Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 11

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 11

11 – மனதை மாற்றிவிட்டாய்

அன்று மாலையில் அர்ஜுன் ஆதியின் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தான். அந்த நேரம் திவியும் வந்தாள். அபி, அரவிந்த், நந்து, அனு, திவி அனைவரிடமும் பொதுவாக பேசிவிட்டு நண்பர்கள் இருவரும் தந்தையுடன் பிசினஸ் பற்றி பேச ஆரம்பித்தனர்.

சந்திராவோ “அடடா, புள்ளைங்கள ஒரு நாள்கூட விடாம இப்படியா புடிச்சு வெச்சுப்பீங்க. எப்போப்பாரு பிசினஸ்னு” என்று அவர்களுக்கு ஸ்னாக்ஸ், காபி அனைத்தும் கொடுத்துவிட்டு குறைபட்டுக்கொண்டாள்.

சேகர் “அட நீ வேற மதி, அத இவனுங்களுக்கு சொல்லு, 2 பேரும் என்ன விடாம புடிச்சுவெச்சுருக்கானுங்க, நீயே என்ன காப்பாத்தி கூட்டிட்டு போ மா, எங்க கூப்பிட்டாலும் ஏன்னு கேக்காம வரேன்.” என்றதும்,

இளையவர்கள் அனைவரும் “ஓ..” என்று கத்த, சந்திராவிற்கே வெக்கமாக போய்விட்டது. அதைக்கண்ட திவி ஓடிவந்து மதியை கட்டிக்கொண்டு, “ஏன் மாமா, மதி அத்தை இப்பவே இப்படி அழகா வெக்கப்படறாங்களே, கல்யாணம் ஆனபோது எப்படி இருப்பாங்க? அப்பவும் இப்படி வெக்கப்படுவாங்களா?” என ஆவலாக கேட்டவளிடம் “அப்படி, வெக்கப்பட்டத பாத்துத்தானே திவிமா மாட்டிகிட்டேன். இன்னும் தப்பிக்க முடியல. ” என சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சந்தோசமாக கூறினார். அதை பார்த்து சிரித்தவள் “ஆனாலும் அத்தை, எப்படி வெக்கபடவெல்லாம் உங்களுக்கு வருது?” என கேட்டவளை கண்டு “அதெல்லாம், பொண்ணுங்களுக்கு தான் தெரியும், உனக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது, உனக்கு சொல்லி புரிஞ்சிட்டாலும்…” என அடுத்த நொடி ஆளாளுக்கு அவளை வார அவள் பாவமாக முகத்தை திருப்பி மதியை நோக்க

மதி “அதெல்லாம், உனக்கு கல்யாணம் பண்ணும் போது தானா புரியும், இல்லை உன்ன தூக்கிட்டு போக ஒருத்தன் வருவான்ல, அவன் உனக்கு புரியவைப்பான். ” என்றார்.

“ஓஓ…”என மெதுவாக உதட்டை குவித்து அவள் கூற அதை அணுஅணுவாக ரசித்தவன், “ரொம்ப கஷ்டம்” என்று வாய் விட்டே கூறிவிட்டான். அவன் கூறியது என்னவோ தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல். ஆனால் அனைவரும் அவனும் திவியை கிண்டல் செய்ய கூறுவதாக எண்ணி சிரிக்க, அர்ஜுன் “கரெக்ட் டா ஆதி, கஷ்டம் தான், பட் கவலை படாத திவி உனக்கு டியூஷன் வெட்ச்சாவது வெட்கப்பட சொல்லித்தறோம்” என அவனும் சீண்ட அவளை தன்னை சிலிப்பிக்கொண்டு “தேவையே இல்ல அண்ணா, எனக்கு வெக்கம் எல்லாம் வரவே வராது, நானும் ஸ்ட்ரைன் பண்ணமாட்டேன். வேணும்னா அவனுக்கு டியூஷன் வெய்ங்க.” என்றவளை பார்த்து “அதுதான், கடைசில நடக்கும் போல” என்ற அர்ஜுனை “என்ன பிரதர், பிரண்ட பாக்கத்தானே வந்தீங்க எனவும் ஆமா என்றான். ஆனால் ஒரு நொடி திவியின் பார்வை அம்முவை காட்டியதோ என நினைத்தவன், இருக்காது என முடிவெடுக்கும் முன், திவி அவன் அருகில் வந்து ரகசியம் போல “நான் உங்க பிரண்ட பத்தி கேக்கல. என் பிரண்ட தானே பாக்கவந்தீங்க?” என அம்முவை காட்டி கண்ணடித்தாள்.

அர்ஜுனுக்கோ இவளுக்கு எப்படி தெரிந்தது என குழப்பமாக பார்க்க அவளோ கண்ணடித்து விட்டு “என் பிரண்ட்கிட்ட போன் பேசிட்டு வரேன்” என கூறிவிட்டு ஓடியவளை பார்த்த அர்ஜுன், சிறிது நேரத்தில் பின்னாடியே சென்று வினவ “வாங்க அண்ணா, எவ்வளோ நேரம் வெயிட் பண்றது? எப்படியும் வருவீங்கன்னு தெரியும், சரி சொல்லுங்க எப்போ கல்யாணம் வெச்சுக்கலாம்?” என பேசியவளிடம் “கொஞ்சம் பொறுமையா இரு திவி, இன்னும் அம்முகிட்டேயே நான் பேசல. எப்படியும், அவங்க ஸ்டேட்டஸ், எங்க ஸ்டேட்டஸ் வேற. ஏதோ பிரண்டா பழகுறோம்ங்கிறதுக்காக, பேராசை பட முடியுமா? பணத்துக்காக வரோம்னு நினைச்சிட்டா? அதனால ஏதும் இதப்பத்தி பேசாத, அவளுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பாப்பாங்க, அவளுக்கு எல்லா விதத்துலையும் பொருத்தமானவனா அவனையே கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கட்டும்.” என்றவனை பார்த்த திவி “ஏதாவது சென்டிமென்டல் ஸ்டோரிக்கு டயலாக், இல்ல ஷ்கிரிப்ட் எழுதறீங்களா அண்ணா?” என வினவியவளை முறைக்க

“பின்ன என்ன அண்ணா, எல்லாரும் நல்லவங்களும் இல்ல, எல்லாரும் கெட்டவங்களும் இல்ல, ஒருவேளை நாளைக்கு அம்முக்கு கல்யாணம் பண்ணி, அவளுக்கு வரப்போறவன் சரி இல்லே கொடுமைப்படுத்துறான்னா என்ன பண்ணுவீங்க?”

“கொலையே பண்ணிடுவேன்… அம்முவ கஷ்டப்படுத்தற யாரையும் பாத்திட்டு நான் சும்மா விட்டிட்டு இருக்கமாட்டேன். ”

“அது சரி, நீ யாரு அத கேக்கன்னு? கேப்பாங்க, உனக்கு அவளுக்கு என்ன சம்பந்தம்னு கேப்பாங்க? என்ன சொல்லுவீங்க, லவர்ன்னா ? அதுக்கப்பறம் அம்முவ யாராவது மதிப்பாங்களா?” என்க அமைதியாக தலை குனிந்துகொண்டவனிடம் திவி “அண்ணா, தெரியாத ஒருத்தர் கைல புடிச்சுக்குடுத்திட்டு காவல் காக்கிறதைவிட, அவள காலம் முழுசும் கண்கலங்காம பாத்துக்கறவன் தானே அவளுக்கு வேணும். அது ஏன் அவளை நேசிச்ச நீங்களா இருக்கக்கூடாது?”

“இவ்ளோ நாள் லவ்வ சொல்லாம வேற வெச்சுஇருக்கீங்க” என்று தலையில் ‘அடித்துக்கொண்டவள் “அம்முகிட்ட நான் பேசுறேன். அப்புறம் வீட்ல பேசலாம். ஓகேவா?” என்றவளிடம் ஏதோ அவன் சொல்ல வாயெடுக்க அவள் நிறுத்த சொல்லி கை காட்டிவிட்டு “ஒண்ணும் பேசக்கூடாது அண்ணா, இட்ஸ் யுவர் சிஸ்டர்ஸ் ஆர்டர்.” நான் பாத்துக்கறேன். இப்போ வாங்க போகலாம்.அவனும் உடன் நடந்தான். இரவில் அம்முவிடம் கேட்டு அவளுக்கும் விருப்பம் என்று அறிந்ததும் திவியும் மகிழ்வுடன், தன் வீட்டிற்கு சென்றாள்.

மறுநாள் அதிகாலையில் ஆதி தோட்டத்தில் ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான். “குட் மார்னிங் ஆதி” என்று குரலை வைத்தே யாரென்று அறிந்தவனுக்கு உதட்டில் புன்னகையோடு மனதில் கேள்வியும் பூத்தது. காரணமில்லாம இவ்ளோ அமைதியா வந்து பேசமாட்டேளே.. சரி அவளே சொல்லட்டும் என நினைத்தவன் “குட் மார்னிங் திவி, அம்மா உள்ள இருக்காங்க ” என்றான்.

“நான் உங்ககிட்ட பேசவந்தேன்.”

“அப்படியா?” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனின் செய்கையை கண்டவள் “என்ன தேடறீங்க ?” என்றாள்.

ஆதி ,” இல்ல, நீயா வந்து பேசுனாலே, எனக்கு ஏதோ ஆப்பு இருக்கும். அதான் இன்னைக்கு யாரு வந்து திட்டாபோறாங்கனு பாத்தேன்.” என்க அவனை கண்கள் சுருக்கி ஒரு முறை பார்த்தவள் “நமக்கு வேலை ஆகணும் திவி, கோபப்படாம வந்த விஷயத்தை பேசலாம் ” என தனக்குள் சொல்லிக்கொண்டவள் “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இல்ல கேக்கணும்..”

“சரி, சொல்லு” என்று அவனும் நடந்துகொண்டே கேட்டான்.

“அம்முக்கு மாப்பிள்ளை பாத்துட்டீங்களா?” என்றாள். “க்கும். .. எப்படியும், இங்க நடக்கற, பேசுற விஷயம் எனக்கு தெரியுதோ இல்லையோ உனக்கு தெரியாம இருக்குமா? ” என்றான் ஆதி.

“அட… அதில்ல, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா.. அத்தை, மாமா, நீங்க யாருக்காவது கேட்கலாம்னு யோசிச்சு வெச்சுயிருக்கிங்களா?, உங்களுக்கு தெரிஞ்சவங்க, பழக்கமானவங்கள்ள யாரவது இருக்காங்களா? ” என்று திவி கேக்க

“இப்போ வரைக்கும் அப்படி ஏதும் இல்ல..” என்றான்.

“உங்ககூட இருக்கறவங்கள்ள, பழகனவங்கள்ள யாரும் அம்முக்கு மேட்ச் ஆன மாதிரி உங்களுக்கு தோணலையா?” என்றவளை திரும்பி பார்த்தவன் இல்லை என்பது போல தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

“ஸ்டேட்டஸ், படிப்புன்னு எல்லாமே ஈகுவல்லா இருக்கணும்னு பாப்பிங்களா?” என்றாள்.

பொறுமையிழந்த ஆதி அவளை நேருக்கு நேர் பார்த்து “இப்போ உனக்கு என்ன தான் தெரியணும். டைரெக்டா கேளு.” என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவள் மூச்சை உள்ளிழுத்துவிட்டவள்

“சரி, லாஸ்ட் நீங்க அம்முவ பத்தி என்ன நினைக்கிறீங்க, அம்முக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு எதிர்பாக்கிறீங்க?” என்றவளை தலை சாய்த்து பார்த்து சிரித்தவன் “திரும்பவும் சுத்தி வளைச்சு தானே கேக்குற ?” என்றவனிடம் “ப்ளீஸ், ப்ளீஸ் ராஜா, இதுதான் லாஸ்ட் அப்புறம் கேள்வி கேட்கமாட்டேன்.” என்று கேட்க அவனும் மறுக்காமல் “எங்க எல்லாரையும் விட அம்மு ரொம்ப சைலன்ட் நல்ல பொண்ணு, ரொம்ப சமத்து, பாசம், என்னதான் படிச்சுயிருந்தாலும் அவளுக்கு பிரீடம் குடுத்தாலும் பெரியவங்கள மதிச்சு நடக்கணும்னே எல்லாமே கேட்டுத்தான் பண்ணுவா, பிரச்சனைன்னா கூட வெளில சொல்ல மாட்ட. யாரையும் குறை சொல்ல தெரியாது. அவளுக்கு வரப்போறவன் படிப்பு, அந்தஸ்த்த விட அவளுக்கு புடிச்சவன அவளை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அவளை எப்பவுமே விட்டுகுடுக்காம பத்திரமா பாத்துக்கணும்.” என்றதும் அவனை இமைக்க மறந்து பார்த்தாள் திவி.

அவளை அழைத்து நடப்புக்கு கொண்டுவந்த ஆதியிடம் கணமும் யோசிக்காமல் “அப்படின்னா, எங்க அண்ணா அர்ஜூன்க்கு நீங்க சொன்ன எல்லா குவாலிட்டிஸ்ம் இருக்கு, அவருக்கு கல்யாணம் பண்ணிகுடுங்க.” என்றதும் இப்பொது ஆதி அவளை விழித்து பார்த்தான்.

அவன் அமைதியை பார்த்தவள் “ஆதி, ஸ்டேட்டஸ் மட்டும் தான் உங்க 2 குடும்பத்துக்கும் இருக்கற ப்ரோப்லேம். அதுவும் அவங்களும் ரொம்ப எல்லாம் ஸ்டேட்டஸ் குறைஞ்சவங்க இல்ல. மத்தபடி அர்ஜுன் அண்ணா பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம். உங்களுக்கே தெரியும். அவங்கள மாதிரி ஒரு பையன் நம்ம அம்முக்கு வந்தா எப்படி இருக்கும்? அண்ணாகிட்ட எதாவது குறை இருக்கா சொல்லுங்க ” என்று அவள் கேட்க அவனும் “ச்ச…ச்ச… அவனை குறை சொல்லவே முடியாது. நான் கூட அவசரப்படுவேன், கோபப்படுவேன். பட் அவன் பொறுமை..என்ன விட பல மடங்கு நல்லவன். ஆனா அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தான் யோசிக்கிறேன். ஸ்டேட்டஸ் கூட அப்படி ஒன்னும் பிரச்னை இல்ல. ஆனா அர்ஜுன் அம்மா கொஞ்சம் படபடன்னு பேசிடுவாங்க. அதான்..” என்று அவன் இழுக்க “என்ன ஆதி நீங்க? உங்களுக்கு தெரியாதா.. அர்ஜுன் அண்ணா அவங்க அம்மா நல்லவங்க தான். தனக்கு மீறி எதுவும் பெருசா ஆசைப்படமாட்டாங்க. ஆனா தனக்குண்டான உரிமையும், மரியாதையும் கண்டிப்பா இருக்கணும்னு நினைப்பாங்க. மனசுல ஏதும் வெச்சுக்காம வெளிப்படையா பேசிடுவாங்க. மத்தபடி அவங்கள புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு தெரியாதா அவங்களோட பாசம், அக்கறை எல்லாமே..” என்றதும் அவனும் சிரித்து விட்டு “எப்படியும் முடிவு பண்ணிட்ட. ..ஆனா நீ சொல்றதும் கரெக்ட் தான்… சரி எனக்கு இதுல முழு சம்மதம் ” என்றதும்

திவி “தாங்கியூ சோ மச் ஆதி” என்ற அவள் மகிழ்வை பார்த்தவன் இவனும் சிரித்துவிட்டு “சரி, நான் அர்ஜூன்கிட்ட பேசுறேன். ” என்று நகர்ந்தவனிடம்

“நான் அண்ணாகிட்ட பேசிட்டேன். அவங்களுக்கு அம்முவ ரொம்ப பிடிச்சிருக்காம்.” என்று கூறியவளை திரும்பி விழித்து பார்க்க “நேத்து சாய்ந்தரமே கேட்டுட்டேன். அவங்களுக்கு விரும்பம் தான். ஆனா அவங்க தான் ஸ்டேட்டஸ், பிரண்ட்னு இத பத்தி எல்லாம் ரொம்ப யோசிச்சு கேக்கக்கூட இல்ல.” என்றாள்.

அவனும் “ஓ. .சார்க்கு இப்படி ஒரு ஐடியா இருந்ததா?” என்று சிரித்தவன் “சரி, அப்டின்னா அம்முகிட்ட கேக்கலாம். ” என்று அவன் கூற “அம்முகிட்டேயும் பேசிட்டேன். ஓகே தான்.” என்றாள் மெதுவாக.

அவன் அதிர்ச்சியாய் மீண்டும் பார்க்க “நேத்து நைட் அவகிட்ட பேசுனேன் ” என்றாள்.

அவளை பார்த்தவன் “இப்போ நான் என்னமா பண்ணனும்.?” என்றவனை நோக்கி “சூப்பர், நேரா போயி அத்தை, மாமாகிட்ட பேசுங்க.. மேரேஜ் பிக்ஸ் பண்ணுங்க” என்றாள்.

“ஏன், அவங்கிட்டேயும் நீயே பேசவேண்டியதுதானே?”

“பேசிருப்பேன், ஆனா நீங்க ஒருத்தர சட்ஜெஸ்ட் பண்ணி சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒருவேளை நாளைக்கு வெளில யாராவது பையன் குடும்பம், ஸ்டேட்ஸ்ன்னு பத்தி கேட்டாங்கன்னா, பிரச்னை பண்ண பாத்தாங்கன்னா ‘ஆதி பார்த்த சம்பந்தம் இது, கண்டிப்பா தப்பாகாதுன்னு மாமா அத்தை தைரியமா சொல்லுவாங்க.’ உங்க பேரா சொன்னாலே கண்டிப்பா சிலர் வாய தொறக்கமாட்டாங்க…அதான்..” என்றவளை ஆழ பார்த்தவன் “யார் யாருக்கு எப்படி பேசனும்னு கரெக்டா தெரிஞ்சிருக்க..” என்று ஆதி கூறியதும் “ராஜதந்திரம்….ஆனா உங்கள பத்திதான் தெரில… கெஸ் பண்ணவே முடில. எப்படி எடுத்துப்பீங்களோனு இருந்தது. பட் நௌ டபுள் ஓகே ” என்று கூறி கண்ணடித்து விட்டு

“அதுவுமில்லாம நாளைக்கு அம்மு அவ பாமிலியோட சந்தோசமா இருக்கறத பாக்கும் போத, மத்தவங்க பெருமையா பேசும்போது எங்க பையன் பாத்த மாப்பிளன்னு சொல்லி அத்தை மாமாவுக்கும் பெருமை தானே… அவங்களுக்கும் எவ்வளோ சந்தோசமா இருக்கும்” என்று ஆர்வமாக கேட்டவளை ரசித்து பார்த்தான்.

“ம்ம்.. ஆனா மாப்பிள்ளை பாத்தது நீதானே, கிரெடிட்ஸ் உனக்கு கிடைக்காதே? பரவாயில்லையா?” என்றான் அவன் குறும்புடன்.

“அதனால என்ன, கிரெடிட்ஸ் உங்களுக்கு கிடைச்சா என்ன, எனக்கு கிடைச்சா என்ன, எல்லாமே ஒன்னு தானே.” என்றதும் ஆதிக்கு இவ புரிஞ்சுதா சொல்றாளா என பார்க்க திவியோ “நம்ம எல்லாருக்குமே அம்மு சந்தோசம்தான் முக்கியம்..அதுக்குத்தானே எல்லாமே. ” என்று கூறியதை கேட்டதும் சப்பென்று ஆகிவிட்டது ஆதிக்கு.

அவளோ “எனிவே தேங்க்ஸ் ராஜா…நான் கிளம்பறேன்” என்றாள்.

அவளை நிறுத்திய ஆதி “அதென்ன ஒரு சில நேரம் ஆதின்னு கூப்பிட்ற, சில நேரம் ராஜான்னு கூப்பிட்ற ” என தன் சந்தேகத்தை கேட்டான்.

திவியோ “அதுவா… உங்கள பத்தி மாமா, அபி அண்ணி, அம்மு, அனு எல்லாரும் பேசும்போது ஆதி இப்படி, அப்படினு பில்ட்டப் பண்ணுவாங்க, அண்ட் ரொம்ப கோபக்காரன், வாலு, தப்பு பண்ணா மன்னிக்கவேமாட்டான், யாரு என்னனு பாக்க மாட்டான், அவன் முடிவு பண்ணா அவ்ளோதான்னு ஒரு டெர்ரர் பத்தி சொல்றமாதிரியே சொல்லுவாங்க.

ஆனா அத்தை ராஜா நல்லவன், திறமையானவன், கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி அதுவும் பிடிச்சவங்ககிட்ட , ரொம்ப பாசமா இருப்பான், அவனுக்கு பிடிக்காத விஷயத்தை யாருக்காகவும் மாத்திக்கமாட்டான். நியாயமான விஷயத்தை மறுக்கவும்மாட்டான். அதனால எந்த பிரச்சனை வந்தாலும் கவலைப்படமாட்டான்னு மத்தவங்க உங்கள கிண்டலா கம்பளைண்ட்டா சொன்ன விஷயத்தையே அத்தை பெருமையா விட்டுகுடுக்காம, அழகா நீங்க எப்போவுமே சமத்துங்கிறமாதிரியே சொல்லுவாங்க.

அதனாலையோ என்னவோ நீங்க பொதுவா பேசும்போது, வம்பிழுக்கும் போது, சண்டைபோடறப்போ, திட்டறப்போ எனக்கு உங்கள ஆதியாதான் நினைக்கத்தோணுது.

சமத்தா நீங்க அடுத்தவங்க சொல்றத பொறுமையா கேக்கும்போது, சந்தோசமா நீங்க சிரிக்கறப்போ, பாசமா பேசும்போது எல்லாம் ராஜா தான் தோணுது. அப்படியே மைண்ட்ல பிக்ஸ் ஆயிடிச்சு…. ஓகே டைம் ஆயிடுச்சு.. நான் போயி ஆபிஸ் கிளம்பறேன். டுடே நீங்களும் ஆபீஸ் போறீங்கள்ல … ஆல் தி பெஸ்ட்.. டாடா ” என்று ஓடிவிட்டாள்.

அவனும் அவளை பேசியது அனைத்தையும் நினைத்து சிரித்துக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3

  அன்பு வாசகர்களே! சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’  அடுத்த பதிவு இதோ.. கிழமைக்கு இரண்டு பதிவு போடநினைத்து ஆரம்பித்து, கொஞ்ச வேலைகளில் முடியாது போயிற்று. இனி இரண்டு பதிவேன் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive”

கடவுள் அமைத்த மேடை – 4கடவுள் அமைத்த மேடை – 4

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. புதிய வாசகர்கள் சிலர் கமெண்ட்ஸ் தந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. இன்றைய பகுதியில் சிவபாலன் வைஷாலியின் முதல் சந்திப்பு. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4

“நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும்