Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24

24 – மனதை மாற்றிவிட்டாய்

ஈஸ்வரிக்கு வெற்றி புன்னகை ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள் என சண்டையிட்டாலும் சரி, அவர்களே மனதிற்குள் வைத்து புகைந்துகொண்டாலும் சரி, கல்யாணம் நிற்க வேண்டும் அதுதான் எண்ணம்’…..

அனைவரும் அதிர்ச்சியாக திவியை இவள் என்ன சொல்றா என்ற ரீதியில் பார்த்த அர்ஜுன் ஆதியிடம் திரும்ப அவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக திவியை காண இவன் என்ன அமைதியா இருக்கான் என நினைத்தான்.

திவி “நீங்க சொன்னதும் ரொம்ப கரக்ட் தான் ஆண்ட்டி. சேகர் மாமா மட்டும் இல்ல அவங்க அப்பா, மாணிக்கம் தாத்தா எல்லாருக்குமே இந்த பெருந்தன்மை இருக்கு இல்லையா. ?”

மல்லிகாவிடம் திரும்பி “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆண்ட்டி, ஈஸ்வரி ஆண்ட்டி கல்யாணம் பண்ணி வரும் போது அவங்க குடும்பத்துல வெறும் 2 ஏக்கர் ‘தான் இருந்ததாம். அதுவும் சரியா பயிரிடாம எதுக்கும் உபயோகமில்லாத இடமா இருந்ததாம்… அப்போவே 10 ஏக்கரா வெச்சு இருந்தாலும் மனுசங்க தான் முக்கியம்னு மாணிக்கம் தாத்தா இவங்க குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்கிட்டாங்க. பரம்பரை பணக்காரங்களா இருந்தாலும் தனக்கு சமமான சம்பந்தி இடத்துல இவங்க அப்பாவ ஆதிநாராயணன் தாத்தா வெச்சிருந்தாரு. ஈஸ்வரி ஆண்ட்டிக்கு என்னதான் பெரிய இடத்துல மருமகன்னு அந்தஸ்து குடுத்து உக்காந்தாலும், இத்தனை வருஷம் ஆனாலும் அவங்க எங்க இருந்து வந்தாங்கனு பழசை மறக்கவேமாட்டாங்க. ரொம்ப நன்றியோட இருப்பாங்க. அந்த அளவுக்கு குணம். அப்டித்தான் சொல்லிட்டாங்க. ..இல்லையா ஆண்ட்டி? ” என அவள் சிரித்துக்கொண்டே கேட்க நீ வந்த இடத்தை மறக்காதே நீயும் அந்த அளவுக்கு ஒன்னும் ஒசத்தி இல்லை என கூறுவது போல இருக்க ஈஸ்வரி முறைக்க இப்பொது அனைவரும் மெலிதாக புன்னகைத்தனர் சுந்தர், சுபி உள்பட மல்லிகாவை தவிர.

திவி “ஆனாலும் ஈஸ்வரி ஆண்ட்டி நீங்க ஒன்னு மறந்துட்டீங்க. கணேஷ் அங்கிள்யும் அதே ஊருதான். அவங்க படிப்படியா முன்னேறி 20 ஏக்கர் நிலம், ஊர்ல ஒரு வீடு, இங்க ஒரு வீடு சொந்தமா வெச்சுயிருக்காங்க. அர்ஜுன் அண்ணாவை சூப்பரா படிக்க வெச்சு இருகாங்க. அத்தனை திறமை உழைப்புக்கு கண்டிப்பா கணேஷ் அங்கிள்ளையும், அதுக்கு சப்போர்ட்டா இருந்த மல்லிகா ஆண்ட்டியையும் பாராட்டியே ஆகணும்..இல்லையா மாமா?” என சேகரிடம் வினவ

அவரோ “கண்டிப்பா, நான் கூட எங்க அப்பா தாத்தா சொத்தை வெச்சு முன்னேறுனேன். ஆனா கணேஷ் பத்தி ஊருக்கே தெரியுமே. அப்படி ஒரு உழைப்பு, வளர்ச்சி. உண்மையாவே உங்ககிட்ட இருந்துதான் அத கத்துக்கணும்” என கூற மல்லிகா முதற்கொண்டு அனைவரும் மெலிதாக புன்னகைக்க ஈஸ்வரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

திவியோ “எல்லாத்துக்கும் மேல எங்க அர்ஜுன் அண்ணா மாதிரி ஒரு பையன் கிடைக்க வரம் வாங்கிருக்கணும். அவ்ளோ நல்லவரு, ஏய் அம்மு, நீ தான் ரொம்ப லக்கி. இப்படி ஒருத்தர் கிடைக்க குடுத்துவெச்சு இருக்கனும்…”

ஆதி “ஏன், எங்க அம்மு கூட தான் ரொம்ப சமத்து, இவ்ளோ அடக்கமான பொண்ணு கிடைக்க உன் அண்ணா தான் குடுத்து வெச்சுஇருக்கணும்” என சீண்ட

திவி “என் அண்ணா எவ்வளோ பொறுமை, பொறுப்பு தெரியுமா?”

அபி ” ஏன், அம்முவும் தான், எல்லாமே பொறுப்பா பாத்துக்குவா. பொறுமையா எல்லாமே ஹண்டில் பண்ணுவா.”

திவி “என் அண்ணாக்கு கோபமே வராது. ”

அனு “அம்முவுக்கு கோபப்படவே தெரியாது..”

திவி “என் அண்ணா செம டாலேண்ட்…”

அரவிந்த் “அதனாலதான் அம்முவை செலக்ட் பன்னிருக்கான்.”

சுந்தர் “அம்மு பூ மாதிரி, எவ்வளோ அடக்கமான பொண்ணு..”

சுபி “ஆமா, அம்மு போற இடமே வாசமாதான் இருக்கும் ”

திவி “என் அண்ணா எப்போவுமே கிரேட் தான். அன்பான நல்ல குணம்.. பாத்த உடனே பிடிச்சிடும். ”

என மாறி மாறி இளையோர் அனைவரும் இருவரையும் புகழ பெரியவர்கள் நால்வரும் மனம் மகிழ பார்க்க மல்லிகாவே எழுந்து வந்து “போதும், போதும், அம்மு, அர்ஜுன் 2 பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவங்க இல்ல.. இன்னும் சொல்லப்போனா சரியான ஜோடிதான். என இருவரையும் அணைத்து கொள்ள மதி, சேகர், கணேஷ் அனைவர்க்கும் அளவில்லா மகிழ்ச்சி.

அனைவருக்கும் திவி ஸ்வீட் குடுக்க அதை எடுத்துக்கொள்ள மல்லிகாவிடம் வரவும் அவர் ஸ்வீட் எடுத்து திவிக்கு ஊட்டிவிட்டார். அவளும் தேங்க்ஸ் ஆண்ட்டி. என்றுவிட்டு “என்னை உங்களுக்கு” என ஆரம்பிக்க அர்ஜுன் “அம்மா, இவ..” என்றவனை தடுத்து மல்லிகாவே “திவி….” என்றார்.

அவள் விழி விரித்து பார்க்க “உன்ன பத்தி அர்ஜுன் சொல்லிருக்கான். உன்ன பாக்கணும்னு நினச்சேன் இப்போ பாத்துட்டேன்.”

“அண்ணா என்னை பத்தி சொல்லுவாங்களா? ”

ஆமாம் என்பது போல தளையாடிவிட்டு “உன் விளையாட்டு, பேச்சு, குறும்புத்தனம், பாசம்னு எல்லாத்தையுமே…” ஆதி “ம்ம்ம்…. சேட்டை, வாலுதனம் அதுவும் தானேமா? ” என்றவனை திவி முறைக்க மல்லிகா சிரித்துவிட்டு “அதுதான் அவளோட ஸ்பெஷல்..இல்லையா திவி ?” என்க அவள் மேலும் கீழும் தலையாட்டி “ஆமா ஆண்ட்டி” என்றாள்.

மல்லிகா “அதென்ன அர்ஜுன் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணானு சொல்ற. ..என்னையும் அவரையும் ஆண்ட்டி, அங்கிள்னு சொல்ற. ..இனிமேல் அப்பா, அம்மானே கூப்பிடனும் சரியா?” அவளோ வேகவேகமாக தலையாட்டினாள்..அதை கண்ட அனைவரும் சிரிக்க இங்கே ஆதியும் சுந்தரும் அவளை ரசித்துக்கொண்டிருந்தனர்.

பின்னர் மகா, ராஜீ, ராஜலிங்கம், மகாலிங்கம் அனைவரும் வர அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து விட்டு அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இரவு உணவை முடித்துக்கொண்டு கிளம்பலாம் என முடிவெடுத்தனர். இதில் எதுவும் கலந்துகொள்ளாமல் சோபனாவும், ஈஸ்வரியும் தனியே சென்று விட்டனர். திவி அனைவருடன் வம்பிழுப்பதை கண்டு மகா அவளை கண்டிக்க அவள் “அம்மா ப்ளீஸ் மா, எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது தானே இப்டி வம்பிழுக்க முடியும். ஒரு நாள் தானே” என அவள் இழுக்க

“போதுமே, இப்படியே சொல்லி ஒருத்தரையும் விடறதில்ல… வாய தொறந்தா மூடறதேயில்லை….”

திவி பாவமாக முகத்தை வைக்கவும் மல்லிகா ” ஏன்மா புள்ளைய திட்ற, பாவம் முகமே வாடிடுச்சு.”

மகா “ஐயோ அக்கா, நீங்க அவளை நம்பாதீங்க. பண்றது, பேசறது எல்லாம் பண்ணிட்டு இப்படி பாவமா வெச்சே ஏமாத்திடுவா.”

ஆதி ” கரெக்ட் அத்தை, பேசியே எல்லா காரியத்தையும் சாதிச்சர்டா, பிராடு” அதை கேட்டு அனைவரும் சிரிக்க திவி அம்முவையும், அர்ஜுனையும் பார்த்து “இப்போ நல்லா சிரிங்க, எனக்கு வாய் ஜாஸ்தின்னு கிண்டல் பண்றிங்களே, இது இல்லாம இந்த மேரேஜ் பத்தி யாரு பேசிருப்பா?”

“அரவிந்த் அண்ணா, அப்பு நீங்களுமா கிண்டல் பண்றீங்க, இதுக்காகவே உங்களுக்கு நெஸ்ட் பொறக்கப்போற குட்டி பாப்ஸ் என்ன மாதிரியே வாலு சேட்டை எல்லாம் பண்றமாதிரி வரும், இல்லாட்டி நானே ட்ரைனிங் குடுப்பேன்.”, “ஹே அணுகுண்டு (அனு) சுண்டெலி (சுபி) இருங்க டி, தனியா அவுட்டிங் போக பிளான் கேட்டிங்கல்ல, நானே கெடுத்துவிடறேன். அண்ட் சுந்தர் உங்க அம்மா முன்னாடி நீங்க என்மேல ரொம்ப காரிங்கா இருக்கறமாதிரி பேசி அவங்ககிட்ட கோர்த்துவிடறேன்” என அவள் அனைவரையும் பயமுறுத்த மகா தலையில் அடித்துக்கொண்டு “இவள பாத்தா பாவம்னு சொன்னிங்க.. அடங்குதா பாரு.”

அர்ஜுன் “ஏன் திவி, ஆதியை மட்டும் ஏன் விட்டுட்ட, பயமா? ”

அவன் கால் வர வெளியே சென்றுவிட்டான் என எண்ணி திவி “யாருக்கு எனக்கா, ஹா ஹா ஹா, போனா போகட்டும்னு இருக்கேன், இப்போதானே ஊர்ல இருந்து வந்திருக்காங்க. ரொம்ப டார்ச்சர் பண்ண பயந்து திருப்ப ஓடிட்டா, அப்புறம் அத்தை பீல் பண்ணுவாங்க. அதனாலதான் விட்டு வெச்சுயிருக்கேன். டேய் ஆதி னு கூப்ட்டாலே பையன் மிரண்ட்ருவான் தெரியுமா?” என அவள் கெத்தாக கூற அவள் பின்னல் இருந்து இதை கேட்டவன் அவள் காதை பிடித்து இழுத்து “என்னனு கூப்பிடுவ? ” என்றான்.

இதை எதிர்பார்க்காத திவி “திருத்திருவென விளித்து, ஆதி விடுங்க, மாமா, அத்தை அம்மா ப்ளீஸ் யாராவது காப்பாத்துங்க”

மகா “ஒருத்தரும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க, ஆதிய போடா வாடான்னு சொல்லுவியா? நீ விடாத ஆதி… காதே கழண்டுவந்தாலும் சரி”

திவி “அண்ணா, அம்மு, அபி அண்ணி ப்ளீஸ் நீங்களாவது விட சொல்லுங்க”

அரவிந்த் “அப்புறம் அவன்கிட்ட யாரு திட்டு வாங்குறது, எங்கனால முடியாது பா…”

திவி திடீரென “ஐயோ காதே வலிக்குதே” என கத்த ஆதி “பிராடு, இப்போ நான் புடிச்சுயிருக்கறதுக்கு எவ்வளோ வலிக்கும் நீ எவ்வளோ வலி தாங்குவேன்னு எனக்கு தெரியும் இது உனக்கு வலிக்காது. சும்மா நடிக்காத” என அவன் பொறுமையாக சொல்ல திவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அனைத்து அஸ்திரங்களும் முறியடிக்கப்பட இறுதியாக “அது ஒண்ணுமில்ல ஆதி , சும்மா பன்(fun)க்காக தான் அப்படி சொன்னேன். உங்ககிட்ட நான் அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசுவேனா.. இதுவைரைக்கும் உங்க பத்தி நினச்ச அளவுக்கு நான் யாரையுமே நினைச்சதில்ல. நீங்க அவ்வளோ இம்போர்ட்டண்ட் அண்ட் ஸ்பெஷல் எனக்கு. நான் வெச்சுஇருக்கற இடத்துல இவங்க யாருமே நினைச்சுக்கூட பாக்கமாட்டாங்க. அப்பா மாமா எல்லாருக்கு மேல ஒரு இடத்துல தான் நான் உங்கள வெச்சுஇருக்கேன். என்ன நம்பமாட்டீங்களா?” என அவள் கேட்க ஆதி அவளை விடுத்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அனைவரும் நம்பமுடியாமல் அவளை பார்க்க மதி, சேகர் மூலமாக விஷயம் அறிந்த திவியின் குடும்பத்தினரும் அவர்கள் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். அர்ஜுன் மூலமாக இளையோர் அனைவருக்கும் சுபி, சுந்தர் தவிர ஆதியின் காதல் தெரியும் என்பததால் தான் இத்தனை நேரமும் அவர்கள் சண்டையை பார்த்துக்கொண்டிருந்தனர். அனால் திவி உடனே ஒப்புக்கொள்வாள், அவளுக்கு காதல் இவ்வளவு] விரைவில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஆதிக்கும் கூட நம்பமுடியவில்லை. இவள் உணர்ந்துதான் சொன்னாளா? நான் இவளுக்கு அவ்ளோ முக்கியமா? என்றவன் “திவி நீ உண்மையைத்தான் சொல்றியா?” என அவன் எதையோ எதிர்பார்த்து கேட்க திவி “உண்மையா ஆதி. அப்பா, மாமா எல்லாருக்கும் மேல தான் நான் உங்களை நினைக்கறேன். சோ இனிமேல் பேர் சொல்லி கூப்பிடமா தாத்தான்னு கூபிட்றேன்” என்றவளை அவன் அடிக்கவே துரத்திவிட்டான். அனைவரும் அப்போதுதான் அவள் கூறியதன் அர்த்தம் புரிந்து சாதாரணமாகி சிரித்தனர். சுந்தருக்கு மூச்சே அப்போதுதான் வந்தது. பின் ஒரு இடத்தில நின்றவளை கண்டு அம்மு “அப்புறம் ஏன் டி, எங்க அண்ணாவை நினச்சா அளவுக்கு யாரை பத்தியும் நினைச்சதில்ல னு சொன்னே? ”

“ஆமா, அம்மு உங்க அண்ணா எப்போ பாரு கத்திகிட்டே இருந்தா, இதுல அப்போப்போ காதை வேற புடிச்சு ட்விஸ்ட் பண்ணிடறாரு, அதுதான் அவரை எப்படி பழிவாங்கலாம்னு ரொம்ப திங்க் பண்ணேன். இவரு அளவுக்கு நான் யாருக்கும் பிளான் பண்ண இவ்வளோ டைம் எடுத்துக்கிட்டதில்ல..”

அர்ஜுன் “அது சரி, அப்படி என்னமா பிளான்?”

திவி “அது சீக்ரெட், மாஸ்டர் பிளான் அண்ணா. அத யாருமே எதிர்பாக்கமாட்டீங்க… ஏன் ஆதியே ஆடிபோய்டுவாரு. அவரு லைப்ல என்ன மறக்கவே முடியாதமாதிரி ஒன்னு பண்ணப்போறேன்” என அவள் சொல்லி கண்ணடித்து சிரித்தாள்.

[இந்த விளையாட்டு பேச்சு அவள் வாழ்வை புரட்டிபோடப்போகிறது என அறியாமல் ]

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

49- மனதை மாற்றிவிட்டாய் திவி ஆதியை அழைக்க பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அவன் இப்போத்தானே மா கிளம்பிப்போனான்.” “அவரு இன்னும் சாப்பிடலையே தாத்தா. போன் பாத்திட்டு இருந்தாரு. அதுக்குள்ள எடுத்து வெச்சிடலாம். வந்துடுவாருன்னு பாத்தேன்.” என அவள் கூற

வார்த்தை தவறிவிட்டாய் (Final update)வார்த்தை தவறிவிட்டாய் (Final update)

ஹாய் பிரெண்ட்ஸ், வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய் உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து