Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 13

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலையில் கண் விழித்த அர்ஜூன் முதலில் பார்தது குளித்து முடித்து மங்களகரமாக வெளியே செல்ல தயாராகி கொண்டு இருந்த சுவாதியைதான்.அவளின் அழகில் சொக்கி போய் பார்த்து கொண்டு இருந்தவன் மகனின் கதவு தட்டும் சத்தத்தில் மீண்டான்.            “அப்பா”………..அபி                                                                                                                                                                 “டேய் அபி கண்ணா அதுக்குள்ள எழுந்திட்டீங்களா?” அர்ஜூன்

“போங்க அப்பா நீங்கதான் பேட் பாய்.நான் காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்துவிட்டேன்.நீங்கள் இன்னும் தூங்குறீங்க” என்று மூக்கை சுருக்கி மகன் மழலையில் பேசும் அழகை கண்டு வியந்தவன்.

“அது ஒன்னும் இல்லடா கண்ணா நான் சீக்கிரம் எழுந்திருப்பேன் உன் அம்மாவால்தான் லேட்” என்று சுவாதியை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சொன்னான்.                                                                      “

நான் உங்களை என்ன செய்தேன்.நீங்கள்தானே லேட்டாக எழுந்தீர்கள்”.    சுவாதி.

“உன்னால்தான் நான் லேட்டாக தூங்கினேன்.அதனால் லேட்டாக எழுந்திருத்தேன்”.

“என்ன?”… சுவாதி

 

“உங்களுடன் என்னால் பேச முடியாது.வா ராஜா நாம் போகலாம்.உன் அப்பாவுக்கு எப்போது கீழே போக வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது வரட்டும்”.

இருவரும் கீழே செல்வதை பார்த்த அர்ஜூன் மனம் வாடியது. “விளையாட்டாக கூட என்னிடம் அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டாயா?நான் பேசினாலும் பட்டு கத்தரித்தார் போல் பேசி முடித்துவிடுகிறாய்” என்று பெருமூச்சு விட்டு எழுந்து குளிக்க சென்றான்.

நகுலனின் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்த நகுலனுக்கு தன் மார்பில் பஞ்சு பொதியாய் தலை வைத்து குழந்தையாய் தூங்கி கொண்டு இருந்த மனைவியின் முகம்தான் முதலில் தெரிந்தது.

காலை வேளையில் இவ்வளவு நெருக்கத்தில் தன்னவளை பார்த்தவன் கனவோ என்றுதான் முதலில் நினைத்தான்.பிறகு நடந்தவை நினைவில் வர சிரித்து கொண்டே அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவன்.தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.

லேசாக அவள் அசையவும் மீண்டும் கண்களை மூடி படுத்து கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

விடாமல் கதவு தட்டும் சத்தத்தில் கண் விழித்தவள்.ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் விழித்தவள்.தன் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தை பார்த்து நடந்ததை உணர்ந்து,பக்கத்தில் பார்க்க நகுலன் தூங்கி கொண்டு இருந்தான்.

“தன் தலையில் தட்டி கொண்டவள்.ஏன்டி கீதா இப்படி பண்ற உன் அறையில் பொம்மையை கட்டி பிடித்து தூங்குவது போல் இவனை பிடித்து தூங்கி கொண்டு இருக்கிறாயே உனக்கு ஏதாவது இருக்கிறதா?நல்ல வேலை இவன் எழுவதற்குள் எழுந்து விட்டோம் இல்லை என்றால் உன்னைபற்றி என்ன நினைத்திருப்பான்” என்று தன்னையே வாய்விட்டு மெதுவாக திட்டி கொண்டாள்.                                கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்க இதோ வருகிறேன் என்று குரல் கொடுத்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினாள்.பழக்கம் இல்லாத புடவை காலை தட்டிவிட என்ன செய்யலாம் என்று யோசித்தவள்.நகுலனை பார்க்க அவன் தூங்குகிறான் என்று நினைத்து கொண்டு புடவையை கழட்டி போர்வை போல் போர்த்தி கொண்டு சென்று கதவை திறந்தாள்.

வெளியே சுவாதி டீ கப்புடன் நின்று கொண்டு இருந்தாள். “நீ தானா நான் யாரோ என்று பயந்துவிட்டேன்.வா சுதி உள்ளே வா இந்த சாரி கட்டிவிடு எனக்குதான் சேரி கட்ட தெரியாதுனு உனக்கு தெரியும்ல,சீக்கிரம் கட்டிவிடு நான் அபி குட்டி என்ன செய்கிறான் என்று பார்க்க போக வேண்டும்”.

“நைட் தூங்க நேரமாகிடுச்சு அதான் இப்ப தூங்கிட்டேன். அபி எங்கே?என்னை கேட்டானா?”    அடுக்கடுக்கான அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் சுவதி அவளை கிண்டலாக பார்த்து சிரித்து கொண்டே இருக்கவும் கடுப்பானவள்.

“என்னடி எதுக்கு இப்படி சிரிக்கற?”       கீதா.

அவள் நின்ற கோலத்தை கண்ட சுவாதி. நிலமையை  புரிந்து கொண்டு அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டு அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

“என்ன மேடம் என்னை சேரி கட்ட சொல்றீங்க?இனி உங்களுக்கு புடவை கட்டிவிடதானே ஒருவரை அப்பாயிண்ட் செய்திருக்கிறது. அவரிடமே கட்டிகோ” என்று தோழியாக கிண்டல் செய்துவிட்டு.            “முதலில் சென்று தலைக்கு குளித்துவிட்டு வேறு சேரியை கட்டு அதன் பிறகு தான் கீழே வர வேண்டும்”.

“அபி கீழே விளையாடி கொண்டு இருக்கிறான்” என்று தாயாக கண்டித்துவிட்டு டீ கப்புகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

“இவள் ஏன் இப்படி சொல்கிறாள்” என்று புரியாமல்.டீ ட்ரேயை வாங்கியவள்.உள்ளே இருக்கும் ஸ்டாண்டில் வைத்துவிட்டு திரும்பி நகுலனை பார்த்தாள்.அவன் இன்னும் தூங்குவதை பார்த்துவிட்டு இவன் எழுவதற்குள் வேறு ஆடைகளை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொள்ள வேண்டும் என்று வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

நடப்பது அனைத்தையும் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் இருந்த நகுலனுக்கு பயங்கர சிரிப்பு வர அவள் பத்ரூமிற்குள் சென்றது தெரிந்ததும்.வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“அய்யோ……லட்டு ……முடியலடி நீ இவ்ளோ அப்பாவினு எனக்கு தெரியாம போச்சே.எப்புடி.எப்புடி நைட் தூங்க நேரமாச்சா.நீ என்ன நினச்சு சொன்ன அவங்க என்ன புரிஞ்சுகிட்டாங்கனு புரியாம கைல டீ ட்ரேய வச்சுக்கிட்டு முழிச்ச பாரு ஹாஹாஹா…..முடியல போ..    உங்கிட்ட இருக்க இந்த இன்னோசண்ட்குணம்தான் எனக்கு புடுச்சுது.இருந்தாலும் நீ இந்த மாமாகிட்ட பொய் சொல்லியிருக்க கூடாது.அதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்கு உண்டு”.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அப்போதுதான் எழுபவன் போல் பார்த்தான்.கீதா சுடிதாருடன் வேகவேகமாக வெளியே வந்து பொட்டு கூட வைக்கமல் வெளியே செல்ல போனவள்.      நகுலனின் “நில்” என்ற வார்த்தையை கேட்டு நின்று திரும்பி பார்த்தாள்.

“பொட்டு வைத்துவிட்டு போ.இல்லையென்றாள் அம்மா வருத்தபடுவார்கள்”.

“ம்ம்ம்ம்ம்ம்”…..தலையாட்டியவள் பொட்டு வைத்து கொண்டு திரும்பியவள்.அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்.அவளை நெருங்கினார் போல் நகுலன் வெற்று மார்பில் நின்றதே அதற்கு காரணம்.      “எ..என்ன…?”  கீதா

“நெற்றியில் குங்குமம் நீ வைக்கவில்லை” என்று மேலும் அவளை நெருங்கி சீண்டினான்.              “இதற்குதான் இப்படி வந்தீர்களா?நான் வைத்து கொள்கிறேன் நீங்கள் நகருங்கள்”.

“நான் நகர்வது இருக்கட்டும் நீ ஏன் புடவை கட்டாமல் சுடிதார் போட்டு இருக்கிறாய்” என்று அவளை உரசினார் போல் நின்று கொண்டே பேச்சு கொடுத்தான்.

“அ..அது எனக்கு புடவை கட்ட தெரியாது”.

“என்ன புடவை கட்ட தெரியாதா?என்னோட லட்டு சூப்பரா புடவை கட்டுவா தெரியுமா?நான் அவளை அடிகடி சேரி கட்ட சொல்வேன்.எனக்காக கட்டுவாள்.நீ புடவையே கட்ட தெரியாதுனு சொல்ற.ஹோ..ஹோ மேடம் கொஞ்ச நாள் டெல்லில இருந்ததால நம்ம கல்ச்சர் மறந்திருச்சோ?”

அவன் வார்த்தையில் கோபம் கொண்ட கீதா.கோபமாக அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிற்க வைத்துவிட்டு “இங்க பாருங்க நீங்க என்னை மற்றவர்களோடு கம்ப்பேர் பண்ணுவதை நிறுத்துங்கள்”.

“உங்க லட்டுக்கு புடவை கட்ட தெரியுமானு நா இப்ப கேட்டனா?எதுக்கு என்கிட்ட அத சொல்றீங்க.நான் காலேஜ் படிக்கும் போதுதான் டெல்லி போனேன் அதுவரை இங்குதான் இருந்தேன் எனக்கு புடவை கட்ட பிடிக்காது.அதனால் கற்று கொள்ளவில்லை.உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்”.

“யாருடன் யாரை கம்பேர் பண்ணுவது?நானும் அவளும் ஒன்றா? பேரை பாரு லட்டாம் லட்டு என் கையில் கிடைத்தால் அவளை அப்படியே பூந்தி ஆக்கிவிடுவேன்” என்று முணுமுணுத்து கொண்டே வெளியே சென்றாள்.

“ஹே….செல்ல குட்டிக்கு என்னமா கோபம் வருது.பொறாமை..ம்ம்ம்ம்ம்ம்…..இதுவும் நல்லதுக்குதான்.குழந்தையாகவே இருக்கும் உன்னை என் மனைவியாக மாற்றுகிறேன்” என்று தனக்குள் பேசி கொண்டு தனக்கு பிடித்த பாடலை விசில் அடித்து கொண்டு குளிக்க சென்றான்.       கீழே அனைவரும் சென்று சாப்பிட்டு மறு வீட்டு விருந்துக்கு என்று சென்று வந்தனர்.நாட்கள் அதன் போக்கில் செல்ல இரு ஜோடிகளின் வாழ்க்கையும் தாமரை இலை தண்ணீராக இருந்தது.   அர்ஜூன் ஒவ்வொரு முறை சுவாதியை நெருங்கும் போதும் குத்தலாக ஏதாவது பேசி அவனை விலக வைத்து அவனை காயபடுத்தி அவன் வருந்துவது பொறுக்காமல் இவளும் வருத்தபட்டு கொண்டு இருப்பாள்.அப்படிதான் ஒரு நாள் அபி “அப்பா அப்பா” என்று சுற்றி வருவதை பார்த்த சுவாதிக்கு பொறாமையாக கூட இருந்தது.இவன் என்ன சொக்கு பொடி போடறான்னே தெரியல,எல்லாருக்கும் இவனை பிடித்துவிடுகிறது என்று பார்த்து கொண்டு இருக்கும் போது அர்ஜூனிடம் வந்த அபி

“அப்பா நம்ம பைக்ல ஒரு ரவுண்டு போகலாம்.என்னோட பிரண்டு டெய்லி அவங்க அப்பாகூட ஒரு ரவுண்டு போவளாம் என்கிட்ட சொல்லுவா,நீங்கதான் அப்ப பாரின்ல இருந்தீங்க கூட்டிட்டு போகல,இப்ப போகலாம்பா” என்று கண்ணில் ஆர்வம் மின்ன சொன்ன மகனை அணைத்து கொண்ட அர்ஜூன் சுதியை ஒரு குற்றம் சுமத்தும் பார்வை பார்த்துவிட்டு

“வா ராஜா நாம போகலாம்.அப்பா உன்னை டெய்லி கூட்டிட்டு போறேன்.இனி உனக்கு என்ன விருப்பம்னாலும் என்கிட்ட சொல்லு அப்பா செய்கிறேன்” என்று கூறி வெளியே அழைத்து சென்றவன் திரும்பி வர இரவு ஆனது.

இரவு வந்த அர்ஜூன் சுதியிடம் எதுவும் பேசாமல் போய் படுத்துவிட்டான்.ஆனால் அவன் மனதில் மகன் தனக்காக ஏங்கி இருக்கான் என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.                   அர்ஜூனின் அமைதியை பார்த்த சுதி தானே அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

“அஜூ எதுக்கு இப்ப முகத்த இப்புடி வச்சிருக்கீங்க”.

“ஒண்ணும் இல்ல”.                         அஜூ.

 

“உங்க முகத்த பாத்தாலே தெரியுது.என்னாச்சு சொல்லுங்க”.

 

“ஒண்ணும் இல்லை.நீ போய் தூங்கு” என்றுவிட்டு கண்களை மூடி கொண்டான்.

சுதியின் வீம்பு கொண்ட மனது “போடா ரொம்பதான் பண்ற” என்று நினைத்தாலும் காதல் மனது கேட்காமல் போக “இப்ப நீங்க சொல்ல போறீங்களா?இல்லையா?”

சுதியின் பிடிவாதத்தில் கோபம் கொண்ட அர்ஜூன் வேகமாக அவளை பார்த்து திரும்பி.

“என்னடி என்ன சொல்லனும் என் மகன் எனக்காக ஏங்கி இருக்கிறான்.அப்பா பாசத்திற்காகவும்,அவரின் அரவணைப்புக்காகவும்,அவருடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துக்காகவும் ஏங்கி இருக்கிறான் இதற்கு யார் காரணம் நீ.நீ மட்டும் தான் நீயும் உன்னுடைய வரட்டு பிடிவாதமும்தான் காரணம்”.

“என் மகன் என் இரத்தத்தில் உருவானவன்.அவனுடைய வளர்ச்சியையும் அவனின் முதல் மழலை பேச்சையும் கேட்க முடியாத பாவி ஆகிவிட்டேன்.நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.என் குழந்தையை அதன் வளர்ச்சியை அந்த கடவுள் நான் அறியாமலே செய்துவிட்டார்” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தான்.

அர்ஜூனின் புலம்பலை கேட்டவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.அவள் செல்வதையே பார்த்த அர்ஜூன் “என்னிடம் ஏதாவது சொல்லு வது?” என்று கேட்டான்.

சுதி அர்ஜூனை இன்னதென்று புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடைய கப்போர்டை திறந்து ஏதோ தேட ஆரம்பித்தாள்.

“ஹம்ம்…… இங்க ஒருத்தன் பீல்பண்ணிக்கிட்டு இருக்கானே ஏதாவது சொல்லுவோம்னு தோணுதா?நான் பாட்டுக்கு பேசாம படுத்திருந்தாகூட தூங்கி இருப்பேன்.சும்மா படுத்திருந்தவன்கிட்ட வந்து என்னாச்சு,என்னாச்சுனு கேட்டுட்டு பேசிகிட்டு இருக்கும் போதே எந்திருச்சு போயிட்டா.இவள என்னத்தான் பண்றதோ?” என்று தனக்குள் புலம்பியவன் மீண்டும் படுத்து போர்வையை தலைவரை இழுத்து மூடி கொண்டு படுத்துவிட்டான்.

யாரோ போர்வையை இழுப்பதை உணர்ந்து யார் என்று எழுந்து பார்த்த அர்ஜூனிடம் சுதி ஒரு பென்டிரைவ்வை நீட்டினாள்.

“இத போட்டு பாருங்க”.       சுதி.

 

“என்ன இது?”   அர்ஜூன்.

 

“போட்டு பார்த்தாள் தெரிய போகிறது”.   சுதி.

 

அவள் சொல்வதை கேட்டவன்.இப்போதைக்கு பார்க்கும் எண்ணம் இல்லை என்றாலும் மனைவிக்காக பார்க்க எண்ணி தன்னுடைய லேப்டாப்பை எடுத்து கொண்டு அமர்ந்தான்.சுதி கொடுத்த பென் டிரைவை சொருகி பார்க்க ஆரம்பித்தான்.

 

அஜூவிடம் பென்டிரைவை கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்பது போல் படுத்து கொண்டாள் சுதி.வெகு நேரம் கடந்து நீர் அருந்த எழுந்த சுதி கண்டது கண்ணில் நீருடன் தன்னுடைய லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த அஜூவைதான்.

 

“இவன் இன்னும் தூங்காமல் இதைதான் பார்த்து கொண்டு இருக்கிறானா?”ஆனால் எதற்கு இந்த கண்ணீர் என்று ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தவள்.மணியை பார்த்தாள் அது இரவு இரண்டு என்று காட்டவும் அதிர்ந்து போனவள் மீண்டும் அர்ஜூனை பார்த்தாள்.அர்ஜூன் லேப்பையே பார்த்து கொண்டு இருக்கவும் எழுந்து வந்து அவனது தோள்களை தொட்டாள்.

 

“அஜூ தூங்கலையா?மணி என்னனு பாருங்க”.       சுதி.

 

“வதுமா தேங்ஸ்டா” என்றான் நெகிழ்ச்சியோடு.அப்போதும் அவனது கண்கள் லேப்பைதான் பார்த்து கொண்டு இருந்தது.

 

“எனக்கு எதற்கு தேங்ஸ் இதை செய்தது கீதாதான்.அபியின் ஒவ்வொரு அசைவும் நமக்கு நியாபகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அவன் அசைவது முட்டி போட்டது,நடந்தது அனைத்தையும் வீடியோ எடுத்து பென்டிரைவில் ஏத்தி வைத்தாள். நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தாள் அவளுக்குதான் சொல்ல வேண்டும்” என்று அமைதியாக கூறியவள்.இப்போது வந்து படுங்கள் நேரமாகி விட்டது என்று கூறி படுத்துவிட்டாள்.

 

சுதியின் பேச்சில் முகம் வாடி போனாலும்.தன் மேலுள்ள அக்கறையில்தான் சொல்கிறாள் என்று மனதை தேற்றி கொண்டவன் லேப்பில் இருந்த தன்னுடைய இரண்டு வயது மகனுக்கு முத்ததை கொடுத்துவிட்டே எழுந்தான்.

 

சுதி சென்று படுத்தாலும் அர்ஜூனின் நடவடிக்கையை ஓரகண்ணால் பார்த்து கொண்டு இருந்தவள்.அவனின் செய்கையில் மனம் நெகிழ்ந்து போனதுடன் மகன் மீதான அவனது பாசத்தை கண்டு வாயடைத்து போனாள்.

அர்ஜூன் தன் மன குமுரலை கூறும் போது அவனது கண்களில் தெரிந்த வலி மறைந்து இப்போது அவனது மகிழ்ச்சியை பிரதி பலித்தது. அப்போது தான் வேண்டாம் என்றாலும் பிடிவாதமாக அபியின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து பென்டிரைவாக ரெடி செய்த தோழிக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.

அர்ஜூனோ தன்னுடைய கவலை அவளை பாதித்ததால்தான் இந்த பென்டிரைவை இப்போது கொடுத்திருக்கிறாள். “என் கவலை உன்னை பாதிக்கிறது என்றால் என்னை எந்த அளவுக்கு நீ விரும்பி இருக்க வேண்டும்.பிறகு ஏன்டி என்னை விலக்கி வைக்கிறாய் என்று மனதோடு புலம்பி கொண்டு இருந்தவன் சீக்கிரம் நீ என்னை புரிந்து கொள்வாய் வது.என் காதல் உன்னை என்னிடம் விரைவில் சேர்க்கும்” என்று எண்ணி கொண்டே படுத்தான்.

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்த போதும் அவர்களது மகிழ்ச்சியான வாழ்விற்க்கு ஏதோ ஒரு தடை. அதை சரி செய்ய வேண்டும் என்று இருவருக்கும் எண்ணம் இருந்தாலும் எப்படி என்று தெரியாமல் தவித்தனர்.

நகுலன் கீதாவை சீண்டி கொண்டே அவளுக்கு பல விஷயங்களில் தொல்லை செய்து கொண்டு இருந்தான்.இவனை என்ன செய்வது என்று புரியாமல் கீதா திணறும் அழகை ரசிப்பான்.கீதாவும் வெளியே அவன் மேல் கோபம் போல் காட்டி கொண்டாலும் அவனின் சேட்டைகளை ரசிக்கவே செய்தாள்.

அப்படிதான் ஒரு நாள் அபியும் கீதுவும் ஹைட் அண்ட் சிக் விளையாண்டு கொண்டு இருந்தனர்.அப்போது அபி கண்ணை மூடி கொண்டு எண்ணி கொண்டு இருக்க தங்களுடைய அறைக்கு வந்த கீதா நேரக பாத்ரூமில் சென்று ஒழிந்து கொண்டாள்.அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த நகுல் தன் அறைக்கு வந்து வெளியில் அழைந்தது கசகசவென்று இருப்பதால் குளிக்க பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அபி அவனது அறைக்குள் நுழைவதற்கும் இவன் பாத்ரூமில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

பாத்ரூம் கதவு தாழ் போடும் சத்தத்தில் மறைவில் இருந்து வெளியில் வந்த கீதா தனது உடைகளை கலைந்து கொண்டு இருந்த நகுலை பார்த்து அதிர்ந்து போனாள்.அவள் பேச வாய் திறந்த நேரம் “கீது எங்க இருக்க” என்ற அபியின் சத்தத்தில் வாயை மூடி கொண்டவள் வேகமாக அவன் அருகில் வந்தாள்.

தீடிரென்று தன் முன் நின்றவளை பார்த்தவன் பேச வாய் திறந்த நேரம் அவனது வாயில் கையை வைத்து மூடியவள் சைகையில் அபி வெளியில் இருப்பதை சுட்டி காட்டி அமைதியாக இருக்கும்படி கூறினாள்.

“கீது நீ எங்க இருக்க நா உன்னை கண்டுபிடிக்க போறேன்”.

 

அபியின் பேச்சில் அவர்களது விளையாட்டை கண்டு கொண்ட நகுல் தன் விளையாட்டை கீதாவிடம் ஆரம்பித்தான்.

அபி தன் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டான் என்பதை உறுதி செய்து கொண்ட நகுல்.இப்போது கீதாவை பார்த்தான் விளையாட்டு ஆர்வத்தில் தன்னை ஒட்டி நின்ற மனையாளை பார்த்தவன் அவளது கவனம் முழுதும் வெளியில் அபியிடம் இருப்பதை உணர்ந்து ஷவரை திறந்து விட்டான்.

திடீரென தன் மேல் தண்ணீர் விழவும் திடுக்கிட்டு போனவள் அப்போதுதான் நகுலை கவனித்தாள்.இடுப்பில் டவலுடன் நின்று தன்னையே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்தவள்.தன்னுடைய செயலால் வெட்கம் கொண்டு “சாரி” என்று விலகியவள் தன்னுடைய ஆடை முழுவதும் நனைந்து இருப்பதை பார்த்து அவனை முறைத்தாள்.

“என்ன பேபி எதுக்கு முறைக்கிற?நீ பண்ணிய வேலைக்கு நான்தான் முறைக்கனும்.நானும் உன்கிட்ட சொல்லலாம்னு வாய திறந்தா என்னோட வாயையும் மூடிட்ட.நீயும் கையை எடுத்த பாடு இல்லை அதான் ஷவரை திறந்து விட்டேன்.நீ பாட்டுக்கு பொறுப்பு இல்லாம இப்புடி வந்து ஒட்டிகிட்டு நிக்கறது மட்டும் என்னோட லட்டுக்கு தெரிஞ்சுது என்னை உண்டு இல்லைனு ஆக்கிருவா.நீ முதல்ல வெளிய போ”.

“ரொம்பதான் பண்ணாதீங்க.நான் ஒண்ணும் வேணும்னு உங்க வாய மூடல.அபி கண்டு பிடிச்சுறுவானேனுதான் அப்படி நின்னேன்.சாரி போதுமா.அதுக்காக நீங்க என்னோட டிரசை நனைக்கலாமா?”

“நான்தான் சொன்னனே நீ என்னை பேசவிடலை அதனால் அப்படி செய்தேன்” என்று கண்ணில் விஷமத்துடன் கூறியவன் கண்கள் ரசனையாக மனைவியை பார்க்க ஆரம்பித்தது.          வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாதாரண காட்டன் சுடிதாரில் ஷால் போடாமல் விளையாண்டு கொண்டு இருந்திருப்பாள் போல நீரில் நனைந்ததில் காட்டன் சுடிதார் அவள் உடலோடு ஒட்டி அவளது அப்பட்டமான அழகை அவனுக்கு விருந்தாக்கியது.அதில் அவனது நினைவு திருமண நாள் அன்று தான் பார்த்த காட்சியை நினைவு படுத்தியது.அவளையே மோன நிலையில் பார்த்து கொண்டு இருந்தான்.

 

“அபி போய்ட்டானு நினைக்கிறேன்” என்று கூறியவாறு திரும்பிய கீதா அவன் பார்வையில் வாயடைத்து போனாள்.

“என்ன பார்வை இது என்று”.அவளது பேச்சில் தன் நினைவு திரும்பியவன் முதலில் வெளியில் போ என்று கரகரத்த குரலில் கூறி தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்தான்.

முதலில் நகுலின் பார்வையில் தடுமாறி நின்றவள்.அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் முகம் சிறுத்து போக வெளியில் வந்தாள். “நான் என்ன பண்ணுனேன் இப்படி சொல்றாரு. ரொம்பதான் லட்டு லட்டுனு உருகறாரு அந்த லட்டு என் கையில் ஒரு நாள் மாட்டட்டும் பூந்தி ஆக்காம விடமாட்டேன்” என்று நினைத்தவள். ஏனோ அந்த லட்டு மேல் காரணம் இல்லாமல் கோபம் வருவது எதனால் என்று யோசிக்க மறந்தாள்.

வெளியில் வந்தவள் வேறு உடை மாற்றி கொண்டு அபியை தேடி சென்றாள்.அபி கண்ணத்தில் கை வைத்து கொண்டு தன் தாத்தாவுடன் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்தவள் வேகமாக அவனிடம் சென்றாள்.

“அபி என்னாச்சு?ஏன் கண்ணத்தில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய்?”

“நீயே கேளுமா நாங்க எல்லாரும் கேட்டு பாத்தாச்சு வாயே திறக்க மாட்டிக்கிறான்” என்று அங்கு வந்தார் சுந்தரி.

“நீ பால் குடித்துவிட்டு கவலை படு” என்று கையில் கொண்டு வந்த பாலை கொடுத்தாள் சுதி.  அப்போதுதான் உள்ளே நுழைந்த அர்ஜூனும் தன் மகனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே வந்து “என்னாச்சு ராஜா என்று கேட்டான்”.யாருக்கும் பதில் அழிக்காமல் உட்கார்ந்து இருந்தான் அபி.

நகுலும் அவனை பார்த்து கொண்டே படிகளில் இறங்கி கீதாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

கீதா மீண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தாள். “வாயை திறந்து சொன்னாதானே கண்ணா தெரியும் இப்புடி உம்முன்னு இருந்தா எப்படி தெரியும்” என்று கேட்டு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டாள்.

ஆம் அபி அவளிடம் கேட்ட கேள்வியில் இவள்தான் திரு திருவென முழிக்க வேண்டியதாக போய்விட்டது.

கீதாவை திரும்பி பார்த்த அபி “நீ முதலில் வேறு சுடிதார்தானே போட்டு இருந்த இப்ப வேற சுடிதார் போட்டு இருக்க.என்னோட விளையாடம என்ன ஏமாத்திட்டு குளிச்சியா?நான் ஜெயிச்சா என்னை இந்த வாரம் வெளிய பிக்னிக் கூட்டிட்டு போறேன்னு சொன்னல.அதனாலதான் உன்ன தேடி காண்டு பிடிக்க முடியலனு கவலையா உட்கார்ந்து இருக்கேன்”.

 

“நீ என்னடானா ஜாலியா குளிச்சு வேற டிரஸ் போட்டுகிட்டு வந்து கேட்கற உன்ன”…. என்று பெரிய மனிதன் போல் சலித்து கொண்டவன். “ஆனா எப்ப குளிச்ச நான் எல்லா இடத்திலும் உன்னை தேடி காணாமல் உன்னோட ரூமுக்கும் வந்தேன் அப்ப சித்தப்பாதான் பாத்ரூமிற்கு போனார்.நீ எங்க இருந்த எங்க குளிச்ச” என்று படபடவென பொரிந்தான் சின்னவன்.

 

சின்னவனின் பேச்சில் பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.சுதி கீதாவை பார்த்தும் அர்ஜூன் நகுலனை பார்த்தும் கிண்டலாக சிரித்தனர்.நகுல் அவர்களை பார்த்து அசடு வழிந்தவன் எனக்கு ஒரு இம்பார்டன்ட் போன் பண்ணனும் பேசிட்டு வர்றேன் என்று எழுந்து தனது அறைக்கு புகுந்து கொண்டவன் “அட பாவி அபி இப்புடியா எங்க மானத்த வாங்குவ” என்று மகனை செல்லமாக திட்டி கொண்டான்.

 

கீதாவோ “இப்ப என்ன செய்வது இந்த வாண்டு எல்லாத்து முன்னாடியும் இப்புடி மானத்த வாங்குதே என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தவள்.ஆபில் விஷயமாக ஒரு ஈ மெயில் செக் பண்ணனும் நான் பாத்துட்டு வர்றேன்” என்று வேகமாக ஒடிவிட்டாள்.

 

“ஹே கீது நா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ” என்று அபியும் அவள் பின்னாடியே ஓடினான்.அவன் கவலை அவனுக்கு இல்லை என்றால் பிக்னிக் போக முடியாதே.

கீதாவோ எல்லார் முன்னாடியும் அசிங்கமா போச்சே என்று நொந்து கொண்டு இருக்க அவள் எதிரே வந்து நின்ற அபி கண்களை சுருக்கி கொண்டு கொஞ்சும் குரலில் “பிக்னிக்” என்று சொல்ல போலாம் என்ற அவளின் சம்மதத்தை வாங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.                  கீதாவோ “பாவி இவன்பாட்டுக்கு எந்திருச்சு போய்ட்டான் ஏதாவது சொல்லி சமாளிச்சு இருக்க மாட்டான்.இந்த சுதி சும்மாவே கிண்டல் பண்ணுவா இனிமே சொல்லவே வேண்டாம் என்ன வச்சி செய்ய போறா.கடவுளே இவக்கிட்ட இருந்து என்ன காப்பாத்து” என்று வேண்டி கொண்டாள்.இருந்தாலும் அவளுள் ஏதோ உறுத்தி கொண்டே இருந்தது.

என்ன அது என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அப்போதுதான் உறைத்தது.நகுல் எழுந்து செல்லும் போது அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டே சென்றது.

“அட பாவி ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துகிட்டு நா முழிக்கறத பாத்து சிரிச்சுட்டா போற உனக்கு இருக்கு” என்று மனதினுள் கருவி கொண்டாலும் அவளையும் அறியாமல் அவனது செய்கையை அவள் மனம் ரசிக்கதான் செய்தது.அவனை பழி வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்தவள் “உனக்கு இருக்குடா” என்று தனக்குள் கூறி கொண்டாள்.                          “கீதாவின் பிளான்படி எல்லாம் செய்தவள் அன்று விரைவாக கிளம்பி ஆபிஸ்கு சென்று விட்டாள்.பின்னே அவள் பண்ணிய வேலைக்கு இங்கு இருந்தாள் நகுல் அவளை என்ன செய்வானோ யாருக்கு தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3

கீதா கம்பெனிக்கு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக அபியுடன் விளையாண்டு பொழுதை கரைத்தாள்.வள்ளி வந்து சாப்பிட அழைத்தவுடன் தான் இருவரும் சாப்பிடவே சென்றனர். மாலை அபி வந்து அழைக்கவும் பார்க்குக்கு சென்றாள்.அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11

“என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்க. “சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போதுதான் பார்த்தது போல”,என்று சுவாதி இங்கு வந்தது,அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல்