Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3

கீதா கம்பெனிக்கு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக அபியுடன் விளையாண்டு பொழுதை கரைத்தாள்.வள்ளி வந்து சாப்பிட அழைத்தவுடன் தான் இருவரும் சாப்பிடவே சென்றனர்.

மாலை அபி வந்து அழைக்கவும் பார்க்குக்கு சென்றாள்.அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தது.

கீதா நேரமாவதை உணர்ந்தவள் அபி குட்டி வாடா கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம் பாட்டி தேடுவாங்க,என்றவுடன் கீது இன்னும் கொஞ்ச நேரம் என்று தலைசாய்த்து கண்களை சுருக்கி கேட்ட அழகில் கீதா வழக்கம் போல் மயங்கிதான் போனால்.அந்த அழகை ரசித்துவிட்டு மாட்டேன் என்றா சொல்வாள்.ஆனால் கண்டிபாக பார்த்து பைவ் மினிட்ஸ்தான் என்று சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேளையை ஆரம்பித்தாள்.

 

ஐந்து நிமிடம் என்றது அரைமணி நேரம் ஆன பிறகும் அபி இன்னும் கொஞ்ச நேரம் கதைபாடுவதை நிறுத்தவில்லை என்பதை உணர்ந்தவள் தன் நாடகத்தை ஆரம்பித்தாள்.

கோவிலுக்கு தனியாக போக பயமாக இருக்கிறது என்றுதான் பெரிய மனிதன் என்று உன்னை கூட்டி வந்தேன் நீ என்னவென்றாள் சின்ன பிள்ளைமாதிரி நடந்து கொள்கிறாய்.சரி இன்று கோவிலுக்கு போக வேண்டாம் நாளை அப்பாவுடன் போய் கொள்கிறேன் என்று போலியாக பெருமூச்சுவிட்டாள்.                                  அபி பிளே ஸ்கூல் போவதால் எப்போதும் தன்னை பெரிய பையன் என்று கூறிகொள்வான் அதனால்தான் கீதாவும் அவ்வாறு கூறினாள்.அபி உடனே நோ கீது நா பிக் பாய்தான் இந்த சுஸ்மி என்னை விடவே மாட்டிக்கிறாள் சின்ன பிள்ளை போல் என்னுடன் விளையாடுனு சொல்லிக்கிட்டே இருக்கா உனக்கு தனியா போக பயமா இருந்தா என் கூட வா நான் கூட்டிட்டுபோறேன்.                            இந்த சின்ன பிள்ளைங்க பாவம்னு கொஞ்ச நேரம் விளையாண்டா பொழுதுக்கும் விளையாட சொல்றாங்க பேட் கேர்ஸ் என்றான் பெரிய மனித தோரணையில்.

சற்று முன் விளையாட அனுமதி கேட்டது என்ன இப்போது பேசும் அழகென்ன என்று ரசித்து சிரித்தவள் சரியான போக்கிரி என்று மனதில் நினைத்துக்கொண்டு இவன் சொல்லும் போதே கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வேகவேகமாக சென்றவள் எதிரே வந்தவனின் மார்பில் மோதிக்கொண்டாள்.

முன்னாடி யார் வருகிறார்கள் என்று பார்க்காமல் வேகமாக வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்து கொண்டு சாரி சார் நான் குழந்தையை பார்த்துக்கொண்டு வந்ததால் உங்களை கவனிக்கவில்லை ஐயம் எக்ஸ்ட்ரிம்லி சாரி சார் என்று பட படவென்று கூறியவள்.என்ன ஒன்னும் பேசவில்லை என்று நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியபட்டு போனாள்.

ஆறடி உயரத்துடனும் கோதுமை நிறத்துடனும் கூர் நாசியுடன் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை தன்னுள் அதிர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தவள்.அதை பற்றி யோசிக்காமல் ஒதுக்கினாள்.அந்த நேரத்திலும் பனை மரத்தில் பாதி இருப்பான் போல என்று கிண்டலாக நினைத்துக்கொண்டாள்.

அபி உளுக்கவும் தன்னிலை அடைந்தவள் அந்த இடத்தை விட்டு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றுவிட்டாள்.அவனோ அவள் வருவதை பார்த்து அவளிடம் பேசலாம் என்று வந்தவன்.அவள் கண்கள் காட்டும் ஜாடையை ஒவ்வொன்றாக ரசித்தான்.

முதலில் யாரோ மீது மோதிவிட்டோமே என்ற கலக்கம் பிறகு சரியாக கவனிக்காமல் வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே மனதில் மானசீகமாக கொட்டிகொள்வது கடைசியில் அவனை மேலும் கீழும் பார்த்து கண்களால் சிரித்து அவனின் உயரத்தை கிண்டல் செய்வது போல் சிரித்தது அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு எப்படி ஒருவரால் கண்களாலேயே தன் உணர்வுகளை காட்டமுடிகிறது என்று ஆச்சரியபட்டு போனான்.

அப்படியே  நின்றவன் தன்னிலை அடையும் போது வெகு நேரம் ஆகி இருந்தது.ச்ச்ச………. பேச வந்த விஷயத்தைவிட்டு விட்டு அவள் கண்களை பார்த்து என்ன பேச வந்தோம் என்பதையே மறம்துவிட்டேனே,வெரி டேஞ்சரஸ் ஐஸ் என்று தலையை குழுக்கி கொண்டவன்.இவளிடம் இனி பேசும் போது கண்ணை பார்க்கவே கூடாது என்று தன்னால் கடைபிடிக்க முடியாத முடிவுக்கு வந்தான்.

ஒருவாரம் கடந்த நிலையில் அன்று ஆபிஸ்க்கு சென்ற கீதாவிற்க்கு அதிர்ச்சியே காத்திருந்தது.ஆபிஸ் போனவள் வேலையில் மூழ்கிபோனாள். பியூன் வந்து தன்னை அழைக்கும் வரை.

மேடம் என்று சத்தமாக அழைத்த பிறகே பியூன் தன்னை அழைப்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து என்ன அண்ணா எதற்கு இப்படி கத்துகிறீர்கள் எனக்கு நன்றாக காது கேட்கும் என்றாள் கிண்டலாக.அதற்கு அந்த வயது முதிர்ந்த பியூனோ அவளை பார்த்து மென்மையாக சிரித்து.உங்களை மூன்று முறை கூப்பிட்டேன் மேடம் நீங்கள் கவனிக்கவில்லை என்றவர் எம்.டி சார் உங்களை வர சொன்னார் என்று சொல்லிவிட்டு தன் பணி முடிந்தது என்னும் வகையில் அங்கிருந்து கிளம்பினார்.

‘என்ன கீதா உனக்கு வந்த சோதனை இவர் எதுக்கு உன்னை கூப்பிடுகிறார்’ என்று நினைத்தவள். ‘சரி விடு எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா’ என்று தனக்குள் கூறியவாறு எம்.டி அறையை நோக்கி சென்றாள்.

கதவை தட்டி அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றவள் அதிர்ந்து தான் போனாள்.ஏன் என்றால் எம்.டி சீட்டிற்கு எதிர் புறம் அமர்ந்திருந்தவன் போன வாரம் பார்க்கில் மோதியவன்.இவன் எதற்கு இங்கு வந்தான் என்று யோசிக்கும் போதே அதற்கான விடையை சொல்வது போல் அவளின் எம்.டி வரதராஜன் பேச ஆரம்பித்தார்.

“வாம்மா கீதா… உனக்கு என்கேஜ்மண்ட் முடிந்த விஷயத்தை என்னிடம் நீ சொல்லவே இல்லை சார் தான் சொன்னார்.சாரை எனக்கு நன்றாக தெரியும் போர்டு மீட்டிங்கில் நிறைய முறை சந்தித்து பேசி இருக்கிறோம்” என்றார்.

இவரிடம் தான் நம்முடைய பல டீலிங் முடிந்திருக்கிறது என்று பேசிக்கொண்டே போக கீதாவோ பேச்சின் ஆரம்பத்திலேயே அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்து சிலையானாள்.                        இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தால்  இப்படி எல்லாம் சொல்லி இருப்பான் என்று மனதுக்குள் குமைந்து கொண்டு இருந்தவள் தன் எம்.டி இன்னும் பேசி கொண்டிருப்பதை உணர்ந்தவள், “சார்…” என்ற வார்த்தையை மட்டும் தான் சொன்னாள்.       அதற்குள் அந்த பனை மரத்தில் பாதி வளர்ந்தவன் அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை ஊகித்தவன் போன்று, அவனே பேச ஆரம்பித்தான்.

“சார் நேற்று இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். திடீரென முக்கியமான மீட்டிங் அரேஞ்பண்ணிவிட்டர்கள் என்னால் அவளை சந்திக்க போக முடியவில்லை, அதனால் மேடம் என்மேல் கோபத்தில் இருக்கிறார்கள்.அதை சரி செய்யதான் வெளியில் அழைத்து செல்ல உங்கள் அனுமதி கேட்கிறேன்” என்று சரமாரியாக பொய்யை அவிழ்த்துவிட்டான்.

 

அவன் பொய்யால் கோபத்தின் உச்சிக்கு சென்றதால் அவள் முகம் சிவக்க அதற்கு எம்.டியோ “என்னமா நீ வேலையில் இருக்கும் உனக்கே தெரியும் திடிர் என்று சில சமயம் கிளையண்ட் மீட்டிங் அரேஞ் பண்ணுவார்கள் என்று இதற்காக கோபப்படலாமா” என்று சில பல அட்வைஸ்களை வழங்க கீதாவிற்கு பிபி எகிறி கொண்டிருந்தது.

“போம்மா போய் அவருடன் சமாதானமாகு உனக்காகவும் வருங்காலத்தில் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்காகவும் தான் அவர் சம்பாதிக்கிறார்.அது புரியாமல் இவருடன் சண்டை போடாமல் சமாதானமாக பேசு மா என்று சொன்னவுடன்.

அவர் பேசுவதை கேட்ட இருவருமே அதிர்ந்துதான் போனர்.இதற்குமேல் இவரை பேச விட்டால் இவளை சமாளிப்பது கஷ்டம் என்று உணர்ந்தவன் உடனே எழுந்து “நன்றி சார்.இன்று ஒரு நாள் லீவ் இவளுக்கு கொடுத்து விடுங்கள்” என்று கூறியவன் கை பிடித்து அவர் அறையில் இருந்து இழுத்து வந்தான்.

எம்.டி பேசுவதை கேட்டு கீதாவிற்கு கோபம் ஏறிகொண்டே போக அவனோ அவளின் கை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்து சென்றது ஒரு மாதிரி இருந்தாலும்,இவன் எதற்கு இப்படி ஒரு பொய்யை சொன்னான் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது.        எம்.டி சார் சொல்வதை வைத்து பார்த்தால் இவன் பெரிய பணக்காரன் என்று தெரிகிறது.என்னிடம் பேச இவனுக்கு என்ன இருக்கிறது.போன வாரம் பார்த்ததுக்குள் என்று யோசித்தவளின் மனதில் பொறி தட்டியது.இவன் போன வாரம் பார்க்கில் அபியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தானே அபி விஷயமாக இருக்குமோ என்று யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டவள்,இவன் தன்னிடம் ஏதோ பேசதானே கூப்பிடுகிறான் என்ன சொல்கிறான் என்பதை கேட்போமே பார்க்க ஒன்றும் மோசமாக நடந்து கொள்பவன் போல் தெரியவில்லை.அப்படியே முயற்சி செய்தாலும் நான் கற்ற கராத்தே எனக்கு துணை இருக்கிறது.ஒரு வேளை நான் நினைத்த விஷயம் என்றால் மகிழ்ச்சி என்று யோசித்து அவன் சொன்ன பொய்யை தடுக்காமல் அமைதியாக இருந்தாள்.

இருவரும் கை பிடித்து நடந்து வருவதை பார்த்த அனைவரும் கீதாவை ஆச்சரியமாக பார்க்க அதை உணர்ந்து சங்கடமாக அவனையும் அவன் கையில் இருந்த தன் விரல்களையும் பார்த்து தன் விரல்களை உருவ முயன்றாள்,அவனின் பிடி மேலும் இறுகியதே தவிர அவளை விடவில்லை.வேறு வழி இன்றி கீதாவே கையை விடுங்கள் நானே வருகிறேன்,அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றாள்.அவனும் புரிந்து கொண்டு சாரி நான் வேண்டும் என்று பிடிக்கவில்லை,உங்கள் எம்.டி பேசிகொண்டே இருந்தார் அவரிடம் இருந்து தப்பிக்க தான் என்றான்.அவன் கூறிய சமாதானத்தை ஏற்றுகொண்டாலும் அவனை கூர்மையாக பார்த்து யார் நீங்கள் என்றாள்.

“காரில் உட்காருங்கள் ஏதாவது சாப்பிட்டு கொண்டே பேசலாம் உங்களுடன் பேசவேண்டும் என்ற டென்சனில் நான் காலையில் சாப்பிடவில்லை ரொம்ப பசிக்கிறது” என்று பாவம் போல் கூறவும் கீதா சிரித்து விட்டால்.

“என்ன சார் நீங்க எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன் என்னிடம் பேச எதற்கு பயப்படவேண்டும்” என்றாள் கிண்டலாக.அவளை கூர்மையாக பார்த்தவன் என்னைபற்றி உனக்கு எப்படி தெரியும் என்றான்.

அவனின் ஒருமை அழைப்பு மனதை பாதிக்க “இங்க பாருங்க சார் முதன் முதலில் பார்க்கும் பெண்ணிடம் இப்படிதான் பேசுவீர்களா மரியாதை கொடுத்து பேசுங்கள்” என்றாள். அவளுக்கு பின்னால் எட்டி பார்த்தவன்,அவன் கண்களில் தான் எதிர்பார்த்தது நடந்துவிட்ட மகிழ்வுடன் திரும்பி கீதாவை பார்த்து சிரித்துகொண்டே “அப்படிங்களா மேடம் ஓகே மேடம்” என்று பணிவு போல் கூறி அவளின் கைபற்றி இழுத்து சென்று காரில் அமர வைத்தான்.

கீதாவோ “என்ன சார் இது… விடுங்க என் கையை…” என்றாள் கோபமாக.

அவளுக்கோ என்ன மனிதன் இவன் எந்த கேள்வி கேட்டாலும் பதில் இல்லை.இவன்பாட்டிற்கு வந்து இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது என்கிறான்.கையை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்துவருகிறான்.போன வாரம்தான் பார்த்த ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது.

நாம் நினைத்த விசயமாக இருக்கும் என்று அமைதியாக இருந்தாள் இவன் பண வசதி தெரிந்ததால் இவனுடன வருகிறேன் என்று நினைப்பான் போல என்ற கோபத்தில் மனதுக்குள் குமுறி கொண்டு இருந்தாள்.அவன் அவளை இழுத்து சென்றான்.ஆம் சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அன்பாக அழைத்து சென்றது போல் தெரியும் ஆனால் அவன் பிடித்த இடம் உடும்பின் பிடிபோல் இருந்ததால் அவன் இழுப்பிற்கு சென்றாள்.

காரில் அமர்ந்தவன் எதிர் பார்த்த ஆள் இவர்களின் காரை நோக்கி வருவதை உணர்ந்து காரை வேகமாக கிளப்பினான்.நினைத்தது நடந்த சந்தோசத்தில் அவன் இருக்க கீதாவோ அவனை திட்டிக்கொண்டே வந்தாள்.

 

பொறுத்து பொறுத்து பார்த்தவன் கீதாவின் வாய் மூடமல் பேசி கொண்டே இல்லை இல்லை அவனை திட்டி கொண்டே இருக்கவும்.இவளை எப்படிதான் இவர்கள் வீட்டில் சமாளிக்கிறார்களோ வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று நினைத்து அவனை பற்றி கூற ஆரம்பித்தான்

“என் பெயர் நகுலன்…” என்றான்.இருந்துவிட்டு போ அதனால் எனக்கென்ன என்பது போல் பார்த்த அவள் பார்வையில் புரிந்து கொண்டவன்.

“நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும். அதனால் தான் அப்படி உங்கள் எம்.டியிடம் சொன்னேன்.நீங்களும் புரிந்து கொண்டுதான் என்னுடன் கார் வரை வந்தீர்கள் இப்போது எதற்காக திட்டுகிறீர்கள்” என்றான்.

அவன் கேள்வி எல்லாம் தெரிந்துதானே வந்தாய் என்ற தொனி இருப்பதை உணர்ந்தவள்.நான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டு “இப்ப மட்டும் இவ்வளவு மரியாதையாக பேசும் நீங்கள் அங்கு ஏன் ஒருமையில் பேசினீர்கள்.ஆபிஸில் அனைவரின் முன்பும் எந்த தைரியத்தில் என் கையை பிடித்து இழுத்து வந்தீர்கள்.அதே போல் எல்லோரும் பார்க்க ரோட்டில் கையை பிடித்து காருக்கு இழுத்து வந்தீர்கள் என்ன உரிமையில் இதை எல்லாம் செய்தீர்கள்” என்று இவ்வளவு நேரம் மனதில் உள்ளதை கொட்டினாள்.

“எந்த உரிமையும் இல்லை.நான் உங்களுடன் பேச வேண்டும் அதனால் அப்படி நடந்து கொண்டேன் அதற்காக இப்போது சாரி கேட்டு கொள்கிறேன் போதுமா இனிமேலாவது அமைதியாக வருவீர்களா” என்றான்

குரலில் பவ்யமாகவும் கண்களில் குறும்புடனும்.இவன்நம்மை கிண்டல் செய்கிறானா சமாதானபடுத்துகிறானா என்று புரியாமல் கீதா குழம்பி அமைதியாகிவிட கார் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் முன் நின்றது.           கேள்வியாக பார்த்தவளிடம், முதலிலேயே சொன்னேனே என்ற பார்வையை நகுல் பார்க்க அமைதியாக இறங்கி நடந்தாள். ஹோட்டலில் ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.

‘என்னிடம் என்னடா பேசணும் சீக்கிரம் சொல்லி தொலையேன். நான் நினைத்த விசயமாக இருக்க வேண்டும். விநாயகா! நான் உனக்கு விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மோதகம் அதிகமாக வைக்கிறேன்’ என்ற வேண்டுதலை வைத்து கொண்டிருந்தாள் மனதிற்குள்.

பேரர் வரவும் என்ன சாப்பிடுகிறாய் என்பது போல் நகுல் பார்க்க, எனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டவும் இருவருக்கும் காபி சொல்லி அனுப்பினான்.

“சொல்லுங்க சார் உங்களுக்கும் அபிக்கும் என்ன சம்பந்தம் “ என்றாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.என் பெயர் நகுல் என்றவனை நக்கலாக பார்த்து அதுதான் சொல்லிட்டிங்களே என்றவளை கூர்மையாக பார்த்தவன்.

“என் அண்ணன் பெயர் அர்ஜூன்” என்றான்.கீதாவின் முகம் மலர்வதை கவனித்தவன்.நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேன் என்று புரிகிறதா என்றான்.

கீதா வேகமாக தலையை ஆட்டி “அர்ஜூன் சார் எப்படி இருக்கிறார்.அவரும் வந்திருக்கிறாரா.அவருக்கும் சுவாதிக்கும் என்ன பிரச்சனை எதனால் அவள் இங்கு வந்து தனியாக கஷ்டபடுகிறாள்..” என்று படபடவென பொறிய நகுல் ஆச்சரியமாக கீதாவை பார்த்து “உங்களுக்கு ஒன்றும் தெரியாதா அண்ணி ஒன்றும் சொல்லவில்லையா” என்றான்.

உடனே அவள் அலுத்துக்கொண்டே “அட போங்க சார்.அதை பற்றி பேசி என்னை கஷ்டபடுத்தாதீங்கனு சொல்லிட்டா.ஊருக்கு போய் என்ன நடந்ததுனு விசாரிக்கலாம் என்று அவள் வளைகாப்பு முடிந்தவுடனே வீட்டில் அனைவரிடமும் சென்னையில் புராஜெக்ட் ஒர்க் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.                                                        என்னை தனியாக கூப்பிட்டு எந்த ஊர் என்று விசாரித்தாள் நான் சொன்னவுடன்,என் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து குழந்தை மீது சத்தியம் வேலை விசயமாக எங்கு வேண்டுமானாலும் போ, என்னைபற்றியோ அவரைபற்றியோ விசாரிக்க கூடாது என்று சொல்லிவிட்டாள்” என்றவளை பார்த்தவன்.

“பிறகு என்ன செய்தீர்கள்” என்ற கேள்வியில்

“வேற என்ன செய்வது அம்மா சாப்பாடு இல்லாமல் நாகபட்டினம் போய் ஹோட்டல் சாப்பாடு பத்து நாள் காஞ்சுபோய் வந்தேன்” என்றாள்.

“அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அவருடைய பெயரே எங்களுக்கு தெரிந்தது” என்றாள் சோகமாக.

“அபியின் பிறந்த நாள் அன்று அம்மா மீண்டும் அபியின் அப்பா என்று ஆரம்பித்தார்கள்.அம்மாவை கை நீட்டி தடுத்தவள் அவரை பற்றி எதாவது விசாரித்தால்  உங்களிடம் கூட சொல்லாமல் எங்காவது சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டாள்.அதன் பிறகு அந்த பேச்சை யாரும் எடுப்பதில்லை”                                                                                                       முதலில் எப்படி எண்ணெயில் போட்ட கடுகாக பொறிந்தவள் அண்ணன் பெயர் சொன்னவுடன் அமைதியாகிவிட்டாள்.அவர்கள் வாழ்வை இணைக்க இவள் கண்டிபாக உதவுவாள் என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன் பேச ஆரம்பித்தான்.

“அவர்களுள் என்ன பிரச்சனை என்று எனக்கும் தெரியாது.ஆனால் எனக்கு ஓரளவு கெஸ் இருக்கிறது.                               அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான்” என்று சொன்னவுடன்.

“வாட்” என்று கத்திவிட்டாள்

1 thought on “சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 3”

  1. கதை சூப்பரா போகுது அடுத்த அப்டேட் சீக்கிரம் போடுங்க அக்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 8

சுதி வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மாலதி ஒரு சில விஷயங்களை செய்துவிட்டு.மற்றொரு சந்தோஷமான விஷயம் என்ன என்று சுதியிடம் சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவளுக்காக காத்திருந்தாள்.                                                                                              மாலதியின் கெட்ட நேரம் அப்போதுதான் ஆரம்பித்தது.ஆம் அவள்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 7

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 9

“பேயாவது ஒன்றாவது” என்று கிண்டல் செய்து சிரித்தது நினைவுக்கு வந்தது. “அப்போ பேய் எல்லாம் உண்மையில் இருக்கிறதா,இல்லை இது யாரோ செய்யும் வேலை நாமே ஒரு நிமிடம் பயந்துவிட்டோமே இது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தவன்.யாராக