Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள்.

இரயில் பயணம் போல் காலம் செல்ல.இதோ வள்ளியின் ஆப்ரேஷன் முடிந்து அனைவரும் இனி சென்னையில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னதால் சுதி அபியை பார்த்து கொள்ள என்று வேலையை ரிசைன் செய்தாள்.

கீதா அவர்கள் ஆபிஸின் சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கி கொண்டாள்.அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.

வள்ளியும்,ராகவும் கூட சென்னை வந்துவிட்டனர். கோவிந்தன் “தான் டிரஸ்டை கவனிக்க வேண்டும் என்றும் மாதம் இரு முறை வந்து செல்வதாக கூறி” நாகபட்டினம் கிளம்பினார்.

அன்று இரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்தனர். “இனி எப்படி சமாளிக்க போகிறோம்?”என்று இரு பெண்களும் அமைதியாக இருந்தனர்.இதில் கீதாவின் நிலைதான் மோசமாக இருந்தது.காதலித்தவனையே மணந்திருக்கிறாய் என்று அனைவரும் அவளை கிண்டல் செய்தனர்.

அறைக்கு செல்வதற்கு முன் அபியுடன் விளையாட “சீக்கிரம் குட்டி நகுலனையாவது இல்லை குட்டி கீதாவையாவது சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று உறவுமுறையில் நாத்தனார் முறையில் இருக்கும் பெண் கூற” இவள் என்ன சொல்கிறாள் என்பதை போல் பார்த்து சிரித்து மழுப்பினாள்.            இருவரும் அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.முதலிரவு ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தரும் இரவு.                                                                                                                                    சுவாதிக்கு தான் என்ன நினைக்கிறோம் என்பது புரியவில்லை.ஒரு பக்கம் “தன்னுடைய முதல் காதல்.தன்னுடைய வாழ்வில் அவனை மீண்டும் சந்திப்போமா?”என்று ஏங்கியவளுக்கு விருந்தாக அவனுடனான திருமணம்.

அவளின் காதல் மனம் துள்ளி குதித்தது என்றால் “தங்கையாக மற்றொரு மனம் அக்காவின் காதலன் என்று அவனை தள்ளி வைத்தது.அவனின் மேல் கோபபட வேண்டும் காதல் கொள்ள கூடாது” என்று அவள் ஆழ் மனதில் “அர்ஜூன் மாலதியின் காதலன்” என்று பதிய வைத்த எண்ணம் இவர்களின் வாழ்வில் சூறாவளி வீச தயாராகி கொண்டு இருந்தது.இவ்வாறு காதல் மனதுடனும் தங்கையாகவும் போராடி கொண்டு  இருந்தவள்.இறுதியாக நான் முதலில் தேர்வு செய்ததுதான் இதற்கு சரியான வழி. “என் காதலை நான் எப்போதும் உங்களுக்கு தெரியபடுத்தமாட்டேன்.என்னுடைய காதல் என்னிடம் இல்லை”.

“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள்.நான் என் அக்காவிற்கு துரோகம் செய்யமாட்டேன்” என்று தெளிவாக தவறான முடிவெடுத்தாள்.

அதே மனநிலையில் தெளிவான முகத்துடன் அவனது அறைக்குள் சென்றாள்.   அர்ஜூன் அவளை பார்த்து சிநேகமாக சிரித்து.

“வா வது……….. என்னுடைய இந்த சந்நியாசி அறையை சம்சார அறையாக மாற்ற வந்திருக்கும் என் அழகான ‘பொண்டாட்டியை’ அன்போடு வரவேற்கிறேன்” என்று பொண்டாட்டி என்ற வார்த்தையை அழுத்தி கூறி வரவேற்றான்.

“என்ன நினைத்ததை முடித்துவிட்டோம் என்ற கர்வமா”…. சுதி.

“இல்லை நிச்சயமாக அப்படி இல்லை வது நம் காதல் கைகூடிவிட்டது என்ற சந்தோஷம்”….                                 அர்ஜூன்.

நக்கலாக சிரித்தவள் “காதலா நமக்கு இடையிலா,நான் எப்போது உங்களை விரும்புவதாக சொன்னேன் எனக்கு நினைவில்லையே”.

“உனக்கு பொய் சொல்ல வராது வது அதனால்தான் நீ என்னை பார்த்து கூட பேசமாட்டிக்கிறாய்.என்னை பார்த்து சொல்லு உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று”,……

என்ன தைரியம் சொல்லமாட்டேன் என்ற எண்ணமா? “சரி உங்களை பார்த்தே சொல்கிறேன்” என்று திரும்பியவள் அதிர்ந்து போனாள்.அவனது பார்வை கணவனாக அவள் உடலில் உரிமையாக மேய்ந்து கொண்டு இருந்தது.

அவனின் பார்வையில் தடுமாறி “எ…என்ன…….. எதற்கு இப்படி பார்க்கிறாய்”.

“நான் என்ன செய்தேன்.நீ தான் ஏதோ என்னை பார்த்து சொல்லுவதாக சொன்னாய்.அதான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.சீக்கிரம் சொல் எனக்கு நிறைய வேலை இருக்கிறது”.

“இந்த நேரத்தில் என்ன வேலை.என்னவோ செய்துவிட்டு போ.நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.எனக்கு” என்று சொல்ல வந்தவளை நெருங்கினான் அர்ஜூன்.

“ஏய் எதற்கு பக்கத்தில் வருகிறாய்?”……..

“அது ஒண்ணும் இல்ல வது குட்டி பொய் சொல்றவங்கள எப்படி கண்டுபுடிக்கறதுனு ஸ்ரீ புருஷானந்த சுவாமி சொல்லியிருக்கார். அதை செய்து நீ உண்மைதான் சொல்கிறாயா என்று செக் செய்ய வந்தேன்”.                                                                                                                                                                                        “நான் உண்மையைதான் சொல்லுகிறேன் எனக்கு….. உன்னை…….உன்னை”……….

“என்ன ஆச்சு வதுமா என்னை எதற்கு இப்படி இழுக்கிறாய்”?

“நீ முதலில் கையை எடு”…..

‘முடியாது செல்லம்.எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் வது………. எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்” என்று ஒரு படத்தில் சொல்வது போல் சொன்னவனை முறைத்து “அதற்கு கையை” என்று சொல்லவந்தவள் வாயை இறுக மூடி கொண்டாள்.

ஆம் வைத்திருந்த இடம் அப்படி………

“ம்………. சொல் வது கையை ஏன் இடையில் வைத்திருக்கிறீர்கள் என்றுதானே கேட்க வந்தாய் நானே சொல்கிறேன்”.

“மற்றவர்கள் பொய் சொன்னாள் அவர்கள் மூச்சு சீரற்று இருக்குமாம்.உடலில் அதிகமாக வியர்க்குமாம்.மூச்சை வைத்து கண்டுபிடிப்பேன் நீ கோப படுவாய்.அதான் இடையில் வைத்து செக் செய்கிறேன்”.

“நீங்கள் மூச்சை வைத்தே கண்டுபிடியுங்கள்” என்று தன் இடையில் இருந்த கையை தட்டிவிட்டாள்.

“சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்.நீ சொன்ன மாதிரியே செய்கிறேன்” என்று அவள் நெஞ்சில் கை வைக்க கைகளை கொண்டு செல்ல.

“ஏய்”……… என்று கத்திவிட்டிருந்தாள் சுவாதி.

“ஸ்………..எதுக்குடி இப்படி கத்துற.வெளில இருக்கறவங்க என்னபத்தி என்ன நினைப்பாங்க”.       “நீ என்ன செய்ய வந்த.நீ உன்னை” என்று சொல்ல தடுமாற

“நீ தானே மூச்சை வைத்து செக் செய்ய சொன்னாய்.நீ சொன்னதைதான் நான் செய்தேன்”.அதற்கு ஏன் கத்துகிறாய்.

இவன் இப்படியே பேச்சை வளர்க்க பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள்.

“சரி நான் இப்போது எதுவும் சொல்லவில்லை. அதனால் அது உண்மையா?பொய்யா?என்று கண்டுபிடிக்கும் கஷ்டம் உனக்கு இல்லை.எனக்கு தூக்கம் வருகிறது.நான் தூங்க போகிறேன்.எனக்கு தரையில்படுத்து பழக்கம் இல்லை.நீ வேண்டுமானால் கீழேபடுத்து கொள்”.

“என்ன நான் கீழேபடுக்க வேண்டுமா?முடியாது.எனக்கும் கீழேபடுத்து பழக்கம் இல்லை”.

“என்னவோ செய்.எனக்கு தூக்கம் வருகிறது.நான் படுக்க போகிறேன்.வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொண்டாள்”.அவளும்தான் என்ன செய்வாள்.காதல் கொண்ட மனம் அவனிடம் மயங்கி நிற்க இனி சிறிது நேரம் பேசினாலும் தன் காதல் மனதை அடக்குவது கஷ்டம் என்று முடிவுக்கு வந்தே படுக்க சென்றவள்.மனதினுள் அவனை திட்டி கொண்டுதான் இருந்தாள்.               “ராஸ்கல்.சரியான கேடிடா நீ.உன்னிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று வந்தவளை கொஞ்ச நேரத்தில் என்ன பாடு படுத்திவிட்டாய்.இன்று ஒரு நாளே கண்ணை கட்டுதே மிடியில்ல”… என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் சொன்னவள்.

“சுவாதி ஸ்டடி ஸ்டடி அவன் மாலதியின் காதலன்”.

“ப்ச்ச்ச்ச்….எத்தனை முறை மனதில் பதிய வைத்தாலும் எனக்கு ஏன் அவனை பார்க்கும் போது          என்னவன் என்றே தோன்றுகிறதே” என்று எண்ணியவள் தன் மீதே கோபம் கொண்டாள்.அந்த கோபத்தை அர்ஜூன் மேல் காட்ட ஆரம்பித்தாள்.

“இங்கே பார் வது”……..                   அர்ஜூன்.

“உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ,நாம் இருவரும் கணவன் மனைவி”.அதனால் என்றவனை சுவாதி இடைபுகுந்து

“உங்களுடன் கொஞ்ச வேண்டுமா”?

“கொஞ்சினாலும் தப்பில்லை”.என்றவனை சுவாதி முறைக்க.

“நல்ல நண்பர்களாக இருக்க முயற்சிக்கலாமே என்றுதான் சொல்ல வந்தேன்.நீ தான் தவறாக நினைத்து கொண்டாய்.இந்த விஷயத்தில் மட்டும் இல்லை நிறைய விஷயங்களில்,நீ தவறாகதான் நினைத்து கொண்டு இருக்கிறாய். நண்பர்களாக இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாமே”.                                                                                                                                                                        “உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை”.

“ம்……….முதல் இரவில் காதல் கணவனிடம் உங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாள்,அதற்கு முன்பே நன்கு புரிந்து வைத்திருப்பதாகதானே அர்த்தம்”.

“ஆமாம் உங்களைபற்றி எனக்கு நன்றாக தெரியும்.சொல்லவா என்று நக்கலாக அர்ஜூனை பார்த்து.நீங்கள் ஒரு பச்சோந்தி நிமிடத்திற்கு நிமிடம் மனதை மாற்றி கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.ஆபத்து என்று உதவி கேட்டு வந்த பெண்ணை பயன்படுத்தி கொண்ட மாமனிதர்.தனக்கு ஒன்று வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மற்றவரின் உயிரை பணயமாக வைத்து கூட அந்த காரியத்தை சாதித்து கொள்ளும் பெரிய பிஸ்னஸ் மேன்” என்று அவனை வார்த்தை அம்புகளால் துளைத்தாள்.அப்புறம் என்று சொல்லி கொண்டே போனவள்.

அர்ஜூனின் அடிபட்ட பார்வையை கண்டு பேச்சை நிறுத்தினாள். “செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிப்பதில் பலன் இல்லை.நீ உண்மையை புரிந்து கொள்ளும் வரை நான் காத்திருப்பேன்” என்று கூறியவன் கண்களை இறுக மூடி திறந்தான்.

கட்டில் பெரியதுதானே இருவருமே படுத்து கொள்ளலாம்.முறைக்காதே.என் சுண்டு விரல் கூட உன் மேல்படாது என்று அவனும் படுத்துவிட்டான்.

சற்று நேரம் உறங்குவது போல் படுத்திருந்தவள்.புது இடம் மனதுக்கு பிடித்தவனே என்றாலும் ஒரு ஆண் மகனுடன் ஒரே படுக்கையில் படுத்திருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.அதுமட்டும் இல்லாமல் கடைசியாக பார்த்தானே ஒரு பார்வை.

என்ன பார்வை “அது என்னை பார்த்து நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதானா” என்பது போல் அதே அதேதான்.அந்த பார்வை என்னிடம் அதே கேள்விதான் கேட்டது.கடைசியில் கண்ணை மூடி திறந்த போது சிவந்திருந்த மாதிரி தெரிந்ததே,அழுதிருப்பானோ.

நன்றாக பார்க்கும் முன் போய் படுத்துவிட்டான்.

தான் பேசிய வார்த்தை அவனை எந்த அளவுக்கு காயபடுத்தியிருக்கும் என்பதை அறிந்த அவளது காதல் மனது அவனுக்காக கண்ணீர் சிந்தியது.

“நான் என்ன செய்ய அஜூ நீ என் உயிர்.ஆனால் உன்னிடம் நெருங்கவிடாமல் என் சகோதர பாசம் தடுக்கிறது.நான் நன்றாக பேசினால் எங்கு தடுமாறிவிடுவேனோ என்ற பயம்தான் உன் மேல் கோபமாக திரும்புகிறது” என்று கண்களை மூடி கொண்டு அழுதாள்.

அவளின் கண்ணீரை மென்மையாக ஒரு கரம் துடைக்கவும் திடுக்கிட்டு விழித்து எழுந்தாள்.அவன் அவளையே பார்த்து கொண்டு “இந்த கண்ணீர் எனக்கானது என்றால் தேவையில்லாமல் உன் கண்ணீரை வீணாக்குகிறாய் என்றுதான் அர்த்தம்”.

 

“என் செயல்கள் உன்னை எந்த அளவு பாதித்திருக்கும் என்றும் என் மேலான உன் காதலின் அளவும் இப்போது எனக்கு நன்றாக புரிகிறது”.

என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து உட்கார்ந்து அவனை பார்த்தாள்.

“என்ன பார்க்கிறாய்?என்னை காயபடுத்த நீ கூறிய வார்த்தைகள் உன்னுடைய காதல் மனதையும் பாதித்திருக்கிறது. அதற்கான கண்ணீர்தான் இது.நீ எதற்காக என்னிடம் இப்படி பேசினாய் என்று என்னால் உணர முடிகிறது”.

“உன் விருப்பம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது.நான் முதலில் சொன்னது போல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். நம் மகனுக்காக நீ இந்த முயற்சி செய்வாய் என்று நம்புகிறேன். இப்போது படுத்து தூங்கு” என்றவன் எழுந்தான்.

“நான் சோபாவில் படுக்கிறேன்.என் மீது பயமில்லாமல் தூங்கு” என்று சிரிப்புடன் சொன்னாலும் அவனது கண்களை அந்த சிரிப்பு எட்டவில்லை என்பதை அறிந்து கொண்டவள் ஒன்றும் சொல்லாமல் படுத்து கொண்டாள்.

இவர்கள் நிலை இப்படி இருக்க மற்றொரு அறையில் கீதாவிடம் மாட்டி முழித்து கொண்டு இருந்தான் நகுலன்.

நகுலனின் அறைக்குள் வேகமாக நுழைந்த கீதா அவனை கண்டு கொள்ளாமல் பெட்டில் அமர்ந்து வேக வேக மூச்சுக்களை எடுத்து தன்னை சமாளித்து கொண்டு இருந்தாள்.

“என்ன பேபி என்ன ஆச்சு?” நகுலன்.

“யார் மேல் இவ்வளவு கோபம்?”என்று அவள் அருகில் டிரஸிங் டேபிள் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கேட்டான்.

“உங்கள் மேல்தான் என் கோபம்”.                      கீதா

“நீ கோபப்படும் அளவிற்கு நான் இப்போது என்ன செய்தேன். பார் இப்போது கூட உன்னைவிட்டு இரண்டு அடி தள்ளிதானே உட்கார்ந்து இருக்கிறேன்”.

“உங்களை யார் நாம் காதலர்கள் என்று எல்லோரிடமும் சொல்ல சொன்னது”.

“ஏன்? உன் காதலன் எதுவும் சந்தேகபடுகிறாரா?போன் செய்து கொடு நான் பேசுகிறேன்”.     “ஹம்ம்………..ரொம்ப கஷ்டம் இல்லாத காதலனை நான் எங்கு பேச சொல்வது இதில் என் மீது சந்தேகம் வேறுபடுகிறானா”?

“இவனது கற்பனை திறனுக்கு அளவே இல்லையா ஆண்டவா?” என்று வாய்விட்டே முணுமுணுப்பாக புலம்பியவள்.தன் தலையில்தட்டி கொண்டு வேகமாக நகுலனை பார்த்தாள்.

அவள் சொல்வது அனைத்தையும் கேட்காதவன் போல் முகத்தை வைத்து கொண்டு “ஏதாவது சொன்னாயா?என் காதில் சரியாக விழவில்லை கொஞ்சம் சத்தமாக சொல்” என்றான் அப்பாவியாக.

“நான்தான் திருமணத்திற்கு முன்பே உன் காதலனுடன் பேசுகிறேன் என்றேன்.நீதான் அவருக்கு டைம் இல்லை என்றாய்”.

கீதாவின் புலம்பல் காதில் விழுந்த பிறகே நிம்மதியானான் நகுலன்.பின்னே தான் காதலித்தவள் வேறு ஒருவனை காதலிப்பதாக சொன்னாள் எந்த காதலன்தான் நிம்மதியாக இருப்பான்.                                                                                                                                                                                              “கிராதகி ஒருவனை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னையே ஏமாற்றிவிட்டாயே?நானும் அப்போது இருந்த குழப்பத்தில் நீ சொன்னதை எல்லாம் நம்பி.அதற்கு ஏற்றார் போல் டைவர்ஸ் பிளான் வேறு.உன்னை என்ன செய்கிறேன் பார்.நீ செய்த வேலையை உனக்கே திருப்புகிறேன்” என்று மனதுக்குள் கருவி கொண்டு வெளியில் ஒன்றும் தெரியாதவன் போன்று அவளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

அவனின் தெளிவான முகத்தை பார்த்தவள். “நிஜமாகவே நான் சொன்னது இவனுக்கு கேட்கவில்லையா?பொய் சொல்கிறானா? இவன் முகத்தை பார்த்தால் கேட்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.கீது உன் வாயே உனக்கு எதிரி அதை முதலில் அடக்கு” என்று தனக்குள் பேசி கொண்டே குழப்பமாக நகுலனை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டவன், “என்ன மேடம் எந்த உலகத்தில் இருக்கீங்க?வந்தவுடனே பொறிஞ்ஜீங்க?இப்ப சைலண்ட் ஆகிட்டீங்க?”  நகுலன்.

“ஸ்”……… கீது என்று ஒரு கண் மூடி,தன் பற்களால் இதழை கடித்து தன்னையே தலையில் தட்டி கொண்டாள்.

நகுலன் அவள் செயலில் தடுமாறிதான் போனான். “இவளுக்கு வேறு வேலை இல்லை.திருமணத்தன்று அப்படிதான் என்னை வேர்த்து விறு விறுக்க வைத்தாள்.இப்போது இப்படி கண்ணடிக்கிறாள்.இவளது அசைவு என்னை கட்டி அவளிடம் இழுத்து போய்விடும் போல இருக்கிறதே, இல்லை இது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு வந்தவன்”.

“நீ இப்படியே யோசித்து கொண்டு இரு நான் தூங்குகிறேன்” என்று எழுந்து கட்டிலுக்கு அந்த பக்கம் சென்று படுத்து கொண்டான்.

“நகுலன் நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போய்படு” என்று அவனை நெருங்கி கேட்டாள்.  “ஏய்….ஏண்டி இப்படி படுத்துற?”   நகுலன்.

“என்னது டி யா?நானும் டா போடுவேன் நகுலன்”.   கீதா.

“நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு.இப்போது எதற்கு என் தூக்கத்தை கெடுக்கிறாய்?”

“ஏண்டா வெளிய என்ன ரவுண்டு கட்டி அடிச்சு அனுப்பராங்க.நீ என்னன்னா.நான் கேட்கற கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டிக்கிற”.

“என்னது அடிச்சாங்களா?யாரு அடிச்சா?எதற்கு அடிச்சாங்க?” என்று பதறி போய் கேட்டான்.   அவனை பார்த்து நக்கலாக சிரித்து “என்னை அடிக்க எல்லாம் முடியாது கிண்டல்பண்ணாங்க அததான் அப்படி சொன்னேன்”.

“கிண்டலா?எனக்கு புரியவில்லை.”       நகுலன்.

“காதலித்தவனையே மணந்துவிட்டாய்.முன்பை போல் இருக்காதே.சீக்கிரம் அபிக்கு விளையாட ஒரு ஆளை ரெடி பண்ணு பிளா……பிளா…..பிளா……..இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு எவ்வளவு அன்னீசியா இருந்தது தெரியுமா?நீ பாட்டுக்கு கூலா உள்ள வந்து உட்காந்துகிட்ட வெளில நான்பட்ட பாடு எனக்குதானே தெரியும்”.

இதுதான் சமயம்.இவள் என்னிடம் பொய் சொன்னதற்கான தண்டனை கொடுக்க என்று மனதுக்குள் முடிவுக்கு வந்தவன். அவள் சொன்னதையே திருப்பி அவளிடம் படிக்க ஆரம்பித்தான்.தான் சொல்லும் பொய்யால் தான் பல கஷ்டங்களை பட போகிறோம் என்பதை அறியாமல்.அவள் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.

“இங்க பார் பேபி”..   நகுலன்.

“நான் ஒன்றும் பேபி இல்லை.எனக்கு இருபத்து இரண்டு வயது வர போகிறது.என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்”.

“முடியாது.இப்போது இதுவா முக்கியம்.நான் சொல்ல வந்த விஷயத்தை நன்றாக கேட்டு கொள்.எல்லோரிடமும் நாம் காதலர்கள் என்று நான் சொல்லவில்லை.அம்மா சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இந்த அம்மா ஏன் தான் இப்படி செய்கிறார்களோ இந்த விஷயம் என் லட்டு காதுக்கு போனது நான் எப்படி சமாளிப்பேன்” என்று ஓர கண்ணால் அவளை பார்த்து கொண்டே புலம்பினான்.

“ஹே……..நீ லவ் பண்றியா?கவல படாதே உன் லவ்வரை நான் சமாளிக்கிறேன்”.   கீதா                     நகுலனின் நிலமை அட கடவுளே என்று ஆனது.

“ஏண்டி நான் ஒருத்திய காதலிக்கிறேன்னு சொல்றேன்.உனக்கு உடனே கோபம் வர வேண்டாம் கொஞ்சம் ஏமாற்றத்தையாவது உன் முகத்தில் பார்த்திருந்தாள் நம்பிக்கை வந்திருக்கும்.சரியான தத்தி போல,,,,டேய் நகுலா…எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தியோ இப்படி ஒரு தத்தி பொண்டாட்டியா கிடைக்க” என்று மனதுக்குள் புலம்பியவன்.

“டேய்……… முதலில் இந்த அழகு எனக்கு இல்லையா?என்று பெரு மூச்சுவிட்டு அதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று சொன்னாய் என்ற மனசாட்சி தலையில் தட்டி “அவள் என் பொண்டாட்டி நான் என்ன வேண்டுமானலும் பேசுவேன் தேவையில்லாமல் ஆஜர் ஆகாதே” என்று  அமுக்கினான்.

கீதாவை பார்த்து கொண்டே “என் லட்டு ரொம்ப பொசசிவ்.என்னிடம் பெண்கள் அட்ரஸ் கேட்டாளே அவர்களை ஓட ஓட விரட்டுவாள்.அதனால் நானே பார்த்து கொள்கிறேன்.நீ அவர்கள் பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே”.

“நாம் இருவருக்குமே இது ஒரு காண்ரேக்ட் போடாத பிஸ்னஸ்.எப்போது வேண்டுமானாலும் அர்ஜூன் அண்ணாவும்,சுவாதி அண்ணியும் சேரலாம்.அதன் பிறகு நாம் பிரிந்து தானே ஆக வேண்டும் என்று சத்தமில்லாமல் அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு.நான் தூங்குகிறேன் மை லட்டு இஸ் வெயிட்டிங் பார் மை டிரீம்” என்று படுத்து கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 20

அமெரிக்காவில் நகுலனின் மெயிலை பார்த்த கீதாவிற்கு முதலில் போனை கட்பண்ணியதற்கு கோபம் இருந்தாலும் நாளை வீடியோ கால் வருவதாக சொல்லவும் காதல் கொண்ட நெஞ்சம் மகிழ்ந்துதான் போனது.அந்த மகிழ்ச்சியுடனே அவளும் படுத்து கொண்டாள்.            அடுத்த நாள் ஆபிஸ்க்கு சென்ற கீதா வேலையில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

“அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன். “வாட்”  என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள். தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள