Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33

33 – மனதை மாற்றிவிட்டாய்

ஈஸ்வரி மதி தனியாக அறையினுள் இருப்பதை உணர்ந்து நேராக சென்று பேசலானாள். “என்ன சந்திரா? எப்போப்பாரு வேலையே செஞ்சுகிட்டு இருக்க. ரெஸ்ட் எடுக்கலையா? ”

“இல்ல அண்ணி, நிச்சயம் வேலை வேற இருக்கில்ல… நான்தானே பாக்கணும்.”

“இதுக்குதான் காலகாலத்துல ஆதிக்கு ஒரு கல்யாணம் பண்ணி மருமக எடுத்திருந்தா இப்டி நீ தனியா கஷ்டப்படணும்னு இல்லேல. ?”

அந்த நேரம் பார்த்து உள்ளே அபி, அம்மு, அனு மூவரும் நுழைய… “ஏன் அத்த யாரு கஷ்டப்படறாங்க? யாருக்கு மருமக வேணும்? ” என அரைகுறையாக கேட்டதை வைத்து கேட்க

ஈஸ்வரி சற்று தயங்கி பின் தைரியமாக “எல்லாம் நம்ம சந்திராவுக்கு தான். உனக்கும் நாத்தனார் வேணும்ல. உங்க அண்ணாவுக்கு அவனுக்கு ஏத்தமாதிரி பொண்ண கல்யாணம் பண்ணி வெக்கணும். இதெல்லாம் எங்க உங்க அம்மா கவனிக்கராளா?” என்றதும்

“அம்மாக்கு தெரியும் அத்த அண்ணாவுக்கு எப்போ எத பண்ணனும்னு. குறை சொல்லாதீங்க..” என பொறுமையாக ஆனால் அழுத்தமாக கூற

சுதாரித்த ஈஸ்வரி “அப்படி இல்ல கண்ணு, சீக்கிரம் பணின்னா நல்லததுதானே. உங்க அம்மாவுக்காக தான் சொல்றேன். பொண்ணு கூட வெளில அலையவேண்டாம்.”

“அப்டியா யாரு” என அபி கேட்க

“நம்ம சோபி தான். குடும்பத்துல எல்லாரும் ஒண்ணாவும் இருந்துக்கலாம். வெளி ஆளுங்கன்னு உங்களுக்கு கவலை இருக்காது. நம்ம வீட்டுக்கு தான் என் பொண்ணு போயிருக்கா. ராணி மாதிரி இருப்பான்னு நானும் சந்தோசப்பட்டுக்குவேன்.”

அனு “என்னது, சோபி அண்ணியா…நோ..நடக்கவே நடக்காது. அண்ணாவுக்கும் உங்க பொண்ணுக்கும் செட்டே ஆகாது அத்தை. ”

ஈஸ்வரி “ஏய், அனு… என்ன பழக்கம் இது. பெரியவங்க பேசும்போது இப்டி முந்திரிக்கொட்டை மாதிரி உள்ள வரது… அதுவும் இப்போவே கல்யாணம் பத்தின பேச்சு கேக்குதா உனக்கு. உன்கிட்ட யார் கேட்டா? ஒழுங்கா அடக்கமா இரு. எங்களுக்கு தெரியும்…நீ இதுல தலையிடாத. ..” என மிரட்ட அனு முகம் வாட அம்மு அவளது கையை பிடித்துக்கொள்ள அபிக்கு கோபம் “அத்தை என்ன பேச்சு இது சின்ன புள்ளைகிட்ட பேசுற மாதிரியா நீங்க பேசுறீங்க? அண்ட் அவ சொன்னதுல தப்பும் இல்ல. ஆதிக்கும் சோபிக்கும் செட் ஆகாது. இரண்டு பேரும் எதிரான குணம் கொண்டவர்கள்.”

ஈஸ்வரி கோபமாக “என்ன இது சந்திரா, என்ன புள்ளைங்க வளத்திருக்க நீ, ஒரு நல்ல விஷயம் ஆரம்பிக்கும் போது இப்படி பேசுறாளுங்க.”

இதை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த செல்லத்தாயி “என்ன மருமகளே, யாரு வளர்ப்ப பத்தி குறை சொல்ற? வாய அடக்கி பேசு.”

“இல்ல அத்தை, கல்யாண விஷயம் பேசும்போது செட் ஆகாது, வேண்டாம்னு இப்டியே சொல்லிட்டு இருந்தா என்ன சொல்றது சொல்லுங்க. உங்க மகளும் உங்க பேத்திகளை அடக்க காணோம். நம்ம புள்ளைங்களுக்கு நாம தானே சொல்லித்தரணும். எனக்கு திட்ட உரிமை இல்லையா என்ன? ”

“இங்க பாரு, உரிமை பத்தி பேச இது விஷயமில்லை. அவங்க வேண்டாம்னு சொன்னாலும் தப்பு இல்லையே. நடக்கத்தாத ஒத்துக்கிட்டு, ஏத்துக்கிட்டு சொல்ராங்க. 2 பேரோட குணம், பழக்கவழக்கம் அந்தமாதிரி. சரியா வராது. இந்த பேச்ச விடு. எனக்கு பேத்தி, பேரன் 2 பேரும் முக்கியம். ஆனா அவங்களுக்குள்ள அந்த கல்யாண உறவு சரியா வராதுன்னா விட்டறனும்.”

“என்ன நீங்க அப்படி என்ன குணம் குணம்னு, எதுல பிரச்னை வரும்னு நினைக்கிறீங்க? 2 பேரும் வெளிநாட்டுல படிச்சிருக்காங்க. அழகு, பணம்னு எல்லாத்துலயும் பொருத்தம் இருக்கே. வேற என்ன வேணும் ?”

“இங்க பாரு, அழகு, பணம் இந்த மாதிரி விஷயத்துக்கு நீ வேணும்னா மதிப்பு குடுக்கலாம். என் புள்ளைங்களும், பேர புள்ளைங்களும் இல்ல. முக்கியமா என் பேரன் ஆதி, அவன் வெளிநாட்டுல இருந்தாலும் ரொம்ப கண்டிப்பா தான் இருந்திட்டு வந்திருக்கான். அவனுக்கு படிப்பு, பணம் எல்லாம் விட, பொறுமை, பொறுப்பு , எல்லாரோட அன்பா பழகுற குணம், கலகலப்பா இருக்கறதுனு நெறைய இருக்கு. ஆதிக்கு அனாவிசயம செலவு பண்ணா பிடிக்காது. ஆனா சோபி சும்மா இருக்கறதுக்கே செலவு பண்ணி வெளில தங்குவா…

அவனுக்கு குடும்பத்தோட இருக்கனும். எல்லாருக்கும் பிடிக்கணும். சோபி என்னைக்காவது நம்ம குடும்பத்துல எல்லாரோடையும் நின்னு பேசி பாத்துஇருக்கியா? இப்டி பல விஷயம் சொல்லிட்டே போகலாம். ”

ஈஸ்வரியும் விடாமல் “பணம் செலவு பண்ணதானே. புருஷன் சம்பாரிக்க பொண்டாட்டி செலவு பண்றதுல என்ன தப்பு. அவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர பொண்ணுக்கு செலவு பண்ணக்கூட உரிமை இல்லையா? அதுவும் அவன் சம்பாரிச்சதுல இருந்து. .”

செல்லத்தாயி “கண்டிப்பா இருக்கு. ஆனா அந்த பொண்ணு அவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வராளா? இல்ல அவ பணத்துக்காக சொத்துக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வராளான்னு பாக்கணுமே. அவன் கஷ்டப்பட்டாலும் அதுலயும் பங்கெடுத்துக்கணுமே.”

ஈஸ்வரி மனதில் ‘பணத்திற்காக தான் திருமணம் என இந்த கிழவி ஊகித்தது மட்டுமல்லாமல் அனைவர் முன்னிலையிலும் சொல்லிருக்க வேண்டியதில்லை.. இருந்தாலும் விட மனமில்லாமல் “இங்க பாரு சந்திரா. ..கடைசியா உன்கிட்ட கேக்குறேன். நீ சொன்னா உன் புள்ளை கேப்பான். இந்த கல்யாணத்த பத்தி நீ பேசப்போறியா? இல்லையா? ”

சந்திரா “அண்ணி, என் புள்ளை சொன்னா கேப்பான்தான். அந்த அளவுக்கு பாசமும் நம்பிக்கையும் வெச்சு இருக்கறவனோட வாழ்க்கையை பங்குபோட்டுக்க போறவ அவனுக்கு பிடிச்சவளா இருக்கனும். இது அவன் வாழ்க்கை. உங்களுக்கு என்கிட்ட எதுனாலும் கேளுங்க. செய்யறேன். தரேன். ஆனா என் பிள்ளை விசயத்துல நான் அவன்கிட்ட எதுவும் பேசி கட்டாயப்படுத்த மாட்டேன். சோபி அவ குணத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பையன நம்ம எல்லாருமே பாக்கலாம். நீங்கி கவலைப்படாதீங்க. “என்று கூற

ஈஸ்வரி இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்று விருட்டென்று வெளியேறி விட்டாள்.

அனைவரும் ஆசுவாசமாக மூச்சு விட்டனர்.

“நல்ல வேலை மா, அவங்க அழுது, கத்தி ஏதாவது ட்ராமா பண்ணி நீங்க தப்பா முடிவெடுத்துடுவீங்களோனு கவலைப்பட்டோம்.” என அபி கூற

மதி சிரித்துவிட்டு “குடும்பத்துக்காக என் வாழ்க்கையை பணயம் வெக்கலாம். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு. ஆனா என் புள்ளைங்களோட வாழ்க்கைல இல்லை.” என்றார்.

அம்மு “ஆனாலும் அம்மா ,அத்தை எதாவது பிரசன்ன பண்ணுவாங்களோ? ”

செல்லத்தாயும் “கண்டிப்பா அவ லேசுல விடற ஆள் இல்ல. அதுக்கு முன்னாடி ஆதிக்கு பிடிச்ச பொண்ண பாக்கணும்” என்க அனைவரும் ஒருமாதிரி சிரிக்க அனு “அதெல்லாம் உங்க பேரன் ஏற்கனவே பாத்துட்டாரு பாட்டி” எனவும்

முகம்மலர்ந்த மூத்தவள் “நிசமாவா? ”

அனு “ஆமாம். என் பேரனை பத்தி எனக்கு நல்லா தெரியும்னு பில்ட்டப் பண்ணுவீங்களே? அந்த பொண்ணு யாரு, எப்படி இருப்பான்னு கெஸ் பண்ணுங்க பாக்கலாம்…” எனவும்

பாட்டி “ஏன் சந்திரா, திவி புள்ளையா? “என கேட்க அனைவர்க்கும் ஆச்சரியம்

ஆமாம் என்றதும் பாட்டிக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த புள்ளைய இவன், திட்டுனாலும் அதுல இருக்கற ஆழமான அன்பு அக்கறை எல்லாம் சொல்லுதே இவனால அவ இல்லாம இருக்கமுடியாதுனு அவளுக்கும் அந்தமாதிரி தான். ஆனா அவ இன்னும் விளையாட்டு தனமா இருக்கா. அவ்வளோதான். வேறன்ன, நாள் குறிக்க வேண்டியதுதானே?” என்க

சந்திரா கூறினாள் “ஆதி, அவளுக்கும் தன் மேல் காதல் வந்த பிறகுதான் கல்யாணம் செய்வேன் என்று அவன் கூறியது அனைத்தையும் கூற பாட்டிக்கு பெருமையும் கூடிக்கொண்டே செல்ல “ரொம்ப சந்தோஷம், இப்போ வேற ஏதாவது பிரச்னை வரதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணம் பண்ணிடனும். நீ அவன்கிட்ட பேசு சந்திரா. நான் அவுககிட்ட இந்த சேதியை மொதல்ல சொல்லிட்டுவாரேன்.” என துள்ளி குதிக்காத குறையாக மகிழ்வுடன் சென்றார்.

உடனே கணவருடன் அதை பகிர்ந்துகொள்ள அவரும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டார்.

“பாத்திங்களா? .. நான் அன்னைக்கு சொன்னதுக்கு நான்தான் ஏதோ ஆசைப்படற மாதிரி பேசுனீங்க. எனக்கு தெரியாதா என் பேரனுக்கு என்ன பிடிக்கும்னு. என்னவோங்க இத்தனை நாள் ஆதிக்கு எல்லாமே ஆசைப்பட்டது கிடைச்சாலும் அவன் வாழ்க்கைல வரப்போறவ எப்படி இருப்பாளோ, குடும்பத்தோட எப்படி அனுசரிப்பாளோணு இருக்கும். ஆனா இத கேட்டதும் மனசு நிறைஞ்சு இருக்கு.” என்று அவ முகம் வாட

மாணிக்கம் “என்னாச்சு மா, ஒரு மாதிரி ஆயிட்ட..?”

“நம்ம மருமக பேசுனத நினைச்சேன்.” என்று நடந்ததை கூறினார்… “சொத்து சம்பாரிச்சா அழிக்க மட்டும் தான் நினைக்கரவகிட்ட என்ன பேசுறது. இவளுக்காக கேட்டான்னுதான் நம்ம பூர்விக நிலத்தை கொஞ்சம் நம்ம மகன் பேர்ல எழுதிவெட்ச்சோம். 6 மாசத்துல அது வித்து பணமா வந்தது அடுத்த ஒரு வருசத்துல அந்த பணமும் செலவா போயிருச்சுன்னு சொல்றா. அந்த இடத்தை சம்பாரிக்க எங்க அப்பாரு எம்பூட்டு கஷ்டப்பட்டாங்க. அது வெறும் நிலம் இல்ல. நம்ம குடும்பத்தோட ஒரு அடையாளம். நமக்காக நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க குடுத்திட்டு போனது. சொத்துக்காக எப்படி பிடிக்காதவங்கள கட்டிக்கிட்டு வாழ முடியும். இது ஏன் அவளுக்கு தோணவேமாட்டேங்கிது. அவ புள்ள வாழ்க்கையும் இதுல இருக்குனு அவளுக்கு ஏன் புரியமாட்டேங்கிது. சோபிக்கும் இதேமாதிரி எண்ணம் இருந்தா என்னங்க பண்ணமுடியும். அம்மாவும், மகளும் சேர்ந்து ஆதி, திவி வாழ்க்கைல ஏதாவது பிரச்னை பண்ணிடுவாங்களோ? அதான் யோசையா இருக்கு. ஆனாலும் எனக்கு இவங்க 2 பேர் மேலையும் நம்பிக்கை இருக்குங்க. கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து சந்தோசமா ரொம்ப காலம் வாழ்வாங்கனு.” என்று ஒரு எதிர்பார்ப்போடு தன் கணவரை பார்க்க

அவரும் புன்னகைத்துக்கொண்டு “கண்டிப்பாமா, ஆதியும் சரி, திவியும் சரி, அடுத்தவங்க பேச்ச கேட்டு முடிவெடுக்கற புள்ளைங்க இல்ல. ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சுஇருக்கற அன்ப அவங்க புரிஞ்சுக்கிட்டாலே போதும். அப்புறம் அவங்க பாத்துப்பாங்க. என்னதான் சண்டைபோட்டாலும் என் பேரன் என்னை மாதிரி. விட்டுட்டு எல்லாம் போகமாட்டான்.. அதேமாதிரி ஆதிநாராயணனோட பேரன் அவனுக்கு பிடிச்சதை எப்படி அடையணும்னு அவனுக்கு தெரியும். நீ கவலை படமா சந்தோசமா போயி நிச்சயத்துக்கு ஆகவேண்டிய வேலைய பாரு. ”

அவரும் தலையசைப்புடன் சென்றுவிட மாணிக்கமும் சிறு யோசனையுடன் நகர்ந்தார்.

மாலை அனைவரும் ஒரு நடை கோவிலுக்கு சென்றுவரலாம் என கிளம்ப ஆதியும், அர்ஜுனும் அடுத்த நாள் நிச்சயத்திற்கு மோதிரம் வாங்க அனுப்பிவைத்தனர். திவி, சுபி, நந்து மூவரும் கோவில் அருகே மற்ற பிள்ளைகளோடு விளையாடி கொண்டு இருந்ததால் நந்து அவர்கள் வருவதை கண்டு திவி அங்க பாரு நம்ம வீட்ல எல்லாரும் வராங்க. பெரிய பாட்டி, தாத்தா, அப்பா அம்மா, அம்மு சித்தி அனு சித்தி எல்லாரும் வா என அழைக்க ஐயோ அப்போ ஆதியும் வராரா? எப்படி அவரை பேஷ் பண்ணப்போறேன். காதல் என தெரிந்தது முதல் அவளால் அவனை நேரில் பார்க்கவே முடியாமல் தவிக்க சரி எப்டின்னாலும் இனி எப்போவும் பாத்துத்தானே ஆகணும். போவோம்னு அவள் அவர்களிடம் சென்று அவள் கண்கள் சுற்றியும் துளாவ, அம்மு “யாரை தேடற திவி? ”

பழைய திவி என்றால் “எங்கடி உங்க அண்ணா, எனக்கு பயந்துட்டு வீட்லையே இருக்காரா என வம்பிழுக்க கேட்டிருப்பாள்.” இப்போ அவளால் சாதாரணமாக இருக்க முடியாமல் கொஞ்சம் பதட்டமாகி “இல்ல, யாரையும் தேடலையே. ..” என்று உடன் நடந்தாள்.

திவி “ஆமா, எங்க நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க? மத்தவங்க எல்லாரும் எங்க? நந்து எல்லாரும் வந்துஇருக்காங்கனு சொன்னான். ”

அனு “பரமேஷ் மாமா கொஞ்சம் வேலைனு சுந்தர் மாமாவை கூப்பிட்டு உரக்கடைக்கு போயிருக்காங்க. ஈஸ்வரி அத்தையும், சோபி அண்ணியும் கோவிலுக்கு நாளைக்கு வரோம்னு வீட்ல தூங்கறாங்க. ராமைய்யா வீட்டு வேலைய பாக்கறாரு.”

திவி “ஏன் வேற யாரும் நம்ம வீட்ல இல்லையா? ”

அபி “ஓஒ. …அர்ஜுன கேக்கிறியா? கொஞ்சம் வேலைனு டவுனுக்கு போயிருக்காரு. அவங்க அம்மா அப்பா கூட நேர இங்க வரேன்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜைக்கு போய்டலாம். ”

திவிக்கு ஐயோவென இருந்தது. மதியிடம் நெருங்கி “அத்த…என்ன நீங்க தனியா வந்து இருக்கீங்க? ”

மதி “இல்லையே இத்தனை பேர் கூடையும் தானே வந்துஇருக்கேன். ”

இவர்கள் விளையாடுகிறார்களோ என தோன்ற நேராவே இறங்கிடலாமா என யோசித்துக்கொண்டு “இல்ல. ..எப்போவும் உங்க பையன் கூடவே இருப்பீங்களே. அவரை காணோம் அதான்…” என இழுக்க அனைவரும் சிரித்தேவிட்டனர்.

“இத கேக்கவா இவ்ளோ நேரம் சுத்திவலைச்ச? ”

“அதெப்படி நேரா கேக்கறது….எனக்கு ஏதோ கூச்சமா இருந்தது.” என முழிக்க ஏதோ தவறு செய்தது போல தலை கவிழ்ந்து நிற்க பாட்டி அவளிடம் வந்து “ஏய், எல்லாரும் சும்மா சிரிக்காதீங்க என அடக்கிவிட்டு ராஜாவும், சின்ன மாப்பிள்ளையும் நாளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம் வாங்க போயிருக்காங்க கண்ணு. வந்துடுவாங்க. ” என கூற அவளும் தலை அசைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.

அனைவரும் முன்னே செல்ல இவள் மெதுவாக சென்று அருகில் இருந்து படிக்கட்டில் இறங்கி பெரிய ஆலமரத்தின் அருகே அமர்ந்தாள். அவள் மனம் ஏனோ ஆதியை சுற்றியே வந்தது. மரத்தின் பின்புறம் யாரோ பேச்சு குரல் கேட்க அந்த குரல் முன்னமே கேட்டது போல இருக்க அதேதான் அன்னைக்கு கொலை பண்றத பத்தி பேசுபவன்ல ஒருத்தன். அமைதியாக கவனித்தாள். வண்டியில் ஒருவன் போனில் பேசிக்கொண்டு இருந்தான். “டேய், நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. அந்த பய டவுன்க்கு போயிருக்கானாம். நம்ம இன்னைக்கு அவனை ஏதாவது பண்ணி வேலைய முடிச்சிடணும். கூட யாரோ ஒருத்தங்க இருக்காங்களாம். யாரு என்னனு எல்லாம் பாக்காத. 2 பேருக்கும் அடிபட்டாலும் பரவால்ல. திரும்பி வரும்போது எப்படியும் மெயின் ரோட்ல தான் வருவாங்க. நீங்க வெயிட் பண்ணுங்க. நான் அப்புறம் கூப்பிடறேன். ” என போனை கட் செய்துவிட்டு அவனது வண்டியில் விருட்டென்று கிளம்பிவிட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

49- மனதை மாற்றிவிட்டாய் திவி ஆதியை அழைக்க பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அவன் இப்போத்தானே மா கிளம்பிப்போனான்.” “அவரு இன்னும் சாப்பிடலையே தாத்தா. போன் பாத்திட்டு இருந்தாரு. அதுக்குள்ள எடுத்து வெச்சிடலாம். வந்துடுவாருன்னு பாத்தேன்.” என அவள் கூற

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34

34 சுஜி கேட்டதையே வேறு வார்த்தைகளால் நல்லசிவத்திடம் சுந்தரம் கேட்க, உண்மையைப் புரிந்த நல்லசிவம் தன்னையும் தன் தங்கை இதில் அவரே அறியாமல் வசமாக மாட்டி விட்டு இருப்பதை உணர்ந்தார். சுமாராகப் படித்தாலும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் கஷ்டமே இல்லாமல்

நிலவு ஒரு பெண்ணாகி – 27நிலவு ஒரு பெண்ணாகி – 27

ஹாய் பிரெண்ட்ஸ், தவிர்க்க முடியாத இந்த இடைவேளையைப் புரிந்து கொண்டு கதையைப் படிக்க ஆர்வம் காட்டிய தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். நிலவு ஒரு பெண்ணாகி – 27 ஆதிரன் – சந்த்ரிமாவின் முதல் பகுதி மட்டும் (1-20)  உங்களுக்காக