Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 4

“அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன். “வாட்”  என்று கத்திவிட்டாள்

பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள்.

தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின் வாழ்வை சரிசெய்யவே இயலாதா என்று சோர்ந்து போனால்.அவளின் அதிர்ச்சியையும் அடுத்து அவள் முகம் யோசனைக்கு சென்று சோர்ந்து போனதை பார்த்து கொண்டிருந்தவன்.                                                                                                                     அட செல்ல குட்டி டக்கு டக்குனு ரியாக்க்ஷன் மாத்துரியே.நீ கண்ணுலயே அபிநயம் பிடிக்கிறத பார்த்தா மாமா கண்ட்ரோல் மிஸ் ஆகுது செல்லம் என்று மயங்கினான்.தீவிரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் காரணம் கேட்க.

கீதா சுவாதியின் குணத்தைபற்றி சொன்னாள்.மற்றவர்கள் பொருளை தொடவே மாட்டாள் சார்.மாலதி கூட இவள் டிரஸ் மாத்தி காலேஜ்கு போட்டு போவாள் ஆனால் பிறகு அவளையே அந்த டிரஸை வைத்துக்கொள்ள சொல்லிவிடுவாள்.என்னுடையது எனக்கு மட்டும் தான் என்று எண்ணுபவள்.ஆனால் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள்.அவள் பயந்த சுபாவம் அதனால் எங்கு சென்றாலும் சுதி அவளுடன் காவலுக்கு செல்வாள்.

மற்றவர்கள் பொருளுக்கு ஆசைபடக்கூடாது என்று நினைப்பவள்.உங்கள் அண்ணன் காதலித்தது மாலதியை என்றால் பிறகு அபி என்று சொல்லவந்தவள் எப்படி சொல்வது என்று நினைத்து நிறுத்திவிட்டாள்.அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதை ஊகித்தவன்.எனக்கும் அதுதான் புரியவில்லை.ஆனால் நிச்சயம் என் அண்ணன் தவறான எண்ணத்தோடு எந்த விஷயமும் செய்திருக்கமாட்டார் என்றவன், தவறான நோக்கத்தோடு இருந்திருந்தாள் நிச்சயம் தன்னிலை மறக்கும் அளவு மாறி இருக்கமாட்டார் என்றும் கூறினான்.

கீதா புரியாமல் பார்ப்பதை உணர்ந்தவன்.இப்போது இருக்கும் அர்ஜீன் எங்களிடம் இருந்து விலகியே இருக்கிறான்.எப்போதும் ஹாஸ்பிட்டல் நோயாளி என்றே இருக்கிறான்.அவன் சாப்பிடுகிறானா இல்லையா என்பதுகூட எங்களுக்கு தெரிவதில்லை.அவன் தான் பேசவில்லை நாமாக பேசுவோம் என்றாலும் என்ன கேட்டாலும் ஆமாம் இல்லை என்ற இரண்டு பதில் தான்.            முகத்தில் எப்போதும் சோகம் உயிரற்ற கண்களுடன் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்றான்.

நகுலன் சொல்வதை கேட்ட கீதா இவர்கள் இருவரும் நிச்சயம் தவறாக புரிந்து கொண்டு பிரிந்திருக்கிறார்கள். இவர்களை சந்தித்து பேசவைத்தால்,எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்  என்றாள்.அவளை கிண்டலாக பார்த்த நகுலன் அர்ஜீன் பெயர் கூறியதர்க்கே வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என்றவர்கள் அவனை பார்த்தவுடன் வேறு எங்காவது சென்றுவிட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றான்.                                                                                                                  “பிறகு என்னதான் சார் செய்வது” என்றாள் சலிப்பாக.

“நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான்.

“வ்வாட்…..” என்று கத்தியவள் முதலில் போல் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க “பக்கத்தில் யாரும் இல்லை அதனால் தான் இப்போது சொன்னேன்” என்றான்.

“உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கேட்பீர்கள்” என்றவள் அவன் பதில் சொல்வதற்கு முன் எழுந்து கொண்டவள் “நான் செல்கிறேன்.நீங்கள் உளறுவதை எல்லாம் என்னால் கேட்க முடியாது” என்று விறுவிறுவென அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தவள் அவனை வசைபாடி கொண்டே இருந்தாள்.

அவளை உரசினார் போல் கார் வந்து நிற்கவும் துள்ளி குதித்து யார் என்று பார்க்க நகுலன் தான்.ஆனால் இம்முறை அவன் முகம் கருத்து இறுகி இருந்தது.”வண்டியில் ஏறு” என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.நகுலின் கோபத்தில் ஒரு நிமிடம் திகைத்துதான் போனாள்.அடுத்த நிமிடம் இவன் யார் எனக்கு ஆர்டர் போட என்ற வீம்பு எழ முகத்தை திருப்பி பஸ் வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள்.

 

கோபமான நகுல் கடவுளே இவளுக்கு அழகையும் திமிரையும் அதிகம் கொடுத்த நீ அறிவையும் பொறுமையையும் கூட கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று மனதில் நினைத்து அவனும் காரைவிட்டு இறங்கி கீதாவின் கையை பிடித்து வா என்றால் வரமாட்டாயா சொல்வதை முழுதாக கேட்காமல் வந்து விட்டு இப்போது அனைவரின் முன்பும் சீன் கிரியேட் செய்யாதே என்றான் கோபமாக.

பேருந்துக்கு நிற்பவர்கள் அனைவரும் தங்களையே பார்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து அனைவரையும் பார்த்தாள் அவர்களின் பார்வை கோர்த்திருக்கும் தங்கள் கைகளில் இருப்பதை பார்த்தவள்.இவன் ஒன்று எப்போது பார்த்தாலும் கைகளை பிடித்து கொள்கிறான் என்று நினைத்து கொண்டாள்.

ஒரு வயதான தம்பதி இவர்களை நெருங்கி “இங்கே பாரம்மா கணவன் மனைவி என்றாள் சண்டை வருவது சாதாரணம் அதற்காக வீட்டை விட்டு வரக்கூடாது.என்ன சண்டை இருந்தாலும் வீட்டில் வைத்தே பேசி கொள்ள வேண்டும் நாலு பேர் வேடிக்கை பார்க்கும் அளவு நடந்து கொள்ளகூடாது.பார் உன் மேல் கோபம் இருந்தாலும் தம்பி வீட்டில் போய் பேசி கொள்ளலாம் என்று கூப்பிடுகிறது இல்லையா… போம்மா என்று சொல்ல அவர்கள் சொல்வதை கேட்டு நகுல் சந்தோசபட்டு சிறு சிரிப்புடன் “தேங்யூ ஆண்ட்டி” என்று கூற கீதாவோ மேலும் கோபமாக அவர்களை முறைத்துவிட்டு காரில் சென்று ஏறினாள். கார் யாரும் இல்லாத இடம் நோக்கி சென்றது.

சாலையின் ஓரமாக காரை நிறுத்தியவன் காரை லாக் செய்தான்.அவன் செய்வதை பார்த்து கீதா முறைக்க பேசும் போது நீ மீண்டும் இறங்கி போய்விட்டாள் என்ன செய்வது உனக்கு பின்னால் வந்து கெஞ்சி கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று விரைப்பாக வெளியில் சொன்னவன் உன்னை கொஞ்சதான் விருப்பம் என்று மனதில் நினைத்து கொண்டான் இவளிடம் கோபமாக பேசினால் தான் வேலையாகும் என்பதை உணர்ந்து.

“உன் தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் சொல் நான் உன்னிடம் மேற்கொண்டு பேசவேண்டியதை சொல்கிறேன் இல்லை என்றால் இப்போதே இறங்கி சென்றுவிடு எனக்கு நான் பேசி முடிக்கும் வரை யார் குறுக்கில் பேசினாலும் எழுந்து சென்றாலும் பிடிக்காது” என்றவன்.கார் லாக்கை ரிலீஸ் செய்தான்.

“எனக்கும் என் தோழியின் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்கிறது அதற்காக நீங்கள் கண்டபடி உளருவதை என்னால் அனுமதிக்க முடியாது” என்றாள் கோபமாக.

‘என்னை திருமணம் செய்துகொள் என்று கூறுவது இவளுக்கு உளரல் போல் தெரிகிறதா ஏன் இவளுக்கு என்னை பிடிக்கவில்லையா’ என்று யோசித்தவன். ‘சரி இவளுக்கு பிடிக்கவில்லை என்றால் அண்ணன் வாழ்வு சரியானதும் இவளுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடலாம்’ என்று மனம் கனக்க முடிவெடுத்தவன். அதை அவளிடம் கூறினான்.

சிறிது நேரம் யோசித்தவள் நமக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை இவன் சொல்வது போல் செய்தால் திருமணம் செய்துகொள் என்ற தாயின் தொல்லை குறையும் சுவாதி வாழ்வையும் சரி செய்துவிடலாம் அமெரிக்காவிற்க்கு செல்வதற்கான முயற்ச்சியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

தன்னுடைய லட்சியமாக அவள் நினைத்து கொண்டு இருப்பது அமெரிக்காவிற்க்கு சென்று அவர்களே வியக்கும் படி வேலை செய்து இந்தியர்களின் திறமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்பதே அதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்றுதான் இவள் திருமணத்தை தள்ளி போட்டது.இப்போது இரு பிரச்சனைக்கும் தீர்வு போல் நகுல் சொல்வதால் சந்தோசமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு ஏன் சம்மதித்தோம் ஏன் இந்த திருமணத்தை செய்து கொண்டோம் என்ற கவலையில் தான்,தன்னுடைய கனவை நிறைவேற்ற அமெரிக்கா செல்ல போகிறாள் என்பதை அறியாமல்.

கீதாவின் சம்மதம் கிடைத்தவுடன் எதன் அடிப்படையில் இந்த சம்மதம் என்று அவளிடமே கேட்டான் பதிலை தெரிந்து கொண்டு.அந்த காரணத்தை அவள் கூறகூடாது என்று அவசரமாக கடவுளுக்கு வேண்டுதல் வைக்க, கடவுள் உன்னுடைய வேண்டுதல் நிராகரிக்கபட்டது என்று கூறும் வகையில் “அதுதான் டைவர்ஸ் தருவதாக சொன்னீர்களே… அதுமட்டும் இல்லை என் தோழியின் வாழ்வில் எனக்கும் அக்கறை இருக்கிறது” என்றாள்.

அவன் எந்த காரணத்தை அவள் சொல்ல கூடாது என்று நினைத்தானோ அதே காரணத்தை அவள் கூறவும் தன்னுள் இருகியவன் தன்னுடைய பிளானை சொன்னான்.

கேட்டவள் சந்தோஷமாக தலையை ஆட்ட,அவனோ “நான் நமது பிளானின் முதல் கட்டமாக இன்னோரு பிளானை செய்துவிட்டேன்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்.”என்ன பிளான்” என்று கேட்க “காலையில் உன் ஆபிஸில் இருந்து நாம் வரும்போது அண்ணி நம்மை பார்த்துவிட்டார்கள்”

“என்ன……எப்படி அவளை அவளுடைய ஆபிஸில் இறக்கிவிட்டுதானே நான் வந்தேன்.அது மட்டும் இல்லாமல் உங்கள் பிளானை பற்றி இப்போதுதான் என்னிடம் சொன்னீர்கள்.எந்த தைரியத்தில் இப்படி செய்தீர்கள்” என்றாள் கோபமாக.

“உன் தோழியின் நல்வாழ்விற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீ நினைப்பது எனக்கு தெரியும்.அதனால் எப்படியும் என் பிளானிற்கு நீ ஒத்து கொள்வாய் என்றும் எனக்கு தெரியும்” என்றவன் “நம்மிடம் அதிக நேரம் இல்லை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அபியையும் அண்ணியையும் என் குடும்பத்தின் முன் கொண்டு வரவேண்டும் அதற்காகதான் இப்படி செய்தேன்” என்றான்.

அவன் கூறுவது சரி என்று படவே அவளும் அமைதியானாள்.

“இன்று நாம் இருவரும் ஒன்றாக காரில் ஏறியதையும்,நாம் அதாவது நீ திரும்பி இருந்ததால் நான் சிரித்து பேசியதை அண்ணி பார்த்து ஷாக்காகி நின்றுவிட்டார்கள். அண்ணியுடைய ஆபிஸ் எம்.டி என்னுடைய பிரண்ட் அவர்களின் கம்பெனியுடனும் டீலிங் இருக்கிறது.அந்த மீட்டிங் அட்டண்ட்  பண்ணதான் நான் திருச்சி வந்தேன்.                                                                                                                                      வேலை முடிந்து சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க போன வாரம் பார்க்குக்கு வந்தேன் வந்த இடத்தில்,அபியை பார்த்து ஷாக்காகிவிட்டேன் ஏன் என்றால் நான் சின்ன வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்தான்.அதனால் அவனை யார் என்று அறிய அடுத்தநாள் வந்தேன் ஐந்து மணி போல் ஒரு வயதானவர் அபியை அழைத்து வந்தார்.

நான் அங்கு இருக்கும் மர நிழலில் அமர்ந்து கவனித்தேன்.அவர் கிளம்பவும் அவர் பின்னாடி சென்று அட்ரஸை கண்டுபிடித்து தனியார் டிடெக்டிவ் வைத்திருக்கும் நண்பனின் மூலமாக விசாரித்து பாதி தெரிந்து கொண்டேன்.

என் அண்ணனின் மூலமாக பாதி தெரிந்து கொண்டேன்” என்றவனை புரியாமல் பார்த்தவள்,

“உங்கள் அண்ணன் யாருடனும் பேசுவதில்லை என்றீர்கள் பிறகெப்படி” என்று கேட்க “அண்ணன் சுயநினைவு இல்லாமல் உளறியவை” என்றவனை அதிர்ச்சியாக பார்க்க “அண்ணன் நாகபட்டினம் சென்றதும் அங்கு ஏதோ பெரிய பணக்காரனிடம் சண்டைவந்தது என்பது வரை தான் எங்களுக்குத் தெரியும்.

நாங்களும் அவனுக்கு பக்க பலமாக இருந்து எந்த ஆபத்தும் அவனுக்கு வராமல் பார்த்து கொண்டோம் பிறகு அந்த பணகாரனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தாச்சு என்று அப்பா சொன்னார்கள்.நான் அந்த சமயம் பிஸ்னஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்தேன்.

வெளிநாடு டிரிப் முடிந்து நான் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இருந்த அனைவரும் கவலையில் இருந்தனர். என்னவென்று நான் கேட்க அர்ஜீன் திடீர் என்று ஒன்றும் சொல்லாமல் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும் காய்ச்சல் அதிகமாக இருப்பதால் டாக்டர் செக் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினர்.

நான் சென்று பார்த்து கொள்வதாக சொல்லி அன்று அண்ணனுடன் தங்கிவிட்டேன். அப்போது தான் அண்ணன் என்னை மன்னித்துவிடு வது,தயவு செய்து என்னிடம் வந்துவிடு வது என்று ஒரே புலம்பல் எல்லாம் சரியாகிவிடும் என்று தேற்றி அன்று அண்ணனை தூங்கவைக்க டாக்டர் தூக்கமாத்திரை கொடுத்துதான் தூங்க வைத்தார் என்றான்.இன்றிலிருந்தே நம் நாடகம் துவங்குகிறது.

மாலை அண்ணி கண்டிப்பாக என்னைபற்றி கேட்பார்கள் நீ ஏதாவது சொல்லி சமாளி” எனறான்.

“சரி சார்” எனறவளை முறைத்தவன் “நாம் இருவரும் காதலர்கள்” என்றான். அந்த வார்த்தை கீதாவினுள் ஏதோ செய்ய ஒன்றும் சொல்லாமல் நகுலயே பார்த்தால்.அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் திணறியவன்.                                                                                                                                                                          கண்களை ஒருமுறை இறுக மூடி திறந்தவன் “இனிமேல் என்னை சார் என்று கூப்பிடாதே, என் நண்பர்கள் என்னை நகுல் என்று தான் கூப்பிடுவார்கள் நீயும் அப்படியே கூப்பிடு” என்றவன் “நான் உன் ஆபிஸிலேயே இறக்கிவிடுகிறேன்” என்று கூறி வண்டியை எடுத்தான்.

ஆபிஸ்வந்த கீதாவை தோழிகள் சூழ்ந்துகொண்டு ஓட்டி எடுத்துவிட்டார்கள்.எம்.டியின் மூலம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதை ஊகித்தவள்.

‘அட பாவி நளா என்னை வேறு எங்காவது பார்த்து வந்த விஷயத்தை சொல்லியிருக்க கூடாதா இப்படி மொத்த ஆபிஸிக்கும் என்னை பொறி உருண்டை ஆக்கிவிட்டாயே’ என்று திட்டிகொண்டிருந்தவள் திடிக்கிட்டு போனால்,நான் எதற்கு அவனையே நினைத்து கொண்டிருக்கிறேன் என்று யோசித்து கொண்டிருந்தவள், எல்லோரும் கிண்டல்பண்ண அவன் தானே காரணம் அதனால் தான் என்று தனக்கு தானே ஆறுதல் கூறிகொண்டு மாலை சுதியை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

மாலை எப்போதும் போல் சுதியை அழைக்க சென்ற கீதாவை, சுதி கூர்மையாக ஒரு பார்வை பார்த்து வேறு எதுவும் பேசாமல் வண்டியில் அமர்ந்து கொண்டால்.கீதாவோ என்ன பார்வடா இது இப்படி பார்க்கிறாளே,இவள் ஏதாவது கேட்பாள் அதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால் இவள் வாயே திறக்கமாட்டேன்கிறாளே என்று மனதுக்குள் புலம்பியவள் எப்படி இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்க்குள் நுழைந்த சுதி கீதாவை கூர்மையாக பார்த்து இன்று அபி பார்க்குக்கு போக வேண்டும் என்று சொன்னான் வா நாம் இருவரும் அவனை கூட்டி போகலாம் என்றாள்.

கீதா மனதுக்குள் ஹப்பாடி என் செல்லம் என்னிடம் என்கொயரிக்கு ரெடி என்று சொல்வது போல் இருக்கிறதே குரல் என்று நினைத்து உடனே ஒத்துக்கொள்ளாதே கீது கொஞ்சம் பில்டப் குடு என்று மனதினுள்ளே பேசி கொண்டவள்.

“நீ இரு சுதி இங்கு இருக்கிற பார்க்கு தானே நானே அபியை கூட்டி போய் வருகிறேன்” என்றாள்.கீதாவின் பேச்சை காதில் வாங்கியவள்.”என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்ததையும் நான் வாங்க வேண்டும் நீ அபியை பார்த்து கொண்டு இரு நான் போய் வாங்கிவருகிறேன்” என்றவள் கீதா மறுத்து எதுவும் சொல்லிவிடுவாளோ என்று வேகமாக படிகளில் ஏற ஆரம்பித்தாள்.          கீதாவோ மனதில் சிரித்து கொன்டு பார்க்குக்கு தயாரானாள்.இருவரும் தயாராகி அபியை அழைத்து கொண்டு பார்க்குக்கு சென்றனர்.அபி குழந்தைகளுடன் விளையாட கீதா இவளிடம் எப்படி சொல்வது என்று யோசிக்க,சுதியோ தன்னிடம் கூட தோழி காதலிப்பதை மறைத்துவிட்டாளே எப்படி இப்போது பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அபியின் அம்மா என்ற சத்தத்தில் இருவரும் நிகழ் உலகத்திற்கு வந்தனர்.என்னமா என்று இருவரும் சேர்ந்து கேட்க அவர்களை பார்த்து கொஞ்சலாக சிரித்தான் இவன் சிரிப்பின் காரணம் புரியமல் பெண்கள் இருவரும் முழித்து கொண்டிருந்தனர்.

“பந்து அங்க தூரம் விழுந்துடுச்சு அந்த அம்மு இல்ல அவள் போட்டுவிட்டு அந்த பந்து வேண்டும் என்று அழுகிறாள்.நான் போய் எடுத்து வரவா” என்றான்.சுதி தலையை அசைத்ததும் ஓடி சென்றான்.

கீதாவை பார்த்தவள் கேட்க என்று வந்துவிட்டு அமைதியாக இருப்பதில் பலன் இல்லை என்று யோசித்து பேச ஆரம்பிக்கும் போது ஏதோ டமார் என்ற சத்தமும் அச்சச்சோ என்ற சத்தமும் தொடர்ந்து கேட்க தோழிகள் இருவரும் அபி வெளியில் சென்றானே என்ற பயத்துடன் பார்க்குக்கு வெளியில் வர அங்கு அபி ஒருவர் கையில் அழுது கொண்டிருந்தான்.அவன் பார்வை வேறு இடத்தில் இருந்தது தோழிகள் இருவரும் அபியை பார்த்து நிம்மதி அடைந்தனர்.வேகமாக அவனிடம் சென்ற கீதா அவரிடம்  இருந்து அபியை கைகளில் வாங்கி கொண்டாள்.

அபியை சமாதானபடுத்தும் விதமாக “ஒன்னும் இல்ல ராஜா அழக்கூடாது” என்று சொல்லி கொண்டிருந்தாள்.அதே நேரம் இவன் எதற்கு ரோட்டின் பக்கம் வந்தான் என்று யோசித்து கொண்டே அவன் பார்வை வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்து யாரை பார்க்கிறான் என்று கூட்டத்தை விலக்கி பார்த்த தோழிகள் இருவரும் அதிர்ந்தனர்.ஏனென்றால் இரத்த வெள்ளத்தில் கீழே அடிபட்டு கிடந்தது வள்ளி தோழிகள் இருவரும் அம்மா என்று கத்த கூட திறானி அற்றவர்களாக கண்களில் நீருடன் வள்ளியை கட்டி கொண்டு அழுதனர்.உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த நல்லவரின் உதவியுடன் மருத்துவமனை சென்றனர்.

 

செல்லும் முன் அங்கிருந்தவர்கள் சொன்னதை வைத்துதான் தெரிந்தது அபியை காப்பாற்ற போய்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று, இதை கேட்ட சுதிக்கு மேலும் அழுகை பொங்க “ஏன்மா இப்படி செய்தீர்கள்.நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் உங்கள் உயிரை கொடுத்து இவனை காப்பாற்றி இருக்கிறீர்கள் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்” என்று அழுதவளின் வாயை மூடிய வள்ளி “என் பேரன்” என்று மெதுவாக சொல்ல தோழிகள் இருவருக்கும் அழுகை பொங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 14

காலையில் எழுந்து மனைவியை தேடிய நகுல் அவளை காணாமல் கீழே சென்றான்.செல்லும் முன் ஒரு முறை கண்ணாடியை பார்த்துவிட்டு சென்று இருக்கலாம் விதி யாரை விட்டது.               அம்மா காபி என்று அமர்ந்தவன் அப்பா தன்னை விசித்திரமாக பார்ப்பதை பார்த்து “என்னப்பா அப்படி

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

“பேயாவது ஒன்றாவது” என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது. “அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 5

மருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள்.மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதாள். “என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி