Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17

17 – மனதை மாற்றிவிட்டாய்

மாலையில் ஆதியும் அர்ஜுனும் வந்துவிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதிக்கு திவி வந்துவிட்டாளா இல்லையா என எண்ணிக்கொண்டிருக்க சுந்தர் “அத்தை திவி எப்போ வருவா?” என கேட்க “ஆமா அத்தை, திவி இருந்தா இன்னும் ஜாலியா இருக்கும்” என சுபியும் வினவினாள். மதியும் “இன்னைக்கு வேலை இருக்குன்னா… ஒருவேளை நேரமாகுமோ என்னவோ. வந்துடுவா…” என்றார்.

“போன் பண்ணி கேளுங்க அத்தை” என்றான். சுந்தர்.

“வேலைல இருந்தா… எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும். அவ வரும்போது வரட்டும்” என கொஞ்சம் காட்டமாகவே ஆதி கூறினான்.

சுபி ” நோ ப்ரோப்லேம் மாமா…அப்படியே இருந்தாலும் அவ சொல்லிடுவா… டிஸ்டர்ப்னு எல்லாம் நினைக்கமாட்டா… நீங்க கேளுங்க அத்தை?” எனவும் அனு, அம்மு அனைவரும் அதை ஆமோதிக்க அவளுக்கு கால் செய்ய போனார் மதி. அவரை தடுத்த சுந்தர் “நாங்க வந்தத சொல்லாதீங்க, சர்ப்ரைஷா இருக்கட்டும். ” என கூறினான். அவரும் சிரித்துக்கொண்டே திவியை அழைத்து வந்துவிட்டாளா என விசாரித்து வீட்டிற்கு வரச்சொன்னார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு ஏனோ சுந்தர் மேல் கோபம். “இவன் என்ன அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கிறது.. ஏதோ உரிமையா பேர சுருக்கி வேற கூப்பிட்றான்.” என கருவினான். அவளை தான் உட்பட அனைவரும் அவ்வாறு தானே கூப்பிடுகிறார்கள் என்பதை மறந்து.

வீட்டினுள் நுழைந்த திவி முதலில் சுபியை பார்த்தவள் “ஹே சுபி எப்போ வந்த, எப்படி இருக்க, காலேஜ் எப்படி போகுது, லீவ்வா? தாத்தா பாட்டி எல்லாரும் ஊர்ல எப்படி இருக்காங்க ” என கேட்க அவளை கட்டிக்கொண்ட சுபி” மெதுவா ஒன்னு ஒண்ணா கேளு திவிக்கா. என்று அவள் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

ஒரு 5 நிமிடம் பொறுமையாக இருந்தவன் திவியின் முன்பே வந்தான். “ஹே… சுந்தர் நீங்களும் வந்திருக்கீங்களா?” என வினவ “போதும்… இவ்வளோ நேரம் சுபிக்கிட்ட ஊரு, தாத்தா, பாட்டி, ஆடு மாடு வரைக்கும் கேட்டுட்ட என்னை பத்தி ஒருவார்த்தை கேக்கல…இப்போ மட்டும் எதுக்கு பேசுற?” என்று பொரிய அவளோ “மறந்துட்டேன்” என தலையில் கை வைத்து முழிக்க அவளை முறைத்தான் சுந்தர்.

ஆதியோ “உனக்கு நல்லா வேணும்டா… என் செல்லம்… உன்ன எதுக்கு கேக்கப்போறா…ஆசைதான்.. பல்பு வாங்கிட்டேள்ல போடா ….”என மனதில் விரட்டி கொண்டிருந்தான்.

திவியோ சுந்தரின் செயலில் மனதிற்குள் சிரித்துவிட்டு “சாரி சுந்தர், உண்மையாவே மறந்துட்டேன்.” என பாவமாக சொல்ல சுந்தருக்கு அவள் தன்னை மறந்துவிட்டாள் என நினைக்க கஷ்டமாக இருந்தது. சாரி எல்லாம் ஒன்னும் வேணாம். விடு. என்றுவிட்டு நகர்ந்து சென்றவனை பார்த்து சிரித்த திவி “ஆனாலும் சுந்தர், நீங்க இவ்வளோ மக்கா இருந்திருக்க வேண்டாம். சொன்னா அப்படியே நம்பிடுவீங்களா? சுபி இருக்கான்னா கண்டிப்பா நீங்க இல்லாம வரமாட்டான்னு எனக்கு தெரியாதா? அதுவுமில்லாம சார் ஒளிஞ்சிருந்த அழகு இருக்கே. சான்சலஸ்… இதுக்கு நீங்க இத்தனை பேருக்கு நடுவுல இருந்திருந்தாகூட கண்டுபுடிச்சிருக்கமாட்டேன். தனியா நின்னு தலைய தலைய நீட்டிக்கிட்டு…” என அவள் தலையில் அடித்துக்கொள்ள அனைவரும் சிரித்தனர்.

“அப்போ மறந்துட்டேன்னு பொய்யா சொன்னியா…. பாவமா மூஞ்சிய வெச்சுகிட்டு நடிக்கறது…. உன்ன நம்பியே ஏமாறோம்…எனக்கு நீ மறந்துட்டேனதும் உண்மையாவே கஷ்டமா இருந்தது…” என சுந்தர் கூற

“நானா நம்ப சொன்னேன். நீங்க வரத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல… அதான் கொஞ்சம் கஷ்டப்படட்டும்னு பழிவாங்க கண்டுக்காம விட்டேன்.” என திவி கூற இப்பொது மன்னிப்பு கேட்பது சுந்தரின் முறையாயிற்று.

அவர்கள் நன்றாக உரிமையோடு பேசியதை சண்டையிட்டதை கண்ட ஆதிக்கு கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் அவன் மனம் “சரி விடு… அவ எல்லார்கிட்டயும் தான் இப்டி பேசுறா.” இன்னொரு மனமோ “ஆனா இந்த சுந்தர் பையன் அப்படியெல்லாம் பேசுற ஆள் இல்லையே. ஒருவேளை இவன் ஏதாவது ட்ரை பண்ரானோ. …எதுக்கும் இவனை கவனிக்கணும்…”

“தேவையில்ல… நம்ம செல்லம்ஸ்க்கு வாய் தானே தவிர உள்ள ஒன்னும் இருக்காது… அவ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா… இவன் என்ன பண்ணாலும் அவ ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும். சோ நோ வொரிஸ் நோ டென்ஷன் ஆதி…” என தனக்கு தானே கூறிக்கொண்டான்.

இருந்தும் அவள் பிறரிடம் அவ்வளோ உரிமை இவனுக்கு எரிச்சலாகவும் இருந்தது.

திவி ஈஸ்வரியிடம் “எப்படி இருக்கீங்க ஆண்ட்டி, ட்ராவல் எல்லாம் ஓகே தானே… அங்கிள் எப்படி இருக்காங்க…” என கேட்க

ஈஸ்வரி கால்மேல் கால் போட்டுகொண்டு “ம்ம்ம். ..எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்… இப்போவாது கண்ணு தெரிஞ்சதே? பையன்கிட்டேயே பேசிட்டு இருந்தியே கண்டுக்காமாடியோனு நினச்சேன்.” என குத்தலாக அவளை மட்டம் தட்டி பேச அனைவரும் முகம் சுளித்தனர். சுந்தருக்கும் கோபம்,

ஆதிக்கோ சொல்லவே வேண்டாம். “இப்போ எதுக்கு இவ அவங்ககிட்ட போயி பேசுனா… இதெலாம் தேவையா? எல்லாம் சுந்தர்கிட்ட பேசுனதால வந்தது…. ” என திட்டிக்கொண்டிருக்க

திவியே “அட… உங்கள கண்டுக்காம இருக்க முடியுமா ஆண்ட்டி…நீங்க வந்ததும்தான் இந்த சோஃபா, ஏன் இந்த வீடே நிறைஞ்சிருக்கு. உங்கள கண்டுக்காம உங்கள தாண்டி போகமுடியுமா…” என ஈஸ்வரியின் உடல் வாகை வைத்து குண்டாக இருப்பதை குறித்து திவி கூற அனைவரும் மெலிதாக சிரிக்க “அதுவுமில்லாம, நீங்க என்கிட்ட பேச இவ்வளோ ஆர்வமா இருக்கீங்க…. நெறைய நேரம் பேசவேண்டியது வரும்ல..அதான் உங்க 2 பிள்ளைங்ககிட்டேயும் ஒரு 5 நிமிஷம் பேசிட்டு வந்துட்டேன். ” என அவள் கூறியது உன் மகனிடம் மட்டும் நான் பேசவில்லை என்பதை உணர்த்தியது.

ஆதிக்கு “அப்படி சொல்லுடி என் தங்கம்” என மனதில் பாராட்டிக்கொண்டான்.

ஈஸ்வரி “என் முன்னாடியே இப்படி என் பையன்கிட்ட இப்படி பேசுறீயே.. உன்ன எல்லாம் என்ன சொல்றது? எல்லாம் வளத்தவங்கள சொல்லணும்” என

திவி “புரியல ஆண்ட்டி… உங்க பையன்கிட்ட பேசுனது தப்பா?…இல்லை உங்க முன்னாடி பேசுறது தப்பா?. ..” என கேட்க அதை தொடர்ந்த திவி

எல்லார் முன்னாடியும் பேசாம மறச்சு தனியா பேசுற அளவுக்கு எதுமில்லை ஆண்ட்டி…

அப்படி பண்றதுதான் தப்புன்னு சொல்லி குடுத்திருக்காங்க.

ஒருவேளை அவரோட அதுவும் உங்க முன்னாடி பேசுறதே தப்புன்னா உங்க பையன நீங்க நம்பலேனு அர்த்தம்… உங்க வளர்ப்ப தப்புன்னு தானே அர்த்தம் …” என்றதும் ஈஸ்வரியும் பதில் கூற முடியாமல் திணறி போக ஈஸ்வரியை விடுத்து சோபனாவிடம் திரும்பிய

திவி “ஹாய், சோபனா, எப்படி இருக்க?” என வினவ இவளிடம் நான் பேசுவதா என்ற ரீதியில் அவள் பதில் கூறாமல் அலட்சியமாக கண்டுக்காமல் முகத்தை திருப்பிக்கொள்ள தன் மகளை மெச்சுதலாக பார்த்த ஈஸ்வரி திவியை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

ஆனால் திவியோ “ஐயோ, பாவம்… என்ன சுந்தர், என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம், தங்கச்சிக்கு இப்படி ஒரு குறை இருக்கு.. அத சரிபண்ணாம விட்டுட்டீங்களே. என்ன ஆண்ட்டி நீங்க கூடவா உங்க செல்ல பொண்ண கவனிக்க மாட்டீங்க.?” என கேட்க

ஈஸ்வரி “குறையா என்ன சொல்ற..?” என சீற “ஆமா சோபனாவுக்கு காது கேக்கல தானே. அதுக்கு தான் டாக்டர்கிட்ட போக சொல்றேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே… அதான் டவுட்” என கூற சோபனா “எனக்கு காது நல்லா கேக்கும்.” என்றாள்.

திவி “ஒ… சூப்பர்.. பட் செலெக்ட்டிவ் அம்னீஷியா மாதிரி செலக்ட்டிவ் டெப் அந்த மாதிரியா… அதுக்கும் டாக்டர பாக்கணும்….ஏன்னா எப்படி இருக்கேனு நான் கேட்ட கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் வரலையே…” என அதே பிடியில் நிற்க சோபனா “பைன் ” என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

உடனே ஈஸ்வரியிடம் திரும்பிய திவி “என்ன ஆண்ட்டி, நீங்களாவது ஒரு 2 3 கேள்விக்கு தாக்குபுடிச்சீங்க. உங்க பொண்ணு ஒரே வார்த்தை, ஒரே கேள்வியில ஓடிட்டா.. பாவம் ஆண்ட்டி இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் குடுங்க” என சீண்ட ஈஸ்வரியும் கோபமாக சென்றுவிட்டாள்.

அனைவரும் இவள் செயலில் சிரித்துக்கொண்டிருந்தனர். சுபி ஓடிவந்து “எங்க அம்மாவையும், அக்காவையும் ஹாண்டில் பண்ண உங்கனாலதான் முடியும்…”என்றாள்.

சுந்தரோ “சாரி, திவி அம்மா பேசுனதுக்கு..” என தலை குனிய “அவங்களுக்கான பதில நானும் தான் குடுத்திட்டேனே. நீங்க ஏன் சாரி சொல்றிங்க சுந்தர். அவங்க பேசுனத்துக்கு நீங்க எப்படி பொறுப்பாவிங்க….லீவ் இட்…” என கூல்லாக கூறினாள்.

சந்திராவோ “இருந்தாலும் திவி, பெரியவங்ககிட்ட நீ இப்படி பேசிருக்கக்கூடாது. நான் வளர்த்த திவி இப்படி எடுத்தெறிஞ்சு பேசமாட்டா….” என குறை கொள்ள,

திவியோ ” அவங்க பெரியவங்க மாதிரி பேசலையே அத்தை… அவங்க பேசுனது சரின்னா உங்க முகம் ஏன் வாடிச்சு… அவங்கள நான் எப்போ எடுத்தெறிஞ்சு பேசுனேன். திருப்பி கேள்விதானே கேட்டேன்… அவங்க தான் பதில் சொல்ல முடியாம போய்ட்டாங்க. அவங்க கேள்வி சரினு சொல்லுங்க.. நான் இப்போவே போய் மன்னிப்பு கேக்குறேன்.. என்றவளை அவர்கள் பேசியது தவறு தான் என்பதை உணர்ந்த மதி பாவமாக பார்க்க திவி அவளை அணைத்துக்கொண்டு “நீங்க ஏன் பீல் பண்றீங்க…. உங்க வளர்ப்பு தப்பா சொல்ற மாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன் அத்தை. அவங்களோட அந்த கேள்விக்கு பதில் சொல்லாம இருந்த்திருந்தாதான் தப்பா போயிருக்கும். செய்யாத தப்புக்கு பழியும், தண்டனையும் ஏத்துக்காதேன்னு நீங்கதானே சொல்லிருக்கீங்க… அதான் நானும் பாலோ பண்றேன்.

ஒருவேளை உங்க அண்ணிய கேள்வி கேட்டுட்டேன்னு கோபமா? வேணும்னா நாளைக்கு சாயந்தரம் வரைக்கும் அவங்களுக்கு லீவு விடறேன்… கேட்ட கேள்விக்கு பதில தவிர அவங்கள எதுவும் சொல்ல மாட்டேன்…” என கூற மதியும் “உன் பதில் பத்திதான் எனக்கு நல்லா தெரியுமே. இப்போ சொன்னமாதிரி தானே பதில்? ” என கேட்க திவி கண்ணடிக்க மதி சிரித்துவிட்டாள். திவி திரும்பி சந்திரசேகரை பார்த்து “சக்ஸஸ்” என்பது போல காட்டினாள். அவரும் தான். இதை அனைத்தையும் கவனித்த ஆதி சிரித்துக்கொண்டே அறைக்கு சென்றான்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 12நிலவு ஒரு பெண்ணாகி – 12

ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவோட உங்களை சந்திக்க வந்துட்டேன். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க. நிலவு ஒரு பெண்ணாகி – 12 அன்புடன் தமிழ் மதுரா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட