Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29

29 – மனதை மாற்றிவிட்டாய்

மறுநாள் காலையில் எழுந்ததும் திவி தோட்டத்திற்கு கிளம்பிவிட்டாள். உடன் சுந்தர் வருகிறேன் என கிளம்பினான். திவியை ஆவலுடன் காண வந்த ஆதிக்கு இதை கேட்டதும் கோபம். இவ போகுறதுன்னா ராமைய்யா கூட போகவேண்டியதுதானே, சுந்தர் கூட எதுக்கு போறா. வரட்டும். என பொருமிக்கொண்டான்.

அரை மணிநேரம் கழித்து உள்ளே திவி சுந்தருடன் அளவளாவிக்கொண்டே நுழைய காபி குடிக்கிறியா திவி என மதி கேட்க “வேண்டாம் மதி அத்தை”

“சரி குளிச்சிட்டு வாங்க, அப்புறம் சாப்படலாம். ..”

“மெதுவா சாப்பிடலாம் அத்த” என திரும்ப சுந்தருக்கு கால் வர அவன் நகர இவள் விடாமல் மீண்டும் அவனுடன் பேசிக்கொண்டே செல்ல பொறுமை இழந்த ஆதி அவளிடம் வந்து

“எங்க போயிருந்த? ”

“தோட்டத்துக்கு”

“உனக்கு வேலை செய்யத்தான் இங்க எல்லாரும் இருக்காங்களா என்ன?”

“அப்படி எல்லாம் நான் எதுவும் சொல்லலையே….”

“ஏய், என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”

“கண்டிப்பா உங்கள இல்லப்பா…” என அவள் சிரிக்க இவன் “இங்க பாரு இப்படி எப்போ பாரு ஊரு சுத்திக்கிட்டே இருக்காத அதுவும் கூட யாரும் வராம ஒரு பையன்கூட மட்டும்…. ஒழுங்கா அடக்க ஒழுக்கமா இரு..இல்லாட்டி இப்போவே ஊருக்கு கிளம்பு…” என்றதும் திவிக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது ஆதி தன்னை தவறாக எண்ணிவிட்டானே என்று.

இதை கேட்ட செல்லத்தாய்க்கு முகம் சுருங்கி விட மாணிக்கமும் அதேபோல நினைத்து அமைதியாக நகர்ந்து விட்டனர்.

அமைதியாக சென்று அவள் தயாராகி வந்து காலை உணவு முடித்தவுடன் அனு சுபி அனைவரும் அவளை தோப்புக்கு அழைக்க அவள் தலை வலி, கால் வலி என்று வர மறுத்துவிட்டு ரூமிற்குள் சென்று சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டும் குருவிகளுடன் பேசிக்கொண்டும் இருந்தாள்.

அர்ஜுன் “திவி எங்க? ” என வினவ அம்மு “அவளுக்கு தலை, கால் எல்லாம் வலியாம். வரலேன்னு சொல்லிட்டா. ”

“அவதானே போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டா.?”

“ஆமா, பட் அவளால முடியல போல. அதனால தான் அவளே வரலன்னு சொல்றா. இல்லாட்டி அவ வராம இருப்பாளா? ”

“கரெக்ட் தான். சரி வாங்க நாம போகலாம்.”

ஆதி ” கொஞ்சம் இருங்க.” என்றுவிட்டு அறைக்குள் சென்று பார்க்க அவள் செய்கை கண்டவன் அருகே சென்று “எல்லாரும் தோப்புக்கு போறாங்க. நீ போகல?”

“இல்ல ”

“ஏன் ”

“……………………”

“என் மேல கோபமா? ”

“…………………..”

“என்ன பண்ணிட்டு இருக்க? ”

“வேடிக்கை பாத்திட்டு குருவிகூட பேசிட்டு இருக்கேன்”

“ஏன் மேடம் அது கூட பேசுறீங்க? ”

“கடவுளே, இப்போ குருவிகூட பேசுறதுகூட பிரச்சனையா? ” என அவள் கண்களை சுருக்கி வினவ

“அதெல்லாம் எதுவும் இல்ல. உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ண சொல்லிட்டு வந்தேன். ஆச பட்டேல்ல. போயிட்டு வா…”

திவி வேகமாக திரும்பி “உண்மையாவா? நான் போகட்டுமா? ”

ஆதி ஆமாம் என்பது போல தலையாட்ட இவள் வேகமாக இறங்கி வந்து “தாங்க் யூ சோ மச் ஆதி”

என்று ஓட போனவளை கை பிடித்து நிறுத்தி “அப்போ கால் வலிக்கிதுன்னு அவங்ககிட்ட சொன்னதெல்லாம் சும்மா பொய் தானே? ”

அவள் திருதிருவென முழிக்க இவன் “சரி போ ” என்பது போல தலையாட்ட அவளும் ஓடிவிட்டாள்.

அனைவரும் அவள் வருவதை கண்டதும் கோபமும் சிரிப்புமாக “வாங்க மேடம் இப்போ வலி எங்க போச்சு? ” என்று கேட்க

திவியும் சளைக்காமல் “வலி இருக்கும்தான் அம்மு, பட் இப்போ ‘ஊருக்கு போய்ட்டா திரும்ப இதெல்லாம் நான் பாக்கமுடியதே. அண்ட் உங்ககூட என்ஜோய் பண்ணாலேன்னு நீங்களும் ஏங்கி போய்டுவிங்கள்ல அதனால தான் போன போகட்டும்னு கஷ்டப்பட்டு வந்தேன். வாங்க போலாம். ” என்று அவள் கூறியதை கேட்டு ஆதியை பார்க்க அவன் இவளையே பார்த்து சிரித்துக்கொண்டிருக்க மற்றவர்களும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டு செல்ல, திவி திரும்பி “ஆதி, நீங்க வரலையா? ”

“இல்லை, கொஞ்சம் ஒர்க் இருக்கு. அர்ஜுனும் உங்ககூட தானே வரான். திருவிழா அன்னைக்கும் இங்க பிஸி ஆயிடுவோம். அதனால அதுக்குள்ள வேலைய முடிக்கணும்…சோ நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க.”

“ஓஹ். …நீங்க எங்கேயுமே எங்ககூட வரல. வருவீங்கன்னு நினைச்சேன்.” என இழுத்துக்கொண்டே முகத்தை தொங்கப்போட்டு கொண்டு திரும்பியவளின் அருகில் வந்த ஆதி “நியூ ப்ராஜெக்ட்டா. இவளோ நாள் இது கிடைக்கனும்னு தான் ஒர்க் பண்ணோம். நான் அதனால தான் ஊருக்கே வரலேன்னு சொன்னேன். எல்லாரும் கேட்டீங்கன்னு தான் வந்தேன். பட் இன்னைக்குள்ள கண்டிப்பா கம்ப்ளீட் பண்ணி ரிவியூக்கு சென்ட் பண்ணனும்னு. நீ எல்லார்கூடையும் ஜாலியா போயிட்டு வா. நாளைக்கு இருந்து கூடவே இருக்கேன் சரியா? ”

“ம்ம். ..ஓகே கண்டிப்பா நாளைக்கு கூடவரணும். அப்படின்னா சீக்கிரம் போயி ஒர்க் பாருங்க. வெட்டியா என்ன பேச்சு.?” என விரட்ட

இவள் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு “வாலு, வாயாடி, போ.” என்றான்.

அவர்கள் சென்றுவிட இவன் அறைக்குள் சென்று வேலையை தொடர்ந்தான்.

தோப்புக்கு சென்றவர்கள் தங்களுக்குள் பாம்பு வந்தா இவ பயப்படுவா, பேய் வந்தா அவ பயப்படுவான்னு வம்பிழுத்து கலாய்த்து கொண்டு இருக்க அனு, சுபி “பொதுவா டவுன்ல இருந்து வந்தவங்க தான் ரொம்ப பயப்படுவாங்கலாம். அவர்களுக்குத்தான் இந்த மாதிரி இடமெல்லாம் பழக்கலாமில்லேல்ல?” என்றதும் திவி சிலுப்பிக்கொண்டு “ஹலோ, நான் எல்லாம் பயப்பட மாட்டேன். ”

“அது இப்போ உன்கூட எல்லாரும் இருக்கறதால…யாரும் இல்லாம அதுவும் சாயங்காலம் நேரம் இல்ல இருட்டும் போது வந்தா தெரியும் உங்க தைரியம் பத்தி. ”

“சரி, இருட்டுனதுக்கப்புறம் நான் மட்டும் வந்திட்டு வீட்டுக்கு வரேன். நாளைக்கு பாக்கலாம் யாரு தைரியம்னு.” என இவர்கள் பேசிக்கொண்டு வர, அம்முவும், அர்ஜுனும் தனி உலகில் இவர்களுக்கு பின்னால் பேசிக்கொண்டே வந்தனர் இதை கவனியாமல்..

வீட்டில் பெரியோர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அவர்களிடம் வந்த ஆதி “என்னமா, இன்னும் போனவங்கள ஆள காணோம்.”

மதி “தோப்புக்கு போயிட்டு ஆத்துக்கு போயிட்டு வரேன்னாங்க. வர லேட்டாகும் தானே.”

“என்ன, ஆத்துக்கு போறாங்களா? இத சொல்லவேயில்ல. திவி வரும்போதே மகா அத்தை சொல்லித்தானே அம்மா அனுப்பிச்சாங்க. தண்ணி அவளுக்கு மாறுனா கொஞ்சம் ஒத்துக்காதுன்னு. காலைல இருந்து மேடம்க்கு லைட்டா சளி போல. உறுஞ்சிட்டே சுத்துறா. இதுல அவளை ஆத்துக்கு வேற அனுப்பிச்சிருக்கீங்களா? உடம்பு சரில்லேன்னா அவங்க கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? ” என ஆரம்பிக்க

“இல்லடா, அவளை தண்ணில இறங்க விடவேண்டாம்னு சொல்லித்தான் அனுப்பிச்சிருக்கேன். நீ சும்மா எல்லாத்துக்கு குதிக்காதடா ”

“இல்லமா, நீங்க சொல்லிருப்பிங்க, ஆனா அவ ஏதாவது காரணம் சொல்லி தண்ணில இறங்கிட்டு வருவா. பிராடுமா அவ. ”

“டேய், சும்மா இப்படி நிக்காத, உக்காறதனு சொல்லிட்டே இருக்காத… அம்மு, அர்ஜுன், அனு, சுபி எல்லாரும் கூட இருகாங்க. பாத்துப்பாங்க. நீ சும்மா இரு. ” என அடக்க இவன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டான்.

சிறிது நேரத்தில் அனைவரும் வர கோபமான ஆதியை கண்டுவிட்டு திரும்பி பார்க்க பாதி நனைந்தும் நனையாமலும் இடுப்புக்கு கீழாக தொப்பலாக நனைந்து வந்த திவியை கண்டதும் மதி “ஐயோ, இவ என்ன இப்படி வந்திருக்கா, இவன் சாமியாடுவானே.” என வேகமாக அவளிடம் வந்தவள் “என்னடி இப்டி வந்திருக்க? தண்ணில இறங்காதேன்னு சொல்லித்தானே அனுப்பிச்சேன். ”

“நானும் வேணும்னே போயி இறங்கள அத்தை. நாங்க நேரா தோப்புக்கு போனோமா. அப்புறம் வரப்பு வழியா ஆத்துக்கு போலாம்ணு போகும் போது நான் வேடிக்கை பாத்துகிட்டே கடைசியா போனேனா, கீழ கவனிக்காம ஸ்லிப் ஆகி விழுக போய்ட்டேனா. பாலன்ஸ் பண்ணிட்டேன். ஆனாலும் காலெல்லாம் சேறு. சரி அத மட்டும் கழுவிடலாம்னு தான் பாத்தேன். அங்க போயி பாலன்ஸ் மிஸ் ஆகி படிக்கட்டுல உக்காந்த மாதிரி தண்ணில விழுந்திட்டேன்.. அதனால தான் இப்படி பாதிக்கு மேல நினைஞ்சிடிச்சு அத்த. நானா எதுவும் பண்ணல. ” என அவள் ஏற்ற இறக்கத்தோடு கூற மற்ற அனைவருக்கும் இவள் கூறுவதை வைத்து பார்த்தால் நம்பும்படியாக இருந்தாலும் இவளை நம்பாமல் முறைத்துக்கொண்டே இருந்தனர்.

மதி ” நீ, நாங்க சொன்னா எல்லாம் அடங்கமாட்ட, அங்க ஒருத்தன் ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருக்கான். நீ வாங்குனா தான் சரிப்படுவ. உள்ள போ. ” என்றதும் இவள் எட்டிப்பார்க்க அங்கே ஆதியை கண்டவள் தனக்குள் ஐயோ, இவன எப்படி மறந்தேன். போச்சு. இன்னைக்கு காது காலி. என்றே அவனிடம் சென்று நிற்க சத்தியம் வேற பண்ணிருக்கேன். பொய் சொல்லக்கூடாதுன்னு. மாட்டிக்க போறேன். பேசாம ஓடிடலாமா. என அவள் அறைக்கு செல்லும் தூரம் அளவிட, பின் தொரத்தி புடிச்சு மகா அம்மாவை விட பேசுவானே. அதுக்கு அமைதியா நின்னு திட்டுவாங்கிட்டே போய்டலாம். என்ன இவன் ஒண்ணுமே பேசாம இருக்கான். என நிமிர்ந்து பார்க்க ஆதி இவளின் கண்களையும் அசைவுகளையும் கொண்டு அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவனாக அதே சமயம் காற்றடிக்க ஈர உடையுடன் உடல் சிலிர்க்க நின்ற அவளை ரசிக்க ஆரம்பிக்க அந்த பார்வையின் அர்த்தம் புரியாவிடினும், ஏதோ கூச்சத்தை உணர்ந்தவள் அவனிடம் “நான் போயி டிரஸ் சாஞ்சு பண்ணனும். ஈரமா இருக்கு , கொஞ்சம் குளிருது. ” என கூறி கண்களால் கெஞ்சி கொண்டுநிற்க அவனும் தலையை திருப்பிக்கொண்டு “போ” என்றான். அவள் விட்டால் போதுமென்றே ஓடியே விட்டாள். இவனும் சிரித்துக்கொண்டே நகர்ந்தான். இவன் கத்துவான் என எண்ணிய அனைவரும் இதை கண்டு ஆச்சரியமாக பார்க்க, தாத்தா, பாட்டி இருவரும் தங்களுக்குள் பார்வை பரிமாறிக்கொண்டு சிரித்துக்கொண்டனர்.

[அதேபோல சோபனா இதை கண்டு கோபமாக இருந்தாள்வீட்டில் அந்த வானரங்கள் யாரும் இல்லை என்று அவனிடம் தனியாக பேசலாம்னு போனா வேலை இருக்குனு மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லிட்டான் இந்த ஆதி, இருந்தும் அவ அதை சட்டை செய்யாமல்என்னோட போட்டோஸ் எல்லாம் இருக்கு ஆதி, நீங்க ரொம்ப இயர்ஸ் கழிச்சு வந்திருக்கீங்க. அதான் ஆல்பம் காட்டலாம்னு எடுத்திட்டு வந்தேன். அதுல நானும் நீங்களும் சின்ன வயசுல எடுத்த போட்டோஸ் எல்லாம் இருக்கு. “

அவன் நம்பாமல்அப்படியா? “

ஆமாம் என குரூப் போட்டோ ஒன்றை அதில் வீட்டு பேரன், பேத்தி அனைவரும் இன்னும் நண்பர்களுடன் இருக்கும் போட்டோ காட்ட அதில் இவன் ஒரு மூலையில் இருக்க அவள் ஒரு இடத்தில் இருந்தாள். என்னவோ இவர்கள் மட்டும் எடுத்த போட்டோ போல அவள் கூறியதுஸ்ஸப்பா. ..” என்று நினைத்தவன்சரி, அதுல என்ன ஸ்பெஷல்? இத காட்டத்தான் வந்தியா? சோ, பாத்தாச்சுல. எனக்கு இன்னும் ஒர்க் முடியல. அதனால நீ?” என வாசலை பார்க்க

என்ன ஆதி நீங்க அதுக்குள்ள விரட்டிருங்க? அண்ட் நீங்க சொல்றதும் கரெக்ட் தான். இத்தனை வானரகளுக்கு நடுவுல ச்சா. ..ஆதி, ஒய் டோன்ட் வி டேக் செல்ஃபீ?” என அவள் வேகமாக அவன் போனை எடுத்து ஆன் செய்து பாஸ்வேர்ட் கேட்க அவனிடம் நீட்ட போனை வாங்கிய ஆதிசாரி சோபனா, எம் நாட் கம்போர்ட் வித் டேக்கிங் செல்ஃபீ வித் அதர்ஸ்அண்ட் ஒர்க் இருக்குனு சொல்லிட்டேன்தென் வாட்? என கேட்டதும் இதற்கு மேல அவமானப்பட கூடாது என எண்ணி அவள் நகர ஆதிசோபனா, இன்னோரு விஷயம், இது நீங்க இருக்கற வீடாவே இருந்தாலும் இப்போ என்னோட ரூம். என் ரூம்குள்ள வரதுக்கு முன்னாடி கேட்டுட்டு வா. எனக்கு தேர்ட் பெர்சென்ஸ் என் ரூம்குள்ள பெர்மிஸ்ஸன் இல்லாம வரத அல்லோவ் பண்ணமாட்டேன். கதவை சாத்திட்டு போ.” என்று அவன் லேப்டாப்பில் கவனம் செலுத்தினான். அவள் முகம் கருத்துப்போய் வெளியே வந்துவிட்டாள்.]

இதை எண்ணி சோபனா “இந்த திவிய மட்டும் என்னமா பாக்குறான். லவ் பண்ரானோ? இனிமேல் இந்த அம்மாவை நம்பக்கூடாது. ஏதாவது பிளான் பண்ணனும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04

சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான் மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தை சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 73ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 73

73 – மனதை மாற்றிவிட்டாய் பின் தாத்தா மாமா என ஒவ்வொருவராக வர அவர்களால் எதுவும் பேச முடியாமல் போக திவி மற்றவர்களிடமும் தன் நண்பன் என கூறி அவன் பெயர் வேலை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள். அனைவருக்கும் அவனது வேலை