வணக்கம் தோழமைகளே
நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.
அன்புடன்,
தமிழ் மதுரா
கனவுக்குள் இணைந்து
கவிதையாய் என்னுள் புகுந்தாய்
கண நேரம் கூடப் பிரியாது
அடைகாத்தாய் எனை
கண்விழித்துப் பார்த்தேன்
கரைந்தே போனாய் காற்றாய்
கனவு தொலைந்தால் கருகித் தவிக்குது எம் மனசு
நிழலாய் எனைத் தொடரும் உன் நினைவு –
ஆனால் நிகழ்வில் இல்லை – நீ என்னோடு
நித்தமும் கலங்கித் தவிக்கிறேன்
நிராசையாய் போன
நினதன்பாலே – எனினும்
நிழலாய் வருவாய் என்ற நம்பிக்கையில்
நிற்கிறேன் கால்கடுக்க.
— ப்ரியவதனா