Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

“பேயாவது ஒன்றாவது” என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது. “அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக இருக்கும் என்று கூர்ந்து பார்த்தவன் முகம் சரியாக தெரியாமல் இருப்பதால் ஓரமாக இருந்து கவனிப்போம் அசந்த நேரம் பார்த்து நேரில் நிற்போம் அப்போது அது யார் என்று கண்டு பிடித்து விடலாம் என்ற முடிவுடன் ஓரமாக மறைந்து நின்றான்.

“ராம் வா கல்யாணம் பண்ணிக்கலாம்,அதற்குதானே ஆசைபட்டாய் வா…..” என்று கத்தி விகரமாக சிரித்தது. “ஆமாம் நான் வர கூடாது என்று நம்பூதிரியிடம் தாயத்து எல்லாம் கட்டியிருக்கிறாய் போல,அதனால் தான் என்னால் உன் அருகில் வர முடியவில்லையா?என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் தங்கையுடன் நிச்சயம் பண்ண வேண்டும் என்று சொன்னாயாம் ஏன் எனக்கு என்ன குறை” என்று கேட்டு மீண்டும் அந்த வீடே அதிரும் வண்ணம் சிரித்துவிட்டு, “என்றாவது ஒரு நாள் உன் கையில் இருக்கும் தாயத்து கீழே விழும் அன்று உன்னை என்ன செய்கிறேன் பார்”.என்று சொல்லிவிட்டு, “நான் மீண்டும் வருவேன்” என்று சத்தமாக சொல்லிவிட்டு மீண்டும் அதே மரத்தை நோக்கி நடந்து வந்தது.

உஷார் ஆன அர்ஜூன் தானும்அந்த மரத்தின் பின் சென்று நின்று கொண்டான்.யார் இப்படி இவனை பயமுறுத்துவது இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று யோசித்து கொண்டு இருந்தவனின் அருகில் அந்த சத்தம் கேட்கவும் கொஞ்சம் பயந்துடனே இருந்தான்.

அந்த உருவம் ராமின் வீட்டைவிட்டு ஏன் இவ்வளவு தூரம் வந்து இப்படி செய்கிறது என்று எண்ணியவனின் கையின் மேல் விழுந்தது பேயாக வேஷம் போட்டவர் வைத்திருந்த ஒட்டு முடி.          இது தான் சமயம் என்று எண்ணிய அர்ஜூன் அந்த உருவத்தின் பின் பக்கமாக சென்று இடது கையால் வயிற்றின் மேல் பகுதியை அழுத்தியும் வலது கையால் சத்தம் போடாமல் இருக்க வாயை அடைத்தும் இருக்கினான்.

“யார் நீ எதற்காக இப்படி வேஷம் போட்டு வந்து ஊரை ஏமாற்றுகிறாய்” என்று அதிகாரமாக கேட்டான்.

அவன் கையில் சிக்கியிருந்த உருவம் முதலில் திகைத்து அவனிடம் இருந்து தப்பிக்க போராடிகொண்டு இருந்தது. உருவத்தின் தப்பிக்கும் எண்ணத்தை உணர்ந்தவன் மேலும் இருக்கிய போது கைகளில் வித்தியாசமான உணர்வு ஏற்படவும் தன்னுடைய எண்ணத்தை உறுதி செய்து கொள்ள தன் கைகளை எடுத்துவிட்டு முன் பக்கமாக திருப்பி முகம் பார்க்க எண்ணி கைகளை கொஞ்சம் தளர்த்தினான்.

இரும்பு போன்ற அவன் பிடி தளர்ந்தவுடன் தன்னை மீண்டும் அந்த கைகள் பிடிக்காத வண்ணம் துள்ளி குதித்து விலகி நின்றாள் சுவாதி.

எதிர் பாராமல் இது மாதிரியான சூழ்நிலையில் சந்தித்த இருவருமே திகைத்துதான் போனார்கள்.முதலில் தன்னை சுதாரித்து கொண்ட அர்ஜூன் சுவாதியின் கைகளை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தவன்,அவன் தங்கி இருக்கும் வீட்டிற்குள் வந்துதான் கையை விட்டான். அவளை முறைத்து கொண்டே ஓங்கி ஒரு அறை விட்டான்.

“அறிவிருக்காடி உனக்கு எதற்கு இப்படி செய்தாய்?இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தது பிரச்சனை உனக்குதான்.ஏன் இப்படி செய்தாய்?” என்று அவளின் இரு தோள்களிலும் கையை வைத்து உழுக்கினான்.

சுவாதியின் காதல் கொண்ட மனம் அவனிடம் அனைத்தையும் சொல்ல தூண்டினாலும் ஏதோ ஒன்று அவளை சொல்ல விடாமல் தடுத்தது.அதனால் அவள் எதுவும் சொல்லாமல் “நான் என்ன தவறு செய்தேன்?”என்ற ரீதியில் அர்ஜூனை முறைத்து கொண்டு நின்றாள்.கேட்பதற்கு பதில் சொல்லாமல் திமிராக நின்று கொண்டிருந்த சுவாதியை பார்த்த அர்ஜூன்  மேலும் கோபமாகி      “நீ இப்படி கேட்டால் சொல்லமாட்டாய் வா உன் அம்மாவிடமே அனைத்தையும் சொல்கிறேன்,அப்போது அவர்களிடம் நீ பதில் சொல்லிதானே ஆக வேண்டும் வா” என்று இழுத்தான்.

சுவாதி அம்மா என்ற வார்த்தையில் உடைந்து அழுதவள். “வேண்டாங்க வேண்டாம் இப்ப உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் நான் ஏன் இப்படி செய்தேன் என்றுதானே நானே சொல்கிறேன்” என்றவள்.                                                                                                                                                                                \தன் வாழ்வின் அழகான பக்கத்தையும் அந்த ராமால் அலங்கோலமான தன் அக்காவின் வாழ்வையும்,தன் அம்மாவிற்கு நேர்ந்த கொடுமையையும் சொல்லி இருதியாக மாலதி அவளிடம் வாங்கிய சத்தியத்தைபற்றி சொன்னாள். “எங்கும் போகாதவள் தோழியின் திருமணத்திற்கு சென்று இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவாள் என்று நாங்கள் யாருமே நினைக்கலங்க” என்று இத்தனை நாள் சோகத்தையும் தனக்குள் வைத்து குமுறி கொண்டு இருந்தவள் இன்று கேட்க ஒரு ஆள் கிடைக்கவும் அனைத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்து அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

“அந்த ராமை பழி வாங்க நான் தேர்ந்தெடுத்த வழிதான் இந்த பேய் நாடகம்.வேண்டுமென்றே இரவு நேரங்களில் யாராவது வருகிறார்களா என்ற பார்த்து பேய் போல் சிரித்து அவர்களை பயமுறுத்தினேன் முதலில் நம்பாத மக்கள் நாட்கள் செல்ல செல்ல நம்ப ஆரம்பித்தனர்”.

“அப்படிதான் ராமையும் பயமுறுத்தி அவனுக்கு நிம்மதி இல்லாமல் செய்ய வேண்டும் என்று இப்படி செய்தேன்” என்று கூறியவளை கூர்மையாக பார்த்த அர்ஜூன் “நீங்கள் இருவரும் டிவின்ஸா” என்று கேட்டு அவள்தானா பெயர் தெரியாமல் என் நினைவில் நின்றவள் தானா என்பதை உறுதி செய்து கொள்ள “மாலதியன் தோழியின் பெயர் திருமண தேதி, மண்டபம் என்று அனைத்து விவரங்களையும் கேட்டவன் சுக்கு நூறாக உடைந்தான்”.

தன் மார்பில் சாய்ந்து அழுதவளை நிமிர வைத்தவன் “நீ இப்போது வீட்டிற்கு போ இதற்கான தீர்வை நாளை பேசலாம்” என்று அனுப்பி வைத்தான்.அவள் சென்றவுடன் தலையை பிடித்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவன் வேகவேகமாக மாடி படிகளில் ஏறி தன்னுடைய போட்டோவிற்கு பின்னால் இருக்கும் மாலதியின் போட்டோவை பார்த்து கண்ணீர் சிந்தினான்.                 “ உன் தங்கை சொன்ன அதே திருமணத்தில் தான் நானும் உன்னை பார்த்தேன்.அங்குதான் நான் இந்த போட்டோவை உனக்கு தெரியாமல் எடுத்தேன்”.

“நீயே என் நினைவு முழுவதும் இருந்தாய் உன்னை மறுபடியும் எப்போது பார்போம் என்று நான் தவித்து கொண்டு இருந்தேன்.இந்த ஊருக்கு வந்து சுவதியை பார்த்து நீ என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு வேறு கொடுத்துவிட்டேனே உன்னை காதலித்துவிட்டு என்னால் எப்படி இன்னோரு பெண்ணை மணக்க முடியும்.என்னால் எதுவும் செய்ய முடியாமல் கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாதவனாக்கி விட்டாயே” என்று போட்டோவை பார்த்து புலம்பியவன் அறியவில்லை அவன் பேசிய அனைத்தையும் சுவாதி கேட்டுவிட்டாள் என்று.

ஆம், “அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்” என்று சொல்ல வந்தவள் அர்ஜூனின் புலம்பல் அனைத்தையும் கேட்டு கண்ணில் கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருந்தாள்.

மறு நாள் யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் விடிந்தது.இருவரை தவிர இரவு முழுவதும் தான் மாலதிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து அர்ஜூனும்,தன் அக்கா காதலித்தவனையா தானும் காதலித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் சுவாதியும் வெகு நேரம் அழுதுவிட்டு காலை லேட்டாக எழுந்தனர் ஆளுக்கொரு முடிவுடன்.

சுவாதியிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று அர்ஜூனும்,அஜூ என்று சொல்ல வந்து இனி எப்போதும் அவனை அவ்வாறு கூப்பிடும் உரிமை தனக்கு இல்லை.எல்லோருக்கும் போல் எனக்கும் இனி டாக்டர்தான்.டாக்டரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுவாதியும் முடிவெடுத்தனர்.அதன்படி அர்ஜூனும் ராஜாவுடன் பேசி கொண்டே சுவாதி வீட்டிற்கு சென்று லட்சுமியை செக் செய்துவிட்டு எதுவும் பேசாமல் வந்துவிடுவான்.முதலில் என்றால் அவளிடம் பேசுவதற்காகவே எதாவது கேட்டு கொண்டே இருப்பான்.

“சுடு தண்ணீர் வேண்டும்,காட்டன் துணி வேண்டும்” என்று.ஆனால் இப்போது அவனின் அமைதி ஓரளவு சுவாதி எதிர் பார்த்திருந்ததால் அவளும் அவன் செக் செய்து போகும் வரை வெளியில் வரவில்லை.விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அர்ஜூனுக்கு அது கடினமானதாகவே இருந்தது.

சுவாதியை பொறுத்த வரை அர்ஜூன் மாலதியின் கணவன் என்று தன் மனதில் பதியவைக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாள்.

மூன்று நாட்களாக சுவாதியை பார்க்காமல் வெறுமையாக உணர்ந்தான் அர்ஜூன்.அம்மாவிடமாவது பேசலாம் என்று கோவில் மலை மீது ஏறினான்.அங்குதான் டவர் கிடைக்கும் என்று.பெண்கள் அனைவரும் கோவிலுக்கு வருவதை பார்த்து என்ன விசேஷம் என்று அங்கு வந்த பாட்டியிடம் கேட்டான் அர்ஜூன்.

அந்த பாட்டியோ அவனை பார்த்து கிண்டலாக சிரித்து “அர்ஜூனன்னு பேரு வச்சதால பொண்ணுங்க மட்டும்தான் உங்க கண்ணுக்குபடுவாங்களா டாக்டர் சார்.இன்னைக்கு ஊரில் பெரிய தலைகளுக்கு எல்லாம் முதல் மரியாதை செய்வாங்க அதற்குதான் இந்த கூட்டம்” என்று சொல்லி சிரித்தார்.

அர்ஜூன் கடுப்பாகி அந்த பாட்டியை பார்த்து முறைக்க “இந்த காலத்து புள்ளைங்களுக்கு உண்மைய சொன்னா எதுக்குதான் இப்படி கோபம் வருதோ” என்று புலம்பிவிட்டு போனார்.

அர்ஜூனின் கோபம் இப்போது இந்த பெயரை வைத்த தன் அம்மாவின் மேல் திரும்பியது.வேகமாக அம்மாவின் நம்பரை டையல் செய்தவன் கோவில் சத்ததில் கேட்காது என்று ஸ்பீக்கரை ஆன் செய்து பேச ஆரம்பித்தான்.                                                                                                                         கோவிலுக்கு வந்த சுவாதி அர்ஜூனிடம் பேச வேண்டும் என்று அவன் அருகில் நின்றதால் அவர்களின் பேச்சு அவள் காதிலும் விழுந்தது.

“அம்மா”……..என்று அர்ஜூன் கத்தவும் அந்த பக்கம் சுந்தரி

“டேய் மெதுவாடா எனக்கு நன்றாக காது கேட்கும் எதற்கு இப்படி கத்துகிறாய்” என்று கேட்டார்.        “கத்துகிறேனா உங்களை……எனக்கு ஏன் நீங்கள் அர்ஜூன் என்று பெயர் வைத்தீர்கள்” என்று கேட்டான்.

சுந்தரி அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“ஏன்டா….இதை கேட்க தான் உன் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து எனக்கு போன் செய்து இந்த கத்து கத்தினாயா” என்று கிண்டல் செய்ய.                                                                                                                        அர்ஜூனோ “சிரிக்குறீங்களா என் பொலப்பே இங்கு சிரிப்பா சிரிக்குது இதில் நீங்கள் வேறு என்னை கடுப்படிக்காதீர்கள்” என்று கத்தினான்.

சுந்தரி “சரி சரி எனாச்சு ஏன் உனக்கு திடீரென்று இப்படி ஒரு கேள்வி” என்று கேட்க சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்கும் அந்த பாட்டிக்கும் நடந்த உரையாடலை கூறி “பாருங்கள் நீங்கள் இந்த பேர் வைத்ததால்தான் அந்த பாட்டியெல்லாம் என்னை கிண்டல் பண்ணுகிறார்கள்” என்று புகார் வாசித்தான்.

சுந்தரியோ “சரி விடுடா அர்ஜூனன் எவ்வளவு பெரிய வில் வித்தன் தெரியுமா?பெரிய வீரன் எனக்கு மகாபாரதத்தில் பிடித்த கேரக்டர் அதனால்தான் உனக்கு இந்த பேர் இனிமேல் எல்லாம் மாத்த முடியாது.அதுமட்டும் இல்லை உன் மகன் பெயர் கூட யோசித்துவிட்டேன்”.

“அர்ஜூனின் மகன் அபிமன்யு” என்று பெயர் நன்றாக இருக்கிறதா என்று மேலும் அவனை சீண்ட தாயின் சீண்டலை புரிந்து கொண்ட அர்ஜூன்

“ஏன்மா?ஏன்? உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி நான் என் மகனுக்கு மாடர்னாக தான் பெயர் வைப்பேன்.உங்கள் இஷ்டபடி உங்க மகனுக்கு பெயர் வச்சீங்க இல்ல,நான் எதாவது கேட்டனா.அது மாதிரி என் இஷ்டபடிதான் என் மகனுக்கு பெயர் வைப்பேன்” என்று கண்ணில் கனவுடன் கூறிய அர்ஜூனை பார்த்த சுவாதி அவன் வசீகரத்தில் ஒரு நிமிடம் தடுமாறிதான் போனாள்.

அர்ஜூன் கனவில் சுவாதியும் அவளை போன்று குண்டு கன்னத்துடன் ஒரு மகனை தூக்கி வைத்திருப்பதை போல் நினைத்து பார்த்தான்.சட்டென தலையை உழுக்கி என்ன நினைவு எங்கெங்கோ செல்கிறது.

என் வாழ்வில் திருமணம் என்பது நடக்குமா?அப்படி நடந்தால் என் காதல் பொய்யா என்று மண்டையை போட்டு பிச்சு கொள்ளாத குறையாக யோசித்தான்.அதற்குள்

“ஹலோ….ஹலோ”….. என்று பலமுறை கத்திவிட்டார் சுந்தரி.

தாயின் குரலில் கவனம் கலைந்தவன் சொல்லுங்க அம்மா என்று குழம்பிய மன நிலையில் பேச ஆரம்பித்தான்.

“என்னடா குரலில் சுதி இறங்கிவிட்டது”.    சுந்தரி

சுவாதி நினைப்பில் இருந்த அர்ஜூன். “சுதியின் நினைவு வந்ததால்தான் பிரச்சனையே” என்று சொல்ல கேட்டு கொண்டிருந்த இரு பெண்களும் திகைத்தனர்.

சுவாதியோ “என்னை பிரச்சனை என்று சொல்கிறாரே” என்று திகைக்க,சுந்தரி “என்ன டா சொல்கிறாய் என்ன சுதி” என்று புரியாமல் திகைப்புடன் கேட்டார்.

தாயிடம் உளறிய தன் மட தனத்தை நொந்து கொண்ட அர்ஜூன் “அது ஒண்ணும் இல்லமா,இங்கு சிக்னல் ப்ராப்ளம் சரியாக கேட்கவில்லை.நான் பிறகு கூப்பிடுகிறேன்” என்று கூறி சமாளித்து போனை கட் பண்ணியவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.                                          “அப்பாடா………சமாளிச்சாச்சு” என்று.

சரி கோவிலுக்கு செல்லலாம் என்று திரும்பியவனின் பின்னே நின்று கொண்டிருந்தாள் சுவாதி அவளை அங்கு எதிர் பார்க்காத அர்ஜூன் அவளை ஆச்சரியமாக பார்த்து என்னவென்று கோபமாக கேட்டான்.அவளை தள்ளி நிறுத்தும் முயற்சியுடன்.ஆனால் அந்த முயற்சி அவள் பேசி முடிக்கும் போது கோபமாக மாறுவதை உணராமல்.

தன்னுடன் பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பதை அறிந்து அவளுக்குள் உள்ள ரோசம் தலை தூக்க ஆரம்பித்தது.அவனை நேர் பார்வை பார்த்தவள் “நீங்கள் என் அக்கா என்று நினைத்துதான் என்னிடம் மணந்து கொள்வதாக வாக்களித்தீர்கள் அதனால் அது செல்லாது”.

“நான் உங்கள் சத்தியத்தை உங்களிடமே தந்து விடுகிறேன்” என்று சொன்னவளை அர்ஜூன் ஆச்சரியமாக பார்க்க “நேற்று நைட் அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.நீங்கள் அப்போது மாலுவின் போட்டோ வைத்து பேசி கொண்டு இருப்பதை பார்த்துவிட்டுதான் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டேன்”.

“நீங்கள் கவலை பட தேவையில்லை மாலதியிடம் நீங்கள் சொன்ன வார்த்தை அது அவளிடமே சொன்னதாக இருக்கட்டும்.அது மட்டும் இல்லாமல் திருவிழா முடிந்து இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் என்று ராம் காலையில் வந்து சொல்லிவிட்டு சென்றான்” என்று சுவாதி பேச பேச தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று புரியாமல் பார்த்தவனின் கண்ணில் பட்டது அவளின் அரக்கு நிற புது பட்டு புடவை.

சந்தேகமே இல்லாமல் அவனுக்கு தெரியும் இது அந்த ராம் எடுத்து கொடுத்திருப்பான் என்று.அவன் எடுத்து கொடுப்பதை இவள் எப்படி கட்டலாம் என்ற எண்ணம் தோன்ற அவளை முறைத்தான்.

“எதற்கு முறைக்கிறான்” என்று முதலில் புரியாமல் பார்த்தவள் அவன் கண்கள் புடவையில் இருப்பதை பார்த்து, “அது வந்து……என்று தடுமாறி ராம் இந்த புடவைதான் கட்டி வர வேண்டும் என்று கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனான் அதான்.சரி நான் கிளம்புகிறேன்.என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது” என்று கோவிலுக்குள் சென்றவள் எப்போதும் அவள் அமரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு கோபுரத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் இவளுக்கு எப்படி அவன் புடவை எடுத்து கொடுக்கலாம் என்பதுதான்.வேகவேகமாக கோவிலைவிட்டு வெளியேறியவன் போய் நின்ற இடம் புடவை கடைதான்.அவள் போட்டிருந்த அரக்கு நிற பிளவுஸ்கு ஏற்றவாறு ஒரு அழகான சேலையை வாங்கியவன் மீண்டும் கோவிலுக்கு வந்தான்.அங்கு சுவாதி கோபுரத்தை வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டே நடந்தவனுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது.

“நாம் யார் அவளுக்கு புடவை வாங்கி தர”.அவன் வாங்கி தந்த புடவையை அவள் கட்டி இருந்தாள் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.உடனே அவளுக்கு வேறு புடவை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் ஏன் எனக்கு தோன்றியது என்று யோசிக்கையில், “ஒரு அயோக்கியன் எடுத்து கொடுத்த புடவையை கட்டியிருக்கிறாளே என்ற கோபம் அவனால் எவ்வளவு துன்பம் அனுபவித்து கடைசியில் அவன் வாங்கி தந்த புடவை கட்டியதால்தான் கோபம்.அவனால் தான் என்மாலதி இறந்தால் என்ற கோபம்” என்று தனக்கு தானே ஒன்றுக்கும் உதவாத காரணத்தை கண்டுபிடித்தான்.

“இந்த சாரியை எப்படி அவளிடம் கொடுப்பது” என்று யோசித்து கண்டு பிடித்த ஐடியாவின்படி அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் வாங்கி வந்த ஒரு பாட்டில் எண்ணெயை ஊற்றினான்.பிறகு ஒன்றும் தெரியாதவன் போன்று அந்த இடத்தைவிட்டு தள்ளி சென்றான்.

“பூஜை ஆரம்பிக்க போகிறது வாடி மா” என்ற பக்கத்து வீட்டு மாமியுடன் செல்ல எழுந்தவள் எண்ணெயில் கால் வைத்து வழுக்கி கீழே விழ போனாள்.கீழே அவள் விழமல் பிடித்து கொண்ட மாமி.

“அடடா……..பார்த்து உட்கார கூடாத மா…….பார் எண்ணெயிலேயே உட்கார்ந்து இருக்கிறாய்.சாரி புல்லா நனஞ்சுடுத்து நீ நடக்கும் இடம் எல்லாம் எண்ணெய் சீலையில் இருந்து சிந்தி கொண்டே இருக்கும் இப்படியே எப்படி சாமி கும்பிடுவாய்” என்று கேட்டு கொண்டிருந்தார்.

ஏதேச்சையாக வருவது போல் அங்கு வந்தான் அர்ஜூன்.மாமியை பார்த்து சிரித்துவிட்டு ஒன்றும் அறியாதவன் போல் “என்ன மாமி பூஜை ஆரம்பிக்க போகுது அங்கு போகாமல் இங்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டவன், “என் அம்மா கூட அம்மனுக்கு புடவை வாங்கி சாத்த சொன்னார்கள் என்று வாங்கி வந்து விட்டேன் எங்கு கொடுப்பது என்ன செய்வது என்று ஒண்ணும் புரியவில்லை.இந்த அம்மாவிடம் எனக்கு அது எல்லாம் தெரியாது என்றால் கேட்க மாட்டேங்கறாங்க” என்று புலம்புவது போல் நடித்தான்.உடனே மாமி யோசித்து அந்த புடவையை வாங்கி பார்க்க சுவாதி போட்டிருந்த பிளவுஸ்கு மேட்சாக இருந்தது.

“என்ன மாமி நீங்களே கொடுக்க போகிறீர்களா” என்று ஆஸ்கர் நடிகன் ரேஞ்சுக்கு அவன் நடிக்க.அவன் எதிர் பார்த்தது போல மாமி அந்த சேலையை சுவாதி கட்டி கொள்ளட்டும் என்று நடந்த விஷயத்தை கூற அவனும் உடனே ஒத்து கொள்ளாமல் “அம்மனுக்கு வாங்கியது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் ஒன்றும் இல்லை என்று பெரிந்தன்மை போல் கூற” ,சுவாதிக்கு கோபமாக வந்தது.

சுவாதி மாமியை பார்த்து. “மாமி பாவம் சார் சாமிக்கு வாங்கி வந்ததை நீங்கள் கேட்கவும் சங்கடபடுகிறார்.இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்று கூறியவள்.மாமியிடம் இருந்த சேலையை வாங்கி அர்ஜூனிடம் தந்து “நீங்கள் போங்க டாக்டர் சார் நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டாள்.மீண்டும் மாமியின் பக்கம் திரும்பிய சுதி “மாமி நான் அந்த கோவில் கணக்கு பார்க்கும் அறையில் இருக்கிறேன்.நீங்கள் வீட்டிற்கு சென்று வேறு புடவை எடுத்து வாருங்கள்” என்றுவிட்டு அந்த அறையை நோக்கி சென்றாள்.

“சரி மா,பாவம் அந்த புள்ளைக்கும் எதற்கு மன சங்கடம்” என்று கூறி “நான் போய்விட்டு வருகிறேன்.அது வரை பத்திரமாக இரு” என்று கோவிலைவிட்டு வெளியேறினார்.

கணக்கு பார்க்கும் அறையில் மாமிக்காக காத்து கொண்டிருந்தவள் “உட்கார கூட முடியாது.கீழே எல்லாம் எண்ணெய் ஆகிவிடும் நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று நடந்தவள்.வழுக்கிய தரையை பார்த்தாள் அவளுடைய சீலையில் இருந்து எண்ணெய் சொட்டி அறை முழுவதும் எண்ணெயாக இருந்தது.

“ச்சே…..இந்த சேரி வேறு என்று எண்ணெய் சொட்டிக்கொண்டிருந்த சேலையை கழட்டி இனி எதற்கும் இது உதவ போவதில்லை.எப்படி அங்கு அவ்வளவு எண்ணெய் வந்தது.எந்த கடன் காரன் கொட்டினானோ” என்று கடுப்புடன் நினைத்து சேலையை சுருட்டி ஓரமாக தூக்கி போட்டாள். “இன்று நேரமே சரி இல்லை என்று நொந்து கொண்டவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதற்குள் கொண்டு வந்து விட்டீர்களா மாமி” என்று நிமிர்ந்தவள் சத்தியமாக அர்ஜூனை அங்கு எதிர் பார்க்கவில்லை.                                                                                                                                                                                   அர்ஜூனோ “ஏன் இந்த சேலை கட்ட மாட்டாலாமா” என்ற கோபத்துடன் மாமி கோவிலைவிட்டு வெளியேறியதும் சுவாதி இருந்த அறையை திறந்து உள்ளே சென்றவன் தடுமாறிதான் போனான்.அரக்கு நிற பிளவுஸில் அவளது சிவந்த நிறம் மேலும் கூடி தெரிய அவளின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது.மேலிருந்து கீழாக தன் பார்வையை ஓடவிட்டவனின் கண்களில் தப்பவில்லை அவளது இடது மார்பின் மேல் பக்கம் இருந்த மச்சமும் இடையில் இருக்கும் மச்சமும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவனை பார்த்த சுவாதிக்கு ஏகத்துக்கும் கோபம் எகிற தன் கைகளால் மேல் பகுதியை மூடி திரும்பி நின்று கொண்டு பொறிய துவங்கினாள்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் முதலில் வெளியே போங்கள் யாராவது வந்து நம்மை இப்படி பார்த்தாள் என்ன நினைப்பார்கள்” என்று சீற அவளின் சத்தத்தில் இருக்கும் இடம் உணர்ந்து இவனும் திரும்பி கொண்டு                                                                                                                        “சாசாசாரி சாரி…….இஇந்த சேல்யையே கெட்டி கொள் என்று சௌல்லதான் வந்தேன்” என்று உளறியவன் “ச்ச்ச”…….என்று தன் தலையில் அடித்து கொண்டு வெளியே செல்ல திரும்பியவனின் காதில் சுவாதியின் கோபமான “நீங்கள் யார் எனக்கு புடவை வாங்கி தர” என்ற குரல் தடுத்தது.          “உங்கள் புடவை இங்கு யாருக்கும் தேவையில்லை அதனால் போகும் போது உங்கள் புடவையை எடுத்து கொண்டே போங்கள்” என்று சொன்னவளை இப்போது நேராக பார்த்தவன் “சொந்தம் இருந்தால் தான் புடவை வாங்கி தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதாகதான் நான் நினைக்கிறேன் என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை”.

“நான் புடவை கட்டுவது இல்லை அதனால் இது என் புடவை இல்லை.உங்கள் மனதில் எந்த எண்ணமும் இல்லை என்றால் இதை கட்டி கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றவனின் மனதில் ஆயிரம் குழப்பம். “இவளை பார்க்கும் போது எனக்குள் ஏன் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது.இதுவரை எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்காத நான் வதுவை பார்க்கும் போது மட்டும் தடுமாறுகிறேனே ஏன்?அவளை பார்க்கும் போது யாரோ ஒரு பெண்ணாக என்னால் பார்க்க முடியவில்லையே ஏன்?அவள் என் உரிமை எனக்கானவள் என்ற எண்ணம் தோன்றுகிறதே ஏன்?அப்போ நான் காதலித்தது வதுவைதானா,மாலதியை இல்லையா?ஒரே குழப்பமாக இருக்கிறதே” என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டவன் முதலில் மாலதி சாவிற்கான தன்டணையை அவனுக்கு வாங்கி தருவோம்.அதுவரை எதைபற்றியும் யோசிக்க கூடாது என்ற முடிவெடுத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதிசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- இறுதிப் பகுதி

சுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள். சுதி பேசுவதை கேட்டு கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான். “நம்ம விஷயம் சுதிக்கு

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11

“என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்க. “சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போதுதான் பார்த்தது போல”,என்று சுவாதி இங்கு வந்தது,அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள