Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28

28 – மனதை மாற்றிவிட்டாய்

மறுநாள் அனைவரும் நண்பகலில் கிளம்ப தயாராக 2 மணி நேர பயணம் தான் என்பதால் ஆதி, சுந்தர் இருவருமே காரை ஒட்டினர். முதலில் சோபனாவும், ஈஸ்வரியும் ஆதியுடன் வண்டியில் வர பிளான் செய்தனர். சுபி, அனு தங்களுடன் வருமாறு திவியை அழைக்க, அம்மு, அர்ஜுன் தங்களுடன் வருமாறு திவியை அழைக்க அந்த வண்டியில் 4 அல்லது 5 பேரு மட்டுமே உக்கார இயலும் என்பதால் திவியுடன் வர விருப்பமில்லாமல் சுந்தருடன் வர ஒப்புக்கொண்டனர். சுந்தருடன் ஈஸ்வரி, சோபனா, மதி, சேகர், அனு, சுபி என அனைவரும் சுமோவில் வந்தனர். திவியுடன் செல்லலாம் என நினைத்த சுந்தருக்கு, ஆதியுடன் வர நினைத்த சோபனாவிற்கும் இது பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தும் ஊரில் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாக கிளம்பினர்.

அபிக்கு நிறை மாதம் என்பதால் அதிக அலைச்சல் வேண்டாமென முடிந்தால் அவர்கள் திருவிழா அன்று வருவதாக கூறிவிட்டனர்.

அர்ஜுனும், அம்முவும் தனி உலகில் இருக்க பின்னால் அம்முவுடன் அமர போன திவியை தடுத்து முன்னால் தன் அருகில் அமர்த்திக்கொண்டான் ஆதி. கேட்டதற்கு அவங்க கொஞ்சம் ஜாலியா பேசிட்டு வரட்டும். என்றுவிட்டான். திவியும் “ஓஒ. …ஓகே ஓகே..எனக்கு தோணவே இல்ல.” என முன்னால் வந்து அமர்ந்துகொண்டாள். ஆதியிடம் வந்த அர்ஜுன் “நாங்க ஜாலியா பேசவா? இல்லை நீங்க ஜாலியா பேசவா டா?” என வினவ ஆதி “இரண்டும் தான் டா மச்சான்.” என்று சிரித்துவிட்டு வண்டியை கிளப்பினான்.

திவி, அம்மு, அர்ஜுன், ஆதி அனைவரிடமும் ஏதேனும் பேச, கேள்வி கேட்க என இம்சை செய்துகொண்டிருந்தாள். இல்லையென்றால் சாக்லேட், சிப்ஸ் என சாப்பிட்டு கொண்டு இருந்தாள். மொத்தத்தில் அவள் வாய்க்கு வேலை இருந்துகொண்டே இருந்தது. ஆதிக்கு பயணம் அந்த இயற்கையை அமைதியாக ரசிக்க பிடிக்கும். இப்பொது மனம் கவர்ந்தவள் அருகில் வேறு இப்படி இம்சிக்க அவனால் சாதாரணமாக அவள் பேச்சை கேட்டுக்கொண்டு மட்டும் வரமுடியவில்லை. அதனால் அவன் திவியை அதட்டினாலும் ஒரு நிமிடம் அர்ஜுன் அம்முவை தொந்தரவு பண்ணாமல் வந்தாலும் மறுபடியும் ஏதோ ஞாபகம் வர என பேசவிடாமல் இவள் பேச, திடீரனே கேள்வி கேட்க, வம்பிழுக்க என இருந்தவளை பொறுமை இழந்த ஆதி “எவ்ளோ தான் டி பேசுவ… பேசாம வரவேமாடியா? ”

திவி “பேசத்தானே வாய்?”

ஆதி “அதுல அஃபக்ட் ஆகுறது எங்க காது. இங்க பாரு ஒழுங்கா 30 நிமிஷம் பேசாம வர. இல்ல ஸ்னாக்ஸை பிடிங்கி வெச்சுட்டு இறக்கி விட்ருவேன்.” என

அவனை முறைத்துக்கொண்டே சன்னல் புறம் திரும்பியவள் அமைதியாக இருக்க 10 நிமிடம் கூட இருக்காது… அனைவரும் அமைதியாக இருக்க அம்மு வாய் விட்டு கேட்டுவிட்டாள் ஆதிக்கே “உண்மையாவே இவ பேசாம வராளா? என சந்தேகம் எழ திரும்பி பார்க்க அவனது தியா நித்ராதேவியுடன் உரையாட சென்றுவிட்டாள். இதை கண்ட அவன் சிரித்தே விட்டான். அம்மு, அர்ஜுன் இருவரும் “அமைதியா இருக்க சொன்னதுக்கு இப்படி தூங்கிட்டாளே மச்சான்”, “உங்கள நினச்சா ரொம்ப கவலையா இருக்கு அண்ணா, எப்போவும் அவ இருக்கற இடம் சத்தம் இருந்திட்டே இருக்கனும். இல்லாட்டி இப்டி தான். நீங்க அவ பேசுறத கேட்டு தான் ஆகணும்.” என கிண்டல் பண்ணி சிரிக்க அவனுக்குமே “இவளை என்ன செய்வது” என நினைத்து சிரித்துக்கொண்டே அவளுக்கு சீட் பெல்ட் மாட்டிவிட, சரியாக சீட்டை பின்னால் சாய்த்துவிட்டு பின் காரை எடுத்தான். இதை சொல்லியும் அவர்கள் கிண்டல் செய்தனர். அவன் கூலாக என் பொண்டாட்டிக்கு நான் செய்றேன் என கூற அவர்களும் மகிழ்வுடன் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டனர்.

ஒருவழியாக ஊருக்குள் நுழைய அவளை எழுப்பிய ஆதி, வழியெங்கும் வயல், தோட்டம் என இருக்க இவள் மீண்டும் குஷியாகி அங்க பாரு மாமரம், வயல் அழகா இருக்கு. ‘சில்லுனு இருக்கு, செம கிரீனிஷ்ல என ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சியை கொட்டிக்கொண்டே வந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் அனைவரையும் மாணிக்கம்- செல்லத்தாயி, பரமேஸ்வரன் எல்லோரும் இன்முகமாக வரவேற்றனர். முதலில் சந்திப்பதால் திவியை அறிமுகப்படுத்த, பெரியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய திவி அவர்களிடத்தும் தோட்டம், வயல், மாடு, ஆடு பராமரிப்பு என அவர்களுக்கு பரிச்சயமான விஷயம் பற்றி ஆர்வமாக கேட்க அவர்களும் நன்றாக பேசினர்.

மதிய உணர்விற்கு பிறகு சிறிது நேரம் அனைவரும் களைப்பாற வண்டியிலேயே தூங்கிவிட்டதாலோ என்னவோ திவி அனைவரையும் கேள்வி கேட்டு இம்சிக்க அவளை அடக்க முயற்சிக்க, அந்த வீட்டின் நீண்ட கால விசுவாசி ராமையா “அட புள்ளைய ஏன் எல்லாரும் அதட்டிருங்க?” என கேட்க அவளும் தனக்கு சப்போர்ட்க்கு ஆள் கிடைத்துவிட்டதென “பாருங்க ராமு தாத்தா, தெரிஞ்சுக்கத்தானே கேட்டேன்.. எல்லாரும் என்ன திட்றாங்க. ” என குற்றப்பத்திரிக்கை வாசிக்க அவர் “என்ன நீங்க ராமைய்யானே கூப்டு கண்ணு” என்றவரை அவள் முகம் சுருக்கி “நான் உங்கள தாத்தான்னு கூப்பிடக்கூடாதா? ” என பாவமாக கேட்க “ஐயோ, அப்டியெல்லம் இல்லை”

“அப்போ, உங்களுக்கு நான் அப்டி கூப்பிடறது பிடிக்கலையா? ”

“உண்மையாவே அப்படி கூப்பிட்டு கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றதும் அவள் சிரித்துவிட்டு

“அப்டினா சரி, நான் உங்கள அப்டியே கூப்பிடறேன். எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு. நீங்களும் உங்க பேத்தியை எப்படி நடத்துவீங்களோ அப்டி இருங்க. நீங்க வாங்கனு எல்லாம் சொல்லாதீங்க தாத்தா. அப்டின்னா தான் நான் உங்ககிட்ட எதுன்னாலும் தயங்காம கேட்பேன். ” என்றாள்.

அவரும் தன்னை அவள் தாத்தா என அழைத்ததில் மகிழ்ந்து “நீ வா கண்ணு. உனக்கு என்ன சந்தேகமோ என்கிட்ட கேளு நான் உனக்கு சொல்லித்தரேன் தாயி” என்றதும் அவள் இவர்களை விடுத்து “அப்போ மொதல்ல மாட்டுகிட்ட போகலாம். எனக்கு கன்னு குட்டி பாக்கணும். ஆனா இப்போதா குட்டி போட்டதால மாடு முட்டும்னு இவங்க எல்லாரு சொல்ராங்க. நீங்களும் வாங்க கூட…அப்புறம் ஆடு, அந்த பைரவன(நாய்) பிரண்ட் ஆக்கிவிடுங்களேன். அவனையும் கூப்பிட்டு தோட்டத்துக்கு போகலாம். ” என்று திரும்பி “நீங்க யாரும் வேண்டாம். நான் ராமு தாத்தாகிட்ட கேட்டுப்பேன்.” என்றுவிட்டு அவள் வெளியே ஓட அங்கு வந்த ஆதி “ராமைய்யா, வேண்டாம் நீங்க அதிகம் பேசவேமாட்டிங்க, அவ கேள்வி கேட்டே உங்கள ரொம்ப டையார்டு ஆக்கிடுவா. நீங்க திரும்ப சாப்பிடவேண்டியது வரும்.” என கூற, அனைவரும் சிரிக்க

ராமைய்யாவோ “அட போங்க தம்பி, புள்ள தெரியாம அதுவும் தெரிஞ்சுக்க ஆர்வமா கேக்குது. இந்த காலத்துல எத்தனை பேரு தோட்ட, தொரவம், தொழுவம்னு அத பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க. அப்டியே கேள்வி கேட்டாலும் தான் என்ன, சொல்ல தானே நான் இருக்கேன்.” என கூறும்போதே “ராமு தாத்தா ” என்ற அழைப்பை கேட்டு இவரும் ஓடாத குறையாக சென்று அவளுக்கு விளக்கம் கொடுத்துகொண்டிருந்தார்.

மாணிக்கம் “ஆதி, ராமையாவுக்கு இத பத்தி சொல்றது பேசறதுனாலே ரொம்ப புடிக்கும். அதுவும் திவி இப்போ இவனை தாத்தான்னு வேற சொல்லிட்டா. இவன் அதுக்காகவே எதுனாலும் செய்வான். நீ என்ன சொன்னாலும் இவன் காதுல விழாது.” என கூறி சிரிக்க

செல்லத்தாயி “உண்மைதாங்க, ராமைய்யா இங்க சந்திராவுக்கு கல்யாணம் ஆகும்போது வந்தான். இங்கேயே வேலை செஞ்சு எல்லாத்தையும் பாத்து, புள்ள பொறந்ததும் பொண்டாட்டி இறந்துட்டா. ஆனா நல்லபடியா புள்ளைய வளத்தி கல்யாணம் பண்ணி வெச்சுட்டு அவங்களுக்கு பொண்ணு பொறந்ததும் தன் மனைவி தான் தன் மகள் வயிற்றில் வந்து பிறந்திருக்கிறாள் என அவன் பூரிப்பு கொள்ள இவர்களை காண வந்துவிட்டு குழந்தையோட திரும்பியவர்கள் விபத்தில் மொத்தமாக உயிரிழந்தனர், அதுக்கப்புறம் ராமையாவோட சிரிப்பே மொத்தமா போயிடிச்சு. உங்க எல்லாரையும் பாத்தாதான் சந்தோசம் படுவான். ஆனா எவ்வளோ தான் நீங்க எல்லாரும் நல்லா பேசுனாலும், உங்களுக்கு வேணும்கிறத பாத்து பாத்து செய்வான். ஆனா முதலாளி வீட்டு புள்ளைங்கன்னு எப்போவும் ஒரு மரியாதை கலந்த ஒதுக்கம் இருக்கும்… நாங்க என்னதா சொன்னாலும் அத மாத்திக்க மாட்டான். நாங்களும் விட்டுட்டோம்.

இன்னைக்கு திவி அவனை உறவுமுறையோட தாத்தான்னு சொன்னதும் அவன் முகத்துல ஒரு சந்தோசம் பாக்கணுமே, வேண்டாம்னு அவன் சும்மா சொன்னாலும், அவ அதட்டி உருட்டி அப்டித்தான் கூப்பிடுவேன்னு சொல்லிட்டு உரிமையா இருக்கறத கேட்டதும் அவன் பழைய ராமையாவ பாத்தமாதிரி இருக்கு. அங்க பாருங்களேன். ராமையாவை பழைய மாதிரி பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. ஒருவேளை நம்ம பேரபசங்க யாராவது அவனை தாத்தான்னு உரிமையா கூப்பிட்டு இருந்தா அவனும் முன்ன மாதிரி மாறிருப்பானோ? ” என சந்தேகித்தவரை பார்த்த மாணிக்கம் மெலிதாக சிரித்துவிட்டு “இருக்கலாம்.. ஆனாலும் அது அவங்கள கூப்ட்டிருந்தாதான். நாம அவங்ககிட்ட சொல்லி கூப்பிடறாங்கன்னு அவனுக்கு தெரிஞ்சா அந்த முழு சந்தோசம் அவனுக்கு இருக்காது..” என்றுவிட்டு சென்றுவிட்டார். செல்லத்தாயும் பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டார்.

சுபி, அனு “ஆமாம்ல நமக்கேன் தோணாம போச்சு..எப்டியோ திவி வந்து ராமையாவையும் ஜாலி ஆக்கிட்டா. ..” என்றுவிட்டு நகர்ந்தனர்.

ஆதி, திவி ராமையாவுடன் பேசுவதை அவர் சிரிப்பதை பார்த்ததும் மனம் நிறைந்தது. தன்னவள் எத்தனை பாசமானவள், பார்ப்போர் அனைவர்க்கும் பிடிக்க செய்யும் குணம். என்ன வாலு. என்று நினைத்துவிட்டு உள்ளே சென்றான்.

இரவு உணவிற்கு உதவுகிறேன் என்ற பெயரில் வீட்டை இரண்டாக்கிக்கொண்டு இருந்தாள். செல்லத்தாயும், மதியும் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் திவி, அனு, அம்மு, சுபி தான் சமைப்போம் என உள்ளே நுழைந்து போருக்கு தயாராகினர். இது வேணும், அது வேணும், எப்படி செய்யணும், என்ன போடணும்னு மற்றவர்களை இம்சை பண்ணவும் மறக்கவில்லை. வேண்டாம் தாங்களே செய்கிறோம் என்று கூறிய பெரியவர்களை திவி “அப்போ நாங்க நல்லா சமைக்க மாட்டோமா? எங்களை நீங்களே நம்பாட்டி வேற யாரு நம்புவா. அம்முக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்ல, இங்க கத்துக்காம அங்க போயி முழிச்சிட்டு நின்னா பாட்டி பேரு என்னாகுறது? ” என்றவளிடம்

மதி “எப்படியும் முடிவு பண்ணிட்ட, சரி போங்க” என்றார்.

அனைவரும் இரவு உணவு சாப்பிட முதலில் ஆதி, அர்ஜுன், சுந்தர் கலாய்த்து ஆரம்பிக்க பின் குறை நிறைகளை சொல்லி ரொம்ப மோசமில்லை. அனைத்தும் சூப்பர் என பேர் வாங்கிவிட வெளியே சென்று விட்டு வந்த சோபனா சுபியை அழைத்து உணவை ரூம்க்கு கொண்டு வர சொல்லிவிட்டு சென்றுவிட ஈஸ்வரி இறுதியாக சாப்பிட வர திவி சமைத்தால் என்பதை அறிந்தவள் “உப்பு குறைவு, காரம் குறைவு, ஆறி போயிடிச்சு ” என வரிசையாக குறை கூற திவி “இந்தாங்க உப்பு போட்டுக்கோங்க, காரம் கம்மியா சாப்பிடுங்க ஆண்ட்டி இல்லாட்டி காது அடைக்கும், கோபம் வரும், பிபி எகுறும். சோ இந்த காரம் உங்களுக்கு ஓகே தான். ஆறிடுச்சுனா என்ன பண்றது சாப்பிட சீக்கிரம் வரணும். இங்க என்ன ஹோட்டல வெச்சு நடத்துறோம், உடனே உடனே கேட்டதை செஞ்சு குடுக்க, வீட்ல சாப்பிடும் போது எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடணும். அதான் முன்னாடியே செஞ்சு வெச்சுட்டோம். வேணும்னா சூடு பண்ணி சாப்பிட்டுக்கோங்க ” என்று அமைதியாக கூற அவள் கோபமுடன் வேகமாக சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டாள்.

இதை கவனியாமல் கவனித்து கொண்டிருந்த பெரியவர்கள் அவளை அழைத்து தன் அருகில் அமர்த்திக்கொண்டு “ஏன் திவி கண்ணு, எங்ககிட்ட கேட்ட..சாப்பாட்ல என்ன கூட குறைய இருக்குனு சொல்ல சொன்ன. நாங்களும் சொன்னோம். கேட்டுகிட்டே, அடுத்த தடவ மாத்திக்கறேன்னு சொன்ன. ஈஸ்வரியும் அதேதான சொன்னா, ஏன் அவகிட்ட அப்படி பேசுற?” என்று கேட்டவரிடம்

திவி அமைதியாக தலை குனிந்து “பாட்டி, நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? ” என்றுவிட்டு அவர்கள் இல்லை என்பது போல தலையசைக்க இவள் தொடர்ந்தாள்.

“நீங்க எல்லாரும் நாங்க பழகிக்கணும், அடுத்து மாத்திக்கிட்டு நல்ல சமைக்கணும்னு நினைச்சு சொன்னிங்க. ஆனா ஈஸ்வரி ஆண்ட்டி எப்படியும் குறை சொல்லணும்னு தான் முடிவு பண்ணி சொல்லறாங்க. நான் கண்டுக்க மாட்டேன். ஆனா அம்மு கொஞ்சம் குறைய திட்ற மாதிரி சொன்னாலே பாவம் மூஞ்ச தூக்கிவெச்சுப்பா, மனசு சங்கடப்படுவா. அடுத்து அது நமக்கு வராதுன்னு முடிவு பண்ணிட்டு அந்த பக்கமே போகமாட்டா. சுபியும் கிட்டத்தட்ட அந்த மாதிரி தான். இந்தமாதிரி நம்மள கஷ்டப்படுத்தத்தான் பேசுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டா அதுக்கு அவ்வளாவா முக்கியத்துவம் குடுக்கக்கூடாதுனு அவங்களுக்கு புரியமாட்டேங்கிதே..அதான் அப்படி பேசுனேன். இதே பதிலை ஈஸ்வரி ஆண்ட்டிகிட்ட சொன்னா அவங்க பிரச்னை பண்ணுவாங்க. அத பாத்தா அத்த மாமா, நீங்க எல்லாரும் சங்கடப்படுவீங்க. என்ன இருந்தாலும் ஈஸ்வரி ஆண்ட்டி இந்த வீட்டு மருமகள். அவங்க மரியாதையும் முக்கியம். முகத்துல அடிச்சமாதிரி சொன்னா பாவம் அவங்களுக்கு அவமானம் தானே. அதனால அவங்க கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்.” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

செல்லதாயும், மாணிக்கமும் பேசிக்கொண்டனர். “திவி பேசுறத எல்லாம் கேட்டீங்களா? நம்ம பிள்ளைங்க மனசு சங்கடப்படக்கூடாதுனும் பாக்குறா, தப்பு பண்ணது யாரானாலும் பயப்படாம சொல்லணும்னு இருக்கா அது இந்த வீட்டு மருமக, வயசுல மூத்தவளா இருந்தாலும் சரினு அவங்ககிட்ட பேசுறா, அதே சமயம் அவளோட மரியாதையும் கெடாம பாக்கணும்னு இருக்காளே. எல்லாத்தையும் யோசிக்கற இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ம ஆதிக்கு கிடைச்ச நல்லா இருக்கும்ல. அவனும் இவகிட்ட பேசுறான்ல ” என ஆர்வமாய் கேட்க மாணிக்கமோ சிரித்துவிட்டு “நினைச்சேன், நீ இப்படித்தான் ஏதாவது யோசிப்பேனு. பாரு செல்லம்மா எனக்கும் ஆச தான். ஆனா புள்ளைங்களுக்கு புடிக்கணுமே. இந்த காலத்துல பேசுறது எல்லாம் ஒரு விஷயமா? ஆதியோட குணத்துக்கு திவி அப்படியே நேர் எதிர் எப்படி நம்ம சொல்லமுடியும்…எல்லாம் ஆண்டவன் விட்ட வழி…பாத்துக்கலாம் விடு..” என்று அவரும் நகர்ந்துவிட்டார்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18

உனக்கென நான் 18 அதிகாலை சேவலையும் வம்புக்கு இழுக்கும் அன்பரசியோ அமைதியாக உறங்கிகொண்டிருக்க ஆதவனோ தன் கடமையென அவளை ரசிக்க வந்துவிட்டான். எல்லாம் அந்த மாத்திரைகளின் வீரியத்தின் விளைவுதான். இன்று அவளை தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாலையிலேயே எழுந்தவன் தன் அத்தையுடன்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 02

இதயம் தழுவும் உறவே – 01 காலையின் பரபரப்பு மெல்ல குறைந்ததும் சற்று ஓய்ந்து அமர்ந்தார் மீனாட்சி அம்மா. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் அவருடைய மகன்களுக்கு விடுமுறை தினமாக இருந்தது. மீனாட்சி அம்மாவுக்கு இரண்டு மகன்கள்.