Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5

ருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள்.மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

“என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி ஆகி இருக்காது. இதற்காக நான் அம்மாவுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன்” என்று அழுதவளை கீதா கூர்மையாக தோழியை பார்த்து கொண்டே அவர்கள் எழுந்து வந்து என்ன கேட்கிறார்களோ அதை செய்  என்றாள்.

சுதி கண்ணீரை துடைத்து கொண்டு “நிச்சயமாக அம்மா என்ன சொன்னாலும் கேட்பேன் இது அபியின் மீது சத்தியம்” என்றாள்.

இவர்களின் பேச்சு முடியவும் ஐசியுவில் இருந்து டாக்டர் வெளியே வரவும் சரியாக இருக்க,மூவரும் ஆர்வத்துடன் டாக்டர் முகம் பார்க்க “சாரி சார் நாங்கள் எங்களால் முடிந்த எல்லா முயற்சியும் செய்துவிட்டோம் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவரது உடல் நாங்கள் செய்யும் எந்த டிரிட்மண்ட்க்கும் ஒத்துழைக்க மறுக்கிறது.இன்று ஒரு நாள் பார்ப்போம்.அவரிடம் நீங்கள் யாராவது சென்று பேச்சு கொடுங்கள் நீங்கள் பேசுவதை பேசண்ட் உணர்ந்தாலே போதும் ஆபத்து கட்டத்தை அவர் தாண்டி விட்டதாக அறியலாம்… கடவுளை நம்புங்கள்” என்றவர்,

“இப்போது ஒவ்வொருவராக சென்று பேசன்டை பார்க்கலாம் ரொம்ப அழுது மற்ற பேசண்டை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி சென்றார்.

அவர் சொன்னதை கேட்டு அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க அந்த நேரம் மருத்துவமனையில் நுழைந்தான் நகுலன்.

ஐசியூ எங்கு என்று விசாரித்து வந்தவன் மூவரும் இடிந்துபோய் அமர்ந்திருப்பதை பார்த்து டாக்டரை சென்று விசாரித்து வந்தான். ராகவிடம் சென்றவன் “சார் இப்படி அமைதியாக உட்கார்ந்து இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை உங்கள் மனைவியை காப்பாற்ற முடியும் என்று நீங்கள் முதலில் நம்புங்கள்.

டாக்டர் முழுவதும் நம்மை கை விடவில்லை.நீங்கள் சென்று உங்கள் மனைவியுடன் பேசுங்கள்” என்றவன்.

“நீங்களே இப்படி அமர்ந்திருந்தாள் உங்கள் பெண்ணிற்கு யார் ஆறுதல் கூறுவது” என்று கூற, கொஞ்சம் தெளிந்தவர்.நன்றி என்ற பார்வையோடு வள்ளி இருந்த அறையை நோக்கி சென்றார்.

சுருதியும்,கீதவும் அழுது கொண்டிருக்க இவர்கள் அழுவதை பார்த்து அபியும் அழுது கொண்டிருந்தான்.நகுலனை பார்த்த கீதா இவன் எப்படி இங்கே என்று பார்க்கும் போதுதான் கீதாவின் தந்தையுடன் அவன் பேசியது காதில் விழுந்தது.அண்ணனுக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று யோசித்தாள்.

வள்ளி இருக்கும் அறைக்குள் நுழைந்த ராகவிற்கு என்ன முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த இயலாமல் வள்ளியின் கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தார்.முப்பத்திஐந்து வருட திருமணவாழ்வில் ராகவை எதற்கும் கஷ்டபடுத்தாமல் இருந்தவர். இளம் வயதில் தாயை இழந்த ராகவிற்க்கு மற்றொரு அம்மாவாக மாறி பார்த்து கொண்டவர்.

வேலை விஷயமாக அடிக்கடி மாற்றல் வந்தாலும் முகம் சுழிக்காமல் தன்னுடன் இருந்தவள்.தனக்கென்று எந்த விருப்புகளுக்கும் முக்கியதுவம் தராதவள் இன்று தலையிலும் கை,கால்களில் கட்டுடனும் முக்கில் ஏதேதோ வயர்களை சொருகி இருந்ததை பார்த்து துடித்து போனார்.

ராகவின் அழுகை சத்தம் கேட்டு அங்கிருந்த நர்ஸ் அவரை வெளியே அனுப்ப வெளியில் வந்தவர் நேராக கீதாவிடம் சென்று “கீது அம்மாவை என்னால் இப்படி பார்க்க முடியலடா நீ சொன்னா அம்மா கேட்பா எழுந்து வர சொல்லு டா.என்னிடம் என்ன என்ன சொன்னால் தெரியுமா உங்கள் இருவருடைய திருமணத்தையும் கண்குளிர பார்க்கணும் இருவரின் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தினமும் தூங்க வைக்க வேண்டும்.சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி சிரிக்க வேண்டும் இப்படி நிறைய விஷயங்களை கூறிவிட்டு இப்படி வந்து படுத்து கொண்டாளே, சொல்லுடா போடா” என்று அவளை வள்ளி இருக்கும் அறை நோக்கி இழுத்து செல்ல, கீதா அப்பாவை எப்படி சமாளிப்பது என்று பயந்துதான் போனாள்.அம்மா அப்பாவின் காதல் வாழ்வை பார்த்தவள் அல்லவா.

பேசியே ராகவ் மயக்கத்திற்கு போக அந்த மருத்துவமனையில் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டார். நகுலன்தான் முன்னின்று அனைத்தையும் பார்த்து கொண்டான். வள்ளியை பார்க்க அடுத்ததாக கீதா சென்று பேசியும் சுவாதி சென்று பேசியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவரை என்ன செய்வது என்று அனைவரும் இருக்க.நகுலன்தான் அபியை அழைத்து சென்று வள்ளியிடம் பேச வைக்க சொன்னான்.

கீதா பயத்துடனே இந்த முறையாவது அம்மா கண் விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபியை தூக்கி கொண்டு வள்ளியை பார்க்க சென்றாள்.அபியை பார்த்த கீதா பாட்டியுடன் பேசு கண்ணா என்னுடன் பேசமாட்டிகிறார்கள் என்றாள் தொண்டை அடைக்க.

அபி வள்ளியிடம் வந்தவன் “பாட்டி எந்திரிங்க பாட்டி, வீட்டுக்கு போகலாம்.நான் இனி குட் பாயா இருப்பேன்.கீது கூட சண்ட போடமாட்டேன்.நீங்கள் சொன்ன பேச்சு கேட்கிறேன்.கீதுவும் இனிமே குட் கேர்ளா இருப்பா பேசுங்க பாட்டி ” என்றவன்.

வள்ளி அமைதியாக படுத்திருப்பதை பார்த்து “பாட்டி உங்களுக்கு என் மேல்தான் கோபமா… நீங்கள் தினமும் சொல்லியிருக்கிறீர்கள் விளையாடும் போது ரோது பத்தம் போத கூதாதுனு.என்னால்தான் உங்களுக்கு அதிபத்துவித்தது இனி அப்பதி செய்யமாத்தேன்” என்று தன் காதுகளில் கை வைத்து தன் மழலை மொழியில் அபி பேச, அவன் பேசுவதை கேட்ட கீதாவும் அழுகையை கட்டுபடுத்தமுடியாமல் அழ வள்ளி கை அசைய ஆரம்பித்தது அறை விழி திறந்து பார்த்தவர் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

வள்ளி கண் திறந்த செய்தியை நர்ஸ் சென்று டாக்டரிடம் கூற அவருக்கான சிகிச்சை தீவிரமாக்கபட்டது.ஒருவழியாக அனைவரையும் பயபடுத்தி ஆபத்து கட்டத்தை கடந்தார் வள்ளி.   ராகவ் மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது வள்ளியும் கண் திறந்திருந்தார்.அனைவரும் மீண்டும் ஒருமுறை வள்ளியை பார்த்து வர கடைசியாக ராகவ் சென்றார்.அவரிடம் டாக்டர்கள் வள்ளி ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டார் என்றும் இன்னும் ஒரு ஆப்ரேஷன் மட்டும் செய்துவிட்டால் எந்த பயமும் இல்லை அதனால் தைரியமாக பேசுங்கள் என்று சொல்லி அனுப்பினர்.

ராகவ் வள்ளியை பார்த்து “பயமுற்திவிட்டாய் கண்ணம்மா என்று அழுதவர் தன்னை சமாளித்து கொண்டு இன்னும் ஒரு ஆப்ரேஷன் மட்டும் செய்தால் போதுமாம்” என்று சொன்னவரை பார்த்த வள்ளி தன் மனதில் இருப்பதை சொல்லி முடித்தாள்.

வள்ளியிடம் பேசிவிட்டு வெளியில் வந்தவரிடம் கீதா “என்னப்பா அம்மா என்ன சொன்னார்கள்” என்று விசாரிக்க. அவளை இயலாமையோடு பார்த்தார் ராகவ்.

“என்னப்பா” என்று கேட்ட மகளிடம் உங்கள் இருவரின் திருமணம்தான் அவளின் ஆசை என்று கூறி சுவாதி,கீதா இருவர் முகங்களையும் பார்த்தார்.

“உங்கள் திருமணத்தை பார்த்தால்தான் ஆப்ரேஷனுக்கு ஒத்துகொள்வாளாம்” இருவரும் அதிர்ச்சியுடன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவர் அவள் விருப்பத்தை நான் சொல்லிவிட்டேன்.இனி முடிவு உங்கள் கையில் என்று கூறி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டார்.

கீதாவின் முகத்தை பார்த்த சுவாதிக்கு கோபம் ஏற அவளது கையை பிடித்து இழுத்து போய் ராகவிற்கு எதிரில் நிறுத்தியவள் “அப்பா கீதா ஒருவரை காதலிக்கிறாள்.சற்று முன்பு உங்களுடன் பேசி கொண்டிருந்தாரே அவர்தான்.எனக்கு நேற்று தான் விஷயம் தெரியும் அதை பற்றி விசாரிக்க தான் நேற்று பார்க்குக்கு போனது அதை கேட்பதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது” என்றாள்.

ராகவ் எதுவும் சொல்லாமல் மகளை பார்க்க கீதா என்ன சொல்வது என்று பார்த்து கொண்டிருக்கும் போது நகுலன் அபியை தூக்கி கொண்டு அங்கு வந்தான்.இவர்களின் பேச்சு காதில் விழுந்தது போல் அவன் கீதாவை கூர்மையாக பார்த்தான். அழுது அழுது சிவந்திருந்த கண்களுடனும் தலையெல்லாம் கலைந்து பார்க்கவே பாவமாக இருந்தவளை பார்த்தவன் இவள் இப்போதைக்கு பேசும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து தானே பேச ஆரம்பித்தான்.                       அ….என்று ஆரம்பித்து அண்ணி என்று சொல்ல வந்தவன் அவர்கள் என்று மாற்றி “அவர்கள் சொன்னது உண்மை தான் சார். ஆனால் எங்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் உள்ளது.

” என்ன சிக்கல்” என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கேட்டு அவன் முகம் பார்த்தனர்.

“என் அண்ணன் திருமணம் முடிந்த பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று இருக்கிறேன் என்றான்.

“நாளை என் பெற்றோரை வர சொல்கிறேன் நீங்களே அவர்களிடம் பேசுங்கள்” என்று கூறினான்.

தன்னுடைய வாழ்வு தனக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ நடக்கிறது என்று எண்ணிய கீதா ஒரு வெற்று பார்வையை நகுலனை நோக்கி பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

நகுலன்தான் அவள் பார்வையில் அடிவாங்கினான் ‘ஏன்டி இப்படி பார்க்கிறாய்.உன் விருப்பப்படிதானே எல்லாம் நடக்கிறது.பிறகு எதற்கு வாழ்க்கையே முடிந்தது போல் இப்படி பார்க்கிறாய். இன்று உனக்கு ஒரு வாக்கு அளிக்கிறேன் உன் விருப்பப்படி தான் எல்லாம் இருக்கும் எந்த காரணத்திற்காகவும் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்’ என்று மனதினுள் பேசி கொண்டான்.

மறுநாள் நகுலனின் குடும்பம் முழுதும் ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.ஐசியூ வாசலிலேயே அமர்ந்திருந்த ராகவை பார்த்த நகுலனின் அம்மா சுந்தரி அதிர்ந்து போய் அங்கேயே நிற்க மற்ற அனைவரும் ராகவை நெருங்கினர்.

 

“சார்”என்று அழைத்து “இது என்னுடைய அண்ணன் அர்ஜூன்,என் அப்பா வரதராஜ்,இது தங்கை மதிமலர்” என்றவன் திரும்பி அம்மாவை பார்க்க அவர் உள்ளே வந்த இடத்திலேயே நிற்கவும் அவரிடம் சென்று அம்மா என்று தோளை தொட்டு உலுக்க நினைவுலகத்துக்கு வந்தவர் கண்களில் கண்ணீருடன் வேகமாக ராகவை நோக்கி சென்று “அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள்” என்று காலில் விழுந்தார்.

அனைவரும் திகைத்து நிற்க, “அம்மா சுந்தரி” என்று ராகவும் திகைத்து,கண்ணீருடன் “எழுந்திருமா எதற்கு காலில் எல்லாம் விழுந்து கொண்டிருக்கிறாய் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது” என்றார்.ஆம் சுந்தரி ராகவின் பெரியப்பா மகள் தனக்கு தங்கை இல்லை என்ற குறையால் ராகவ் எப்போதும் சுந்தரி மேல் தனி பிரியம் வைத்திருந்தார்.

நகுலனோ மனதில் ‘அட நம்ம அழகி எனக்கு மாமன் மகளா.வாடி என் மாமன் பெத்த மணிகொழுந்தே… நல்லதா போச்சு இப்போது எப்படி என்னிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி வெளிநாடு செல்கிறாய் என்று பார்க்கிறேன்.இலட்சியமாம் அதுவும் வெளிநாட்டில் சென்று இவள் தான் இந்தியர்களை பெருமைபட வைக்க போகிறாளாம்.

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில சமயம் பெண்கள் சிலர்  முட்டாள் போலவே பிகேவ் செய்கிறார்கள்.அதில் என் அழகியும் ஒருத்தி’ என்று அவன் தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான்.அடேய் உனக்கே இது ஓவராக இல்லை இன்னும் திருமணமே நடக்கவில்லை அதற்குள் அவள் உன் முன் வந்து டைவர்ஸ் கேட்டு நிற்பது போலவே பேசுகிறாய் என்று அவன் உள் மனம் அவனை கேளி செய்ய அதன் தலையில் தட்டி அடக்கினான்.

ராகவ் சுந்தரியிடம் “நீ எப்படி இங்கு” என்றார் ஒன்றும் புரியாமல்.அப்போது அங்கு வந்த நகுலன் என் அம்மா என்றான்.

“நகுலன் உன் மகனா” என்று ஆச்சரியpபட்டவர் “உன் மகன் தான் எனக்கு மகன் இல்லாத குறையை போக்கி தைரியம் கொடுத்தான் என்று கூறினார்.நீ காதலித்ததை என்னிடமாவது சொல்லியிருக்கலாம். இப்படி வீட்டை விட்டு போய் எங்கிருக்கிறாய் என்று தெரியாமல் அப்பா இறந்ததற்குகூட உன்னிடம் தகவல் சொல்லமுடியாமல் போனது என்று அவரும் புலம்பினார்.

“நீ வந்த விஷயம் தெரிந்தால் வள்ளி ரொம்ப சந்தோசபடுவாள்” என்று சொல்லி கொண்டு வந்தவர் அழ ஆரம்பித்தார்.

அர்ஜூனின் தந்தை வரதராஜன் நகுலனை நீர் எடுத்து வருமாறு பணித்தார்.நகுலன் கொண்டுவந்த நீரை குடிக்க வைத்து ஆறுதலாக அவர் கையை ஒரு பக்கம் வரதராஜனும் மறுபக்கம் சுந்தரியும் பிடித்து கொள்ள அர்ஜூன் டாக்டரிடம் சென்று நிலமையை பற்றி விசாரித்து வருவதாக சென்றான்.

நகுலனின் குடும்பத்தினர் சென்று வள்ளியை பார்த்துவிட்டு வந்தனர்.சுந்தரி ராகவிடம் பேசி கொண்டிருக்கும் போதுதான் நினைவுவந்தவராக கீதாவை பற்றி விசாரிக்க “இங்கு ஒருவருக்கு மேல் தங்க அனுமதி இல்லை அதனால் வீட்டிற்கு சென்று சமைத்து எடுத்து வர சென்றிருக்கிறாள்” என்றவர் வரும் நேரம் தான் இப்போது வந்துவிடுவாள் என்றார்.

சாப்பாட்டு கூடையுடன் அபியை ஒரு கையில் பிடித்து கொண்டு அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அழித்து கொண்டு வந்த கீதாவை சுந்தரி ஆச்சரியமாக பார்த்தார். தன் அம்மாவின் மறு பதிப்பாக இருந்தவளை பார்த்தவர். அவள் கையை பிடித்து கொண்டு துறுதுறு விழிகளுடனும் குண்டு கண்ணத்தோடும் வந்தவனை பார்த்து அதிர்ந்து போனார் ஏன் எனில் சிறு வயதில் நகுலன் எப்படி இருந்தானோ அதே ஜாடையையும் அர்ஜூனை போல ஆராய்ச்சி பார்வையுடனும் வாய் ஓயாமல் கேள்வி கேட்கும் மதியின் குணத்தோடும் தன் வீட்டு வாரிசுகளின் மொத்த குணத்தையும் ஒன்றாய் பெற்றிருந்த அபியை நோக்கி வேகமாக சென்று தூக்கினார்.

கீதாவோ சுந்தரி வந்த வேகத்தை பார்த்து பயந்து போனாள்.அதே சமயம் தன் தந்தை இவர்களுடன் பேசி கொண்டு இருந்ததை பார்த்ததால் யார் இவர்கள் என்று பார்க்க சிரித்து கொண்டே அவர்கள் அருகில் வந்த ராகவ் “என்னமா யார் என்று தெரியவில்லை இல்லையா இவர்கள்தான் உன் அத்தை” என்றார். அப்படியா என்ற பார்வையோடு அருகில் நின்றிருந்த அனைவரையும் பார்த்து கொண்டிருக்கும் போதே வண்டியை பார்க்கிங்கில் விட்டு விட்டு வந்த சுவாதி அபி யாரோ பெண்மணியிடம் இருப்பதை பார்த்து யார் இவர்கள் என்று யோசித்து கொண்டே அருகில் வந்து கீதாவை  பார்த்து “யார்” என்று கேட்க அதே நேரம் “அம்மா” என்று அர்ஜூன் வரவும் சரியாக இருந்தது.                                                                                                                                                                  அம்மா யாரோ ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பதை பார்த்தவன்.பக்கத்தில் சென்று யார் என்று பார்த்த அர்ஜூனும், இது அவன் குரல் போல் இருக்கிறதே என்று வேகமாக திரும்பி பார்த்த சுவாதியும் திகைத்து நின்றுவிட்டனர்.இவர்களை கவனித்து கொண்டிருந்த கீதா,நகுலன் இருவருக்கும் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று பார்த்தும் பார்க்காதது போல் இருக்க இதை அறியாத ராகவ் அவர்களை தன் தங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“அம்மா சுந்தரி இது என் பொண்ணு கீதா,இது அவள் தோழி சுவாதி இவளும் எனக்கு இன்னொரு பெண் போலதா”ன் என்றவர்,

“இவன் என்னுடைய பேரன்” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் சுந்தரி சொன்னார் அபிமன்யு என்று. உனக்கு தெரியுமா என்பதை போல பார்த்தவர்.நகுலன் சொன்னாரா என்று கேட்க,அதற்கு சுந்தரி மறுப்பாக தலையாட்டி அர்ஜூனின் மகன் அபிமன்யுதானே என்று கூற அனைவரும் குழப்பத்துடன் பார்த்தனர்.                                                                சுந்தரி வரதராஜனை பார்த்து “நம் பேரன் அபிமன்யு” என்று கூற அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.கீதாவும்,நகுலனும் இவருக்கு எப்படி தெரிந்தது என்று பார்க்க,மதுவோ அண்ணி பிரிந்து போனதால் தான் அண்ணன் இப்படி மாறிவிட்டாரா என்று யோசிக்க,வரதராஜனோ என் மகனின் இத்தனை நாள் மனமாற்றத்திற்க்கு இந்த பொண்ணுதான் காரணமா என்று பார்க்க,ராகவிற்கு அப்போது தான் புரிந்தது அபியின் அப்பா இந்த அர்ஜூன் தான் என்று.

இவர்கள் யாரை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார்களோ அந்த இருவரில் அர்ஜூனின் உணர்வுகளைதான் அனைவராலும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஏன் என்றால் சுந்தரி பேச ஆரம்பித்த உடனே சுவாதிக்கு இவர்கள் அர்ஜூனின் குடும்பத்தவர்களோ என்ற சந்தேகத்தோடு பார்க்க அதை உறுதி செய்வது போல் அர்ஜூன் அங்கு வரவும் தலை குனிந்தவள் அவர்கள் இவ்வளவு பேசும் போதும் சரி பேசி முடித்த பிறகும் கூட தலை நிமிரவில்லை.

அர்ஜூனோ முதலில் சுவாதியை பார்த்தவுடன் கண்களில் தோன்றிய மகிழ்வை மறைக்காமல் காட்டியவன்.பின் அபியின் விஷயம் தெரிந்தவுடன் என்னிடம் ஏன் மறைத்தாய் என்று குற்றம் சுமத்தும் பார்வையை சுவாதியை நோக்கி வீசியபடி இருந்தான். தன் உணர்வுகளை மறைக்காமல் வெளிபடுத்திய அர்ஜூனை பார்த்தவர்களுக்கு அபியின் விஷயம் இவனுக்கும் தெரியாதா என்று எண்ணி கொண்டனர்.

சுவாதி மனதிலோ திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற தன்னைபற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமும், இவரை பார்க்க கூடாது என்று இவ்வளவு தூரம் வந்தும் மீண்டும் சந்திக்கும் நிலையை ஏற்படுத்திய தன் விதியை நொந்து கொண்டும்,அதிக நாட்களுக்கு பிறகு அர்ஜூனை பார்த்த மகிழ்வுடனும்,சந்தித்து என்ன செய்வது அவர் என்னை விரும்பவில்லையே முதலில் அன்று என்ன நடந்தது என்று இன்றளவும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டுமே புரிந்தது அன்று நடந்த விஷயங்கள் யாவும் ஒரு விபத்து அவரை பொறுத்த வரை அவர் சரியாக நடந்து கொண்டார்.

உண்மை தெரிந்து விலகி இருந்தவரை. சுயகௌரவத்தைவிட்டு அன்று தேடி சென்றது நான் தான்.தவறு என் மீது தான் மற்றவர் பொருள் என்று தெரிந்தும் அன்று நான் ஏன் போனேன் என்று கோபமாக நினைத்தவள்.

கசப்பாக இருந்தாலும் உண்மையை மாற்ற முடியாது ஏற்று கொள்ளதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.இவர்களின் முன் எந்த உணர்வுகளையும் வெளி காட்ட கூடாது அவள் எண்ணி கொண்டு  இருக்க கடைசியாக சுந்தரி சொன்ன நம் பேரன் என்ற வார்த்தை அவளின் கட்டுபடுத்திய கோபத்தையும் தாண்டி வெளிவந்துவிட்டது.

சுவாதி அபியை சுந்தரியிடம் இருந்து வேகமாக வாங்கி கொண்டு இல்லை இல்லை பிடுங்கி கொண்டு, “இவன் என் மகன், எனக்கு மட்டுமே மகன்” என்று கத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு வேகமாக வெளியேறினாள்.

அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்க.அர்ஜூன் கோபமாக சுவாதியை தொடர்ந்து சென்றான்.

1 thought on “சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5”

Leave a Reply to Amu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 1சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 1

வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சுதி அவர்களை வரவேற்கிறோம். முதல் அத்தியாயமே அடுத்து என்ன எதனால் என்ற ஆவலைத் தூண்டும் விதத்தில் படைத்துள்ளார் ஆசிரியர். வாசகர்களாகிய நாமும் படித்துவிட்டு அவரிடம் நமது கருத்துக்களைப் பகிர்ந்து

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 19

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்த நகுலன் விரைவாக கிளம்பி கீழே வந்தான்.அங்கு அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த சுந்தரி மகனை பார்த்ததும் திட்ட ஆரம்பித்தார்.                                “அம்மா பிளீஸ் ஆரம்பிக்காதீங்க.எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்டிங்கனா சாப்பிட்டு போவேன் இல்லை இப்படியே

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

“பேயாவது ஒன்றாவது” என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது. “அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக