Tamil Madhura கவிதை காதல் மொழி ❤️ – (கவிதை)

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி…

உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது…

உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

அரவணைப்பாய் உன் புயம் சாயும் வேளையில் எல்லாம் உன் காமமில்லா காதலில் கரைந்து தொலைகின்றேன்…

உன் விரல் கோர்த்து நடக்கின்ற போதெல்லாம் நான் என்பதே நீதானடி…என உணர்த்தாமல் உணர்த்தும் உன் விழிகளின் காதல் மொழியில் நித்தமும் உன்னில் திளைத்துக் களிக்கின்றேன்…

ஆம் காதலின் மொழி…அதற்கு கோவம் கூட காதல் தான்…அன்பை வெளிப்படுத்த நித்தமும் போராடும் அன்பின் மொழியும் அதுவே…

வரமாய் அமைந்த காதலில் மௌனம் கூட காதல் மொழி தான்…❤

ராஜிபிரேமா…❤

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தேய்ந்துபோன கனவுகள் – கவிதைதேய்ந்துபோன கனவுகள் – கவிதை

  தேய்ந்துபோன கனவுகள் வானவில்லை ரசித்திருந்தேன் வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு.. வயிற்றுப்பசியார விழைந்தேன் பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..   நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்.. அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன்

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள் பாரதியின் பொன்மொழி படி நடப்பவள் உன்னைக் கண்டு தலைகுனியும் போதும் உன் கண்களை தவிர்க்கும் போதும் மட்டும் மறக்கிறேன் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ~ஸ்ரீ!!~

கல்லும் கற்சிலையும் (கவிதை)கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்   என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்) என்னால் தான் உனக்கு பெருமை… மறவாதே (கற்சிலை)   உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன். அது உன் கடமை.. தியாகமல்ல.   உனக்காக என்னில் பல