Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

9 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல.. இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை பார்த்த மகிழ்வுடன் வரவேற்றார். சந்திரசேகரும், ராஜலிங்கமும் ஒரே வயதுடையவர்கள், தொழில் பழக்கம், அண்டை வீடு, சொந்த ஊரும் பக்கம் பக்கம்தான், இதை அனைத்தையும் தாண்டி தங்களுக்குள் இருந்து நட்புணர்வு இருவர்களும் விரைவில் நெருங்கிய நண்பர்களானார்கள். மகாலிங்கமோ “நீங்களும் பிஸி தானே அண்ணா” எனவும்,

“அதுக்காக சொந்த பந்தம் பிரண்ட்ஸ்னு யாரையும் பாக்காம இருக்கமுடியுமா, நீங்க வரேன்னு சொல்லுங்க ஒரு நாள் முழுக்க இங்கேயே இருக்கேன்” என்ற சந்திரசேகரை பார்த்த ராஜலிங்கம் “போதும் போதும் சேகர், நீயும் எதுத்த வீடு தானே, நாங்களாவது இப்போ வந்தோம், நீ எப்போ வந்த? ஏன்மா சந்திரா நீயும் இவனோட சேந்துக்கிட்ட இங்கேயே இருக்க, வீட்டுக்கே ஏன் வரதில்லே.. உங்க மேல கோபமா இருக்கோம். ஆனாலும் குழந்தைங்கள பாக்கத்தான் வந்தோம்” என்றவரை சந்திரசேகர் “என்ன ராஜா அப்போ நீ என்ன பாக்க வரல. இத நான் நம்பணுமா ?” என்றதும் மகாலிங்கம் “அட சேகர் அண்ணா நீங்க வேற, ஒரு வாரமா சேகர பாக்கணும்னு ஒரே புலம்பல், கடை வேலை அது இதுனு பிஸி ஆனதால வரமுடில. எல்லாரையும் திட்டி வேலைவாங்கிட்டு இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சிட்டு சாய்ந்தரமே வேகமா என்ன கூட்டிட்டு வந்துட்டாரு.” என்று போட்டு கொடுத்த தம்பியை முறைத்துக்கொண்டு நண்பனிடம் திரும்பினார் ராஜலிங்கம்.

சந்திரசேகர் சிரித்துவிட்டு ராஜாவின் தோளில் கை போட்டு “அட பரவால்ல வா ராஜா, எனக்கு உன்ன பத்தி தெரியாதா? நீ என்ன பாக்க வரல, பிள்ளைங்களை பாக்கத்தான் வந்திருக்க, என் மேல கோபமா இருக்க, இதுதானே உண்மை நான் நம்பறேன்” என்று சந்திரசேகர் சொன்ன விதத்துலையே தெரிந்தது அவர் நம்பவில்லை என்று அவரை பார்த்த ராஜலிங்கமும் இறுதியில் சிரித்துவிட்டார்.

“என்ன மா அபி எப்படி இருக்க உடம்பு பரவாயில்லையா?”

“நான் நல்லாயிருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க, அத்தைங்க எல்லாரும் எப்படி இருகாங்க. காலைல பாக்கவரலாம்னு நினச்சேன்.”என்றாள்.

இருக்கட்டும்டா, ” உன்ன அலையவிடுவோமா, எங்க பொண்ண பாக்க நாங்களே வந்திட்டோம், அரவிந்த எப்படிமா இருக்கார்?” என்றதும் போன் பேசி முடித்து வந்த அரவிந்த் “நான் நல்லாஇருக்கேன் பா, நீங்க எப்படி இருக்கீங்க. சிவாவும் ரஞ்சனியும் எப்போ வராங்க? என்று பதில் உரைத்து பேசிக்கொண்டு இருக்க

சந்திரமதி “அதுசரி அண்ணா, அண்ணி, மகா எல்லாரும் எங்க அவங்க வரலையா?” என வினவ

“இல்லை மா கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வரேன்னு சொன்னாங்க.. அப்புறமா வந்தா உக்காந்து எல்லாரும் பேசுங்க. பேசவிட்டுட்டு பாதில கூப்பிட்டா எங்களுக்குத்தான் அடி விழும். அதனால அப்புறமே பிரியவே வரட்டும்” என்றார் ராஜலிங்கம்.

அதைக்கேட்டு சிரித்த சந்திரசேகர் “என்ன வேலை சமையல் தானே, அவங்களையும் இங்கேயே வரச்சொல்லு , இங்கேயே செஞ்சு சாப்பிடலாம்.” என்றதும் அபி, அம்மு, அனு எல்லாரும் ஆமா மாமா எல்லாரும் ஒண்ணா இருந்து ரொம்ப நாள் ஆச்சு, என்றதும் நந்துவும் ஆமா தாத்தா ராஜீ பாட்டி மகா பாட்டியும் வரச்சொல்லுங்க. ப்ளீஸ் என்றதும் அவருக்கு உருகிவிட்டது. அவனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு “இதுக்கு எதுக்குடா தங்கம் ப்ளீஸ் எல்லாம் சொல்றிங்க, நீங்க கூப்ட்டாலே போதும் அவங்க உடனே வந்துடுவாங்க” என்றதும் தான் உடனே அவன் அவர் மடியில் இருந்து குதித்து அப்போ சரி நானும் திவியும் போயி கூட்டிட்டு வரோம்.” என்று திவியை இழுத்துக்கொண்டு ஓடினான்.

இதை சிரித்துக்கொண்டே பார்த்தவிட்டு “அப்புறம் சேகர், ஆதி வந்திருக்காப்லயாம், எங்க காட்டவேமாட்டேன்கிற” என்றபோது அவனும் கீழே வந்துகொண்டிருந்தான்.

“இதோ அவனே வந்துட்டானே, ஆதி, இவன் தான் ராஜலிங்கம் என்னோட பிரண்ட் தொழிலையும் சரி, உறவுளையும் சரி, அது மகாலிங்கம், இவனோட தம்பி, நம்ம திவியோட அப்பா, இவன் ஆதி என்னோட பையன் எப்படி என்ன மாறி இருக்கானா? ” என்று அறிமுகப்படுத்த “ச்ச.. ச்ச ஆதி ரொம்ப நல்லா இருக்கானே, அவன் எங்க தங்கச்சி மாதிரி” என்றுசொல்லிவிட்டு “எப்படி பா இருக்க, படிப்பெல்லாம், முடிஞ்சது, இனி எங்கேயும் போகமாட்டேல்ல?” என்று வினவ

ஆதியும் ” நல்லாயிருக்கேன் மாமா, படிப்பெல்லாம் முடிஞ்சது, இனி இங்கேயே தான் இருக்கபோறேன், இங்க அப்பா பிசினஸ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு அப்படியே கன்ஸ்டருக்ஷன்னும் பாத்திட்டு இருக்கபோறேன்.” என்றான்.

மகாலிங்கமும் “ரொம்ப சந்தோசம்ப்பா, என்னமா சந்திரா இனி உனக்கு கவலையே இல்லேல. உன் பையன் உன்கிட்டேயே பத்திரமா வந்துட்டான். இனி சேகர் அண்ணாவ திட்ட மாட்டல?” என்றதும் சந்திரசேகர் “அப்படி சொல்லு மகாலிங்கம், இனி இந்த பெரிய பிரச்னை எனக்கில்லை..” என்றவரிடம் சந்திரமதி “சிரித்துக்கொண்டே , அடுத்து அவனுக்கு கல்யாணம் பண்ணனும், அவன் ஒதுக்கலேன்னா நீங்க தான் காரணம்.” என்றதும்,

சேகர் “அடக்கடவுளே, இப்படி ஒரு சோதனையா, ஆதி அப்பா பாவம்டா” என்றவரிடம் “சாரி அப்பா, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் தோணவே இல்ல , தோணும் போது நானே சொல்றேன். அதுவரைக்கும் நீங்க திட்டுவாங்கிக்கோங்க..எனக்கா இப்போ பொண்ணு பாக்கிற ஐடியாவும் இல்ல, ஒருவேளை உங்க மருமக சீக்கிரம் அவளா வந்தா பாக்கலாம்.” என்றான் ஆதி.

சேகரோ “அட கல்நெஞ்சுக்காரா, அதுவரைக்கும் திட்டுவாங்குறதா, மகன் தான் கை விட்டுட்டான், மருமகளே நீயே சீக்கிரமா வந்து, என்னை இங்க இருந்து காப்பாத்து ” என்று அவர் வேண்டியதை அனைவரும் பார்த்து சிரித்த வேளையில், வாசலில் திவி நந்து, அம்மாக்களுடன் “சேகர் மாமா, நான் வந்துட்டேன். உங்கள யாரு என்ன சொன்னது, நான் பாத்துகாக்கிறேன் அவங்கள” என்று உள்ளே நுழைந்தாள்.

சந்திரசேகரோ “வாடா திவி நீ இல்லாம உங்க அத்த என்ன திட்ட பிளான் பண்ரா, நீ எப்பவும் எனக்கு தானே சப்போர்ட்” என்று கேட்டவரிடம் இருந்து திவி “மதி அத்த எப்படி மாமவ நான் இல்லாம நீங்க திட்ட பிளான் பண்ணலாம். நானும் இருப்பேன். எனக்கும் பிளான் தெரியணும்” என்று அவள் கண்ணடித்து கூறியதை கேட்டு அனைவரும் சிரிக்க, அவளும் சிரித்து விட்டு சந்திரசேகரிடம் வந்தவள்

“மாமா, என்ன பிளான் பண்ராங்கனு தெரிஞ்சாதானே நான் பதில் சொல்ல முடியும், உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும், அதுக்குதான் சொன்னேன். இவங்க தான் சிரிச்சு மாட்டிவிடபாக்ராங்க. ஆனா ஒன்னு, நான் எப்பவும் சேகர் மாமாக்கு சப்போர்ட் தான். எங்க மாமா எது செஞ்சாலும் அது நல்லதுக்குதான். சோ யாரும் மாமாவை ஏதும் சொல்லக்கூடாது” என்றவளை “அப்படி சொல்லு டா திவி” என்று தோளில் சாய்த்துக்கொண்டார் சேகர்.

அவள் கேட்டது சந்திரசேகரின் கடைசி வரிகள் மட்டுமே “நீயே சீக்கிரமா வந்து, என்னை இங்க இருந்து காப்பாத்து” என்றதற்கு அவள் இவ்வாறு கூறினாள்.

ஆதி அவளையே பார்த்துக்கொண்டு, இல்லை முறைத்துக்கொண்டிருந்தான். “இவ என்ன நினைச்சிட்டு இருக்கா, இவ அவங்க பேசுனத கேட்டுட்டு வந்தாளா, இல்லை எதேச்சியா வந்து அப்படி சொன்னாளா? பிராடு, எப்படியும் உள்ள ஒன்னு வெச்சுட்டு வெளில ஒன்னு சொல்லிருப்பா, இவள அப்புறமா கவனிச்சுக்கறேன். இருப்பினும், அப்பா மருமகள் பற்றி பேசியதும் அவள் முகம் தன் மனதில் வந்ததை அவன் மறுக்கவில்லை, அதை ஏன் என்று புரிந்துகொள்ளவும் இல்லை.

ஆண்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, தாய்மார்கள் அனைவரும் வேலை செய்துகொண்டிருந்தனர். அனு, நந்து, அம்மு விளையாடிக்கொண்டிருந்தனர். திவி அவ்வப்போது கிட்சன் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவி செய்துகொண்டும், நந்துவுக்கு பதில் சொல்லிக்கொண்டும், அனைவருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துவந்து ஆண்கள் அனைவருக்கும் தந்தாள். ஒவ்வொருவரிடம் கொடுக்கும்போதும் அவள் அவர்களிடம் பேசிட்டுவிட்டு கொடுப்பதை, பார்த்தவன் தன்னிடம் வந்து வெறுமனே ஜூஸ்ஷை நீட்டிக்கொண்டு மட்டும் நின்றாள். அவனும் சுற்றி அனைவரும் பிஸியாக அவரவர் வேலையில் இருக்க இவர்களை கவனிக்கவில்லை என்றவன் ஜூஸ் எடுக்காமல், அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அவளுக்கு கோபம் வந்து, “ஜூஸ் வேண்டாம்ன்னு நான் போறேன்” என்று போக எத்தனித்தவளை “ஓ. .நீ எனக்கு ஜூஸ் குடுக்க வந்தியா, அப்படி ஏதும் நீ சொல்லல. சும்மா என்ன பாக்க நிக்கிறியோனு நினச்சேன்” என்று வெறுப்பேத்தினான்.

திவியும் “ஆமா, மனசுல பெரிய ஆணழகன், மன்மதன்னு நினைப்பு, ஜூஸ் கொண்டுவந்து எதுக்கு நிப்பாங்க, குடுக்கத்தான். ஏன் பாத்தா தெரியாதா? இத தனியா வேற சொல்லணுமா?.. மண்டைல ஏதாவது இருந்தா தெரிஞ்சிருக்கும்” என்று முணுமுணுத்தவளை பார்த்த ஆதி,

“அப்போ மத்தவங்ககிட்ட மட்டும் தெரியாதா, அவங்ககிட்ட மட்டும் சொல்லி தானே குடுத்த, நின்னு பேசிட்டுத்தானே வந்த அப்புறம் என்ன? ஒருவேளை அவங்க மண்டைல ஒன்னுமிலேன்னு சொல்றியா ? கேட்ருவோமா?” என்றவனை ஒரு நிமிடம் விழித்து பார்த்து “ஹே, நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்றவள் அவன் சிரிப்பை பார்த்து “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் முகத்தை சுருக்கிக்கொண்டு.

அதை ரசித்தவன், “என்ன கேட்டாலும் தரப்போறியா ?” என்றவனை புரியாமல் திரு திருவென விழித்து பார்க்க, அவனுக்கு ஏனோ அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்க, தலையை உசுப்பிக்கொண்டு சுற்றி அனைவரையும் பார்த்துவிட்டு “எல்லாருக்கும் எப்படி ஜூஸ் எடுத்துக்கோங்கன்னு சொன்னியோ அப்படி குடு, இல்லாட்டி, எங்க அம்மா, உங்க அம்மா எல்லார்கிட்டயும் நீ எனக்கு ஜூஸ் தரமாட்டேனு சொலிட்டேனு சொல்லிடுவேன். நீ பண்ற வாலுத்தனத்துக்கு கண்டிப்பா நான் சொன்னதும் நம்புவாங்க, என்கிட்ட ஜூஸ் இல்லேனதும் கண்டிப்பா உன்னதான் கேள்வி கேப்பாங்க. ” என்றவனை பார்த்த திவி, அவன் சொல்றதும் உண்மைதான், தேவையில்லாம திட்டுவாங்கணும், அதுவும் மகா அம்மா சொல்லவே வேண்டாம். கிடைச்சது சான்ஸ் னு அட்வைஸ் ஆரம்பிச்சுடுவாங்க என்று எண்ணியவள் வேண்டா வெறுப்பாக “ஜூஸ் எடுத்துக்கோங்க” என்றாள். அவளது முகபாவனையை பார்த்துக்கொண்டே வந்தவன், “இப்படியா, எல்லாருக்கும் எரிஞ்சு விழுந்த மாறி சொல்லிட்டே குடுத்த ?” என்றதும் இவளுக்கு “ஐயோ என்றானது.” இருப்பினும், ஒரு நொடியில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, அடுத்த நொடி சிரித்தவள், “ராஜா ப்ளீஸ், உங்களுக்கு பிடிக்கும்னு தானே ஸ்பெஷல்லா ஆப்பிள் ஜூஸ் கொண்டுவந்திருக்கேன் ஜூஸ் எடுத்துக்கோங்க” என்று அவனுக்கு முன் நீட்ட, அவனும் எதும் கூறாமல், வாங்கிக்கொண்டான். அவள் கூறியது உண்மை தான், மற்றவர்கள் லெமன் ஜூஸ் தான் குடித்துக்கொண்டிருந்தார்கள். அவளிடம் திரும்பியவன் அவள் விட்டால் போதும் என்று ஓடியதை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவனின் செய்கையை அரவிந்த், அபி, அம்மு, அனு அனைவரும் கவனித்தனர்.

பின்பு இரவு உணவு தயாராக, சந்திரா, ராஜீ, மகா பரிமாற அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர். திவி நந்துவுக்கு ஊட்டிவிட்டு பின்பு அம்மா அத்தையோடு சாப்பிடுவதாக கூறிவிட்டாள். மகாலிங்கம் “அப்புறம் சேகர் அண்ணா, சந்தானகிருஷ்னன் தெரியும்ல உங்களுக்கு ?” என்றவனிடம் “ஓ , நல்லா தெரியுமே, நகைக்கடை ஓனர் தானே. ?” என்றதும் “ஆமா அண்ணா, நல்ல குடும்பம், ஒரே பையன், m.e முடிச்சிருக்கான். இப்போதைக்கு பாரின் ல இருக்கான். இன்னும் 6 மாசத்துல இந்தியா வந்திட்டு பிசினஸ் ஆரம்பிக்க போறானாம். அவங்க பொண்ணு இருந்தா சொல்ல சொன்னாங்க, நம்ம அம்முக்கு பாக்கலாமா.. நீங்க வேற யாராவது மனசுல வெச்சுயிருக்கிங்களா எப்படி அண்ணா? ” என்றதும் சந்திரசேகர் “இப்போவரைக்கும் இல்லப்பா, பாக்கலாம், அவங்களும் நல்ல குடும்பம் தான், விசாரிப்போம்.” என்றதும் அனைவரும் முகம் மலர இருக்க சந்திரசேகரோ இப்படிப்பட்ட நல்ல சம்பந்தம் வந்தும் தன் மகளே இருந்தும் அவர்களுக்கு பாக்காமல், தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிறானே, இதுவே வேறு யாரேனும் இருந்தால் இந்நேரம் அவர்கள் குடும்பத்திற்கு என்று பேசி கல்யாணத்தையே முடித்திருப்பார்கள், என்று நினைக்க இவர்களின் அன்பை கண்டு ஆயாசமாக இருந்தது. மனதில் பட்டதை வெளியில் சொல்லியும் விட்டார்.

அதற்கு ராஜலிங்கம் “பாரு சேகர், எங்களுக்கு அபி, ஆதி, அமுதா, அனு இவங்களும் பிள்ளைங்க தான். ஒரே குடும்பமா நம்ம இருந்தா எப்படி பிள்ளைங்க வயசுப்படி கல்யாணம் பண்ணிருப்போமோ அப்படிதான் இப்பவும், 3 மாசம்னாலும் அமுதா தான் மூத்தவ, அதனால அமுதாக்குதான் மொத கல்யாணம், அப்புறம் திவிக்கு பாக்கலாம். ஏன் நீ அவளுக்கு பாக்கமாட்டேயா என்ன ?” என்றவனை பெருமையுடன் பாத்த சந்திரசேகர், “டேய் ராஜா, திவிக்கு நான்தான் மொதல்ல மாப்பிள பாப்பேன். ஏத்தமாதிரி அவளுக்கு பொருத்தமா ஒரு ராஜகுமாரனா கூட்டிட்டு வரப்போறேன்.” என்றவர் “திவி மா உனக்கு, எப்படிடா மாப்பிள்ளை பாக்கணும் சொல்லு” என்றவரிடம் “உங்க எல்லாரையும் மாதிரி” என்றாள்.

புரியாமல் அனைவரும் அவளை பார்க்க “ராஜப்பா மாதிரி கம்பீரமா வேலை வாங்கணும் , அப்பா மாதிரி பொறுமையா எல்லா விஷயத்தையும் ஹாண்டில் பண்ணனும் , சேகர் மாமா மாதிரி பிசினெஸ்ல ஒரு நேர்த்தி, ஆளுமை இருக்கனும், சிவா அண்ணா மாதிரி பொறுப்பா இருக்கனும், அரவிந்த் அண்ணா மாதிரி கலகலப்பா இருக்கனும், இதில்லமா ராஜீமா மாதிரி என்கிட்ட பாசமா இருக்கனும் , மகாமா மாதிரி அக்கறையா இருக்கனும், மதி அத்த மாதிரி என்ன சமாளிக்க தெரியணும், என் சேட்டைய ரசிச்சாலும், என்னோட தப்ப எனக்கு கண்டிச்சு சொல்லி புரியவைக்க தெரியணும். ரஞ்சனி அண்ணி, அப்பு, அம்மு மாதிரி எனக்கு பெஸ்ட் பிரண்ட்ஸ்ஸ இருக்கனும், தர்ஷி, அனு மாதிரி என்கிட்ட வம்பிழுத்து சண்டை போடணும். அப்புறம் நம்ம நந்து மாதிரி அப்போ அப்போ சேட்டையும் பண்ணனும், எல்லாத்துக்குமேல என்ன கண்ட்ரோல் பண்ண வழி தெரியணும். இல்லாட்டி அவன் பாடு கஷ்டம் தான். அப்புறம் உங்க எல்லாரோட அன்பும் மொத்தமா அவன்கிட்ட இருக்கனும், உங்க எல்லாருக்குமே அவனை புடிச்சிருக்கணும்.” என்றவளை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

முதலில் சுதாரித்த அரவிந்த் “மாமா உண்மையாவே இவளுக்கு மாப்பிள பாக்கிறது கஷ்டம்தான் போல, லிஸ்டே இவளோ சொல்றாளே, அவன எங்க கண்டுபுடிக்கறது. உண்மையாவே அவனுக்கு உன்ன சமாளிக்க தெரியாட்டி, அவன் பாடு திண்டாட்டம் தான்.. ஆனா திவி நாங்க உனக்கு ஆல்ரெடி பொறந்திருக்கவன கண்டுபுடிக்க கேக்கறோம், புதுசா ஒருத்தன செய்றதுக்கு இல்லை ” என்று சேகரிடம் ஆரம்பித்து, திவியிடம் முடித்தான். அனைவரும் இவன் கூறியதை கேட்டு சிரிக்க, திவி சொன்னாள் “அண்ணா கண்டிப்பா இருப்பாங்க அண்ணா, தேடாம ஏதும் கிடைக்காது. சில சமயம் நமக்கு பக்கத்துலயே இருந்தாலும், புரிஞ்சுக்கமுடியாது. அதெல்லாம் மீறி கண்டுபுடிக்கறதுதான் விஷயமே. அண்ட் நான் சொன்ன கேரக்டர் எல்லாம் எல்லார்கிட்டயும் இருக்கும். என்ன அதஅத சரியான நேரத்துல வெளிப்படுத்த தெரியணும்.”

இதைக்கேட்ட அமுதா “ஹே திவி, நீ சொல்றத பாத்தா ஆல்ரெடி பாத்துட்டேயோ ? எங்ககிட்ட பில்ட்டப் பண்றியா? யாருடி உன் லவர்.?” என்றவளை இருவர் முறைத்தனர் யாருமறியாமல் ஆதியும், செல்லமாக திவியும்.

ஆதிக்கோ இந்த அம்மு வேற ஏன் இப்படி புரளியை கெளப்புறா.. அப்படியெல்லாம் திவி லவ் பண்ணமாட்டா..என்றதும் அவன் உள் மனம் அப்படின்னு அவ உன்கிட்ட சொன்னாளா? என்ற கேட்க, கொஞ்சம் சும்மா இரு அவளே சொல்லட்டும் என அவள் பதிலை ஆவலுடன் இல்ல இல்ல ஒரு பதட்டத்துடன் எதிர்பார்த்தான்.

திவியோ “ஏன் டி, உனக்கு தெரியாதா? அப்படி இருந்திருந்தா இவளோ நாள் என்னால மறக்கமுடியுமா, அண்ட் உங்க எல்லாருக்கும் அவனை புடிக்கணும்னு சொன்னேனே, அப்படி உங்களுக்கு யாரை ரொம்ப புடிச்சது, அந்தமாதிரி யாரை இதுவரைக்கும் பாத்தீங்கனு சொல்லு பாக்கலாம்.?” என வினவியவளிடம் அனு “இதுவரைக்கும் மட்டும்மில்ல, இதுக்கு மேலையும் அப்படி ஒருத்தன பாக்கமுடியுமான்னு டவுட் தான்.” என்று சிரிக்க அபியோ “பின்ன என்ன டி, இந்த வேலை, இந்தமாதிரி குடும்பம், இவ்ளோ சம்பளம், ஆள் பாக்க இப்படி இருக்கணும்னு எல்லாம் சொல்லுவேன்னு பாத்தா இப்படி 16 மார்க் எஸ்ஸேல பதில் சொன்ன மாதிரி இவளோ சொல்ற, எப்படி மாப்பிள பாக்கிறது.?” என்று அவள் பங்கிற்கு அவளும் வாரினாள்.

அனைவரையும் கண்களை சுருக்கி செல்ல கோபத்தோடு பார்த்துவிட்டு நேரே மதியிடம் வந்து “பாருங்க அத்தை, எல்லாரும் கிண்டல் பன்றாங்க, நானா கேட்டேன், நீங்க எல்லாரும் தானே எப்படி வேணும்னு சொல்லுன்னு கேட்டீங்க. என சிணுங்கிக்கொண்டே கேட்டவள்.. பின் திரும்பி வேலை, சம்பளம் எப்போ வேணும்னாலும் மாறலாம், குடும்பம்னா எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க சோ அதுவும் நம்ம ப்ரீடிக்ட் பண்ணமுடியாது. ஆனா இவன் ஒருத்தன் எனக்கு புடிச்சதுனா என்ன புரிஞ்சுக்கிட்டா இவனுக்காக எத வேணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு தோணும், கண்டிப்பா இவனுக்காக எதுவேணும்னாலும் விட்டுகுடுத்திடலாம். அண்ட் ஆள் பாக்கறதுக்கு ஓகே னு பிக்ஸ் பண்றோம் சரி, ஒருவேளை ஏதாவது ப்ரோப்ளேம்ல அவங்களோட வெளித்தோற்றம் மாறவும் சான்ஸ் இருக்கு. (அடிபடறது, விபத்துன்னு னு சொல்லாம அவ ப்ரோப்லேம்னு பொதுவா சொன்னதே அவங்களுக்கு புரிந்துவிட்டது).

இப்போ சொன்ன எல்லாமே எப்ப வேணாலும் மாறலாம். ஆனா கேரக்டர் அந்தமாதிரி இல்ல. ஒருவேளை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சில நேரம் ரியாக்ட் பண்ணாலும், கண்டிப்பா ஒரு நாள் அது திருப்பி பாத்து திருத்தக்க தோணும். அது நம்ம குணம் இல்லையே, ஏன் அப்படி பண்ணோம்னு நினைச்சாலே கண்டிப்பா மாறிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என்றுவிட்டு நான் எதாவது தப்பா சொல்றேன்னா அத்த, ஏன் இப்படி கிண்டல் பண்றங்க ? அந்தமாதிரி யாரும் இருக்கமாட்டாங்களா ?” என்று அவள் கேட்டவிதமே அப்படி ஒருத்தன் வரமாட்டான்னு அவள் ஒரு எதிர்பார்ப்போடு கேட்பதை கண்டு அனைவருக்கும் உருகிவிட்டது.

சந்திரமதியோ “கண்டிப்பா நீ சொல்றதுதான் தாண்டா சரி, மத்த எல்லாத்தையும் விட குணம் தான் முக்கியம், நீ கேட்டமாதிரி தான் ஒருத்தன் உனக்கு வருவான். உன்ன நினச்சா பெருமையா இருக்கு.. நீ சொன்னதுல எதிர்பாக்கிறதுல தப்பே இல்லை.. நீ ஏன் பீல் பண்ற?” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள். ராஜியும், மகாவும் கூட அவள் தலையை தடவிக்கொடுத்து “நீ சொல்றத கேட்க கேட்க எங்களுக்கே அவன் யாரு எப்படி இருப்பான், எப்போ பாப்போம்னு ரொம்ப ஆவலா இருக்கு.” என்றனர். சேகரும் “நீ எப்பவும் போல சிரிச்சிட்டே சந்தோசமா இரு. உனக்கு புடிச்சமாதிரியே ஒருத்தன நாங்க கூட்டிட்டு வரோம். இவங்க கிண்டல் பண்றதெல்லம் கண்டுக்காத.” என்றதும் அனைவரும் அவளை சூழ்ந்து அவளை வம்பிழுத்து திரும்பவும் பழைய திவியாக பார்ம்க்கு கொண்டுவந்தனர்.

ஆதியும் எழுந்து கை கழுவிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

ஆதிக்கோ முதலில் அவள் தன்னை தவிர்த்து அனைவரின் குணத்தையும் சொல்லவும், கோபம் கொண்டவன், இறுதியில் அவள் அம்மாவிடம் “அந்தமாதிரி யாரும் இருக்கமாட்டாங்களா ?” என்று ஒரு எதிர்பார்ப்போடு, குழந்தையின் ஏக்கத்தோடு பதிலை எதிர்பார்த்த பார்வை ஆதிக்கு “ஐயோ, நான் இருக்கேன் டி செல்லம் உன்ன பாத்துக்கன்னு” சொல்லி அள்ளி அணைக்க துடித்த மனதை எப்படி அடக்கினானோ தெரியவில்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவளை பற்றி எத்தனை முறை தப்பாக நினைத்தாலும், திட்டினாலும், சில கேள்விகளுக்கு பதில் புரியாத புதிராகவே இருந்தாலும், அவள் தன்னுள் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை, அவள் முகம் ஒரு கணம் வாடினாலும் தன்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்று நினைத்தவன்

சிரித்து விட்டு, “வாயாடி, ராட்சஷி.. உன்மேல அவ்ளோ கோபம் இருக்கு, உன்ன தப்பாவும் நினச்சேன், உன்ன சீண்டுறேன், சண்டைபோடறேன், இன்னும் உன்ன பத்தி புருஞ்சுக்கமுடியாம சில விஷயங்கள இருக்கேன். இருந்தும் ஒண்ணுமே பண்ணாம, அதிகம் என்கிட்ட பேசக்கூட இல்லாமல் எனக்குள்ள இவ்ளோ சீக்கிரம் வந்து உக்காந்திட்டு என்ன இம்ச பண்ற. உன்ன என்ன தாண்டி பண்றது?” என செல்லமாக திட்டிக்கொண்டு “சரி இனி எது எப்படியோ எதுமே எனக்கு புரியாம தெரியாம இருந்தாலும் ஓகே, இதுக்குமேல நீ எனக்கு மட்டும் தான், அதை நீயும் புரிஞ்சுப்ப சீக்கிரம் உன்ன என்கிட்ட வரவைக்கறேன். அப்புறம் நீ சொன்ன மாதிரி உன்ன என் காதலால குளிப்பாட்டறேன்.” என்றவன் உடனே காதலை சொல்லலாமா என்றவன் “ஆமா , அவள அடிச்சு, சந்தேகப்பட்டு, திட்டி , சண்டைபோட்டு இதுல அவ மூஞ்சிக்குடுத்தே பேசமாட்டேன்கிறா… இந்த அழகுல லவ்வ சொன்ன கன்போர்ம் பண்ணி அவளே மெண்டல் ஹாஸ்பிடல்ல சேத்திடுவா”என்ற மனதிடம் அவள திட்ட, சண்டை போட, அடிக்க எனக்கு இல்லாத உரிமையா? அதைத்தானே அவளும் கேட்டா ..சரி இப்போ லவ்வ சொல்ல வேண்டாம் , கொஞ்ச நாள் அவளோடு சீண்டி விளையாடலாம்.. அவளுக்கு எதிர்பார்ப்பு புரிஞ்சது, ஆனா அவளுக்கு லவ் எந்த அளவுக்கு புரியுமோ தெரிலையே சோ வெயிட் பண்ணுவோம்” என்று முடிவு எடுத்தான்.

இத்தனையும் யோசித்தவன், அவளை பற்றிய சந்தேகங்களை தீர்க்காமல் இந்த காதலை ஏற்றதுதான் தவறு. அது இவன் ஆழ்மனதில் அடைந்திருந்ததை அவனும் உணரவில்லை. உணரும் வேளையில் காலம் இவர்களுக்கான பல பாடங்களையும் பிரிவுகளையும் கற்றுகொடுத்திருக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05

5 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அடுத்து வந்த தினங்களில் அக்சரா, ஆதர்ஷின் சண்டை, ஒருவர் மற்றவரை வீழ்த்த எண்ணி செய்வது, குறை கூறி விளையாடுவது என அது அனைத்தும் ஒரு போட்டியாகவே சென்றது. இருந்தும் இருவரும் வேலையில் கண்ணும்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16

கனவு – 16   சஞ்சயனும் வைஷாலியும் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வைஷாலி வீட்டின் முன்னே சஞ்சயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வைஷாலி எதுவுமே பேசாது இறங்கிக் கீழே சென்றாள். அவளை அந்த மனனிலையில் தனியாக

நிலவு ஒரு பெண்ணாகி – 17நிலவு ஒரு பெண்ணாகி – 17

வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் உளம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். துர்காஷ்டமி சமயத்தில் உமைபுரத்தின் ஸ்ரீமேரு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிலவு ஒரு பெண்ணாகி – 17 அன்புடன் தமிழ் மதுரா