Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 6

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் “உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம் இங்கு இனி இருக்க வேண்டாம்” என்று கூறி படுக்கையில் படுக்க வைத்தவள்.தன்னுடைய பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் இந்த நேரத்தில் என்று படுக்கையறையில் இருந்து வெளியில் வந்தவள் பார்த்தது.கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டிருந்த அர்ஜூனின் முதுகைதான்.             வேகமாக அவன் அருகில் வந்தவள் என்ன செய்கிறீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்றாள் கோபமாக.

நிதானமாக அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவன் தன் கைகளை தூக்கி சோம்பல் முறித்து “மேடம் வெளியில் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கிறீர்கள் போல” என்றான் நக்கலாக.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.இங்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டேன்.வந்தது மட்டும் இல்லாமல் கதவை எதற்கு சாற்றினீர்கள்.வெளியில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்” என்றாள் கோபமாக.

அவனோ “வெளிநாடு சென்றிருந்த உன் கணவன் வந்து விட்டான் என்று நினைப்பார்கள். வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கும் கணவன் மனைவி என்ன செய்வார்கள் என்று அறியாதவர்கள் யாரும் இல்லை” என்று கூலாக சொல்லி கண்ணடித்தவனைப்  பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறு என ஏறி முகம் கோபத்தில் சிவக்க,அதை பார்த்த அர்ஜூன் தன் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு “ஏன் இப்படி செய்தாய்” என்று கேட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் கேள்வியில் வெகுண்டு.”நான் என்ன செய்தேன் எல்லாம் செய்தது நீ.சும்மா இருந்தவளை சுற்றி சுற்றி வந்து காதல் ஆசை காட்டியது நீ. காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையில் உன்னை தேடி வந்த என்னை வேலியே பயிரை மேய்ந்த கதையாய் என் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியது நீ.இப்போது என்னை நீ கேள்வி கேட்கிறாயா.என்னை கேள்வி கேட்க நீ யார்?முதலில் வீட்டை விட்டு வெளியில் போ” என்று ஒருமையில் அவனை சுவாதி வெளுத்து வாங்கினாள்.

அது வரை அவள் மனதில் இருக்கும் அனைத்தும் வெளிவரட்டும் என்று பார்த்து கொண்டிருந்தவன்.அவள் கடைசி கேள்வியில் வெகுண்டான்.வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளின் இரு தோள்களில் கை வைத்து உலுக்கிக்  கொண்டே “நான் யாரா,நான் யார் என்றா கேட்டாய் உள்ளே தூங்கி கொண்டு இருக்கிறானே நம் மகன் அவன் பிறந்த சான்றிதழை பார் நான் யார் என்று தெரியும்” என்றவன் “நம் மகன்” என்று அழுத்தி கூறினான்.

“எனக்கு என்ன உரிமை என்று கேட்டாய் அல்லவா… எனக்கு உன்னிடம் இருக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை.வேறு யாருக்கும் என் உரிமையை உன்னால்  கொடுக்க முடியாது” என்றான் கர்வமாகவும் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டும்.

அவன் பார்வையில் ஒரு நிமிடம் தடுமாறியவள், தன்னைக்  கட்டுக்குள் கொண்டு வந்து கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள்.எதற்காக சிரிக்கிறாள் என்று அவன் யோசிக்கும் முன்னே நிதானமாக அவனை பார்த்து கேட்டாள் “இவன் உங்கள் குழந்தைதான் என்று யார் சொன்னார்கள்.உடனே அபியின் பிறப்பு சான்றிதழை பற்றி சொல்லாதீர்கள்.இந்த உலகத்தில் அர்ஜூன் என்ற பெயர் உங்களுக்கு மட்டும் தான் வைப்பார்களா என்ன.

நான் அங்கிருந்து வந்த பிறகு வேறு ஒருவரை” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களை மூடினான் தன் இதழ் கொண்டு.அவன் முத்தத்தை எதிர் பாராதவள் அவன் வேகத்திலும் இறுகிய அணைப்பிலும் மூச்சு முட்டி போய் அவன் மார்பில் கை வைத்து தள்ள அவன் அணைப்பு மேலும் இறுகியது.

நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விட்டவன். “அபி என் குழந்தை தான் என்று எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்… பின் எதற்கு இந்த விதண்டாவாதம்.அது மட்டும் இல்லை இன்றைய கால கட்டத்தில் அபி என் மகன் தான் என்று நிருபிக்க எனக்கு பத்து நிமிடம் போதும் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் தெரிந்து விட போகிறது.நீ எல்லாம் படித்து பாஸ் செய்தாயா யாரிடமும் பணம் கொடுத்து பாஸ் செய்தாயா.கொஞ்சமாவது படித்த பெண் போல் பேசு” என்றான் கிண்டலாக.

“சரி நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் இப்போது நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்” என்றான் அதிகாரமாக.                                                                                                                                                   என்ன கேள்வி என்று பார்த்தவளிடம்

“வெளியே எங்கயோ கிளம்பி கொண்டிருக்கிறாயா? என்று கேட்டேன்” என்றவனிடம் என்ன பதில் சொல்வது என்று அவள் திருதிருவென முழிக்க

“நான் நினைப்பது சரி என்றால் நீ இங்கிருந்து மீண்டும் யாரிடமும் சொல்லாமல் செல்ல முடிவெடுத்திருக்கிறாய் சரியா” என்றான்.              அவளை கூர்மையாக பார்த்து கொண்டே.

“என்னிடம் இருந்து இனி நீ எங்கும் ஓட முடியாதபடி செய்கிறேன்” என்றவன்.

“நான் இனி இங்கு தான் தங்க போகிறேன்.அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் பசியோடு இருப்பார்கள் நீ அவர்களுக்கு வேண்டியதை செய்” என்றவன் போகிற போக்கில் “அபியைக்  காப்பாற்ற சென்று தான் அத்தைக்கு இப்படி ஆனதாக கேள்வி பட்டேன் அவர்கள் அங்கு துன்பத்தில் இருக்கும் போது நீ போக நினைத்ததை அவர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்.  அவர்கள் நினைப்பது இருக்கட்டும் உனக்கே நீ செய்ய நினைக்கும் செயல் நன்றி கெட்ட தனமாக தெரியவில்லை” என்று குட்டு  வைத்துவிட்டே சென்றான்.அவன் சொன்னதில் நியாயம் இருந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் அற்றவளாக,எனக்கு தெரியும் உன் வேலையை பார் என்று கோபமாக சொன்னவள். சமைக்க ஆரம்பித்தாள்.

சமைக்கும் போது இடையில் வேண்டும் என்றே வந்து அவளை இடித்து கொண்டு நின்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு வெறுப்பேற்றி கொண்டிருந்தவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தாள் .

வீட்டைவிட்டு வெளியே போக சொல்லியாற்று நீ எனக்கு உறவு இல்லை என்றும் சொல்லியாற்று என்ன செய்து இவனை வெளியே அனுப்புவது என்று யோசிக்கையில் அவள் உள் மனம் கேலி செய்தது நிஜமாகவே உனக்கும் அவனுக்கும் உறவு இல்லை என்றால் நீ ஏன் அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை என்ற கேள்வியை அதன் தலையில் தட்டி அடக்கினாள்

இவள் சமைத்து முடிப்பதற்குள் எழுந்து வந்த அபியை பார்த்து என்ன “ராஜா எழுந்துட்டியா கொஞ்சம் பொறு அம்மா உனக்கு பால் ஆற்றி தருகிறேன்” என்றாள்.அபியும் சமத்தாக சென்று விளையாட ஆரம்பித்தான்.

சுவாதியை சமைக்க சொல்லிவிட்டு கீழே வந்தவன் நகுலன் நகத்தை கடித்து கொண்டு இருப்பதை பார்த்து “உனக்கு திருமணம் என்று வர சொன்னாய் என் குடும்பத்தை கண்டுபிடித்துள்ளாய் ரொம்ப நன்றி டா” என்று அனைத்து கொண்டான்.

“என்ன அண்ணா நீ எதுக்கு நன்றி எல்லாம் சொல்லி கொண்டு நீ சந்தோஷமாக இருந்தாலே போதும் ஆனால் என்ன நாம் அனைவரும் சந்தித்த சூழ்நிலைதான் தவறாக போய் விட்டது. அத்தை ஹாஸ்பிட்டலில் இல்லையென்றால் அபியை பார்த்ததுமே பெரிய விழா ஒன்று தயார் செய்து இருப்பேன்” என்றான்.

நகுலை ஆராய்ச்சியாக பார்த்த அர்ஜூன் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க காய்ச்சல் அன்று அவன் புலம்பியதையும்,மீட்டிங் வந்த இடத்தில் அபியை பார்க்கில் பார்த்தது டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தெரிந்து கொண்டது என அனைத்தையும் கூறியவன் கீதாவிற்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை பற்றி வாய் திறக்கவில்லை.

“சரி உன் அண்ணியை அனைவருக்கும் சமைக்க சொன்னேன். நான் அவளை புரிந்து கொண்ட வரை அவள் நிச்சயம் நமக்கு சமைத்திருக்க மாட்டாள்.அவர்கள் மூவருக்கு மட்டும் தான் சமைப்பாள். நீ சென்று மற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடு நான் உன் அண்ணியை அழைத்துவருகிறேன்” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு வீட்டின் முன்பு இருந்த தோட்டதில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தான்

.இவ்வளவு நாள் ஒடிய ஓட்டத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன் உடனே சில போன் கால்கள் செய்து பேசிவிட்டு மாடிக்கு சென்றான்.

அங்கு அபி பொம்மைகளுடன் விளையாண்டு கொண்டு இருப்பதை பார்த்தவன்.இவன் என் மகன் என் உதிரத்தில் உதித்தவன் என்று கர்வமாக நினைத்தவனின் நினைப்பை தன் மகனே அழிக்க போகிறான் என்பதை அறியாமல்.அவனை பார்த்து கொண்டே நின்றான் அபி நிமிர்ந்து பார்த்து யார் என்று தெரியாமல் அறிமுகமில்லாத பார்வை பார்த்து “வணக்கம் அங்கிள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும். ராகவ் தாத்தாவை பார்க்க வந்தீர்களா என்று கேட்க” அர்ஜூன் உள்ளுக்குள் நொறுங்கினான்.

தன் மகன் தன்னை அடையாளம் தெரியாமல் இருப்பதை கூட ஏற்றுகொண்டவனால் அவன் அங்கிள் என்று சொன்னதை ஏற்று கொள்ள முடியாமல் கண்ணில் நீருடன் பார்த்து கொண்டிருந்தான்.அபிக்கு பால் ஆற்றி கொடுக்க வந்தாள் சுவாதி.

அபியின் பேச்சு சத்தம் கேட்டு யாருடன் பேசுகிறான் என்று யோசித்து கொண்டே வந்த சுவாதியின் காதுகளிலும் அபி பேசியது கேட்க கையில் வைத்திருந்த பால் டம்ளரை வேகமாக டேபிளின் மேல் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

அர்ஜூனோ சமையல் அறையில் இருந்து வந்தவள் தன்மகனுக்கு தான் யார் என்று சொல்லுவாள் என ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அவள் ஒன்றும் சொல்லாமல் சென்றது கோபத்தை ஏற்படுத்தினாலும் தப்பு தன் பேரிலும் உள்ளது தான் அதற்காக இவ்வளவு பெரிய தண்டனை தனக்கு தர வேண்டுமா தன் மகன் தன்னை அங்கிள் என்று அழைக்கும் கொடுமை தன் எதிரிக்கு கூட வர கூடாது என்று தன்னை நொந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான்.

“என்ன கண்ணா, என்ன வேண்டும் உனக்கு, இன்னொரு முறை கூப்பிடு” என்று கேட்டு மகிழ்ந்தான்.தன் வருத்தத்தை புரிந்து கொண்டு சுவாதி தனக்காக தன் சந்தோஷத்துக்காக அபியை அப்பா என்று அழைக்க வைத்திருக்கிறாள் என்ற சந்தோஷத்தை முழுதும் அனுபவிக்கும் முன் அங்கு வந்தாள் கீதா.

“என்ன சார் நீங்கள் உங்களுக்கு தான் அவளைபற்றி தெரிகிறதே பிறகு எதற்கு வருத்தபடுகிறீர்கள்.அவளைபற்றி நன்கு தெரிந்தவள் நான் அதனால் இந்த விஷயத்தில் என்னாலும் உங்களுக்கு உதவ முடியாது ஏன் என்றால் அவள் சில விஷயங்களில் ரொம்ப பிடிவாதம்.

உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் இல்லை,இல்லை அதிக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்” என்றாள்.

“நான் வரும் போது கண்ணில் நீருடன் நீங்கள் போவதை பார்த்தேன்.அபியிடம் தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.அதான் நான் அவனிடம் உங்களை அப்பா என்று கூப்பிட சொன்னேன்” என்றவள்.

“நான் குளித்துவிட்டு மதிய சமையல் எடுத்து செல்ல வந்தேன்.சுவாதி ஆட்டோ பிடிக்க போய் இருக்கிறாள். நீங்கள் கொஞ்சம் அவசரபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.                                                     அப்பா எல்லாம் சொன்னார்” என்றாள் கீழே பார்த்து கொண்டே.அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன் அத்தையின் ஆசையும் இதுவே என்னும் போது எதற்கு யோசிக்க வேண்டும் என்றான்.

கீதா எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டாள் .அவள் மனதில் சுவாதி ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிய பிறகு நடந்ததை யோசித்து கொண்டு இருந்தாள்.

சுந்தரியிடம் இருந்து குழந்தையை பிடுங்கி கொண்டு போனதால் அனைவரும் திகைத்து நிற்க.ராகவ்தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்.

தன்னிலை அடைந்த சுந்தரி அண்ணா என்று அழுது கொண்டே அவரிடம் சென்றவள்.”அண்ணா அர்ஜூன் கெட்ட எண்ணத்தில் எந்த விஷயமும் செய்யமாட்டான்.

என் வளர்ப்பைபற்றி சந்தேகபடாதீர்கள் அண்ணா” என்று கூறயவள்,நான்கு வருடத்திற்கு முன்பு நாகபட்டினத்திற்க்கு வேலைக்கு சென்ற அர்ஜூன் திரும்பி வரும்போது இருந்த நிலை அதன் பின்பும் யாருடனும் பேசாமல் அவன் வாழ்ந்த வாழ்வைபற்றி கூறியவள் “இப்போது சொல்லுங்கள் அண்ணா ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் என் மகன் ஏன் பைத்தியகாரன் போல் இவ்வளவு நாட்களை வீணடிக்க வேண்டும்.

சுவாதியிடம் நீங்கள் பேசுங்கள் அண்ணா என் மகனை பழைய அர்ஜூனாக மாற்ற அவளால் மட்டும்தான் முடியும்” என்று கூறினாள்.

“நகுலன் நேற்று போன் செய்து தான் ஒரு பொண்ணை விரும்புவதாக சொன்னான்.அப்போதே நான் இவன் அண்ணனுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வானோ என்று பயந்தேன்.இப்போது தான் புரிகிறது அண்ணனின் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டுதான் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறான் என்று.                                        என் மகன்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றாள்.

ராகவ் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து “என்ன அண்ணா நான் பேசிகொண்டே இருக்கிறேன் நீங்கள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் போல” என்றவளை பார்த்த ராகவ் இ

“ல்லமா சுவாதியை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.                         அபியின் மூன்றாவது பிறந்தநாள் அன்று அர்ஜூனைபற்றி கேட்டு விசாரிக்கிறோம் என்றோம் அதற்கே அவள் வீட்டைவிட்டு சென்றுவிடுவதாக கூறினாள்.எங்களிடம் அர்ஜூனைபற்றி இதுவரை எதுவும் பேசியது இல்லை.நாங்கள் பேசினாலும் பேச்சை திசை திருப்பிவிடுவாள் இல்லை என்றால் எதுவும் பேசாமல் அமைதியாகிவிடுவாள் அதனால் நாங்கள் அர்ஜூன் பேச்சை எடுக்க மாட்டோம்.         அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அர்ஜூன் பெயரே எங்களுக்கு தெரிந்தது. நாங்களும் அந்த பேச்சை எடுத்தால் ஒரு வாரம் வரை யாரிடமும் எதுவும் பேசாமல் அவள் இருப்பதை பார்த்து அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.நீ சொல்வதை பார்த்தால் நாங்கள் அன்றே அவளிடம் பேசி பிரச்சனை என்ன என்று விசாரித்து அவளின் வாழ்வை சரிசெய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தப்பு செய்துவிட்டோம் என்று தோன்றுகிறது” என்று வருத்தபட்டு கொண்டு இருந்தார்.

அண்ணனை பார்த்துவிட்டு அவர்களுக்கு மட்டும் மதிய உணவை வாங்கி கொண்டு வந்த நகுலன் நிலைமையை சரி செய்யும் பொருட்டு சுந்தரியிடம்,சென்று “என்ன மா எனக்கு திருமணம் பேச வந்துவிட்டு அண்ணன் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள்” என்று கேட்டான்.அவர்களுக்கு உண்மை எப்படி தெரிந்தது என்று அறிந்து கொள்ளும் ஆவலில்.

சுந்தரி சிரித்து கொண்டே சொன்னார் “நான் உனக்கு அம்மா டா” என்று. “நீ போன் செய்து எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறது.அவளின் அம்மாக்கு உடல் நலம் சரியில்லை அதனால் உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் தயவு செய்து என் மேல் நம்பிக்கை வைத்து எல்லோரும் இங்கு வாருங்கள் மற்ற அனைத்தும் நேரில் பேசிகொள்ளலாம் என்று சொன்னவுடன் எனக்கு பயம் வந்தது என்னமோ உண்மைதான் அதே போல் நீ ஒரு விஷயத்தை மறந்துவிட்டாய்.

அஜூக்கு காய்ச்சல் வந்த அன்று நீ வரும் வரை நான்தான் அவனுடன் இருந்தேன்.எனக்கு அப்போதே லைட்டாக விஷயம் புரிந்தது ஆனால் யார் என்ன என்று ஒன்றும் புரியவில்லை.சில சமயம் அவன் புலம்பல் மனதை உருத்திகொண்டே இருக்கும். இங்கு நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் சாயலையும் கொண்டிருந்த அபியை பார்த்து கன்பார்ம் செய்து கொண்டேன். அது மட்டும் இல்லாமல் நாகபட்டினத்தில் இருந்து உன் அண்ணன் ஒரு முறை போன் செய்து பேசும் போது இந்த பெயர் விஷயமும் வந்தது அப்போது நான் அவனிடம் சொன்னேன் உன் மகன் பெயரும் எனக்கு பிடித்த பாண்டவர்களின் மகன்களின் பெயர்தான் வைப்பேன் என்று.

நான் சொன்னதை சுவாதி கேட்டிருக்க வேண்டும் அதான் அர்ஜூனனின் மகன் அபிமன்யு பெயரை வைத்திருக்கிறாள் என் மருமகள்” என்றார்.                                                                                                       இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்க அப்போதுதான் அர்ஜூன் போன் செய்து இருவருக்கும் நாளையே திருமணம் என்றும் அடுத்த வாரத்தில் ஒரு நாள் அத்தைக்கு ஆப்ரேஷன் அர்ஜூனே செய்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை செய்யும்படியும் சொன்னான்.

அர்ஜூன் சொன்னதை கேட்டு ராகவ் ஒரு பக்கம் மனைவியின் விருப்பப்படி மகள் இப்போதாவது திருமணத்துக்கு சம்மதித்தாலே என்ற சந்தோஷமும் சுவாதி ஒத்து கொள்வாளா என்ற இரு உணர்வுகளுடன் இருக்க.

கீதா எந்த உணர்வையும் வெளிகாட்டாமல் ஒரு முறை நிமிர்ந்து நகுலனை பார்த்துவிட்டு குனிந்து கொண்டவள் எழுந்து நின்று “நான் சென்று மதிய உணவு எடுத்துவருகிறேன்” என்று கூறி வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றாள்.

நகுலனும் “மாமா மதியம் அத்தையை நார்மல் வார்டுக்கு மாத்தலாம் என்று சொன்னார்கள் அதை பற்றி விசாரித்துவருகிறேன்” என்று கூறி வேகமாக கீதாவை தொடர்ந்து சென்றான்.

வெளியில் வந்தவன் கீதாவின் சோர்ந்த நடையை பார்த்து கோபம் கொண்டான்.வேகமாக அவள் அருகில் சென்றவன் அவள் கையைபற்றி இழுத்து கொண்டு அவன் காரை திறந்து அவளை தள்ளிவிட்டவன் அவனும் காரினுள் ஏறி அவளிடம் பொரியத்  துவங்கினான்.    “உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் உள்ளே திருமண விஷயம் சொல்லும் போதும் எல்லாம் முடிந்தது என்பது போல் பார்க்கிறாய்.முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்.

நான் உன்னை கட்டாயபடுத்தி திருமணம் செய்வதாக நினைக்கமாட்டார்கள்” என்று பொறிந்தான்.அவனும் தான் என்ன செய்வான் கல்யாணவிஷயம் கேட்டவுடன் அவன் பார்த்தது கீதாவின் முகத்தைதான் நடிப்புக்காகவாவது சிரிப்பாள் என்று எதிர்பார்த்தான் அது நடக்கவில்லை என்ற கோபமும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை போல் அவள் பார்த்த பார்வை அவனை அதிக கோபப்படுத்தியது.கை நீட்டி அவன் பேச்சை தடுத்த கீதா “அதுதான் உண்மை என்பதை மறக்க வேண்டாம்” என்றாள்.

கீதாவை நெருங்கி அமர்ந்தவன் அவள் கண்களை கூர்மையாக பார்த்து “நீ யாரையாவது விரும்புகிறாயா அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறாயா” என்று கேட்டான்.அவன் கேள்வியில் கோபம் கொண்ட கீதா “திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அந்த பெண் யாரையும் விரும்பியிருக்க வேண்டுமா இவன் வழியில் சென்றே இவனை கடுப்பேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.ஆமாம் நான் ஒருவரை காதலிக்கிறேன்” என்று கூறினாள்.

கீதாவின் வார்த்தையில் உள்ளுக்குள் நொறுங்கிய நகுலன்.தன் முதல் காதல் ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்ட கொடுமையை எண்ணி வருந்துவதா இல்லை நான் விரும்பியவள் மனதில் வேறு ஒருவன் இருப்பதை நினைத்து வருந்துவதா என்று ஒரு நிமிடம் செயலற்று அமர்ந்திருந்தான்.அவனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த கீதாவே நாம் இப்படி சொல்லியிருக்க கூடாதோ என்று யோசித்தாள்.

அவன் செய்தது மட்டும் சரியா நான் என்ன செய்கிறேன் எப்படி செய்கிறேன் என்று பார்த்து கொண்டே இருக்கிறான்.இப்போது கூட இவனுக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று ஒன்றும் புரியவில்லை என்று தனக்குள் பேசிகொண்டு வெளியே “உங்கள் அண்ணன் வாழ்வைபற்றி கவலை படாதீர்கள் சார் உங்களுக்கு  உதவி செய்வதில் என் தோழியின் வாழ்வும் உள்ளது.அதனால் உங்களுக்கு தேவையான உதவியை நான் கண்டிப்பாக செய்வேன்” என்று கூறியவளை தீர்க்கமாக பார்த்தவன் “எப்படி மேடம் உதவுவீர்கள்.உன் காதலனை விட்டு விட்டு எப்படி என்னை திருமணம் செய்து கொள்வாய் அதற்கு உன் காதலன் ஒத்து கொள்வானா இல்லை அப்படி ஒருவனே இல்லையா” என்று கேட்க.

கீதா உண்மையில் அதிர்ந்துதான் போனாள்.என்னடி கீதா உன் பொய்யை இப்படி உடனே கண்டுபிடித்துவிட்டான்.பெரிய பிஸ்னஸ்மேன் இல்லையா அதான் அவன் என்ன ராகவ்வா நீ என்ன சொன்னாலும் நம்ப அய்யயோ இவன் ஏன் இப்படி பார்க்கிறான் இப்படி பார்பதை பார்த்தால் நமக்கு பேச்சே வராது போலவே என்று யோசிக்க.

நகுலன் பேச ஆரம்பித்தான் “சோ…….. நான் சொன்னது போல் பொய்தான் இல்லையா” என்று நக்கலாக கேட்க.

கீதா மனதினுள் சமாளி டி கீதா எதாவது யோசி என்று யோசித்தவளின் மூளையில் பல்ப் எரிய டக்கென்று சொல்ல ஆரம்பித்தாள். மனதில் நகைத்தாலும் வெளியில் கூலாக “இங்க பாருங்க சார்,அவர் இப்போது பாரினில்தான் இருக்கிறார்.வேலை விஷயமாக சென்றிருக்கிறார்.வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும் வந்தவுடன் திருமணம்தான் அதனால்தான் வீட்டில் எல்லோரிடமும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சமாளித்து கொண்டு இருக்கிறேன்.

அதுமட்டும் இல்லாமல் என்னால் என் தோழியின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று நீங்கள் சொன்னதால்தான் நான் இதற்கு ஒத்து கொண்டேன். அவர் பாரினில் இருந்து திரும்ப வருவதற்குள் இங்கு சுவாதி பிரச்சனை தீர்ந்துவிடும் நீங்களும் எனக்கு டைவர்ஸ் குடுத்துவிடுவீர்கள் பிறகு எங்கள் கல்யாணம்தான்”.என்று ஒரு வழியாக ஒருகதை உருவாக்கி அவன் நம்புவது போல் சொன்னவள்.அவனின் யோசனையான முகத்தை பார்த்து நம்பிவிட்டானா இல்லையா தெரியவில்லாயே என்று ஓரகண்ணால் அவனை கவனித்து கொண்டிருந்தாள்.

அவனோ சற்று நேர யோசனைக்கு பிறகு கோபமாக அவள் பக்கம் திரும்பி “முதலிலேயே ஏன் என்னிடம் சொல்லவில்லை என்னுடைய பிளான் முழுவது உன்னிடம் சொல்லும்போதே சொல்லியிருந்தால் வேற பிளான் போட்டு இருக்கலாம்.இப்போது சொல்கிறாய்” என்று கோபமாக கத்த.

“எதற்கு நான் உங்களிடம்  சொல்ல வேண்டும்.                                                       நீங்கள் யார் சார் எனக்கு நான் தோழியிடமே இதைபற்றி இன்னும் சொல்லவில்லை பிறகெப்படி உங்களிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கிறீர்கள் சார்” என்றவள்.

“இப்போது எதற்கு கோபபட்டீர்கள் என்று கூட எனக்கு புரியவில்லை “என்றாள்.

மனதினுள் கீது செல்லம் வர வர ரொம்ப கதை சொல்கிறாய் உன் கதையை பெரிய பிஸ்னஸ் மேனே நம்பிவிட்டான் நீ கதை எழுத போனால் உன் பிஸ்னஸ் பிச்சுக்கும் போ… என்று தனக்குதானே சபாஷ் போட்டுகொண்டாள்.

அவளின் தெளிவான பேச்சை கேட்டவன்.கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள்.இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது.வேறு ஒருவனை மனதில் நினைத்து கொண்டிருப்பவளை  நீயும்  நினைப்பது பாவம் என்று தனக்குள் கூறி கொண்டு உன் அண்ணனின் வாழ்வையாவது சீர் செய்.அதுதான் இப்போது முக்கியம் என்று அவளை ஒரு அன்னிய பார்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.

“இங்க பாருங்க மேடம் நீங்க சொல்வது சரிதான் இருந்தாலும் நாம் இருவரும் கணவன் மனைவியாக நடிக்க போகிறோம் இதனால் உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது.அதனால் நான் உங்கள் காதலனுடன் பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும் அதனால் அவருக்கு போன் செய்யுங்கள் நான் இப்போதே பேச வேண்டும்” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 2

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள். கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8

சுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள்.                                                                                              மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில்