Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10

10 – மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் ஞாயிற்று கிழமையாதலால் காலை உணவு அனைவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டனர். திவி “பிரண்ட்ஸ எல்லாரும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு, போயி இன்னைக்கு பாத்திட்டு வரலாம்னு இருக்கேன், எல்லாரும் சண்டை போட்றாங்க. மதியம் படத்துக்கு போயிட்டு ஈவினிங் மால் போயிட்டு வந்துடறேன்” என்றதும் “சரி டா பாத்து போயிட்டு வா ” என ராஜீ சொல்ல,

தர்ஷி “அதானே, ஏன் சித்தி இதுவே நான் வெளில போறதுன்னா எப்போ வருவ, எங்க போறேன்னு எவ்வளோ கேள்வி, இவளுக்குன்னா மட்டும் பெர்மிஷன்ன வாரி வழங்குறாங்க இதெல்லாம் சரியா ?” என்றவளை பார்த்து சிரித்து விட்டு “நீயும், பாத்து பத்திரமா போயிட்டு வாடா” என்று மகா சொன்னதும்

திவி “ஏய், அப்படியே சொல்ற பேச்ச கேக்கறமாதிரி தான் நினைப்பு உனக்கு, நீ வெளில போறதுன்னா கேளு டி, என்ன எதுக்கு வம்பிக்கிழுக்கிற, அடங்காபிடாரி” என்றதும் அவளை முறைத்துக்கொண்டு இருந்த தர்ஷியை பார்த்த ராஜி “புள்ளைய ஏன் டி, முறைக்கற, அவளும் சரியாதானே சொல்றா, அவ எப்போவாது வெளிய போறா, அதான் ஏதும் கேக்கறதில்ல, நீ எப்பவுமே வெளில தானே சுத்தற, இதுல சப்போர்ட்க்கு உங்க சித்தி வேற ” என்றதும், திவி பழிப்பு காட்ட , பாவமாக சித்திய பார்க்க மகாவோ “சும்மா இருங்க கா, புள்ள கிளாஸ் போயிட்டு அவள பாத்துகிட்டு தானே வெளில போறா, இந்த வயசுல என்ஜோய் பண்ணாம எப்போ பண்றதாம், அதுவும் அவளுக்கும் நாலும் தெரியணும்ல, அவ

பத்திரமா பாத்துப்பா” என்றதும் “அப்படி சொல்லுங்க சித்தி ” என்று கட்டிக்கொண்டாள்.

திவி “அதுசரி, எப்போவும் வெளிலையே சுத்தறா, என்ன டி ஆள் ஓகே ஆயிடிச்சா, எப்போ இன்ட்ரோ குடுப்ப, இல்லை நேரா ரெஜிஸ்டர் மேரேஜ் தானா?” என்று கண்ணடித்து கேட்டவளிடம் தர்ஷி “ஹே, நல்லவளே.. எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு, எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்டு கடைசில லவ் கிவ் னு வந்து நிக்கப்போற அப்போ தெரியும், இந்த தர்ஷியே பரவால்லன்னு” என்றதும் இருவரையும் அடக்கி ராஜீ “2 பேரும் உத வாங்கப்போறிங்க, அக்கா தங்கச்சி மாதிரியா பேசுறீங்க, ஒழுங்கா சாப்பிட்டு கிளம்புங்க டி ” என்க இருவரும் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தனர். பின்பு கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.
ஆதியின் வீட்டிற்கு சென்று அங்கே ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு திவி “அம்மு எங்க அத்த, அவளும் வரேன்னு சொன்னாலே” என்று கூறிய வேளையில் வெளியில் வந்த அமுதா “இல்ல டி, ரொம்ப வயிறு வலிக்கிது, இப்போதான் டேப்லெட் போட்டேன். .நான் வரலை, நீ மட்டும் போயிட்டு வா, இன்னோரு நாள் பாத்துக்கலாம்.” என்றவளை இது எப்போவும் போலதான் என்றாலும் தலைவலி, காய்ச்சல், வயிறு வலி என்று எதற்கும் கொஞ்சம்கூட வலிதாங்காமல் டேப்லெட் உடனே எடுத்துக்கொள்கிறாளே ..இப்டியே இருக்காளே என்று முறைத்து விட்டு “எப்படி அத்தை, இப்படி ஒரு நோஞ்சானா பெத்துவெச்சுஇருக்கிங்க, இப்படி எல்லாம் பாத்திட்டு இருந்தா மாசத்துக்கு எத்தனை நாள் லீவு போடறது, எத்தனை விஷயம் பண்ணாம விடறது? கொஞ்சமாவது உடம்புல தெம்பு வேணாமா? தாங்குற சக்திகூட வேண்டாமா?.. இப்படி டேப்லெட் எடுக்கவேணாம்னு நீங்களாவது சொல்லமாட்டீங்களா? இப்படியே பண்ணா நாளைக்கு வரபோற எங்க அண்ணா தான் பாவம், பேசாம பார்மசி இருக்கறவனா பாத்து புடிச்சிடலாமா ?” என்றதும் அம்மு முறைக்க, மதி “எங்க சொன்ன கேக்குறா, சரி நீ பாத்து போயிட்டு வா.” என்றார்.

திவி “சரி, எல்லாரும் என்ன பண்ராங்க, அண்ணா, அப்பு இன்னைக்கு இருப்பங்கள்ல? அனுவும், நந்துவும் இன்னும் எந்திரிக்கிளையா ? மாமா, வெளில போயிருக்காங்களா? ” என வினவ

“ஆமா, அபி எல்லாரும் நாளைக்கு காலைல கிளம்புறாங்களாம், அதுங்க 2ம் நைட் விளையாடிட்டு

தூங்கவே லேட், எப்படியும் மதியம் சாப்பாட்டுக்கு தான் எந்திருப்பாங்க, உங்க மாமா ஏதோ பிசினஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ணனும்னு இப்போதான் போனாங்க” என அனைத்தையும் கேட்டுவிட்டு கிளம்பினாள் .

இவள் வந்ததிலிருந்து மேலே நின்று பார்த்துக்கொண்டும் பேசியதை கேட்டுக்கொண்டும் இருந்த ஆதி அவள், அம்மு மேல் கொண்ட அக்கறையும், உரிமையோடு அம்மாவிடம் சண்டைபோட்டதும் நினைத்து சிரித்தவன், தன்னை விடுத்து அனைவரையும் விசாரித்ததை எண்ணி எப்போவும் போல தனக்குள் அர்ச்சித்து விட்டு “இரு டி, என்ன பத்தி மட்டுமே நீ நினைக்கிற மாறி கொஞ்ச நாள்ல மாத்துறேன்” என்று மகிழ்வுடன் சொல்லிக்கொண்டே வந்தவன் “அம்மா, நான் போயி அர்ஜுன்ன பாத்திட்டு வரேன்” என்றதும் சந்திரா “ஆமா ராஜா, அவனை பாத்தும் ரொம்ப நாள் ஆச்சு, கூட்டிட்டு வா டா வீட்டுக்கு ” என்றார். இதை அமுதாவும் ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“சரிமா, இன்னைக்கு எப்படினு தெரில, பிரண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்றோம். எப்படியும் இந்த வீக்ல ஆபீஸ் எல்லாம் போக ஆரம்பிச்சுட்டா அப்புறம் ரொட்டின் தான், சோ ரெகுலரா வருவான்”

அர்ஜுன் ஆதியும் ஹாஸ்டெலில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள், இருவருக்கும் சொந்த ஊரும் ஒன்றே. கணேஷன்-மல்லிகா அவர்களின் மகன். அர்ஜுன் வீட்டிற்கு ஒரே பையன். ஆதி அளவிற்கு இல்லாவிடினும் ஓரளவிற்கு வசதி கொண்டவர்கள் தான். ஆதி வேகமும், விவேகமும், கூடவே கோபமும் கொண்டவன். அர்ஜுன் பொறுப்பும், பொறுமையும், திறமையும் கொண்டவன். ஆதிக்கு விளையாட்டு என்றால், அர்ஜூன்க்கு படிப்பு. ஆதி அதிகம் வெளியாள்களிடம் பழக்கமாட்டான், பழகினாலும் ஒதுக்கம் இருக்கும். அர்ஜுன் அனைவரிடமும் எளிதில் பழகிவிடுவான். மென்மையாக நடந்துகொள்வான். என்னதான் எதிர்துருவம் போல குணங்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் அப்படியொரு நட்பு, ஒருவரின் பார்வை கொண்டே மற்றவர் புரிந்துகொள்ளும் அளவிற்கு. இருவரின் பலமே அவர்கள் நட்புதான். மற்றவரின் பலத்தையும் அறிந்துகொண்டு அதுபடி நடப்பவர்கள். அதனாலே தான் அர்ஜுனை சேர்த்து பார்ட்னர் ஆக்கிவிட்டு சேர்ந்து கன்ஸ்டருக்ஷன் ஆரம்பித்து அர்ஜுனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆதி வெளிநாட்டிற்கு படிக்க சென்றுவிட்டான். முடிந்த அளவு அர்ஜூனே பொறுமையாக அனைத்தையும் பார்த்துவிடுவான். ரொம்ப பிரச்னை பொறுமையாக பேசி எடுபடாத சமயத்தில் ஆதி அவனது அதிரடியை காட்டிவிடுவான். இருவருக்கும் தெரியும். எவரிடம் பேச்சு சரிவரும், எவரிடம் செயல் சரிவரும் என்று. அதற்கு தகுந்தாற் போல இருவரும் அனுசரித்து அடுத்தவரிடம் அதை கையாள விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்.
நீண்ட நாள் கழித்து நண்பனை கண்ட சந்தோஷத்தில் ஆதியும், அர்ஜுனும் ஆரத்தழுவினர்.

அர்ஜுன் “எப்பிடிடா மச்சான் இருக்க?”

ஆதி “நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? வீட்ல அம்மா அப்பா எல்லாரும் என்ன பண்ராங்க ?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க, உனைத்தான் கேட்டுட்டே இருந்தாங்க. எப்போ வர? ”

“இங்கேயும் தாண்டா, காலைல அம்மாகிட்ட சொன்னதுமே அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாங்க, சரி இனி இங்கதானே 2 பேரும் இருக்க போறோம். பாத்துக்கலாம் ”

“ஈவினிங் எல்லாரும் எப்போடா வரேன்னு சொல்லிருக்காங்க. ”

“எப்படியும் 3 ஆகும் டா, வா நாம கொஞ்ச நேரம் அப்டியே பேசிட்டே சாப்படலாம் ”

நண்பர்கள் இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்பு ஆதி “அமுதாவுக்கு அடுத்து மாப்பிளை பாக்கணும்னு சொல்ல” அர்ஜுனும் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு “அதுக்கென்ன, பாத்திடலாம்.” என்றான் “சரி, 2 நாள் எப்படி போச்சு?”

அர்ஜுனை பார்த்த ஆதிக்கு தான் ஊரிலிருந்து வந்து 2 நாள் தானா என்று இருந்தது. ஏதோ திவியை பற்றி அவனது எண்ணம் சென்றது. அதன்பின் ஆதி ஊரிலிருந்து வந்த அன்று பார்த்த பெண், அவளை பற்றி தவறாக எண்ணியது, அவள் வீட்டிற்கு வெளியே போனில் கூறிய அறிவுரை, அவளை அடித்தது ராஜேஷ் கூறிய அறிவுரை என அனைத்தையும் கூறினான். அதை கேட்ட அர்ஜுன் “ஆனா நீ கைநீட்டி அடிக்கற அளவுக்கு போயிருக்கவேண்டாம்.” என்றதும் “கரெக்ட் தான், ஆனா அவ போன்ல அந்த மாதிரி அட்வைஸ் பண்ணத பாத்ததும் ஏனோ கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடிலடா, அவள] முழுசா தப்பாவும் நினைக்கமுடிலே” என்று தன் மனதில் தோன்றியதை நண்பனிடம் பகிர்ந்துகொண்டான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் “ராஜேஷ் சொன்னதை முழுசா ஒதுக்கவும் முடியாது, நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க. ஆனா அவன் சொன்ன மாதிரியும் பொண்ணுங்க இருக்காங்க. சோ பாத்துதான் இருக்கனும்..” என்று கூறவும் ஏனோ எதுவும் கூறாமல் தலை அசைத்து அமைதியாக கேட்டுக்கொண்டான். இத்தனை கூறியவன் அந்த பெண் திவி தான் என்பதை கூறாமல் விட்டுவிட்டான். ஏனோ அவளை பார்க்கவேண்டுமென மனம் துடிக்க தரையை பார்த்து அமைதியாக இருந்தான்.

ஆனால் அவர்கள் முன்னால் வந்த திவி “நான் வந்துட்டேன் ” என்றதும் இமைக்க மறந்த ஆதி ஒரு நொடி பார்த்தவள் “ஹலோ சார், என்ன வீட்டு பக்கமே ஆள காணோம், பிரண்ட் இல்லாட்டி எங்களை எல்லாம் பாக்கவரமாட்டீங்களா?” என்று செல்லமாக கோவித்து சண்டை போட “அப்படி இல்லடா திவி, கொஞ்சம் வேலை அதுதான். நீ எப்படி இருக்க, இங்க சுத்திட்டு இருக்க?” என அவர்கள் இருவரும் சகஜமாக பேசிக்கொள்ள ஆதிக்கு ஒருவேளை அர்ஜுன் வீட்டிற்கு வந்த போது பழக்கமாக இருக்கலாம், இவதான் யாரப்பாத்தாலும் பேசிறாளே என்று நினைத்தவனிடம் அர்ஜுன் அவன் நினைத்தமாதிரியே கூறினான். அண்ட்” உனக்கு திவிய தெரியும்ல டா ஆதி , திவி உனக்கு ..?”என்று பேசியவனை நிறுத்திவிட்டு “ஏன், இளம் தொழிலதிபர்களில் ஒருவரான தி கிரேட் மிஸ்டர். ஆதிய தெரியாம இருக்குமா? இதுல நீங்க வேற மார்க்கெட்டிங் பண்ணனுமா?” என்றவளை “உன்ன .. ” என்று அடிக்க கை ஓங்க இதை பார்த்த ஆதி அவர்கள் இவ்ளோ நெருக்கமாக சண்டை போட்டு கொள்வதை நினைத்து என்னவோ மனதுக்குள் பிசைந்தது. ஆனால் அடுத்த நொடி திவி “ஐயோ … அண்ணா, ப்ளீஸ் தங்கச்சி பாவம்ல” என்றதை கேட்டவனுக்கு அண்ணா என்றதில் மனம் லேசாகி “அப்படினா அவன் அடிக்க வேண்டாம், அவன் தங்கச்சிய நான் அடிக்கறேன். வா ” என்று ஆதி கூறியதும் திவி “அஷுக்கு புஷுக்கு… ரோட்ல போறவறவங்ககிட்ட எல்லாம் அடி வாங்கிக்கொள்ளப்படும்னு போர்டா போட்டிருக்கு… போவீங்களா ?” என்றவளை காதை பிடித்து கொண்டு “யாரை பார்த்து, ரோட்ல போரவன்ற, வாய் உனக்கு ஜாஸ்திடி, இப்போ பேசு” என்றவனை “ஐயோ, ப்ளீஸ், ப்ளீஸ் சும்மா சொன்னேன், விட்ருங்க.. அண்ணா நீங்களாவது சொல்லுங்க” என அர்ஜுனை அழைக்க அவன் சிரித்து கொண்டே “உன் வாய்க்கு இது தேவைதான்” என கூற ஆதியிடமே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “ஆதி ப்ளீஸ், வலிக்கிது” என்றதும் தான் மாயம், உடனே கையை எடுத்துவிட்டு “ரொம்ப வலிக்கிதா?” என்று அக்கறையாக கேட்டான். அவளும் விட்டால் போதும் என்று “அது வலிச்சதானே தெரியும்” என கண்ணடித்து விட்டு ஓடிவிட்டாள். அதை பார்த்தவன் “பிராடு” என வாய் விட்டே கூறினான். அர்ஜுனோ “திவி, இருந்தாலே இப்படித்தான், ஆனா நீயே அவகிட்ட இவ்ளோ ஜாலியா பேசுற பாரேன்.” என்றதும் தான் ஆதி சற்று தடுமாறி “அது 2 நாளா இவளும் வீட்ல தானே இருந்தா, அதான் பழகிடுச்சு போல.” என சிரித்தவனை பார்த்து ம்ம் சரி சரி…என்றான் அர்ஜுன்.

அந்த நேரத்தில் நண்பர்கள் வர அனைவரும் பேசிக்கொண்டு இருக்க இவர்களின் சத்தத்தை மீறி அந்த பக்கம் பெண்கள் சத்தம் கேட்க முதலில் சுதாரித்தவன் ஆதி “திவியோ?” என்று எட்டி பார்த்தான். அவள் தோழிகளுடன் உரையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க, அதை ரசித்தவன் அவர்களின் சத்தம் கேட்டு நண்பர்கள் அனைவரும் திரும்பி பார்த்து பெண்களை கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதுவும் அந்த பர்பிள் கலர் சுடி என்னமா கத்துறா & கண்ணுவேற அடிச்சு சிக்னல் குடுக்கிறா ? என்றதும் ஏதோ, பர்த்டே செலெப்ரஷன் மச்சான். விடுடா, அவளுங்களே கத்தி சிக்னல் கொடுக்கறாங்க, அப்புறம் இவனுங்க தான் பிரச்சனை பண்ணாங்கன்னு பசங்கள சொல்லவேண்டியது. இருக்கறவரைக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியா பாத்து என்ஜோய் பண்ணுவோம் .” என்று ஆளாளுக்கு பேச ஆதி கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான். திவி பர்பிள் கலரில் தான் உடை அணிந்திருந்தாள். ஆனால் தன் நண்பர்கள் கூறிய பெண் அவளுடன் இருந்த வேறொருத்தி. இவன் அவளை மட்டுமே பார்த்ததால் வந்த வினை. சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பிவிட அங்கே பெண்கள் கூட்டமும் கிளம்பிவிட, திவியை பார்த்த அர்ஜுன்,வா டா என அவளிடம் வந்து நின்று “என்ன திவி, கெளம்பல?” என்றதும், “போகணும் அண்ணா, வண்டி கொண்டு வரல, பஸ்க்கு போறேன்.” என்றவளிடம் “நான் வேணும்னா கொண்டு வந்து விடவா, மழை வேற வரமாதிரி இருக்கு ” என்றவனை பார்த்த ஆதி “வேண்டா.. அர்ஜுன். நீ கிளம்பு. . நான் அவளை கூட்டிட்டு போய்க்கறேன்.” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் இவனே முடிவெடுத்தான்.

திவி ஒருவாறு அவனை பார்த்துவிட்டு என்ன இவனா கூட்டிட்டு போறேன்னு சொல்றான். ஒருவேளை அப்போ காதை புடிச்சு சரியா திருகலேன்னு இப்போ அட்டாக் பண்ண பாக்கிறானா என்று யோசித்தவள் be alert திவி என்று தனக்குள் கூறிக்கொண்டு “இல்லை அண்ணா, நானே போய்க்குவேன், கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு, அப்புறம் பஸ் ல அதுவும் காத்து அடிக்கும் போது சூப்பர்ரா இருக்கும்.” என்றவளை மதிக்காமல் “ஏன் மழை வந்து நீயா நினைஞ்சுட்டு, வீட்ல கேட்டா கிளம்பும்போது மழை வந்தது, நான் என்ன பண்றது, நினைஞ்சுட்டேனு சும்மா மூஞ்ச பாவமா வெச்சு நடிக்கவா, ஒழுங்கா என்கூட வர, இல்லை வீட்ல எல்லார்கிட்டயும் போயி சொல்லிடுவேன். ” என ஆதி பயமுறுத்த எதையும் காட்டிக்கொள்ளாமல்

திவி “அப்படியெல்லாம் இல்லை, பக்கத்துல ஒரு பிரண்ட்ட பாக்கணும்னு நினச்சேன், இப்போதான் ஞாபகமே வருது. . எனக்கு டைம் ஆகும். நீங்க கிளம்புங்க ஆதி” என கூற பொறுமை இழந்த ஆதி “நான் பிரீ தான். வா உன் பிரண்ட்ட பாத்திட்டு நானே உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…நீ கிளம்பு மச்சான். ” என அவள் கையை பிடித்து இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு சென்றான். அவனுக்கு அவனது நண்பர்கள் இவளை பற்றி கமெண்ட் செய்ததும் இவளிடம் பேசவேண்டும் என இருந்தவன் , இவளும் வர மறுக்கவும் இப்படி இழுத்துக்கொண்டு சென்றான்.

காரில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ததும் “ஏன் ஆதி, இப்படி பண்றீங்க, இப்படியா இழுத்துட்டு வருவீங்க, யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க. கொஞ்ச கூட ..” என்றவளை “நிறுத்திரியா… யாராவது பாத்துடுவாங்கனு நீ ரொம்ப கவலைப்படற ஆள் தான் பாரு… எதுக்கு டி அங்க அப்படி கத்துறீங்க?” என அவன் கோபமாக வினவ

“ஓ. .அதுவா இன்னைக்கு ரேஷ்மிக்கு பர்த்டே… செம ஜாலி.. செலிப்ரஷன் சூப்பரா இருந்தது. ரொம்ப எக்ஸைட் ஆயிட்டோம்.” என இவள் என்ஜோய் பண்ணதை பற்றி கூறவும் இவனுக்கு இவள என்னதான் பண்றதுன்னு இருந்தது. இருப்பினும் “அதுக்காக, அப்படியா… பசங்க எல்லாரும் இருக்காங்கனு கொஞ்சமாவது அடக்க ஒழுக்கம் வேண்டாம். அவனுங்க கமெண்ட் பண்ற அளவுக்கா வெச்சுக்குவாங்க?” என அவளுக்கு புரியவைக்கும் நோக்கில் பேச

திவியோ “பசங்க இருந்தா என்ன, சும்மா நாங்க எங்களுக்குள்ள பேசுறத கூட நிறுத்திக்கணுமா? பசங்க கமெண்ட் பண்ணா அவங்கள போயி கேளுங்க, என்ன ஏன் அடக்குறீங்க. சம்பந்தமே இல்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடற அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க, என் பிரண்ட்ஸோட நான் பேசுனத்துக்கு திட்டுவீங்களா ஆதி? ஏன், பொண்ணுங்க நாங்களும் தான் பசங்கள கமெண்ட் பண்ணுவோம், ஆனா அது உங்கள நேரடியாவோ, மறைமுகமாவோ பாதிக்கிதா? இல்லை பொண்ணுங்க பசங்கள கமெண்ட் பண்றங்கனு நீங்க அட்ஜஸ்ட் பணிக்கிறீங்களா இல்லேல… அப்புறம் ஏன் பொண்ணுங்ககிட்ட மட்டும் அடங்கி போகணும்னு எதிர்பாக்கறீங்க..நீங்க இப்படி கேப்பீங்கனு நினைக்கல ஆதி” என மூஞ்சை திருப்பிக்கொள்ளவும்

ஆதிக்கு அவளது கேள்வி சரியென படவும், அவள் இறுதியாக கூறிய வரிகள், தன்னை அவள் நம்பியதை, தன்னிடம் அவள் எதிர்ப்பார்பை உணர்ந்தவனுக்கு அவளின் இந்த செய்கை சிரிப்பை வரவழைத்தது. அவன் அழைத்தும் திரும்பாமல் இருந்தவள் அவன் மெதுவாக காரை ஓரம்கட்டி நிறுத்தி அவளின் கையை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பினான்.

அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன் “இங்க பாரு, அவனுங்க கிண்டல் பண்ணதுக்காக மாத்திக்கவேண்டாம். ஆனா பேமிலி, குழந்தைங்க, பெரியவங்கனு எல்லாரும் சுத்தி இருப்பாங்க… அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகும்ல. அவங்களே சொல்லுவாங்கள்ல, தப்பா நினைப்பாங்கள்ல .. ஏன் இப்படி கத்துறாங்கன்னு.. வயசுப்பொண்ணுங்க இப்படியா இருக்கறதுனு …அதுக்கு தான். உன்ன இப்போ நான் குறை சொல்லல… ஆனா உன்ன யாரும் அப்படி குறைசொல்லிட கூடாதுனு தான் சொல்றேன்..என்ன புரிஞ்சதா?” என ஆதி கூற “ம்ம். ..”என்றாள்.

அவளை இன்னும் பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பார்க்கவும் “என்னடா?” என்று காதலோடு வினவினான்.

“கை வலிக்கிது..” என்று திவி கூறியதும் இவனுக்கு தான் கூறியதை இவள் புரிந்துகொண்டாளா இல்லையா என்பதை தாண்டி அவளை பார்த்து சிரிப்புதான் வந்தது. அவனும் கையை விடுவித்தவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவள் அமைதியாக இருக்க அவளை சகஜமாக்க நினைத்தவன் “சரி, உன் பிரண்ட் எங்க வரங்களாம்?” என்று அவள் கூறியது பொய்யென்று தெரிந்தும் வினவ அவளோ ஒரு நொடி விழித்தவள் “அது, அவங்க ஊருக்கு போய்ட்டாங்க.” என்றவளை நம்பாத பார்வை பார்க்க அவளும் “ஆக்சுவலி, நாங்க பஸ்ட், மீட் பண்ணலாம்னு தான் நினைச்சோம், அப்புறம் திடிர்னு ஊருக்கு போகவேண்டியதா போச்சுன்னு நேத்து நைட் தான் சொன்னாங்க.. நான் பஸ்ட் பிளான் பண்ணதையே நினைச்சிட்டு இருந்தேனா..அதான் மறந்துட்டேன்… மீட் பண்ணனும்னு அப்போ அப்படி சொன்னேன்.. அப்புறம், பார்க்கிங் வரும் போதுதான் ஊர்ல இலேன்னு ஞாபகமே வந்தது. சோ இப்போ நம்ம வீட்டுக்கே போலாம்னு.” அவள் சமாளித்த விதத்தை பார்த்தவன் “ஓ. ..”என்றுவிட்டு ஏதும் கூறாமலே வண்டியை செலுத்தினான்..

அவனை பார்த்தவள் ஒருவேளை பொய் சொல்றேன்னு கண்டுபுடிச்சிட்டானோ என தோன்ற இருக்காது என இவளுக்கே கூறிக்கொண்டாள். இவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் “என்னமா கோர்வையா பொய் சொல்றா, பிராடு ” என நினைத்தவன் “திவி, தூறலோடு காத்து சூப்பரா இருக்கில்ல? உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே..” எனவும் அவளும் ஏக்கமாக, “ஆமா, ஆனா என்ன பண்ணி என்ன பிரயோஜனம், மழைல கொஞ்சம்கூட நினையவிடாம இப்படி கார்ல் கடத்திட்டு போறிங்களே” என்று அவள் ஜன்னலை வெறித்தாள். திடீரென்று அவள் தான் உளறிவிட்டதை எண்ணி உதட்டை கடித்துக்கொண்டு அவனை பார்க்க அவனும் இவளை பார்த்து சிரித்துக்கொண்டே “அதுக்குள்ள எவ்வளோ பொய் சொல்லுது இந்த வாயி… அதுக்குதான் நீயே உதட்டை கடிச்சு தண்டனை குடுக்கிறியா? அதுக்கு இந்த தண்டனை மட்டும் போதாது.” என அவன் கூறியதை கேட்டவள் புரியாமல் விழித்து பார்க்க அவனுக்கு இவள் செய்கை தன்னை அடக்க முடியாமல் என்னவோ போல் இருந்தது. காரை நிறுத்திவிட்டு “வீடு வந்திடுச்சு. ..இறங்கி போ..”என்றதும் இறங்கியவள் “ஆதி, என்ன இன்னைக்கு மழைல நினையவிடாம பண்ணதுக்கு உங்களையும் சேத்தி ஒருநாள் நினையவிடறேன் இருங்க ” என்று விட்டு ஓடிவிட்டாள். அவளை பார்த்து சிரித்தவன் “வாலு, இத எப்படித்தான் சமாளிக்கபோறேனோ? ” என நினைத்துக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 5ராணி மங்கம்மாள் – 5

5. பக்கத்து வீட்டுப் பகைமை கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.   மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், “மறவர் நாட்டு

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12

இதயம் தழுவும் உறவே – 12 விசாரிக்கும் தொனியில் கணவன் அமர்ந்திருக்க, யசோதாவிற்கு சற்று பதற்றம் வந்தது. அமர்ந்திருந்தவாக்கிலேயே மாறாதிருந்தான், அவள் கரங்களோடு கோர்த்திருந்த கரங்களையும் பிரிக்கவில்லை. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமம் போல பரிதவித்து போனாள். சிறிது நேர மௌனத்தின்பின்,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 64

64 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் ஹாஸ்பிடல் கொண்டு செல்ல திவியை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டர் அகிலா அவர்களிடம் வர ஆதி “ஆண்ட்டி அவளுக்கு என்னாச்சு? எதுவும் இல்லையே?” என பதற அவர் சிரித்துவிட்டு “ஆதி, ஜஸ்ட் ரிலாக்ஸ். அவளுக்கு