்துக்கொண்டேநான் எதுக்கு போயி சொல்லணும். எனக்கு வேணும்ங்கிற வேலைய நீ செய்யற. எனக்கும் அவங்க பணம், சொத்து தான் முக்கியம். அத அடைய தான் இவ்வளவும்.” என்றவளை நம்பாத பார்த்த சோபிஇப்டி பொய் சொன்னா நான் நம்பிடுவேன்னு நினைக்கிறியா? நீயும், ஆதியும் லவ் பண்றிங்கன்னு தெரியும். வீட்லயும் எல்லாரும் அடுத்து உங்க கல்யாணத்த பத்தி பேசுற அளவுக்கு போயிடிச்சு. அந்த குடும்பத்துல எல்லாருக்கும் உன்ன அவ்ளோ புடிக்குமே. நீயும் உருகுவியே. இப்போ இப்படின்னு சொன்னா நான் எதுவும் பண்ணாம விட்ருவேன்னு நினைக்கிறியா? எப்படியும் உனக்கும் ஆதிக்கும் நடக்கற கல்யாணத்த நான் தடுத்தி நிறுத்துவேன். “

ஆதிக்கு விருப்பம் என்பது மட்டும் அறிந்தவளுக்கு, ஆதிக்கும், தனக்கும் குடும்பமே திருமண பேசுகிறது என்பது புது தகவல், ஆனந்த அதிர்ச்சியாகவும் இருந்தது. இருப்பினும்

கரெக்ட் சோபி, அவங்க கல்யாணம் பண்ற அளவுக்கு பேசுறமாதிரி நான் இருந்திருக்கேன்னா சொத்து எனக்குதானே வரும். எல்லாரையும் பத்தி சரியா யோசிச்ச நீ, என் விசயத்துல தப்பு பன்னீட்டியே? நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் இல்ல. ஓகே உனக்கு மொதல்ல இருந்து சொல்றேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஆசை. நிறையா பணம் இருக்கனும். கணக்கு பாக்காம செலவு பண்ணனும். லைப்ப என்ஜோய் பண்ணனும்னு. மதி அத்த பாமிலய அங்க பாத்தபோதே டிசைட் பண்ணிட்டேன். வெளில சுத்தாமா, பிரெண்ட்ஸோட இருக்காம வேலை இல்லாமலா தினமும் அவங்ககூடவே இருங்கறது அந்த பேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு இருந்தேன். எல்லாமே அவங்க சொத்துக்குத்தான். ஆனா எனக்கு டிஸ்டர்ப் பண்ணி, பழிவாங்கி சொத்தை அடையறது இன்டெரெஸ்ட் இல்ல. யோசிச்சு பாரு அப்டி பண்ணாலும் என்னைக்காவது உண்மை தெரிஞ்சிடுமோ என்னாகுமோன்னு யோசிக்கணும், அதுக்கு தனி பிளான் பண்ணனும். ஒருத்தர் ஒத்துக்கிட்டாலும், இன்னொருத்தர் பிரச்னை பண்ணுவாங்க. இப்போ உனக்கு இருக்கே அந்த மாதிரி. இட்ஸ் சோ காம்ப்ளிகேட்டேட்ல. அதான் உரிமையா உள்ள போயி உக்காந்திட்டா யாரும் எதுவும் பண்ணமுடியாது. இத்தனை வருஷமா அவங்ககூட இருக்கேன். ஒரு ஒருத்தருக்கும் என்ன என்ன வேணும்/ எப்படி பேசணும். என்ன மாதிரி சொன்ன கேப்பாங்கனு எல்லாமே தெரியும். அந்த வீட்ல எனக்கான உரிமை ரொம்ப இருக்கு அதுவும் இப்போ சொல்லவே வேண்டாம். உனக்கே தெரிஞ்சிருக்கும். நீ அவங்களுக்கு பிரச்சனை குடுத்தாலும் அத நான் தடுக்க தடுக்க எனக்கான வேல்யு அதிகம்தான் ஆகும். இல்ல அந்த பிரச்சனைல அவங்க பாதிச்சாலும் அவங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு அவங்ககூடவே இருப்பேன். அப்போவும் அவங்க என் பேச்சை தான் கேப்பாங்க. எனக்கும், ஆதிக்குமான கல்யாணத்த நிறுத்துனாகூட உங்கனால தான் பிரச்னை அதுவும் சொத்துக்காகத்தான். அபி, அம்மு, அனு பேர்ல பாதி பாதியா எல்லாம் இருந்தா அவங்களுக்கு இண்டிரெக்டா பிரச்சனை குடுப்பாங்க. சோ என் பேர்ல சொத்து இருங்கட்டும் அப்போதான் பிரச்சனை பண்ண யோசிப்பாங்கன்னு சொன்னா கண்டிப்பா எழுதி குடுத்துடுவாங்கஒரு பார்ட் ஆதிக்கு. அதுவும் இப்போ எழுதி வாங்குறதுல பெரிய ப்ரோப்லேம் இருக்காது. அண்ட் இன்னொன்னு என்ன சொன்ன? ஆதியை லவ் பன்ரேன்னா? அவரு பன்றாரு. நான் வாய திறந்து இதுவரைக்கும் அவர்கிட்ட லவ் பன்றேன்னு எப்போவாது சொல்லிருக்கேனா? வீட்ல மேரேஜ் பண்ணறதும் அவங்களோட இஷ்டம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இவரு லவ்வே பண்ணாடியும் இந்த மேரேஜ் டிஸ்கேசன் நடந்திருக்கும். ஆதி ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. அதனால அவரை கன்ப்யூஸ் பண்றதுக்கு தான் இத்தனையும். அவரு என்கிட்ட அவரோட பீலிங்ஸ காட்டுனாலும் நான் அத முழுசா தடுக்கவுமில்லை, ஏத்துக்கவுமில்லை. ஒருவேளை பின்னாடி ஏதாவது ப்ரோப்ளேம்னாலும் ஆதிகிட்ட சொல்லிடுவேன். நான் லவ் பன்றேன்னு சொன்னேனா. பாமிலில தானே டிசைடு பண்ணாங்கன்னு. அவரும் எதுவும் சொல்லமுடியாம போய்டுவாரு. சோ நீ அந்த குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னை பண்ணாலும் எனக்கு கவலை இல்ல. யாரு என்ன பண்ணாலும் எனக்கு வேணும்கிறது தானா கிடைக்கும். அதனால உன் பிளான்ஸ மத்தவங்ககிட்ட வெச்சுக்கோ. என் பக்கமா திருப்ப பாத்த நான் என்ன சொன்னாலும் செய்ய மொத்த குடும்பமும் இருக்கு. ஆதியும் சேத்தி தான்..கடைசியா உனக்கு புரியறமாதிரி சொன்னா உனக்கு சொத்து பேமிலி, ஆதினு எதுவுமே கிடைக்காது ..” என அவள் கூறி முடிக்க ஈஸ்வரிஅடிப்பாவி, குடும்பத்துக்குள்ள சொத்து பிரச்னை வரது அடுச்சுக்கறது சகஜம். ஆனா உன்ன அந்த குடும்பமே அவ்ளோ நம்புதே. இப்டியா பண்ணுவ? “

ஏளனமாக சிரித்துவிட்டுநானா நம்ப சொன்னேன்.”

சோபிஉன்ன கொன்னுட்டு நான் நினைச்சதை அடைவேன்டி

திவிஇன்னும் சின்ன புள்ள மாதிரி திங்க் பண்ணாத, ஆதியோட பவர் தெரியாம பேசிட்டு இருக்க. என்ன நீ கொல்ல ட்ரை பண்ணாலும் ஆதி என்ன சாகவிடமாட்டாரு. எனக்காக செலவு பண்ணி காப்பாத்த மொத்த குடும்பமும் இருக்கும். ஒருவேளை கொன்னாலும் அந்த குடும்பத்துக்கு நான் தியாகி தான். முக்கியமா ஆதி அதுக்கு காரணமானவங்கள கண்டுபுடிக்காம இருப்பாரா சொல்லு. கண்டுபுடிச்சு அணு அணுவா சித்ரவதை பண்ணி கொல்லுவாறு. அவரால என்னை மறக்க முடியாது. அதனால நீ நினைச்சது நான் செத்தாலும் நடக்காது. சொத்தும் உனக்கு வராது. அந்த சொத்து ஒட்டுமொத்தமா எனக்கு தான். ” என அதில் உள்ள உண்மையா உணர்ந்தவள் அமைதியாக இருக்க

திவி சோபியின் தோள் மேல் கை போட்டுஅடிச்சாக்கூட எந்திருக்கறது ஈஸி தான். ஆனா இவ்ளோ பாசமா இருந்திட்டு நம்ப வெச்சு ஏமாத்துனா அவ்வளோ சீக்கிரம் அந்த வலில இருந்து வெளில வரவும் முடியாது. அடுத்து யாரையும் உடனே நம்பவும் மனசுவராது. கரெக்ட் தானே. அப்டி இருக்கும் போது நீ சொல்ற பிளான்க்கு பவர் அதிகமா இல்ல என் பிளான்க்கான்னு யோசி. என்ன விட வயசுல தான் பெரியவ நீ. அறிவு கொஞ்சம் கம்மித்தான்ல. போயி வேற பிளானை யோசிச்சிட்டு வா.” என்றதும் சோபனாவும் தான் இவளை நல்லவள் என்று தவறாக எண்ணிவிட்டோமோ என நினைத்து அவள் கூறிய அனைத்தும் உண்மை. நான் என்ன பண்ணாலும் பண்ணாட்டியும் அவ பிளான் பண்ணமாதிரி சொத்து, ஆதி எல்லாமே கிடைச்சுடும். என்றவள் தான் தோற்றுவிட்டதை ஜீரணிக்க முடியாமல் அந்த இடத்தில் இருந்து விருட்டென்று வெளியேறினாள். ஈஸ்வரியும் பின்னோடே சென்றுவிட்டாள்.

அவர்கள் முன் கதவு வழியாக வெளியேறியதும் பின் கதவு வழியாக உள்ளே நுழைந்த அர்ஜுன்திவி, என்னாச்சு. இப்போ ஏன் இப்டி எல்லாம் பேசுற. அவங்கள பத்தின விஷயம் ஏதோ உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போலவே.”

திவி முந்தைய நாள் அவள் கேட்டதை கூறி அதனாலதான் காலைல அபி அண்ணி விழபோனது, நிச்சயம் நடக்க விடாம பிரச்னை பண்ணதுல பேசுனது எல்லாமே அவங்க பிளான் என கூறினாள்.

அர்ஜுன் முஷ்டியை இறுக்கிநீ ஏன் அப்டின்னா இன்னும் யார்கிட்டேயும் இத சொல்லாம இருக்க. அதுவுமில்லாம நீ சொத்துக்காக தான் பழகுறேன்னு ஏன் பொய் சொன்ன?”

அண்ணா அவங்க பேசுனத கேட்டும் நீங்க இப்டி சொல்றிங்களே அண்ணா, சோபி எவ்வளோ தெளிவா சொன்னா, திவிக்கு இந்த குடும்பத்துல யாரும் ரொம்ப கிரிமினல யோசிக்கமாட்டாங்க. அவங்க தெரிஞ்சுக்கிட்டாலும் நான் அழுது புலம்பி சமாளிச்சிடுவேன்னு, நான் எல்லார்கிட்டயும் சொன்னாலும், எல்லாரும் அவளை திட்டறாங்க, சண்டை போடறாங்கனு வைங்க. அதுக்கப்புறம் ஒருஒருத்தருக்கும் எங்க இருந்து பிரச்னை வரும்னு பாத்துகிட்டேவா இருக்கமுடியும். நான் அவங்களுக்காக எதுவேணாலும் பண்ணுவேன்னு தெரிஞ்சா அவளே சொல்றா பிளாக் மெயில் பண்ணுவான்னு.”

அப்டினா இது எத்தனை நாளைக்கு? “

இப்போ இங்க இருக்கற வரைக்கும், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாம ஊருக்கு போவோம். அதுவரைக்கும் அவளை யோசிக்கவிடக்கூடாது. இப்போ நான் சொன்னதுல அவ குழம்பி போயி எது உண்மை நான் நல்லவளா கெட்டவளான்னு மொதல்ல தெரிஞ்சுக்கணும் அதுவரைக்கும் அவ வேற எதுவும் பழிவாங்க யோசிக்காம குழப்பத்துல இருப்பா. நாம அங்க போனதும் வீட்ல முக்கியமா ஆதிகிட்ட எல்லாத்தையும் பேசி டிசைடு பண்ணலாம். நமக்கு குடும்பமும் முக்கியம் அண்ணா. ஈஸ்வரி ஆன்ட்யும், சோபியும் பண்ண தப்புக்கு சுபி, சுந்தர், அங்கிள் எல்லாம் என்ன பண்ணுவாங்க. அவங்கள நினச்சு மதி அத்தையும் பாட்டியும் கூட கவலைப்படுவாங்க. நாம ஒரு முடிவு பண்றவரைக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம்என பேசிக்கொண்டிருக்க அதை ஆமோதித்த அர்ஜுன் திகைத்து பார்க்க அவன் பார்வை சென்ற திசையில் திவி பார்க்க பரமேஸ்வரன் உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றுகொண்டிருந்தார்.

அங்கிள், நீங்க என இழுக்க

உள்ளே வந்தவர்என் மனைவியும், பொண்ணும் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்மா.”

என்ன அங்கிள் அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? மாறிடுவாங்க கவலைப்படாதீங்க..”

இல்ல, அவங்க மாறமாட்டாங்க. ஆரம்பத்துல இருந்தே கண்டுக்காம விட்டுட்டேன். இப்போ குடும்பத்துலேயே இவளோ பிரச்னை பண்ணி கொலை பண்ண துணியற அளவுக்கு போய்ட்டாங்க. ஆனா உன்கிட்ட ஒரு உதவி கேக்கணும். இந்த விஷயம் வெளில யாருக்கும் தெரியாம பாத்துக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணி தருவியா? ” என கேட்க

அர்ஜுன்என்ன பேசுறீங்க சித்தப்பா நீங்க, அவங்க என்னவெல்லாம் பண்றங்கன்னு தெரிஞ்சும் அத தடுக்காம யாருக்கும் சொல்லாம மறச்சு வெக்க சொல்றிங்களா? ஒரு ப்ரெக்னென்ட்டான பொண்ண கொலை பண்ண பாத்துஇருக்காங்க. எங்க நிச்சயத்தை நிறுத்த பாத்திருக்காங்க. உங்க பொண்ணோட நிச்சயம் நின்றிந்தா இப்படி கேப்பிங்களா? ” என கோபத்தில் கத்த

அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையாக இருங்கஎன அர்ஜுனிடம் கெஞ்சி கொண்டு இருக்க

பரமேஸ்வரன்இருக்கட்டும் மா, விடு, அர்ஜுன் பேசுறதுல தப்பில்ல. ஆனா எனக்கு சோபனா மட்டும் பொண்ணு இல்ல. சுபியும் இருக்கா. சோபனவா அவ அம்மா குடும்பத்தோட விட்டு இப்டி பணபைத்தியமா வளத்தி வெச்சதுக்கே நான் தினமும் செத்துக்கிட்டு இருக்கேன். நான் எதையுமே பேசாம கண்டுக்காம ஊமையா இருந்தே வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு. ஆனா இது வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சா அப்பா, அம்மா கண்டிப்பா இந்த வீட்ல இருக்கக்கூடாதுனு சொல்லி அனுப்பிச்சுடுவாங்க. முகத்துலையே முழிக்க மாட்டாங்க. வெளில விஷயம் தெரிஞ்சு அக்காகாரி இந்தமாதிரின்னு தெரிஞ்சா சுபியோட வாழ்க்கை கல்யாணம் எல்லாம் என்னவாகுமோ அதுதான் எனக்கு கவலை. அதனால தான் நான் அப்டி கேட்டேன்.” என அவர் தலை குனிந்து நிற்க

திவிக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது அவரிடம் வந்தவள்அங்கிள், சுபி எனக்கும் தங்கச்சி மாதிரி தான். அவ வாழ்க்கை முக்கியம். கண்டிப்பா ஆதியை தவிர வேற யார்கிட்டேயும் இத நான் சொல்லமாட்டேன். அவரு மூலமாவும் வெளில போகாது. என்ன நம்பலாம். சத்தியம்என்றாள்.

பரமேஸ்வரன்ஆதிக்கிட்ட கண்டிப்பா சொல்லனுமா மா? அவன் கோவக்காரன் மா

கண்டிப்பா அங்கிள், அவர்கிட்ட மறைச்சு செய்யற எதுவும் என்கிட்ட இருக்காது. அவர்கிட்ட நான் உண்மையா இருக்கனும். அவரு கோபாவக்காரனாலும் அதே அளவுக்கு அடுத்தவங்க மனசையும் புரிஞ்சிப்பாரு. அந்த அளவுக்கு பாசமும் கூட. ஆதிகிட்ட சொல்லுவேன். ஆதிகிட்ட மட்டும் தான் சொல்லுவேன். நீங்க நினைக்கிற மாதிரி வேற எந்த பிரச்னையும் வராது.” என அவள் உறுதியாய் கூற அவரும் வெளியேறினார்.

அர்ஜுன்நீ சொல்றது எல்லாம் புரியுது. வேறவழியில்ல தான். ஆனா எனக்கு இந்த சத்தியம் தேவைல்லாததுனு தோணுது. சரி, எதுனாலும் என்கிட்ட சொல்லு. அண்ணா உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் சரியா? “

அவளும்தேங்க்ஸ் அண்ணா.” என்று இருவரும் மீண்டும் கோவிலுக்கு சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம் சகோஸ்,  நான் கௌரி முத்துகிருஷ்ணன், இது எனது பயணங்கள்  முடிவதில்லை கட்டுரை போட்டிக்கான எனது படைப்பு. கல்லூரி காலம் அனைவருக்கும் இனிமையானது, மறக்க முடியாதது நெஞ்சில் இனிமை சேர்க்கும் கல்லூரி சுற்றுலா பற்றிய கட்டுரை. இங்கு சில காரணகளுக்காக என்

மேற்கே செல்லும் விமானங்கள் – 2மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

62 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன்.