Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11

“என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்க.

“சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போதுதான் பார்த்தது போல”,என்று சுவாதி இங்கு வந்தது,அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல் பேசி கொண்டே இருந்தான்.

அர்ஜூன்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டு இருந்தான். “இனி அந்த மனுசன் யார வச்சு அந்த புள்ளைய பிளாக்மைல் பண்ணி காசு வாங்குவான்.என்ன இருந்தாலும் இனி இந்த பொண்ணு தனியாகதான் இருக்க வேண்டும்”.

“இரண்டு பொண்ண பெத்து ஒரு பொண்ணுக்கு கூட கல்யாணம் பண்ணி பார்க்கும் குடுப்பனை இல்லாமலேயே அந்த அம்மா போய் சேந்திருச்சு” என்று அங்காலாய்ப்பாக கூறினான். இருவரும் சுவாதி வீட்டுக்கு போன போது சுவாதி “இனி எனக்கு யார் இருக்க என்னையும் உங்களுடன் கூட்டி போயிருக்கலாமே அம்மா இப்படி என்னை அனாதை ஆக்கிவிட்டீர்களே” என்று அழுது கொண்டு இருந்தாள்.

சுதியை பார்த்த அர்ஜூனுக்கு “கவலைபடாதே வதுமா உனக்கு நான் இருக்கிறேன்.யார் சொன்னா நீ அனாதை என்று உனக்காக என் குடும்பம் மொத்தமும் காத்திருக்கிறது. என்னைபற்றி நினைக்கவே மாட்டாயா வது நான் என்ன செய்வேன்” என்று அவளின் துடிப்பை பார்த்து இவன் துடித்து கொண்டு இருந்தான்.                                                                                                                                                     ஆயிற்று இதோ சுவாதி அம்மா இறந்து ஒரு மாதம் முடிந்து அனைவரும் வந்து சாமி கும்பிட்டுவிட்டு சென்று விட்டனர்.வீடே வெறுச்சோடி கிடந்தது.கோவிந்தன் சுவாதிக்கு தட்டில் உணவை போட்டு எடுத்து வந்து சாப்பிடுமா என்று அன்பாக கூறினார்.

ஆம் மனைவியின் இறப்பு அவரை வெகுவாக மாற்றி இருந்தது.ஆனால் அப்பாவின் பாசத்துக்கு ஏங்கிய சுவாதிக்கு இந்த பாசத்தை பெற தான் கொடுத்த விலை அதிகம் என்று நினைத்து அவரை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தால்.”இனி இங்கு இவருடன் இருக்க முடியாது இவரது அன்பை என்னால் ஏற்க முடியாது”.

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு சொத்து மேல்தான் விருப்பம் அதற்கு ஒரு வழி பண்ணிவிட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று பழைய சுவாதி வெளிவந்தாள்.அம்மாவால் ஏற்பட்ட கோழைதனத்தை அம்மாவே அவளிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டதாக நினைத்தாள்.அந்த வார பேப்பர் எல்லாம் செக் செய்து வேலைக்கு அப்ளை செய்துவிட்டு இண்டர்வியூக்கு காத்திருந்தாள்.

சுதி நினைத்தது போல் “ஆன்லைனிலேயே இண்டர்வியூ அட்டண் செய்து செலெக்ட் ஆனாள்.வேலைக்கு வரும்படி வந்த ஆபிஸ் சென்னை என்பதை பார்த்து திருச்சிக்கு கேட்டாள்.அவர்களும் ஒரு மாதம் கழித்து வேகண்ட் வரும் அப்போது உங்களை அங்கு அப்பாயிண்ட் பண்ணுகிறோம்” என்று சொல்லிவிட்டனர்.அவளது திறமையை பார்த்து.

இதோஅதோ என்று ஒரு மாதம் முடிந்து வேலையில் சேர சொல்லி கடிதம் வந்தது.

“தன் அம்மாவின் படத்தின் முன் அமர்ந்தவள் அடுத்து நான் என்ன செய்யட்டும் அம்மா.நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்” என்று புலம்பிவிட்டு வெகுநேரம் கழித்தே படுக்க சென்றாள்.                                                                                                                                                                         காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.        தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே வந்தவளை பார்த்த கோவிந்தன்.”என்னமா சீக்கிரம் எழுந்துவிட்டாயா” என்று கேட்க தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

தான் செய்த தவறுக்கு தன் மகள் தன்னை வெறுப்பதில் தவறில்லை என்று நினைத்தாலும் அவருக்கு அவளின் ஒட்டாத தன்மை கவலையை அதிகரித்தது.அன்று வெளியே சென்று வருவதாக சென்ற சுவாதியை பின் தொடர்ந்து சென்ற ராமின் ஆட்களை மாட்டிவிட தருணம் பார்த்து கொண்டு இருந்தவள். பிக்பாக்கெட் கேசில் உள்ளே தள்ளிவிட்டு தனது குடும்ப வக்கீலை சந்தித்து சிலபல வேலைகளை செய்துவிட்டுவந்தாள்.இதற்கிடையே அவளை சந்திக்க வந்த அர்ஜூனை சந்திக்க மறுத்தாள்.

“கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று அவன் சொல்லும் போது வீட்டு வேலைகார அம்மா அல்லது அவளது அப்பாவை உடன் வைத்து கொண்டு பேசினாள்.மற்றவர்கள் முன்பு என்ன பேசுவது.அவளை சமாதானம் செய்து திருமணத்துக்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என்றுதான் வந்தான் ஆனால் உடன் அவர்கள் இருப்பதால் எதுவும் பேசாமல் சாதாரண ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வருவான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டு மாடி ஏறி குதித்து அவளது அறையை அடைந்தான்.அவள் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன்.

“என் தூக்கத்தை கெடுத்துவிட்டு நீ நன்றாக தூங்குகிறாயா” என்றவனின் காதல் உள்ளம் விழித்து கொண்டு அவளை முழுவதுமாக ரசித்தது.

அவள் திரும்பி படுக்கும் போதுதான் தன்னிலை உணர்ந்தவன் “ஆள் மயக்கி இப்படி நீ மயக்கினா நானா பொறுப்பு இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்க கூடாதுடி” என்று கூறி அவளை எழுப்பினான்.

யார் தன்னை எழுப்புவது என்று அரை கண் விழித்து பார்த்தவள்.அடித்து பிடித்து எழுந்தாள்.          “ஏய் நீ எப்படி உள்ளே வந்தாய்?எதற்கு வந்தாய்?நான்தான் உன்னை எண் கண் முன்னே வர கூடாது என்று சொன்னேனே?மீண்டும் எதற்கு வந்தாய்?”என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவன் அவளை தொட கையை நீட்டினான்.

“ஏய்” என்று கத்தி அவன் கையை தட்டிவிட்டவள். “என்ன செய்ய போகிறாய்” என்று பயத்துடன் கேட்டாள்.

அவளின் பயந்த பார்வை அவனை பாதித்தாலும் இப்போது அதை வெளிகாட்ட கூடாது. “அவள் என்ன செய்தாலும் இதுதான் என்முடிவு என்பதை அவளுக்கு நிறுபிக்கும் வரை நான் பழைய அர்ஜூனாக மாற வேண்டும் இவளுக்காக உருகும் அர்ஜூனை பார்த்தால் இவளுக்கு கொழுப்பு ஏறி விடுகிறது இல்லையென்றால் எத்தனை முறை பேச வந்தேன் ஒரு முறையாவது என்னுடன் பேசினாளா” என்ற முடிவோடு இருந்ததால்,அவளை பார்த்து சிரித்து கொண்டே

“அது ஒண்ணும் இல்ல செல்ல குட்டி நீ அடுக்கடுக்கா கேள்வி கேட்டு டயர்டாகி மூச்சு வாங்கினாய் அதான் நான் சரி செய்யலாம்” என்று கண்ணடித்து கூற அவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

“முதலில் நீ இங்கிருந்து வெளியே போ.ஒரு பொண்ணோட அறைக்கு இரவு நேரத்தில் வந்திருக்கிறாய்” என்று சொன்னவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்.

“என்ன வது டார்லிங் என்ன பேசற நீ பொண்டாட்டி ரூமுக்கு புருஷன் வர என்ன தடை” என்று கேட்டான்.அவன் சொல்வதை கேட்ட சுவாதி கடகடவென சிரித்து

“என்னது பொண்டாட்டியா எனக்கு தெரியாமல் எப்போது திருமணம் ஆனது” என்று கிண்டலாக கேட்டாள். அவள் இது போல்தான் ஏதாவது சொல்வாள் என்று தெரிந்ததால் அவளின் சிரிப்பை ரசித்து கொண்டே “தாலி மட்டும்தான் கட்டவில்லை மற்றது எல்லாம் முடிந்துவிட்டதுதானே” என்று அந்த எல்லாமில்……அழுத்தம் கொடுத்து அவளின் இதழ்களை பார்த்து கொண்டே சொன்னான்.அவனுக்குதானே தெரியும் அது தந்த போதை அந்த மயக்கம் இன்னும் இவன் கண்களில் தெரிந்தது.அவன் வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்.அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தடுமாறி தன் தடுமாற்றத்தால் ஏற்பட்ட கோபத்தையும் அவனிடமே காட்டினாள்.

“நடந்துவிட்டது என்று சொல்லாதே நடத்தி கொண்டாய் என்று சொல்.உன்னை பார்க்கவே எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னது நினைவு இருந்திருந்தால் இப்படி என் முன் வந்து நிற்கமாட்டாய்” என்று கூறியவளை இழுத்து அவள் இதழ்களை சிறை செய்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விடுத்தான்.

“தேவையில்லாமல் கண்டதையும் பேசினால் இதுதான் உனக்கு தண்டனை.பேசாமல் இருந்தால் நான் வந்ததற்கான காரணத்தை சொல்லிவிட்டு சென்று விடுவேன் இல்லை என்றால் இது போல் தண்டனை கிடைக்கும் இதற்கு மேலும் தண்டனைகள் செல்லும் அது என் கையில் இல்லை.உன் கையில்தான் இருக்கிறது”.

“நீ பேசாமல் மாமா சொல்வதை கேட்டால் நான் சீக்கிரம் சென்றுவிடுவேன் என்றவன் அவளை கூர்மையாக பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கேட்டான் நிதானமாக.அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து “இன்று சனி கிழமை அடுத்த வாரம் திங்கட்கிழமை நமக்கு முருகன் கோவிலில் திருமணம்.கல்யாணம் முடிந்த பிறகு எங்கள் வீட்டிற்கு செல்லலாம்”.

“அம்மா ஒத்து கொள்ளமாட்டார்கள் என்பதால் இந்த பிளான் இல்லை.அவர்கள் கண்டிப்பாக ஒத்து கொள்வார்கள் உன்னை சமாளிக்க இந்த திருமண ஏற்பாடு செய்ய இந்த இரண்டு நாள்” என்றவன் “சரி நீ தூங்கு நான் போகிறேன் என்று திரும்பியவன் “திருமணத்துக்கு பிறகு உன்னை புத்திசாலியாக மாற்றி என் காதலை நிறுபிக்கிறேன்” என்றவன் சென்று விட்டான்.

சனி கிழமை என்பதால் குளித்து முடித்து நிதானமாக வந்தவளை பார்க்க காத்திருந்தார் ரம்யாவின்  தாய்.

“வாங்க மா எப்ப வந்தீங்க ரொம்ப நேரம் காக்க வைத்துவிட்டேனா ஒரு குரல் கொடுத்திருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சமையலறையை பார்த்து, “டீ கொண்டு வாங்க அக்கா” என்று சமையல் வேலை செய்யும் சரசை ஏவினாள்.

சுவாதியை அமைதியாக இருக்கும்படி கூறிய ஆண்டள் “நான் டீ குடித்துவிட்டேன் வந்தவுடனே சரசு கொடுத்துவிட்டாள். நான் இப்போது வந்தது ஒரு நல்ல விஷயம் சொல்ல திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிற நிலையில் ரம்யா நாள் தள்ளி போய் இருக்கிறாளாம்”.           “நாங்கள் அவளை பார்க்க நாளை செல்கிறோம் அதான் சொல்ல வந்தேன்.எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் நான் கிளம்புகிறேன்” என்று சென்று விட்டார் ஆண்டாள்.

தனக்கு போலவே தன் மகளுக்கும் லேட்டாக குழந்தை பிறக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தவர்.இந்த நல்ல செய்தியை கேட்டவுடன் தலைகால் புரியவில்லை.அதனால் சுவாதியின் பேயறைந்தார் போன்ற முக பாவமும் இவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அதிர்ந்து அமர்ந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.அவர் சென்றவுடன் வேகமாக தன் அறைக்கு சென்றவள் தான் கடைசியாக தலை குளித்த நாளை கணக்கிட்டாள்.கிட்டதட்ட அறுபது நாட்கள் தள்ளி போய் இருந்தது.

“நான் அம்மாவாக போகிறேனா?நான் அனாதை இல்லையா?”என்று தன் வயிற்றை தடவி பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.

தோழியாகவும் தாயாகவும் இருந்த மாலதியின் நினைவில் கண் கலங்கி அவளுடைய ஒரு சேலையை எடுத்தாள்.அந்த சேலைக்குள் இருந்து ஒரு டைரியும்,போட்டோவும் கீழே விழுந்தது.என்ன அது என்று எடுத்த பார்த்தவளின் காலடியில் பூமி நழுவியது.அது அர்ஜூனின் போட்டோ.டைரியை பிரித்து பார்த்தாள்.அவன் அட்ரஸ்,குவாலிபிகேஸன் என அனைத்தும் இருந்தது.நம்ப முடியாமல் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்த சுவாதி.

“குட்டிமா நீயும் அவரை காதலித்தாயா?ஏன் என்னிடம் சொல்லவில்லை.நீ எப்போது அவரை பார்த்தாய்” என்று குழப்பி கொண்டவள்.இறுதியாக “நீ நேசித்தவரை என்னால் மணக்க முடியாது.அவரும் கடமைக்காகதான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்” என்று எனக்கு தெரியும்.

“நான் இங்கு இருந்தால் தானே இந்த பிரச்சனை நாளையே நான் கிளம்புகிறேன்” என்று சரியாக தவறான முடிவெடுத்தாள்.அர்ஜூன் இங்கு திருமணத்துக்கு ராஜாவின் மூலம் ஏற்பாடு செய்தான்.

திருமணம் முடிந்த பிறகு ஒரு ரிஷப்ஷன்மாறி வைத்து ஊருக்கு தெரியபடுத்தலாம்.முதலில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று அந்த வேலையில் பிஸியாக இருந்தவன்,சுவாதியை கவனிக்க தவறினான்.

ராஜாவுக்கு முன்பே அர்ஜூனின் காதல் தெரியும் என்றாலும் சுவாதிக்கு அண்ணனாக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தான்.

ஞாயிற்று கிழமை நடு இரவில் நாகபட்டினத்துக்கு முழுக்கு போட்டு திருச்சி செல்ல ஆரம்பித்தாள் சுவாதி.கடந்த நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்த சுவாதி. “குட்டிமா நான் எப்படி அவரை மணப்பேன் நீ காதலித்தவரை நான் எப்படி.இந்த திருமணத்துக்கு ஒத்து கொண்டிருக்கவே கூடாது.ஆனால் வள்ளி அம்மா,ராகவ் அப்பா முக்கியமாக கீதா இவர்களுக்காக சம்மதிக்கிறேன்.என்வாழ்கை இனி எப்படி போக போகிறது என்று பயமாக இருக்கிறது குட்டிமா” என்று வாய்விட்டு புலம்பியவள் தலையை ஆதரவாக தடவியது ஒரு கரம் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்,கீதாதான் அமர்ந்து இருந்தாள்.

“கண்டதை போட்டு யோசிக்காமல் கொஞ்சநேரமாவது தூங்கு கண்ணெல்லாம் சிவந்து இருக்கு” என்று சொல்ல,மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் உறங்க ஆரம்பித்தாள்.                                  காலை வெகு நேரம் கழித்து எழுந்தவள்.காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.அங்கு கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள்.அவளை நெருங்கிய சுதி

“என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா?” என்று கிண்டல் செய்தவளை பார்த்து முறைத்தவள்.

“போடி போய் நீ கிளம்பி வா உனக்குதான் வெயிட்டிங்.நேராக கோவிலுக்கு நம்மை வர சொல்லிவிட்டார்கள். அம்மா நார்மல் வார்டுக்கு வந்ததால்,கோவிலுக்கு செல்ல பர்மிஷன் வாங்கிவிட்டார்கள்” என்று சொன்னாள்.

கண்களை இறுக ஒரு முறை மூடி திறந்தவள்.தலையை ஆட்டிவிட்டு தனக்காக சுந்தரி கொடுத்தனுப்பிய புடவையை எடுத்து கொண்டு சென்றாள்.பின்பு அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க மண்பத்தில் அமர்ந்த சுதிக்கும் சரி,கீதாவுக்கும் சரி இது சரி வருமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இதை கவனித்த இருவரின் கணவர்களும் அவர்களது கையை அழுத்தி அமைதிபடுத்தினர்.

மாங்கல்யதாரணம் முடிந்து “பெரியவாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க” என்ற அய்யரின் குரலுக்கு ஏற்று வள்ளி,ராகவ் காலில் விழ போன சுதியை தடுத்த ராகவ்.                                                                    “

உன் அப்பாவை இப்போதாவது மன்னிக்க கூடாதா?சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வேற்றாளுமாதிரி இருக்கிறார்.நான் வற்புறுத்தவில்லை உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்” என்று முடித்துவிட்டார்.

ராகவ் சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்த்த சுவாதியின் கண்களில் முதல் வரிசையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த கோவிந்தன் பட்டார். முன்பைவிட அதிகம் இளைத்து,கண்கள் குழி விழுந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

அர்ஜூன் சுதியை நெருங்கி “சொத்து அனைத்துக்கும் பொறுப்பை நீ அவரிடம் ஒப்படைததால்,மிகவும் நொந்து போனார்.இப்போது உன் அம்மா பெயரில் டிரஷ்ட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.தப்பை உணர்ந்தவர்களை தண்டிப்பதில் பயன் இல்லை.இது என் விருப்பம்” என்று கூற ராகவ்வை பார்த்த சுவாதி கோவிந்தனை நோக்கி சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.        மகள் தன் கால்களில் விழுந்ததால் கண் கலங்கிய கொவிந்தன்.”என்னை மன்னித்துவிட்டாயா சுதி” என்று கண் கலங்கினார்.

ஒரு வழியாக அனைவரும் கீதாவின் வீட்டுக்கு சென்றனர். வள்ளிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.இரு பெண்களும் கண் நிறைய கணவனுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அந்த தாய் மனம் பூரிப்படைந்தது.

கீதாவின் நிலையோ பரிதாபமாக “அய்யோ எப்படா இத கழட்டுவீங்க,திடீர் கல்யாணத்துக்கு யாரு இவ்வளவு பெரிய மாலையை ஆர்டர் செய்தது” என்று நெளிந்து கொண்டு இருந்தவளை பார்த்த ராகவ் “கீது நீ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்”.

“நீ உன் அறைக்கு சென்று ஓய்வெடு என்று சொல்ல,அவர் எப்போது சொல்வார் என்பது போல் இருந்தவள்.வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்றாள்”.

அறைக்கு வேகமாக சென்றவள் செய்த முதல் வேலை மாலையையும்,கட்டியிருந்த புடவையை கழட்டி கட்டிலில் போட்டதுதான்.ஏசியை ஆன் செய்து சிறிது நேரம் கண்களை மூடி அப்படியே அமர்ந்தாள்.கதவு திறக்கும் சத்ததில் சுவாதிதான் வந்திருப்பாள் என்று நினைத்து.

“எப்படி டி இந்த புடவையை கட்டியிருக்க என்னால் சுத்தமாக முடியவில்லை.இதில் மாலை வேறு” என்று கண்களை திறக்காமலே புலம்பினாள்.

தன் புலம்பலுக்கு எந்த பதிலும் வராமல் போகவே “என்னடி நான் பாட்டுக்கு பே”……. என்றவள் பேச்சை நிப்பாட்டிவிட்டு வேகமாக தான் கட்டிலில் போட்ட புடவையை எடுத்து மேலே போர்த்தி கொண்டு அவனை பார்த்து முறைத்தாள்.

ஆம் வந்தது நகுலனேதான்.அவனும் கீதா இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை என்பது அவனது சங்கடமான பார்வையிலேயே தெரிந்து கொண்டாள்.உடனே நகுலன் எதிர் புறம் திரும்பி கொண்டு “இருவரையும் உன் அறையிலேயே ஓய்வெடுக்க சொன்னார்கள்.அதனால்தான் வந்தேன்” என்றவனது பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள்.

“இந்த அப்பாவை என்ன செய்வது காதல் திருமணம் என்று எங்களுக்கு தனிமை தர்ராராம்.இவரை என்னதான் செய்வதோ” என்று நொந்து கொண்டு.

“சரி ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள்.நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.தவறாக நினைக்காதிர்கள்” என்று சொன்னவள்.தனது கப்போர்டில் இருந்து  வேறு ஆடைகளை எடுத்து மாற்ற துவங்கினாள்.

நகுலன் அப்போதுதான் கவனித்தான் அங்கிருந்த கண்ணாடியை “அச்சச்சோ இப்போது எப்படி சொல்வது” என்று திணறிய சமயம் அவள் தனது மேலாடையை கழட்டி இருந்தாள்.                        “டேய் நகுலா இது தப்புடா.அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புது” என்று எவ்வளவோ கண்களுக்கு தடை இட்டும் கேட்காமல்.கண்ணாடி வழியாக அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.அவள் சுடிதாரை மாற்றிய பிறகு “இப்போது திரும்புங்கள்”.

“ரொம்ப தேங்ஸ் நான் சொன்னதை தப்பாக எடுத்து கொள்ளாமல் இருந்ததுக்கு” என்றவளை கூர்மையாக பார்தவன்.

“நான்தான் தேங்ஸ் சொல்லனும்” என்றான் விஷமமாக.

“நீங்கள் எதுக்கு தேங்ஸ்” என்று புரியாமல் பார்த்தவளை பார்த்து சமாளிக்கும் விதமாக “வெளியே போக சொல்லியிருந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.அறைக்குள் போனவுடன் ஏன் வந்தாய் என்று கேள்வி கேட்டு என்னை குடைந்திருப்பார்கள்.அதிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள் இல்லையா அதற்கு” என்று ஒருவழியாக சமாளித்தான்.

“ஏசிதான் ஓடுகிறதே உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்கிறது. இந்தாங்க ரிமோட் அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.நான் சென்று உங்களுக்கு மாத்தி கொள்ள” என்றவளை தடுத்தவன் பரவாயில்லை நான் இதிலேயே என்றவனை தடுத்து “இப்படியே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.இதனால்தான் உங்களுக்கு வேர்க்கிறதோ என்னவோ” என்றுவிட்டு வெளியேறினாள்.

“அடியேய் எனக்கு இந்த டிரசால் வேர்க்கவில்லை.உன்னை டிரஸ் இல்லாமல் பார்த்ததால் வந்த வேர்வை என்று வெட்கமே இல்லாமல் நினைத்து கொண்டவன்.இடுப்புக்கு கீழ மச்சம் இருந்தா அதிகம் கோவம் வரும்னு சொல்லுவாங்களே அது உண்மைதானோ.முதல் நாள் என்னமா கோபபட்டா” என்று யோசித்து கொண்டு இருந்தான்.

“நகுலன் இந்தாங்க அப்பாகிட்ட புது வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கங்க.இந்த ஜூஸ் உங்களுக்குதான் பாவம் வேர்த்து விறுவிறுத்து போய்டீங்க” என்று கொடுத்தவளை இமைக்காமல் பார்த்தான்.

“என்ன நகுலன் அப்படி பாக்குறீங்க அன்னைக்கு அப்படி கோபபட்டவள் இன்று சாதாரணமாக பேசுகிறாள் என்றா,அன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் நீங்கள் கோபபடவும் நானும் கொஞ்சம்” என்றவளை முறைத்தவன் “சரி..சரி…..ரொம்ப அதிகமாகவே கோபபட்டுவிட்டேன்.இனி நாம் பிரண்ட்ஸ் இல்லயா,அதான்  உங்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டேன்”.

“எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இனி நீங்களும் என்றவள்.ஜூஸ் குடிச்சுட்டு நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க.நான் போய் சுவாதியுடன் இருக்கிறேன்” என்றவளை, “கொஞ்சம் நில்லு பேபி” என்றான் நகுலன்.

“என்னை பார்த்தால் உங்களுக்கு பேபி போல் இருக்கிறதா?நான் பேபி என்றால் என் பிரண்ட் நீங்களும் பேபியா என்னை அப்படி கூப்பிடாதீர்கள்” என்று பொறிந்தாள்.

“பேசி முடிச்சுட்டியா எப்பவும் நீ இப்படிதானா?இல்ல இன்னைக்கு மட்டும் இப்படியா?”என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள். “இன்னைக்குதான் உன் பிரண்டுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு அவங்க சேரனும்னுதானே நாம இந்த கல்யாணம் செய்தது நீ அங்க போனா என்ன அர்த்தம் சில சமயம் நீ பண்றத பாத்தா மட்டும் தான் பெரிய பொண்ணா தெரியது பல சமயம் நீ இன்னும் வளரவே இல்லையோனு எனக்கு தோனுது” என்றான்.

அவனை பார்த்து அசடு வழிந்தவள் “சரி நகுலன் நான் எங்கயும் போகல,வெளியே அபி இருப்பான் அவன் கூட விளையாட போறேன்” என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள்.பின்னே நின்றால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விடமாட்டானோ என்று.

“என்ன விளையாட போகிறாயா?”………….        என்று அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சுவர்களிடம்தான்.அவள்தான் எப்போதோ சென்றிருந்தாலே. “இவள் ஒரு வளர்ந்த குழந்தை என்று நினைத்தவன் ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை” என்று கணவனாக சற்று முன் அவன் கண்ணாடியில் பார்த்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டு உடை மாற்றி படுத்தவன் எழுந்திரிக்கும் போது மணி 5 என்றது அவனின் கடிகாரம்.

 

“ச்ச… இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று நினைத்து கொண்டே எங்க என்னோட குட்டி வால காணாம்” என்று வெளியில் வந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 12

ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள். இரயில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள