Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13

13 – மனதை மாற்றிவிட்டாய்

காரிலிருந்து கோபமாக வெளிவந்த ஆதி அவளை அடிக்க போனவன் அவள் பயந்த விழிகளையும், நடுங்கிய கைகளையும் பார்த்தவன் “ச்சா…” என்றுவிட்டு காரை ஸ்டார்ட் செய்து உள்ளே கொண்டுவந்து நிறுத்தினான். பின்பு திவியிடம் சென்றவன் அவள் கை பற்றி வேகமாக வீட்டினுள் இழுத்துவந்தவன் ஹாலில் வைத்துக்கொண்டு “இடியட், அறிவில்ல? இப்படியா ரோடு கிராஸ் பண்ணுவ ?”

“நான் ரோடு கிராஸ் பண்ணல… அனுவ தொரத்திட்டு வந்தேன்.” என அவள் கூற “ரொம்ப முக்கியம், உனக்கு வீட்ல இடமா இல்ல…ரோட்டுல விளையாடிட்டு இருக்க…ஏதாவது ஆகியிருந்தா?” என ஆதி கத்திக்கொண்டிருக்க சந்திரா “என்னாச்சு ராஜா, ஏன் அவளை திட்டு இருக்க?” என கேட்டதும் “பாருங்க அத்த இவரை…” என திவி ஆரம்பிக்க “ஏய், வாய மூடுடி… பண்றதெல்லாம் பண்ணிட்டு பேசுறா” என

அவளை அடக்கிவிட்டு சந்திராவிடம் நடந்ததை கூறினான். வந்த வேகத்துக்கு அடிச்சு தூக்கிருந்தா என்ன மா ஆகுறது?கொஞ்சம் கூட கவனமே இல்லாம எப்போப்பாரு விளையாட்டுத்தனம் ” என ஆதி கூற சந்திராவும் அவளை என்ன செய்வது என பார்த்துக்கொண்டிருக்க திவியோ குனிந்த தலை நிமிராமல் “அந்த அளவுக்கு யாரு வேகமா வரசொன்னாங்க அத்தை ?” என கேட்க அங்கு இருந்த அனைவரும் இவ அவன்கிட்ட வாங்காம அடங்கமாட்டா என நினைத்து அவள் செய்கையில் தங்களுக்குள் சிரிக்க

ஆதியோ “இந்த வாய் தான், கொழுப்பு… இப்படியே பேசு, இன்னும் என்கிட்ட நல்லவாங்க போற… சொல்ற பேச்ச கேக்குற பழக்கமே இல்லையா? எல்லாரையும் மாதிரி என்கிட்ட இருக்கலாம், சமாளிச்சிடலாம்ணு நினைச்சியா… இப்போவும் திமிரா கேள்வி கேக்குற உன்ன அப்படியே ஒன்னு விட்டா என்ன..”என நெருங்க திவி சந்திராவின் பின் மறைத்துக்கொள்ள

சந்திராவே “சரி விடுடா, அவ வீட்டுக்கு வெளில தானேன்னு வந்திருப்பா, நீயும் வேகமா வந்ததால தானே இடிக்கற அளவுக்கு போச்சு.” என சொல்ல ஆதி கூறினான்.

“அம்மா, போதும், நடந்தது என்னனு தெரியாம அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. அவர்கள் வீதி 3 வழிச்சாலை. ஆதி ஒருபுறம் வந்தான். எதிர் திசையில் மிகுந்த வேகத்தில் தகரம், ரீப்பர் வைத்திருந்த அதுவும் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு சுவற்றையே பதம்பார்க்கும் அளவிற்கு கட்டப்பட்ட மினி லாரி ஒன்று வந்தது. இரண்டும் இவர்களின் வீட்டின் வழியே செல்லும் சாலைக்குள் நுழைய வேண்டும்… என்ன நினைத்தானோ ஆதி, அந்த லாரி வருவதர்குள் வேகமாக வந்து இவன் அந்த சந்தினுள் திரும்பிவிட்டான். அங்கே ஒரு வண்டி மட்டுமே செல்லமுடியும் இப்போது அடுத்து வரும் வண்டி இவன் வண்டிக்கு பின்னாலே வரவேண்டியதாகிப்போனது. .இருந்தும் வேகம் குறைக்காமல், ஹார்ன் அடித்துக்கொண்டே அந்த லாரி வர, இவன் மிரர் வழியாக பார்த்து யாரவன், இந்த சந்துக்குள்ளேயே இவ்வளோ வேகமா போறான் என கடிந்துக்கொண்டே தன் வண்டியை வேகமெடுத்து முன்னாடி பார்க்க திவி நடுரோட்டில் வருவதை கண்டவன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். இதை கூறிமுடித்தவன், “இப்போ சொல்லுங்க, ஒருவேளை நான் முன்னாடி வராம அந்த லாரிகாரன் வந்திருந்தா அவன் வந்த ஸ்பீடுக்கு இவ வந்த வேகத்துக்கு இந்நேரம் நினைச்சுக்கூட பாக்கமுடியல…”என கூற சந்திராவுமே ஆடிப்போய்விட்டார்.

ஆதி “பின்னாடி வந்த அந்த வண்டிய பாத்துத்தானே பயந்து நின்ன. கேள்வி கேட்க தெரியுதில்ல, இப்போ பேசு, அந்த வண்டி வந்தா என்ன ஆயிருக்கும்?” என கூற

திவியோ “என்ன ஆயிருக்கும், எனக்கு இந்நேரம் மில்க் ஊத்த ரெடி பண்ணிருப்பாங்க. நீங்க இம்ச ஒளிஞ்சதுனு ஜாலியா சுத்திருப்பீங்க” என அவள் கூறிமுடிக்கவும் ஆதியின் கைகள் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

“உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சந்தோசப்படுவேனா? உன்ன திருத்தவே முடியாது. இரிடேட்டிங் இடியட்… ச்சா..” என்று வேகமாக மாடிக்கு சென்றுவிட்டான்.

சந்திராவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை… ஆதி கூறியதுபோல எதுவும் அசம்பாவிதம் நடந்திருந்தால் கடவுளே என்று இருந்தது… திவி விளையாட்டுக்கு தான் கூறினால் என அறிந்தாலும் எந்த நேரத்தில் விளையாடுவது என்றில்லையா? அவன் அப்படி கத்திக்கொண்டு இருக்க இவளுக்கு அப்படி என்ன விளையாட்டு பேச்சு, அடிச்சதும் தப்பில்லைதான். என நினைத்ததை அவளிடமும் கூறியேவிட்டாள். அதுவும் அவனை வேற சந்தோசப்படுவான்னு சொல்ற… என் பையன பாத்தா உனக்கு அப்டியா தெரியுது? என கேட்க திவியோ கன்னத்தை பிடித்துக்கொண்டே அமைதியாக இருந்தாள். அனு, அம்மு, சேகர் அனைவரும் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக பார்க்க திவியே “சாரி அத்தை, நான் விளையாட்டுக்குனாலும் அப்படி சொல்லிருக்கக்கூடாது. என்கிட்ட பேசுங்க. ப்ளீஸ் என அவள் கொஞ்சி கெஞ்சவும் இவளுக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது. இருப்பினும் சரி சரி விடு. .இனிமேல் இப்டியெல்லாம் பேசாத… ஆனா ராஜா ரொம்ப கோபமா இருக்கான். எனவும்

“நான் பேசுறேன்….”

“இல்லை திவி அவன் கோபம் அவ்வளோ சீக்கிரம் குறையாது. இப்போ வேண்டாம் விட்டிடு. அவனே வரும்போது வரட்டும். “என சந்திராவே தடுக்க

“அதெப்படி, நான்தானே தப்பு பண்ணேன். விடுங்க அதெல்லாம் நான் பாத்துக்குறேன். ஒண்ணும் சொல்லமாட்டார்” என அவள் மாடி நோக்கி சென்றாள்.

ஆதியே கீழே இறங்கி வந்தான். அவனிடம் வந்த திவி “சாரி ஆதி, நான் நீங்க விளையாட்டுக்கு எடுத்திட்டு சண்டை போடுவீங்கனு நினைச்சு தான் அப்படி சொன்னேன்.” அவனோ கண்டுக்காமல் அவளை தாண்டி செல்ல அவனை வழிமறித்து மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

அவனுக்கும் சங்கடம்தான் அடித்ததில். ஆனாலும் அவள் கூறிய வார்த்தை. அவளை பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் அவனிடம் அவளது இழப்பை கொண்டாடுவேன் என்று அவள் கூறியது அவனுக்கு கோபம் மட்டுப்படவே இல்லை.

இன்னொரு மனமோ ‘அவதான் வெறுப்பேத்த, வம்பிழுக்கண்ணு லூசு மாதிரி ஒளர்றா, அதுக்காக அவளை அடிப்பியாஎன இடித்துரைக்க அவனால் மேலே நிற்கமுடியவில்லை.

அவளை காணவே கீழே வந்தால் அவளோ தன் தாயிடம் கெஞ்சி கொஞ்சி பேசவைத்து விட்டு இப்பொது தன்புறம் வர “என்ன நடந்தாலும் சரி, இவளை இப்படியே உடனே உடனே மன்னிச்சு விடறதால தான் இப்படி திட்டினாலும் கண்டுக்காம இருக்கா. பேசவேகூடாது..” என முடிவெடுத்து கண்டுக்காமல் இருக்க அவள் அனைவரையும் பாவமாக பார்த்து உதவிக்கு அழைக்க அவர்களோ “இவனிடம் நம்மால் பேச இயலாது” என ஒதுங்கியே இருக்க இந்த பார்வை பரிமாற்றங்களை பார்த்தும் ஏதும் சொல்லாமல் மீண்டும் அவன் விலகி விலகி செல்ல

பொறுமை இழந்த திவி “ஹே… ஆதி, என்ன ரொம்ப ஓவரா சீன் போடுறீங்க. ஏதோ சும்மா சொல்லிட்டேன் சாரின்னு சொல்றேன்ல. அப்புறமும் என்ன மதிக்காம போறது?” என கத்த அவளை தாண்டி சென்றவன் திரும்பி அவளை பார்க்க, அவளும் சளைக்காமல் அவனை முறைக்க ” தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டா அத ஏத்துக்க தெரியணும். இவ்ளோ தூரம் வளர்ந்து என்ன பண்றது. .இதுகூட தெரியல. உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, ஏன் மத்தவங்களுக்கு எல்லாம் வராதா?…நான் எல்லாரையும் மாதிரி நீங்க திட்டுனதும் பயந்து போய்டுவேன்னு நினைச்சீங்களா? அதெல்லாம் என்கிட்ட ஒர்க் அவுட் ஆகாது. எனக்கு கோபம் வந்தா..” என அவள் பேசிக்கொண்டே போக அவளை நோக்கி ஆதி முன்னேற அவளோ பேசிக்கொண்டே பின்னால் நடந்துகொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் சோபாவில் இடித்து அவள் அவனை பார்த்தவாறே நிற்க நேருக்கு நேராக பார்த்தவன் சொல்லு என்பது போல பார்க்க திவியோ கெத்தை விடாமல் “எனக்கு கோபம் வந்தா அவ்வளோதான், உங்களுக்கு 10 நிமிஷம் கோபம் இருக்குமா. .எனக்கெல்லாம் 10 மணி நேரம் கூட இருக்கும். நானா அதைவிட்டு வந்தாதான் உண்டு… அந்த நேரத்துல யாரும் என்ன கண்ட்ரோல் பண்ணமுடியாது.” என்க

 

ஆதி “பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்கிட்டேயே வாய்ஸ் ரெய்ஸ் பண்றியா. ..சொல்லு கோபம் வந்தா என்ன டி பண்ணுவ.” என்று கேட்டவனின் கேள்வியில் இருந்தது கோபமா, தெரிந்துகொள்ளும் ஆர்வமா என அறியமுடியவில்லை. ..ஆனால் அவளால் சாதாரணமாக பதில் சொல்லமுடியவில்லை. அவளை முறைத்தவனை பார்த்து அவள் வாய் தந்தியடிக்க அவனோ விடாப்பிடியாய் சொல்லுடி கோபம் வந்தா என்ன பண்ணுவ என அதிலேயே நிற்க திவி “புல்லா சாப்பிட்டு நல்லா தூங்கிடுவேன்.” என வேகமாக அவள் சொன்னதை கேட்டவன் அடுத்த நொடியில் சிரித்தேவிட்டான்.

திவியோ சீரியஸ்ஷாக “உண்மையாதான், பொதுவா கோபம் வராம பாத்துக்குவேன். கொஞ்சமா கோபம் வந்தா என் மைண்ட்ட வேற எதுக்காவது மாத்திக்குவேன், இல்ல தப்புன்னா அவங்களுக்கு புரியவைக்க பாப்பேன். பட் ரொம்ப எக்ஸ்ட்ரீம்ல கோபம் வந்திட்டா அவ்வளோதான் அந்த இடத்துல இருக்கமாட்டேன். அங்க நான் இருந்தா என் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாதுனு எனக்கு தெரிஞ்சுட்டா அனாவிசயமா பேசி கஷ்டப்படுத்தறத, நானு சங்கடப்படறத விட்டுட்டு பேசாம போயி புல்லா சாப்பிட்டு தூங்கிடுவேன்… அப்போ நான் எவ்வளோ சாப்பிட்டாலும், எவ்வளோ நேரம் தூங்கினாலும் யாரும் என்ன அசைக்க முடியாது. அப்படி ஒரு தூக்கம்..அதுதான் அவங்களுக்கு நல்லது.. இல்லை அவங்க என்கிட்ட காலி” என அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க ஆதியோ அவள் தலையை மெல்லமாக தட்டிவிட்டு “உண்மையாவே நீ லூசுதான். எப்படித்தான் இப்படி இருக்கியோ” என சிரித்துக்கொண்டே கேட்க அவளும் “manufacturing defect ” என கண்ணடித்துவிட்டு சென்று ஸ்வீட் கொண்டுவந்து

“சிரிச்சிட்டீங்க. ..கோபம் போய்டிச்சுல…ப்ளீஸ் ஸ்வீட் கொஞ்சம்” என கொடுத்தாள்.. அவனும் அதை எடுத்துக்கொண்டு “தேங்க்ஸ்” என கூற அவளோ “இல்லாட்டி அத்தை என்ன சபிச்சிடுவாங்க… உன்னால தாண்டி என் பையன் ஏதும் சாப்பிடாம போய்ட்டான்னு ஏதோ பட்டினிலே வாடினமாதிரி பில்ட்டப் பண்ணி திட்டுவாங்க. அதுக்காக தான் குடுத்தேன். மத்தபடி எனக்கெல்லாம் குடுக்கிற ஐடியா இல்லை பா ” என கூற அவளை ஆதி செல்லமாக முறைக்க, இப்பொது அடிக்கவருவது சந்திராவின் முறையாயிற்று. அவளிடம் இருந்தும் தப்பி அவள் வீட்டிற்கு ஓடியேவிட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22

22 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மூவரும் கோவிலுக்கு மகிழ்வுடன் செல்ல வண்டியில் இருந்து இறங்கி நடந்து வர ஜெயேந்திரன், தனம் அனைவரும் ஆதர்ஷ் அக்சரா குழந்தை என அவர்கள் ஒரு குடும்பமாகவே வருவதை கண்டு பூரித்து போயினர். அனைவரும் இதையே

KSM by Rosei Kajan – 14KSM by Rosei Kajan – 14

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…   [googleapps domain=”drive” dir=”file/d/1bUKaZkyxjfSdpbx69pJmoJwyHb6mbZJL/preview” query=”” width=”640″ height=”480″ /] Download WordPress Themes FreeFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themesfree download udemy paid

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- ENDமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- END

42 தனது சந்தேகத்தைக் கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்த சுஜி, “உங்களுக்குப் பணத்தாசை கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் எங்க அப்பாகிட்ட இருந்து அந்த நிலப் பத்திரத்தை வாங்குனிங்க?” “என்ன சுஜி இப்படி கேட்டுட்ட?… எனக்கு உங்கப்பா வரதட்சணை