Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36

36 – மனதை மாற்றிவிட்டாய்

கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு மண்டபத்திலேயே இரு குடும்பத்தினர் மட்டும் வைத்து நிச்சயம் செய்ய திட்டமிட்டனர். உடன் ஊர் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். அபி தாம்பூலத்தட்டில் மாலையுடன் நிச்சய மோதிரம் சேர்த்து சாமியிடம் வைத்துவிட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். வந்தவள் அம்மாவென கத்திகொண்டே வழுக்கி விழ போக அனைவரும் அவளை கண்டு பதற திவி அபியை விழாமல் பிடித்துகொண்டாள். அண்ணி, காலை அசைக்காதீங்க. எண்ணெய் கொட்டிருக்கு போல.அரவிந்த், ஆதி, அர்ஜுன் வேகமாக ஓடிவர அரவிந்திடம் அபியை ஒப்படைத்தவள் தாம்பூல தட்டை கீழே விடாமல் வாங்கிகொண்டாள். அவளிடம் வந்த ஆதிஉனக்கு ஒன்னுமில்லையேடி ?” என்க இல்லை என்பது போல தலையசைத்தாள். அதற்குள் அனைவரும் அங்கு விரைந்து வர அபியை அழைத்து சென்று கோவில் மண்டபத்தில் அமர வைத்தனர்.

மதிஅம்மாடி, உனக்கு ஒன்னுமில்லையே? “

அபிஇல்லமா, எனக்கு எதுவுமில்லை. கொஞ்சம் பதறிட்டேன். வேற எதுவுமில்லை.”

பாட்டிஎங்களுக்கு உயிரே இல்லடா கண்ணு. புள்ளத்தாச்சி பொண்ணு வேற. கடவுளே…” என வணங்க

அரவிந்த்அப்போவே, அலையாத இருன்னு சொன்னோம்ல? நீ தான் எடுத்திட்டு வரணும்னு யாரு சொன்னது. . “

பாட்டிஎன்ன பொண்ணுமா நீ. சூதானமா இருக்கறதில்லையா? “

சேகர்உள்ள குழந்தை இருக்குனு நினைப்பே இல்ல

திவிபாத்து கவனமா வரமாட்டியா அண்ணி. அப்படி என்ன வேகம். சும்மா சுத்திக்கிட்டே இருக்கறது.. கொஞ்சம் கூட கவனமே இல்ல…. இனிமேல் எங்கேயாவது எந்திரிச்சு பாரு. …ஏதாவது ஆயிருந்தா?… ” என திட்ட

ஆதிஏய், போதும் நிறுத்திரியா? எப்படி எங்க அக்காவை திட்டலாம். இந்த வேலை எல்லாம் வேற யார்கிட்டேயாவது வெச்சுக்கோ. “

திவிஉள்ள என் மருமக இருக்கா. அவளை பத்திரமா பாத்துக்கலேன்னா யாரானாலும் நான் இப்படித்தான் திட்டுவேன்.”

எங்க அக்காவுக்கு இல்லாத அக்கறையா உனக்கு ?”

கண்டிப்பா, உங்க அக்காவுக்கு குழந்தை தான் முக்கியம். பாப்புவுக்கு ஒண்ணுன்னா அவ தாங்கமாட்டா. எனக்கு குழந்தையோட உங்க அக்காவும் முக்கியம். ‘அதனால தான் கவனமா இருங்கனு சொன்னேன்.” என முகம் திருப்பிக்கொள்ள

அவளின் அன்பை உணர்ந்தவளாதலால் அபிஆதி, விடுடாஅவ சொல்லியும் கேக்காம நாந்தான் போவேன்னு அடம்பண்ணி போயி தாம்பூலம் கொண்டுவந்தேன். கீழ பாக்காம வந்துட்டேன். அவ தானே பிடிச்சா. இல்லாட்டி இந்நேரம் நினைச்சே பாக்கமுடில. திவி இங்க வா. “

…….

ப்ளீஸ். …”

வந்தவள் அபியின் முன்னால் மண்டியிட்டுசாரி அண்ணிஎனக்கு நீங்க விழுகப்போறத பாத்ததும் ரொம்ப பயந்துட்டேன். அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகி கத்திட்டேன்.” என்றவள் அபியின் வயிற்றில் கை வைத்துபாப்பா பயந்துட்டாளா? ” என கொஞ்சம் பயத்துடன் கேட்க சில நிமிடம் முன்பு இவளா கத்தியது என நினைத்து பார்க்கவே முடியாது போல அவள் முகம் இருந்தது.

அபி திவியின் கன்னத்தை வருடிவிட்டுஉன் மருமகளாச்சே, ரொம்ப தைரியமா இருக்கா. கொஞ்சம் கூட அசரல.” என்றதும் திவிசாரி அண்ணி, சாரி அண்ணா…. சாரி“. என மதி, சேகர், தாத்தா,பாட்டி என அனைவரை பார்த்தும் சொன்னாள்.

நீ, ஏன்டா மா சாரி சொல்ற? “

இல்ல, ஏதாவது ஆயிருந்தா என்னாகும்னு பயத்துல கொஞ்சம் கத்திட்டேன். பெரியவங்க நீங்க எல்லாம் இருக்கிறதையும் கவனிக்கல. “

நீ தப்பா எதுவும் சொல்லல. அதனால நீ இதுல வருத்தப்பட எதுவுமில்லை.”

இருந்தாலும் உங்க எல்லாரையும் விட எனக்கு அதிக உரிமை இல்லேல.” என ஆதி பார்த்துவிட்டு தலை குனிந்து சொல்ல

அவள் தலையை வருடிவிட்டுகண்ணு உனக்கு இந்த குடும்பத்துல இல்லாத உரிமையா? நீ வா. “

என பாட்டி அழைத்துக்கொண்டு நல்ல நேரம் போகுது எல்லாரும் வாங்க போயி நிச்சயம் பண்ணிரலாம். என்று கூற சோபனா, ஈஸ்வரி அவளுக்கு ஒத்தூதும் இருவருடன் சேர்ந்து பேச ஆரம்பிக்க அவர்களும்நல்ல காரியம் பண்ணும் போது இப்படி ஒரு சம்பவம் நடந்திடுச்சே. பொண்ணோட ராசி நல்லா இல்ல போல. ஜாதகம் எல்லாம் பாத்தீங்களா? கூட பொறந்த அக்காவுக்கே இந்த நிலைமைன்னா. கல்யாணம் பண்றவனுக்கு என்னாவாகுமோ….?” என இழுக்க மல்லிகாவை பார்க்க அதில் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க அர்ஜூன்க்கு ஐயோ அம்மா என்ன சொல்ல போறாங்களோ. என்ன நடந்தாலும் அம்மு தான் நமக்கு. ஆனா அம்மாவும் கெட்டவங்க இல்லையே. இவங்க எல்லாம் ஏன் இப்டி பேசி குழப்ப பாக்கறாங்களோ? என இருந்தது.

அய்யரும் அதற்கு ஏற்றார் போலசரியா சொன்னேள், நேக்கும் இது ஏதோ அபசகுனம் மாதிரி தான் தோன்றது. கண்டிப்பா இந்த நிச்சயம் நடக்கணுமான்னு யோசிச்சுகோங்க.” என்று அவர் ஈஸ்வரியை பார்க்க அவரும் பார்த்து சிரித்துக்கொள்ள இதை கண்ட திவி மற்ற அனைவரையும் பார்க்க ஆளாளுக்கு அமைதியாக கையை பிசைந்துகொண்டு இருக்க ஆதி கோபமாகபாருங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதா பேசுறீங்களா? என் தங்கச்சிய பத்தி குறை சொல்ல உங்கள யாரையும் கூப்பிடல. ” என சீற வந்தவர்கள்

இதென்ன தம்பி வம்பா போச்சு. உனக்கு தங்கச்சி, நீ என்ன வேணும்னாலும் தாங்கிக்கலாம். பையன கட்டிவெக்கற அவங்களுக்கு என்ன தேவை வந்தது. இவ நேரம் ராசி சரி இல்லாம கல்யாணம் பண்ணி அந்த புள்ளைக்கு எதுவும் ஆயிடிச்சுன்னா நீயா பதில் சொல்லுவ? இவ கெட்ட நேரம் போற இடத்துலையும் கூடவே போகாதுன்னு என்ன நிச்சயம்என்றதும் அம்மு அழவே தொடங்கிவிட்டாள். பெரியவர்களுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்கு என்ன பதில் சொன்னாலும் இந்த மாதிரி வம்பு பேசவென வருபவர்களை என்ன செய்வது. ஏதாவது பேசி அவர்கள் அதிகம் பேசிவிட்டால் அம்மு தாங்கமாட்டாள். என்ன செய்வது என அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க ஆதி கத்த ஆரம்பிக்க திவிநீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கஎன ஆதியிடம் கேட்க அம்மு எழ போக அவளிடம் திரும்பிய திவிஅம்மு, நீ உட்காருஎன கட்டளையாக சொல்ல அவளும் கண்ணீர் சிந்திக்கொண்டேவேண்டாம் திவி, என்னால அவருக்கு எதுவும் ஆகவேண்டாம். அத என்னால தாங்கிக்க முடியாது. ” என அழஅலறத நிப்பாட்டு அம்முஎன்றாள்.

அவளை விட்டு வந்த திவி அவளை அந்தமாதிரி கூறியவர்களிடம் சென்றுஆண்ட்டி, எனக்கு ஒரு சந்தேகம். நீங்க 2 பேரும் எங்க அபி அண்ணி கல்யாணத்துக்கு வந்தீங்களா? “

இவள் எதற்கு சம்பந்தம் இல்லாமல் இந்த கேள்வி கேட்கிறால் என நினைத்தும் இல்லை என்பது போல தலை ஆட்டினர்.

உங்க வீட்டு பெரியவங்க யாராவது சேகர் மாமா கல்யாணத்துக்கு, இல்ல இந்த வீட்டு விசேஷம் நடக்கும் போது வந்திருக்காங்களா? “

இல்லை. நாங்க இந்த ஊருக்கே 7 வருஷம் முன்னாடி தான் வந்தோம். ஏன் கேக்குற.?”

திவிஅதுக்கில்ல. அப்படின்னா நீங்க தான் புதுசா இங்க வந்திருக்கிங்க, உங்களோட எண்ணம் சரியில்லாததும் இங்க நடந்த பிரச்சனைக்கு காரணமா இருக்கலாம்ல…” அவர்கள்என்ன எங்க எண்ணமா? என்ன சொல்ற நீ.?”

நீங்க சொன்னதுதான் ஆண்ட்டி. அவளோட கெட்ட நேரம் போற இடத்தை ஏதாவது பண்ணிடும்னுனா நீங்க வந்ததால உங்களோட கெட்ட நேரம், ராசி எங்க குடும்பத்தையும் இங்க நடக்குற விசேசத்தையும் பாதிக்கிதோணுதான் கேட்டேன். ஏன்னா நீங்க அபி அண்ணி கல்யாணத்துக்கு எல்லாம் வரவே இல்ல. அவங்க நல்லாத்தான் இருக்காங்க. அம்மு அவங்ககூடவே தான் இருந்தா. அவளோட கெட்ட நேரம் அண்ணியை பாதிக்கும்னா எப்போவோ பாதிச்சிருக்கணுமே. கடைசியா அபி அண்ணி உங்க இரண்டு பேரையும் பாத்துதான் வாங்க உள்ள உக்காருங்கன்னு பேசிட்டு போனாங்க. வரும்போதே இப்டி ஒரு சம்பவம் அவங்களுக்கு. பாவம் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசுனதுக்கே எங்க அண்ணிக்கு இந்த நிலைமைன்னா உங்க வீட்ல இருக்கறவங்க எல்லாம் நினைச்சா அந்த கடவுள் தான் காப்பாத்தணும்.”

என்றதும் அவர்கள் முழிக்க சிறியவர்கள் அனைவரும் மெலிதாக சிரிக்க

அய்யரிடம் சென்றுஅய்யரே நேத்து கோவில்ல ஒரு அக்கா வந்தாங்க. நீங்க பேசிட்டு அவங்க போனதும் பக்கத்துல இருந்தவங்ககிட்ட சொன்னிங்களே ஞாபகம் இருக்கா. இவ கல்யாணம் கூட நான்தான் பண்ணிவெச்சேன்..பொண்ணு லட்சணமா, படிச்சிருந்து என்ன பிரயோஜனம். கல்யாணம் பண்ண கொஞ்ச நாளையே டிவோர்ஸ் ஆயிடுத்து. என்ன பிரச்சனையோ என்னவோ..” னு சொன்னிங்க. எனக்கு இப்போ அதுல தான் டவுட். அந்த அக்காவுக்கு நீங்கதான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க, அவங்க வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு. இங்க நிச்சயம் ஆரம்பிக்கும்போது கர்ப்பிணி பொண்ணுக்கு ஒரு பிரச்னை, நிச்சயம் பண்ண போற பொண்ணுக்கும் விசேஷமே நிக்கிற அளவுக்கு பிரச்னை. ஒருவேளை நீங்க முன்னாடி நின்னு பண்ரதாலதான் இந்தமாதிரி அபசகுனம் எல்லாம் நடக்கிதோ.”

ஏன் அங்கிள் கோவில் குருக்களுக்கு ராசி சரியில்ல. நீங்க ஏன் வேற குருக்களை போட்றத பத்தி யோசிக்கக்கூடாது.” என கோவில் பராமரிப்பாளர்கள், முக்கியஸ்தர்களிடம் வினவ அவர்களும் ஆளாளுக்கு அய்யரை ஒரு மாதிரியாக பார்க்க அவரோஅப்படியெல்லாம் இல்லமா, ஏதோ எதேச்சியாய் நடந்த பிரச்சனைய நாம ஏன் பெருசு பண்ணனும். நிச்சயம் எல்லாம் நிக்கலையே, அந்த பொண்ணும் விழாம தப்பிச்சிடுச்சே. ஒரு சின்ன அடிகூட படமா…” என

திவிஅப்போ அண்ணிக்கு இன்னைக்கு பிரச்னை வந்தும் அவங்க ஒரு அடிகூட இல்லாம தப்பிச்சிருக்காங்கன்னா அதுக்கு அம்முவோட நல்ல நேரம் நல்ல எண்ணம் தானே காரணம்.?”

அய்யர் எங்கே தன் வேலை பறிபோய் விடுமோ என பயந்து வேகமாக பதிலளித்தார்கண்டிப்பா, ஏதோ பெருசா வந்த கண்டம் இதோட போயிடிச்சு.” என்றார்.

மல்லிகாவிடம் வந்த திவிஅம்மா, நீங்க இவங்க சொல்றமாதிரி எதுவும் தப்பா நினைக்கிறீங்களா? அம்மு நல்லவமா, அர்ஜுன் அண்ணாவுக்கு அம்முவால எதுவும் ஆகாது. ” என கூற

சிரித்துக்கொண்டே மல்லிகா கூறினார்அர்ஜுன்க்கு இவளால பிரச்சனைன்னு யாரோ சொன்னதுக்கே தாங்காம ஆசைப்பட்ட வாழ்க்கையே வேண்டாம்னு சொன்ன என் மருமக மனசு எனக்கு தெரியாம இருக்குமா, அதுக்கு இவளும் அழுக்கறாளேன்னு தான் கோபம்.. எல்லாருக்கும் சொல்றேன். அமுதா தான் எங்க மருமக. அவளால மட்டும் தான் என் பையன் சந்தோசமா இருப்பான். இனிமேல் கேள்வி வரக்கூடாதுன்னு சொல்றேன். ஜாதகம் எல்லாம் பாத்துட்டோம். மாங்கல்ய யோகம் ரொம்ப அமோகமா இருக்கு.. என் பையனுக்கு வர பிரச்சனையா தடுக்கறவளாத்தான் என் மருமக இருப்பாளே தவிர பிரச்னை பண்றவளா இருக்கமாட்டா….” எனவும்

அனைவரும் மகிழ்வுடன் நிச்சயம் செய்ய அர்ஜுனும், அம்முவும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பிறகு எல்லோரும் திருவிழா பூஜை என அதில் கலந்துகொள்ள சென்றனர்.

திவியை காட்டி பலர் இந்த பொண்ணு யாரு என வினவ வீட்டு பெரியவர்கள் அனைவரும்எங்க வீட்டுக்கு வரபோற மருமக, எங்க ஆதி கட்டிக்கப்போறவ. ” என பெருமையாக சொல்ல அனைவரும் ஆதிக்கு ஏத்த பொண்ணு தான். தைரியமும் கூட. என சொல்வதை கேட்டு பெருமைகொண்டனர். ஆதி திவியை அழைக்க அவள் நின்று திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் நிற்கபேசமாட்டியா? “

……….

அக்கா பாவம் கீழ விழப்போய் பதட்டமா இருக்கா. மாமா, பாட்டி அப்பான்னு எல்லாரும் திட்டறாங்க.. நீயும் கத்துறஅவளை திட்டவேண்டாம்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன். அண்ட் உன்ன தவிர வேற யார்கிட்ட நான் கோபத்தை காட்ட முடியும். வேற யார்கிட்ட காட்டுனாலும் இந்நேரம் பிரச்னை வேற மாதிரி போயிருக்கும். இல்ல முகத்தை தூக்கி வெச்சு உக்காந்துவாங்க. நீன்னா என்ன புரிஞ்சுப்ப. அதான் கத்தினேன். ஆனா உனக்கு என்ன உரிமை இருக்குனு எல்லாம் கேக்கல.” என்றான் தன்னிலை விளக்கத்தோடு.

………

அவள் அமைதியாக இருப்பதை கண்டவன்ஒருவேளை காலைல நந்துவை கத்துனதுக்கு கோவிச்சுக்கிட்டாளா? ” என நினைத்தவன்நேத்துல இருந்து உன்கிட்ட பேசணும்னு இருக்கேன். முடியல. மோர்னிங்கும் டிஸ்டர்ப் பண்றங்கன்னு நினைச்சதும் கோவத்துல கத்திட்டேன். தப்புதான் சின்ன பையன்னு கூட பாக்காம கத்துனது. பட் நான் என்ன பண்றது அந்த நேரத்துல யாரு வந்திருந்தாலும் இப்டி தான் பண்ணிருப்பேன். பேசவே விடாம டாச்சர் பண்ணா அதான் கோபம் வந்திடுச்சு.” என கூற

திட்டுன அவனை கூட டாய்ஸ், ஸ்னாக்ஸ்னு வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிட்டேன். உன் முன்னாடி திட்டிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஏதாவது பேசுடி. சிரிக்காதஎன கடுப்பாகி கத்த

நந்து கூட விளையாடும் போது, பேசும்போதும் அபி அண்ணி, அத்தை அம்மு, அனு யாராவது என்கிட்டேயோ, இல்லை அவன்கிட்டயோ பேசுனா அவனும் இப்படி தான் கத்துவான். திவி அவங்ககூட பேசாத. என்னையும் உன்னையும் பேசவிடமாட்டேங்கிறாங்க.. டிஸ்டர்ப் பண்றங்கன்னு கை கால வீசி கத்துவான். நீங்களும் அப்டித்தான் தெரியிறீங்க. அதனால தான் சிரிப்பு வந்தது.”

ஆதிஓய், என்னை என்ன குழந்தைன்னு நினைச்சியா? என் கோபத்தை பாத்து ஊர்ல ஒருத்தன் பக்கத்துல வரமாட்டான் தெரியுமா? “

திவிமத்தவங்களுக்கு வேணும்னா உங்க கோபம் பயத்தை தரலாம். ஆனா என்கிட்ட உங்க கோபம் குழந்தைத்தனமா இருக்கே. “என கண்ணடிக்க

அவனும் சிரித்துவிட்டுசரி, கோபம் போயிடிச்சா? ஒழுங்கா பேசு. “

அது மட்டும் நடக்காது. இன்னைக்கு முழுக்க பனிஷ்மென்ட் நான் உங்ககிட்ட பேசப்போறதுமில்லை, நீங்க சொல்றத கேக்கபோறதுமில்லை. ” என பழிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

அவனுக்கும் கால் வரராட்சசி, எல்லாத்துக்கும் சேத்தி வெச்சுக்கறேன் இரு டி.” என சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45

45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி

உஷாதீபனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ நாவல்உஷாதீபனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ நாவல்

Download Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload WordPress ThemesDownload WordPress Themes Freefree download udemy paid coursedownload karbonn firmwareDownload Best WordPress Themes Free Downloadudemy paid course free download