Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25

25 – மனதை மாற்றிவிட்டாய்

அவரு லைப்ல என்ன மறக்கவே முடியாதமாதிரி ஒன்னு பண்ணப்போறேன்” என அவள் சொல்லி கண்ணடித்து சிரித்தாள்.

“சரி பசிக்கிது, வாங்க எல்லாரும் சாப்பிடலாம். நான் போயி எடுத்துவெக்கிறேன் என திவி செல்ல

ஆதி மனதில் இப்போ மட்டும் என்ன, நான் உன்னவே தான் நினைச்சிட்டு இருக்கேன். அது எப்போ உனக்கு புரியப்போகுதோ? என நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். இதை கண்ட பெரியோர்கள் அனைவரும் சிரிக்க சேகர் “என்ன மை சன், இதுக்கே பெருமூச்சு விடற? ” என கேட்க

“அப்பா ஏன்பா நீங்க வேற, ஒரு நிமிஷம் நானே என்னன்னவோ எதிர்பார்த்தேன், இவளா இப்படி பேசுறான்னு… எல்லாம் சட்டுனு போயிடிச்சு ”

“இதுக்கு தான் சொல்றோம், கல்யாணம் பண்ணி வெடிச்சிடறோம்னு”

“நோ வே பா, கண்டிப்பா அவ என்ன புரிஞ்சுப்பா. அவளுக்கு என் மேல லவ் வராம மேரேஜ் பண்ண எனக்கு இண்ட்ரெஸ்ஸ்ட் இல்லப்பா. அந்த மாதிரி நான் அவளை கம்பெல் பண்ணக்கூடாது.”

ராஜலிங்கம் “ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை, எங்க பொண்ணு ரொம்ப குடுத்துவெச்சவ..எல்லார்கிட்டேயும் ரொம்ப ஜாலியா இருப்பா, தப்பா எதுவும் எடுத்துக்காதீங்க, சொன்னா புரிஞ்சுப்பா.”

ஆதி “கண்டிப்பா மாமா, அவகிட்ட புடிச்சதே அந்தப்பழக்கம் தான். எல்லாரையும் கலகலப்பா வெச்சுக்கறது. அதே மாதிரி தெரியாம தப்பு பண்ணாலும் அவகிட்ட சொல்லி புரியவெச்சிட்டா போதும். அதுக்குமேல அவ பாத்துப்பா. நீங்க எதுவும் அவளை பத்தி கவலைப்படாதீங்க.”

மகா “ஆனா மாப்பிள்ளை, என்ன யாருகிட்டேயும் அடங்கமாட்டேங்கிறா. எல்லாருக்கும் செல்லம் வேற. அவ இன்னும் முழுசா சில விஷயம் புரிஞ்சுக்காம இருக்கா. அவ உங்கள இம்ச பண்ணிடுவாளேன்னு தான் கவலையா இருக்கு.” என மருமகனுக்காக வருத்தம் கொள்ள

ஆதி சிரித்துவிட்டு “நீங்க கவலைய விடுங்க அத்தை, கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் அவளை நான் பாத்துக்கறேன். என்கிட்ட அந்த அளவுக்கு அவ சொன்ன பேச்ச கேக்காம இருக்கமாட்டா. அண்ட் அவ சில விஷயம் விவரம் தெரியாம விளையாட்டுத்தனமாவே இருக்கறதுல ஒரு நல்லது இருக்கு. சட்டுனு இவளுக்கு லவ் பீலிங்ஸ் எல்லாம் புரியாது. வேற யாரையும் இவ லவ் பண்ணவும் மாட்டா. சோ பிரச்னை இல்ல..” என அனைவரும் சிரிக்க

“உங்க எல்லார்கிட்டயும் இனொரு ரெக்குஸ்ட், அத்தை மாமா இந்த விஷயம் எல்லாம் அவளுக்கு தெரியக்கூடாது. நீங்க என்னை மாப்பிளை கூப்பிட்றத அவ கேட்டா அவ்ளோதான்.”

“அதெப்படி மாப்பிளை, அவளுக்காக போய்ட்டு உங்கள மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடவா முடியும். விஷயம் தெரிஞ்சும் எப்படி. அதெல்லாம் நல்லாயிருக்காது” என ராஜீ சொல்ல மகாலிங்கம் “அதுதானே, கேக்காத மாதிரி வேணா பாத்துக்கலாம்.” என

“அதெல்லாம் சரி வராது மாமா . அவளுக்கு டவுட் வந்தது ரொம்ப தோண்டி துறிவிடுவா. சோ என்னை நீங்க எப்போவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க. இது என்னோட ஆர்டர்.” என

பின்னால் இருந்து திவி “என்ன ஆர்டர்?” யாருக்கு? ” என்றாள்.

அனைவரும் விளிக்க மகா “இல்ல நாங்க வீட்டுக்கு போறோம்னு சொன்னோம். அதுதான் சாப்பிட்டு போகணும் என்னோட ஆர்டர்னு சொல்லிட்டு இருந்தாங்க”

“ஏதோ பேர் சொல்லினு கேட்டுச்சே..”

ராஜீ “அது, இந்த காலத்துல பெரியவங்கள கூட பேர் சொல்லித்தான் கூப்பிடறாங்கனு சொல்லிட்டு இருந்தாங்க”

“இருந்தாங்களா? ஆதி தானே பேசிட்டுருந்தாரு, நான் அவரை விட சின்னவ. சோ மரியாதையா கூப்பிடனும் ஓகே. உங்க எல்லாருக்கும் என்னாச்சு. ஆதியை அவரு, சொன்னாங்க, இருந்தாங்கனு சொல்லிட்டு இருக்கீங்க? ” எனவும் அனைவரும் முழிக்க ஆதிக்கு கடவுளே என்றிருந்தது.

அனைவரையும் பார்த்தவள் “என்னாச்சு, எல்லார் முகமும் ஏன் ஏதோ பதட்டமா இருக்கு. என்கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறீங்களா? ” என அவள் கேட்க இதற்கு மேல் தாங்காது என நினைத்த ஆதி “யாரையாவது மிரட்டிகிட்டே இருப்பியா? அடங்கமாட்டேயா நீ?”

“இல்ல அவங்க ஏதோ? ”

“போதும் நிறுத்து , பெரியவங்க ஏதோ பேசிட்டு போறாங்க உனக்கென்ன? சும்மா எல்லாத்துலயும் தலையை விடவேண்டியது. அதிகப்ரசங்கி ..”

“அதுக்காக இல்ல, ஏதோ அவங்க மறைக்….”

“ம்ச்ச்… இப்போ எதுக்கு இங்க வந்த? ”

“சாப்பிட கூப்பிட”

“அத செய்யாம உனக்கு என்ன விசாரணை… எல்லாரும் செல்லம் குடுக்கறதால தான் உனக்கு இவ்வளோ சேட்டை. போ வரோம்.”

அவள் முகம் சுருங்கி போனது. அமைதியாக சென்றுவிட்டாள். அனைவரும் பெருமூச்சு விட்டு “நல்லவேளை டா நீ அவளை அடக்குன… இல்லை ஒளறிருப்போம்.” என்றார் மதி. ராஜீ “ஆமா, பேசுறதுல இருந்தே கேள்வி கேக்குறா. ஆனா நம்ம எல்லாம் திட்டுனா கூட கண்டுக்காம மதிக்காம பேசுறவ ஆதி சொன்னதும் ஒன்னும் சொல்லாம போய்ட்டாளே”

மகா “ம்ம்ம். ஆதிக்காவது அடங்குனா சரி” என அனைவரும் சாப்பிட சென்றனர்.

பின் சாப்பிடும் போது பொதுப்படையாக பேசிக்கொண்டே சாப்பிட திவி இவன் பக்கமே திரும்பவில்லை. அதே சமயம் அனைவரிடமும் பேசினாள். ஆனால் இவளாக எதுவும் கேட்கவோ பேசவோ இல்லை. கேட்டதற்கு பதில். இந்த வேறுபாடு கவனித்து பார்த்தால்தான் தெரியும். அவளை மட்டுமே கவனித்த ஆதிக்கு இது நன்றாக புரியவே செய்தது. சிரித்துக்கொண்டான். அனைவரும் கிளம்பிய பின் ஆதி தன் அம்மாவிடம் “அம்மா, நான் பால்கனில இருக்கேன். ஒரு போன் பேசணும். பால் கொஞ்சமா மட்டும் போதும்மா, திவிகிட்ட குடுத்துவிடுங்க” என அவளும் அவன் ஏதோ பேச நினைகிறான் என புரிந்துகொண்டு “திவி, இத ராஜா மாடில இருப்பான். குடுத்திடுடா. எனக்கு இங்க வேலை இருக்கு” எனவும் அவளும் வாங்கிக்கொண்டு மாடிக்கு சென்று அவன் முன்னாள் நின்றாள். இவளை பார்த்தவன் போனை கட் செய்துவிட்டு இவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

பாலை எடுக்காமல் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்ணில் சிரிப்புடன் பார்க்க இவள் குனிந்து கொள்ள “இவ்வளோ கோபம் வருமா உனக்கு? உனக்கு கோபம் வந்தே பாத்ததிலேனு சொன்னாங்க?”

“அப்படி எல்லாம் எதுவுமில்லை. அதிகப்ரசங்கித்தனமா நான் ஏன் அடுத்தவங்க விசயத்துல மூக்கை நுழைக்கணும். அதுதான்.. அத்தை தான் குடுக்கசொன்னாங்க. அதனால தான் வந்தேன்.” என திரும்பி கொள்ள அவள் தான் கூறியதை தனக்கே சொல்லிக்காட்ட அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

மொட்டை மாடியில் நிலவொளியில், அடிக்கும் காற்றில் அவள் முன்னேற்றியிலும், காதோரத்திலும் கூந்தல் அலைமோத கோபம் என்று இறுக்கமாக வைத்திருந்த அவளது இதழ்களையும் ரசித்தவன் “சும்மா, பெரியவங்க எல்லாரும் ஏதோ பேசிட்டு இருந்தாங்க. எல்லாமே உன்கிட்ட சொல்லணும்னு எதிர்பாக்கிறியே? எல்லாத்துக்கும் கேள்வியா கேக்றியேனு தான் அப்டி சொல்லிட்டேன்… அதுக்கு என்கிட்ட சுத்தமா பேசாம, மத்தவங்ககிட்ட அளவா பேசிட்டு இவ்வளோ நேரம் கோபமா இருப்பியா ?”

“அத நீங்க பொறுமையா சொன்னா கேக்கபோறேன். எதுக்குஎடுத்தாலும் திட்டிட்டே இருக்கீங்க. அதான்..”

அவள் காதோரம் முடியை ஒதுக்கிவிட்டவன் “சரி, இனிமேல் உனக்கு பொறுமையவே சொல்றேன். ஆனா நீயும் சொல்றத கேக்கணும். திரும்ப திரும்ப கேட்கக்கூடாது சரியா ?” என சிரித்துக்கொண்டே வேகமாக தலையாட்டினாள். சிரித்துவிட்டு “சரி, யாரும் திட்டுனாலும் கண்டுக்காம இருப்ப… இப்போ என்ன நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கே மூஞ்சி மூணாறு போயிடிச்சு. என்கிட்ட பயம் தானே.?” என வினவ

“பயம் இல்ல. ஆனா ஏன்ன்னும் தெரியல. நீங்க திட்டுனதும் ஏனோ ஒரு மாதிரி இருக்கு.” என்று அவள் மனதில் தோன்றிய உணர்வை மறைக்காமல் அதே சமயம் முழுதாக உணராமல் கூற அதை சரியாக உணர்ந்த ஆதி அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “சோ…. ஸ்வீட் டா தியா குட்டி. போ போயி தூங்கு..ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றான். அவளும் அவன் சாதரணமாக பேசிவிட்டான் என ரொம்ப மகிழ்வுடன் “குட் நைட் ஆதி, இல்ல இல்ல ராஜா..” என கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

மறுநாள் காலையில் அனைவரும் கூடத்தில் இருக்க அர்ஜுனும் வந்துசேர்ந்தான். ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க திவி வீட்டினுள் வருவதை கவனித்த அர்ஜுன் வம்பிழுக்க எண்ணி “ஏன் ஆதி, திவி மாப்பிள்ளை எப்படி வேணும்னு சொன்னாளே அத பத்தி என்ன நினைக்கிற”

அபி, அனு, அரவிந்த், அம்மு, சுபி, சுந்தர் அனைவரும் திவியை கண்டுகொண்டனர். ஆதியும் நந்துவும் அவர்களுக்கு எதிர் புறத்தில் இருந்ததால் அவளை கவனியாமல் தன்னை வம்பிழுக்க எண்ணுகிறார்கள் என நினைத்த ஆதி சிரித்துக்கொண்டே பதிலுரைத்தான் “தப்பா சொல்லாத டா. அவ எதிர்பார்ப்பை சொல்லவா செஞ்சா? லிஸ்ட்டே போட்டுட்டா…. ”

அனு “அப்போ அவ நினச்சமாதிரி நடக்காதா? ”

ஆதி “ஆச படலாம். பேராசை படக்கூடாதில்ல. ..”

அபி “அப்டினா அந்த மாதிரி ஒருத்தன் கிடைக்கவே மாட்டானா? அப்படி ஒருத்தன வெளில எங்க தேடறது ?”

ஆதி “அப்படி ஒருத்தன் எல்லாம் வெளில தேடுனா கிடைக்கமாட்டான். அந்த எண்ணத்தை விட்று. வேஸ்ட் ஆப் டைம்.” ‘மனதினுள் நான்தான் அவளுக்கு இருக்கேனே’ என நினைத்துக்கொண்டான்.

எதிர்பார்ப்போடு பதிலை எண்ணியவளுக்கு இவன் கூறியதை கேட்டு லைட்டாக கோபம் வந்தது.

இதை அனைவரும் கண்டு மெலிதாக சிரிக்க அரவிந்த் மேலும் “என்னப்பா இப்படி சொல்ற, சரி அவளை பத்தி என்னதான் நினைக்கிற? ”

ஆதி “அவள பத்தியா? சரியான வாயாடி, இம்ச பண்றது , டார்ச்சர் பண்றது , டென்ஷன் பண்றது எல்லாத்துலயும் நம்பர் ஒன், நல்லா பொய் சொல்றது, நடிக்கறது, ஏமாத்துறது, யாருக்கும் அடங்கறதில்ல .. இந்த மாதிரி அவளை பத்தி சொல்லிகிட்டே போகலாம்….பட் இவளை எல்லாம் கண்டுக்கவே கூடாது… அப்டியே விட்ரனும்…”

திவி முதலில் கோபமாக பார்த்தவள், பின் அமைதியாகி எதுவும் சொல்லாமல் அப்டியே சென்றுவிட்டாள்.

சுந்தருக்கு திவியை பற்றி ஆதியிடம் அவர்கள் கேட்டதும் கொஞ்சம் கடுப்புடன் கவனித்தான்.. ஆனால் அவன் கூறியது, திவி சென்றதை பார்த்தவன் நிம்மதியாக உள்ளே சென்றுவிட்டான். சோபனாவுக்கும் அதே நிலைமைதான். நல்ல வேலை அவளை பத்தி ரொம்ப உயர்வா எல்லாம் எதுவும் நினைக்கல. என எண்ணிக்கொண்டு அவளும் சென்றுவிட்டாள்.

சுபி “ஆனாலும் மாமா பாவம் திவிக்கா இப்படி நீங்க சொல்லிருக்கக்கூடாது. அவங்க முகமே சரியில்ல.. அமைதியா போய்ட்டாங்க” என்றதும் ஆதி “என்ன, திவி வந்தாளா? ” என திரும்பினான்.

அமுதா “ஆமா அண்ணா, அவ வந்தத பாத்திட்டு தான் இவங்க எல்லாரும் இப்படி கேட்டாங்க..” எனவும்

அனைவரும் சிரிக்க ஆதி முறைக்க அரவிந்த் “எதாவது சொல்லுவ, 2 பேரும் சும்மா வம்பிழுப்பிங்கனு பாத்தா, சார் நல்லா சொல்லிட்டீங்க..”

அர்ஜுன் அவன் பங்கிற்கு “இருந்தாலும் டா ஆதி நீ இவ்ளோ கொலைவெறியோட சொல்லுவேன்னு எதிர்பாக்கல. பாவம் டா தங்கச்சி…”

ஆதி “டேய் ஏன் டா இப்பிடி பண்ணீங்க…உங்க 2 பேருக்கும் அக்காவையும், தங்கச்சியும் கல்யாணம் பண்ணிவெக்க ஹெல்ப் பண்ணதுக்கு நல்ல வேலை பாத்துஇருக்கீங்கடா…ஏன்மா உடன்பிறப்புகளே அவ வந்ததும் கொஞ்சம் சிக்னல் குடுத்திருந்தாகூட இப்பிடி நான் வாய விட்ருக்கமாட்டேனே.” என

அனு “விடுங்க அண்ணா, அம்மா அப்பா யாருகிட்டேயும் சொல்லமாட்டா ….அவ சண்டைபோடுவான்னு நினைக்கிறீங்களா?” அதெல்லாம் சும்மா, கொஞ்ச நேரத்துல சரி ஆய்டும்”

அரவிந்த் “என்ன டா மச்சான், இதுக்கு போயி இப்படி பீல் பண்ற? ஒருவேளை அடி விழும்னு பயபட்றியோ?” என அவன் முறைக்க

ஆதி “டேய் போங்க டா. …அவ மத்தவங்ககிட்ட சொல்லித்தந்தாலோ, வாய தொறந்து பேசி என்கிட்ட சண்டைபோட்டுடா, ஏன் அடிச்சா கூட நான் சமாளிச்சிடுவேன்….அதுல அவள எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் ….ஆனா எதுவும் கேக்காம அமைதியா அவ போயிருக்காளே. அத நினைச்சாதான்..கொஞ்சம் யோசனையா இருக்கு…”

அர்ஜுன், “ஒன்னும் சீரியஸ்ஸா எல்லாம் இருக்காதுடா… அவ சும்மா அமைதியா போயிருக்கா அவ்ளோதான். ..மத்தபடி அவ டென்ஷன் எல்லாம் ஆகமாட்டா. நீ கவலைப்படாத…”

ஆதி “அவ டென்சன் ஆகமாட்டா. … ஆனா என்ன டென்ஷன் ஆக்காம விடமாட்டா. உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு என்னை கடுப்பேத்துவா….அவ லூசு மாதிரி எதாவது திங்க் பண்ணுவா டா ” என்றதும் அவனை கண்டு அனைவரும் சிரித்தனர்.

அரவிந்த் “டேய் ஆதி, என்னடா கடைசில இப்டி ஆய்ட்ட” என கலாய்த்து சிரிக்க

இவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது “சரி பாப்போம்.” என அவனும் விட்டுவிட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழியோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?   திவான் : நான் போனதில்லை.   அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

  கனவு – 23   அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த