Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில் கூறி நகைத்தாள் அவளுக்கு அப்போது புரியவில்லை அவள் கூறிய பொய் அவள் வாழ்வை சூறாவழியாக மாற்ற போகிறது என்று.                   இருந்தாலும் அவன் பன்மையில் அவளுக்கு மரியாதை கொடுத்து,யாரோ போல் பேசியது அவள் மனதை பாதிக்கதான் செய்தது.அவளேதான் அவனை மரியாதை கொடுத்து பேச சொன்னது.ஆனால் அவன் மரியாதை கொடுத்து பேசும் போது ஏன் மனது கஷ்டபடுகிறது என்று யோசித்திருந்தாள்,அப்போதே அவள் வாழ்வு பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ.

கீதா இதைபற்றி யோசித்து கொண்டிருக்க.நகுலனோ காதலனைபற்றி பேசியவுடன் கனவு காண ஆரம்பித்துவிட்டாள் போல என்ற கடுப்புடன் அவளை பிடித்து உலுக்கி, “உன்னிடம்தான் பேசி கொண்டிருக்கிறேன்” என்று கடுப்படிக்க,

கீதாவோ சுய நினைவுக்கு வந்தவள் “கையை எடுங்க எனக்கு நன்றாக காது கேட்கும்” என்றாள்.

இப்போது இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து “இப்போது அவர் வேலையாக இருப்பார் அதனால் இன்னோரு முறை அவர் பேசும் போது எப்போது பிரியாக இருப்பார் என்று கேட்டு வைக்கிறேன்.அப்போது பண்ணலாம்.என்னை கேள்வி கேட்டது போதும் நான் கேட்டதுக்கு என்ன பதில்” என்றவளை பார்த்தவன்.

“நாம் ஒருவிஷயம் பேசவில்லை நிறைய பேசினோம் அதனால் நீங்கள் எதைபற்றி கேட்கிறீர்கள் என்று சொல்லுங்கள்” என்று நிமிடத்திற்கு ஒரு ங்கள் போட்டு பேச.இவன் வேண்டும் என்றே நம்மை வெறுப்பேற்ற இப்படி பேசுகிறான் இருக்கட்டும் நாமும் கண்டுகொள்ளாமல் இருப்போம் என்னதான் செய்கிறான் என்று பார்போம் என்ற முடிவுடன் “எதற்காக கோபப்பட்டீர்கள்” என்று கேட்டேன் என்றாள்.

“அது……..” என்று தடுமாறியவன், “கல்யாணத்தைபற்றி பேசியவுடன் நீங்கள் எழுந்து வரவும் அம்மா உன்னை ஒரு மாதிரி பார்த்தார்கள் எங்கே அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ என்ற டென்சனில் அப்படி நடந்து கொண்டேன்” என்று சமாளித்தான்.

பிறகு நான் கல்யாணத்தைபற்றி பேசியவுடன் உன்முகத்தில் லேசான சிரிப்பாவது இருக்கும் என்று எதிர் பார்த்தேன் ஆனால் நீ உனக்கும் திருமணத்துக்கும் சம்மந்தம் இல்லாதவள்போல் வந்ததால் ஏற்பட்ட கோபம் என்றா அவளிடம் சொல்ல முடியும்.பேச்சை மாற்றும் விதமாக அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.”நீ இன்னும் உன் லவ்வரின் பெயர் என்னிடம் சொல்லவில்லை” என்று கேட்க.

கீதா சற்றும் யோசிக்காமல் சொன்னால் நகுலனை அவள் திட்டிய பெயரான ‘நளன்’என்று. “சரி அவருடன் பேசி மீட்டிங் அரேஞ்ச் பண்ணு.அப்புறம் நாம் காதலித்து திருமணம் செய்ய போகிறவர்கள்.அதனால் மற்றவர்கள் முன்பு நாம் கொஞ்சம் நடிக்க வேண்டி இருக்கும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.இனி கவனமாக நடந்து கொள்” என்று கூறி காரை விட்டு இறங்கி ஹாஸ்பிட்டலுக்குள் சென்றான்.அதை யோசித்து கொண்டிருந்த கீதா ஆட்டோ சத்தம் கேட்டு சுவாதி வந்து விட்டாள் போல என்று வெளியில் எட்டி பார்க்க அவள்தான் படிகளில் ஏறி கொண்டிருந்தாள்.

சுவாதியிடம் திருமண விஷயத்தை எப்போது கூறுவது.சொன்னாலும் திருமணத்துக்கு ஒத்து கொள்வாளா என்ற கவலையோடும்.கடவுளே அவள் ஒத்து கொள்ள வேண்டுமே என்ற வேண்டுதலுடனும் மருத்துவமனை கிளம்பினர்.

ராகவ்விடம் சென்ற சுவாதி “அப்பா சாப்பிடலாம். ரொம்ப நேரம் பசி தாங்கமாட்டீர்கள் வாருங்கள்” என்று அழைத்து செல்ல.சுந்தரி அவள் கைகளில் இருக்கமாக பிடித்திருக்கும் பேரனை பார்த்து கொண்டிருந்தார்.

ராகவ் சாப்பிட்டு முடித்தவுடன் “என்னமா, அம்மா ஆசையைபற்றி இருவரும் என்ன முடிவெடுத்து இருக்குறீர்கள்” என்று பொதுவாக இருவரையும் பார்த்து கேட்க ஒரே நேரத்தில் இருவரும் “முதலில் அவளுக்கு செய்யுங்கள்” என்று கூற.இருவரையும் பார்த்த ராகவ் “இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் திருமணம் யாருக்கு முதலில் என்று கேட்கவில்லை உங்கள் விருப்பம் என்ன என்று மட்டும் கூறுங்கள்” என்றவரை அதற்கு மேல் பேச விடாமல் “முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம்” என்று அமைதியாக்கினாள் சுவாதி.

சுவாதியை பார்த்த ராகவ் “உன்னை நாங்கள் கஷ்டபடுத்துகிறோம் என்று நினைத்தால் சொல்லிவிடம்மா. உன்னை கம்பல் பண்ண எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.நீ அம்மா அப்பா என்று கூப்பிடுவதால் நாங்கள் உன்னிடம் அதிகமாக இடம் எடுத்து கொள்கிறோம் என்று நீ நினைத்தாலும் சொல்லிவிடம்மா” என்று கேட்டார்.

சுவாதி வேகமாக அவர் அருகில் வந்து “என்னப்பா என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்.எனக்கு என்று இருக்கும் உறவு உங்களை தவிர யார் இருக்கிறார்.இப்படி எல்லாம் பேசி என்னை கஷ்டபடுத்தாதீர்கள்” என்று அவர் மடியில் படுத்து அழுது.”என்னை புரிந்து கொள்ளுங்கள் அப்பா எனக்கு என் மகன் மட்டும் போதும் நான் இப்போது சந்தோசமாகதான் இருக்கிறேன்” என்றாள்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது ஆனால் இந்த திருமணம் நடந்தால்தான் நான் கஷ்டபடுவேன் பிளீஸ்பா …… நீங்கள்தான் எப்படியாவது இதை அம்மாவிடம் சொல்லவேண்டும்” என்று கெஞ்ச.

கீதாவோ அப்பா “நடந்தால் இருவருக்கும் திருமணம் நடக்கட்டும் இல்லையென்றால் இருவருக்கும் வேண்டாம். எப்படியாவது அம்மாவை சமாளித்து ஆப்ரேஷனுக்கு ஒத்து கொள்ள வைக்கலாம்” என்று பிடிவாதமாக கூறிவிட்டாள்.

சுவாதி எவ்வளவோ கெஞ்சியும் வள்ளி பிடிவாதம் பிடிக்க வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதித்தாள் சுவாதி.இரவு வீட்டிற்கு வந்த சுவாதிக்கு எவ்வளவு முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் குமுறி அழ ஆரம்பித்தாள்.

சுவாதி திருமணத்துக்கு சம்மதித்த விஷயம் அறிந்து அவளை பார்க்க வந்த அர்ஜூன் அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து “என்னை மன்னித்துவிடு வது இதுதான் நீ அழும் கடைசி அழுகையாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.

இப்போது நீ என்ன காரணத்துக்காக அழுகிறாய் என்று எனக்கு தெரியும்.நிச்சயம் ஒரு நாள் நான் உண்மையை புரிந்து கொண்டது போல் நீயும் புரிந்து கொள்வாய் அதுவரை நான் காத்திருப்பேன்’ என்று தனக்குள் சொல்லிகொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவன் மனதிலும் வீட்டில் அழுது கொண்டிருந்தவளின் மனதிலும் கடந்த காலம் நிழலாடியது.

“சுதி எழுந்திரிக்க போகிறாயா?இல்லையா?மணி என்ன ஆகிவிட்டது பார்.அப்புறம் சீக்கிரம் எழுப்ப வேண்டியதுதானே என்று மல்லுக்கு நின்று லேட்டாகிவிட்டது என்று சாப்பிடாமல் போனால் எனக்கு கெட்ட கோபம் வரும்” என்று கத்தி கொண்டிருந்தார் சுவாதி,மாலதியின் தாய் லட்சுமி.

அம்மாவின் சத்தம் கேட்டும் படுக்கையைவிட்டு எழ மனம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தவள்.மாலதி யின் அம்மா நான் போய்வருகிறேன் என்ற மெல்லிய குரலில் வாரி சுருட்டி கொண்டு எழுந்து வேகமாக வெளியில் வந்தவள் மாலதி பட்டு சேலை கட்டி தயாராக இருப்பதை பார்த்து அவளை முறைக்க.

அவளோ “என்ன மேடம் என் சத்தம் கேட்டு லேட்டாகிவிட்டது என்று பயந்து எழுந்து வந்திருப்பாய் போல இருக்கிறதே” என்று கிண்டல் அடித்தாள்.அதை கண்டு கொள்ளாமல்

“இன்னைக்கு என்ன சீக்கிரம் கிளம்பிவிட்டாய் வெளியில் செல்வதாக என்னிடம் சொல்லியிருந்தால் நானும் கிளம்பியிருப்பேன்.நீ தனியாகவா போக போகிறாய்” என்று அடுக்கடுக்காக பேசியவள் இறுதியில் ஆச்சரியத்தில் முடிக்க.

மாலதியோ அன்பாக அவளை பார்த்து “தனியாக போகவில்லை.என் தோழி ரம்யா இல்லை அவள் வருவதாக சொல்லியிருக்கிறாள்.என் கிளாஸ் மேட் சரண்யாவுக்கு இன்று திருமணம் என்று சொன்னேனே உனக்கு நினைவில்லையா” என்று கேட்க.சுவாதி அப்போது தான் நிம்மதி அடைந்தவளாக சவகாசமாக மூச்சைவிட்டு அங்கிருந்த இரட்டை சோபாவில் அமர்ந்தவள்.

“அது ஒன்னும் இல்ல குட்டிமா நீ எங்கு போனாலும் பாடிகாட் வேலை பார்க்க இந்த லக்ஸ் டார்லிங் என்னையும் சேர்த்து அனுப்புவார்களா,இன்று நீ கிளம்புகிறேன் என்றதும் என் பணிக்கு போட்டியாக யாரும் வந்துவிட்டார்களோ என்று பயந்து போய்விட்டேன்” என்றாள்.

மாலதி குறுகுறுவென அவளை பார்க்க கண்டுபிடித்துவிட்டாளோ என்று பயந்து சுவாதி பார்பதற்குள் வாசலில் ரம்யாவின் குரல் கேட்க “உன் இன்னோரு பாடிகாட் வந்துவிட்டாள் போ” என்று கூற அவள்

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும் வழக்கமாக நான் எங்காவது கூப்பிட்டாள் என்ன பொண்ணு நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி என் காதை ஒரு வழி செய்துவிட்டு அம்மாவிடம் எதற்காவது பர்மிசன் வாங்கி தர வேண்டும் என்ற டீலுடன்தான்வருவாய்.                                                                                                             இன்று வாரண்டியராக கேட்கிறாயே ஏதாவது வேலையாக வேண்டுமா” என்று கிண்டலாக கேட்க.அவளை பார்த்து முறைத்த சுதி |”அக்கா பயப்படுவாளே என்று அக்கறையாக கேட்டேன் பார் என்னை சொல்ல வேண்டும்” என்று முறுக்கி கொண்டவளை பார்த்தவள்.

“சரி சரி சொல்லுமா அம்மாவிடம் எதற்கு பர்மிஷன் கேட்க வேண்டும்” என்று கேட்க.

சுவாதி மாலதியை குறும்பாக பார்த்து “அது ஒன்னும் இல்ல குட்டிமா எங்க காலேஜ்ல பத்து நாள் டூர் டோடல் தமிழ்நாடு போறாங்க நான் போக வேண்டாம் என்று தான் பார்த்தேன் பிரண்ட்ஸ் எல்லாம் கம்ப்பல் பண்றாங்க.                                                                                                                                                       கடைசி வருஷம் நீ வந்தாதான் நல்ல இருக்கும் என்று.இன்று தான் பெயர் கொடுக்க கடைசி நாள் நைட் சொல்லலாம் என்று பார்த்தேன் நீ தலை வலி  என்று சீக்கிரம் படுத்துவிட்டாய்.காலையில் சொல்லிக்கலாம் என்று பார்த்தால் நீ கிளம்பிவிட்டாய்” என்றாள்.

சற்று நேரம் யோசித்த மாலதி.”ஓ கே சுதி நீ டூர் போக ஓகே சொல்லிடு நா அம்மாகிட்ட ஈவ்னிங் வந்து பேசறேன்” என்றாள்.                                                                                                                          சுவாதியை குறும்பாக பார்த்து “இன்று நான் காலேஜ் வரமாட்டேன் யாருக்கிட்டயும் வம்புக்கு போக கூடாது” என்று கூற.அவளை முறைத்த சுதி

“யானை வழுக்கி விழுந்தால் எறும்பு கூட கிண்டல் பண்ணுமாம் அது போல் இருக்கிறது நீ என்னை கிண்டல் செய்வது இருந்தாலும் காலேஜ் போகவும் உனக்கும் கொஞ்சம் பேச வருகிறதே” என்று மாலதியை சுவாதி கிண்டல் அடிக்க.

அவளை முறைத்த மாலதி “என்னமோ இதற்கு முன் நான் பேசாமல் இருந்தது போலவும் காலேஜ் போன பிறகு பேச ஆரம்பித்தது போலவும் நீ சொல்கிறாய்” என்று மாலதி வருந்த.

“ம்…………உடனே பீல் பண்ண ஆரம்பித்துவிட்டாயா உன்னை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். இதற்கு போய் பீல் செய்யலாமா.உன் பிரண்டு ஒருத்தி வந்தாளே அவள் வந்த சத்தம் தான் கேட்டது அதற்கு பிறகு என்ன ஆனாள். வா போய் பார்க்கலாம்” என்று கூறி வெளியில் வந்தவர்கள் பார்த்த காட்சியில் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தார்கள்.                  அவர்கள் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதன் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவளை பார்த்த சுவாதி                                                                                                                                                       குட்டிமா நல்லா யோசிச்சுக்கோ நீ இந்த சாப்பாட்டு ராமிகூட தான் போக போகிறாயா?பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நானே கிளம்பி வருகிறேன்.

அம்மா கொண்டு வந்து வைத்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டில் மீதி இருப்பது இந்த இரண்டுதான்.உன் முடிவை மாற்றி கொள்ளுங்கள் கோபால் மாற்றி கொள்ளுங்கள் என்று சரோஜா தேவி போல் பேசியவளை முதுகில் அடித்த மாலதி அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீ போய் கிளம்பும் வழியை பார் என்றாள் அதட்டலாக.                                                                                                                                ம்… உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளமாட்டயே நாம் இவ்வளவு பேசறமே உன் தோழி ஏதாவது பேசுகிறாளா பார்.அந்த இரண்டு பிஸ்கட் காலியான பிறகு குதிப்பாள்.வா மாலு லேட்டாகிவிட்டது எப்போதுதான் நீ சீக்கிரம் கிளம்புவாயோ என்று இவளை திருத்தவே முடியாது என்று பேசி கொண்டு இருந்தார்கள்.                                                                                                                                           ரம்யா டீ குடித்து முடித்தை பார்த்த சுவாதி ஸ்டார்ட் மியூசிக் என்று மாலதிக்கு மட்டும் கேட்கும்படி கூற பின்னே வந்ததில் இருந்து அவளை கிண்டல் செய்து கொண்டு இருப்பது இவளுக்கு தெரிந்தது மாலதியை தனியாக வர சொல்லிவிட்டு சென்று விடுவாளே அந்த பயம்தான்.          மாலதியை பார்த்த ரம்யா ஏன்டீ இப்படி லேட்டாக கிளம்புகிறாய்.நேற்று எத்தனை முறை சொன்னேன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சுவாதி கூறியதை அச்சு பிறழாமல் கூறிய தோழியை பார்த்த மாலதிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிப்பு வர.                                                               ரம்யா அவளை வினோதமாக பார்த்து நான் உன்னை திட்டி கொண்டு இருக்கிறேன்.நீ என்னவென்றால் சிரிக்கிறாய் லூசா டி நீ வா போகலாம் என்று கூற.அவர்களை தடுத்த சுவாதி,இங்க பாரு ரம்யா உன்ன நம்பிதான் குட்டிமாவை அனுப்பறேன்.அங்க போனவுடன் நீ பாட்டுக்கு இவளை தனியாக விட்டு விட்டு சாப்பாட்டு ரூம் நோக்கி சென்றாய் என்ற தகவல் வந்தது அடுத்த ஒரு வாரத்துக்கு நீ கொண்டுவரும் டிபன் பாக்ஸ் காணாமல் போய்விடும் ஜாக்கிரதை.                   கும்பலாக இருந்தால் அங்கு இவளை தனியாகவிடாதே.கை கழுவ போகும் போதும் நீ கூடவே போ.நம்ம மாலு சொல்லமாட்டாள் என்று அஜாக்கரதையாக இருக்காதே நான் வைத்திருக்கும் ஸ்பை உங்களை பார்த்து எனக்கு நியூஸ் அனுப்பி கொண்டே இருப்பார்கள் என்று மிரட்ட.                             அவளின் மிரட்டலில் நிஜமாகவே பயந்துதான் போனால் ரம்யா பின்னே ஒரு வார சாப்பாடு ஆச்சே.இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் என்னடி ரொம்ப பேசற என் தோழியை பத்திரமாக கூட்டி போக எனக்கு தெரியாதா?அவள்தான் உனக்கு அக்கா இங்கு நடப்பதை பார்த்தால் நீ தான் அவளுக்கு அக்கா போல் இருக்கிறது.                                                                                                      நான் பத்திரமாக கூட்டி போய் வருகிறேன் என்றவளை பார்த்து சிரித்த சுவாதி கோபித்து கொள்ளாதே குண்டூஸ் அவளின் பயந்த சுபாவம் உனக்கு தெரிந்ததுதானே அதான் நான் அக்காவாகிவிட்டேன் என்றாள்.                                                                                                                                             ரம்யாவும் இவர்கள் பக்கத்து வீடுதான் ஆனால் சுவாதி எப்போதும் கீதா வீட்டில் இருப்பதால் மாலதி அவளுக்கு தோழியானாள்.அது மட்டும் இல்லாமல் இருவரும் பி.ஏ ஹிஸ்டரி எடுத்ததால் இவர்கள் இருவரும் நல்ல தோழியாக இருந்தனர்.

ரம்யா கொஞ்சம் குண்டாக இருப்பாள்.வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவதால்.அது மட்டும் இல்லாமல் அவளின் அம்மா அப்பாவிற்கு வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் பிறகு பிறந்தவள்.அதனால் அவர்கள் வீட்டில் அவளுக்கு செல்லம் அதிகம் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை.அதனால் எப்போதும் சுவாதி அவளை குண்டூஸ் என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவாள்.ரம்யாவிற்க்கு அப்படி கூப்பிட்டாள் பிடிக்காது என்று தெரிந்தும்.                                  அப்புறம் குட்டிமா போறதுதான் போகிறாய் உன்னுடைய இந்த பாச தங்கைக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பார்த்துவிட்டு வா என்று கூறி கண்ணடிக்க.அவளின் காதை திருகிய மாலு

“ஏன்டி நான் என் பிரண்டு கல்யாணத்துக்கு போகிறேனா,இல்லை உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேனா,போ போய் கிளம்பும் வழியை பார் லேட்டாகி விட்டது நானும் கிளம்புகிறேன்” என்று சொல்லி சென்ற தன் அக்காவை பார்த்து கொண்டிருந்தவளின் தலையில் வலிக்காமல் கொட்டினார் லட்சுமி.

“மணி என்ன என்று மேடம் பார்த்தீர்களா” என்று கிண்டலாக கேட்க மணியை பார்த்த சுவாதி அதிர்ந்துதான் போனாள்.பின்னே 8.40 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும் மணி இப்போதே 8.10 ஆகிவிட்டதே.லட்சுமி திட்ட ஆரம்பிக்கும் முன்

“என்ன லட்சு நீ கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கிறதா. நேரம் ஆகிவிட்டதே மகள் காலேஜ் போக வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.நான் ஒரு ஆளே எவ்வளவு தான் பார்ப்பது” என்று கூறி அம்மா எதுவும் சொல்லும் முன் பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டவள் அப்போதும் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல்,நின்று வாயை பார்க்காமல் மதிய சாப்பாடு ரெடி பண்ணு லட்சு என்று சத்தமிட.

இவ்வளவு நேரம் வெட்டி அரட்டை அடித்துவிட்டு இப்போது நான் வெட்டி அரட்டை அடிக்குறேனா என்று மகளின் குறும்பை மனதில் ரசித்தாலும் வெளியில் வா உன்னை பேசி கொள்கிறேன் என்று கோபம் போல் காட்டி கிச்சனுக்குள் சென்றவர்.இப்படி வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது பிறகு நேரமாகி விட்டது என்று சாப்பிடாமல் ஓடுவது இதுவே இவளுக்கு வேலை என்று சலிப்பாக நினைத்தார்.அவளின் அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து ஒழிய வைத்தார்.

லட்சுமி நினைத்தது போலே கிளம்பி வந்த சுவாதி நேரமாகி விட்டதால் சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல.அவள் சொல்வதை காதில் வாங்காமல் தட்டில் மூன்று இட்லி வைத்தார் லட்சுமி.தனது பேகில் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா என்று பார்த்த சுவாதி ஒரு அசைண்மண்ட் காணமல் அதை தேட ஆரம்பித்தாள்.

“அய்யோ சுதி எங்க டி வச்ச இன்னைக்கு அந்த அசைண்மண்ட் சப்மிட் பண்ணல அந்த கொரில்லா உன்ன ஒரு வழி பண்ணிடும்.தேடு டி தேடு என்று கூறி கொண்டே தேட ஆரம்பிக்க” அவளின் பின்னால் தட்டை எடுத்து கொண்டு அவளுக்கு ஊட்டும் வேலையை பார்த்தார் லட்சுமி.    மூன்று இட்லிகளை சாப்பிட்ட பின்பு லட்சுமி எடுத்து வைத்த அவளின் அசைண்மன்ட்டை காட்டி “இதுவா பார்.மாலு உன்னிடம் கொடுக்க சொன்னா” என்று நீட்ட,

அதை வாங்கி பார்த்தவள் அம்மாவை முறைத்து “இவ்வளவு நேரம் இதைதான் தேடி கொண்டிருந்தேன் முதலிலேயே சொல்லமாட்டீர்களா” என்று கூறி முறைத்தாள்.ஆனால் லட்சுமி எதுவும் நடக்காதது போல் பார்த்து “அதான் இப்போது கொடுத்துவிட்டேனே” என்றவர். “இப்போதாவது பஸ்க்கு கிளம்புவாயா இல்லை என்முகத்தையே பார்த்து கொண்டு இருக்க போகிறாயா” என்று கூலாக கேட்க.

“நேரம் பார்த்து காலை வாருகிறாய் லட்சு வர வர உனக்கு லொள்ளு அதிகமாகிவிட்டது… வேறு ஒன்றும் இல்லை.உன்னை ஈவ்னிங் வந்து பார்த்து கொள்கிறேன்” என்று சொல்லி வெளியில் வந்தவள் தெருமுனையில் காலேஜ் பஸ்ஸில் எல்லோரும் ஏறி கொண்டிருப்பதை பார்த்து வேகமாக ஓடி போய் பஸ்ஸில் அப்பாடா…… என்று அமர்ந்தவளை முறைத்தாள் அவளின் இன்னொரு தோழி அஞ்சு.

அவள் முறைப்பதை பார்த்த சுவாதி “என்னடி ஏன் என்னை இப்படி பார்க்கிறாய் நான் என்ன உன் லவ்வர் சந்துரு மாதிரியா இருக்கிறேன்.அவனை பார்த்துவிடும் ரொமான்டிக் லுக்கை என்னை பார்த்து விடுகிறாய்” என்று கேட்டாள்.

“ஏன்டி நான் பார்த்ததுக்கு பெயர் ரொமன்டிக் லுக்கா?லேட்டாக ஓடி வந்து பஸ்ஸை பிடித்துவிட்டு உனக்கு நக்கல் வேறு.எதற்காகடி உனக்கு டெய்லி லேட்டாகிறது.நீ எழுந்து ஒரு வேலையும் செய்வதில்லை.உன் புக்கை கூட மாலதிதான் எடுத்து வைப்பாள்.சாப்பாடு ஒரு ஆள் பின்னாடியே வந்து ஊட்டுகிறார்கள்” என்றவளை சுவாதி ஆச்சரியமாக பார்க்க,

“என்ன பார்வை நாங்கெல்லாம் யாரு ஒற்றர் படை மூலம் எனக்கு நியூஸ் வந்துவிட்டது” என்று கெத்தாக கூறி சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டாள்.

அவளை பார்த்து சிரித்த சுதி “ஏண்டி தேவை இல்லாததுக்கு எல்லாம் வேலை செய்யும் உன் ஒற்றர் படை உனக்கு தேவையான விஷயத்தை சொல்லாத” என்று கேட்டாள்.

அஞ்சு ஒன்றும் புரியாமல் விழித்தாள். “என்ன புரியவில்லையா உனக்கு தகவல் கொடுத்த உன் லவ்வர் என் எதிர் வீட்டு சந்துருக்கு அத்தை மகள் என்று ஒருத்தி வந்து ஒரு வாரமாக வீட்டில் தங்கியிருக்கிறாள்.அது மட்டும் இல்லாமல் நம்ம காலேஜ்ஜில் தான் அவளுக்கு அட்மிஷன் போட்டு இருக்கிறார்கள்” என்று கூறியவள் எரிகிற நெருப்பில் என்னை விடுவது போல் “அவள் பார்க்க வேற அழகா சமந்தாமாறியே இருக்கிறாள்” என்று கூட இரண்டு பிட்டு சேர்த்து போட்டாள்.

“அவளை பற்றி கேட்பதை விட்டுவிட்டு நான் என்ன செய்கிறேன் என்று ரன்னிங் கமெண்டரி கேட்டு கொண்டு இருந்திருக்கிறாய்” என்று சொன்னதுதான் தாமதம் அஞ்சுவின் முகம் கோபத்தில் தக்காளி பழம் போல் சிவந்து போனது.அவள் கோபமாக தனக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த சந்துருவை திரும்பி பார்க்க,இவ்வளவு நேரமும் இவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த சந்துரு அடிப்பாவி போட்டு கொடுத்துவிட்டாயே என்று கூறி ஓடி போய் கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டான்.

அஞ்சு அவனை பார்த்து முறைக்க, “நான் சொன்னது கரெக்ட்டா” என்று கேட்டாள் சுதி. “என்ன கரெக்ட்” என்று கேட்ட தோழியை குறும்பாக பார்த்து “உன்னுடைய ரொமாண்டிக் லுக்” என்றாள் சீரியசாக,அவளது முகம் சீரியசாக இருந்தாலும் அவளின் கண்கள் சிரித்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக காலேஜ் வந்தவளின் எதிரே வந்த சந்துரு “என்ன நாரதரே வேலை முடிந்ததா” என்று கேட்க.

“என் மீது தப்பில்லை என்னை வெறுப்பேத்தும் வேலையை நீ செய்தாய் உன்னை வெறுப்பேத்தும் வேலையை நான் செய்தேன்” என்று கூலாக கூற,

“விளையாடாதே சுதி அவள் என்னுடன் பேசமாட்டிக்கிறாள்” என்று வருந்த

“என்னைபற்றி நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் இனி ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கமாட்டேன் என்று சொல் மேற் கொண்டு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்” என்று டீல் பேசினாள்.வேறு வழியின்றி ஒத்து கொண்டவன்.என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அவள் சொன்ன ஐடியாவை கேட்டு “சூப்பர் என்று சொல்லி அதன்படியே செய்கிறேன் மகாராணி.இப்போது எனக்கு உத்தரவு கொடுங்கள்” என்று கிண்டலாக கூற அவளும் சிரித்து கொண்டே தலையாட்டினாள் .                                                                    ஒருவழியாக அஞ்சுவை சமாதானம் செய்த சந்துரு கட்டை விரலை உயர்த்தி வெற்றி சிம்பலை சுதிக்கு காட்டிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி சென்றான்.அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது மாலதியின் சந்தோஷமான முகமே.

மாலதியின் முகத்தை பார்த்தே ஏதோ சந்தோசமான விஷயம் என்று அறிந்த சுதி அவளிடம் வழக்கம் போல் வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

“என்ன குட்டிமா முகத்தில் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரிகிறது” என்று கேட்டாள்.

மாலதி சிரித்து கொண்டே “உனக்கு இரண்டு சந்தோசமான விஷயம் என்று கூறினாள்.உடனே சுதி என்ன கல்யாணத்திற்கு போன இடத்தில் உனக்கு கல்யாண மாப்பிளையை பார்த்துவிட்டாயா என்று கிண்டலாக கேட்க.

“உனக்கு எல்லாம் கிண்டல்தான் என்னை கேலி செய்தாய் இல்லயா உனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் சொல்வேன் மற்றொன்றை சொல்லமாட்டேன்” என்று சொன்னாள்.

அவள் சொன்ன நேரம் தேவதைகள் சுற்றிவரும் நேரம் போல அவர்கள் ததாஸ்த்து சொன்னதாலோ என்னவோ அந்த மற்றொரு விஷயத்தை மாலதியால் சுதிக்கு சொல்லமுடியாமல் போனது.

“சரி மேடம் ரொம்ப பண்ணாதிங்க என்ன அந்த இரண்டு விஷயம்” என்று கேட்க மாலதி பிடிவாதமாக மற்றொரு விஷயத்தை சொல்ல மறுத்தவள்.ஒரு விஷயத்தை மட்டும் சொன்னால்.அது என்னவென்றால் சுவாதி டூர் செல்ல லட்சுமி ஓ.கே சொன்னது தான்.

சரி எப்படி இருந்தாலும் அந்த இன்னொரு விஷயத்தை என்னிடம் சொல்ல வருவாய்தானே அப்போது பார்த்து கொள்கிறேன் என்று அவளும் அதோடு விட்டுவிட்டாள்.

நாட்கள் அதுபோக்கில் நகர சுதி டூர் செல்லும் நாளும் வந்தது.அம்மாவின் சிலபல அட்வைஸ்களுக்கு பிறகும் மாலதியின் பத்திரம் பத்திரம் என்ற ஜெபத்தை கேட்ட பிறகும் பெங்களுருக்கு பஸ் ஏறினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள். கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்த நகுலன் விரைவாக கிளம்பி கீழே வந்தான்.அங்கு அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த சுந்தரி மகனை பார்த்ததும் திட்ட ஆரம்பித்தார்.                                “அம்மா பிளீஸ் ஆரம்பிக்காதீங்க.எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்டிங்கனா சாப்பிட்டு போவேன் இல்லை இப்படியே

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 15

சோர்ந்த நடையில் உள்ளே வந்த தோழியை பார்த்த சுவாதி “என்னடி என்னாச்சு?ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா?”என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க. தோழி தன்னை எளிதாக கண்டு கொள்வாள் இவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவுதான் என்று நினைத்து