Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 27

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 27

27 – மனதை மாற்றிவிட்டாய்

மாலையில் அனைவரும் வீட்டில் இருக்க ஆதி உள்ளே நுழைந்தவுடன் அவனுக்கும் சிற்றுண்டியை கொடுத்துவிட்டு மதி “பாட்டி, தாத்தா பேசுனாங்க ராஜா… ஊருல திருவிழா வருதாம்… எல்லாரும் இருக்கோம். நீயும் வந்திருக்க..அதனால 3 நாள் அங்க வரச்சொல்றாங்க. போவோம்டா.” என எதிர்பார்ப்போடு கேட்க அவன் “ஆபீஸ்ல…” என இழுக்க அனு, சுபி “அண்ணா கண்டிப்பா போலாம் அண்ணா, நெக்ஸ்ட் இயர் எனக்கு காலேஜ், உங்களுக்கும் ஆபீஸ் அண்ட் எல்லாருக்கும் மேரேஜ்னு ஒரு
ஒரு ரீசன். சோ போலாம் அண்ணா. ..”

திவி “ப்ளீஸ் ஆதி, போலாமே. நானும் ஆபீஸ் லீவு சொல்லிட்டேன். மூணே நாள் தானே. ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்ச ” அவளை பார்த்து சிரித்துவிட்டு “சரி போலாம்” என அவள் சந்தோசத்தில் அனு, அம்மு, சுபியை கட்டிக்கொண்டு குதிக்க தடுமாறி விழப்போனவளை பிடித்து நிறுத்தியவன் “பாத்துடி. ” என்றான் ஆதி…மதி “திவி கால் வலிக்க போகுது…” என மிரட்ட

ஆதி திரும்பி பார்த்து “ஏன் என்னாச்சு… அவளுக்கு வீட்டுக்கு திரும்பி வரும்போது கால்ல அடிபட்டரிச்சு. என காலையில் இவனுக்கு கூறிய கதையை அவர்கள் கூற அவன் திவியை முறைத்துவிட்டு “அவ சும்மா சொல்லுவாம்மா…நம்பாதீங்க..” என

மதி “இல்லடா உண்மையாவே அடிப்பட்டிருக்கு. நானே பாத்தேன். கன்னிபோய்டுச்சு.” என

அவளிடம் திரும்பியவன் “எப்போ அடிபட்டது. மதியம் நல்லாத்தானே இருந்த…”

அவள் இவனையும், சுற்றி இருந்தவர்களையும் பார்த்து முழித்துக்கொண்டிருக்க அவன் “இப்போ சொல்ல போறியா இல்லையா?” என அதட்ட அவள் “இல்ல, அது மதியம் சோஃபாவுல…” ஆதி “மதியம் நானும் தானே இருந்தேன். எப்போ?” மதி “நீ எப்போ டா வந்த? ” என கேட்க

இவன் திவியிடம் திரும்பி “நான் கேட்டுட்டு இருக்கேன்ல….”

திவி “நீங்க வந்ததும் நாம இங்க நின்னு பேசிட்டுஇருக்கும்போது அந்த சோஃபாவுல இடிச்சிடிச்சு.” என அவள் கூற

இவனுக்கு ஏதோ ஞாபகம் வர “நான் அடிச்சபோதா?” என கேட்க அவள் அமைதியாக இருக்க அவனுக்கு புரிந்தது.

சேகர், மதி “என்ன அவளை அடிச்சியா? ”

சேகர் “உனக்கு எத்தனை தடவ சொல்றது, எதுக்குடா அந்த புள்ளைய அடிப்ப? ” என ஆரம்பிக்க இடையில் புகுந்து திவி “மாமா ப்ளீஸ் அவரை எதுவும் சொல்லாதிங்க, நான்தான் அவர்கிட்ட பொய் சொல்லிட்டேன். எனக்கு ஆக்சிடென்ட்னு பொய் சொல்லி வரவெச்சேன். “என காலையில் அவர்கள் விளையாட்டாய் பேசியது இவள் பொய் கூறியது அவன் அடித்தது என எல்லாம் கூறி முடிக்க அனைவரும் இப்போது அவளை திட்டினர்…ஒருத்தர் விடாமல்…

இவனுக்குத்தான் என்னவோ போல் ஆகிவிட்டது. தன்னால்தான் தியாக்கு அடிபட்டது என அமைதியாய் திட்டி வாங்கிக்கொண்டு நிற்க இவள் அனைத்து உண்மைகளையும் கூறுகிறேன் என அவள் மேல் தான் குற்றம் என்பது போல இன்னும் திருத்தி சொல்ல அனைவரும் அவளை திட்ட இவன் அவர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு “ப்ளீஸ் அவள திட்டுனது போதும். நானே அவளை அடிச்சுட்டேன். பாவம்மா..விட்ருங்க..” என்றவன்

அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். “ஏன் டி எல்லார் முன்னாடியும் எல்லாத்தியும் சொன்ன?”

“பின்ன, அவங்க எல்லாரும் உங்கள தப்பா நினச்சு திட்றாங்களே ஆதி. நான் எப்படி பாத்திட்டு சும்மா இருக்கமுடியும்…செய்யாத தப்புக்கு எதுக்கு உங்கள திடனும்”

“அடிபட்டபோதே சொல்லிருக்கலாம்ல. ..ஏன் குட்டிமா இப்டி பண்ற? ”

“உண்மையா அப்போ எனக்கு வலியே தெரில ஆதி, வீட்டுக்கு போயி உக்காந்த போதுதான் பாத்தேன்…அதுவும் முட்டில. .மடக்கி உக்காரும்போது வலிச்சதால…”

அவன் அமைதியாக இருக்க
அதை காணபிடிக்காமல் “என்ன ஆதி நீங்க, உங்ககிட்ட பொய்ச்சொல்ல மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன். அதான் நீங்க அங்க கேட்டதும் சொல்லிட்டேன். இல்லாட்டி வெளில அடிப்பட்துனே தானே எல்லார்கிட்டயும் மெயின்ட்டைன் பண்ணிருப்பேன்.”

“இன்னொரு விஷயம் தெரியுமா? நீங்க அவளோ பதட்டமா வந்ததுமே எனக்கு ஒரு மாறி ஆயிடிச்சு. நீங்க பீல் பண்ணி பேசுனதுல எனக்கு ரொம்ப வருத்தம், எனக்கு அடிபட்டு சொன்ன பொய் நிஜமானா கூட சந்தோசம்னு நினச்சேன். வீட்டுக்கு போயிட்டு அடிபட்டது தெரிஞ்சதுல ரியலி பீல் ஹாப்பி. உங்ககிட்ட இப்போ நான் பொய் சொன்னது ஆகாதில்ல…” என கண்ணடித்து அவள் “நான் போறேன். டேப்லெட் போட்டது தூக்கம் வருது..” என சென்றுவிட

இவனுக்கு தான் சொல்லமுடியா உணர்வு. அவனை வந்து உலுக்கிய அர்ஜுனிடம் நடந்ததை கூறி “இவ என்னமாதிரி பொண்ணுடா. என்கிட்ட பொய் சொல்லிட்டா. நான் பீல் பண்ணா தாங்கமுடிலேன்னு அந்த பொய் உண்மையாக்க அடிபட்டத்துல சந்தோசம்னு சொல்லிட்டு போறா. நான் அவளை அடிச்சபோதுகூட கலங்காதவ என்ன பத்தி ஒரு வார்த்தை சொன்னதுகூட தாங்கமுடியாம இன்னும் கூட அடிச்சுக்கோங்க பட் ப்ளீஸ் இப்டி உங்கள ஹர்ட் பண்ணி பேசாதீங்கன்னு என்கிட்டேயே கெஞ்சுறா. நான்தான் அவளை கஷ்டப்படுத்துறேன்னு கவலையா இருக்குடா. ”

அர்ஜுன் “அப்படி எல்லாம் இல்லை மச்சான். அவ பண்ணதும் தப்புதானே.”

ஆதி “தப்பு அவமேல மட்டும் இல்ல. அவள சீண்டி விளையாட நினச்சு நானும் அப்டி பேசுனதுதானே, அவ சொன்ன பாத்தியா? அவளுக்காக நான் பீல் பண்ணுவேன் ரியாக்ட் பண்ணுவேன்னு அவளுக்கு தெரியல, புரியலன்னு அதுதான் நிஜம். அவளுக்கு புரியாத விஷயத்துல அவ அந்தமாதிரி தானே இருப்பா. அவ இப்படி ஏதாவது திங்க் பண்ணுவான்னு தெரிஞ்சும் நான் அப்படி வெறுப்பேத்த பேசுனது தப்பு, அப்புறமும் அத உடனே அவளுக்கு புரியவெக்கமா அப்டியே விட்டுட்டு போனது எல்லாமே தப்புதானே. இப்போ கூட பாரு. அவளுக்கு பெயின் ரொம்ப இருக்கு. வலில கண்ணே கலங்கிடிச்சு. இருந்தாலும் நான் பீல் பண்ணுவேன்னு எதுவுமே ஆகாதமாதிரி ரியாக்ட் பன்னிட்டு போற” என அவளுக்காக இவன் வருந்த

அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுக்க ஆதி “என் மேல அவளுக்கு எவ்ளோ அன்பு இருக்குனே புரிஞ்சுக்காம இத்தனையும் எனக்காக பண்ரா. என் காதலையும், அவ காதலையும் அவளா உணர்ந்தா அது போதும்டா. எனக்கு போதும் போதும்ங்கிற அளவுக்கு அவ எனக்கு அன்ப கொடுப்பா. காதலிக்கறது சுகம்னா அவங்களால காதலிக்கப்படறது அதைவிட சுகம்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட காதலை என் தியாகிட்ட இருந்து வாழ்நாள் முழுக்க எனக்கு வாங்கிக்கனும்னு ஆசையா இருக்குடா. அவ மொத்த காதலும் ஒரு துளிகூட மிச்சம் இல்லாம எனக்கே எனக்குன்னு எடுத்துக்க தோணுது…அவளுக்கு எல்லாமாவும் நானே இருக்கனும். அவளுக்கு எதுனாலும் நான் வேணும்னு அவ மனசு சொல்லணும். அப்படி ஒரு காதல் எங்களுக்குள்ள வேணும். என்னால முடியல மச்சான். மூச்சு முட்டுது. அவ இல்லாம. என் தியாவுக்கு நான் எவ்ளோ முக்கியம்னா அவ இத்தனை விஷயம் மாத்திப்பா…பாத்து பாத்து பண்ணுவா. ஆனா அத எப்போ டா அவ புரிஞ்சுப்பா. என அவன் புலம்ப அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது.

“டேய், விடு டா. எங்க கல்யாணம் முடியறதுக்குள்ள உங்க கல்யாணம் நடக்கும். சீக்கிரம் புரிஞ்சுப்பா… நிம்மதியா போ…. நாளைக்கு ஊருக்கு போகணும்” என அவன் சொல்ல பெருமூச்சுடன் அறையை நோக்கி சென்றான்.

 

 

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 18ராணி மங்கம்மாள் – 18

18. சேதுபதியின் சந்திப்பு மதுரைப் பெருநாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள்.

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04   வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69

69 – மனதை மாற்றிவிட்டாய் அங்கே கூடியிருந்தவர்கள் ஆதி குடும்பத்தினர், சுந்தர் குடும்பத்தினர், ஈஸ்வரியின் அண்ணன் குடும்பத்தினர். ஈஸ்வரி தனது அண்ணன்களிடம் உதவி கேட்க இந்த பாவத்துக்கு எங்களையும் துணை போக சொல்றியா? என அண்ணிகள் கேட்க அவர்கள் குடும்பம் கைவிரித்துவிட