Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60

உனக்கென நான் 60

தன்னிடம் கோபித்துகொண்ட சந்துருவை பார்தபடி அவனருகில் உறங்கிபோனாள் அரிசி. அவளை தூங்குவதை பார்த்த சந்துரு “அரிசி அரிசி எழுந்திரிம்மா”

அவள் அசைவில்லாமல் உறங்க “அரிசி சாப்புட்டியா போ முதல்ல சாப்பிட்டுவா எழுந்திரு” என கூற அவள் நன்றாக உறங்கிவிட்டாள். அந்த நேரம் பார்வதி அங்கு வந்து “சப்பிட வாங்க மாப்பிள்ள” என கூற “இல்ல அத்த அன்பு சாப்பிடல” என்றான்.

“ஆமா அவ இப்புடிதான் ராத்திரி சாப்பிடுறதே இல்லை” என புலம்ப “நீங்க போங்க அத்த நான் எழுப்பிட்டு வாரேன்” என்றதும் பார்வதி செல்ல ஒரு வழியாக எழுப்பினான். அரை தூக்கதுடன் எழுந்து செல்ல சாப்பிடவைத்து உறங்கினான் சந்துரு. இப்போதுதான் அவனுக்கு ஒரு நிம்மதி.

காலையில் சீக்கரம் எழுந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க தன்னை யாரோ பார்க்கிறார்கள் என கனவில் உணர்ந்தவன் “என்ன அரிசி ராத்திரி அசந்துதூங்கிட்டு இப்ப தூக்கம் வரலையா”

“ம்ம்” என்றாள் சிறிது கோபம் அவள் குரலில் இருப்பதை உணர்ந்தான். “ரொம்ப கோபத்துல இருக்கீங்கபோல ஆங்கிரிபேர்டா” என்றான்

“இல்லங்க” என்ற வார்தையிலும் கோபம் தெரிந்தது. “ம்ம் அப்ப கோபம்தான் சரி அரிசி ஏன் கோபமா இருக்காங்கனு தெரிஞ்சுகலாமா” என்று அவள் தோளில் தன் தாடையை வைக்க அவள் எதுவும் பேசவில்லை.

“இப்ப என்ன நம்ம வீட்டுக்க ஒரு குட்டி ஏன்ஜல் வரனும் அவ்வளவுதான” என அவன் கூற அவளின் கண்களில் ஒரு ஒளி. “ம்ம் சரி அப்ப எனக்கு தெரிஞ்ச ஒரு ஆசிரமம் இருக்கு அங்கபோய் ஒரு ஏன்ஜல் கடன் வாங்கிட்டு வந்துடலாம்” என்றதும் அந்த ஒளி வலுவிலந்தது.

“ஏன் அன்பு ஒரு மனைவியா என் ஆசைய நிறைவேத்த மாட்டியா! நான் உன்ன காதலிக்கனும் முழுசா அப்புறம் நீ என்ன புரிஞ்சுகனும் நான்  உன்ன முழுசா புரிஞ்சுகனும் நாம சின்ன வயசுல பாத்திருந்தாலும் இப்ப நிறைய மாறிட்டோம் அதான் சொல்லறேன் அதுவுமில்லாம எனக்கும் காதல் பன்னனும்னு ஒரு ஆசை இருக்காதா சொல்லு இல்ல உனக்கு உன்விருப்பம்தான் முக்கியம்னா சொல்லு” என சோகமானான்.

அன்பரிசி இருதலைகொள்ளி எறும்பாக தவித்தாள். “சொல்லு அன்பு என் அரிசியா இருந்தா இப்புடி யோசிக்காம பதில் சொல்லோருப்பா” எனகூற “அது இல்லைங்க நான்” என தயங்கினாள்.

“நாம ஆசைபடுறது என்னைக்கு நடந்துருக்கு சின்ன வயசுல அம்மாகூட இருக்கனும்னு ஆச பட்டேன் அவங்களும் போயிட்டாங்க அத சரிபன்ன அரிசி வந்தா இப்ப அவளும் தன்ன மறச்சுகிட்டு அன்பா வாழுறா நான் ஆசைபடுறதுக்கு தகுதியில்லாதவன்” என கூறிகொண்டு திரும்பினான். அவள் எழுந்துசென்று குளியலறைக்குள் சென்றாள்.

‘அரிசி புரிஞ்சுகோடி உன் உயிர்தான்டி எனக்கு முக்கயம் அதுவுமில்லாம அந்த டைரிய படிச்ச எனக்கே அவ்வளவு பயமா இருக்கு அந்த ஜெனிகூட நீ வாழ்ந்துருக்க உனக்கு எப்புடி இருக்கும்னு என்னால உணரமுடியுதும்மா நான் உன்ன கஷ்டபடுத்துறேன்னு நினைக்காதம்மா இந்த காவேரி லிமிடட்ஸ் நீ நிர்வாகம் பன்ன வேன்டியதும்மா எனக்கு அப்புறம் நீ நடத்து எனக்கு உன் உயிர்தான் என்னைக்கும் முக்கியம்’ என மனதில் புலம்ப.

அவளோ ‘ஏன்டா என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குற அந்த ஜெனியோட மரணத்த நான் கண்ணால பாத்தவடா அதுமாதிரி உன்ன பறிகுடுக்க நான் தயாராக இல்லடா அதனாலதான் உன்னமாதிரி ஒரு வாரிசையும் என் நினைவுகளையும் உனக்கு தரரமாதிரி ஒரு குழந்தைய உனக்கு குடுத்துட்டு நான் செத்துடுறேன்டா ப்ளீஸ்’ என மனதினுள் புலுங்கிகொண்டிருக்க அந்த குளிர்நீர் அவள் மீதுபட்டது. சிறிது நேரத்தில் குளித்து வெளியே வந்தவளால் சந்துருவை நேராக பார்க்க தைரியமிலாமல் குனிந்துகொண்டு வெளியேறினாள்.

சந்துரு அவள் அப்படி செல்வதை பார்த்துவிட்டு தன்மீது அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தான். பின் எழுந்து வாசலுக்கு செல்ல “அம்மா குடுங்கம்மா இத நான் பாத்துகிறேன் “ என ஒரு பெண் அன்பிடம் கூறிகொண்டிருக்க அந்த போர் கோலம் போடுவதற்கு என்பது தெரிந்தது. பின் அதில் அன்பு தோல்வி எனவே சமையலறைக்குள் சென்றாள்.

“நானும் முனியம்மா அத்தயும் பாத்துகிறோம் நீ மாப்பிளைக்கு டீ எடுத்துட்டுபோய் குடு” என அந்த பாத்திரத்தை தினித்தார் பார்வதி.

“இந்தாங்க” என அவன் கண்ணை பார்க்கவில்லை அவள். அவனும் சோகமா எடுத்துகொண்டான்.

“ம்ம் அன்பு இன்னும் கொஞ்சநாளைக்கு நான் ஆபிஸ்லதான் இருக்குற மாதிரி இருக்கும் அங்க இருக்குற அந்த ரெஸ்ட் ஹவுஸ்ல தங்கிடுவேன் அத்தகிட்ட சொல்லிடு” என அவன்கூற அவள் திடுகிட்டாள்.

“என்ன?”

“இல்லமா நிறைய ஃபைல் பென்டிங்க இருக்கு அத முடிக்கனும் அதுமில்லாம அந்த ஃபாரின் கன்பெனி ஆர்டர்வேற இழுத்துகிட்டே போகுது அதான் ப்ளீஸ்டா” எனகூற “பரவாயில்ல மாப்பிள்ள கம்பெனிய பாருங்க நான் இருக்கேன்ல பாத்தகிறேன் இவள” என பார்வதியின் வாய் கூறினாலும் மனதில் புதுபொண்ணான தன் மகளை தவிக்கவிட்டு செல்வதை எந்த தாய்தான் விரும்புவாள்.

சந்துரு அவரை பார்க்க “ஓ இவ சீனி போடாம எடுத்துட்டு வந்துட்டா அதான் வந்தேன்” என பார்வதிகூற “அத்த தப்பா நினைச்சுகிட்டீங்களா கொஞ்சம் பெரிய ஆர்டர் அதான்” என்றான். “இல்ல மாப்ள கொஞ்சநாள்தான இவளுக்கும் இந்த இடம் பழகனும்ள அப்புறம் சந்தோஷமாதான இருக்கபோறீங்க நீங்க போயிட்டுவாங்க” என்று தைரியம் கொடுத்தார்.

அன்பரிசியிடம் இருந்தால் அவளது கண்ணீரை தாங்கமுடியாமல் தான் அவளை பறிகொடுக்க நேரிடும் என நினைத்து இந்த திட்டத்தை தீட்டினான் சந்துரு. கூடவே தந்தை வந்தாள் மொத்த திட்டமும் கெட்டுவிடும் என நன்றாக தெரிந்ததால் அவர் எழும் முன் கிளம்பி சென்றான். “எதாவது வேனும்னா ஃபோன் பன்னுங்க அத்த” என தன் மனைவியிடம் சைகை மொழியில் கூறிவிட்டு காரை எடுத்து கிளம்பினான்.

“என்னமா சந்துரு எழுந்துட்டானா?” என சன்முகம் வர “மாப்ள காலையிலேயே ஆபிஸ்க்கு போயிருச்சு அன்னா”

“என்னமா சொல்லுற”

“ஏதோ ஃபாரின் ஆர்டராம்ல” என கூற அந்த ஆர்டர் சப்ளை ஒரு ஃபோன்காலில் முடித்துவிடலாமே என நினைத்தார் சன்முகம். பின் மனதில் சந்துரு எதையோ மனதில் வைத்துதான் இப்படி செய்கிறான் என்று விளங்கியது. கூடவே அந்த விஷயத்தை பார்வதியிடம் கூறினாள் சந்துருவை தவறாக நினைத்துவிடுவார் அல்லவா அதனால் “ஆமாமா உங்கள பாக்குற அவசரத்துல அப்புடியே விட்டுட்டு வந்துட்டான் சரி சரி முடிச்சிட்டு சாயந்தரம் வரட்டும்” என்றார்.

“இல்ல அன்னா இன்னும் கொஞ்சநாள் அங்கதான் தங்குவாராம்” என்றதும் ஏன் அவன் இப்படி செய்கிறான் அன்புகூட என்ன பிரட்சனை என மனம் ஓட “ஆமா புதுசா ஆர்டர் தர்ரேன்னு சொன்னாங்க குடுத்துருப்பாங்க அதான் கொஞ்சம் ஒர்க் ஹெவியா இருக்கும் அது பிரட்சனை இல்லமா அவன் புத்திசாலி சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுவான் அவன நம்பி பல குடும்பம் இருக்குள்ள” என சன்முகம் கூற பார்வதிக்கு சிறிது நம்பிக்கை வந்தது. இருந்தாலும் இவர்களுக்குள் சண்டை இருப்பது உணர முடிந்தது பார்வதியால்.

“ஹேய் புது மாப்பிள்ள என்ன ஆபிஸ்பக்கம்” என வழக்கமாக கிண்டலுடன் கோபிகிருஷ்ண்ன். இந்தகாவேரி கம்பெனியின் பெரிய ஷேர் ஹோல்டர் அன்ட் சந்துருக்கு கேர் டேக்கர். அவர் வயதில் மூத்தவர் என்பதால் அண்ணா என்று கூப்பிட்டு பழகிவிட்டான்.

“இல்ல அன்னா உங்கள பாக்காம இருக்கமுடியலைல அதான்”

“அதுசரி மத்த நாள்ள என்ன நீ எப்படியும் சாவுடா அப்புடின்னு போயிடுவ இன்னைக்கு பாசம் பொத்துகிட்டு வருது ஏன் பொண்ணு வேலைக்கு போக சொல்லி உதைக்குதா” என்று கண்ண்டித்தார்

“இல்லன்னா அன்பரசிய எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவள நான் எங்க அம்மா ஸ்தானத்துலதான் வச்சுருக்கேன் அதானாலதான் அவ” என சந்துரு இழுக்க

“டேய்!!!!” கோபி பதறினார். “ஐயோ அன்னா இல்ல நான் எங்க அம்மாவபத்தி எதாவது புலம்பிகிட்டு இருந்துடுவேன்னா அவகிட்டு அதுவுமில்லாம அவளுக்கும் கொஞ்சம் இடம் செட் ஆகனும்ல” என சந்துருகூற “அதுக்குன்னு புதுசா கல்யானம் பன்னிட்டு இப்புடி விட்டுட்டு வருவியா நீ முதல்ல கிளம்பு”

“இல்ல அண்ணா அந்த இங்கிலாந்துல இருந்து”

“அது போன வாரம் முடிச்சிடேன்”

“கூடவே அந்த  சேக்”

“அது ஓவர்டா”

“அப்பறம்”

“அப்பறம் என்னடா நான் என்ன சொன்னேன் உன்கிட்ட நிம்மதியா எனஜாய் பன்னு எல்லா ஒர்க்கும் நான் பாத்துகிறேன்னு சொன்னேன்ல” என கோபி திட்ட “இல்ல அண்ணா இருக்கட்டும் இனிமே இன்னும் ஒருமாசம் இங்கதான் ஸ்டே”

“என்னது டேய் நான் உன்ன ஒருநாளைக்கே திட்டிகிட்டு இருக்கேன் நீ ஒருமாசம்னு சொல்ற பேசாம கிளம்புடா”

முதல்முறையாக சந்தரு கோபியின் பேச்சை தட்டிசெல்கிறான் தனது அறைக்கு. ‘என்னமாதிரி இருந்தா தெரியும்’ என மனதில் திட்டயவருக்கு இருந்து ஆதங்கம் இன்னும் திருமனம் ஆகவில்லை. ஏதோ செவ்வாய் தோஷமாம். அப்படி கூறிதான் தன் உழைப்பை தன் குடும்பத்திற்கு செலவு செய்தார் தனது இளமையை இன்று இவருக்கு பிடித்த பெண்களுக்கு இவரை பிடிக்காமல்போக முதலிரல் தனது வாழ்வை மட்டும் எண்ணிய தங்கைகளை வெறுதவர் இப்போதெல்லாம் பெண்கள் என்றாளே வெறுப்புதான். இதில் ஆண்கள் உரிமை சங்கம் என ஆளே கூடாத சங்கமும் இவரை உறுப்பினராக ஏற்றுகொண்டதில் ஆச்சரியமில்லை.

“அண்ணே மேட்ரிமோனில உங்க போட்டோ போட்டேன் ஒரு பொண்ணு அப்ரோஜ் பன்னிருக்கு” என்று சந்துரு அவரின் வாழ்கையில் அக்கறை எடுத்து கூறினாலும் “இல்லப்பா எனக்கு பிடிக்கல” என அந்த போட்டோவை பார்க்காமலேயே கூறிவிடுவார். திருமனத்தின்மீதிருந்த அந்த ஆசை முற்றிலும் வெறுத்துவிட்டார். அதனால் அவரது இன்றைய ஒரே காதலி இந்த பிஸினஸ். “நாலுபேருக்கு நல்லது நடக்குதுல” என இந்த வேலையை செய்கிறார்.

“பணம்மட்டும் இருந்தா போதாது சந்துரு, நம்மல நினைக்குறதுக்காவது ஆளுவேணும் அதுதான் மனித வாழ்கைக்கு அர்த்தம் எனக்குதான் அந்த வாழ்கை கிடைக்கல” என மதுவின் வசனத்துடன் கூறும்போது “அதான் நாங்க இருக்கோம்ல” என சந்துருவின் அறிவுரை பயனலிக்காது. ஆனால் அந்த மாமனிதரின் வார்தைகளை சந்துரு கேட்காமல் விட்டதில்லை. உறவுகளைபற்றிய அறிவுரையும்சரி அலுவல் சார்ந்த அறிவுரையும் சரி கோபி ஒரு தீர்க்கதரிசி. ஆனால் சந்துருவின் மனம் இன்று நிலைகுலைந்தது. அதனால் அவர் வார்தையை மீறிவிட்டான். அரிசியை காப்பாற்ற வேண்டுமல்லவா!.

சந்துருவின் அறையில்தனியாக அமர்ந்திருந்த அன்பை பார்த்தார் தாய் பார்வதி. “ஏன்டி மாப்பிளகூட எதுவும் சண்டையாடி”

“இல்லம்மா அப்புடி எதுவுமில்லம்மா”

“அப்பறம் ஏனடி மாப்பிள்ள முகத்துல ஒரு கலையே இல்லாம இருக்கு”

அன்பு அமைதியாக இருக்க “இப்ப நீ சொலறியா இல்லையாடி நீதான் எதாவது சொல்லிருப்ப”

“இல்லமா நீ சும்மா ஏன் அதையே கேக்குற”

“ஆமாடி அம்மா உன்ன அப்பவே கன்டிச்சு வளக்காமதான் நீ இப்புடி என்ன கேக்க வைக்குற” என பார்வதி ஆதங்கபட தன்தாயிடம் இதை எப்படி கூறுவாள் தன் வேதனையை.

“இல்லம்மா நான் அவரு டிரஸ் தொவச்சேன் அப்ப அவரு இது உன்வேலை இல்லைனு சொன்னாரும்மா நான் இதகூட பன்ன கூடாதா சொல்லு” என தன்தாயிடம கேள்வி கேட்க.

“நான் என்னடி உன்கிட்ட சொன்னேன் மாப்பிள்ள என்ன சொல்றாரோ கேட்டு நடன்னு சொன்னேன்ல” என திட்ட  அன்புக்கு மட்டும் தான் தெரியும் தன்னவன் கூறுவதை கேட்டு நடந்தால் அவர் உயிருடன் இருக்கமாட்டார் என.

“என்னப்பா இங்க சத்தம் நான் மேல வந்துட்டேன்” என சுவேதா வந்துநிற்க “வாம்மா” என ஆழைத்தார் பார்வதி.

“என்ன அம்மா நமக்குள்ள ஒரு டீலிங் இருக்குப்பா அத மறந்துட்டீங்க பாத்தீங்களா”

இருவரும் புரியாமல் விழிக்க. “அட இன்னைக்கு அரிசி எங்க வீட்டுக்கு வரனும்னு சொன்னேன்ல”

“அட ஆமாமா கூட்டிட்டு போ அதுதான்குறச்சல் இங்க” என கடைசி வார்தையில் சுரத்தை இறக்கினார் பார்வதி.

“எனிதிங் பிராப்ளம்?” என சுவேதா அரிசியின் காதை கடிக்க “சுரக்கால உப்பு இல்லையாம் அதான் அம்மா திட்டுறாங்க” என அரிசி சுவேதாவின் காதை கடித்தாள்.

“அம்மா இதெல்லாம் ஒரு பிரட்சனையா கல்யானம் ஆன புதுசில எல்லா வீட்டுலையும் நடக்குறதுதான” என சுவேதாஎன்ன பிரட்சனை என்றே தெரியாமல் குத்துமதிப்பாக சமாளித்தாள்.

“என்னமோமா” என பார்வதி சென்றார்.

“என்ன அன்னி அன்னாகூட சண்டையா”

எப்படி கன்டுபிடித்தாள் என்று குழம்பிகொண்டு பார்த்தாள். “ஐயோ அன்னி நம்பீடாதீங்க அவன் நடிக்குறான். சின்ன வயசுல அவன எப்புடி அழவச்சுருக்கீங்க அதனால சும்மா டிராமா பன்றான்” என சமாளித்தாள். கோபியிடமிருந்து சுவேதாவிற்கு “சந்துருக்கும் அன்புக்கும் எதுவும் சன்டையாமா” என குரல் வர “இல்ல சார் இருங்க நான் என்னனுபாக்குறேன்”

“இல்ல அவன் ஆபிஸ்ல உட்காந்துகிட்டு இன்னும் ஒருமாசத்துக்கு இங்கதான் அப்புடின்னு சொல்லுறான்” அதான் என்னனு பாரும்மா நான் சந்துருவ இவ்வளவு டிஸடிர்படா பாத்தது இல்ல” என முடிக்க காரை எடுத்து பறந்துவந்துவிட்டாள். கூடவே தன் அன்னனைபற்றிய சமாதானபேச்சுவார்த்தையும் நிகழ்கிறது.

ஆனால் அன்பரிசியிடம் எந்த மாறுதலும் இல்லை. “சரி நீங்க இங்க அடஞ்சுகிடக்காம வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் நந்தினி உங்கள பாக்குனும்னு சொல்லுச்சு” என கையோடு அழைத்துசென்றுவிட அங்கு நந்தினி அம்மா காத்துகொண்டிருந்தார்.

“இவங்கதான் அந்த அரிசியா” என நந்தினி வரவேற்க “என்ன பாக்கறீங்க சந்துருவ தெரிஞ்ச எல்லாருக்கும் அரிசிய தெரிஞ்சிருக்கும்! குறிப்பு அரிசிய மட்டும்தான் அன்னி அன்பரசிய இல்ல” என கண்ண்டித்தாள்.

பின் ஒவ்வொரு அறையாக காட்டினாள். “இது என் ரூம் அப்புறம் நந்தனி அம்மா அங்க தூங்குவாங்க” என அவள் கூறும்போதே அந்த பூட்டபட்ட ரூமை பார்த்தாள் அன்பரசி.

“அது அபியோட ரூம் அன்னி! நான் அங்கபோயி உட்காந்துகிட்டு அழ ஆரம்பிச்சுடுவேன் அதான் நந்தினி பூட்டி வச்சுருக்கு” என கூறும்போது சுவேதாவின் கண்ணில் நீர் இருந்தது.

“சரிப்பா வந்தா சாக்லெட் தர்ரேன்னு சொன்னீங்க உங்க அன்னாவும் எஸ்கேப் இப்ப நீயும் கண்ணுல காட்ட மாட்டேங்குற” என அரிசி அந்த சோகத்தை கலைத்துவிட்டாள்.

“ம்ம் வாங்க” என பிரிட்ஜ் அருகேகூட்டி சென்று திறந்துகாட்ட அரிசியின் கண்கள் விரிந்தன. “என்னப்பா இது இவ்வளவு” என வியந்தாள்.

“ம்ஹூம் இதுக்கேவா அன்னி சந்துரு உங்களுக்கு விட்டா ஒரு போக்டரியே கட்டி வச்சுடுவான் இருங்க நான் என் அம்மா போட்டோ எடுத்துட்டு வாரேன்” என உள்ளே செல்ல அந்த நேரம் ஃபோன் அடித்தது.

“அன்னி ஃபோன்” என கத்தினாள் அன்பரசி.

“அட்டன்ட் பன்னி கேளுங்க அன்னி” என சுவேதா அந்த பரனிலிருந்த பைல்களை தூசிதட்டிகொண்டிருந்தாள்.

“ஹலோ யாருங்க”

“ம்ம் என்ன எப்புடி நியாபகம் இருக்கும் மேடம் உங்களுக்கு! நீதான் என்கிட்ட நழுவுன மீனாச்சே”

“ஹலோ யாருடா நீ”

“ஹேய் டார்லிங் ஏன் கோபபடுற பூபதிமா”

“பூபதியா!”

“ம்ம் ஆமா அன்னைக்கே உன்ன அனுபவிச்சுருந்தா என்ன மறந்துருக்க மாட்ட! அதான் அந்த பான்டவர்கூட்டம் உன்ன காப்பாத்திடுச்சே! சரி விடு இப்ப அந்த சுகுகூட சண்டையாம் கேள்விபட்டேன். வா ஒருமுறை வச்சுகலாம்”

“ஹே என் ஹஸ்பன்ட்கிட்ட சொன்னா நீ அவ்வளவுதான்டா” என சீறினாள் அரிசி.

“ஹலோ நீ யாருடி”

“மரியாதையா ஃபோன வைடா” என துண்டிக்கபட மீண்டும் ஒலித்தது. அந்த நேரம் சுவேதா “அன்னி இதுதான் என் போட்டோ” என வந்தாள். அந்த கால் அடிக்க “அன்னி எவனோ பூபதின்னு பேசுறான்”

“அந்த நாயா அது அப்புடிதான் குலைச்சுகிட்டு இருக்கும் அன்னி நீங்க ஏன் மனசுல வைக்குறீங்க” என சுவேதா இயல்பாக பேசினாள். அவளது வாழ்கையில் நடந்த சம்பவங்கள் அவளை அவ்வளவு தைரியமாக மாற்றி இருந்தது.

பின் சுகுவின் அழைப்புவரவே நடுங்கினாள் சுவேதா. அந்த பொறுக்கிக்கு மிக சாதாரனமாக ரியாக்ட் செய்தவள் தன் காதலனுக்கு இப்படி நடுங்குகிறாள் என நினைக்கும் போது அரிசிக்கு ஆச்சரியம்.

“ஹலோ அன்னா நான அன்பு” என ஃபோனை எடுத்தாள்.

“நீ எப்புடிம்மா அங்க”

“இல்ல சுவேதா அன்னிதான் கூட்டி வந்தாங்க”

“சுவேதா எங்கமா” என சுகு கேட்க ‘நான் இல்லைனு சொல்லு என்பதுபோல சைகை செய்தாள். “அன்னா அவங்க இங்க இல்லனா நான் மட்டும் தான் ஆல்பம் பாத்துகிட்டு இருக்கேன் எதுனா சொல்லனுமா”

“இல்லமா ஒன்னுமில்ல சும்மாதான் ஃபோன் பன்னேன்” என வைத்தான் சுகு.

“ஆமா உங்களுக்கும் அண்ணாவுக்கும் என்ன பிரட்சனை?” என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரே மாதிரி கேட்டனர்.

-தொடரும்

1 thought on “ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 60”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சித்ராங்கதா – 19சித்ராங்கதா – 19

Chitrangatha – 19 ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13

13 – மனதை மாற்றிவிட்டாய் காரிலிருந்து கோபமாக வெளிவந்த ஆதி அவளை அடிக்க போனவன் அவள் பயந்த விழிகளையும், நடுங்கிய கைகளையும் பார்த்தவன் “ச்சா…” என்றுவிட்டு காரை ஸ்டார்ட் செய்து உள்ளே கொண்டுவந்து நிறுத்தினான். பின்பு திவியிடம் சென்றவன் அவள் கை

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதிகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன்