Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

63917d416e7160f64db9193c7cbcf1f9
தஞ்சம் வரவா?!!
 
விழியைத் திருப்பி என்னைப் பாரடா
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?

சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட
வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட
மலர்களைக் கையேந்தி என்மீது தூவடா
வளர்பிறை கொண்டு ஊஞ்சலும் செய்யடா

ஆலமரமாகிய காதலைத் தருகிறேன்
ஆணிவேராகி உயிரை சுரந்திடு
ஆலங்கட்டிகளைத் தூவிச் செல்லாதே
காதல் குமிழிகளை உடைத்துப் போகாதே

அரை நிறைவு சித்திரம் நான்தானோ?!
விரல் தூரிகை எனக்காகத் தாராயோ?!
பகல் நிலவு நான்தானே தெரியாதோ?!
உன் கனவுகளில் உலவிட நான் வரலாமோ??!!

நெஞ்சக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்திடு
வஞ்சி எந்தன் முகத்தை அங்கே தேடிடு
நெஞ்சம் கொண்ட காதலை உணர்ந்திடு
தஞ்சம் வர தவிப்பவளின் கைக்கோர்த்திடு!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

முத்தம் தந்திடு!!   முட்களோடு சொற்கள் செய்து காயம் தந்தாய் – எனது கண்ணீரும் சிகப்பாய் மாறி சிறகு கிழிந்ததே! தென்றல் எந்தன் வாசல் வர காத்து நிற்கிறேன் – இன்றோ  புயல் வீசி என் கூடு சிதைய பார்த்திருக்கிறேன்!! மருகி

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்