Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 16

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 16

“என்ன காரியம் பண்ணிட்டடா.வெண்ணெய் திறண்டு வரும் போது தாழி உடைந்த கதையாய்.இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தாள் அவளே மாறி இருப்பாள்.இப்போதே அவளிடம் மாற்றம் வந்து கொண்டுதானே இருந்தது”.

“புடவையே கட்ட தெரியாது என்றவள் நான் சொன்னதற்காக வாரம் இரண்டு நாட்கள் அவளாகவே புடவை கட்டி கொண்டு போகிறாள்.மீன் எனக்கு பிடிக்கும் என்று ஞாயிறு அவளே மீன் விதவிதமாக சமைக்கிறாள்.கண்ணை பார்த்து பேச மறுக்கிறாள். நண்பன் என்றவள் மற்ற நண்பர்களை போல் ஏன் என்னிடம் பழக முடியவில்லை.இப்படி அவள் யோசிக்க விடாமல் செய்துவிட்டாயடா மடயா” என்று தன்னையே நொந்து கொண்டவன் வெகு நேரம் நடந்து கொண்டு நடந்து கால் ஓய்ந்த பிறகே உறங்க ஆரம்பித்தான்.

 

அறையில் அழுது கொண்டிருந்த கீதாவிற்கோ,அவன் வெளியே சென்றதும் ஒரு வித குற்ற உணர்ச்சி வந்திருந்தது. “நீங்கள் சரியாகதான் இருந்தீர்கள் நான்தான் இது போல் உடையணிந்து உங்களை சோதித்து விட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்.இனி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுதியையும் அத்தானையும் இணைத்துவிட்டு நான் இங்கிருந்து செல்ல வேண்டும்.இல்லையென்றால் உங்கள் லட்டுக்கு துரோகம் செய்துவிடுவேன்” என்று விடிய விடிய அழுதாள்.

ஏன் என்றால் உண்மையில் நகுலனின் தொடுகையில் இவளும் தன்னை மறந்து கொண்டுதான் இருந்தாள்.தன் காதலன்.தன்னுள் முதல் காதலை விதைத்தவன் தன்னை தேடி வரும் போது அவளும் நெகிழதான் செய்தாள்.ஆனால் அவனின் லட்டு?அந்த கேள்வியே அவளது கண்ணீருக்கு காரணம் ஆனது.அவன் என்னுடையவன் இல்லை என்று.

காலையில் கண் விழிக்க முடியாமல் கண்கள் இரண்டும் எரிய கையில் சுரீர் என்ற வலியில் முகத்தை சுருக்கி அம்மா என்று சன்னமாக முனகினாள்.

“ஊசி போட்டு இருக்கிறேன் இனி ஒரு பிரச்சனையும் இல்லை.சாதாரண காய்ச்சல்தான்” என்ற குரலில் யாருக்கு என்ன ஆயிற்று என்று யோசித்து கொண்டு கண் விழிக்க முயன்றவள் முடியாமல் மீண்டும் தூங்கி போனாள்.

வெகு நேரம் உறங்கியவள் பிஞ்சு கரம் தலையை வருடுவதை உணர்ந்து சிரமமாக இருந்தாலும் கண்களை திறந்தாள்.

“ஹய்யா……. கீதாமா கண்ணு முழிச்சுட்டாங்க” என்ற அபியின் சத்தத்தை கேட்டு வேகமாக அவள் அருகில் வந்தான் நகுலன்.

“என்னமா எப்படி இருக்க?இப்ப ஒடம்பு பரவால்லையா? நான் பயந்து விட்டேன்”.          நகுலன்.

“ம்..நல்லா இருக்கேன் ஏன் என்னாச்சு”. கீதா.

“உனக்கு காலையில் இருந்து நல்ல காய்ச்சல்.டாக்டர் வந்து ஊசி போட்டும் நீ கண் திறக்காமல் இருக்கவும் நான் ரொம்ப பயந்து விட்டேன்”.

“ஓ..அப்படியா”..காலையில் கையில் சுருக்கென்று குத்திய வலி வந்ததே.அது ஊசிதானா என்று தனக்குள் பேசி கொள்பவள் போல் பேசி கொண்டவள்.வயிற்றின் சங்கடம் உணர்ந்து நகுலனை பார்த்து “சுவாதி எங்கே கொஞ்சம் வர சொல்கிறீர்களா?என்னால் எழ முடியவில்லை”.

 

“ஏன் கீதா என்னிடம் சொல் நான் செய்கிறேன்.பசிக்கிறதா பூஸ்ட் கலந்து எடுத்து வரவா”?        “அ..அது எல்லாம் வேண்டாம்.நான் சுவாதியிடம் சொல்கிறேன் நீங்கள் அவளை வர சொல்லுங்கள்”.

அவளின் வார்த்தைகளை கேட்ட நகுலனுக்கு கோபம் வந்தது.”இந்த நேரத்தில் அதுவும் உனக்கு காய்ச்சல் வந்திருக்கும் போது நான் என்ன செய்து விடுவேன் என்று என்னுடன் தனியாக இருக்க பயப்படுகிறாய்?நான் ஒன்றும் மிருகம் அல்ல என்னிடமே சொல்.சுவாதியை வர சொல் என்று என்னை மேலும் கஷ்ட படுத்தாதே.நேற்று நடந்ததற்குதான் நான் மன்னிப்பு கேட்டு விட்டேனே இன்னும் என்ன”….என்று அவன் பேசி கொண்டே போகவும்.

 

“நான் ரெஸ்ட் ரூம் போக வேண்டும்”.  கீதா.

“ஓ…. நானே உதவி செய்கிறேன்.அப்படி பார்க்காதே.தப்பாக இல்லை.அண்ணி கொஞ்சம் வேலையாக இருக்கிறார்கள்.நாளை நாகபட்டினம் செல்ல வேண்டும் என்று எல்லாம் தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்”.

“நிச்சயம் இனி உன் விருப்பம் இன்றி என் சுண்டு விரல் கூட உன் மேல் படாது.இப்போது வா” என்று அவளை தூக்க போனான். அப்போதுதான் உணர்ந்தவளாக இரவு தான் அணிந்திருந்த ஆடையின் நினாவு வர இல்லை என்று சொல்வதற்கு முன்பு நகுலன் அவளை தூக்கி இருந்தான்.தான் வேறு ஆடை அணிந்திருப்பதை பார்த்து ஆச்சரியபட்டவள் சுவாதி மாற்றியிருப்பாள் என்று தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டாள்.அவளையே கவனித்து கொண்டிருந்த நகுலன்.அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு. “நான்தான் உனக்கு காலையில் வேறு நைட்டி மாற்றிவிட்டேன்” என்றான் தரையை பார்த்து கொண்டே.

 

“என்ன”…என்று அதிர்ந்து போய் கேட்டவளை பார்க்காமல், பாத்ரூம் வாசலில் இறக்கிவிட்டவன். “காலையில் நான் ஆபிஸ்கு கிளம்ப வரும் போதே நீ அனத்தி கொண்டு இருந்தாய் பக்கத்தில் வந்து பார்த்து கூப்பிட்டேன்.நீ எந்த உணர்வும் இன்றி இருந்தாய்.எனக்கு என்ன செய்வது என்றே முதலில் புரியவில்லை”.

“அபியை எழுப்ப சுவாதி அண்ணி வந்தார்கள் உன் நிலைமையை பார்த்துவிட்டு என்னை உனக்கு உடை மாற்ற சொல்லிவிட்டு டாக்டருக்கு நான் போய் போன் பண்ணுகிறேன் என்று கீழே போய்விட்டார்கள்.வேறுவழி இல்லாமல்தான். அப்போதும் நான் கண்ணை மூடி கொண்டு தான் உனக்கு உடை மாற்றினேன்”.என்று கண்ணன் யசோதையிடம் தவறு செய்து மாட்டி கொண்டாள் முழிப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.                                                        அவனின் முகத்தை பார்த்த கீதாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்தாலும் அவனது தோற்றம் சிரிப்பை உண்டாக்கியது.

 

பாத்ரூமில் இருந்து கீதா வெளியே வருவதற்கும் சுவாதி அவளுக்கு சூடாக கஞ்சி எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது.

 

“என்னடி என்னாச்சு?நைட் நல்லாதானே இருந்த திடீர்னு என்ன காய்ச்சல்” .  சுவாதி.

அவளது கேள்வியில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.நகுலன் உடனே “நான் கீழே செல்கிறேன்” என்று ஓடிவிட்டான்.தோழியின் தொடர்ந்த கேள்வி பார்வையில் தப்பிக்க முடியாமல் தலை குனிந்தவள் “நைட் தலைக்கு குளித்துவிட்டு நன்றாக துவட்டவில்லை அப்படியே அபியோடு விளையாண்டு கொண்டு தூங்கிவிட்டேன்” என்று சமாளித்தாள்.

சுவாதியின் கூர்மையான பார்வையே “நீ சொல்வதை நான் நம்பவில்லை” என்பதை தெரியபடுத்தினாலும்,வேறு எதுவும் கேட்காமல் கஞ்சியை ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் அனைவரும் நாக பட்டினம் கிளம்பினர்.

சுவாதியின் வீட்டிற்குள் அவர்கள் நுழைந்த நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது.அங்கு கோவிந்தனை பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்.காரணம் கோவிந்தன்தான்.

எப்போது கோவிந்தன் சென்னை வந்தாலும் சுவாதி நாகபட்டினம் வர மறப்பதை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் இருப்பார்.அவர் சிரித்து பேசினாலும் அவரது கண்களை அந்த சிரிப்பு எட்டாது.ஆனால் இப்போது சுறு சுறுப்பாக முகம் முழுவதும் சிரிப்புடனும் அனைவரிடமும் வேலை வாங்கி கொண்டு இருந்த இந்த கோவிந்தன் அனைவருக்கும் புதிதாக தெரிந்தார்.

 

“வா மா…வாங்க சம்பந்தி,வாங்க மாப்பிள்ளை” என்று அனைவரையும் வரவேற்றவர்.அவரவர்க்கு ஒதுக்கிய அறைக்கு அழைத்து சென்றார்.அடுத்த நாள் மாலதிக்கு சாமி கும்பிட அனைத்து வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது.

அனைவரும் வந்த கலைப்பில் சாப்பிட்டுவிட்டு உறங்க செல்ல அர்ஜூனும் தனக்கு ஒதுக்கிய அறைக்கு வந்தவன்.சுவாதி தனது அக்கா,அம்மாவோடு இருக்கும் புகைப்படம் பெரிதாக்கப்பட்டு இருப்பதை வெறித்து கொண்டு இருந்தாள்.

“சுவாதி தூக்கம் வரவில்லை வா அப்படியே நடந்துவிட்டு வரலாம்”.   அர்ஜூன்.

“இல்லை நான் வரவில்லை.நீங்கள் போய் வாருங்கள்”.   சுவாதி.

“இங்கு பக்கம்தான் சென்றுவிட்டு உடனே வந்து விடலாம்.பிளீஸ் வாமா”…..   அர்ஜூன்.

“சரி போகலாம்”.      சுவாதி.

 

“சுவாதி உனக்கு ஒன்று காட்ட வேண்டும்” என்று.தான் முதலில் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான் அர்ஜூன்.அதுவரை சாதாரணமாக வந்தவள் அவன் இருந்த வீட்டிற்குள் நுழையும் போது அவளே தடுத்தும் முடியாமல் பழைய நினைவுகள் எழ ஒருவித இறுக்கம் அவளை சூழ்ந்தது.

“வதுமா உனக்கு ஒன்று காட்ட வேண்டும் என்றேனே.இங்கே பார் என்று எடுத்து காட்டினான்.அது அவளது ஒரு கால் கொழுசு.எங்கு தொலைத்தாயோ அங்கேயே கொடுக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.நீ இல்லாத இந்த நான்கு வருடத்தில் எனக்கு உயிரளித்த ஒரே பொருள் இருக்கிறது என்றால் அது இதுதான்.வா நானே போட்டுவிடுகிறேன்”.                     அர்ஜூன்.

அவன் பேசுவதை காதில் வாங்காமல் அவள் ஒரு அறையையே வெறித்து கொண்டு இருந்தாள்.அவள் மனதில் இன்று ஏனோ அர்ஜூனை பார்க்கும் போது எல்லாம் இவன் தன் கணவன் என்று அவனிடம் உரிமை கொள்ள முடியவில்லையே என்ற இயலாமை கோபமாக மாறி கொண்டு இருந்தது.

“உனக்கு தெரியுமா வது.நான் இங்கு அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து நீ உங்கள் வீட்டு மாடியில் நடக்கும் போது பார்த்து கொண்டே இருப்பேன்.ஏஏஏய்….வது…ஏய் இவ்வளவு வேகமாக எங்கே போகிறாய்”.

“ம்….தொலைந்த பொருளை தொலைத்த இடத்தில் தருவதாக சொன்னீர்களே.பெண்களுக்கு உயிரைவிட மேலாக பாதுகாக்க வேண்டிய ஒன்றை என்னிடம் இருந்து பறித்தீர்களே அதை எப்படி தர போகிறீர்கள்.இங்கு வந்து பழைய நினைவுகளை நினைத்து கொண்டு இருக்கிறீர்களா?எனக்கு என்ன நினைவு வருகிறது தெரியுமா?இப்போது சொன்னீர்களே மாடி அங்கு நான் நடந்து கொண்டிருந்தது.அந்த மரத்தின் பின் நின்று இருவர் எங்கள் வீட்டையே பார்த்து கொண்டு இருந்தது.என்னை என் மானத்தை காப்பாற்றுவீர்கள் என்று நம்பி இதோ இந்த வாசல் கதவை தட்டியது.அப்புறம்,அப்புறம் மயங்கி விழுந்தது.காலையில் என்னை தொட்டுவிட்ட கடமைக்காக என் மேல் இறக்கப்பட்டு மணக்க கேட்டது.என் அம்மாவின் மரணம்.இதுதான் நினைவு வருகிறது.இந்த கொலுசுடன் நான் தொலைத்த இல்லை இல்லை என்னிடம் இருந்து பறித்த எனது கற்பை எப்படி தர போகிறீர்கள்” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு கொண்டே போனவள்.            அர்ஜூனின் “ஷட்அப்”………. என்ற கர்ஜனையில் அமைதியானாள்.                                        சுவாதியை கோபமாக நெருங்கிய அர்ஜூன் “என்னடி சொன்ன இப்ப சொல்லு,தைரியம் இருந்தாள் இப்ப சொல்லு.நானும் உன் மனம் நோக கூடாது என்று அமைதியாக இருந்தால் நீ இன்று அதிகமாக பேசிவிட்டாய்.உன் எல்லா சந்தேகத்துக்கும் இன்று ஒரு முடிவு கட்டுகிறேன்”.

“நான் உன் அக்காவிடம் இது வரை ஒரு வார்த்தை பேசியது இல்லை.நான் பேசி பழகிய முதலும் கடைசி பொண்ணும் நீதான், உன் அக்காவை நான் விரும்பவில்லை விரும்புவதாக நினைத்து கொண்டு இருந்தேன்.மாலதி இறந்த செய்தி கேட்டு சக மனிதனாக வருத்தப்பட முடிந்த என்னால் அவள் மரணத்திற்கு ஒரு நீதி வாங்கி தரமுடியும் என்றால் அதை செய்வதில் என்ன தவறு அதைதான் நான் செய்தேன்”.

“நீ கத்தி குத்துபட்டு இருந்தாயே அப்போது உணர்ந்தேன் உண்மை காதல் எதுவென்று,என் வாழ்க்கை எதுவென்று நீ கண் விழிக்கும்வரை செத்து பிழைத்தேன்டி.உனக்கெங்கே அது தெரிய போகிறது.நீ இருந்த அறைக்கு வெளியே பைத்தியகாரன் போன்று உட்கார்ந்திருந்தேன்.உன் அக்காவின் மரண செய்தி கேட்டு அடுத்து எப்படி அவனை பலி வாங்குவது என்று யோசித்து செயல்பட முடிந்த என்னால்.உனக்கு அடிபட்ட சமயம் எதையும் யோசிக்ககூட முடியாமல் என் படிப்பு,அந்தஸ்து எதையும் உணர முடியாமல் உனக்கு பணிவிடை செய்து கொண்டு நீ எப்போது விழிப்பாய் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.என் வாழ்கையே முடிந்துவிட்டது போன்ற உணர்வை நான் அப்போது உணர்ந்தேன்”.                                                                                                                                  “என் வாழ்வை கண்டு கொண்ட மகிழ்வோடு,என் காதலை வெளிபடுத்த எத்தனை முறை உன் வீட்டிற்கு வந்தேன் நினைவிருக்கிறதா?ஆனால் நீ என்னிடம் பேச மறுத்துவிட்டாய், பேச என்ன உன்னை பார்க்கவே முடியாமல் நான் எவ்வளவு சிரமபட்டேன் தெரியுமா?பைத்தியம் பிடிக்காத குறை தாண்டி என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்”.

“ம்ம்ம்……பிறகு நீ என்னை அடிக்கடி சொல்லி குத்தும் வார்த்தை.நம்பி வந்தவளை ஏமாற்றினேன் உன்னை வலுகட்டாயமாக எடுத்து கொண்டேன் என்று எப்படிடி இப்படி எல்லாம் உன்னால் பேச முடிகிறது?நான் சொல்வதை நன்றாக உன் காது குளிர கேட்டுக்கொள்.அஜூ என்று நீயும் விருப்பத்துடன்தான் அன்று என்னை அணைத்தாய்.என்னவள் என் மனைவி என்றுதான் நான் உன்னை தொட்டேன் மற்றபடி அன்று நீ சொன்னாயே யாராக இருந்தாலும் இப்படிதான் செய்வீர்களா என்று,எனக்கு என் மனைவியை தவிர மற்ற யாரிடமும் அது போன்ற எண்ணம் தோன்றாது.அது என் காதல் மனது செய்த வேலையே அன்றி வயது கோளாறில் செய்த வேலை இல்லை”.

“வேறு என்ன சொன்னாய்? நம்பி வந்தவளை ஏமாற்றினேன் நீ தான் திருமணத்திற்கு நாள் குறித்து சொன்னவனிடம் எதுவும் சொல்லாமல் ஓடி போனாய்”.

“உன்னை நினைத்து பைத்தியகாரன் மாதிரி சுற்றி இருக்கும் உறவுகளுடன் பேச முடியாமல் உன் நினைவு வரும் போது எல்லாம் கட்டுபடுத்த முடியாமல் அறையில் கதவை மூடி கொண்டு எத்தனை நாட்கள் கண்ணீர் வடித்திருக்கிறேன் தெரியுமா?கல்யாண தேதியை சொன்ன பிறகும் உன்னை நம்பி காத்திருந்த என்னை ஏமாற்றிவிட்டு நான்கு வருடம் என் மகனை என் கண்ணில் காட்டாமல் நம்பிக்கை துரோகம் செய்தது நீயா?நானா?உன்னை தொட்டதால்தான் மணக்க கேட்டேன் என்றாயே.முதலில்தான் தெரியவில்லை இப்போது கூடவா என் காதல் உனக்கு புரியவில்லை”.                                                                                                                                                                                          “நீயாக புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்.அது நடக்காது என்று தெரிந்துவிட்டது.நாம் இங்கிருக்கும் இரண்டு நாட்கள்தான் உனக்கு நான் கொடுக்கும் அவகாசம் உன் மனதை மாற்றி கொண்டு என்னோடு வாழும் வழியை பார்.இன்னும் கண்டதை யோசித்து கொண்டு இருந்தாய்.நான் என் வழியில் உன்னை எப்படி படிய வைக்க முடியுமோ அப்படி படிய வைப்பேன்” என்றவன் அவன் கைகளில் வைத்திருந்த அவளது கொழுசை மூலையில் விசிறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அர்ஜூனின் குமுறலை கேட்ட சுவாதி அவன் தன்னை நேசித்திருக்கிறான் என்ற எண்ணமே பூவை அவள் மேல் கொட்டியது போல் இருந்தது.தனக்கும் அவனுக்கும்தான் என்று கடவுள் முடிச்சு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். “இனி நானும் என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.மாலதி இறந்த காலம் இந்த சுவாதிதான் நிகழ் காலம் என்று தனக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்”.

அடுத்த நாள் மாலதிக்கு சாமி கும்பிட்டுவிட்டு இரு ஜோடிகளையும் கோவிலுக்கு சென்று வர சொன்னதால் அனைவரும் கிளம்பினர்.கீதா நகுலனுக்கு இடையிலான பேச்சு முற்றிலும் நின்றிருந்தது.அவசரபட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் நகுலனும்,அவனை நோகடித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் கீதாவும் பேசவில்லை.                                                               இரவு பேசிய பிறகு அவளே யோசிக்கட்டும் என்று அர்ஜூனும்,அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சுவாதியும் ஆளுக்கு ஒரு எண்ணத்தில் கோவிலை அடைந்த சுவாதிக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதை அறியவில்லை.                                                                                             கோவிலுக்கு சென்று ஜோடியாக சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்த அர்ஜூனும்,நகுலனும் கோவிலை சுற்றி பார்க்க கிளம்பிவிட சுவாதியும்,கீதாவும் ஆளுக்கு ஒரு யோசனையில் இருந்தனர்.அப்போது தன் தோளில் யாரோ தொடவும் யார் என்று திரும்பி பார்த்த சுவாதிக்கு ஆச்சரியம்,ஆம் வந்தது மாலதியின் தோழி ரம்யா.அவளுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருக்கும் போதே நகுலனும்,அர்ஜூனும் அங்கு வர அவர்களை ரம்யாவிற்கு அறிமுகபடுத்தினாள் கீதா.                                                                                                                                                ரம்யாவிற்கு ஒரு “ஹாய்” சொல்லிவிட்டு “இருவரும் பேசிவிட்டு வாருங்கள்” என்று கிளம்பிவிட்டனர்.                                                                                                                                                                           அர்ஜூனையே பார்த்து கொண்டிருந்த ரம்யாவிற்கு “இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சொன்னாள்.சுவாதி தன் மனதின் குழப்பம் தெளிவானதால் வழக்கம்போல் அவளை கிண்டல்பண்ண ஆரம்பித்தாள்”.

“என்ன குண்டூஸ் எங்க பாத்த? உன்னோட சாப்பாட்டுக்கு போட்டியா வந்தவங்க முகத்த தவிர உனக்கு யாரு முகமுமே ஞாபகம் இருக்காதே.ஒருவேளை பந்தில உட்கார்ந்து இருக்கும் போதுதான் பாத்தியா அதனாலதா நியாபகம் இருக்கா”.  சுவாதி.                                                                                               “ம்ம்…..ஞாபகம் வந்திருச்சு இவர நாங்க கடைசியா போனோமே எங்க கிளாஸ்மேட்டோட மேரேஜ்கு அங்கதான் பாத்தேன்.உன்னோட அக்காவாலதா நான் இவர கவனிச்சதே. ஆன அவ சொன்ன மாதிரியே நடந்துருச்சு. நல்லவங்க இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் மனதில் நினைப்பது நடக்கும்னு சொல்லுவாங்க அது உன்னோட அக்கா விஷயத்துல உண்மையாகிடுச்சு”.          ரம்யா.                                                                                                                                                                                                  “என்ன சொல்ற ரம்யா எனக்கு ஒண்ணும் புரியல.புரியற மாதிரி பேசு.எப்புடிதான் உன் புருஷன் உன்ன வச்சு சமாளிக்கறாரோ?”……   சுவாதி.                                                                                        சொன்ன சுவாதியை விளையாட்டாக முறைத்துவிட்டு. “நாங்க அன்னைக்கு மேரேஜ்கு கிளம்பும் போது என்ன சொன்ன நியாபகம் இருக்கா?”                      ரம்யா.                                                      “ம்…….பாத்து பத்திரம் போய்ட்டு வாங்கனு சொன்னேன். உங்கிட்ட சாப்பாட்ட பாத்துகிட்டு என்னோட குட்டிமாவ விட்றாதனு சொன்னேன்.இப்ப அதுக்கு என்ன?”      சுவாதி.                             “என்ன வாறுகிர விஷயம் எல்லாம் நியாபகம் வச்சிரு. இன்னோரு முக்கியமான விஷயம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னியே நியாபகம் இருக்கா?”

 

“ஹேய்… அது நான் விளையாட்டுக்கு சொன்னது”.

“நீ விளையாட்டுக்கு சொன்னதா இருந்தாலும் உன்னோட அக்கா அத சீரியஸா எடுத்து கல்யாண மண்பத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டா”.

“ஏய் என்ன சொல்றா.குட்டிமா எனக்கு மாப்பிள்ளை பார்த்தாலா?”

“அது ஒரு பெரிய கதை சொல்றேன் கேளு” என்ற ரம்யா அன்று மண்டபத்தில் நடந்தவற்றை சொல்ல தொடங்கினாள்.

“அடியே மாலு தயவு செஞ்சு எங்கயும் போகாதடி.என் கூடவே இரு இல்ல ஒன்னோட தொங்கச்சி இருக்காளே தொங்கச்சி அவள என்னால சமாளிக்க முடியாது”.   ரம்யா.

“சரிடி.நான் எங்கயும் போக மாட்டேன்.நீ என்ன விட்டுட்டு எங்காவது ஓடாமல் இருந்தால் சரி”.   மாலதி.

இப்படி இருவரும் பேசி கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி செல்ல அங்கு ரம்யாவின் சொந்தகாரர் ஒருவர் அவளை பார்த்து பேச பிடித்து கொண்டார்.கும்பலில் மாலதியின் கையை விட்டுவிட்டாள்.

ரம்யா கையை உருவி கொள்ளவும் பயந்து போன மாலதி கும்பலில் இருந்து பிரிந்து தன் தோழியை தேட ஆரம்பித்தாள்.அவள் தனியாக இருப்பதை பார்த்த இளவட்டங்கள் அவளை சுற்றி நின்று கொண்டனர்.                                                                                                                                                                          “டேய் இங்க பாருங்கடா சிட்டு தனியா மாட்டிக்கிச்சு.ஏய் இவ்வளவு நேரம் உன் கூடவே பார்டி கார்டா சுத்துனுச்சே ஒரு புல்டவுசர் அது எங்க.என்னமோ உன்ன பாத்ததுக்கே கைய புடிச்சு இழுத்த மாதிரி அந்த முறை முறைச்சா.இப்ப உண்மையாலுமே ஒன்னோட கைய புடிச்சு இழுக்க போறேன் அவக்கிட்ட போயி சொல்லு சரியா”.

“அடியே ரம்யா இப்படி என்ன மாட்டிவிட்டுட்டு எங்க டி போன.புல்டவுசரா டோய் இத மட்டும் அவ காதுல வாங்குனா,நீங்க செத்தீங்க.என்ன நீ என்னை பாத்தியா,அதுக்கு அவ முறைச்சா அவகிட்ட போய் வம்பிழுடா” என்று அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனதுக்குள் பதில் அளித்து கொண்டு இருந்தவள்.அவனது கடைசி பேச்சில் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் கலங்க நின்று கொண்டு இருந்தாள்.

“என்னமா?ஏன் இங்க நிக்கற?உன்னோட பிரண்டு உன்ன அங்க தேடிகிட்டு இருக்காங்க.நீ இங்க நிக்கற.வா நானே கொண்டு போய் விடுறேன்” என்று அங்கு வந்த அர்ஜூன் அந்த இளைஞர்களை பார்த்து முறைத்து கொண்டே அவளிடம் சாதாரண குரலில் பேசினான்.அந்த இளைஞர்களும் இந்த பழம் புளிக்கும் என்று அடுத்த பழம் ச்சீ….ச்சீ….. பொண்ணுங்களை பார்த்து போய்விட்டனர்.

அவர்கள் போய்விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட அர்ஜூன். “என்னங்க அவங்க அவ்ளோ பேசறாங்க நீங்க எதுவும் பேசாமல் இருக்கீங்க.நல்ல தைரியமா இருந்தா இந்த மாதிரி யாராவது உங்ககிட்ட வாலாட்ட முடியுமா.நீங்க அவனுங்க கண்ண பாத்து என்னங்கடா பண்ணுவீங்கனு கேட்ருந்தாளே அவனுங்க ஓடி இருப்பாங்க நீங்க பயந்து பயந்து நிக்கவும்தான் அவங்க அப்புடி பேசுனாங்க.உங்களோட பயந்த பார்வைய வச்சுதான் ஏதோ பிரச்சனைனு நான் வந்தேன் இனிமேவாவது தைரியமா இருங்க” என்று சொல்லி சென்றுவிட்டான் அர்ஜூன்.

 

அவனுக்கும் மாலதியை பார்த்ததில் இருந்து ஒருவிதமான மாற்றம் தோன்ற ஆரம்பித்தது.அவளின் பயந்த தோற்றமும், மற்றவர்களை பார்க்கும் போது அவள் முகத்தில் ஏற்படும் மென்மையான சிரிப்பும் ஏதோ செய்ய அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.அப்போதுதான் இளவட்டங்கள் அவளை சுற்றி நிற்கவும் ஏதோ பிரச்சனை என்று அவளை தெரிந்தவள் போல் பேசி தனியாக அழைத்து வந்து பேசிவிட்டுவந்தான்.

 

அர்ஜூன் போவதையே பார்த்து கொண்டு இருந்த மாலதி ரம்யா அங்கு வந்து அவளை திட்டியதை கூட காதில் வாங்காமல் அவன் போகும் இடமெல்லாம் இவளும் கண்களால் கவனித்து கொண்டு இருந்தாள்.கத்தி கத்தி சலித்து போன ரம்யா “ஏண்டி இங்க ஒருத்தி கத்தறது உனக்கு கேட்குதா இல்லையா?”

“அட அத விடுடி அங்க பார் அவரை நன்றாக பார்த்து சொல் ஓகேவா என்று.”      மாலதி.

“யாரடி சொல்ற.”  ரம்யா.

“அங்க பாருடி ஒய்ட் கலர் சர்ட்,புழு கலர் ஜீன்ஸ்”.   மாலதி.

“ஓ அவரா. ம்…பாக்க நல்லாதான் இருக்கான்.ஆனா நீ ஏன் அவன பாக்க சொல்ற?என்னடி கண்டதும் காதலா?”           ரம்யா.

“த்தூ…போய் வாய கழுவு நா சொன்னது நம்ம சுவாதிக்கு சரியா இருப்பாருள்ளனு கேட்க.நீ என்னடானா லூசு மாதிரி உளறுற.”  மாலதி.

“என்னது சுவாதிக்கா.நீ இப்புடி மாஞ்சு மாஞ்சு பாக்கறத பாத்து உன்னோட ஆளத்தான் பாத்துட்டியாட்டுக்குனு நான் நெனச்சேன்”.                    ரம்யா.

“இல்லடி என்றவள் சற்று நேரத்துக்கு முன்பு நடந்த அனைத்தையும் சொன்னவள்.அவர் அப்படியே நம்ம சுதி மாறி இருக்கனும்னு சொன்னாரு.சோ அவரோட டிரீம் கேர்ள் குவாலிபிகேஷன் சுதிக்கு இருக்கு.நம்ம வரும்போது சுதி சொன்னால நல்ல மாப்பிள்ளையா பார்த்துட்டு வானு அவ என்ன நெனச்சு சொன்னாலோ ஆனா அதுதான் நடந்திருக்கு.அவரு என்கிட்ட பேசும் போது எனக்கு சுதிகிட்ட பேசற மாதிரியே இருந்துச்சு.அப்புடினா என்ன அர்த்தம் என்னோட சகோதரன் மாதிரினு அர்த்தம்.கண்டத உளறாம வா கல்யாண பொண்ணு தனியா நிக்கறா.மாப்பிள்ளை டிரெஸ் மாத்த போய்இருக்கிரறாம்.இவரு யாரு என்னனு விசாரிக்கலாம்”.      “சரி வா போலாம்.ஆன அவனுங்க மறுபடியும் கண்ணுல பட்டா சொல்லு.என்ன தைரியம் இருந்தா என்ன புல்டவுசர்னு சொல்லியிரிப்பானுங்க”.    ரம்யா.

“சரி, சரி புலம்பாம வாடி”.  மாலதி.

 

இருவரும் சென்று கல்யாண பெண்ணிடம் அர்ஜூனைபற்றி விசாரித்துவிட்டு “அவன் போட்டோ ஒன்று தனக்கு வேண்டும்” என்று மறக்காமல் ரெடி பண்ணி வைக்கும்படி மாலதி சொல்லிவிட்டு செல்லும் போதுதான் ராமின் வஞ்சக கண்ணில் பட்டாள் மாலதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள். கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க “சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும்.ஒரு வாரத்தில் திருமணம்” என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி