Tamil Madhura கதைகள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 66

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 66

உனக்கென நான் 66

“என்னமா இங்க தனியா இருக்கபோறியா” என ஊர் பெரியவர்கள்கூற “அப்பா இன்னும் சாகலை அவரோட நினைவுகள் இங்கதான் தாத்தா இருக்கு நான் இங்கயே இருக்குறேன்” என கண்ணீர் விட்டாள் காவேரி.

“அப்புடில்லாம் வயசுக்கு வந்த பொண்ண தனியா விட முடியாது” என தனசேகர் சத்தமிட “ஆமா மதராஸ்ல இவனே அபின்னு ஒரு பொண்ண வச்சிருக்கான் இவன் போசுறான் பொண்ணு பாதுகாப்ப பத்தி” என கூட்டத்தில் ஒருவர் கூற இவனது பார்வைக்கு ஒடுங்கிபோனான் அவன். அந்த வார்த்தையை கேட்டு கங்கா தலைகுனிந்து நின்றாள் அவளுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தொழில்ரீதியாக பழகுகிறேன் என கூறி சமாளித்திருந்தான்.

“அவன் கேக்குறதுல என்னப்பா தப்பு இருக்கு தன் மச்சினிச்சி பாதுகாப்புக்கு பேசுறான்பா” என தனககு ஆதரவாகூற “அதான் அந்தபொண்ணுதான் வரமாட்டேங்குதுல்ல”

“அப்ப அவ அக்காவும் மாமாவும் அவளுக்கு பாதுகாப்பா இங்க தங்கட்டும்பா” என கூற முடவு செய்தனர். “ச்சீ இந்த பொம்பளைகூட நான் தங்கமாட்டேன்” என ஜான்சி கூற “சித்திய அப்புடி பேசகூடாது” என கங்கா அடக்கிவைத்தார்.

பின் கங்கா தங்கியிருக்க கூட ஜான்சி சேகர் மற்றும் செல்வதனசேகர் தங்கினர். அங்குதான் வினை ஆரம்பமானது. ஆம் அன்று இரவு தன்மேல் தவறில்லை என கூற சன்முகம் அங்கு வர தனசேகர் அவனை பார்த்துவிட்டான்.

“டேய் காவேரி என் சொத்துடா அவள நீ சொந்தமாக்கலாம்னு பாக்குறியா” என மிரட்டி அடிக்க அவன் அலரும் சத்ததில் காவேரி வெளியே வர “மாமா அவர விட்டுடுங்க”

“என்னது அவரா” என கேட்க தயங்கி நின்றாள். கனவனை எப்படி பெயர் சொல்வது.

“ம்ம் இவரர்ர்ர்ர்ர்.  சூப்பர்டி நீ எனக்கு மட்டும்தான்டி சொந்தம் உன்னதான் நான் கல்யானம் பன்னிருக்கனும்” என கூறிவிட்டு அவனை அடித்து தூக்கிவிச ஆட்கள் வந்தனர். காவேரியை கையைபிடித்து இழுத்துசென்றான் தனசேகர்.

மறைவில் நின்றிருந்த கங்கா கண்கள் கலங்கினாள். அவளை முறைத்து பார்த்தவன் காவேரியை இழுத்துசென்று ரூமிற்குள் வைத்து பூட்டினான். “தங்கச்சி பாவம்ங்க வெளிய விடுங்க” என தனசேகரின் காலில் விழுந்த கதறினாள்.

“இங்க பாருடி நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு உன் தங்கச்சி அத கெடுக்க பாக்குறா! அந்த கூலிகாரனுக்கு கட்டி கொடுக்குறதுக்கு பதிலா இந்த ரூம்குள்ள வச்சு அவள கொழுத்திடலாம்” என மண்ணெனயை எடுத்து ஊற்றினான். கங்கா தன் தங்க்கையை காப்பாற்ற அந்த எண்ணெயின் மீது அமர்ந்துகொண்டாள்.

“என்னையும் கொழுத்திடுங்க என் தங்கச்சி கூட நானும் போயிடுறேன்”

“அக்கா ப்ளீஸ் நீ போக்க நீ ஏன் சாகனும்” என காவேரி அழ ஜான்சி தன் தம்பியை தூக்கிகொண்டு பயத்துடன் பார்த்தாள் அந்த கதவு இடுக்கின் வழியே.

அதை பார்த்த தனசேகர் “பாத்து நடந்துகோங்க” என திட்டவிட்டு நடந்துசென்று தன் மகளை தூக்கிகொள்ள. “அப்பா அம்மாஏன் அழறாங்க” என்றாள்.

“அதுகுட்டி உங்க சித்தி இருக்காங்கள்ள காவேரி”

“யாரு தாத்தா வீட்டுல தங்கியிருந்தாங்கள்ள அவங்களா”

“ம்ம் ஆமா”

“அவங்கள எனக்கு பிடிக்கலப்பா நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் பாருங்க தம்பிக்குகூட பிடிக்கல”

“ஆமா குட்டி எனக்கு மட்டம் பிடச்சிருக்கா என்ன! உங்க சித்தி நம்ம ஊருல அந்த கூத்தாடிபொண்ணு இருக்குள்ள அப்பத்தாகூட சொன்னாங்கள்ள அந்த மாதிரி பொண்ணுடா அதான் அப்பா அவங்கள பாத்துகுறேன்”

“நாம எதுக்கு பாத்துகனும்ப்பா”

“தாத்தா சொல்லிருக்காங்கடா அதான்”

“ம்ம் சரிப்பா எப்ப நாம வீட்டுக்கு போறோம்”

“உங்க சித்திக்கு கல்யானம் ஆனதும் போகலாம்டா குட்டி அதுவரைக்கும் விளையாடுங்க” என தனசேகர் சிறு குழந்தையின் மனதில் விசத்தை கலந்துவிட்டு நகர்ந்தார்.

நாட்கள் ஓடின. காவேரி ரூமிற்குள் அடைந்து இருந்தாள். “இந்தாடி சாப்புடுடி” என கங்கா வந்த தன் தங்கையிடம் கெஞ்சினாள்.

“எனக்கு அவர பாக்கனும் அக்கா” என காவேரி அழுதாள்.

“எப்புடிடி”

“ப்ளீஸ்க்கா எனக்காக அவர்கிட்ட பேசுக்கா”

“சரிம்மா நான் அவர கூட்டிவாரேன் நீ சாப்புடு இப்புடி சாப்புடாமயா இருப்ப”

“இல்லக்கா எனக்கு வேணாம் அவர பாக்கனும்” என கூறியவள் மனதில் இரண்டு நாளுக்கு முன் நடந்த சம்பவம் மனதில் ஓடியது.

தனசேகர் குடித்துவிட்டு வர இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது கங்கா தன் மகள் அருகில் உறங்கியிருந்தாள். காவேரி தன்னவன் நினைவில் காத்திருந்தாள்.

“யேய் காவேரி”  என்று குரல் கேட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவள். பதறிகொண்டு எழுந்துதள்ளி அம்ர்ந்தாள். “யேய் என்னடி ஓடுற எனக்கு நீ வேணும்டி ஒருநாள் போதும்! ம்ம்ம் இல்ல இல்ல உன்ன ஆயுள் முழுக்க அனுபவிக்கனும்டி! யாருக்கும் விட்டகுடுக்க மாட்டேன். இப்ப வேணாம் நீ எனக்கு பிடிச்ச பொண்ணு மத்த பொண்ணுங்கனா நினைச்சதும் தொட்டுடுவேன் ஆனா நீ வேற! அதனாலதான் சொல்லுறேன் அடுத்த வாரம் நல்ல நாள் முதல்ல நமக்கு பர்ஸ்ட் நைட் அப்பறம் கல்யானம் பன்னிகலாம் சரியாடி செல்லம் உம்மா” என தன் கையால் அவளது கன்னதை கிள்ளினான்.

அதனால்தான் காவேரி தன்னவனிடம் தன் கஷ்டத்தை கூறலாம் என நினைத்திருந்தாள்போலும்.பின்ன தன் அக்காவிடம் மாமாவைபற்றி எப்படி கூற முடியும்.

“ஜான்சி சித்திய பாத்துக்கோ நான் சந்தைக்கு போயிட்டு வந்துடுறேன்” என சன்முகத்தை காண சென்றார். “போம்மா இவள நான் பாத்துக்க மாட்டேன்” என சீறினாள்.

“இப்ப சித்தி பக்கத்துல போய் உட்காருரியா இல்ல தோள உறிக்கவா”

“ம்ஹூம்” என சினுங்கிகொண்டே சென்று அமர்ந்து தன் தம்பியுடன் விளையாட துவங்கினாள். கங்காவோ கிளம்பி சென்றாள்.

அந்த குழந்தையின்முகத்தை பார்த்த காவேரிக்கு சிறிது மனநிம்மதி அளிப்பதாக அமைந்தது. “ஜான்சி தம்பிய குடும்மா நான் வச்சுருக்கேன்” என கண்ணீருடன் கேட்டாள். இதுவரை பார்த்தது இல்லை அந்த குழந்தையை.

“போடி நீ ஒரு ****** எங்க அப்பா சொன்னாரு” என அங்கிருந்து எழுந்து நடந்தாள். அந்த வார்த்தை காவேரியை அப்போதே கொன்றுவிட்டது. இந்த உடல்மட்டும் சன்முகத்தின் வருகைக்காக காத்திருந்தது.

சந்தையில் “சன்முகம்”

“யாரும்மா அந்த பாபு அய்யா கடைல நிப்பாரே அவரா”

“ஆமாங்க”

“அவன் குடிச்சிட்டு விழுந்துகிடக்கான்மா பின்னாடி கிணத்தடில போயி பாருங்க”

“ம்ம் சரிங்க” என கங்கா நடந்து கிணத்தடிக்கு போனாள்.

அங்கு “டேய் என்னடா ஆச்சு உனக்கு ஏன்டா இப்புடி பன்னுற”

“எல்லாம் போச்சுடா எங்க அம்மா விட்டு போயிடுச்சு இப்ப காவேரி அவளும் போக போறா” என தன்னிலை மறந்து உளறிகொண்டிருந்தான் சன்முகம்.

“டேய் நான் இருக்கேன்டா நீ ஏன் இப்புடி பேசற” சன்முகத்தை காண வந்திருந்த அவர் நண்பன் போஸ்க்கு இவனது நிலை அதிர்ச்சிதான்.

“நான் ஒரு பாவபட்டவன்டா எனக்குனு எதுவுமே நிலைக்காதுடா என்ன விட்டுடு சாகுறேன்”

போஸ் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். “மச்சி ஒருதடவ அவள பாத்துட்டா நிம்மதியா சாவேன்டா கூட்டி போயேன்” என சன்முகம் கெஞ்ச

“நீங்க செத்துட்டா அவ உயிரோட இருப்பானு நினைக்குறீங்களா உங்கள பாக்காம சாப்பிடாம கிடக்கா” என கங்கா கண்ணீர் விட சற்று நிதானபடுத்தி எழுந்து நின்றான்.

“காவேரி சாப்புடலையா அவ பசி தாங்கமாட்டாங்க சாப்பிட சொல்லுங்க” என்று குடியின் ஸ்லாங்கில் பேசினான்.

“டேய் நீ இருடா நான் பேசிக்கிறேன்” என போஸ்போயா கங்காவிடம் பேச விஷயங்கள் தெளிவானது அவனுக்கு. “சரிங்க இன்னைக்கு ராத்திரி நான் உங்க வீட்டுக்கு வந்துடுறேன் காவேரிய தயாரா இருக்க சொல்லுங்க நான் கூட்டிகிட்டு வந்து இவன் ஊர்ல விட்டுடுறேன் அவங்க அங்க நிம்மதியா வாழுவாங்க” என திட்டம் முடிவானது.

இரவும் நெருங்க போஸ் நிதானமாக ராணுவமுகாமில் எடுத்த பயிற்ச்சி போல யாருக்கும் தெரியாமல் வந்தார். அந்த சத்தம் கேட்டது. “அய்யோ அக்கா” என காவேரி கத்தினாள். சற்றுமேலே எழுந்துபார்த்தான் போஸ்.

அங்கு காலையின் தன்னுடன் பேசிய அந்த பெண் வயிற்றில்இருந்த கத்தி வழியாக ரத்தவெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. காவேரி அந்தபெண்ணின் அருகில் அழுதுகெண்டிருக்க “என்னடி அக்கா” என அவளது முடியை பிடத்தான்.

“இங்க பாருடி இன்னைக்கு நாள் நல்லா இருக்கு ஒழுங்க ஒத்துகோ” என அவளை இழுத்து செல்ல “அக்கா அக்கா என கத்தினாள்”

“அவ எப்போவோ செத்துட்டாடி அவளுக்கு உங்க அப்பன் செத்துதல இருந்தே ஸ்லோ பாய்சன் குடுத்துட்டு வாரேன்டி எப்புடியும் உன்ன அனுபவிக்குறதுக்கு அவ விடமாட்டா அதான் அவள கொல்லலாம்னு முடிவு பன்னிட்டேன். சரி வலிக்காம சாகட்டும்னு பாத்தா கழுத உன்ன காப்பாத்துறேன்னு வந்து கத்தில குத்து வாங்குது” என அவளது சேலையை உறுவ பின்னாலிருந்து தனசேகரை ஒரு உருவம் மிதித்தது.

“கிளம்புமா சன்முகம் வெயிட் பனனுறான்” என போஸ்கூற தனசேகர் கங்காவின் வயிற்றிலிருந்த கத்தியை உருவி குத்த வந்தான். அதை லாவகமாக தடுத்தவன் அடித்த அடியில் கீழே விழுந்தான். அதற்குள் போஸும் காவேரியையும் காணவில்லை.

இந்த சண்டை காட்சிகளை அந்த பிஞ்சு கண்கள்பார்த்துகொண்டிருந்த்து. போஸ்தான் தன் அம்மாவை குத்தினான் என்பது ஜான்சிக்கு பதிந்துவிட்டது. கூடவே அதை தடுக்க வந்த தன் அப்பாவின் காலை உடைத்துவிட்டான். அதனால் அவர் நீண்டதூரம் நடக்க சிரம்படுவார். அந்த ஓடுகாலியை இழுத்து செல்ல ஒருவன் தன் தந்தை மற்றம் தாயின் உயிருடன் விளையாடியிருக்கிறான்.

தன் தந்தை ஜான்சியையும் சேகரையும் தாயில்லாமல் வளர்க்க படும் கஷ்டத்தினை கண்ணால் பார்த்தவள் ஜான்சி அதனால்தான் அன்புக்கு குழந்தை பிறந்தவுடன் அன்பை கொண்றுவிட்டு சந்துரு தன் தந்தைபோல கஷ்டபடவேண்டும் அதை ரசிக்க வேண்டும் என பார்த்தாள் இதுதான் அந்த டிக்டாக் ரூலுக்கு காரணம்.

மறுநாள் அக்காவின் இறுதி சடங்கிற்கு வந்தாள். ஜான்சி அம்மா என அழுதுகொண்டிருக்க சன்முகம் கட்டிய தாலியுடன் வந்து அழுதுகொண்டு நின்றாள் காவேரி.

“அதான் அக்காவ முழுங்கிட்ட உடம்பு சுகத்துக்காக ஓடி போயிட்டேல அப்புறம் என்னடி இங்க வந்து நீலி கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்க” என ஸ்வர்னா கத்திகொண்டிருக்க “நான் சொல்றத கேளுங்க” என போஸ் கூறியும் பலனில்லை. ஊர்மக்கள் அவர்களை அடித்து விரட்டிவிட்டனர். தன் அக்காவின் இறுதி சடங்குகள்கூட செய்ய முடியாத நிலையில் அழுதுகொண்டே வந்தாள் காவேரி. எந்த ஒரு பெண்ணிற்கும் இப்படி திருமனம் நடந்திருக்காது. அத்தனை கஷ்டங்களையும் தாங்கி தன்னவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சன்முகம் “அழாதம்மா” என ஆறுதல் மட்டமே சொல்ல முடிந்தது. போஸ் இவர்களுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்திகொடுக்க முயற்சி செய்தார். பின் சன்முகத்தின் ஊர் வரவை அதுவரை சன்முகம் குடிசையில் தங்கி கடையை பார்த்துகொண்டிருந்தார். போஸ் தனக்கு தெரிந்த நபரிடம் பேசி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

“சன்முகம் வாடகைய நான் கட்டிகிறேன் நீ தங்கச்சிய பத்திரமா பாத்துகோ”

“இல்லண்ணா வேணாம் நாங்க வாடகை குடுக்க வேணாம்னா” என தடுத்தாள் காவேரி. அவளது குணம் அப்படி.

“சரிம்மா எதுனா வேணும்னா கேளுங்க இனிமே உங்கள அந்த செல்வதனசேகர் தொந்தரவு பன்ன மாட்டான்” என கூறிவிட்டு தன் நண்பனை தனியாக அழைத்தார் போஸ்

“இந்தாடா வச்சுகோ தங்கச்சிக்கு தெரிஞ்சா வாங்கவிடாது கடைய டெவலப் பனனு” என கையில் சில நோட்டுகளை திணித்தார்.

“இது எதுக்குடா”

“மூடிட்டு வாங்குடா எதுக்கு ஏன்னு கேட்டுகிட்டு” என திணித்துவிட்டு “சரி நான் வாரேன்டா” என கிளம்பினார்.

“என்னடா அதுக்குள்ள கிளம்புற”

“அங்க பார்வதிக்கும் எங்க அம்மாவுக்கும் சண்டையாம் தெரியல என்ன ஆச்சுனு நான் பாத்துட்டு வந்துடுறேன்டா எதுனா பிரட்சனைனா பீடி பெரிப்பா கடைக்கு ஃபோன் பன்னுடா” என அந்த நம்பரை கையின் தினித்துவிட்டு கிளம்பினார் போஸ்.

தனசேகரால் ஊருக்குள்தான் வரமுடியாது ஆனால் பணத்தை வைத்து மிரட்டி சன்முகத்தின் கடையை பிடுங்கிகொள்ள மிகவும் கஷ்டபட்டனர்.

அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தார் சந்திரசேகர். “டேய் என்னடா பன்னி வச்சுருக்க” என தனசேகரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

“என்ன எதுக்கு அடிக்குறடா” என எதிர்த்து கேட்க “மாமாவையே எதுத்து பேசுறியாடா! நல்லா புள்ள வளத்துருக்கடி “ என தன் தங்கையிடம் சண்டையிட

“ஆமா நீர் ஒழுங்காக்கும் ஒன்டிகட்ட தானடா” என ஸ்வர்னா கூற உடைந்துவிட்டார் சந்திரசேகர்.

“ஏன்டி உனக்காகதான நான் வாழ்ந்தேன். நீ சொன்னதால தான அழகான பொண்ணுடி கங்கா அவள கட்டி வச்சேன். அதுமில்லாம என் மொத்த சொத்தும் இவன் பேருல எழுதி வச்சேன். அதுக்கு தண்டனையாதான்டி எனக்கு இந்த பதில் ஆனா கங்காவையும் என் நண்பன் லிங்கத்தையும் கொண்ணது நீங்கதான்னு எனக்கு நல்லா தெரியும் இப்ப காவேரி வாழ்கைய சீரளிக்க நினைச்சதும் எனக்கு தெரியும் அதுக்கு நான் எப்புடி உங்கள பலிவாங்கனுமோ அப்புடி வாங்கிகிறேன்டி; சாமின்னு ஒன்னு இருந்தா நீங்க அழியுரது உறுதி” என கூறிவிட்டு காரை எடுத்துகொண்டா பறந்தார் தன் மகள் காவேரியை தேடி.

தன்னிடம் மீதமிருந்த சொத்தான அந்த காவேரி மில்ஸ் அர்ஜுனன் கையில் கொடுக்கபடும் பிரம்ம அஸ்திரமாக கொடுக்க எண்ணி விரைந்தார் இந்த கயவர்களை அழிக்க ஒரே வழி அதுதான்.

தன்மகளை அந்த கோலத்தில் பார்த்தவர் அவளுக்கு வாக்குகொடுத்துவிட்டு திரும்ப வரவே ஸ்வர்னாவும் தனசேகரும் காத்திருந்தனர்.

“அந்த ஓடுகாலி சிறுக்கிய பாத்துட்டு வர்ரியாக்கும்”

“அவ ஓடுகாலி இல்லடி மகாராணி”

“இருக்கட்டும் அவளுக்கு மில்ல குடுக்கலாம்னு முடிவு பன்னிட்ட”

“ஆமா உங்கள அழிக்கனும்ல அது அவளாலதான் முடியும்”

“அந்தமில் கைக்கு மாறும்போது அவள கொண்ணுட்டா நீ என்ன பன்னுவ” என ஸ்வர்னா கூற மனதில் கவலைகளை சுமந்தவருக்கு பக்கவாதம் வந்து சரிந்தார்.

“கெழம் சாஞ்சிடுச்சுடா தூக்கி மூலைல போடுங்க” என ஸ்வர்னா கூறிவிட்டு நகர்ந்தாள் பத்திர பதிவு நடக்காது என ஸ்வர்னா மகிழ்ந்தாள். ஆனால் சந்திரசேகர் அந்த வேலைகளை முடித்துவிட்டுதான் வந்திருந்தார் அவருக்கு சிறிய மகிழ்ச்சி.

அதேபோல் தனது மேனேஜர் அந்த பத்திரங்களை காவேரியிடம் ஒப்படைக்க வேலைகள் துவங்கின. முதல்முறையாக ஒரு சிறிய கம்பெனியை பார்த்து பெரிய SS-COMPANY பயந்து நடுங்கியது. அதில் ஏற்படும் ஒவ்வொரு தோல்விகளுக்கும் மனதில் தனசேகருக்கு ஏற்பட்ட வலியால குடித்துவிட்டு வந்து அபிநயாவை துன்புற்த்தி ஆனந்தம் கண்டார்.

இப்படியாக நாட்கள் ஓட சந்தரசேகர் கட்டிலில் படுத்து சிரித்தார். “ஹாஹா என்னடி ஸ்வர்னா என் தங்கச்சி நான் சொன்ன மாதிரி நடக்குதா உங்கள மொத்தமா அழிச்சு நடுத்தெருல நிறுத்துவாடி என் பொண்ணு” என மீண்டும் சிரிக்க ஸ்வர்னாவுக்கு கோபம் வந்தது

“ஏன்டா யாரோ ஒருத்திக்கா கூட பிறந்த தங்கச்சிய இப்புடி பேசுறியா”

“ஏய் கூட பிறந்த என்னடி கிழிச்ச அவ என்னோட மகள். அவளுக்கு இருக்குற பாசம்கூட உனக்கு இல்லடி. அவ அந்த சின்ன வீட்டுல கஷ்டத்துல இருக்கும்போதே அப்பா வந்துடுங்கப்பா நான் உங்கள பாத்துகிறேன்னு சொன்னா ஆனா நீங்க இப்புடி ஒருவேலை சாப்பாட போட்டு என்ன கொடுமை படுத்துறீங்க. இருக்கட்டும் இதுல ஒரு சந்தோஷம் இருக்கு நீங்க புலம்பறத பாக்கமுடியுதுள்ள” என சிரித்தார்

“உனக்கு அவகூட இருக்கனும் அவ்வளவுதான அப்ப செத்து ஆவியா போ” என அவரது மூச்சை பிடத்தாள். சிறிது துள்ளளுடன் ஜீவன் அடங்க தன் மகளை காண பறந்த ஆவி அங்கு புதிதாக தன் மகளுக்கு பிறந்த குழந்தையை பார்த்தது. அந்த கூட்டில் தன்னை இனைத்துகொண்டு “இனி நான் உன்கூடதான்மா இருப்பேன் அப்பாவா இல்ல. உன் மகனா” என சபதமிட சந்துரு அந்த பணிபெண்கள் முன் அவதறித்தான்.

அடுத்து நடந்த்து எல்லாம் அந்த SS-COMPANY யின் வீழ்ச்சிதான். அந்த மீட்டிங்கிளும் அதுதான்நடந்த்து.

“இங்க பாருங்க மிஸ்டர் செல்வம் உங்க புராடெக் குவாலிட்டி இல்ல ஸோ டென்டர் காவேரிக்குதான்” என அவர்கள் முடிவு செய்தனர்.

ஆத்தரமடைந்த செல்வதனசேகர் வெளியே வந்து “ஏன்டி அன்னைக்கு அந்த மிலிட்டரி காரன் வராம இருந்திருந்தா நீ இன்னாரம் என் வீட்டல பாத்திர்ம தேச்சுகிட்டு இருந்திருப்படி! நீலாம் என கூட போட்டியா” என கோவமாக கூறிவிட்டு அந்த இடத்திலிருந்த நகர்ந்தான்.

அவன் கூறியதில் ஒரு அழுத்தம் இருக்க பயந்த காவேரி தன் கனவனிடம் கூறினாள். ஆனால் தன்மனைவியின் மீது காதல் மோகத்திலிருந்த சன்முகம் அதை சட்டைசெய்யவில்லை. “குரைக்குற நாய் கடிக்காதுடி” என தள்ளிவிட்டு தன் நண்பனை கானும்திட்டதை துவங்கினர்.

ஆனால் மறுநாள் காவேரியை பின்பற்றிவந்த செல்வதனசேகர் அவளை காரால் அவள் மகன் கண்முன்னே ஏற்றி கொண்றான். “என்னயாடி வேனாம்னு சொல்லிட்டு போற சாவுடி” என்று கிளம்பிவிட்டான். ஆத்திரத்தில் சென்று சன்முகம் அவனை வெட்ட அவனது கையில் இரண்டு விரல்கள் வெட்டபட போலிஸ்கேஸ் பதிவானது.

அப்போதுதான் போஸ் வந்து சன்முகத்தை பார்த்துவிட்டு கேஸை முடித்துவைத்தார். பின் சந்துருவை அழைத்துகொண்டு ஊருக்கு புறப்படனர். சன்முகம் தன் மனைவி மறைந்த வலியை மறைக்க கடுமையாக உழைத்து நல்ல நிலைக்கு காவேரிமில்ஸை உயர்த்தி இன்று சந்துரு அதை கவனித்து கொண்டிருக்கிறான்.

கர்மா எனபது அடுத்து பிறவியில் தாக்குவதற்கு அதற்கு நேரமில்லை அதனால் இந்த பிறவியிலேயே செல்வதனசேகரை உணரவைத்தது. அதுதான் அந்த விபத்து அதில் இரண்டு கால்களையும் இழந்தார். ஆனால் ஆத்திரத்தில் தன் மகளுக்கு கடிதம் எழுதிவிட்டார். பின் கட்டிலில் படுத்துகிடக்க அவருக்கு மரியாதை யாருமே கொடுக்காத்தை உணர்ந்தார்.

ஆம் ஏன் கொடுக்க வேண்டும் அவருக்கு நம்பகமாக யாருமில்லை பாசமான மனைவி இருந்திருந்தாள் இந்த நிலையில் பத்திரமாக பார்த்திருப்பாள். இல்லை மகளாவது உடனிருதால் அவளாவது பார்த்திருப்பாள். அவருக்குதான் யாருமே இல்லேயே. தாயும் இறந்திருந்த்தால் மனதில் முழுவதும் கனமாக இருந்த்து.

“ஆமாடி இவன் அந்த லதா பொண்ண கெடுத்தான்ல அதான்டி இப்புடி படுத்து கிடக்கான்”

“அதுமட்டுமா அந்த காவேரி பொண்ணுக்கு இவன் பன்ன கொடுமை கொஞ்சமா”

“ம்ம் இது என்ன அந்த கங்காவ! பாவம் அவ புள்ளதாச்சி பொண்ணுனு பாக்கமா கத்தியால குத்திட்டு வேற யாரு மேலயோ பலிய போட்டுடான்டி இவன் இன்னும் அனுபவிப்பான்” என சுற்றியிருந்த வேலையாட்கள் அப்படி பேச நரகத்தில் வழங்கபடும் தண்டனை இங்கு கிடைத்தது அவனுக்கு.

தன் தவற்றை உணர துவங்கினான். “இவனுக்கு சாப்பாடு வக்கிறது பாவம்டி” என யாரும் இவனருகில் வருவது இல்லை. ஒருவேலை சாப்பாடு என்பது கிடைப்பது அறிதானது. தன் மாமாவை பன்னிய சித்திரவதை நியாபகம் வந்தது முதல்முறையாக தன் தவற்றை எண்ணி கண்ணீர் விட்டான்.

“காவேரி என்ன மன்னிச்சிடும்மா; கங்கா நான் உனக்கு நல்ல புருஷன் இல்ல இருந்தாலும் என்ன மன்னிப்பியா முடிஞ்சா என்ன கூட்டிட்டு போயிருடி” என அழ அடுத்தாக அந்த பெயர் நினைவுக்கு வந்தது.”ஆமா அபிநயா அப்புறம் சுவேதாகுட்டி! ஐயா நான் தப்பு பன்னிட்டேன்” என கூறிவிட்டு ஒரு சிறுவனை அழைத்து வக்கிலை வர சொன்னார்.

“ஐயா ஏன் இப்புடி இருக்கீங்க”

“அத விடுங்க வக்கில் சார் நான் சாவ எதிர் பார்த்து காத்துகிட்டு இருக்கேன்”

“ஏன் இப்ப சாவ பத்தி பேசுறீங்க”

“இல்லப்பா நான் வாழ தகுதி இல்லாதவன் அவ்வளவு கொடுமை பன்னிருக்கேன்ப்பா”

“சரி அழாதீங்க சார். நான் என்ன பன்னனும்”

“சென்னைல எனக்கு ஒரு பொண்ணு இருக்கா அவ பேர் சுவேதா அவள்பைர்ல ரெண்டு கம்பெனய மாத்திடுங்க அப்புறம் ஒரு உயில் என் மூத்த மகள் ஜான்சிக்கு எழுதனும் அவதான் என்குடும்பத்த ஒன்னு சேக்கனும்” என கூற அந்த பத்திரமும் உயிலும் தயாரானது.

பின் தன் கையால் ஒரு லட்டரை எழுதினார் செல்வம் தன் மகளுக்கு. இதுவரை தான் செய்த தவறுகள் பற்றியும் சுவேதா காவேரி சன்முகம் போஸ் அனைவரும் உனக்கு சொந்தங்கள் அதனால நீ அனாதை இல்லமா உன் குடும்பம் ரொம்ப பெருசுமா நீதான் மூத்தவ எல்லாருக்கும் அவங்கள பாத்துகோ அப்பாவ மன்னிச்சிடுமா என லட்டர் எழுதி “என் மகளுக்கு அனுப்பிருங்க சார்” என அந்த வக்கிலிடம் கொடுத்தார்

ஆனால் அந்த லட்ரை ஏந்தி சென்ற கப்பல் தண்ணீரில் மூழ்கிய நாளில் செல்வதனசேகரும் உயிரைவிட்டு அபிநயாவையும்( அவள்மீது தனிபாசம் இவருக்கு) கங்காவையும் காண வின்னுலகம் சென்றார்.

கண்ணில் கண்ணீர் வர கதையை கூறிகொண்டிருந்தார் சன்முகம் தன் குழந்தைகளிடம் போஸும் அமாம்மா காவேரி நல்லவங்க உங்க அம்மா கங்காவும் நல்லவங்கம்மா என முடிக்க ஜான்சியின் கண்ணில் நீர் வந்தது. சந்துரு திகைத்து நிற்க அனைவரும் அழுதுகொண்டிருந்தனர்.

“இனிமேலாவது என் பிள்ளைங்க எல்லாரும் ஒன்னா வாழனும். அத பாத்துகிட்டு நான் உயிர விடனும் இதுதான்மா என கடைசி ஆசை” என சன்முகம் முடிக்க “அப்பா அப்புடி பேசாதீங்க” என சன்முகத்தின் வாயை போத்தியவள். சன்முகத்தை கட்டிகொண்டாள்.

“அப்ப நீங்க என்னோட பெரியப்பா மகளா அப்ப என்னோட நிஜ அக்கா சேகர் என்னோட அண்ணன். சுவேதா என்னோட தங்கச்சியா” என கண்ணீருடன் நின்றான் சந்துரு.

“அண்ணா” என சுவேதா தன் அண்ணன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“அக்கா இனிமே நீங்க என்கூடதான் இருக்கனும் சொந்தகாரங்க இல்லாம என்னால வாழமுடியாது” என ஜான்சியிடம் சந்துரு கூற அவனை அனைத்து கொண்டவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனது காதில் ரகசியமாக “அப்ப அன்புகிட்ட சொல்லி எனக்கு ஒரு மறுமகள பெத்து குடு அப்பதான் அக்கா உன்கூட இருப்பேன் டிக்டாக்” என கூற அனைவரும் சிரித்தனர். அரிசியோ வெட்கத்தில் தன்னவன் பின்னால் மறைந்துகொண்டாள். அனைவரும் அன்பரசியை தீண்டி “அன்னி எனக்கு ஆம்பளபிள்ளை பெத்துகுடுங்க” என சேகரும். “இல்லப்பா எனக்கு வாலுதனம் பன்னுற குட்டி அரிசி வேனும்” என சுவேதாவம் கூற கண்ணீர் மறைந்து சிரிப்பு குடிகொள்ள ஜான்சி மனதில் எந்த சலனமும் இல்லாம் ஓர் தெள்ளிய நீரோடைபோர இந்த உறவுகளை ரசித்தாள். அன்பு மழையில் நனைந்தாள்.

சந்துரு ஃபோனை எடுத்தான். “இன்ஜினியர் சார் புதுசா மில் கட்டறோம்ல அங்க வீடு கட்ட பிளான் குடுத்தீங்கள்ள”

“ஆமா சார் நாலு ரூம் இருக்குறமாதிரிதான”

“ஆமா சார் ஆனா இப்ப எங்க ஃபேமிலி கொஞ்சம் பெரிசா ஆகிடுச்சு”

“என்ன சார் பன்றது ஃபேமிலினா முன்ன பின்ன இருக்கதான் செய்யும்”

“அதான் பத்து ரூம் வர்ர மாதிரி கட்டிருங்க”

“ஓகே சார்” என இனைப்பை துண்டித்தான்.

“இனி யாரும் என்ன விட்டு போக முடியாது எல்லாரும் என்கூடதான் இருக்கனும் இது இந்த சந்துருவோட உத்தரவு” என கூற “சரி அண்ணா “ சுவேதா ஆனந்தமாக.

“தம்பி எனக்கு கம்யூட்டர் இருக்கனும் இல்லைனா நா செத்துடுவேன்” என சேகர் கூற

“அப்ப சுவேதா நீ தனியா இருந்துக்கோ இந்த கம்ப்யூட்டர் பசங்க சுகுவையும் சேகர் அன்னாவையும் ஒரு ரூம்ல அடச்சிடலாம்”

“ஆமா அண்ணா இவரு கம்ப்யூட்டர கட்டிகிட்டு அழட்டும் நான் அரிசி அன்னிகூட இருந்த செஸ் பிராக்டிஸ் பன்னிகிறேன்”

“அடி பாவி அப்புறம் எப்புடி நீங்க கேட்டமாதிரி குழந்தை பெத்துக்க முடியும்! என்ன அரிசி நீ சொல்லு” என தன் மனைவியை பார்க்க “ச்சி போங்க” என சினுங்கினாள்.

“சரி எல்லாரும் ஒன்னா உட்காருங்க” இது பார்வது உத்தரவு

“ஏன் அம்மா குருப் செல்பி எடுக்கபோறோமா” என சுவேதா நக்கல் செய்தாள்.

“அடி கழுத சுத்திபோட போறேன் உங்கமேல எவ்வளவு கண்ணுபாருங்க” என சுத்தினார்.

இனிய குடும்ப பந்தம் நிலைக்க

கட்டிய கூட மனதிருக்க

விரோதம் மறைந்து

விழாகோலமாக வாழ

தனிமனதும் குடும்பமும்

கூடின கூட்டுகுடும்பமாக

வாழ்த்துங்கள் அதன்

அரச அரசி(அரிசியை)

நீடூடி வாழ்க என.

-தொடரும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 04சாவியின் ‘ஊரார்’ – 04

4 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். “என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 07ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 07

7 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டுக்குள் நுழையும் போதே அரவிந்த அண்ணா எப்படி இருக்கீங்க, அப்பு என்று அபியை கட்டிக்கொண்டு “ஏன் வரத முன்னாடியே சொல்லல. நான் கோவமா இருக்கேன் என்ன ஒன்னும் நீ ஹக் பண்ண வேண்டாம். என்கிட்ட

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57

உனக்கென நான் 57 ‘ம்ம் அவன் ஆசையா கேட்ட போட்டோவ எடுத்து அவன்கிட்ட குடுத்து புரபோஸ் பன்னிடவேண்டியதுதான்.’ என நினைத்துகொண்டு எடுத்து வைத்தாள். சைக்கிளும் உருன்டது அவளது இதயதுடிப்புபோலவே அந்த மரத்தின் நிழலில் தன் தோழர்களுடன் நின்றுகொண்டு ஜெனியை பார்த்தால்தான் ஆசிக்குக்கு