Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63

உனகென நான் 63

சந்துருவின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள் அன்பு “என்னங்க ஆச்சு” என்று பதறினாள். “சுவேதாவ கடத்திட்டாங்க” என குரலில் பதற்றம் இருக்கவே அன்பின் முகத்திலும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க பன்றது”

“உங்க ஊருக்கு வர சொல்லிருக்காங்க”

“வாங்க போகலாம் சுவேதாவ காப்பாதனும்! அவ என் பொண்ணுங்க” என்றாள் அரிசி.

உடனே ஃபோனை எடுத்தான். “ஹலோ அப்பா! எதுவும் பேசாதீங்க ஏர்போர்ட் கிளம்பி வாங்க” என்று ஃபோனில் அடுத்து துழவினான். “சுகு பதற்றபடாம கிளம்பி உள்ள வா” என்று கூற சுகு வந்தான்.

“என்னடா ஆச்சு”

“ஒன்னுமில்லடா நாம இப்ப அன்பு ஊருக்கு போகனும்”

“ஏனடா”

“ப்ளீஸ்டா எதுவும் பேசாதடா” என்று அவன் கூற சுகு அமைதியானான். அதன்பின் சன்முகம் வரவே “என்னப்பா ஆச்சு எதுவும் பிரட்சனையா”

“இல்லப்பா நாம ஊருக்கு போகனும்”

“ஏன்ப்பா” என அவர் கேட்க அன்பு அவரின் கையைபிடித்து வேண்டாம் எனபதுபோல சைகை காட்ட அமைதியானார். சிறிது நேரத்தில் விமானத்திற்காக நிற்க அப்போதுதான் தோன்றாயது சந்துருக்கு ‘பேம்லின்னா அதுல அத்தயும் மாமாவும் இருக்காங்கள்ள’ பதறிகொண்டு ஃபோனை எடுத்தான்.

அடுத்த கனம் அதில் போஸின் நம்பர் ஏற்றபடவே அந்த அழைப்ப கருடன் போல காற்றில் பரவி சென்று பார்க்க அந்த மொபைல் ரோட்டில் விழுந்துகிடந்தது. உடனே பார்வதிக்கு முயற்சி செய்தான்.

“இந்த மொபைல் தற்சமயம் சுவிட்ச் ஆஃப் செய்யபட்டுள்ளது” என வரவே முகத்தில் மாற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க ஆச்சு” என அன்பு அவனை பார்க்க. எதாவது சொன்னால் பயந்துவிடுவாள் என நினைத்து கொண்டு “ம்ம் அத்த எங்க இருக்கீங்க” என எதிர்புறம் யாருமே இல்லாத மொபைலில் பேசினான்.

“மாமா எங்க”

“ஓ அப்படியா சரி நாங்க எல்லாரும் வந்துகிட்டு இருக்கோம்”

“இல்ல பிரட்சனைலாம் இல்லை”

“திருவிழாக்கு அப்பா கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப சொல்லிடாரு நாங்க வர்ர வரைக்கும் வீட்டுலதான் இருக்கனும் சரியா”

“சரிங்க அத்த வைக்குறேன்”

என பாசாங்கு செய்தான். அன்பு அவனை பார்க்க அவளுக்கு தெரியும் பார்வதியின் மொபைல் ரிப்பேர் என்று தனக்காக பொய் சொல்கிறான் என கண்டுகொண்டாள்.

“அம்மாக்கு” என கேட்க “அம்மா வீட்டுல இருக்காங்கமா அப்பா தோட்டத்துக்கு போயிருக்காங்கலாம் எந்த பிரட்சனையும் அவங்களுக்கு இல்ல”

அன்பு சமாதானம் ஆனதுபோல நடித்தாள். ஆனால் மனதில் ஓர் அறிப்பு இருந்துகொண்டருந்தது.

விமானம் இவர்களின் பதட்டத்திற்கு ஏற்ப பறக்க துவங்கியது. தன் அருகில் அமரந்திருந்த சுகுவை பார்த்த சன்முகம் “என்னப்பா ஆச்சு” என கேட்க

“அன்கிள் சுவேதாவ கடத்திடாங்க” என அழுதான். சன்முகத்திறுக்கு தூக்கிவாறி போட தன் இதயத்தை பலபடுத்திகொண்டு சுகுவை ஆறுதல் செய்தார்.

மனதில் ‘ஜான்சி நீ பன்றது தப்புமா! நீ என்ன பன்னுவ உன் அப்பா உனக்கு அப்புடி சொலிலகுடுத்துருக்கான் அத்தான செய்வ! உனக்கு என்மேல தான பகை என்ன கொண்ணுடு உன் ஆத்தரம் தீரட்டும் என் பிள்ளைங்க வாழனும்’ என மனதில் அவளுடன் வேண்டினார்.

சிறிது நேரத்தில் ஜான்சி மற்றும் அவளிடமிருந்த பார்சல் காரில் ஏற்றபடவே அதை பிரித்தாள்.அதில் வாய் கட்டபட்டிருந்த சுவேதா மூச்சுவிட சிரம்பட்டாள். அப்போதுதான் பார்த்தான் அவளை சேகர். அவனுக்கு மனம் பொருக்கவில்லை.

“அக்கா என்னக்கா பன்னிவச்சுருக்க பாவம்க்கா இந்த பொண்ணு” என அவள் வாயினை அவிழ்த்துவிட்டு கட்டுகளை அவிழ்த்தான். ஜான்சியோ சிரித்துகொண்டே வந்தாள்.

சுவேதா அவளை பார்த்து பயந்த தள்ளி அமர்ந்தாள்.

“இவங்க சந்துரு கல்யானத்துல பாத்தோம்ல அவங்கதான” என அவன் கேட்க மீண்டும் சிரித்தாள்.

“என்னக்கா சிரிக்குற”

“இல்லடா உன்ன நினைச்சேன் அதான் சிரிப்பு வருது. இவ்வளவு இன்னசன்டா இருக்கியேடா”

“எதுக்கு இவங்கள கடத்திருக்க அத சொல்லு! இது தப்புக்கா”

“தம்பி இது அப்பா எனக்கு குடுத்த கடமைடா நீ இவள உன் கையால கொல்லனும்” என ஜான்சி கூற “என்னக்கா சொல்ற நானா முடியாது” என பதறினான். ஒரு பூச்சியைகூட காலால் தெரிந்து அவன் மிதித்தது இல்லை.

“பொண்ண கொல்ல பாவமா இருந்தா சந்துரு வந்துகிட்டு இருக்கான் அவன கொல்றியா”

“அக்கா ஏன் கொலையபத்தி பேசுற கொல்லற அளவுக்கு என்ன தப்பு பன்னாங்க அதுவும் உயிர கொல்றதுக்கு உரிமை நமக்கு இல்லை அக்கா இவங்கள இறக்கி விட்டுரு” என சேகர் கூற “பேசாம வாடா அப்பாவோட வலி உனக்கு தெரியுமா” என அப்போதுதான் தம்பி முன்னால் சத்தமாக பேசியுள்ளாள். அவளை அது மாதிரி முதலில் காண்பவன்.

“சாரிக்கா நான தெரியாம பேசிட்டேன் நீ எது சொன்னாலும் செய்யுரேன் என்ன மன்னிசிடுக்க” என அவன் கூறுவதற்கு காரணம் இல்லாம்ல் இல்லை. சிறுவயதிலிருந்த தன்னை தூக்கி வளர்த்தவள் அல்லவா அதுவுமில்லாமல் அன்னையில்லாமல் அவளை அன்னையாக நினைத்து வாழ்ந்தவன் பலமுறை அம்மா என்றுதான் அழைத்துள்ளான் அவளை.

அவன் சுவேதாவின் வாயினை மூடினான் கண்களில் கண்ணீர் அதை பார்த்த ஜான்சி “அழாதடா” என முன்னாலிருந்து குரல் கொடுத்தாள். ஆனால் அவளுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது. அவளது நினைவுகள் தீபந்தமாக சுட்டெரிக்க அந்த நெருப்பில் கிடைத்த உஷ்னத்தில் காரை அசுர வேகத்தில் இயக்கினாள் ஜான்சி.

“அம்மா பால் தம்பிக்கு” இது ஜான்சி அந்த ஆறு வயதிலையே தம்பியின் மீது பாசம் அதிகம். “இப்பதான்மா குடிச்சான் போதும்” என ஜான்சியின் தாய் கங்கா கூற “அப்பறம் ஏன் அழறான்” என சண்டைக்கு வந்தாள்.

“ஈரமா இருக்கும்மா அதான் அழறான் நீகூட இப்புடிதான் அழுத”

“போம்மா தம்பிய ஈரத்துல போட்டு வச்சுருக்க” என திட்டிவிட்டு தனது தமையனை தூக்கிகொண்டு நடந்தாள்.

“ஏய் கீழ போட்டுடாதடி” என கங்கா சத்தம் போட்டாலும் அவள் கேட்பதாக இல்லை.

“என்ன ஜான்சி தம்பி என்ன சொல்றான்” என செல்வம் வந்து நிற்க

“அம்மா ஈரத்துல போட்டு வச்சுருக்கப்பா அதான் அழறான் நான் அவனுக்கு கதை சொல்லி சரி பன்னிடுறேன்” என இரண்டாவது தாயாக மாறினாள்.

“வாங்க பட்டனத்துல வேலைலாம் முடிஞ்சிடுச்சா”

“ம்ம் முடிஞ்சிடும்னு நினைக்குறேன்”

கங்கா அழகான பெண். படிப்பு இல்லை எனினும் அழகான கூட்டுகுடும்பத்தை நிர்வகிக்க ஏற்ற குணம் படைத்தவள். செல்வம் அவர் கனவர். இப்போது கங்காவை கட்டியதாள் சுந்தரம்-சரஸ்வதி கம்பெனியை நிர்வகித்து கொண்டிருக்கிறார். எல்லாம் கங்காவை கல்யானம் செய்த்தாள் வந்த சீதனம்தான். சுந்தரம் கங்காவின் தந்தை நல்ல அன்பானவர் தன் பொண்ணுக்காக உயிரையே கொடுப்பவர். சரஸ்வதி சிறுவயதிலேயே கங்காவை விட்டுவிட்டு வின்னுலகம் பயனித்துவிட்டார். அவரது நினைவாகதான் தனது கம்பெனிக்கு SS pvt ltd. சுந்தரம் சரஸ்வதி மில்ஸ் என பெயரில் நடத்திவந்தார். அந்த கம்பெனிக்கு இருந்த ஒரே எதிரி சந்திரசேகர் நடத்திவந்த அந்த காவேரி மில்ஸ்தான் அதுதான். அதனுடன் போட்டியை சமாளிக்க முடியாத்தாலும் வயசாகிவிட்ட காரணத்தினாலும் தனது எஸ்.எஸ் மில்ஸை தனது மருமகன் செல்வத்திடம் ஒப்படைத்தார்.

ஆனால் செல்வம் சொல்லிகொள்ளும் அளவிற்கு நேர்மையாக போட்டியிடுபவர் இல்லை. பல குறுக்கு வழிகள் முயன்று இன்று அந்த சந்திரசேகரின் காவேரி மில்ஸ் தவிடுபொடியாகிகொண்டிருந்தது. தனது நண்பன் லிங்கம் தன்னிடம் ஒப்படைத்த அந்த கம்பெனியை இப்படி விட சந்திரசேகருக்கு மனமித்தை எனவே அவளது மகள் காவேரியை தேடி வந்தார் சன்முகத்தின் வீட்டிற்கு. காவேரி கைக்கு கம்பெனி மாறியதும் செல்வத்தின் குறுக்குவழிகள் பலனலிக்கவில்லை. அதன்பின் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்த்துதான்.

இப்போதும் அந்த சந்திரசேகரின் கம்பெனிக்கு செல்லும் பஞ்சில் சில கலப்படம் செய்துவிட்டுதான் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வம். அவரது மனைவி கங்கா வரவேற்க ஜான்சி கையில் தன் தம்பி சேகருடன் விளையாடிகொண்டிருக்கிறாள்.

“நீ சாப்புட்டியாம்மா” என செல்வம் கேட்டார். என்னதான் செல்வம் முரடனாக குறுக்குபுத்திகாரனாக இருந்தாலும் ஜான்சி மீது தனி பாசம் அவளுக்கு மகள் அல்லவா

“நான் சாப்புட்டேன்பா தம்பிதான் பசியா இருக்கான் இந்த கங்கா அவன கண்டுக்கவே மாட்டேங்குது” என தன் தந்தையிடம் கம்ப்ளைன்டை தாக்கல் செய்தாள்.

“இந்த வயசுலேயே வாய பாத்தீங்களா இந்த வாலுக்க” என கங்கா சுவையான கறிகுழம்புடன் சூடான சாதத்தை எடுத்துகொண்டு வந்தாள்.

“ம்ம் கறிகுழம்பு வைக்குறதுல உன்ன அடிச்சுக்க யாருடி இருக்கா” என கன்னதை கிள்ளினார் செல்வம்.

“என்னங்க பன்றீங்க பொண்ணு இருக்கா”

“என் பொண்ணுதான்டி இப்புடி உன்ன கொஞ்சுனதாலதான அவ பிறந்தா” என சீண்டினார் செல்வம்.

“ஆமாங்க இப்புடி கொஞ்சி தான் பிறந்தா இப்ப சேகரும் பிறந்துட்டான்” என சிரித்தாள்.

“அப்ப உன்க்கு ரெண்டு போதுமாடி”

“அப்புடி இல்லைங்க”

“நம்ம கம்பெனிய பாக்க நிறைய குழந்தைங்க தேவைபடுறாங்க பெத்துகுடு” என செல்வம் கூற கங்காவின் முகம் மாறியது. ஆம் கம்பெனியின் நிலவரம் பற்றி கங்காவின் தந்தை சுந்தர்ம் விசாரித்து சென்றிருந்தார் தன் மகளிடம்.

“அப்பா வாங்கப்பா சாப்பிடுங்க”

“சாப்புடுறதுக்கு நான் வரலமா உன் புருஷன் எங்க”

“ஏன்பா”

“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுமா”

“பட்டனத்துக்கு போயிருக்காருப்பா மில்லு விஷயமா”

“எப்படி அந்த சந்திரசேகரோட மில்லுக்கு வர்ர பஞ்சுல எஸ்டர் கலந்து விட்டு பாலக்குறதுக்கா”

“என்னப்பா சொல்றீங்க அவரு அப்புடி பன்ன மாட்டாருப்பு அந்த மாதிரி ஆளு இல்லை”

“ம் சொன்னாங்க அந்த சந்திரசேகர் ஃபோன் பன்னி என்கிட்ட சொன்னான் லட்சகனக்கான ரூபாய் நஷ்டமாம் அவங்களுக்கு”

கங்காவால் எதுவும் பேசமுடியவில்லை.

“ஒழுக்கமா கம்பெனி நடத்துறதுனா நடத்த சொல்லு இல்லைனா என்கிட்ட திரும்ப கொடுக்க சொல்லிடுமா” என சுந்தரம் திட்டிகொண்டிருக்க கங்கா அழுதுகொண்டுநின்றாள்.

“இதுவரைக்கும் லாபத்துல ஓடிகிட்டு இருந்த கம்பெனி மேல லோன்போட்டு ஓட்டிகிட்டு இருக்கான் உன் புருஷன் அது தெரியுமாமா உனக்கு! அதுவுமில்லாம ஒர்கர்ஸ்க்கு மூனுமாசம் சம்பளம் தரலமா”

“நான் கேக்குறேன்ப்பா அவர்கிட்ட” என அழுதாள்.

“அடுத்த வாரம் வருவேன் எனக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும் இல்லைனா கம்பெனிய குடுத்துட்டு கூலிவேலைக்கு போக சொல்லுமா” என சுந்தரம் பொறிந்துவிட்டு கிளம்பி “ஐ தாத்தா” என ஜான்சி ஓடி வந்து ஒட்டிகொண்டாள்.

“குட்டிமா எப்புடி இருக்கீங்க”

“இந்தாங்க தாத்தா தம்பி உங்ககிட்டதான் வரனுமாம் இங்க பாருங்க கண்ண உங்களதான் பாக்குறான்” என சிரித்தாள். உடனே சேகரை தூக்கியவர் அந்த குழந்தையின் கழுத்தை பார்த்தார்.

“ஏன்மா குழந்தைகழுத்துல ஒரு ஊசி அளவு தங்கம்கூட வச்சுருக்க முடியலைல” என முறைத்துவிட்டு தனது கழுத்திலிருந்த அந்த சங்கிலியை கழற்றி ஜான்சிக்கும் சேகருக்கும் அணிவிக்க சேகர்அதை கையால் எடுத்து வாயில் எச்சில் ஊற கடித்துகொண்டிருதான்.

“ஐ தாத்தா பாருங்க” எனவிளையாட்டு காட்டியவர் “சரிம்மா நான் வாரேன்” என கூற ஜான்சி அழுதாள். “இருங்க தாத்தா போகாதீங்க”

“குட்டிபொண்ணு தாத்தாக்கு நிறைய வேலை இருக்குமா தாத்தா இன்னொரு நாள் வருவேனாம் அப்புறம் போகவே மாட்டேனாம் சரியா” என கன்னதை கிள்ளினார். ஜான்சி அரை மனதுடன் சம்மதித்தாள்.

ஆம் ஜான்சி என பெயர் வைத்தது சுந்தரம்தான். வெள்ளையனை வெளியேற்ற முனைப்புடன் இருந்தவர் இவர். பல போராட்டங்கள் அடிகள் மிதிகள் வாங்கிவிட்டார்.

வெள்ளையர்களுடம் தொழில் முறையில் போராட்டங்களும் நடத்தி இடைஞ்சல் கொடுத்தவர் அதனால்தான் என்னவோ புதிய இந்தியன் கவர்மென்ட் இவருக்கு இந்த மாதிரி கம்பெனி வைக்க ஆதரவாக நின்றது. இந்தியாவின் நிதிநிலையை சரிசெய்ய வேண்டுமல்லவா!

அந்தகாலத்தில் உருவானதுதான் இந்த சுந்தரம் சரஸ்வதி கம்பெனி. ஆனால் அந்த வெள்ளையனை விரட்ட கிடைத்த கம்பெனி இன்று செல்வத்தின் கையில் சிக்கி தொழிலாலர்கள் அவதிபட்டுகொண்டிருக்கின்றனர்.

அந்த ஆத்திரத்தில் வந்தார் சுந்தரம் ஆனால் செல்வம் இல்லை. இரண்டு நாளுக்கு பின் வந்தவரிடம் எப்படி கேட்பது என தெரியவில்லை கங்காவுக்கு.

சாப்பிடும்போது கனவனிடம் எதுவும் கோபம் வருமாறு பேசகூடாது எனபது அறிந்தவள்தான் இருந்தாலும் மனம் பொருக்காம் கேட்டாள். “அப்பா வந்தாருங்க”

செல்வத்தின் முகம் மாறியது “எதுக்கு”

“இல்ல கம்பெனி” என மெல்லிய குரலில் கூறவே அந்த சாப்பாட்டு தட்டு பறந்தது. அது தொட்டிலில் கிடந்த சேகரின் மீது சாதங்களை கொட்டியது. ஜான்சி தம்பி உறங்கிவிட்டான் என தொட்டிலில் அவனை கிடத்திவிட்டு விளையாட சென்றிருந்தாள்.

“ஐயோ குழந்தைங்க” என பதறிகொண்டு அவனை தூக்கி துடைக்க செல்வம் முறைத்துகொண்டு வெளியேறினார்.

“ஏன்மா தம்பிய குளிப்பாட்டுற” என ஜான்சி வந்தாள். அவளிடம் குடும்ப பிரட்சனையை எப்படி சொல்வது சொன்னாலும் புரியும் வயசு இல்லை அவளுக்கு.

“பெரிய மனுசிமாதிரி கேப்பா போடி போய் விளையாடு” என திட்ட அவள் அழுதுகொண்டே வீட்டினுள் ஓட கங்கா கண்ணீருடன் தன் மகனை துடைத்தாள்.

“ஏன்மா அழற அப்பா எங்க காணோம்” என ஜான்சி தூங்கும்போது கேட்க “ஜான்சி அம்மா அடிப்பேன் பேசாம தூங்கு” என கங்கா ஒரு அதட்டலில் பயந்துகொண்டு தம்பியின் அருகில் சென்று படுத்துகொண்டாள்.

அடுத்தநாள் ஜான்சி தம்பியுடன் விளையாடிகொண்டிருக்க ஆட்டோவில் வந்து ஒருவர் கங்காவிடம் ஏதோ பேசுவது தெரிந்தது ஜான்சிக்கு. உடனே “அப்பா…!” என அழற ஆரம்பித்தாள் கங்கா.

ஜான்சிக்கு ஒரே குழப்பம் அவள் யோசித்துகொண்டிருக்கும்போதே கங்கா வந்து ஜான்சியையும் சேகரையும் தூக்கிகொண்டு ஆட்டோவில் ஏறினார். கண்ணீருடன் அந்த நபரும் ஜான்சியிடம் “என்ன படிக்குறீங்க பாப்பா” என கேட்க கங்கா மட்டும் வேறு உலகத்தில் இருந்தாள்.

“சாப்புட்டீங்களா”

“இல்ல மாமா இனிமேதான்”

“என்ன சாப்புடுவீங்க”

“அம்மா சமச்சது சாப்புடுவேன் மாமா”

“தம்பி பேரு என்ன பாப்பா” என அவர் கேள்விகள் ஓயவில்லை.

“அவன் சேகர். எங்க குடும்ப பேரு” என சிரித்தாள்.

இப்படியாக கேள்விகள் ஓட அந்த ஆட்டோ நீண்ட நேர்ம கழித்து சுந்தரம் தாத்தாவின் வீட்டை அடைய அங்கு துணிகள் சுற்றபட்டு ஒருவர் படுத்திருக்க “அப்பா “ கங்கா மயங்கிவிழுந்தாள்.

ஜான்சி அருகில் சென்று பார்க்க அது தன் தாத்தா சுந்தர்ம வயிற்றில் ரத்தத்திற்கான அடையாளம் கத்தியால் யாரோ குத்தியுள்ளனர். ஆனால் அதை புரந்துகொள்ளும் வயது இல்லை ஜான்சிக்கு. அவளை பொருத்த வரை தன் தாத்தா இறந்துவிட்டார். போன வாரம் தான் ஆசையாக வளர்த்த மணி இறந்ததை போல.

“தாத்தா தாத்தா” என அழுதாள். அவள் கையில் இருந்த குழந்தையை சிலர் வாங்கிகொள்ள கண்ணீருடன் அழுதார். கண்ணீர் எல்லாதையும் மறைத்தது.

அப்போது தன் தந்தை யாருடனோ சன்டையிடுவது தெரிந்தது. ஊர்மக்கள் அனைவரும் அந்த நபரை அங்கிருந்து அடித்து விரட்டினர். ஆனால் ஜான்சிக்கு கண்ணீர் தன் தாத்தா சுந்தரத்தின் மீதுதான் இருந்தது.

தன் தாத்தா பிரிந்தது முதல் அடியாக இருக்க ஆண்டவர் அடுத்த சோதனையை கட்டினார். ஆம் அடுத்த மாதம் தன் தாயும் இறந்துபோனாள். ஜான்சியின் மொத்த உலகமும் இருண்டுபோனது. தம்பிதான் உலகம் ஆனாலும் மனதில் ஏதோ ஒருவித பயம் தொற்றிகொள்ள இரவில் திடீரென எழுந்து. “அம்மா அம்மா” என அழுவாள். செல்வத்தால் தன் மகள் அழுவதை பார்க்க முடியவில்லை. பின் திடீரென அப்பாவை எழுப்பி “அம்மா எப்ப வருவாங்க தாத்தாவ கூட்டிட்டி வர சொல்லுப்பா” என கண்ணீர் விடுவாள். செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் “அம்மா சாமிகிட்ட போயிட்டாங்கடா குட்டி தாத்தாவும்தான்” என மடியில் சாய்த்து தூங்க வைப்பார்.

இப்படியே தொடர ஜான்சி தன் அப்பாவின் தாயான ஸ்வர்னாவின் வீட்டிற்கு செல்வம் அனுப்பி வைத்துவிட்டார். அதுதான் ஜான்சியின் குணத்தை மாற்றியமைத்த இடம். பின்ன தன் மாமனாரை கொல்லும் அளவிற்கு செல்வத்திற்கு துணிச்சல் கொடுத்தது கூடவே திட்டம் எல்லாம் இந்த ஸ்வர்னாதானே. அந்த உண்மை தெரிந்த்தால் கங்காவின் உயிரும் பறிக்கபட்டது. இங்குதான் “யாரவேனாலும் அடிக்கலாம்” என பாடம் கற்றாள் ஜான்சி.

பின் ஹாஸ்டலில் தங்கி படித்தாள். மேற்படிப்புக்கு அமெரிக்க பறந்தாள். அங்கும் மேற்படிப்புக்கு தன் தம்பி வந்த போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடுஇல்லை ஜான்சிக்கு. தன் மனதில் சிறிது சிறிதாக கிடந்த கோபத்தை எடுத்து ஓர் ஆயுதமாக மாற்றியிருந்தனர் சுற்றத்தார். ஆனால் யாரை தாக்குவது என்று தெரியாமல் தன் மனதையே காயபடுத்திகொண்டிருந்த தருனம் அது அப்போதுதான் அந்த கடிதம் தன் தந்தையிடமிருந்த வந்தது. தனது கால்களை சன்முகம் பறித்துவிட்டான் என. முழுகோபத்தையும் அந்த குடும்பத்தின் மீது திணித்தாள். இன்று அவர்களை கூண்டோடு அழிக்க காரில் விரைந்துகெண்டிருக்க ஜான்சியின் கண்ணீர் காற்றில் சிதறி பறந்தது.

ஜெனியின் உயிர் பிறிந்த இடம் அன்று விடுமுறைநாள் என்பதால் சற்று அமைதியாக இருந்தது ஆள்நடமாட்டம் இல்லை. அப்போது வேறு ஒரு காரில் போஸையும் பார்வதியையும் ஏற்றிகொண்டு ஜான்சியின் கார் அருகில் வந்தது.

சந்துருவும் அனைவரும் அங்கு வரவே சந்துரு மட்டம் இறங்கினான். “நீங்க இருங்க நான் பேசிபாக்குறேன்” என அவர்களை உள்ளேயே இருக்க செய்தான்.

அங்கிருந்து ஜான்சி மட்டும் இறங்கினாள். கூடவே தன் தம்பியின் கையில் அந்த துப்பாக்கியை கொடுத்தாள். தன் கையிலும் ஒன்றை எடுத்துகொண்டாள்.

“அக்கா நான் சண்டை போட வரலைக்கா என்ன பிரட்சனைனு சொல்லுங்க நாம பேசி தீத்துகலாம்”

“என்ன பேசி தீக்க போறியா ஹாஹா”

“ஏன்டா நீ  பேசி தீக்குறதுனால எங்க அப்பா எனக்கு திரும்ப கிடைப்பாரா”

“என்ன?”

“என்க்கு சின்ன வயசுல இருந்து பாசம்னா என் தம்பி மட்டும்தான்டா எங்கள நல்ல நிலைக்கு கொண்டுவர எங்க அப்பா அவ்வளவு கஷ்டபட்டாரு. சரி நானும் என் தம்பியும் படிச்சு முடிச்சுட்டு எங்க அப்பாகூட சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருந்தா உங்க அப்பா லாரி வச்சு ஏத்தி அவர் கால உடச்சிட்டாரு” என கோபத்தில் அனலாக தகித்தாள்.

“என்னக்கா சொல்றீங்க எனக்கு புரியல”

“உனக்கு புரியாதுடா சன்முகம்னு உனக்கு ஒரு அப்பன் இருக்கான்ல அவனுக்கு புரியும் அப்புறம் உன் அம்மா இருக்கலே காவேரி எப்புடிதான் அந்த புனிதமான பேர அவளுக்கு வச்சாங்களோ தூ” என உமிழ்ந்தாள்.

“அவ ஒரு தே***** அவல்லாம் எங்க அப்பா செல்வத்துக்கு போட்டி” என திட்ட சந்துருக்கு கோபம் வந்தது ஆனால் சுவேதாவுக்காக பொறுத்துகொண்டான்.

ஆனால் அதை கேட்டுகொண்டிருந்த சன்முகம் வெளியே வந்தார். “அவள பத்தி உனக்கு என்னடி தெரியும்” என வந்த வரை பார்த்து.

“வாங்க சார் என் அப்பாவ கொண்ணீங்கள்ள இப்ப நீங்க உயிரா நினைக்குற எல்லாதையும் கொண்ணுடுறேன் அப்பதான் உங்களுக்கு அந்த வலி தெரியும்” என துப்பாக்கியை சந்துருவை நோக்கி உயர்த்த அன்பு பதறிகொண்டு வெளியே வர சுகுவும் வந்தான்.

“இவர விட்டுடுங்க” என அவளிடம் கெஞ்சினாள்.

“இங்கதான உன் பிரன்டு செத்தா இப்ப உன் புருஷன் சாகுறதையும் பாரு” என டிரிகர் செய்தாள். “என்ன கொண்ணுட்டா எல்லாரையும் விட்டுடுவியா” என்றான் சந்துரு தெளிவாக.

“ம்ம் ஓகே” இது ஜான்சி உள்ளே அமர்ந்திருந்த சேகருக்க தலை தன்அக்காவின் செயலை பார்த்து தலை வலிக்க அந்த கனவு மீண்டும் வந்தது. இன்று வந்தது கனவு அல்ல அது நினைவு என உணர்ந்தான்.

ஆம் தன் அக்காவை தன்னிடமிருந்து பிரித்து ஸ்வர்னா பாட்டிவீட்டிற்கு அனுப்பயாகிவிட்டது. இப்போது அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அங்கு வேலை செய்த லதாவை வந்தடைந்த்து.

லதா ஓர் இருபது வயதுபெண் கருப்புதான் ஆனால் நல்ல அழகு. திருமனத்திற்கு அவளது அன்னன் பென் பார்த்துகொண்டிருந்தார். சேகர் அந்த லதாவின் அனைப்பில் தாய்மையை உண்ர்ந்து வளர்ந்தான். நான்கு வயது அந்த காட்சியை சேகர் பார்த்திருக்க கூடாது.

ஆம் தன் அன்னை(லதா)வின் சத்தம் தனது தோட்டத்தை ஓட்டியிருந்த ரூமில் கேட்க அங்கு சென்றான். ஒரு புதருக்குள் இருந்து பார்த்தான். அந்த பாலடைந்த கட்டிடத்தில் தனது தந்தை குடித்துவிட்டு லதாவை கற்பழித்த காட்சிதான் அது. “ஏன்டி உன் அன்னன் உனக்கு மாபிள்ளை பாக்குறானாக்கும். என் புள்ளைங்கள நீ வளக்கும்போதே உன்மேல எனக்கு ஆசைவந்துருச்சுடி” என திட்ட தனது உடலை துணிகளால் மறைத்த அந்த பெண் அழுதுகொண்டே அருகிலிருந்த கண்ணாடி துண்டினை எடுத்து தன் கழுத்தை அறுத்துகொள்ள நான்கு வயது குழந்தையின் இதயம் படபடவென் அடிக்க மயங்கி விழுந்தான். ஆனால் மனதில் தன்னை தன் தந்தையாக உருவக படுத்தியுள்ளான். தன் தாயை தான் கொண்ற குற்ற உணர்ச்சி தொற்றிகொள்ள “என்ன மன்னிச்சிடுங்க” என அந்த பெண் இறப்பதற்கு முன் மன்னிப்பு கேட்பதாக ஒரு பிம்பம் ஏற்படுத்திகொண்டான். இதனால் இவன் மனதுக்கு நெருக்கமாக எந்த பெண் வந்தாலும் அந்த லதா இடத்தில் அமர்ந்துவிடுவாள். இவன் செல்வமாக தன்னை கருதிகொண்டு “நான் பன்னது தப்புங்க என்ன மன்னிச்சிடுங்க” என அவன் கூற அவள் அதை மதிக்காமல் கழுத்தை அறுத்து இறக்கும் காட்சி வந்துபோகும். இன்று “ என் அப்பாக்காக உங்கள கொல்லபோறேன்” என ஜான்சிகூற பதறினான். “அக்கா அப்பா நல்லவரு இல்லக்கா” என கதவை திறக்க அவள் சந்துருவை நோக்கி சுட ஆயத்தமானாள்.

“அக்கா என்ன மன்னிச்சிடு” என அவளை தன் முழுபலத்தை பயன்படுத்தி தள்ளிவிட சிறிதுதூரம் தள்ளிசென்று விழுந்தாள்.

“அப்பா நல்லவரு இல்லக்கா அம்மாவ கொண்ணது அவருதான்” என்று கத்தினான். ஜான்சி தன் தம்பி கூறினாள் எதையும் நம்பி விடுவாள்.

“என்னடா சொல்லுற”

“ஆமாக்கா” என அழுதான். அவளுக்கும் அழுகை வரவே “ஆமாமா செல்வத்த நான் லாரி வச்சு ஏத்தலமா; நம்பு” என சன்முகம் அழுதார்.

“என்ன சொல்றீங்க”

“உங்க வீட்டல லாதான்னு ஒரு பொண்ணு வேல பாத்துட்டு இருந்தா அவள உங்க அப்பாதான கெடுத்து கெண்ணுட்டாரு. அவங்க அன்னன் என் தங்கச்சியே செத்துட்டா நானும் சாகுறேன்னு போனான். அதான் நான் அவன திருத்தி என் கன்பெனில வேலைக்கு வச்சு பாத்துகிட்டேன். அப்படி அவன் லாரி எடுத்துட்டு போகும்போது உங்க அப்பவ ஏத்திருக்கான்மா!. உன் சொந்தத்த நான் கொண்ணுட்டேன்னு உனக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கு அவனுக்கும் அப்புடிதான்மா இருந்திருக்கும் படிச்சி பொண்ணா யோசிம்மா” என சன்முகம் கூற “அக்கா எல்லாதையும் விட்டுடுக்கா” என்றான் சேகர்.

ஜான்சிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

“இப்ப நீ யாருக்குக்கா உழைச்சுகிட்டு இருக்க எனக்கு தான நான் சொல்றதையே நீ நம்பல நான் ஏன் இருக்கனும் இந்த உலகத்துல” என தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்தான் சேகர்.

ஜான்சிக்கு இதயம் பதறியது “டே தம்பி அது லோடிங்கல இருக்குடா” என பதறிகொண்டு ஓடி வந்தவள் தன் பகையை அந்த இடத்தில் ஜெனியின் சாட்சியாக கழற்றி வைத்துவிட்டாள். இப்போது சுத்தமான ஜான்சியாக தன்தம்பியை காப்பாற்ற வரும்போது அங்கு ஒரு பைக் அசுர வேகத்தில் கடந்துசெல்லம்போது ஜான்சியின் மீது இடித்து தடுமாறிகீழே விழ ஜான்சி கழுத்தில் பிளேடால் வெட்டிய தடத்துடன் நின்றாள்.

தன் தம்பியின் கண்ணை பார்த்து கீழே மண்டியிட்டு அம்ர்ந்தாள். அந்த பைக் மனிதனின் ஹெல்மட் கழற அவன் கையில் ஒரு பிளேட் இருந்தது. அன்போ “ஆசிக்….. “ என கூற; சந்துருவோ “ஜான்சி” என அவளை நோக்கி ஓடினான்.

-தொடரும்.

(ஹாய் அக்கா அண்ணா தங்கச்சி தம்பிங்களா நான் jenniferanu.wordpress.com அப்படின்னு பிளாக் ஓபன் பன்னிருக்கேன்பா அதுல திகில்கதைகள் அப்புறம் குட்டிகுட்டி லவ் கதைகள் போடலாம்னு இருக்கேன் உங்க தங்கச்சிக்கு எதுனா அட்வைஸ் பன்னனும்னா சொல்லுங்கப்பா)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43

உனக்கென நான் 43 தன் மடியில் உங்கிபோன சுவேதாவின் தலையைகோதிவிட்டாள் அன்பு. வயதில் மூத்தவள் என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அன்னை மடியை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். சுவேதாவும் அப்படியே. சில நாழிகை உறங்கினாள். அன்பரசி அப்படியே ரசித்துகொண்டிருந்தாள். பின்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52

52- மனதை மாற்றிவிட்டாய் திவி “ஆதி எந்திரிங்க“…. “ம்ம்ம்….தியா இன்னைக்கு சன்டே தானே டி தூங்க விடு போ…” என இவளும் விடாமல் “நோ…. ஆதி எந்திரிங்க… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என அவனை உலுக்கி கையை பிடித்து இழுத்து