Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15

சோர்ந்த நடையில் உள்ளே வந்த தோழியை பார்த்த சுவாதி “என்னடி என்னாச்சு?ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா?”என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க. தோழி தன்னை எளிதாக கண்டு கொள்வாள் இவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டவள் அவளை பார்த்து மென்மையாக சிரித்து “கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது எனக்கு தலைவலியாக இருக்கு அதான் இந்த டல்.அபி எங்கே என்று ஓரளவு தன்னை சமாளித்து கொண்டு கேட்டாள்”.

“கோவிலில் இன்று சரியான ஆட்டம்.அதான் வந்தவுடனே தூங்கிவிட்டான் நீயும் போய் கொஞ்ச நேரம் படு.நான் உனக்கு இஞ்சி டீ கொண்டு வருகிறேன் குடித்துவிட்டு தூங்கு சரியாக போய்விடும்”.    சுவாதி.

“தூங்கினா சரியாக போய்விடும் வழியா இது என்று தனக்குள் பேசி கொண்டவள்.சரி என்று தோழியிடம் தலையாட்டிவிட்டு சென்று விட்டாள்”.தனது அறைக்கு சென்று பிரஸ் அப் ஆகிவிட்டு முகம் கழுவி வந்தவளுக்கு சுடசுட இஞ்சி டீ யுடனும் தைலத்துடனும் நின்றிருந்த தோழியை பார்த்தவுடன் எவ்வளவு முயன்றும் முடியாமல் கண்ணீர் அணையை உடைத்து வெளியே வர ஆரம்பித்தது.

தோழியின் மடியில் முகம் புதைத்து தனது காதல் திருமணத்திற்கு பிறகு வந்தும் அதை காப்பாற்றி கௌள்ள முடியாதவள் இருக்கிறேனே.என் காதல் முளைக்கும் முன்னே மொட்டிலேயே கருகிவிட்டதே என்று நினைத்து நினைத்து அழுதாள்.

அவளின் அழுகையை பார்த்து சுவாதி பயந்து போனாள்.

“என்னடி என்னாச்சு?எதற்கு அழுகிறாய்?போன இடத்தில் ஏதாவது பிரச்சனையா?இல்லை உனக்கும் நகுலனுக்கும் ஏதாவது பிரச்சனையா?சொன்னால்தானே எனக்கு தெரியும்.நீ அழுவதை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது” என்று தோழி அழுவதை தாங்க மாட்டதவளாக சுவாதியும் புலம்ப.அவளது கடைசி கேள்வியில் விழுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்த கீதா.

“ஒண்ணும் இல்லடி அம்மா நியாபகமாக இருக்கிறது.இங்கு வந்து இருங்கள் என்றதுக்கு பெண் கொடுத்த வீட்டில் தங்க கூடாது என்று தனியாக வீடெடுத்து தங்கி கொண்டார்கள். பக்கத்தில்தானே இருக்கிறார்கள் வந்து பார்க்கிறார்களா பார் எனக்கு அம்மாவிடம் போகனும் போல் இருக்கிறது.நான் போய் வரவா” என்று பேச்சை மாற்றினாள்.

“இதற்கா இந்த அழுகை இரு நானும் அம்மாவை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.நீ சொன்னது போல் அவர்கள் இங்கு வருவது இல்லைதான்.அபி எழுந்தவுடன் மூவரும் போவோம்.நீ அதற்குள் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துரு.தலைவலியோடு இப்படியே உன்னை அழுத முகத்தோடு பார்த்தாள் அம்மா பயந்து விடுவார்கள்.இந்தா இந்த டீயை குடித்துவிட்டு படு” என்று அவள் டீ குடித்த பிறகு போர்வையை போர்த்தி ஏசியை கம்மியாக வைத்துவிட்டு ஸ்கீரீனை நன்றாக இழுத்துவிட்டு போனாள்.

சுவாதி செய்வதை எல்லாம் படுத்து பார்த்து கொண்டு இருந்த கீதாவிற்கு இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

“உனக்காக உனக்காகதான் சுதி இந்த திருமணம்.ஆனால் இடையில் எனக்குள்ளும் காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை.உனக்கு தெரியுமா சுதி என்…என் நளன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம்.என்னிடம் எப்போதுமே அவளது பேச்சுதான் அதிகம் பேசுவார்.அவள் அப்படி அவள் இப்படி என்று. அப்போது எல்லாம் எனக்கு பயங்கரமாக கோபம் வரும்”.

“எதற்கு நமக்கு இப்படி கோபம் வருகிறது என்று கூட ஒரு முறை நான் யோசித்தேன்.இன்னோரு பெண்ணோடு என்னை கம்பேர்பண்ணுகிறார் என்ற கோபம் என்று எனக்கு நானே கூறி கொண்டேன்.ஆனால் இப்போது புரிகிறது.என் கணவன் என் முன்னால் இன்னோரு பெண்ணை புகழ்ந்து பேசுவதால் வந்த பொறாமை என்று.இப்போது புரிந்து என்ன பயன்.அவர் மனதில் இன்னோரு பெண் இருக்கும் போது கண்டிப்பாக நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்.அவர் விரும்பிய பெண்ணோடு அவர் சந்தோஷமாக இருக்கட்டும் நான் அவரிடம் கூறியது போல் பிரிந்து சென்று விடுகிறேன்” என்று கண்டதையும் யோசித்து கொண்டு அப்படியே தூங்கி போனாள்.

அபி வந்து வள்ளி பாட்டியை பார்க்க போகலாம் என்று எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தாள்.அபியின் சத்ததில் எழுந்தவள் அவனை அணைத்து கொண்டு “நீயும் என் மகன்தான் . என் வாழ்விற்கு நீ போதும் என்று தணக்குள் பேசி கொண்டவள்” வேகவேகமாக அம்மா வீட்டிற்கு கிளம்பினாள்.

ஒரு சிறிய பேப்பரில் அம்மா வீட்டிற்கு செல்வதாக எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.                “நகுலனிடம் சொல்லிவிட்டாயா” என்ற தோழியிடம் பொய்யாக தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.

வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலனுக்கு ஆபிஸில் வேலையே ஓடவில்லை.கீதாவின் நினைப்பே அதிகமாக இருந்தது.திருமண மண்டபத்தில் அவனின் கைகள் அறிந்த அவளின் மென்மையும்,அவன் பேசும் போது அவள் கண்களில் ஏற்பட்ட மயக்கமும்,காரில் வரும் போது ஏதோ ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தைக்காக அவனை அடிபட்ட பார்வை பார்த்தது என்று அவளது முகமே மாறி மாறி அவனை இம்சித்தது.

 

முடியும் மட்டும் பார்த்தவன் இது வேலைக்கு ஆகாது என்று மேனேஜரை அழைத்து வேலைகளை கூறிவிட்டு “முக்கியமான விஷயம் தவிர வேறு எதற்கும் அழைக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு பீச்சிற்கு சென்றான்.

இரவு வெகு நேரம் அங்கு அமர்ந்து அலைகளை ரசித்து கொண்டு இருந்தவன் மனம் கீதாவிடம் பல கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தது. “ஏன் லட்டு இப்படி பண்ற நான் காரில் சொன்ன வார்த்தை கேட்டு அடிபட்ட பார்வை பார்த்தாயே அது என்னை ரொம்ப வதைக்கிறது”.

“நீதான் அந்த நளன் என்று வாயை திறந்து சொல்லமாட்டாயா?எப்போது நீ சொல்வாய்?நீ என்று உன் காதலை சொல்கிறாயோ அப்போதுதான் நானும் வாயை திறப்பேன்.அதுவரை உன்னை சொல்ல வைக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என்று தனக்குள் கூறி கொண்டான் நளன்.

அவள் கடைசி வரை வாயை திறக்க போவதில்லை. இவன்தான் அவள் பின்னால் ஓட போகிறான் என்று தெரியாமல் அவனுக்குள்ளே சவால் விட்டு கொண்டான்.

அம்மா வீட்டிற்கு சென்ற கீதா அம்மா,அப்பாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டும் அபியுடன் வம்பிழுத்து கொண்டும் பொழுதை கழித்தாள்.அதற்கு காரணம் இனி நகுலன் வாழ்வில் தான் இல்லை.லட்டுவிற்கு மட்டுமே இடம் என்று தனக்கு தானே கூறி சுவாதியின் வாழ்வை சரி செய்வதற்கான வழியை யோசித்தாள்.

வீட்டிற்கு சென்ற நகுலன்.கீதாவை பார்க்க வேகமாக தனது அறைக்கு சென்றவனை யாரும் அற்ற அமைதியே வரவேற்றது. “இந்த நேரத்தில் இவள் எங்கு போனாள்”.அபி அறைக்கு சென்றிருப்பாளோ என்று அங்கு சென்று பார்க்க அபியும் அறையில் இல்லை என்பதை அறிந்தவன்.இந்த நேரத்தில் இவர்கள் எங்கு போனார்கள் என்று யோசித்து கொண்டே படியேறியவன் அர்ஜூன் மீது மோதி நின்றான்.

“என்னடா இப்போது தான் வந்தாயா வந்த உடனே அபியை பார்க்க சென்று விட்டாய்.அவன்தான் வள்ளி அத்தையை பார்க்க போயிருக்கிறானே.கீதா சொல்லவில்லை என்று ஆராய்ச்சியாக நகுலனை பார்த்து கேட்டான்”.

அர்ஜூன் சொன்னதை கேட்ட நகுலன். “என்ன அத்தை வீட்டுக்கு போய்விட்டாளா என்ன திடீரென்று” என்று யோசித்து கொண்டு இருக்க அர்ஜூன் கேள்வியில் தன்னை மீட்டு கொண்டவன் “அபியும் போவதாக என்னிடம் சொல்லவில்லை.அவள் மட்டும் போவாள் என்று நினாத்தேன்” என்று சமாளித்தான்.

“உங்கள் இருவருக்கும் அபி என்றால் அதிக விருப்பம் போல,நீங்களும் சீக்கிரம் பெற்று கொள்ளுங்கள்” என்று நகுலனை பார்த்து கண்ணடித்து சிரித்துவிட்டு சென்றான் அர்ஜூன்.

தன் அறைக்கு வந்த நகுலனுக்கு கீதா இல்லாத அறை வெறுமையாக இருப்பது போல் இருந்தது.அங்கு மற்றொரு அறையில் படுத்திருந்த அர்ஜூனுக்கும் மனைவியும் மகனும் இல்லாமல் அறையே வெறுமையாக இருந்தது.

“வதுமா எப்படா என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்க போற? உன்னுடைய காதல் எனக்கு நீ பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தெரிகிறது.உன்னையும் மீறி சில சமயம் உன் கண்களில் நீ மறைக்க நினைக்கும் உன்னுடைய காதல் வெளிபட்டுவிடும்.நீ என்னை விரும்புகிறாய்.ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதை என்னிடம் மறைக்க நினைக்கிறாய்.அது என்ன காரணம் என்றுதான் எனக்கு புரியவில்லை.காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும் நான் உனக்காக காத்திருப்பேன்.ஒரு முறை உன்னை பிரிந்து நான்பட்ட அவஸ்தையே எனக்கு போதும் மீண்டும் ஒரு முறை என்னால் அந்த பைத்தியம் பிடித்த வாழவிற்கு செல்ல முடியாது.என் அருகிலேயே நீ இருப்பதே எனக்கு சந்தோஷம்”.  அர்ஜூன்.

இப்படி இரண்டு ஆண்களும் காதலில் உருகி கொண்டு இருக்க.இவர்களின் காதல் ரோஜாக்கள் என்ன செய்கிறது என்று வள்ளி வீட்டில் சென்று பார்ப்போம்.

“அஜூ இப்ப நீ என்ன செஞ்சுகிட்டு இருப்ப.நீதான் எப்பவும் அபிக்கு கதை சொல்லி தூங்க வைப்ப.இன்னைக்கு அவன் இல்லாம உனக்கு கஷ்டமா இருக்கும் இல்ல,என்னை நெனப்பியா அஜூ.நீ எங்க என்ன நினைக்க போற,நான்தான் லூசுமாதிரி உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று சுவாதியும்.

“நளன் நீ இந்நேரம் உன்னோட லட்ட பாத்துட்டு வந்திருப்ப இல்ல,ம்ம்…பாத்துட்டு வந்து தூங்க ஆரம்பிச்சு கனவுலையும் அவக்கூட நீ டூயட் பாட ஆரம்பிச்சிருப்படா.லூசு.நீ தான் லவ் பண்றல அப்புறம் எதுக்கு என்கிட்ட வம்பிழுத்து என் மனசுல ஆசைய வளர விட்ட? ஏய் கீது பொய் சொல்ல கூடாது அவன் கரெக்ட்டா இருக்கான்.நீயா ஆசைய வளத்துக்கிட்டா அவனா பொறுப்பு போ…போ.. போய் சுதிய அர்ஜூன் அத்தானோட சேத்து வைக்க ஐடியா பண்ணு”.      கீதா.

கோவிந்தன் எத்தனையோ முறை அழைத்தும் நாகப்பட்டினம் செல்ல மறுத்து வந்த சுவாதி மாலதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளுக்கு அனைவரும் செல்லலாம் என்று கீதா சுந்தரியைவிட்டு  சொன்ன போது தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்து விட்டாள்.

நாகபட்டினம் சென்றால்,அர்ஜூனுடன் பழகிய இடங்களை சுவாதி பார்க்கும் போது ஏதாவது மாற்றம் ஏற்படாதா, என்றுதான் கீதா யோசித்து இந்த முடிவு எடுத்தால்.இந்த முடிவு எந்த அளவுக்கு உதவ போகிறது என்று நாமும் பார்ப்போம்.

தனது அறையில் அமைதியாக யோசித்து கொண்டு இருந்த சுவாதியை பார்த்த அர்ஜூன். “ஏன் இவள் நாக பட்டினம் வர மறுக்கிறாள்.அங்கு போவதற்கு எதற்கு இவ்வளவு யோசனை” என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் மகனின் “அம்மா” என்ற சத்ததில் மகனை கவனிக்க ஆரம்பித்தான்.

தன் தாயிடம் வந்த அபி சுவாதியின் முகம் வாடி இருப்பதை பார்த்து. “என்ன மா?என்ன ஆச்சு?ஏன் டல்லா இருக்கீங்க கீதாம்மா எனக்கு ஊரில் நீங்க படிச்ச ஸ்கூல் எல்லாம் காட்றேனு சொல்லியிருக்காங்க.இன்னைக்கு கதை சொல்றதா சொன்னாங்க நா அவங்க கூட போய் படுக்க போறேன் பாய்”……

“என்ன…… அபி கீதாக்கூட போய்விட்டால் நான் அஜூவோடு தனியாக படுக்க வேண்டுமே.அவன் இருக்கும் போதே ஏதாவது சில்மிஷம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் படுத்து கொள்வான்.இதில் ஒரு மாதிரி பாடல்கள் வேறு இவனுக்குனு எங்க இருந்து தான் பாட்டு கிடைக்குமோ….ச்ச”…..என்று நொந்து கொண்டவள் அபியை தடுக்கும் வண்ணம் அவன் பின்னாடியே சென்றாள்.

“டேய் ராஜா வேணான்டா நீ அம்மா கூடவே படுத்துக்கோ நா உனக்கு கதை சொல்றேன்” என்று பின்னாடியே போனவள்.கீதா இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

“என்னடி ஏன் அபி குட்டி என் கூட படுக்க விட மாட்டிக்கிற?அபி என் கூட படுத்து கொள்வது ஒண்ணும் புதுசு இல்லையே?உன்ன விட நான் நல்ல பாத்துபேன் கவலைபடம போய் தூங்கு”.

“அபி என் கூட விளையாட ஆரம்பிக்கும் போதே அவன் ஜெயிச்சுட்டா கதை சொல்லனும்னு சொல்லிதான் விளையாட ஆரம்பிச்சான்.நீ ஏன் தடுக்கற நீ வா ராஜா நாம போகலாம்”.

“சரி கூட்டி போ எனக்கு என்ன?நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் வரவில்லை போதுமா நீ ஆச்சு,அவனாச்சு ஆளை விடுமா என்று தன் அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.                   நகுலன் அறையில் இருவருக்கும் இடையில் அபியை படுக்க வைத்த கீதா இரு நான் போய் டிரெஸ் மாத்தி கொண்டு வருகிறேன் என்றவளை தடுத்தான் அபி.

“கீது மா நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி நைட் டிரெஸ் எடுத்தோமே அதை போடுங்க நானும் அது தான் போட்டு இருக்கிறேன்”.           அபி.

“ராஜா அது வேணாண்டா.இன்னோரு நாளைக்கு அதை போட்டுக்கலாம்.இப்ப அம்மா வேற நைட்டி போட்டுக்கறேன்.அபி  குட்டி சமத்துள்ள கீது சொன்ன கேப்பான்ல….பிளீஸ்டா குட்டி” என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.

அறையின் மற்றொரு மூலையில் பைல் பார்ப்பதாக பேர் பண்ணி கொண்டு இவர்களை நோட்டம்விட்டு கொண்டிருந்த நகுலனுக்கு கீதாவின் கெஞ்சல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.அன்று திருமணத்திற்கு சென்று வந்த பிறகு இருவருக்கும் இடையிலான பேச்சு குறைந்திருந்தது.எப்போதும் சலசலவென ஏதாவது பேசி கொண்டு இருக்கும் கீதா அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு சென்று விடுவாள்.

நகுலன் தூங்கும் வரை அபியுடன் விளையாடுகிறேன் என்று பேர்பண்ணி கொண்டு அவனுடன் சுத்தி கொண்டு இருப்பாள்.நகுலனுக்குதான் இவளின் விலகள் அதிகமாக தாக்கியது.இப்படி இருக்க அன்று மனைவி விரைவாக அறைக்கு வந்து அபியிடம் கெஞ்சி கொண்டு இருப்பதை பார்த்தவுடன் அப்படி என்ன டிரெஸ் ரெண்டு பேரும் எடுத்தாங்க என்ற ஆர்வ குறுகுறுப்பில் அவர்கள் பார்க்காத போது அவர்களை கவனித்து கொண்டு இருந்தான்.                 கீதாவின் நிலைமைதான் பரிதாபமாக ஆம் கையில்லாத நைட் டிரெஸ் அவளின் முழங்கால் வரைதான் இருக்கும்.மேல் சட்டை முழுதாக இடையை மறைக்காமல் அரை அங்குலம் இடுப்பை காட்டும்.இதை வாங்கி வந்த அன்று வள்ளி கீதாவை பிலு பிலுவென்று பிடித்துவிட்டார்.அதனால் அறைக்குள்ளேயே போட்டு கழட்டி வைத்துவிடுவாள் கீதா.இன்று நகுலனின் முன்பு எப்படி போடுவது என்று திணறி போனாள்.

அவள் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் கடைசியில் அபியின் பிடிவாதம் தான் ஜெயித்தது.அவள் சரி என்று ஒப்பு கொண்டு ஆடை மாற்ற சென்றாள். “இவள் எந்த டிரெஸ்க்கு இப்படி பில்டப் கொடுக்கிறாள்” என்ற ஆர்வத்தில் அமர்ந்திருந்த நகுலன் அவள் வெளிவருவதை பார்க்க மூச்ச விடவும் மறந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான்.

“ஹேய்..லட்டு இப்படியெல்லாம் நீ டிரெஸ் பண்ணுவியா? செம்மயா இருக்கடி.உன்ன நார்மலா நைட் டிரெஸ்ல பாத்தாலே எனக்கு கொடுமையா இருக்கும்.நீ இப்படி இருக்கறத பார்த்த இன்னைய நைட்ட எப்படி ஓட்ட போறேன் தெரியலையே”.

“என்னடா நகுலா உன் கற்புக்கு வந்த சோதனை” என்று தணக்குள் புலம்பி கொண்டவன் அபியின் சினுங்கலில் நினைவுலகத்துக்கு வந்தான்.

“எதுக்குடா சிணுங்குற அது தான் நீ சொன்ன மாதிரி அம்மா உனக்கு மேட்சா டிரெஸ் போட்டுட்டு வந்துட்டன்ல”.   கீதா.

“நான் அந்த பக்கம் படுக்கனும் நீங்க நடுவுல படுங்க”..  அபி

இவர்களின் பேச்சை காதில் வாங்கிய நகுலனுக்கு “கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?”என்ற கேள்வியே மனதில் ஓடி கொண்டு இருந்தது.

“நோ……நான் பிக் பாய் கீழே விழமாட்டேன்.நான் இந்த ஓரத்தில்தான் படுப்பேன்”…அபி.

அவனின் பேச்சிலேயே கீதா இந்த பக்கம் படுக்க வேண்டாம் என்றும் அதற்கு அவள் சொன்ன காரணத்தையும் ஊகித்தவன். “இன்னைக்கு உனக்கு இருக்குடி.முதல் நாளே என்ன படுத்தின,இன்னைக்கு எனக்கு தூக்கம் வரல,நீ சட்னிதான் இன்னைக்கு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல”,என்ற முடிவுக்கு வந்தவன் படுக்க சென்றான்.

அவன் நல்ல பிள்ளை போல் படுத்து கொண்டு “படு கீதா என்ன பயம்.அதான் அவன் கீழ விழ மாட்டேனு சொல்றானுள்ள” என்று அபிக்கு சப்போர்ட் செய்வது போல் பேச அபியும் அவனுடன் சேர்ந்து தலையை ஆட்டினான்.வேறு வழி இல்லாமல் நடுவில் படுத்தவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

அபி கதையில் மூழ்கி போக நகுலன் அவள் அழகில் மூழ்கி கொண்டு இருந்தான்.ஒரு வழியாக கதை முடிந்து அபி தூங்க தொடங்கியதும் இவளும்படுத்து கொண்டாள்.

பாதி இரவில் இடையில் ஏதோ ஊர்வது போல் இருக்க விறுக்கென எழ முயற்சிக்க முடியாமல் படுத்திருந்தாள்.நகுலன் தான் அவளின் செயல் அறிந்தவன் போல் அவளை இறுக்கி பிடித்திருந்தானே.

“ந…ந..நகுலன் எ..எ..என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?முதலில் என்னை விடுங்கள் உ…உ…உங்கள் கையை எடுங்கள்” என்றாள் குளறலாக.அவளும்தான் என்ன செய்வாள்.நகுலன் தன்னுடைய சீண்டலால் அவளை பெண்ணாக மாற்றியது மட்டும் இல்லாமல் அவளை காதலிக்கவும் வைத்துவிட்டானே. அவனின் மனைவி ஆக முடியாதா என்ற ஏக்கத்தில் இருந்தவள். இவன் இப்படி நடந்து கொள்ளவும் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் திணறினாள்.

“ம்ம்ம்ம்”…… என்று அவள் சொல்வதற்கு எல்லாம் ம் கொட்டியவன்.அவன் மூச்சு காற்று அவள் முதுகில்படுமாறு மேலும் நெருங்கி படுத்து அவளை இறுக்கினான்.

“ஹே பேபி பேசாமல் கொஞ்ச நேரம் இருடி” என்று ஈண சுரத்தில் குளறினான்.அவளின் பெண்மையின் மென்மையில் மயங்கி கொண்டே.

“பேபி என்ற அவனின் சொல் அவளை உசிப்பி விட முதலில் கையை எடுங்கள்.நான் ஒண்ணும் பேபி இல்ல” என்று கோபமாக சொல்ல முயன்று தோற்றாள்.

“ம்…..ம்…..கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றவன். இன்னைக்கு கன்பார்ம் பண்ணிட்டனா,இனிமே சொல்ல மாட்டேன்”. இடையில் இருந்த அவன் கை அவள் பேபி இல்லை என்பதை உறுதி செய்ய மேல் நோக்கி நகர்ந்தன.

“ஏ…ஏ..ஏய்…. என்ன செய்கிறாய்” என்று கத்தியவளின் இதழை தன் இதழ் கொண்டு அடைத்து ஒரு கையால் அவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டு தன் ஆராய்ச்சியை முழுமையாக முடித்த பிறகே இவளின் கையை விட்டான்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் அவனின் கண்ணங்களை நனைத்த பிறகே தன்னிலை உணர்ந்தவன் அவளிடம் இருந்து தன் இதழ்களை பிரித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.

ஒரு பெண்ணாக தன்னிடம் அது காதல் கணவனாகவே இருந்தாலும் அத்து மீறிய முதல் தொடுகையால் உடல் முழுவதும் நடுங்கி கொண்டு இருந்தது.தன் இயலாமையால் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அவளின் நிலையை பார்த்த நகுலன் தலையிலேயே அடித்து கொண்டு “சாரி..சாரி…கீது”.என்று சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி கொண்டு இருந்தான்.அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல்.

கீதாவோ நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக அழுது கொண்டே இருக்க.நகுலன் எழுந்து மற்றொரு அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டு தன்னையே திட்டி கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5

மருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள்.மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதாள். “என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள். இரயில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த