Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 35

35 – மனதை மாற்றிவிட்டாய்

அதிகாலையில் அனைவரும் நிச்சயம், கோவில் விசேஷம் என கிளம்பு தயாராக திவி கீழே தோட்டத்தில் நின்றிருந்தவளை பார்த்தவன் வேகமாக கீழே வந்து பின்புறம் நின்று இமை கொட்டாமல் பார்த்தான். தன் வெண்டை பிஞ்சு விரல்களை ஈரக்கூந்தலில் இருக்கும் பனித்துளிகளோடு விளையாட விட்டுவிட்டு காலை கதிரவனை ரசித்துக்கொண்டிருந்தாள். தான் வந்ததையும் உணராமல் அவளது பார்வையையும், ரசனையையும் கண்டவன் அந்த சூரியன் மீதும் கோபமுற்றான். அவளின் கை பற்றி திருப்பி அப்படி என்ன அந்த சூரியன்ல தெரியுது? நான் இங்க இருக்கறதுகூட தெரியாம என்றான்.

முதலில் திடீரென திருப்பியதில் குழம்பியவள் அவனது தொடுகையிலும், கேள்வியிலும் மெலிதாக புன்னகைத்துவிட்டு “சூரியன்ல நிறையா தெரியுது. நீங்க எத கேக்கறீங்க. காலைல என்ன அழகா வலிக்காம, அடிக்காம, திட்டாம செல்லமா அவனோட சூரிய ஒளியை மட்டும் அனுப்பிச்சு என்ன டிஸ்டர்ப் பண்றது, நான் எவ்வளோதான் சிணுங்கிகிட்டே திரும்ப தூங்கினாலும் அவனோட பிடிவாதம் விடாம என்னை டிஸ்டர்ப் பண்ணி எழுப்பிவிடறது. அவன்கிட்ட செல்லமா நான் கோவிச்சு கத்தும்போது வெப்பத்தை அதிகமாக்கி கோபமாகி என்ன வெறுப்பேத்தறது, நான் பீல் பண்ணி இருக்கும் போது வெப்பத்தை குறைச்சி என்ன அன்பா பாக்கிறது எல்லாத்துக்கும் ஒளி குடுத்து எல்லாரையும் சமமா பாக்கிறதுன்னு அவன் பண்ற எல்லாமே அழகு தான். அதான் என் ஆள ரசிச்சிட்டு இருக்கேன்.” என்றாள் கண்சிமிட்டி.

அவள் வருணிக்க ஆரம்பிக்கும்போதே இவனுக்கு வெப்பம் அதிகமாகி கோபம் குடிகொண்டுவிட்டது.

அவள் கூறியதை முழுதாக கேட்ட ஆதி “அப்படியே ஒண்ணு விட்டேனா… அதென்ன பழக்கம் என் ஆளு என் ஆளு னு… இன்னொரு தடவ யாரையாவது சொல்லிப்பாரு.”

திவி “இதென்னடா வம்பா போச்சு. நேத்து நந்துவ சொன்னேன். அவன் குட்டிப்பையன். இப்போ சொன்னது சூரியனை. இயற்கையை ரசிச்சு சொன்னேன். இதுக்குகூடவா ?” என்றாள் ராகம்பாடிக்கொண்டே கூற

அவனோ “இருக்கட்டும்… யாராவேனும்னாலும் இருக்கட்டும். பட் உன்கூட சேத்துவெச்சு பேசாத. எனக்கு பிடிக்கல.” என முகத்தை திருப்பிக்கொண்டு “இவள நேத்து முழுக்க பாக்கலேன்னு வந்தா இவ என்னை ரசிக்கமா சூரியனை ரசிக்கறாளாம்.” என்று முணுமுணுக்க மெதுவாக என்றாலும் கேட்டுவிட்ட திவி தனக்குள் சிரித்துக்கொண்டவள் அவனின் முன்பு வந்து “சரி சரி அதுக்கேன் முகத்தை இப்டி வெச்சுக்கிறீங்க. பிடிக்கலேன்னா விடுங்க, இனிமேல் பேசல.” என உடனே சொல்லவும்

ஆதிக்கு தன் ஒரு நொடி முகசுணக்கத்தை கூட தாங்காமல் தனக்கு பிடிக்கும் என இத்தனை நேரம் ரசித்து கூறியவற்றையே மாற்றிகொள்கிறாளே அத்தனையும் எனக்காக எண்ணும் போது அவள் மீதான காதலும் அவனுக்கு பெருகிக்கொண்டே இருந்தது. அவளிடம் பேச ஆசையாக அவளிடம் திரும்ப அவன் ஆரம்பிக்கும்போது திவியின் உடையை பிடித்து இழுத்துக்கொண்டே “திவி, அங்க பாரு, என்ன துங்கவிடாம எழுப்பறேன்னு திட்றாங்க. நீ என்ன விட்டுட்டு இங்க என்ன பண்ற? வா போலாம்..” என தூக்கக்கலக்கத்தில் அவளை இழுத்துக்கொண்டே விடாமல் நந்து புலம்ப ஆதிக்கு பேசமுடியவில்லை என்ற கோபம் “டேய் நந்து, என்ன பழக்கம் இது. அவ டிரஸ் ல இருந்து கையெடு. எப்போ பாரு அவளையே கூப்பிட்டுக்கிட்டு, அம்மாகிட்ட போ. அண்ட் இனிமேல் பேரு சொல்லி கூப்பிட்டு பாரு. ..” என திட்ட நந்துவோ அவன் கத்த ஆரம்பித்தபோதே பயந்து திவியின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தவன் இறுதியில் வாய் பிதுங்கி அழுகை வர தயாராக இருந்த நிலையில் திவி வேகமாக அவனை அள்ளி எடுத்து “நந்து கண்ணா, அங்க பாரேன், பைரவனும் உன் பின்னாடியே சுத்தறான். பிரண்ட் ஆயிட்டீங்க போல. வாலாற்றான் பாரேன். நானே வந்து எழுப்பலாம்னு இருந்தேன் குட்டி. இன்னைக்கு கோவிலுக்கு போகணும்ல,” என்று அவள் பேச்சை மாற்ற அவனும் திட்டுவாங்கியதை விட்டுவிட்டு “ஆமாம்ல, நேத்து நம்ம பிளான் பன்னோம்ல.. அந்த கடைக்கு எல்லாம் போலாமா? ” என கேட்க “ஆமாடா குட்டி. போயி சமத்தா சீக்கிரம் ரெடி ஆகுங்க. ”

“ஓகே, திவி” என்றவன் நின்று ஆதியை பார்த்த பார்வையில் ஒரு மிரட்சி இருக்க திவி “அது, மாமாக்கு கொஞ்சம் ஒர்க் டென்ஷன். அவங்க பேசும்போது நீ டிஸ்டர்ப் பண்ணியா. அதான் அப்டி சொல்லிட்டாங்க. எனவும் சின்னவனும் “ஓ. … சாரி மாமா. இனிமேல் பேசும் போது டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்.” என்று ஓடிவிட்டான்.

திவியோ அவனை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள். ஆதிக்கு தான் சங்கடமாக போய்விட்டது. சின்ன பையன்கிட்ட போயி கோவிச்சுக்கிட்டேனே…ச்சா. …இவ வேற எதுவுமே சொல்லாமப்போய்ட்டாளே.

அனைவரும் தயாராகி வர வெளியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்த ஆதி புடவையில் பதுமையாக பவனி வரும் தன் தேவதையை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். நந்து, அம்முவுடன் பேசிக்கொண்டே திவி வர இவனை கவனிக்கவில்லை. ஆனால் குடும்பமே இவனின் இந்த சிலை நிலையை கவனித்து சிரித்துக்கொண்டிருந்தனர். அர்ஜுன் ஆதியின் முதுகில் தட்டி “மச்சான் இன்னைக்கு நிச்சயம் எனக்கும், உன் தங்கச்சிக்கு, விட்டா உனக்கும், என் தங்கச்சிக்கும் நீ இன்னைக்கு கல்யாணமே பண்ணிக்குவ போலவே.” என வம்பிழுக்க

ஆதியும் “அதான் சொல்லிட்டேன்ல மேரேஜ்க்கு ஓகேன்னு. நீங்க பொறுப்பில்லாம இருந்தா அதுவும் பண்ணிடுவேன். ” என்றான்.

அபி அவன் காதை பிடித்து திருக, அர்விந்த் “ஏன்டா, நேத்து நைட் தான் ஓகே மேரேஜ்க்கு நாள் பாருங்கன்னு சொன்ன. விடிஞ்சதும் கல்யாணம் கேக்குதா உனக்கு. என்னவோ நாங்கதான் இத்தனை நாள் தள்ளிப்போட சொன்னமாதிரி.” கேட்டார்கள்.

[முந்தைய நாள் இரவு திவியின் அறையில் இருந்த வந்தவன் வெகுநேரம் தனியாகவே இருந்து சிந்தித்தான். அனைவரும் வந்தவுடன் உணவு உண்ணும் போது ஆதியிடம் பாட்டிராஜா, ஊர்ல எல்லாரும் உன் அம்மாகிட்ட கேக்கறாங்கமொத பொண்ணுக்கு இரண்டாவது குழந்தையே வந்தாச்சு, இரண்டாவது பொண்ணுக்கு நிச்சயம், உங்க பையனுக்கு எப்போன்னு? கேக்கறாங்க. ஆதிநாராயணன் அய்யா இருந்தாங்கன்னா இந்நேரம் பேரனுக்கு மாளிகைல கல்யாணம் வெச்சு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு பாத்து திருவிழா மாதிரி நடத்திருப்பாருனு சொல்லறாங்க. நீதான் எங்ககிட்ட பிடிக்குடுக்கவே மாட்டேன்கிற.” என இழுத்துக்கொண்டே குறையாக சொல்ல அவனுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது. எப்படியும் நான் கல்யாணம் பற்றி கூறியதை தாத்தா பாட்டியிடம் அம்மா கூறியிருப்பார்கள். இருந்தும் நேரடியாக என்னிடம் கேட்காமல் இப்படி கேட்க அவன் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டுகல்யாணத்துக்கு நாள் பாருங்க.” என்றான்.

அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஆளாளுக்கு ஒரு ஒரு கேள்வி

திவிகிட்ட அப்டினா பேசிட்டியா? லவ்வ சொல்லிட்டியா?”

அவளும் உன்ன லவ் பண்ராளா? “

எதுவுமே சொல்லல அவ? மேரேஜ்க்கு அக்செப்ட் பண்ணிட்டாளா? “

என்ன பேசுனீங்க? எப்படி ப்ரொபோஸ் பண்ண? “

அவன் அனைவரின் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டேஅம்மாடி, எத்தனை கேள்வி எல்லாரும். சரி சொல்றேன். அவகிட்ட என் வாயைத்திறந்து லவ் பன்றேன்னு மட்டும் சொல்லல. அவளும் தான். ஆனா இரண்டு பேரும் லவ் பண்றோம். சோ எங்க 2 பேருக்கும் மேரேஜ் ஓகே.” என்றான்.

அவனை திருதிருவென முழிக்கஇதுக்கு எதுக்குடா இவ்வளோ நாள் வெயிட் பண்ண. நீதானே அவளுக்கு லவ் வரணும். அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன? ” என அரவிந்த், அர்ஜுன், அபி கேள்வி கேட்க

ஆதியும்ஆமா, இப்போவும் சொல்றேன். அவ என்கிட்ட லவ் பண்றத சொல்லல. ஆனா லவ் பண்ணிட்டா. அதனால தான் சொல்றேன். கல்யாணத்துக்கு நாள் பாருங்கன்னுநீங்க நாள் குறிச்சுட்டு சொல்லுங்க அதுவரைக்கும் அவகிட்ட நீங்க யாரும் இத காட்டிக்காதீங்க…” எனவும் அவனின் மகிழ்ச்சியும், உறுதியையும் கண்டவர்கள் மனமகிழ்வுடன் வேற எதுவும் கேட்காமல் அடுத்த நடக்கவேண்டியதை பார்க்கவேண்டும் என பேசிக்கொண்டே சென்றுவிட்டனர். அவனுக்கு தானே அவளிடம் தங்களது திருமணம் பற்றி பேசவேண்டும் அந்த நேரம் அவளது உணர்வுகளையும், செய்கைகளையும் ரசிக்க வேண்டுமென ஆவல்..]

ஆதி “ஓ. …நேத்து தான் சொன்னேனா. ..ஏதோ ரொம்ப நாள் ஆனமாதிரி இருக்கு மாமா, சரி, அப்படியே இருந்ததா என்ன, அதான் சொல்லியாச்சே. இன்னைக்கு அர்ஜூன்க்கு நிச்சயம் நடக்கட்டும், அப்படியே எங்களுக்கும் கல்யாணம் நடக்கட்டும். ஏன் லேட் பண்ணனும். காலகாலத்துல தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்னு அக்கறை இருக்கா அர்ஜுன்.

2 குழந்தைக்கு அப்பா உனக்காவது இதெல்லம் தோணவேண்டாமா அரவிந்த்?” என வினவ அவர்கள் இவனை கொலைவெறியுடன் முறைக்க மதி, பாட்டி அனைவரும் அவன் அருகில் வந்து “டேய், அவ அம்மா அப்பான்னு குடும்பமே ஊர்ல இருக்கு. அவ கல்யாணத்துல அவங்க வேண்டாமா? ”

அவனுக்கு புரிந்தாலும் முகம் மீண்டும் ஏக்கமாக திவியை நாட “சரி, நான் அவளை கூப்பிட்டு கோவிலுக்கு வரேன்.” என அர்ஜுன் “ஒன்னும் வேண்டாம். என் தங்கச்சி உன் தங்கச்சிகளோடவே வரட்டும். கல்யாணத்துக்கு ஓகே னு சொன்னதுக்கு அப்புறம் உன்ன நம்பி எல்லாம் அனுப்பமுடியாது.” என ஆதி அவனை முறைக்க அரவிந்த் “கரக்டா சொன்ன அர்ஜுன், நாங்க பொறுப்பான அண்ணன்ங்க பா அதனால அவளை கல்யாணம் முடியவரைக்கும் பத்திரமா பாத்துக்கணும்ல. சோ நீ அம்மா, அப்பா, பாட்டி, தாத்தாவ கூப்பிட்டு வண்டில வா. நாங்க அவங்ககூட நடந்து வரோம்.” எனவும் இவனும் அனைவரையும் பார்க்க இரக்கமே இல்லாமல் பெரியவர்களும் “சீக்கிரம் வா ஆதி, வந்து வண்டிய எடு” எனவும் திவியை பார்க்க அவள் இவன் பக்கமே திரும்பாமல் வாசல் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்க ஆதி மனதினுள் ” இவ ஒருத்தி மனுசன கண்டுக்காம.” என பொருமிக்கொண்டே வண்டியை எடுத்தான்.

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32

உனக்கென நான் 32 அன்பரசியின் கைபைசியிலிருந்து கற்றைகள் காற்றில் கடுகி சென்று சந்துருவின் வீட்டை அடைந்தன. அதன் எண்ணம் சந்துரு எங்கே என்று இருக்க சந்துருவின் அறையை தேடின. மிகவும் ஆர்வமுடன் சந்துருவின் கைபேசியை பார்க்க அவனோ வேறு யாருடனோ உரையாடி

கபாடபுரம் – 16கபாடபுரம் – 16

16. எயினர் நாடு   தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூற வேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள். அறிவுக்கும் அன்புக்குமிடையே இளையபாண்டியனின்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12

காலங்களின் நிஜமாய் நீ இருக்கும் மட்டும் … காற்றெல்லாம் உன் வாசமாய் நானிருப்பேன்… ************************************************************************************************************************* ஜோடியாக நின்றவர்களை வாழ்த்துவதற்காக பரிசு பொருட்களுடன் மேடை ஏறினான் குமார். “கொஞ்சம் சிரிச்சா என்ன முத்தா கொட்டிவிடும்!” பிரணவை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. “ஆமாம் முத்து